10 வயது சிறுமி துஷ்பிரயோகம் 46 வயதான ஆசிரியர் கைது | இலங்கை செய்திகள்
10 வயது சிறுமி துஷ்பிரயோகம் 46 வயதான ஆசிரியர் கைது | இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |பாடசாலை மாணவியான பத்து வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், அந்த பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எஹலியகொட பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த எஹலியகொட பொலிஸார், அந்த ஆசிரியருக்கு 46 வயதாகும் என்றனர்.
சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே சந்தேகத்தின் பேரில் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானதாக கூறப்படும் அந்த சிறுமியிடம் வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர், வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அச்சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
புற்றுநோயுடன் வாழும் போராளி குடும்பம் | பசியில் வாடும் 3 பிள்ளைகள் | JT VIEW
புற்றுநோயுடன் வாழும் போராளி குடும்பம் | பசியில் வாடும் 3 பிள்ளைகள் | JT VIEW
முல்லைத்தீவு பகுதியில் உள்ள போராளி குடும்பம் ஒன்றை சந்தித்தபோது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 3 பிள்ளைகளின் தாயொருவர் தனது கணவர் 4 மாதங்களாக யாழ் வைத்தியசாலையில் நடக்க முடியாது உள்ள நிலையையும் கூறினார்.
இறுதிப்போரில் தமது உறவுகளை இழந்தும் இன்றும் பல தடைகளை எதிர்கொண்டு வரும் இந்த கௌடம்பத்தின் கண்ணீர் கதை .
நடத்துக்காக போராடி சோற்றுக்குவாளோயிலலாமல் உயிருக்கு போராடும் போராளி குடும்பத்தின் அவல நிலை .
இரக்கம் இருந்தால் இதை கொஞ்சம் பார்த்து செல் .
Whatsapp number – 009476 160 5288
பெண் கான்ஸ்டபிளை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது|இலங்கை செய்திகள்
பெண் கான்ஸ்டபிளை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது|இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் களனி பொலிஸ் அலுவலகத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற இசைக் கச்சேரி ஒன்றின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த பெண் கான்ஸ்டபிள் ஒருவர் தாக்கப்பட்டதாகவும், தாக்குதலை மேற்கொண்ட கான்ஸ்டபிள் அவரின் கைத்தொலைபேசியையும் திருடிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் பின்னர் சந்தேகத்திற்குரிய கான்ஸ்டபிளும் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண் கான்ஸ்டபிளை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது|இலங்கை செய்திகள்
இந்த கான்ஸ்டபிள் கடந்த 25 ஆம் திகதி இரவு கடமைக்கு வருகை தந்ததுடன், கடவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற இசைக் கச்சேரியை காண சாதாரண உடையில் யாரிடமும் கூறாமல் சென்றுள்ளார்.
அங்கு இசை நிகழ்ச்சியின் பாதுகாப்புக்காக சீருடையில் இருந்த பியகம பொலிஸ் பயிலுனர் கான்ஸ்டபிளிடம் வாக்குவாதம் செய்து அவரை தாக்கி காயப்படுத்திவிட்டு கைத்தொலைபேசியை திருடிச் சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பெண் கான்ஸ்டபிள் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் களனி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் கீழ் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குறித்த கான்ஸ்டபிள் நேற்று (27) கைது செய்யப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு வாகனங்களை பந்தாடிய லேண்ட் ரோவர்| இலங்கை செய்திகள்
இரண்டு வாகனங்களை பந்தாடிய லேண்ட் ரோவர்| இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |அதிக வேகத்தில் பயணித்த லேண்ட் ரோவர் வாகனமொன்று, வீதியோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறி மற்றும் முச்சக்கரவண்டியை பந்தாடி பதம் பார்த்துவிட்டு பஸ்தரிப்பிடத்தில் முட்டிமோதி நின்றுள்ளது.
ஹட்டன்-டிக்கோயாவில் இருந்து நோர்வூட் வரையிலும் அதிவேகத்தில் பயணித்த லேண்ட் ரோவர் வாகனமே டிக்கோயா- வனராஜா பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மேலே குறிப்பிட்ட இரண்டு வாகனங்கள் மீது மோதிவிட்டு, பஸ்தரப்பிடத்தையும் பதம் பார்த்துள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த லேண்ட் ரோவரின் சாரதியும் மற்றுமொருவரும் டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (01) காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், லேண்ட் ரோவரின் சுக்கான் திடீரென செயற்பட மறுத்தமையை அடுத்தே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.
பிரபாகரன் வருகை அறிவிப்பு நிதி சேகரிக்க மட்டுமே| இலங்கை செய்திங்கள்
பிரபாகரன் வருகை அறிவிப்பு நிதி சேகரிக்க மட்டுமே| இலங்கை செய்திங்கள்
இலங்கை செய்திங்கள் |பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ.நெடுமாறன் தெரிவித்த கருத்து அவருடைய கருத்து அல்ல என்பதை அவரே குறிப்பிட்டிருந்ததாக தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.
தனது குடும்பதையே ஒரு இனத்திற்காக அர்ப்பணித்த தம்பி பிரபாகரன் தொடர்பில் இவ்வாறு பொது வெளியில் பொய்யான கருத்துகளை வெளியிடுவது ஒரு போராட்டத்தை மலினப்படுத்தும் செயல் என்றும் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு வெறுமனே நிதி கேரிப்புக்காக மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதாக சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.
மைத்திரியின் மனு நிராகரிக்கப்பட்டது | இலங்கை செய்திகள்
மைத்திரியின் மனு நிராகரிக்கப்பட்டது | இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளில் இருந்து தன்னை விடுவித்து உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை 21,000 ரூபாயட கட்டணத்துக்கு உட்பட்டு நிராகரிக்குமாறு மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க போதிய புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தும் நடவடிக்கை எடுக்காததற்காக முன்னாள்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோருக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் 108 வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாணத்தில் 75வது சுதந்திரதின விழா 2 ஆம் திகதி திருமலை அனுராதபுர சந்தி ஜூம்ஆப் பள்ளிவாயலில் நடாத்த சகல ஏற்பாடு
கிழக்கு மாகாணத்தில் 75வது சுதந்திரதின விழா 2 ஆம் திகதி திருமலை அனுராதபுர சந்தி ஜூம்ஆப் பள்ளிவாயலில் நடாத்த சகல ஏற்பாடு
இலங்கை செய்திகள் |பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரின் பணிப்புரைக்கமைவாக, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்காவின் அறிவுருத்தல்களுக்கிணங்க
75வது தேசிய சுதந்திரதின விழா எதிர்வரும் 02 ஆம் திகதி அஸர் தொழுகையின் பின்னர் (மாலை 3.30 மணி) திருகோணமலை – அனுராதபுர
சந்தியில் அமைந்துள்ள ஜூம்ஆப் பள்ளிவாயலில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிருவாகம்) ஆ.மன்சூர் தெரிவித்தார்.
75வது தேசிய சுதந்திரதின விழா நடாத்துவது தொடர்பான கலந்துரையாடல் இன்று (26) கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிருவாகம்) கேட்போர்
கூடத்தில் கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிருவாகம்) ஆ.மன்சூர் தலைமையில் இடம்பெற்றபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அன்றைய தினம் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள 75வது சுதந்திரதின விழாவுக்கு கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்கா பிரதம அதிதியாக கலந்துகொண்டு
சுதந்திரதின விஷேட உரையினை நிகழ்த்தவுள்ளார். இவ்விழாவில், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் வி.எச்.என்.ஜெயவிக்ரம, கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண திணைக்களத்
தலைவர்கள், அனைத்து பள்ளிவாயல் சம்மேளன தலைவர், செயலாளர், உலமாக்கள், மத்ரசா மாணவர்கள், விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இவ்விழாவில் பங்கேட்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அபு அலா –
ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்த வந்த விமானம் சுட்டு வீழ்த்தல் | உலக செய்திகள்
ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்த வந்த விமானம் சுட்டு வீழ்த்தல் | உலக செய்திகள்
உலக செய்திகள் |ரஷ்ய தலை நகர் மோஸ்கோ அருகே தாக்குதல் நடத்திட பறந்து வந்த உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
ரஸ்யா ஆயுத மற்றும் மின்சார மையங்களை இலக்கு வைத்து
தாக்குதல் நடத்திட பறந்து வந்த இரண்டு உக்கிரைன்
விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளன .
இதே பகுதியில் உள்ள ரஷ்யா இராணுவத்தின், விமான நிலையம் மீது ,
உக்ரைன் தயாரிப்பு இவ்வகையான விமானங்கள் தாக்குதல் நடத்தி இருந்தன .
அவ்வாறான uj 22 ரக தாக்குதல் விமானங்களே சுட்டு வீழ்த்த பட்டுளள்ன .
விமானம் சுட்டு வீழ்த்த பட்டதால் பெரும் சேதங்கள் தவிர்க்க பட்டுள்ளது .
ஈரான் 650 பாடசாலை மாணவிகள் மீது நச்சு தாக்குதல்| உலக செய்திகள்
ஈரான் 650 பாடசாலை மாணவிகள் மீது நச்சு தாக்குதல்| உலக செய்திகள்
உலக செய்திகள் |ஈரானில் உள்ள முப்பது பாடசாலைகளை சேர்ந்த மாணவிகள் மீது நச்சு புகை தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
பாடசாலை மிக அருகில் வைத்து வெளிவந்த ஒருவித ,
நச்சு புகை காரணமாக மாணவிகள் புதிய நோயினால் பாதிக்க பட்ட நிலையில் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
இந்த சம்பவத்தை அடுத்து மாணவர்கள் பாடசாலை ,
வரவில் வீழ்ச்சி கொண்டுள்ளதுடன் .
பல பாடசாலைகள் அடித்து மூட பட்டுள்ளது .
இது இஸ்ரேலின் திட்டமிடப்பட்ட வலிந்து தாக்குதல் ,நடவடிக்கையில்
ஒன்றாக இருக்கலாம் என நம்ப படுகிறது .
ஜெர்மன் பாடசாலை மீது துப்பாக்கி சூடு இருவர் காயம் | உலக செய்திகள்
ஜெர்மன் பாடசாலை மீது துப்பாக்கி சூடு இருவர் காயம் | உலக செய்திகள்
உலக செய்திகள் |ஜெர்மன் வடமேற்கு வடமேற்கு நகரமான பிராம்ஷேவில் உள்ளஆரம்ப பள்ளிக்கு அருகில் துப்பாக்கி சூடு நடத்த பட்டுள்ளது .
இந்த சூட்டு தாக்குதலில் ஒருவர் பலத்த காயம் அடைந்தார்,
சூட்டை நடத்திய குற்றவாளி ஆயுதத்தால் தன்னைத்தானே
காயப்படுத்திக் கொண்டார் .
அவரும் மீட்க பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை
பெற்ற வண்ணம் உள்ளார் .
இந்த சூட்டுசம்பவத்திற்கான காரணம்,
இதுவரை வெளியாகவில்லை .மேற்படி சம்பவம் மக்கள்
மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
வீழ்ந்து நொறுங்கிட ரஷ்யா உலங்குவானூர்தி பலர் காயம்| இலங்கை செய்திகள்
வீழ்ந்து நொறுங்கிட ரஷ்யா உலங்குவானூர்தி பலர் காயம்| இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |ரஷ்ய வடமேற்கு பகுதியில் அரசுக்கு சொந்தமான Mi-8 உலங்கு வானூர்தி ஒன்று வீழ்ந்து நொறுங்கியதில் நால்வர் காயமடைந்தனர் .
குறித்த உலங்குவானூர்தி தரை இறக்கத்தை மேக்கொள்ள தயாராகி கொண்டிருந்த வேளைவீழ்ந்து நொறுங்கியது .
காயமடைந்தவர்கள் மீட்க பட்டு மருத்துவமனையில்
சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .
இந்த வானூர்தி விபத்து விமானியின் தவறால் இடம்பெற்றதா ,
அல்லது இயந்திர கோளாறு காரணமாக இடம்பெற்றதா ,
என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
ஜனாதிபதியை படுகொலை செய்ய சூழ்ச்சி பொலிஸ் விளக்கம்| இலங்கை செய்திகள்
ஜனாதிபதியை படுகொலை செய்ய சூழ்ச்சி பொலிஸ் விளக்கம்| இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |ஜனாதிபதியை படுகொலை செய்ய சூழ்ச்சி: குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்தது எனும் தலைப்பில், தனியார் ஊடகமொன்றின் இணையத்தளத்தில் வெளியான செய்தி தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விளக்கமளித்துள்ளது.
அந்த இணையளத்தள செய்தியில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை படுகொலைச் செய்வதற்கான சூழ்ச்சி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது,
இந்த நாட்டின் அரசியல் கட்சியுடன் தொடர்புடையவர்கள் வெளிநாடொன்றில் இன்றைக்கு சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதியை படுகொலைச் செய்வதற்கான சூழ்ச்சிகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர் என்றும் இணையத்தள செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது என பொலிஸ் தலைமையக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியை படுகொலை செய்ய சூழ்ச்சி பொலிஸ் விளக்கம்| இலங்கை செய்திகள்
அத்துடன், இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதியை படுகொலைச் செய்வதற்காக அந்த குழு சூழ்ச்சிகளை செய்துள்ளது என்பது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு தகவல் கிடைத்துள்ளது என்றும் ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதைப் போல, படுகொலைச் செய்வதற்கான சூழ்ச்சி தொடர்பில் எந்தவொரு தகவலும் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கவில்லை. அதேபோல, செய்தியில் கூறப்பட்டுள்ளதைப் போல விசாரணைகளும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் ஆரம்பிக்கப்படவில்லை.
ஆகையால் அந்த இணையளத்தள செய்தியானது முழுமையாக பொய்யாக சித்திரிக்கப்பட்ட செய்தியாகும்
என்று பொலிஸ் தலைமையக ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்மை இங்கே கொண்டு வந்து விட்டுவிட்டு போன இங்கிலாந்துக்கு, மலையக தமிழர் தொடர்பில் தார்மீக கடமை இருக்கின்றது
எம்மை இங்கே கொண்டு வந்து விட்டுவிட்டு போன இங்கிலாந்துக்கு, மலையக தமிழர் தொடர்பில் தார்மீக கடமை இருக்கின்றது
- பிரித்தானிய வெளிவிவகார துணை பணிப்பாளரிடம் மனோ கணேசன் அழுத்தமாக தெரிவிப்பு
“மலையக தமிழரின் பிரதான எதிர்பார்ப்பு இந்நாட்டின் தேசிய நீரோட்ட அரசியல் வரைபுக்கு உள்ளே முழுமையான பிரஜைகளாக வேண்டும் என்பதாகும். சட்டப்படி நாடற்றோர் இன்று இல்லை.
எல்லோருமே பிரஜைகள். ஆனால், நமது மக்கள் முழுமையான பிரஜைகள் இல்லை. எமது பாதை உள்நோக்கிய பாதை. பிரிட்டன் இலங்கை அரசுடனான தமது நல்லுறவுகளை பயன்படுத்தி எமது இந்த இலங்கை கனவை நனவாக்க உதவ வேண்டும்.”
என நேற்று கொழும்பில், வெஸ்ட்மின்ஸ்டர் இல்லத்தில் நிகழ்ந்த சந்திப்பின் போது, பிரித்தானிய வெளிவிவகார துணை பணிப்பாளர் மாயா சிவஞானம், பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டன், அரசியல் அலுவலர் ஜோவிடா
அருளானாந்தம் மற்றும் தமுகூ தலைவர் மனோ கணேசன், இதொகா பொதுசெயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் கலந்துகொண்ட சந்திப்பின் போது, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.
எம்மை இங்கே கொண்டு வந்து விட்டுவிட்டு போன இங்கிலாந்துக்கு, மலையக தமிழர் தொடர்பில் தார்மீக கடமை இருக்கின்றது
பிரித்தானிய தரப்பினரிடம், மனோ எம்பி மேலும் கூறியதாவது,
“பிரித்தானியாவின் தார்மீக பொறுப்பு, பிரிட்டீஷ் அரசாட்சி, இம்மக்களை இருநூறு வருடங்களுக்கு முன்னர் தொடக்கம் தென்னிந்திய தமிழகத்திலிருந்து கொண்டு வர ஆரம்பித்ததுடன் ஆரம்பமாகிறது. அன்று முதல் எமது மக்கள்,
உலகம் கண்டிராத கடுமையான உழைப்பின் மூலம், இன்றுவரை மிகப்பெரிய ஏற்றுமதி தொழில் துறையாக இருக்கின்ற பெருந்தோட்டங்களையும், பெரும்
நெடுஞ்சாலைகளையும், பாரிய ரயில் பாதைகளையும், கொழும்பு துறைமுகத்தையும் அமைத்து, அன்று சிலோன், இன்று ஸ்ரீலங்கா என்ற இலங்கையை உருவாக்கியுள்ளார்கள்.”
“இதற்கு பிரதியுபகாரமாக, நன்றிகெட்டத்தனமாக 1948ல் எமது மக்களின் குடியுரிமைதான் பறிக்கப்பட்டது. வாக்குரிமைதான் பறிக்கப்பட்டது. நமது மக்கள் பலவந்தமாக 1964ல் சிறிமா-சாஸ்திரி இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் நாடு கடத்தப்பட்டார்கள்.
இது நடக்கும் போது, சிலோன் என்ற இலங்கை ஒரு பிரிட்டீஷ் ஆதிக்க நாடாக இருந்தது. 1972ல் குடியரசு ஆகும்வரை, இலங்கையில் பிரித்தானிய அரசாட்சிக்கு பதில் சொல்லும் மகாதேசாதிபதியே ஆட்சியில் இருந்தார்.
1948ன் சோல்பரி அரசமைப்பின் 29ம் பிரிவும் எம்மை காப்பாற்றவில்லை. ஆகவே இன்றைய பிரிட்டீஷ் அரசரின் அரசாங்கம் இலங்கை மலையக தமிழரின் மீது பாரிய தார்மீக பொறுப்பையும், கடமையும் கொண்டுள்ளது.”
“இலங்கை அரசுக்கும், இந்திய அரசுக்கும் எமது பிரச்சினைகளை கையாளும் பொறுப்பை முழுமையாக விட்டு விட வேண்டாம். அது சரி வராது.
இந்தியா ஏற்கனவே, இலங்கையுடனான தமது நட்புறவை எமது விஷயத்திலும் அவ்வப்போது பயன்படுத்துகிறது. ஆனால், அது எமக்கு போதாது. அவர்களுக்கு அவர்களது சொந்த தேசிய கரிசனைகள் அநேகம் உள்ளன.
அவை எமது விஷயங்களை விட முன்னுரிமை கொண்டவை. எமக்கு அவை தெரியும்.”
“தேசிய நீரோட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படாத காரணத்தால், நாம் ஒதுக்கப்படுகிறோம்.எமக்கு பிரிட்டீஷ் உதவியும் தேவை. பிரிபடாத ஒரே இலங்கைக்குள் எமது சமூக-அரசியல் அபிலாஷைகளை அடையவும், கடந்த காலங்களில் இழந்த உரிமைகளை பெறவும் நாம் பாடுபடுகிறோம்.
எமது மக்கள் ஜனதொகையில் மூன்றிலொன்றுக்கு குறைவில்லாத பிரிவினர் இன்னமும் பெருந்தோட்டங்களில் வாழ்கின்றனர். ஒட்டுமொத்த இலங்கையில் மிகவும் பின்தங்கிய நலிந்த பிரிவினராக அவர்கள் இருக்கின்றார்கள்.
ஐநா மனித உரிமை ஆணையகத்தின் நவீன கொத்தடிமை தொடர்பிலான விசேட அறிக்கையாளர், ஐநா நிறுவனங்கள், உலக வங்கி, சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஆகியவை முன்வைத்துள்ள கணிப்பீடுகளின்படி, இந்த
துன்பகரமான உண்மைகள் உலகறிய செய்யப்பட்டுள்ளன. ஆகவே பிரிட்டீஷ் அரசு, விசேட ஒதுக்கீட்டு திட்டங்களின் அடிப்படையில் பெருந்தோட்ட மக்களுக்கு உதவிட வேண்டும்.”
“நாங்கள் இந்நாட்டில் முழுமையான பிரசைகள் ஆக உதவுங்கள். நம் நாட்டிற்கு நீங்கள் வாழ்வாதார உதவிகள் வழங்கும் போது,
இலங்கையில் மிகவும் பின்தங்கிய நலிந்த பிரிவினரான, பெருந்தோட்ட பாமரமக்களுக்கு அவை கிடைகின்றனவா என கேள்வி எழுப்புங்கள்.
தேடுங்கள். எமக்காக இலங்கை அரசுடன் பேசுங்கள். நாம் இல்லாமல் இலங்கை முழுமையடையாது என்பது இனிமேல் மனதில் கொள்ளுங்கள்.”
ஜட்டி விற்பனை சரிவு பொருளாதாரத்துக்கு முதல் எச்சரிக்கை|இலங்கை செய்திகள்
ஜட்டி விற்பனை சரிவு பொருளாதாரத்துக்கு முதல் எச்சரிக்கை|இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |ஒரு நாட்டின் பொருளாதாரத்தைக் கணிக்கவும், ஆய்வு செய்யவும் பல காரணிகள், பல அளவுகோல்கள் உள்ளன.
சின்னச் சின்ன விஷயங்கள் கூடப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணியாக உள்ளது, இதற்கு முக்கியமான காரணம் அனைத்து பொருட்களின் விற்பனையும் மக்களின் வருமானத்தின் அடிப்படையில் உள்ளது.
இந்த வர்த்தகத்தின் அடிப்படையில் தான் ஒரு நாட்டின் பொருளாதாரம் அமையும். அந்த வகையில் அமெரிக்க மத்திய வங்கியின் முன்னாள் தலைவரான ஆலன் கிரீன்ஸ்பான் ஆண்களின் உள்ளாடை அதிலும் குறிப்பாக ஜட்டி விற்பனை பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோல் எனக் கூறுகிறார்.
இந்த நிலையில் இந்தியாவில் ஆண்கள் பிரிவு உள்ளாடைகள் நிறுவனங்கள் நிஃப்டி சந்தையில் மிகவும் மோசமாகச் செயல்படுகிறது, இதனால் இதை இந்திய பொருளாதாரம் குறித்த அச்சமாகவும் பார்க்கப்படுகிறது.
ஜட்டி விற்பனை சரிவு பொருளாதாரத்துக்கு முதல் எச்சரிக்கை|இலங்கை செய்திகள்
நிஃப்டி 50-யில் கடந்த ஒரு வருடத்தில் உள்ளாடை நிறுவனங்கள் மோசமாகச் செயல்பட்டு வருகிறது. ரூபாய் அண்ட் கோ 51 சதவீதம் சரிவு, லக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 50 சதவீதம் சரிவு, பேஜ் இண்டஸ்ட்ரீஸ் 7 சதவீதம் சரிவடைந்துள்ளது.
இது தத்தம் நிறுவனங்களின் உள்ளாடை விற்பனையிலும் எதிர்ரொலிக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் பொருளாதாரத்தில் ஏதோ சரியாக இல்லை என்பதற்கான சிக்னலாகப் பார்க்கப்படுகிறது.
அமெரிக்க மத்திய வங்கியின் முன்னாள் தலைவரான ஆலன் கிரீன்ஸ்பான் ஏன் உள்ளாடை விற்பனை பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய அளவுகோலாக உள்ளது எனக் கூறுகிறார் என்றால் இது அனைத்து ஆண்களுக்கும் மிகவும் முக்கியமான ஒன்று,
அதேபோல் இதை விலைக்கு ஏற்றார் போல் சரிய சைஸ் போன்றவற்றைப் பயன்படுத்த முடியாது, எனவே இது கட்டாயம் மக்கள் வாங்கும் விஷயமாக உள்ளது என நம்புகிறார்.
ஆண்கள் உள்ளாடை விற்பனை குறைகிறது என்றால் பொருளாதாரம் ரெசிஷன் அல்லது சரிவை நோக்கி செல்கிறது என்று பொருள்.
இந்த நிலையில் இந்தியாவில் உள்ளாடை விற்பனை அல்லது பயன்பாடு 55 சதவீதமாகச் சரிந்துள்ளது, இது பெரும் தலைவலியாக மாறியள்ளது.
அமெரிக்க மத்திய வங்கியின் முன்னாள் தலைவரான ஆலன் கிரீன்ஸ்பான் அன்றைய வேலைவாய்ப்பு சந்தை மற்றும் பணம் ஈட்டும் சமுகத்தை வைத்து இது கணக்கிட்டு உள்ளார். ஆனால் இன்று வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்புச் சமூகத்தில் பெரிய மாற்றம் எற்பட்டு உள்ளது.
இன்றைய வேலைவாய்ப்பு சந்தையிலும், பணம் ஈட்டும் சமூகத்தில் இந்தியா மட்டும் அல்லாமல் உலகளவில் பெண்களின் பங்கீடு மிகவும் அதிகமாக இல்லை.
இதனால் ஆலன் கிரீன்ஸ்பான் கணக்கீட்டு முறையில் மாற்றம் செய்து ஆண்கள் உள்ளாடை விற்பனை மட்டும் கணக்கெடுக்காமல் பெண்கள் உள்ளாடை விற்பணையில்
கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இது பொருளாதார வளர்ச்சி அளவுகோளில் கட்டாயம் மாற்றத்தை ஏற்படுத்தும்.
ரஷ்ய விமானங்கள் சுட்டு வீழ்த்தல் | உலக செய்திகள்
ரஷ்ய விமானங்கள் சுட்டு வீழ்த்தல் | உலக செய்திகள்
உலக செய்திகள் |டினிப்பீரோ ஆற்றின் மேலாக பறந்து கொண்டிருந்த,
ரஷ்ய விமானங்கள் இரண்டு சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக
உக்கிரைன் இராணுவம் அறிவித்துள்ளது .
ஆள் இல்லா உளவு விமானங்கள் இரண்டு ,
உளவு பார்த்தலில் ஈடுபட்டு கொண்டிருந்த
பொழுது சுட்டு வீழ்த்த பட்டுள்ளது என்கிறது .
மேலும் உக்கிரைன் இராணுவ இலக்குகளை குறி வைத்து ,
ரஷ்ய நடத்திய தாக்குதலில் 800 உக்கிரைன் இராணுவத்தினர் ,
பலியாகியும் , போராயுதங்கள் மற்றும் ஆயுத தளபாடங்கள் ,
மின்சார உற்பத்தி மையங்கள் என்பன அழிக்க பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .
தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையில்,
கடும் சண்டைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
ரஷ்ய குடும்பத்தை விரட்டியடித்த காட்டுயானை| இலங்கை செய்திகள்
ரஷ்ய குடும்பத்தை விரட்டியடித்த காட்டுயானை| இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |ரஷ்ய சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற வாகனம் ஒன்று காட்டுயானையால் தாக்கப்பட்ட சம்பவம் பொலன்னறுவை மின்னேரியா தேசிய பூங்காவில் பதிவாகியுள்ளது.
8 வயது பிள்ளை மற்றும் 10 மாத குழந்தையை உள்ளடக்கிய ஒரு ரஷ்ய குடும்பம் காட்டு யானையின் அருகில் சென்று புகைப்படம் எடுக்க முயன்ற
போது அவர்களை யானை துரத்தியுள்ளது, அவர்கள் ஓடத் தொடங்கி வாகனத்தில் ஏறிய போதும் யானை வாகனத்தைத் தாக்கி சேதப்படுத்தியது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வாடகைக்கு எடுக்கப்பட்ட வாகனத்துடன் பொலன்னறுவைக்கு சுற்றுலா சென்ற குடும்பம்,
திரும்பி வரும் வழியில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக மின்னேரிய பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதிகளுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்| இலங்கை செய்திகள்
சாரதிகளுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்| இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |கொஹுவல சந்தியில் நிர்மாணிக்கப்படவுள்ள மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் பெப்ரவரி 22ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு மே 31ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளும் காலத்தில் பயணிகள் பஸ்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் கொஹுவல சந்தி ஊடாக பயணிக்க முடியும்.
ஆனால், மேம்பாலம் அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருவதால், போக்குவரத்து நெரிசலை குறைக்க, மாற்று வழிகளை பயன்படுத்துமாறு, போலிஸார் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
வீதி அபிவிருத்தி அதிகாரசபை, பொதுமக்களுக்கு அறிவிப்பதற்காக மாற்று வழிகளைக் குறிக்கும் பெயர்ப் பலகைகளை, வில்லியம் வீதி – காலி வீதி, நுகேகொட சந்தி, கிருலப்பன சந்தி, பொரலஸ்கமுவ சந்தி, பிபிலியான சந்தி, பாமன்கட சந்தி மற்றும் அதிவேக வீதி – கஹதுடுவ வீதி ஆகிய இடங்களில் அமைத்துள்ளது.
அந்த இடங்களில் போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டிருக்கும் பொலிஸாரின்
வழிகாட்டலின்படி செயல்படுமாறு வாகன சாரதிகளை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி| இலங்கை செய்திகள்
அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி| இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |அம்பலாங்கொடை, குளீகொட, மீட்டியகொட வீதியில் கொன்னதுவ பிரதேசத்தில் இன்று (28) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாதம்பாகம, உஸ்முதுல்லாவ பகுதியைச் சேர்ந்த 42 வயதான சுதத் சிறி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இறந்தவர் தனது மனைவியை அவர் பணிபுரியும் அலுவலகத்தில் இறக்கிவிட்டு வீடு திரும்பும் போதே துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் குறித்தோ, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் வந்த வாகனம் குறித்தோ இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் பலப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.
தோட்டக் கிணற்றில் வீழ்ந்து ஒருவர் பலி | இலங்கை செய்திகள்
தோட்டக் கிணற்றில் வீழ்ந்து ஒருவர் பலி | இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |நெல்லியடிப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கரவெட்டி, கப்பூது பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற தோட்டக் கிணற்றில் வீழ்ந்து வயோதிபர் ஒருவர் நேற்றைய தினம் (27) உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை பொன்னையாபிள்ளை (வயது- 65) என்பவராவார்.
மேற்படி நபர் பாதுகாப்பற்ற வயல் கிணற்றில் சடலமாக காணப்பட்டமை தொடர்பில் நெல்லியடி பொலிசருக்கு தெரிவிக்கப்பட்டது.
தோட்டக் கிணற்றில் வீழ்ந்து ஒருவர் பலி | இலங்கை செய்திகள்
சம்பவ இடத்திற்கு இன்று (27) மாலை சென்ற கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வே.பாஸ்கரன் விசாரணை மேற்கொண்டு சடலத்தை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை அறிக்கை சமர்ப்பிக்குமாறு நெல்லியடி பொலிசாருக்கு உத்தரவிட்டார்.
மேலும் அப்பகுதியில் பாதுகாப்பற்ற கிணறுகள் காணப்படுவதாகவும் அவற்றை காணி உரிமையாளர்கள்
பாதுகாப்பு வேலி அமைத்து பாதுகாப்பானதாக செய்ய வேண்டும் எனவும் மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்.
ஆப்பிள் நிறுவனம் 906 மில்லியன் தண்டம் | உலக செய்திகள்
ஆப்பிள் நிறுவனம் 906 மில்லியன் தண்டம் | உலக செய்திகள்
உலக செய்திகள்| உலக மக்கள் அதிக பயன் பாட்டில் உள்ள ஆப்பிள் ஐபோனாகும் .இதற்கு ரசியா கட்டுப்பாட்டு மையம் 906 மில்லியன்
பணத்தை தண்டமாக அறவிட்டுள்ளது .
ரஷ்யாவில் ஆப்ஸ் சந்தை முறைகேடு: Antimonopoly Service
என்று கூறப்படும் குற்றத்திற்காக ஆப்பிள் US$12.1 மில்லியன் அபராதம் செலுத்துகிறது
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள்,
மொபைல் ஆப்ஸ் சந்தையில் அதன் ஆதிக்கத்தை
தவறாக பயன்படுத்தியதாக ரஷ்ய நம்பிக்கையற்ற வழக்கில் 906 மில்லியன்
ரூபிள் (12.12 மில்லியன் அமெரிக்க டாலர்)
அபராதம் செலுத்தியுள்ளதாக ரஷ்யாவின் ஃபெடரல்
ஆன்டிமோனோபோலி சர்வீஸ் (FAS) திங்களன்று தெரிவித்துள்ளது




































