நெதன்யாகு சிக்கலில் பறிபோகும் நிலையில் ஆட்சி
நெதன்யாகு சிக்கலில் பறிபோகும் நிலையில் ஆட்சி
நெதன்யாகு சிக்கலில் பறிபோகும் நிலையில்
ஆட்சி உள்ளது என்கின்ற விடயம் அம்பலமாகியுள்ளது .
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக ,
அந்த நாட்டின் உளவுத்துறையான மொஸாட் மக்களை ,
போராட்டங்களுக்கு தூண்டி விட்டது என்கின்ற விடயம்,
வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
நீதி கொள்கையில் நெதன்யாகு செய்த சட்ட மாற்றங்கள் காரணமாக,
லட்சக்கணக்கான மக்கள் வீதி இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர் .
மக்கள் போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து
செல்லும் நிலையில் ,பதவி விலகும் நிலைக்கு
நெதன்யாகுவிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது .
நெதன்யாகு சிக்கலில் பறிபோகும் நிலையில் ஆட்சி
அவ்வாறு இவர் பதவி விலக்க பட்டால் ,சிறை செல்லும்
வாய்ப்பு காண படுகிறது .
அதனாலேயே ஈரான் மற்றும் ,ஈரான் ஆதரவு குழுக்கள் மீதான ,
தாக்குதலை நடத்தி ,திசை திருப்பத்தை ஏற்பட்ட முற்பட்டார் ,
எனினும் அவை தோல்வியில் முடிந்துள்ளதையை
மக்கள் போராட்டங்கள் எடுத்து காண்பிக்கின்றன .
இலங்கையில் கோட்டபாயாவை போல இஸ்ரேல்,
ஆட்சியும் கவிழ்க்க படும் நிலை காண படுகிறது ,அவை விரைவில் அரங்கேற போவதை அசைவுகள் கட்டியம் இடுகின்றன .
உக்ரைன் இராணுவத்தில் புதிய ஆயுதம் சிதறும் விமானங்கள்
உக்ரைன் இராணுவத்தில் புதிய ஆயுதம் சிதறும் விமானங்கள்
உக்ரைன் இராணுவத்தினருக்கு தற்போது புதிய ஆயுத தொகுதி
ஒன்று கிடைக்க பெற்றுள்ளது .
அமெரிக்கா இராணுவம் வழங்கிய NASAMS ஏவுகணைகள்
பெரும் அழிவை ரஷ்ய இராணுவத்தினருக்கு ஏற்படுத்தி வருகிறது .
கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் ,இந்த ஏவுகணை செலுத்திகள் மூலம் ,
ரஷ்ய இராணுவத்தின் பல நூறு ஏவுகணைகள் ,
மற்றும் நூற்று கணக்கான விமானங்கள் என்பனவற்றை ,
சுட்டு வீழ்த்தியுள்ளது என்கிறது உக்ரைன் இராணுவம்
ஈரான் வழங்கிய தற்கொலை விமானங்கள் வெறும் இருபதாயிரம் மட்டுமே ,
ஆனல் இந்த ஏவுகணைகள் அதனை விட ஐந்து மடங்கு விலை அதிகமாக உள்ளது .
அவ்வாறு இருந்தும் நாங்களே வெற்றியின் நாயகர்கள் என உக்ரைன் முழங்கி வருகிறது .
மாட்டுக்கு தீனி போடலாம் ,யானைக்கு போடலாமா ,அந்த நிலை தான்
இன்று உக்ரைனுக்கு ஏற்பட்டுள்ளது .
பக் மூட் பகுதியில் பலத்த சண்டைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
ஏவுகணைகள் ,எறிகணைகளினால்
உக்ரைன் அதிர்ந்த வண்ணம் உள்ளது .
ஈரான் புதிய தற்கொலை விமானம் வெற்றிகர சோதனை
ஈரான் புதிய தற்கொலை விமானம் வெற்றிகர சோதனை
ஈரான் இராணுவம் புதிய தற்கொலை விமான ஒன்றை சோதனை செய்துள்ளது
இந்த சோதனையின் பொழுது ,குறித்த இலக்கினை துல்லியமாக சென்று தாக்குவதை ஈரான் வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
பத்து கிலோ எடையுள்ள குண்டை காவி சென்று வெடிக்கும் திறன் கொண்ட நிலையில் இந்த விமானம் வடிவமைக்க பட்டுள்ளது .
உக்ரைன் களத்தில் ஈரானின் தற்கொலை விமானங்கள்
பெரும் இழப்பை ஏற்படுத்திய வண்ணம் உள்ளது .
தற்போது கண்டு பிடிக்க பட்ட விமானம் அதனை விட திறன் கொண்ட தாக்குதல் விமானம் என ஈரான் தெரிவித்து இஸ்ரேலுக்கு கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
காதலனை அச்சுறுத்தி யுவதியை நிர்வாணப்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள்
காதலனை அச்சுறுத்தி யுவதியை நிர்வாணப்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள்
காதலனுடன் சமனல வாவியை பார்வையிட வந்த யுவதியை அச்சுறுத்தி காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான கான்ஸ்டபிளை கடந்த 8 ஆம் திகதி சமனல வாவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட கான்ஸ்டபிளை நேற்று பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது விபத்து தொடர்பில் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சந்தேகத்திற்குரிய பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
காதலனை அச்சுறுத்தி யுவதியை நிர்வாணப்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள்
சமனல வாவி பிரதேசத்தை அண்டிய பிரதேசத்தில் வசிக்கும் 18 வயதுடைய யுவதியொருவர் கடந்த 8ஆம் திகதி தனது காதலனுடன் சமனல வாவி பகுதிக்கு வந்துள்ளார்.
அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், காதலனிடம் போதைப்பொருள் இருப்பதாகக் கூறி அவர் வைத்திருந்த பைகள் மற்றும் பணப்பையை சோதனை செய்துள்ளார்.
பின்னர் காதலரின் ஒரு கையில் கைவிலங்கு இட்டு, கைவிலங்கின் மற்றப் பகுதியை மோட்டார் சைக்கிளில் இணைத்து சிறுமியை வலுக்கட்டாயமாக காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இது தொடர்பில் அந்த பகுதியில் இருந்த நபர் ஒருவர் சமனல வாவி பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து பொலிசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பொலிஸ் கான்ஸ்டபிள் ஏற்கனவே யுவதியின் ஆடைகளை அகற்றி நிர்வாணப்படுத்தி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் வெலிஓயா பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவர் மொனராகலை பிரிவில் ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவில் கடமையாற்றுபவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
கணவரை கொலை செய்த மனைவி
கணவரை கொலை செய்த மனைவி
புலஸ்திகம பிரதேசத்தில் மனைவியொருவர் தனது கணவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
நேற்று (09) மாலை 119 அவசர அழைப்பு மையத்தின் ஊடாக புலஸ்திபுர பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர் புலஸ்திகம பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
குடும்பத் தகராறு காரணமாக உயிரிழந்தவரும் அவரது மனைவியும் நேற்று மதியம் முதல் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டும், திட்டிக் கொண்டும் இருந்துள்ளனர்.
கணவரை கொலை செய்த மனைவி
விசாரணையில் மனைவி கணவனை பின்னால் கத்தியால் குத்தியிருப்பது தெரியவந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
கொலையை செய்த சந்தேக நபரான மனைவியும் காயமடைந்து புலஸ்திகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டதன் பின்னர் சந்தேகநபர் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பொலிஸ் பாதுகாப்பில் பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
O/L பரீட்சைகள் இரண்டு வாரத்திற்கு ஒத்திவைப்பு
O/L பரீட்சைகள் இரண்டு வாரத்திற்கு ஒத்திவைப்பு
எதிர்வரும் மே மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இரண்டு வாரங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பரீட்சைத் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் மே மாதம் 29 ஆம் திகதி கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது
உக்ரைனிடம் புதிய ஆயுதம் அதிர்ச்சியில் ரஷ்யா
உக்ரைனிடம் புதிய ஆயுதம் அதிர்ச்சியில் ரஷ்யா
உக்ரைனிடம் புதிய ஆயுதம் அதிர்ச்சியில் ரஷ்யா இராணுவம் ,
உக்ரைன் ரஷ்ய போர் களத்தில் காத்திருந்த அதிர்ச்சி ,புதிய ஏவுகணையை
பயன் படுத்தி யுக்ரைன் இராணுவம் தாக்குதல் நடத்துகிறது .
பலநூறு ஏவுகணைகள் நூற்றுக்கு மேற்பட்ட விமானங்கள் சுட்டு வீழ்த்தல் .
கைக்குண்டு ஒன்று மீட்பு
கைக்குண்டு ஒன்று மீட்பு
கைக்குண்டு ஒன்று திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள உமரி பிரதேசத்திலுள்ள தனியார் காணி ஒன்றில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (09) மீட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்திலுள்ள தனியார் விடுதி ஒன்றிற்கு சொந்தமான விடுதிக்கு முன்னால் உள்ள காணியில் சம்பவதினமான நேற்று காலை விடுதி காவலாளி காணியில் வளர்ந்துள்ள புல்லுகளை வெட்டி துப்பரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது நிலத்தில் புதையுண்டிருந்த கைக்குண்டு ஒன்றை கண்டு பொலிசாருக்கு தெரிவித்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசேட அதிரடிப்படை குண்டு செயலிழக்கும் பிரிவினரை வரவழைத்து குண்டை செயலிழக்கச் செய்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இட்லி தோசைக்கு பதிலாக முற்றிலும் புதிய சுவையில் இப்படி செய்ங்க
இட்லி தோசைக்கு பதிலாக முற்றிலும் புதிய சுவையில் இப்படி செய்ங்க
இட்லி தோசைக்கு பதிலாக வீட்டில முற்றிலும் புதிய சுவையில் புதிய முறையில் உடனடி யாக செய்திடலாம் வாங்க .
மொறு மொறு டிபன் .
இந்த டிபன் செய்திட மிக்சியில் நான்கு துண்டு பாண் ,
ஒரு கப் ரவை ,தேவையான அளவு தண்ணீர் கலந்து நன்றாக
மாவு போல அரைத்து எடுங்க .

அப்புறமா இதை ஐந்து நிமிடம் நன்றாக ஊற வைத்திடுங்க .
அப்புறம் இது கூட துருவி வைத்த சின்ன கரட் சேர்த்திடுங்க .
பொடியா வெட்டிய குடைமிளகாய் ,பொடியாக வெட்டிய
சின்ன வெங்காயம் ,பொடியா நறுக்கிய கொத்த மல்லி இலை ,
தேவையான அளவு உப்பு ,காரத்திற்கு ஏற்ப மிளகாய் பொடி ,
அரை கரண்டி கரம் மசாலா ,மஞ்சள் தூள் ,இரண்டு கரண்டி பச்சை அரிசி மாவு

தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து விடுங்க அப்புறம் தோசை கல்லை வைத்து ,எண்ணெய் விட்டு சூடாக்கி அதில தோசை போல ஊற்றிடுங்க .
நன்றாக இரு பக்கமும் வேக விட்டு எடுத்து கொள்ளுங்க ..

அவ்வளவு தாங்க வேலை ,ஈஸியான ,உடனடி டிபன் ரெடியாகிடிச்சு .
இதுபோல நாளுமே செஞ்சு சாப்பிடுங்க மக்களே.
இட்லி தோசை மாவு இல்லா நேரத்தில இப்படி செய்ங்க
இட்லி தோசை மாவு இல்லா நேரத்தில இப்படி செய்ங்க
இட்லி தோசை மாவு வீட்டில இல்லா நேரத்தில வீட்டில கடை சுவையில் இப்படி செய்ங்க .வீடே மணக்கும் மொறு மொறு அரிசிமாவு தோசை ,
அரிசி மாவு தோசை செய்வது எப்படி ..?
தோசை செய்வதற்கு தேவையான பொருட்கள் என்ன ..?
ஒரு பாத்திரத்தில
ஒரு கப் அளவு பச்சை அரிசி மாவு ,
இரண்டு கரண்டி ரவை ,அரை கப் அள்வு தயிர் ,
ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்து ,மாவை கட்டி இன்றி நன்றாக
கரைத்து எடுங்க .அப்புறம் மேலும் ஒரு கப் தண்ணீர் விட்டு கரைத்து எடுங்க .

நன்றாக கரைத்து எடுத்தவுடன் 20 நிமிடம் புளிக்க வைங்க .
இப்போ தேவையான அளவு உப்பு ,அரை கரண்டி மஞ்சள் தூள் ,
பொடியா வெட்டிய இஞ்சி ,பச்சை மிளகாய் ,பொடியாக வெட்டியா கொத்த மல்லி ,கறிவேப்பிலை ,பொடியாக வெட்டிய வெங்காயம் ,நன்றாக துருவிய ஒரு கரட் ,இப்போ எல்லாவற்றையும் சேர்த்து கலக்கி கொள்ளுங்க .

மொறு மொறு தோசை செய்முறை இரண்டு
இப்போ அடுப்பில தோசை கல்லை வைத்து ,நன்றாக சூடாக்கி கொள்ளுங்க ,அப்புறம் எண்ணெய் விட்டு ஒரு கரண்டி மாவை நன்றாக, தோசை போல ஊற்றி கொள்ளுங்க .

இந்த அரிசி மாவு தோசை ஒரு பக்கம் மட்டும் வேக வைத்து ,மொறு மொறு பதத்தில் எடுத்து மடித்து கொள்ளுங்க .
இப்போ இது கூட சட்டினி வைத்து நனறாக சூட்டோடு சுவைத்து சுவைத்து சாப்பிடுங்க .
இதுபோல உளுந்து ,அரசி இல்லா நேரத்தில ,இப்படி அரிசி மாவு தோசை சுட்டு சாப்பிட்டு கொள்ளுங்க மக்களே .

கடை சுவையில் உடனடி மொறு மொறு தோசை .
யாழில் இரு சிறுவர்கள் மாயம்
யாழில் இரு சிறுவர்கள் மாயம்
திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச்சங்க சைவச் சிறுவர் இல்லத்திற்கு சேதம் விளைவித்தனர் என நிர்வாகத்தினரால் பொலிஸாரிடம் பெயர் குறிப்பிட்ட இரண்டு சிறுவர்களை அன்றைய தினம் முதல் காணவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை நேற்றைய தினம் (08) வரையில் குறித்த இரு சிறுவர்கள் தொடர்பிலும் எந்தவிதமான தகவலும் கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 27ஆம் திகதி சிறுவர் இல்ல விடுதி முகாமையாளர் சிறுவர் நீதிமன்றால் பணி இடைநிறுத்தப்பட்டிருந்தார். இதனையடுத்து சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுவர்கள், இல்ல நிர்வாக கட்டடங்களுக்குச் சேதம் விளைவித்திருந்தனர்.
யாழில் இரு சிறுவர்கள் மாயம்
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய சிறுவர்கள் என நான்கு பேரது பெயர்களைக் குறிப்பிட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் தலைவரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
அவ்வாறு பெயர் குறிப்பிட்ட நான்கு சிறுவர்களில் இருவரே கடந்த 27ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளனர்.
அதேவேளை சிறுவர் இல்லத்தில் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட 12 சிறுவர்கள், சிறுவர் நீதிமன்றத்தால் சான்று பெற்ற பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மிரட்டும் சீனா நுழைந்த இராணுவம்
மிரட்டும் சீனா நுழைந்த இராணுவம்
தைவான் கடல் அருகில் சீனா போர் கப்பல்கள் ,விமானங்கள் குவிப்பு .
சீனாவின் மிரட்டும் இராணுவ போர் பயிற்சிகளினால் ,
இரு நாடுகளுக்கும் இடையில் யுத்த பதட்டம் ஏற்பட்டுள்ளது .
அமெரிக்காவுக்கு அண்டைய நாட்டு அதிபர் பயணம் செய்து ,
சைனாவை ஆத்திரமூட்டிய நிலையில் ,இந்த படை யுத்த நுழை
நகர்வில் ஈடுபட்டு வண்ணம் உள்ளது .
ரஷ்யா உக்ரைன் போர் களம் தீயில் எரிந்த வண்ணம் உள்ளது ,
குண்டுகளினால் அதிர்கிறது .
ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் திணறும் உக்ரைன்
ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் திணறும் உக்ரைன்
கடந்த தினம் ரஷ்யா துருப்புக்கள் ,உக்ரைன் கிழக்கு லைமன், பாக்முட்,
அவ்திவ்கா மற்றும் மரிங்கா முனைகளில் ,கடும் தாக்குதலைத் தொடர்ந்தன;
குறிப்பாக, பக்முட் நகரை முழுக் கட்டுப் பாட்டிற்குள்
கொண்டு வர ,பாரிய படை நகர்வை மேற்கொண்டன
ரஷ்யப் படைகள் 2 ஏவுகணை மற்றும் 34 வான்வழித் தாக்குதல்களை நடத்தியது,பல ஏவுகணை அமைப்புகளிலிருந்து 36 க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியது.
உக்ரைன் முழுவதும் ஏவுகணை மற்றும் வான்வழித் தாக்குதல்களை அதிகமாக நடத்தியது ,லைமன், பாக்முட், அவ்திவ்கா மற்றும் மரின்கா முனைகளில் பலமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டன . 35க்கும் மேற்பட்ட ரஷ்ய தாக்குதல்கள் முறியடிக்கப் பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது .
தொடர்ந்து பக்மூட் பகுதியை முழுவதுமாக தமது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரும் தாக்குதல்களை ரஷ்ய வாடகை இராணுவம் மேற்கொண்டு வருகிறது .
ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் திணறும் உக்ரைன்
வரும் மணித்தியாலங்கள் அல்லது நாட்களில் ,பக்மூட் ரஷ்ய படைகள் வசம் வீழ்ந்து விடும் என எதிர் பார்க்க படுகிறது .
மேலும் உக்ரைன் போலந்திடம் 200 ரோசோமாக் கவச வண்டிகளை
வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது, அதில் 100 இப்போதும் 100 பிறகும்
வழங்கப்படும் என போலந்து தெரிந்துள்ளது .
ரஸ்யாவை வெற்றி கொள்ள முப்பது நாடுகளிடம் இருந்து உக்ரைன்
ஆயுதங்களை வாங்கி குவித்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது
ஜப்பானில் அவசரமாக தரை இறக்க பட்ட போர் விமானங்கள்
ஜப்பானில் அவசரமாக தரை இறக்க பட்ட போர் விமானங்கள்
ஜப்பானின் ஒகினாவா மாகாணத்தில் உள்ள ,
மியாகோ ஷிமோஜிஷிமா விமான நிலையத்தில் ,
இரண்டு அமெரிக்க F-16 போர் விமானங்கள் ,
சனிக்கிழமையன்று அவசரமாக தரையிறக்கப்பட்டன
ஜப்பானின் மியாகோ தீவில் இருந்து ,
60 கிலோமீட்டர் (37 மைல்) தெற்கே ஜெட் விமானம் பறந்து கொண்டிருந்தது ,
இதன் பொது திடீரென இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது ,
அதன் பின்னரே இந்த அவசர தரை இரக்கம் மேற்கொள்ள பட்டுள்ளது .
இந்த போர் விமனக்கல் தரை இரக்கத்தன் பொழுது ,
சிவிலியன் விமானங்களில் பாதிப்புகளோ ,
அல்லது தாமதங்களோ ஏற்படவில்லை என ஜப்பான் தெரிவித்துள்ளது .
அகதிகள் கப்பல் மூழ்கியதில் 20 பேர் மரணம்
அகதிகள் கப்பல் மூழ்கியதில் 20 பேர் மரணம்
துனிசியா கடல் பகுதியில் அகதிகள் படகு மூழ்கியதில் .
குறைந்தது 20 புலம்பெயர்ந்தோர் காணாமல் போயுள்ளனர்
மத்தியதரைக் கடலைக் கடந்து இத்தாலிக்கு செல்ல முயன்றபோது,
துனிசியாவில் படகு மூழ்கியதில் குறைந்தது 20 ஆப்பிரிக்க குடியேறியவர்கள் பலியாகியுள்ளனர்
கடலோர காவல்படையினர் தெற்கு நகரமான ஸ்ஃபாக்ஸில் இருந்து,
17 பேரை அதே படகில் இருந்து மீட்டனர்
மீட்கப் பட்டவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது .
காணாமல் போனவர்கள் சடலங்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் கடல்படை ஈடுபட்டுள்ளது .
மண்சரிவு அபாய எச்சரிக்கை
மண்சரிவு அபாய எச்சரிக்கை
பதுளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் எலபாத, இரத்தினபுரி மற்றும் நிவித்திகல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இன்று (09) மாலை 5.30 வரை இந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிப்போர் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
பிரித்தானிய தம்பதியினரிடம் கைவரிசையை காட்டியவர் சிக்கினார்
பிரித்தானிய தம்பதியினரிடம் கைவரிசையை காட்டியவர் சிக்கினார்
பிரித்தானிய தம்பதியின் பொருட்களையும் பணத்தையும் திருடிய குற்றச்சாட்டில் வஸ்கடுவ பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானிய தம்பதியிடம் இருந்து இரண்டு வெளிநாட்டு கடவுச்சீட்டுகள், விசாக்கள், வங்கி அட்டைகள் மற்றும் 40 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் என்பன திருடப்பட்டுள்ளன.
திருடப்பட்ட பொருட்கள் சில பற்றைக்குள் மறைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் பிரித்தானிய தம்பதியின் பணத்தையும் பொருட்களையும் திருடி, பாதுகாப்பு பெட்டகத்தை கடலில் வீசியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து, சந்தேகநபர் களுத்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு உறுதி ஜனாதிபதி ரணில்
நாட்டின் பாதுகாப்பு உறுதி ஜனாதிபதி ரணில்
நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக உயிர்த்த ஞாயிறு தினச் செய்தியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் தனது உயிர்த்த ஞாயிறு தினச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் வலி உங்கள் மனதில் இன்னும் வடுவாக இருக்கிறது என்பதை நான் நன்கு அறிவேன். அந்த துரதிஷ்டவசமான சம்பவம் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, அந்தப் பணிகளை எந்தவொரு தலையீடும் இன்றி
சுயாதீனமாகவும் பக்கச்சார்பற்றதாகவும் முன்னெடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கத் தேவையான பின்னணியை அமைத்துள்ளோம் என்பதையும் நான் நினைவுகூருகின்றேன்.
எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதவாறு, நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
#ethirinews #srilankanews #செய்திகள்
யாழில் திடீரென பற்றி எரிந்த விருந்தினர் விடுதி
யாழில் திடீரென பற்றி எரிந்த விருந்தினர் விடுதி
யாழ். கொழும்புத்துறை பிரதான வீதியில் சுண்டிக்குளி பகுதியில் வீடொன்றில் இயங்கி வந்த தனியார் விருந்தினர் விடுதியில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
இன்று காலை ஒன்பது மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இது குறித்து யாழ். பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மின்னொழுக்கே குறித்த தீ விபத்துக்கு காரணமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் சுமார் எட்டுலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் தீயில் கருகி நாசமாகியுள்ளது
வெளியான அமெரிக்கா நேட்டோ தாக்குதல் திட்டம் ஓடவிட்டு ரஷ்யா
வெளியான அமெரிக்கா நேட்டோ தாக்குதல் திட்டம் ஓடவிட்டு ரஷ்யா
வெளியான அமெரிக்கா நேட்டோ தாக்குதல் திட்டம் ,
உலக நாடுகளின் மிக முக்கிய இராணுவத்தினரை
ஓடி வைத்துள்ளது .
வரும் நாட்களில் ,மாதங்களில் நடத்த போகும் தாக்குதல் ,
திட்டமிடல்கள் ,துல்லியமாக ரஷ்யா
கைகளுக்கு சென்ற நிலையில் ,அதனை அப்படியே வெளியிட்டு ,
அமெரிக்கா நேட்டோ நாடுகளை ஓட விட்டுள்ளது ரஷ்யா .
இந்த தாக்குதல் திட்டடங்கள் யாவும் ,போட்ட சோப் செய்ய பட்டு ,
அமெரிக்கா நேட்டோ நாடுகளை ,குழப்பும் நோக்கிலும் ,உக்ரைனில் இவர்களில் தாக்குதல் திட்டங்கள் யாவும் தோற்று போகும்
வழியை அமைக்கும் தோற்ற பட்டை உருவாக்க ,ரஷ்ய மேற்கொள்ளும் பரப்புரை என மேற்குலங்கங்கள் தெரிவித்துள்ளன .
வெளியான அமெரிக்கா நேட்டோ தாக்குதல் திட்டம் ஓடவிட்டு ரஷ்யா
உண்மையில்லா ஒரு அறிக்கைக்கு ,ஏன் இவ்வாறு அவரச பட்டு ,
நேட்டோ மற்றும் அமெரிக்கா நாடுகளின் ,உளவுத்துறை மற்றும் அவர் தம் ஆதரவு ஊடங்கள் ஒன்றாக கூக்குரல் போடுகின்றன
அப்படி என்றால் இதில் ஏதோ உண்மை இருக்கிறது ,
அமெரிக்காவினால் அறிவிக்க பட்ட சமீபகால ,உக்ரைன் மீதான உதவிகள் ,மற்றும் இராணுவ திட்டங்கள் ,இதில் அடங்க பட்டுள்ளதே ,
இந்த பர பரப்புக்கு காரணமாக அமைந்துள்ளது .
இந்த தாக்குதல் திட்டங்கள் உண்மையானது என்றால் ,
உக்ரைன் ராணுவம் பேரழிவை சந்திக்க போகிறது ,
ஏற்படுத்தும் என்பதை அடித்து கூறலாம் .





























































