உன்னால் தவிக்கிறோம்
வெடித்து சிதறிய காஸ் 41 பேர் மரணம்
வெடித்து சிதறிய காஸ் 41 பேர் மரணம்
வடக்கு ஈராக் Duhok பகுதியில் எரிவாயு வெடித்து சிதறியதில் 41 பேர் படு காயமடைந்துள்ளனர் .
திடீரென ஏற்பட்ட எரிவாயு கசிவினால் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது .
குறித்த கட்டடம் முற்றாக வெடித்து சிதறிய நிலையில் காண படுகிறது .
இந்த வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
சீனாவில் வெடித்து சிதறிய பக்டரி 38 பேர் மரணம்
சீனாவில் வெடித்து சிதறிய பக்டரி 38 பேர் மரணம்
சீனா மத்திய Henan மாகாணத்தில் அமைய பெற்றுள்ள பக்டரீ ஒன்று வெடித்து சிதறியதில் ,சம்பவ இடத்தில 38 பேர் பலியாகியும் ,.டசின் கணக்கானோர் படு காயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் சில ஆபத்தான நிலையில் உள்ளனர் .
குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .இந்த வெடிப்பு சம்பவத்தால் பல மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது .
தீவிரவாதிகளினால் 100 பேர் கடத்தல்
தீவிரவாதிகளினால் 100 பேர் கடத்தல்
நையீரியாவில் தீவிரவாதிகள் 100 பேர் கடத்தி செல்ல பட்டுள்ளனர் .
ஆயுத முனையில் நுழைந்த தீவிரவாதிகள் 14 வயது முதலான இளம் பெண்களையும் கடத்தி சென்றுள்ளனர் .
மூன்று கிராமங்களை சேர்ந்த 100 க்கு மேற்பட்டவர்கள் இவ்வாறு கடத்தி செல்ல பட்டுள்ளனர் .
காணமல் போனவர்களை மீட்கும் பணியில் அரச இராணுவம் ஈடுபட்டுள்ளது.
முரசுமோட்டையில் சாமி கும்பிட்ட பெண் மரணம்
முரசுமோட்டையில் சாமி கும்பிட்ட பெண் மரணம்
முரசுமோட்டையில் சாமி கும்பிட்ட பெண் ஒருவர் மரணமான துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது .
முரசுமோட்டை மூன்றாம் யூனிட் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு பலியாகியுள்ளார் .
மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் பொழுது அங்கு பலியாகியுள்ளார் .
வாழ் நாளில் பிற் பகுதிகளில் தன்னை முழுமையாக சிவ தொண்டு பணிகளில் ஈடுபடுத்தி வந்த ,இவரே இவ்வாறு மரணித்துள்ள சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் துயரை ஏற்படுத்தியுள்ளது .
கடவுள் பணி செய்து வந்த சிவ தொண்டர் அவர் பாதத்தில் வீழ்ந்து மரணித்துள்ள சம்பவம் ,மக்களை துயரில் ஆழ்த்தியுள்ளது .
விமான நிலையத்தில் VIP சேவைக்கு கட்டணம் செலுத்தாத பசில்
விமான நிலையத்தில் VIP சேவைக்கு கட்டணம் செலுத்தாத பசில்
ஞாயிற்றுக்கிழமை காலை இலங்கை வந்த முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ விமான நிலையத்தில் VIP சேவைகளைப் பயன்படுத்தியதற்கான கட்டணத்தையும் அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவுக்கான கட்டணத்தையும் இன்னும் செலுத்தவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
பசில் அமைச்சராகவோ அல்லது பாராளுமன்ற உறுப்பினராகவோ இல்லாத நிலையில், விமான நிலையத்தில் பிரமுகர் ஓய்வறையைப் பயன்படுத்துவதற்கு அவருக்கு உரிமை இல்லை.
விமான நிலையத்தில் VIP சேவைக்கு கட்டணம் செலுத்தாத பசில்
பசில் ராஜபக்சவின் பிரமாண்ட வருகைக்காக விமான நிலையத்தில் விருந்துபசாரமும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கான கட்டணமும் செலுத்தப்படவில்லை.
மேலும், பசில் விமான நிலையத்தில் Gold Route சேவையை பெற்றிருந்தார். இதற்காக ஒரு நபருக்கு 200 அமெரிக்க டொலர் அறவிடப்படும். எனினும் இதையும் அவர் செலுத்தவில்லை.
இன்றுவரை பணம் செலுத்தாமல் ராஜபக்சேவும் அவரது பரிவாரங்களும் VIP ஓய்வறையை பயன்படுத்தியதை
விமான நிலையத்தின் உள் வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.
ஆசிரியர் மீது மாணவனின் தந்தை தாக்குதல்
ஆசிரியர் மீது மாணவனின் தந்தை தாக்குதல்
யாழ்ப்பாணத்திலுள்ள கல்லூரி ஒன்றின் ஆசிரியர் மீது மாணவனின் தந்தை தாக்குதல் மேற்கொண்டதில் காயமடைந்த ஆசிரியர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (22) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
பாடசாலை மலசல கூடத்திற்கு செல்வதாக சென்ற மாணவன் நீண்ட நேரமாகியும் வராததால், மாணவனை தேடி குறித்த ஆசிரியர் சென்றுள்ளார்
அங்கு மாணவன் சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்டமையால் மாணவனை ஆசிரியர் விசாரித்த போது மாணவன் அங்கிருந்து தப்பி சென்று , தனது தந்தையாரை அழைத்துக்கொண்டு பாடசாலைக்கு வந்துள்ளார் என்று அறியமுடிகின்றது.
பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்த மாணவனின் தந்தை , ஆசிரியர்களின் ஓய்வறையில் இருந்தபோது, அந்த ஆசிரியர் மீது சரமாரியாக தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த ஆசிரியரை சக ஆசிரியர் அங்கிருந்து மீட்டு , வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு
அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஒரே இரவில் 5 வீடுகளில் திருட்டு
ஒரே இரவில் 5 வீடுகளில் திருட்டு
இலங்கை பயாகல காவல்துறை பகுதியில் ஒரே இரவில் ஐந்து வீடுகள் திருட்டு இடம்பெற்றுள்ளது .
இந்த திருட்டு அங்குள்ள கமராவில் பதிவான நிலையில் திருடனை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .
பாலியல் துஷ்பிரயோகம் செய்த சகோதரன் கைது
பாலியல் துஷ்பிரயோகம் செய்த சகோதரன் கைது
வவுனியா பட்டக்காடு பகுதியில் 16 வயதுடைய தங்கையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சகோதரனை நெளுக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தந்தை இன்றி தாயின் அரவணைப்பில் சகோதரன், தங்கை வசித்து வந்த நிலையில் தனிமையில் இருந்த தங்கையை சகோதரன் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சகோதரி மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிப்பட்டதுடன் 26
வயதுடைய சகோதரனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
18 வயது பெண் நீரில் மூழ்கி உயிரிழப்பு
18 வயது பெண் நீரில் மூழ்கி உயிரிழப்பு
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் நீரில் மூழ்கி கிளிநொச்சி பகுதியை சேர்ந்த யுவதி ஒருவர் நேற்று (20) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியை சேர்ந்த ஆனந்தராஜா அலன்மேரி (வயது 18) எனும் யுவதியே உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை, கற்கோவளம் பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு வந்த யுவதி, மேலும் நால்வருடன் கடலில் நீராடியுள்ளார்.
பின்னர் கற்கோவளம் பகுதியில் உள்ள நீர் நிலை ஒன்றிலும் இறங்கி நீராடியுள்ளனர். அதன் போது, குறித்த யுவதி நீரில் மூழ்கி காணாமல் போன நிலையில், யுவதியுடன் கூட சென்றவர்கள் அவல குரல் எழுப்பியதை அடுத்து
அருகில் இருந்த இராணுவ முகாமை சேர்ந்த இராணுவத்தினர் அங்கு விரைந்து யுவதியை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு யுவதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசியாவில் நிலநடுக்கம் 162 பேர் காயம்
இந்தோனேசியாவில் நிலநடுக்கம் 162 பேர் காயம்
இந்தியனோசியா யாவ பகுதி மலைக்கு அருகில் உள்ள பகுதிகளில் இடம்பெற்ற நில நடுக்கத்தில் சிக்கி 1262 பேர் படுகாயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர் .
வீடுகள் ,வாகனங்கள் என்பன பலமாக தகர்ந்த நிலையில் காட்சி அலிகின்னா .
இந்த அந்தரத்தினால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை .
சேதங்கள் இழப்புகள் மேலும் அதிகரிக்க படலாமா என அஞ்ச படுகிறது .
தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் வடமேற்குப் பிராந்திய மற்றும் தென்மேற்குப் பிராந்திய
மாவீரர் குடும்பங்கள் கௌரவிப்பு நிகழ்வு
தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் வடமேற்குப் பிராந்திய மற்றும் தென்மேற்குப் பிராந்திய
மாவீரர் குடும்பங்கள் கௌரவிப்பு நிகழ்வு
வடமேற்குப் பிராந்தியத்தில் பொது சுடரினை முருகதாஸ் அவர்களின் தாயார் புவனேஸ்வரி மற்றும் மேயர் இசைத்தம்பி அவர்களின் தாயார் பத்மினி கந்தசாமி அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.
தென்மேற்குப் பிராந்தியத்தில் பொது சுடரினை மாவீரர் கதிரவன் மற்றும் மாவீரர் ஜெயந்தி அவர்களின் தாயார் திருமதி கந்தசாமி கமலாவதி அவர்கள் ஏற்றி வைத்தார்தார்கள்.
தமிழீழ தேசியக்கொடியினை வடமேற்குப் பிராந்தியத்தில் லெப் கேணல் மனோஜ் அவர்களின் சகோதரரும் வடமேற்கு பிராந்திய மாவீரர் பணிமனை பொறுப்பாளருமான திரு கமல் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.
வடமேற்குப் பிராந்தியத்தில் ஈகை சுடரினை லெப் கேணல் அவர்களின் சகோதரர் ராஜலிங்கம் மற்றும் வீரவேங்கை தொழில் நாயகனின் சகோதரர் மோகனதாஷ் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.
வடமேற்குப் பிராந்தியத்தில் மாவீரர் மரியதாஷின் தங்கை வியஜலட்ஷ்மி சதீஷ்குமார் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.

அகவணக்கத்தினை தொடர்ந்து மலர்மாலையினை மேயர் பாப்பா லெப் நாமகள் அவர்களின் சகோதரன் தங்கேஷ்வரன் மற்றும் கப்டன் நகுபனின் சகோதரன் தயானந்தன்
அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.
தொடர்ந்து மாவீரர் குடும்பங்களுக்கான கௌரவிப்பினை முன்னெடுத்திருந்தார்கள்.
பெண்கள் வௌிநாடு செல்வதற்கான பதிவு இடைநிறுத்தம்
பெண்கள் வௌிநாடு செல்வதற்கான பதிவு இடைநிறுத்தம்
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இரண்டு தொழில் பிரிவுகளுக்கு தொழிலாளர்களாக இலங்கைப் பெண்களை பதிவு செய்வதை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், வீட்டு பணிப்பெண்கள் மற்றும் துப்புரவு சேவைகள் தொடர்பான பதிவுகளை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
ஆட்சியில் இருந்த சகலரும் பொறுப்பு
ஆட்சியில் இருந்த சகலரும் பொறுப்பு
நாடு, இந்தளவுக்கு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்தமைக்கு நாட்டை கடந்த 72 வருடங்களாக ஆட்சியில் இருந்த சகலரும் பொறுப்பு
கூறவேண்டுமெனத் தெரிவித்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, பலியை ஒருசிலர் மீது மட்டுமே போடமுடியாது என்றார்.
இயற்கை அனர்த்தங்களால், நாவலப்பிட்டிய பிரதேசத்தில் பாதிக்கப்பட்டவர்கள், சனிக்கிழமை (19) சந்தித்து அவர்களுடன்
கலந்துரையாடியதன் பின்னர், கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரம் இந்தளவுக்கு சீரழிந்தமைக்கு, பிரதானமாக ஜே.வி.பி பொறுப்பு கூறவேண்டும். ஜே.வி.பி காலத்திலேயே நிலைமை
மோசமாகியிருந்தது என்று தெரிவித்த அவர், அந்தக் கட்சியினால் (ஜே.வி.பி) ஒருபோதும் ஆட்சிப்பீடம் ஏற முடியாது என்றார்.
நாவலப்பிட்டியவில் கடந்த சில வாரங்களாக பெய்த அடைமழையால், ஒன்பது பாலங்கள் சேதமடைந்துள்ளன. அவற்றை புனரமைப்பதற்கு ஜனாதிபதி ரணில்
விக்கிரமசிங்க தனக்கு 23 பில்லியன் ரூபாய் மதிப்பிட்டுள்ளார். அதில்,
150 மில்லியன் ரூபாயை ஒதுக்கி, பாலங்களை புனரமைக்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றார்.
மரக்கறிகளுக்கு பெரும் தட்டுப்பாடு
மரக்கறிகளுக்கு பெரும் தட்டுப்பாடு
நுவரெலியா மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறிகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக நுவரெலியா திறந்த பொருளாதார மத்திய நிலைய மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இரசாயன உரம், கிருமிநாசினி விலை உயர்வாலும் தொடர்ந்து மூன்று, நான்கு மாதங்களாக பெய்த மழையினாலும் உருளைக் கிழங்கு மற்றும் மரக்கறி
உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தற்பொழுது மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்களும் விவசாயிகளும் தெரிவிக்கின்றனர்.
மரக்கறிகளுக்கு பெரும் தட்டுப்பாடு
மரக்கறி உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மரக்கறிகளின் விலைகளும் உயர்ந்துள்ளன. அதிக விலை கொடுத்து மரக்கறிகள் கொள்வனவு
செய்வதற்கும் மரக்கறிகள் தேடி அலைய வேண்டியிருப்பதாகவும் அவ்வாறு அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்யப்படும் மரக்கறிகளை
வெளிமாவட்ட வர்த்தகர்களுக்கு விற்பனை
செய்வதற்கும் முடியாமல் இருப்பதாகவும் நுவரெலியா மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஜனாதிபதி ரணில் மன்னாருக்கு விஜயம்
ஜனாதிபதி ரணில் மன்னாருக்கு விஜயம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இன்று (20) காலை மன்னார் மாவட்டத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.
மன்னார் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்வதும் அந்தப் பிரச்சினைகளுக்கு வழங்கக் கூடிய தீர்வுகள் குறித்து கலந்துரையாடுவதுமே ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் நோக்கமாகும்.
மன்னார் நகருக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் , முதலில் மன்னார் ஒல்லாந்து கோட்டையின் புனரமைப்பு பணிகள் தொடர்பாக ஆராய்ந்தார்.
அதன் பின்னர், நடுக்குடா மீனவ கிராமத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, மீனவ சமூகத்தவர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடியதுடன், அவர்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்தார்.
நடுக்குடா மீனவ கிராம மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தப்பட்டதோடு , அது தொடர்பில் துரிதமாக ஆராய்ந்து தேவையான தீர்வுகள் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ரணில் மன்னாருக்கு விஜயம்
மன்னார் காற்றாலை மின் நிலையம் நிர்மாணிக்கப்பட்டு வரும் பிரதேசத்தையும் ஜனாதிபதி அவதானித்ததுடன் காற்றாலை மின் நிலையத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் ஆராய்ந்ததுடன் அப்பகுதி மக்களின் பிரச்சினைகளை கேட்டறியத் தவறவில்லை.
கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மின்சக்தி ,வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர,வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்
, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க,மன்னார் மாவட்ட
செயலாளர் திருமதி ஸ்ரென்லி டிமேல் மற்றும் அரச அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
துருக்கி இராணுவம் மீது தாக்குதல் 9 பேர் காயம்
துருக்கி இராணுவம் மீது தாக்குதல் 9 பேர் காயம்
சிரியா துருக்கி எல்லை வழியில் அமைக்க பட்டிருந்த துருக்கி இராணுவத்தினரை ,இலக்கு வைத்து நடத்த பட்ட ,ரொக்கட் தாக்குதலில் 9 இராணுவத்தினர் காயமடைந்தனர் .
காயமடைந்தவர்கள் மீட்க பட்டு ,சிகிச்சைக்கு அனுப்பி வைக்க பட்டனர் .இந்த தாக்குதலில் கவச வாகனங்கள் சேதமாகின .
துருக்கி இராணுவத்தினர் குருதீஸ் போராளிகளை இலக்கு வைத்து, தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது .
உக்கிரேனில் திருட்டில் ஈடுபட்டுள்ள ரசியா இராணுவம்
உக்கிரேனில் திருட்டில் ஈடுபட்டுள்ள ரசியா இராணுவம்
உக்கிரேன் நாட்டில் ரசியா கட்டு பாட்டில் விளங்கிய Kakhovka பகுதி மீளவும் உக்கிரேன் இராணுவம் வசம் வீழ்ந்தது .
இங்கு இடம்பெற்ற உக்கிர சமரில் ,உக்கிரேன் மக்கள் வீடுகளில் இருந்த பொருட்களை ,ரசியா இராணுவம் கொள்ளையடித்துள்ளது .
அது மட்டுமல்லாது அங்கிருந்த ,மிதி வண்டிகளையும் திருடி சென்றுள்ளது என உக்கிரேன் இராணுவம் தெரிவித்துள்ளது .மேற்படி சம்பவம் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது .
தொடர்ந்து உக்கிர சமர் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
மனைவி பிள்ளைகளை வீட்டோடு எரித்து கொன்ற கணவன் – இங்கிலாந்தில் பயங்கரம்
மனைவி பிள்ளைகளை வீட்டோடு எரித்து கொன்ற கணவன் – இங்கிலாந்தில் பயங்கரம்
இங்கிலாந்து Fairlisle Close, Clifton நோட்டிங்காம் பகுதியில் வீட்டோடு மூன்று வயது மற்றும் ஒரு வயது குழந்தைகளை ,எரித்து கொன்ற கணவன் கைது செய்ய பட்டுள்ளார் .
மனைவி பலத்த எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .
இந்த கொலைகளை இவரே புரிந்தார் என்பதால், 31 வயதுடைய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார் .தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளான.
மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
சீனாவுக்கு எதிராக கரும்புலி விமானங்களை தயாரித்த தாய்வான்
சீனாவுக்கு எதிராக கரும்புலி விமானங்களை தயாரித்த தாய்வான்
தாய்வான் நாட்டை ஆக்கிரமித்து கொள்ளும் நோக்குடன் சீனா போர் நடவடிக்கையை மேற்கொள்ள தயராகி வருகிறது .
இதனால் உக்கிரேனில் ஈரான் கரும்புலி விமானங்கள் தாக்குதலை நடத்தி வருவது போன்று ,தாய்வான் தயாரித்துள்ளது .
சீனாவுக்கு எதிராக இவ்வாறான கரும்புலி விமானங்களை தாய்வான் தயாரித்துள்ளது .
தாய்வானுக்கு பதிலடியாக சீனாவும் தயாரித்துள்ளது .இந்த விமானங்கள் தற்போது உக்கிரேன் களத்தில் இரு நாடுகளுக்கு சோதனைக்கு விட்டுள்ளன .































































