சிக்கன் பிரியாணி சுவையாக செய்வது எப்படி
சிக்கன் பிரியாணி சுவையாக செய்வது எப்படி
சிக்கன் பிரியாணி நம்ம வீட்டில் மிக சுவையாக கடை சுவையில் செய்வது எப்படிஎன்பதை வாங்க இதில் பார்க்கலாம் .
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் விரும்பி உண்ணும் ,சிக்கன் பிரியாணி வாங்க செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .
சிக்கன் பிரியாணி செய்முறை ஒன்று
அடுப்பை சூடாக்கி பாத்திரம் வைத்து, அதில் தேவையான எண்ணெய் ,நெய் விட்டு சூடானதும் ,மூணு பிரியாணி இலை ,நான்கு பட்டை ,மூன்று ஸ்டார் பூ ,ஏலக்காய் ,கராம்பு நான்கு ,பொடியாக்கி வெட்டிய மூன்று பெரிய வெங்காயம் ,போட்டு நன்றாக பொன்னிறமா வரும் வரை வதக்கிடுங்க .

அப்புறமா பொடியாக வெட்டிய தக்காளி ,ஐந்து பச்சை மிளகாய் ,இணைத்து நன்றாக வதக்கி வாங்க ,அப்புறம் ஐந்து கரண்டி இஞ்சி பூண்டு அரைச்சு சேர்த்திடுங்க ,கூடவே இக்காயளவு புதினா ,வதக்கிய பின்னர் துண்டுகளாக வெட்டிய சிக்கன் சேர்த்து இது கூட பிரட்டி விடுங்க .
சிக்கன் பிரியாணி சுவையாக செய்வது எப்படி
இப்பொழுது இரண்டு கரண்டி மிளகாய் தூள் ,
கரம் மசாலா இரண்டு கரண்டி ,சேர்த்து நனறாக வதங்கிய பின்னர் கொஞ்ச நீர் ஊற்றிஒரு நிமிடம் வேக விடுங்க .
அப்புறம் தேவையான தயிர் ,சேர்த்து மிக்ஸ் பண்ணிட்டு ,தண்ணி சேர்த்து ,கூடவே தேவையான உப்பு ,அரை கரண்டி தேசிக்காய் ,சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விடுங்க .
அப்புறம் கழுவி வைத்த பசுமதி அரிசி எடுத்து நன்றாக மிக்ஸ் பண்ணி ,கொஞ்சம் புதினா ,கொத்த மல்லி ,போட்டு பத்து நிமிடம் மூடி வைங்க .
வேகி வந்ததும் ஒரு கரண்டி எண்ணெய் எடுத்து மேலே, ஊற்றி கிளறி விடுங்க .
அடுப்பு தீயை குறைத்து மேலும் 10 நிமிடம் வேக வைத்திடுங்க .

இப்போ கடை சுவையில் செம்மையான சிக்கன் பிரியாணி ரெடியாகிடுச்சு .இது போல பிரியாணி நீங்களும் வீட்டில் செய்து அசத்துங்க மக்களே .
இலங்கைக்கு 333 மில்லியன் அமெரிக்கா டொலர் கடன் -விற்கப்படும் இலங்கை
இலங்கைக்கு 333 மில்லியன் அமெரிக்கா டொலர் கடன் -விற்கப்படும் இலங்கை
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் சுமார் 333 மில்லியன் அமெரிக்கா டொலர்களை வழங்கியுள்ளதாக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் .
வழங்க படும் கடன் தொகை
நான்கு ஆண்டு திட்டத்தின் அடிப்படையில் மூன்று மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு கடனாக வழங்க படுகிறது ,மேலும் அதே கால பகுதிக்குள் வேறு நாடுகளிடம் இருந்தும் நான்கு மில்லியன் டொலர் கடனாக பெற படுகிறது .
கடன் மேல் கடனை வாங்கும் இலங்கை ,அதனை மீள செலுத்தும் காலம் ,நான்கு ஆண்டுகளான பின்னர் ,அரசை பொறுப்பேற்கும் ஆட்சி கவிழ்க்க படும் சாத்தியம் இந்த கடன் சுமையால் எழுந்துள்ளது .
எகிறும் விலை வாசிகள் .
இந்த சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியல் விதிக்க பட்ட விதிகளில் ,வரி உயர்வு உள்ளது .
இந்த கடனை மீள செலுத்திட வரிகளை உயர்ரத்த வேண்டும் ,அப்படி வரிகளை உயர்த்தினால் மீளவும் பொருட்கள் விலை உயரும் .
ஆக மொத்தம் இப்பொழுது முதலையின் வாய்க்குள் இலங்கை தலை சிக்கியுள்ளது .
இலங்கைக்கு 333 மில்லியன் அமெரிக்கா டொலர் கடன் -விற்கப்படும் இலங்கை
ஐந்து ஆண்டுகளில் இலங்கை பொருளாதாரம் மற்றும் ,விலை வாசிகள் இரண்டு மடங்கு இப்போதுள்ளதை விட அதிகரிக்க போகிறது .
இலங்கை மக்கள் சொல்லென்னா துயரை சந்திக்க போகின்றனர் என்பதே ,கள நிலவரமாக உள்ளது .
இலங்கைமீளவும் ஒரு சோமாலியாவாக மாற்றம் பெற போகிறது .
சிரியா விமான தளம் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்
சிரியா விமான தளம் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்
சிரியா அலெப்போ சர்வதேச விமானம் நிலையம் மீது ,
இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது .
விமான நிலையம் தாக்குதல்
இந்த ஏவுகணை தாக்குதலில் ,குறித்த விமான நிலையத்தின்,
ஓடு பாதை கடுமையாக சேதமடைந்துள்ளன .
ஒரு மாத இடைவெளியில் இரண்டாவது தடவையாக,
இஸ்ரேல் இந்த அத்துமீறல் தாக்குதலை நடத்தியுள்ளது .
இஸ்ரேல் அத்துமீறல் தாக்குதல்
சர்வதேச விதிகளை மீறி மீளவும் ,மத்திய தரை கடல் பகுதியில் இருந்து ,
இந்த ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது .
இஸ்ரேலின் தொடர்ந்து இந்த அத்துமீறல் செயல்கள் ,
பதட்டத்தை அதிகரித்துள்ளது.
கிளிநொச்சியில் வெள்ளம் மக்கள் வெள்ளத்தில் அவதி
கிளிநொச்சியில் வெள்ளம் மக்கள் வெள்ளத்தில் அவதி
கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் கடும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது .அதிக மழைவீழ்ச்சி காரணமாக இந்த வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது .
வெள்ள நீர் வடிந்து செல்லும் வரை ,அந்த வழி போக்குவரத்தில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக ,அந்த பகுதி மக்கள் சமுக வலைத்தளங்களில் ,கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் .
தோசை சுட்ட சீனா ரஸ்யா அதிபர்கள்
தோசை சுட்ட சீனா ரஸ்யா அதிபர்கள்
ரஷ்யாவுக்கு பயணம் செய்திருந்த சீனா அதிபர் மாற்று ரஷ்ய ஜனாதிபதி ஆகியோர் தோசை சுட்டு சாப்பிட்ட கலக்கல் காட்சிகள் வெளியாகியுள்ளன .
தமிழர்கள் அதிகம் விரும்பி உண்ணும் தோசை
இவர்கள் சுட்டு அசத்தி உள்ளார்கள் .
இது மட்டுமா இருவரும் ,ஒரே கோட் போட்டு மேற்குலக நாடுகளை
கொதிப்பில் உறைய வைத்துளளர்கள் .
அதிர்ச்சியில் மேற்குலகம்
இருவரும் ஒரு ஆடையை போட்டு ,நாங்கள் ஆட்கள் இருவர் தான் ராசா ,
ஆனால் ஒரே புடவைக்குள் தான் இருக்கிறோம்
நம்மள ஒன்றும் பண்ண முடியாது என்கின்ற ,
இரயத்தந்திரத்தை அமெரிக்கா தலையில் குட்டி சொல்லி உள்ளார் புட்டீன் .
இதனால் தான் என்னவோ ,புட்டீனை சர்வதே நீதிமன்ற,
கூண்டில் ஏற்ற வேண்டும் என ,
அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகள் கூக்குரல் இட்ட வண்ணம் உள்ளனர் .
உக்ரைன் 32 விமானங்கள் சுட்டு வீழ்த்திய ரஷ்யா
உக்ரைனைன் 32 விமானங்கள் சுட்டு வீழ்த்திய ரஷ்யா
ரஷ்ய கடந்த 24 மணித்தியாலத்தில் நடந்த மோதல்களில்,
உக்ரைன் பணிகளுக்கு பலத்த இழப்பை ஏற்படுத்தியுள்ளது .
விமான இழப்பு
31 உளவு மாற்றி தற்கொலை விமானங்கள் மற்றும் ,
எஸ் யு 25 ரக போர் விமானம்
என்பன சுட்டு வீழ்த்த பட்டுள்ளது என அறிவித்துள்ளது .
இராணுவம் பலி
மேலும் 440 இராணுவத்தினர் , ஐந்து முனைகள் ஊடாக மேற்கொண்ட,
தாக்குதல்களில் பலியாகியுள்ளனர் .
பீரங்கிகள் ,ஏவுகணைகள் ,கவச வண்டிகள் ,பிக்கப் வாகனங்கள் என்பனவும்
அழிக்க பட்டுள்ளது என தெரிவித்துள்ளது .
இந்த மாதத்தில் இடம்பெற்ற தாக்குதல்களில் ,கடந்த தினம் மட்டுமே பாரிய
விமானங்களை உக்ரைன் இழந்துள்ளது குறிப்பிட தக்கது .
ரஜனி வீட்டில் கொள்ளை சிக்கிய பெண்
ரஜனி வீட்டில் கொள்ளை சிக்கிய பெண்
நடிகர் ரஜனிகாந் மக்களும் தனுஷ் முன்னாள் மனைவியுமான ஐஸ்வர்யா
வீட்டில் 60பவுன் நகைகள் காணமல் போயுள்ளது .
நகைகள் காணமல்போனதையே அடுத்து காவல்துறையில்
முறைப்பாட்டுட் செய்தார் .,
அப்பொழுது அங்கு பணிபுரிந்த வேலைக்கார பெண் ஒருவர்,
நகைகளை திருடியுள்ளது அம்பலமானது .
95 லட்சத்திற்கு கடன் பெற்று நிலம் வாங்கிய வேலைக்கார பெண் ,
அதனை அடைக்க ஐஸ் வீட்டில்,நகைகள் திருடியது அம்பலமாகியுள்ளது .
மேற்படி விடயம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஆசிரியர் இடமாற்றங்கள் 17 ஆம் திகதி முதல்
ஆசிரியர் இடமாற்றங்கள் 17 ஆம் திகதி முதல்
வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு அமைய நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேசிய பாடசாலைகளிலும் பத்தாண்டு மற்றும் வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்கள் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
விசேட மேன்முறையீடுகளுக்கு உட்பட்ட ஆசிரியர்கள் தவிர்ந்த ஏனைய இடமாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
உயர்தர மற்றும் சதாரணதர வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களின் இடமாற்றங்களினால் பிள்ளைகளுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமாயின் அதிபர்கள் ஊடாக மேன்முறையீடுகளை சமர்ப்பிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
ஆசிரியர் இடமாற்றங்கள் 17 ஆம் திகதி முதல்
மேன்முறையீடுகளை சிறப்புக் குழு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இதுவரை வழங்கப்பட்ட அனைத்து தற்காலிக பணிகளும் இந்த வருடம் ஜூன் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் இடமாற்றக் கடிதம் கிடைத்தவுடன் அதற்கேற்ப செயற்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
வரிக் கொள்கையில் மாற்றங்கள் – ஜனாதிபதி அறிவிப்பு
வரிக் கொள்கையில் மாற்றங்கள் – ஜனாதிபதி அறிவிப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி மூலம் வீழ்ச்சியடைந்த நாட்டை வழமைக்கு கொண்டு வர முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த கடன் வசதியை பெற்றுக்கொள்வதன் மூலம் இலங்கை மீண்டும் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்படும் என ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.
மேலும் உரையாற்றிய ஜனாதிபதி, எதிர்காலத்தில் நாட்டில் பல பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.
வரிக் கொள்கையில் மாற்றங்கள் – ஜனாதிபதி அறிவிப்பு
கடந்த வரவு செலவுத் திட்டத்தில் சில விடயங்கள் முன்மொழியப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள இவ்வாறான சீர்திருத்தங்கள் தொடர்பிலும் தமது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இதன்போது அரசின் வருவாயை அதிகரிக்கும் திட்டம் தொடர்பில்,
- 2025 க்குள் முதன்மை பற்றாக்குறையை 2.3 ஆக்குதல்.
- 2026 க்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15% ஆக அரசாங்க வருவாயை அதிகரிப்பது.
- துறை சார்ந்த வரிச் சலுகைகள் இல்லாமல் வருமான வரி விகிதம் 30% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- VAT வரியை 8% – 15% ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- VAT க்கு வழங்கப்பட்ட விலக்கு வரியை படிப்படியாக குறைத்தல், VAT திரும்பப்பெறுதலை விரைவுபடுத்துதல், SVAT முறையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள்.
- 2025 ஆம் ஆண்டில், சொத்து வரி முறையை குறைந்தபட்ச வரி விலக்குடன் ஒரு செல்வ வரி மாற்றும்.
- பரிசு மற்றும் எஸ்டேட் வரி அறிமுகப்படுத்தப்படும்.
ஆர்ப்பாட்டம் நடத்த முடியாது – நீதிமன்ற உத்தரவு
ஆர்ப்பாட்டம் நடத்த முடியாது – நீதிமன்ற உத்தரவு
ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் குழுவொன்று கொழும்பில் கோட்டை புகையிரத நிலையம் உட்பட பல முக்கிய
இடங்களுக்குள் பிரவேசித்து அந்த இடங்களில் இருந்து ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு தடைவிதித்து நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோட்டை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட அறிவித்தலின் பிரகாரம், கோட்டை நீதவானினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் அதிபர்கள் தொழிற்சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த
ஆர்ப்பாட்டம் நடத்த முடியாது – நீதிமன்ற உத்தரவு
ஜயசிங்க, இலங்கை முற்போக்கு ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் மயூர சேனாநாயக்க, அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பூஜ்ய யல்வல பன்னசேகர தேரர் ஆகியோருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. .
அதன்படி இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கோட்டை பொலிஸ் பிரிவில் கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து செராமிக் சந்தி, லோட்டஸ் வீதி, யோர்க் வீதி, வங்கி மாவத்தை, பரோன் ஜயதிலக மாவத்தை,
சைத்திய வீதி, ஜனாதிபதி மாவத்தை, காலி மவுத் சுற்றுவட்டம் மற்றும் ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதி அமைச்சு மற்றும் காலி
முகத்திடல் ஆகிய இடங்களுக்குள் நுழைய தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவு தொடர்ந்தும்
இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவு தொடர்ந்தும்
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது.
இந்திய முதலீட்டாளர்களை இலங்கைக்கு ஈர்த்தல், இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துதல், இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மிலிந்த் மொரகொடவுக்கும், இந்திய நிதி மற்றும் கூட்டுத்தாபன விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையில் நேற்று (21) பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பில் இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், இந்திய ரூபாவில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் பலி
மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் பலி
கடவத்த, ராகம வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (21) இரவு பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடவத்த, மேல் கரகஹமுல பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் விடுதியில் தங்கியிருந்த நிலையில், குறித்த நபர் தனியாக மது அருந்தியுள்ளார்.
அவர் தங்கியிருந்த அறைக்கு பின்னால் உள்ள பால்கனியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அடம்பன் விபத்தில் இளைஞன் பலி இருவர் படுகாயம்
அடம்பன் விபத்தில் இளைஞன் பலி இருவர் படுகாயம்
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் உயிலங்குளம் பிரதான வீதியில் இன்று (21) செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அடம்பனில் இருந்து உயிலங்குளம் நோக்கி வயோதிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.
அடம்பன் விபத்தில் இளைஞன் பலி இருவர் படுகாயம்
இதன் போது உயிலங்குளத்தில் இருந்து அடம்பன் நோக்கி 2 இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது குறித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகின.
இதன் போது உயிலங்குளத்தில் இருந்து அடம்பன் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஏனைய இருவரும் படுகாயம் அடைந்தனர்.படுகாயம் அடைந்த இருவரும் உடனடியாக மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
சடலம் மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வருகை தந்த அடம்பன் பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஐஎம்எப் அனுமதி கிடைத்தது
ஐஎம்எப் அனுமதி கிடைத்தது
இலங்கைக்கு நீடிக்கப்பட்ட நிதி வசதி உதவியை பெற்றுக் கொடுப்பதற்கான அனுமதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அனுமதியை வழங்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தினூடாக, இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி வழங்கும் அமைப்புகள் மற்றும் பரஸ்பர உதவியளிக்கும் அமைப்புகளிடமிருந்து 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை பெற்றுக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது,
நாட்டில் பெரும்பொருளாதார உறுதித் தன்மையை மீள நிலைநாட்டவும், கடன் மீளச் செலுத்தக்கூடிய உறுதித் தன்மையையும் எய்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கும் நிலையில், இலங்கையைப் பொறுத்தமட்டில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக அமைந்துள்ளது.
இதனூடாக பொருளாதாரத்தை பல சவால்களிலிருந்து மீட்டு, சகல பங்காளர்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்பக்கூடியதாக இருக்கும்.
75 விருது பெற்ற டு ஓவர் திரைப்படம்.. உற்சாகத்தில் படக்குழு
75 விருது பெற்ற டு ஓவர் திரைப்படம்.. உற்சாகத்தில் படக்குழு
டூ ஓவர் திரைப்படம் தொடர்ந்து பல விருதுகளை வென்று குவித்து வரும் நிலையில் இந்த இனிப்பான செய்தியை இயக்குனர் ஷார்வி அறிவித்துள்ளார்
டூ ஓவரில் சிவகுமாராக நடித்த மானவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. ஷார்வி எழுதி இயக்கிய கருப்பொருளில் உருவாகியுள்ள இப்படம் தமிழில் வெளியாகிறது. டூ ஓவர் ஏற்கனவே இந்தியாவிலும் வெளிநாட்டிலும் 75 க்கும்
விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றுள்ளது
மேற்பட்ட பாராட்டுகளுடன் விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றுள்ளது. உலகின் சிறந்த திரைப்பட விழாக்களில் இப்படம் கவனம் பெற்றது.
டூ ஓவர் ( தமிழ்) திரைப்படம், மானவ், மரியா பின்டோ, நெஃபி அமெலியா, r g வெங்கடேஷ் ஆகியோர் நடித்த படம். ஷார்வி எழுதி இயக்கியுள்ளார்.
ரியல் இமேஜ் பிலிம்ஸ் சார்பில் எஸ் சரவணன் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். பி ஜி வெற்றிவேல் ஒளிப்பதிவு மற்றும் கே பிரபாகரன் இசை,
இது ஒரு உண்மையான வாழ்க்கை கதை.
ஜனாதிபதி மக்களின் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறிவருகிறார்
ஜனாதிபதி மக்களின் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறிவருகிறார்
நாட்டு மக்களின் அரசியல் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை அரசாங்கம் மீறி நாட்டின் பக்கச்சார்பற்ற நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளையும், சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிகளையும்
அரசியல் சதித்திட்டங்களினூடாக அரசாங்கம் தடைகளை ஏற்படுத்தி மனித உரிமைகளை அப்பட்டமாக மீறிவருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
தேர்தல் ஆணைக்குழுவிற்கும், நாட்டின் உயர் நீதிமன்றத்திற்கும், நிதி அமைச்சுக்கும் மற்றும் அரச அச்சகத்திற்கும் கூட இடையூறுகளை ஏற்படுத்தி தேர்தலை சீர்குலைக்கும் செயலிலும் ஈடுபட்டு வருவதாகவும், இதற்கு ஆதரவு
தெரிவித்து துணைபோகும் விதமாக தேர்தலை சீர்குலைக்கும் ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித தலைவர் தெரிவித்தார்.
நாட்டு மக்கள் முறைமை மாற்றமொன்று வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தாலும், தற்போது முறைமை மாற்றம் ஒன்று நிகழாது ராஜபக்சர்களை பாதுகாக்கும் திட்டமொன்றே இயங்கி வருவதாக தெரிவித்த
ஜனாதிபதி மக்களின் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறிவருகிறார்
எதிர்க்கட்சித்தலைவர், பாராளுமன்ற உறுப்பினர்களின் எரிக்கப்பட்ட வீடுகளுக்கு நட்டஈடு வழங்குதல், மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்குதல் மற்றும் முழு பதவிக் காலம் முடியும் வரை பொதுத்
தேர்தலுக்கு செல்லாதிருத்தல் என்ற காரணங்களுக்காக மாத்திரமே இந்த ஜனாதிபதி செயற்பட்டுக்கொண்டிருக்கிறார் எனவும் அவர் தெரிவித்தார்.
பொரளை குப்பியாவத்த பிரதேசத்தில் நேற்று (20) பிற்பகல் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை மீனவர்கள் அறுவர் இந்தியாவில் கைது
இலங்கை மீனவர்கள் அறுவர் இந்தியாவில் கைது
இலங்கை மீனவர்கள் அறுவர் படகு ஒன்றுடன் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் இலங்கை எல்லையை தாண்டி இந்திய எல்லைக்குள் சென்றமையால் அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் நேற்று (20) தாருவைகுளம் பகுதிக்கு கொண்டு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
159 வருட பொலிஸ் வீரர் தினம்
159 வருட பொலிஸ் வீரர் தினம்
159 வருட பொலிஸ் வீரர் தினம் கிளிநொச்சியில் இன்று (21) இடம்பெற்றது.
21.03.1984 இதே நாளில் உயிரிழந்த பொலிஸ் உத்தியயோகத்தரான சபான் என்பவரை நினைவுகூறும் வகையில் குறித்த நிகழ்வு இன்று பெற்றது.
குறித்த நிகழ்வில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கலந்து கொண்டு திணைக்கள கொடியை ஏற்றி அரைக்கம்பத்தில் பறக்கவிட்டார்.
தொடர்ந்து உயிரிழந்த அத்தனை பொலிஸ் உத்தியோகத்தர்களையும் நினைவுகூர்ந்து அகவணக்கம் இடம்பெற்றதுடன், பூச்செண்டுகள் வைக்கப்பட்டு நினைவு கூறப்பட்டது.
பாராளுமன்றில் தோற்கடிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கான யோசனை
பாராளுமன்றில் தோற்கடிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கான யோசனை
இலங்கை சட்டக் கல்லூரியில் நடத்தப்படும் அனைத்து பாடநெறிகளும் பரீட்சைகளும் ஆங்கிலத்தில் நடத்தப்பட வேண்டும் என பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட யோசனை தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இன்று (21) காலை நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் இடம்றெ்ற வாக்கெடுப்பின் போது குறித்த யோசனை தோற்கடிக்கப்பட்டது.
ஆங்கில மொழமூலத்தில் பரீட்சைகளும் பாடநெறிகளும் நடத்தப்படவேண்டுமென்ற யோசனைக்கு ஆதரவாக 1 வாக்கும் எதிராக 113 வாக்குகளும் செலுத்தப்பட்டிருந்தது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் சட்டக் கல்லூரி பரீட்சைகள் அனைத்தும் ஆங்கிலத்தில் நடத்தப்பட வேண்டும் என சட்ட அமைச்சராக கடமையாற்றிய அமைச்சர் அலி சப்ரியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பேரில் வர்த்தமானி வெளியிடப்பட்டது.
இதனுடன் தொடர்புடைய வர்த்தமானி 2020 டிசம்பரில் ஒருங்கிணைந்த சட்டக் கல்வி கவுன்சிலால் வெளியிடப்பட்டது.
எவ்வாறாயினும், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்க்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர் சங்கம் உட்பட பல தரப்பினரும் இந்த நடவடிக்கையை விமர்சித்ததோடு, இது பெரும்பான்மையான மாணவர்களுக்கு நியாயமற்றது என்றும் கருதியமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி பாராளுமன்றத்தில் நாளை விசேட உரை
ஜனாதிபதி பாராளுமன்றத்தில் நாளை விசேட உரை
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் நாளை (22) விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையையும் ஜனாதிபதி இதன்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
























































