அவுஸ்திரேலியாவில் தந்தை மகன் நீரில் மூழ்கி பலி
அவுஸ்திரேலியாவில் தந்தை மகன் நீரில் மூழ்கி பலி
அவுஸ்திரேலியா, குயின்ஸ்லாந்து வடக்கு பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியொன்றுக்கு விடுமுறையை கழிப்பதற்கு சென்ற இரண்டு இலங்கையர்கள், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
59 மற்றும் 21 வயதுடைய தந்தை மற்றும் மகன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
எட்டு வருடங்களுக்கும் மேலாக மெல்போர்னில் உள்ள போக்குவரத்து நிறுவனத்தில், உயிரிழந்த தந்தை பணிபுரிந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள், குயின்ஸ்லாந்தில் கிரிஸ்டல் கேஸ்கேட்ஸ் நீர்வீழ்ச்சியை பார்வையிட்டதுடன், அங்கு நீராடியுள்ளனர்.
தண்ணீரில் நீந்திக் கொண்டிருந்த தந்தை முதலில் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவரது மகனும் மகளும் அவரை மீட்க முயன்று நீரோட்டத்தில் சிக்கியுள்ளனர்.
கர்ப்பிணி மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவன்
கர்ப்பிணி மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவன்
கிளிநொச்சி – அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரிதாஸ் குடியிருப்புபகுதியில் காதலித்து திருமணம் முடித்த, மனைவியை இடியன் துப்பாக்கியால் சுட்டு காயப்பபடுத்திய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் நேற்று மாலை (11) இடம்பெற்றுள்ளதாக அக்கராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கர்ப்பிணி மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவன்
இதன் போது காயமடைந்த ஐந்து மாத கர்ப்பிணியான பெண் உடனடியாக அக்கராயன்குளம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த சம்பவத்தில் 33 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயாரே
படுகாயங்களுக்குள்ளாகியுள்ளார்.
கணவன் மது போதைக்கு அதிகம் பழக்கப்பட்டவர் என்பதனால் அடிக்கடி குடும்பத்தில் சண்டைகள் இடம்பெறும் எனவும் இதன் விளைவாகவே மனைவி மீதான துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் 40 வயதுடைய நபர் அக்கராயன்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்
இந்தியா இராணுவ முகாமில் சண்டை நூற்றுக்கு மேல் பலி
இந்தியா இராணுவ முகாமில் சண்டை நூற்றுக்கு மேல் பலி
இந்தியா இராணுவ முகாமில் சண்டை தீவிரவாதிங்கள் உள்நுழைந்து
திடீர் பயங்கர தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .
முகாமின் பல பகுதிகளில் மறைந்து உள்ளவர்களை தேடி அழிக்கும்
நடவடிக்கையை இந்தியா சிறப்பு இராணுவ படை வீரர்கள் செயல் பட்டு வருகின்றனர் எங்கும் பதட்டம் நிலவுகிறது
இன்றைய முக்கிய மதிய தலைப்பு செய்தி
இந்தியா இராணுவ முகாமில் சண்டை தீவிரவாதிகள் தாக்குதல்
இலங்கை பரந்தனில் ரயில்வே நிலையம் அடித்து உடைப்பு
உக்ரைனில் நேட்டோ சிறப்பு இராணுவம் குவிப்பு கொதிப்பில் ரஷ்யா
இராணுவம் வெறியாட்டம் பல நூறு மக்கள் பலி கை இழந்த நிலையில் கதறும் மக்கள்.
திடீர் தாக்குதல் எரியும் விமானங்கள்
திடீர் தாக்குதல் எரியும் விமானங்கள்
திடீர் தாக்குதல் எரியும் விமானங்கள் உக்ரைன் ரஷ்ய போர் களத்தில் நடந்த பயங்கர சம்பவம் .
புதிய ஏவுகணைகள் வந்திறங்கியதை அடுத்து உக்ரைன் இராணுவம் ரஷ்ய இராணுவம் மீது கடுமையான தாக்குதலை நடத்தி வருகின்றனர் ,இதன் பொழுது ,விமானங்கள் ,உலங்கு வானூர்திகள் ,கவச வண்டிகள்,எரிபொருள் டாங்கிகள் ,யுத்த டாங்கிகள் ,பல்குழல் ஏவுகணை செலுத்திகள் ,
பீரங்கிகள் ,ஆட்லொறிகள் ,வாகனங்கள் என்பன அழிக்க பட்டுள்ளன .
போர் விமானங்கள் தீயில் எரியும் காட்சிகளை வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இன்றைய முக்கிய காலை தலைப்பு செய்தி
திடீர் தாக்குதல் எரியும் பத்து விமானங்கள் ,ஆயுத தளபாடங்கள்
உக்ரைனுக்கு பல பில்லியன் ஆயுத உதவி வழங்கும் கனடா .
பல நூறு புதிய ஆயுதங்களை காண்பித்து அமெரிக்கா இஸ்ரேலை அலற விட்டுள்ள ஈரான் .இலங்கை மத்திய வங்கியில் பல லட்சம் ரூபா பணம் மாயம் ,காணவில்லை .
இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்
புகையிரத நிலையத்திற்குள் புகுந்த குண்டர்கள் தாக்குதல்
புகையிரத நிலையத்திற்குள் புகுந்த குண்டர்கள் தாக்குதல்
பரந்தன் புகையிரத நிலையத்திற்குள் புகுந்த குண்டர்கள் தாக்குதல் காரணமாக ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (11) இரவு இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் பரிவுக்குட்பட்ட பரந்தன் புகையிரத நிலைய பகுதியில் நேற்று மாலை மதுபானம் அருந்திய குழுவினரிடம் அப்பகுதியில் மதுபானம் அருந்த வேண்டாம் என ஊழியர்களால் கூறப்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த குண்டர் கும்பல் பரந்தன் ரயில் நிலைய ஊழியர்களை தாக்கி காயப்படுத்தியதுடன், புகையிரத நிலைய உடைமைகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.
சந்தேக நபர்களை கைது செய்ய விசேட பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் புகையிரத நிலைய அதிபர் உட்பட இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
யாழில் போதைப்பொருளுடன் பெண் கைது
யாழில் போதைப்பொருளுடன் பெண் கைது
யாழ்ப்பாணம் ஓட்டுமடம் – பொம்மைவெளியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 5.5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 70 ஆயிரம் ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் பொம்மைவெளி 5 ஆம் குறுக்குத்தெருவைச் சேர்ந்த 32 வயது பெண்ணே கைது செய்யப்பட்டார்.
உயிர்க்கொல்லி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக நீண்ட நாள்களாக தேடப்பட்டு வந்த பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் கூறினர்.
யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
உக்ரைன் கமராக்களை கைக்கிங் செய்த ரஷ்யா கைக்கர்கள்
உக்ரைன் கமராக்களை கைக்கிங் செய்த ரஷ்யா கைக்கர்கள்
உக்ரைன் காபி ஷாப்களில் உள்ள தனியார் பாதுகாப்பு கேமராக்களில்
ரஷ்ய ஹேக்கர்கள் நுழைந்து, அந்த வழியாக செல்லும் உதவித் தொடரணிகள்
பற்றிய உளவுத் தகவல்களைச் சேகரித்துள்ளனர் என அமெரிக்கா பாதுகாப்பு
அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .
ரஷ்ய அரசு மற்றும் அரசாங்க ஆதரவு ஹேக்கர்கள் உக்ரேனிய
தகவல் தொழில்நுட்ப அமைப்புகளைத் தொடர்ந்து தாக்கி வருகின்றனர் .
இங்கு உள்ள கமராக்கள் மற்றும் அங்கு உள்ள நடமாட்டங்கள் தொடர்பாக ஆராய்ந்து
ஒட்டு கேட்டு ,அதன் ஊடாக உக்ரைன் இராணுவத்தினரை இலக்கு வைத்து
தாக்குதல் நடத்தி வருவதான தகவல் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது .
அண்மையில் நடந்தேறிய ஏவுகணை கிடங்குகள் அழிப்பும் .
இவ்வாறான தகவல்கள் மூலம் பெற்றுள்ளதகா தெரிவிக்க படுகிறது .
உக்ரைன் கமராக்களை கைக்கிங் செய்த ரஷ்யா கைக்கர்கள்
கடந்த 24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற மோதல்களில் சிக்கி
ரஷ்யா படைகள் 500 பேர் பலியாகியும் , 7 டாங்கிகள், 10 கவச வண்டிகள்
15 பீரங்கி ,ஒரு பல்குழல் ஏவுகணை செலுத்தி , 1 ஹெலிகாப்டர்,
9 ஆளில்லா வான்வழி விமானங்கள்,13 வாகனங்கள் மற்றும் எரிபொருள் தாங்கிகள்ஆகியவற்றை இழந்துள்ளது என உக்ரைன் இராணுவவம் வழமையான ஊடகஅறிக்கையில் தெரிவித்துளளது .
எனினும் தமக்கு ஏற்பட்ட இழப்பு விகிதங்களை, இன்றும் தெரிவிக்கவில்லை .,
கடும் மோதல்கள் இடம்பெறுவதை மட்டும் ஒப்பு கொண்டுள்ளது .
நூற்றுக்கு மேற்பட்ட புதிய ஆயுதங்களை காண்பித்து இஸ்ரேலை அலறவைத்த ஈரான்
நூற்றுக்கு மேற்பட்ட புதிய ஆயுதங்களை காண்பித்து இஸ்ரேலை அலறவைத்த ஈரான்
ஈரான் தேசிய ராணுவ தினத்தையொட்டி, ராணுவ தரைப்படைகளால்
மாற்றியமைக்கப்பட்டு, மறு உருவாக்கம் செய்யப்பட்டு, தயாரிக்கப்பட்ட
பல புதிய உபகரணங்கள் மற்றும் ஆயுதங்கள் வெளியிடப் பட்டன
ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவ தளவாடங்கள் மற்றும்
இயந்திரங்களை இராணுவ தரைப்படைக்கு செவ்வாய்க்கிழமை
கையளிக்கும் நிகழ்வில் ,இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்
செயத் அப்துல் ரஹீம் மௌசவி கலந்து கொண்டார்.
இதில் ஏவுகணைகள் ,பீரங்கிகள் ,உளவு விமானங்கள் ,
தற்கொலை விமனங்கள் ,உலங்குவானூர்திகள்,ராடர்கள் ,
கவச வண்டிகள்,கப்பல்கள்,படகுகள்,
என பல தரப்பட்ட ஆயுதங்கள் காட்சி படுத்த பட்டு அவை ,
இராணுவத்தில் இணைக்க பட்டுள்ளது .
மேற்படி ஈரானின் புதிய ஆயுதங்கள் ,
இஸ்ரேல் அமெரிக்கா நாடுகளை பதட்டத்தில் உறைய வைத்துள்ளது .
உக்ரைனுக்கு 59 மில்லியன் ஆயுத உதவி வழங்கும் கனடா
உக்ரைனுக்கு 59 மில்லியன் ஆயுத உதவி வழங்கும் கனடா
உக்ரேனிய பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் மற்றும் கனேடிய
பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் ஆகியோருக்கு இடையேயான
சந்திப்பைத் தொடர்ந்து, உக்ரைன் இராணுவதினருக்கான
புதிய நிதி உதவி தொகுப்பை அறிவித்தது.
$59 மில்லியன் ஆயுத உதவிகள் வழங்க படுகின்றன . உக்ரைனுக்கு
21,000 தாக்குதல் துப்பாக்கிகள் மற்றும் இயந்திரத் துப்பாக்கிகள்,
வெடிமருந்துகளை வழங்குகிறது.
உக்ரைனுக்கு 2.4 பில்லியன் டாலர் கடன் உதவி
வழங்கவும் கனடாவும் ஒப்புதல் அளித்துள்ளது.
ரஷ்ய சொத்துகளை பறிமுதல் செய்தல் மற்றும்
பொருளாதாரத் தடைகளை விதிக்கவும் ஒப்புதல் அளிக்க பட்டுள்ளது .
இது உக்ரைனுக்கு கிடைத்த வெற்றியாக உக்ரைன் தெரிவித்து மகிழ்கிறது .
இலங்கை மத்திய வங்கியில் 50 லட்சம் பணத்தை காணவில்லை
இலங்கை மத்திய வங்கியில் 50 லட்சம் பணத்தை காணவில்லை
இலங்கை மத்திய வங்கியில் ஐம்பது லட்சம் ரூபா
பணம் காணமல் போயுள்ளது .
இந்த பணமா காணாமல் போனதை அடுத்து ,
காவல்துறைக்கு தெரிய படுத்திய நிலையில் விசாரணைகள்
இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
மத்திய வங்கியில் பணம் திருட்டு போனது தொடர்பில் ,
விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளது .
இந்த விடயம் இலங்கையில் லஞ்ச ஊழல் திருடர்கள் ,
மற்றும் கொள்ளையர்கள் அதிகரித்துள்ளதையும் ,
நாடு மிக மோசமான நிலைக்கு செல்ல போவதை,
எடுத்து காண்பிக்கின்றன .
யாழில் நபர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை
யாழில் நபர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை
யாழ்.சாவகச்சேரி மீசாலை புத்தூர் சந்திப் பகுதியில் நோயாளர் நலன்புரிச் சங்க பராமரிப்பாளர் ஒருவர் அலவாங்கால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக சாவகச்சேரி தெரிவித்தனர்.
மீசாலை புத்தூர் சந்திப் பகுதியில் வசித்துவரும் 20 வயதான இளைஞர் ஒருவர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் மனநல சிகிச்சைக்காக கடந்த செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்றைய தினம் (10) குறித்த இளைஞர் வைத்தியசாலையில் இருந்து தப்பி ஓடி புத்தூர் சந்தியிலுள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளார்.
இதனால், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இளைஞரைப் பராமரித்துவந்த நோயாளர் நலன்புரிச் சங்கத்தைச் சேர்ந்த நி.நாகச்செல்வன் என்பவரும், இளைஞரின் உறவினர் ஒருவருமாக இளைஞரை மீண்டும் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்காக வந்திருந்தனர்.
அப்போது, புகையிரதக் கடவையில் அமர்ந்திருந்த குறித்த இளைஞரோடு நோயாளர் நலன்புரிச்சங்க பராமரிப்பாளர் உரையாடியதோடு, இளைஞரின் வீட்டுக்கும் அவரோடு சென்றுள்ளார்.
இதன்போது இளைஞரின் உறவினர் முச்சக்கர வண்டியோடு வீதியோரத்தில் காத்திருந்தார்.
இந்நிலையில் வீட்டுக்குள் இருந்து இளைஞர் மட்டும் வெளியே வந்து மீண்டும் புகையிரதக் கடவையில் அமர்ந்து கொண்டார்.
யாழில் நபர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை
வீட்டுக்குள் சென்ற நோயாளர் நலன்புரிச் சங்க பராமரிப்பாளரை காணாத இளைஞரின் உறவினர் அவரது தொலைபேசிக்கு அழைப்பெடுத்தார்.
நீண்ட நேரமாக அழைத்தும் பதில் கிடைக்காத்தால், புகையிரத வீதியில் அமர்ந்திருந்த இளைஞரிடம் சென்று வினவியுள்ளார்.
இதன்போது, “பராமரிப்பாளரை வீட்டு முற்றத்தில் வைத்து அலவாங்கால் குத்தி கொலை செய்துவிட்டேன்” என இளைஞர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து வீட்டு முற்றத்திற்கு சென்று பார்த்தபோது குறித்த நலன்புரிச் சங்க பராமரிப்பாளர் முகத்தில் பலத்த காயங்களோடு சடலமாகக் கிடந்துள்ளார்.
இதையடுத்து சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இளைஞரை கைது செய்துள்ளனர்.
சடலமாக மீட்க்கப்பட்டவர் ஆனைக்கோட்டை தெற்கு கூழாவடியைச் சேர்ந்த குடும்பஸ்தரான நி.நாகச்செல்வன் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பழிவாங்கும் இராணுவம் குவிக்க பட்ட ஏவுகணைகள்
பழிவாங்கும் இராணுவம் குவிக்க பட்ட ஏவுகணைகள்
பழிவாங்கும் இராணுவம் குவிக்க பட்ட ஏவுகணைகள் ,உக்ரைன் போர் முன்னரங்க களமுனை குண்டுகளினால் அதிர்ந்த வண்ணம் உள்ளது .
உக்ரைன் ஏவுகணை ஆயுத கிடங்கு அழிக்க பட்ட மாறு நாள்,
இராணுவத்தை பழிவாங்க பல்லாயிர கணக்கில் ஏவுகணைகள் குவிக்க பட்டுள்ளது .
நாள் ஒன்றுக்கு யுக்ரைன் படைகள் ஐந்தாயிரம் எறிகணைகளை ,
ரஸ்யா ஆமி மீது வீசி வருகின்றனர் .எதிரிகளின் முன்னேற்றத்தை
தடுக்க ஆயிர கணக்கில் பீரங்கி குண்டுகளை வீசுவதால் ,யுக்ரைன்
படைகளுக்கு பெருமளவு ஆயுதங்கள் தேவை படுகின்றன
கடன் மேல் கடன், இந்த பணத்திற்கு பெருமளவு வட்டி செலுத்த படுகிறது .
உதவி என்கின்ற போர்வையில்
கொடி கட்டி பறக்கும் ஆயுத வியாபாரம் .
இலங்கையில் வெப்பம் உச்சம் மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் வெப்பம் உச்சம் மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் வெப்பம் உச்சம் மக்களுக்கு எச்சரிக்கை மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ்வருடம் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதியிலிருந்து 15 ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.
அதற்கிணங்க இன்று (11ஆம் திகதி) நண்பகல் 12.11 அளவில் கல்பிட்டி, துனுபொத்தகம, நிக்கவெவ, சோமாவதி விகாரை மற்றும் வெருகல் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
மழை நிலைமை : புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இலங்கையில் வெப்பம் உச்சம் மக்களுக்கு எச்சரிக்கை
காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது கிழக்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காங்கேசந்துறையிலிருந்து கல்பிட்டி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை : காங்கேசந்துறையிலிருந்து கல்பிட்டி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது மிதமான அலையுடன் காணப்படும்.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் சாதாரண அலையுடன் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
புத்தரை காணவில்லை – தமிழர் முறைப்பாடு
புத்தரை காணவில்லை – தமிழர் முறைப்பாடு
வவுனியா, செட்டிகுளம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத்தரை காணவில்லை என அப் பகுதியில் தற்போது வசித்து வரும் தமிழர் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
வவுனியா, செட்டிகுளம், பழைய புகையிரத நிலையத்திற்கு முன்பாக 09 ஆம் திகதி புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அது அன்று மாலையே அகற்றப்பட்டிருந்ததுடன் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் வைத்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று (10) குறித்த நபர் தானே தனது காணியில் புத்தர் சிலையை வைத்ததாகவும், அதனை காணவில்லை எனவும் செட்டிகுளம் பொலிசில் முறையிட்டுள்ளார்.
குறித்த நபர் கடந்த 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நோர்வேயில் இருந்து இலங்கைக்கு வருகை தந்து நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மையின பெண் ஒருவரை திருமணம் செய்திருந்ததுடன், கடந்த பெப்ரவரி மாதமளவில் செட்டிகுளத்திற்கு வந்து தங்கியுள்ளார்.
இந்நிலையிலேயே குறித்த புத்தர் சிலையை அவர் தனது காணிக்கு முன்னால் உள்ள அரச காணியில் வைத்துள்ளார்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பத்தேகம நுழைவாயிலுக்கு அருகில் இன்று (11) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
சீமெந்து ஏற்றிச் சென்ற டேங்கர் ஒன்று வீதியை விட்டு விலகி பாதுகாப்பு வேலியில் மோதி கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதி தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாகவும், சாரதி மற்றும் உதவி சாரதிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
பாகிஸ்தானில் வெடித்த குண்டு சிதறிய பொலிஸ் வண்டிகள்
பாகிஸ்தானில் வெடித்த குண்டு சிதறிய பொலிஸ் வண்டிகள்
பாகிஸ்தானின் குவெட்டாவில் பகுதியில்
போலீஸ் அதிகாரிகளை குறிவைத்து பயங்கர குண்டுவெடிப்பு
தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
பொலிஸ் வாகனங்களை குறிவைத்து இரண்டு மணிநேர இடைவெளியில் ,
சாலையோரத்தில் மறைத்து வைக்க பட்ட குண்டுகள் வெடித்து சிதறின .
இந்த குண்டு தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்,
மேலும் 22 பேர் காயமடைந்தனர்.
பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரில் திங்களன்று நடந்த முதல் தாக்குதலில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் மற்றும் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானில் வெடித்த குண்டு சிதறிய பொலிஸ் வண்டிகள்
சில மணி நேரங்களுக்குப் பிறகு, நகரில் மற்றொரு வெடிகுண்டு
போலீஸ் வாகனம் அருகே வெடித்தது,
நான்கு பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்..
சமீப நாட்களாக இவ்வாறான குண்டு வெடிப்பு தாக்குதல்கள்
அதிகரித்து காணப்படுகின்றன .
வெடித்த ஏவுகணை கிடங்கு பல மில்லியன் இழப்பு
வெடித்த ஏவுகணை கிடங்கு பல மில்லியன் இழப்பு
வெடித்த உக்ரைன் இராணுவத்தின் ஏவுகணை ஆயுத கிடங்கு பல மில்லியன் இழப்பு .குறிவைத்து அடித்த ரஷ்யா இராணுவம் ,கசிந்த ஆவணத்தால் நடந்த பயங்கரம் .
தாக்குதல் திட்டங்களை திடீரென மாற்றும் உக்ரைன் இராணுவம் ,வேட்டை திரு விழாவை ஆரம்பித்துள்ளரஷ்யா இராணுவம் ,நெருக்கடியில் யுக்ரைன் படைகள் .
இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்
மாறிய தாக்குதல் திட்டம் வீழ்த்தப்பட்ட விமானங்கள்
மாறிய தாக்குதல் திட்டம் வீழ்த்தப்பட்ட விமானங்கள்
உக்ரைன் இராணுவத்தினர் தமது தாக்குதல்
திட்டங்களில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர் .
அமெரிக்கா இராணுவ தலைமையாகத்தால்
வரைய பட்ட இராணுவ நடவடிக்கைகள் ,
ஆயுத வகைகள் ,அது சார்ந்த திட்டமிடல்கள் ,தாக்குதல் இலக்குகள்
என்பன அடங்கிய ஆவணம் ,கசிந்த நிலையில் ,உக்ரைன் இராணுவம் ,
ரஷ்ய மீது மேற்கொள்ள விருந்த கூட்டு போர் முறை தாக்குதல் திட்டங்களை,
அதிரடியாக மாற்றம் செய்துள்ளது .
உக்ரைன் தாக்குதல் திட்ட வரைபுகள் ,ரஸ்யாவின்
கைகளுக்கு சென்ற நிலையில் ,
இந்த திடீர் மாற்றத்திற்கு செல்ல வேண்டிய
நெருக்கடியை உக்ரைனுக்கு ஏற்படுத்த இருந்தது .
மாறிய தாக்குதல் திட்டம் வீழ்த்தப்பட்ட விமானங்கள்
அதனால் இந்த தாக்குத்தில் திட்டம் மற்றம் ஏற்பட்டுள்ளதாக,
உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது .
அமெரிக்காவினால் வெளியிட பட்ட தாக்குதல் திட்ட வரைபுகள் பொய் என அமெரிக்கா,தெரிவித்து வந்த நிலையில் ,இல்லை அது உண்மை தான் என்பதை போல .
உக்ரைன் இராணுவத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளதால் ,
உக்ரைன் படைகள் மிக பெரும் அழிவை சந்திக்க போகின்றன என்பதை
எடுத்து காட்டுகிறது .
கடந்த தினம் உக்ரைன் இராணுவத்தின் ஏவுகணை,
சேமிப்பு ஆயுத கூடம் மீது ,ரஷ்ய இராணுவம் நடத்திய
தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட ஏவுகணைகள் ,
எறிகணைகள்,ஆயுதங்கள் என்பன வெடித்து சிதறின .
அவ்வேளை அங்கிருந்த இராணுவத்தினரும் பலியாகி உள்ளதாக
ரஷ்ய இராணுவம் தெரிவித்து இருந்தது .
அதன் பின்ன இந்த தாக்குதல் திட்டத்தில் ,
மாறுதல் உள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளமை குறிப்பிட தக்கது .
லண்டனில் கலவரம் எரிந்த பொலிஸ் வாகனங்கள்
லண்டனில் கலவரம் எரிந்த பொலிஸ் வாகனங்கள்
வடக்கு அயர்லாந்தில் லண்டன் டெரியில் நடந்த குடியரசு அணிவகுப்பின் போது காவல்துறை வாகனம் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
ஈஸ்டர் அணிவகுப்பின் போது அதிகாரிகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதை அடுத்து ,வடக்கு அயர்லாந்தில் போலீசார் அமைதி காக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திங்களன்று புனித வெள்ளி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட 25 வது ,
ஆண்டு நிறைவைக் குறித்தது – இது வடக்கு அயர்லாந்தில் மூன்று
தசாப்தங்களாக மதவெறி இரத்தக்களரிக்கு முற்றுப்புள்ளி வைத்த சமாதான ஒப்பந்தநாளாகும் .
1916 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆட்சிக்கு எதிரான ஈஸ்டர் எழுச்சிக் கிளர்ச்சியின்,ஆண்டு நிறைவை அதிருப்தி கொண்ட குடியரசுக் கட்சியினர்
பாரம்பரியமாகக் குறிக்கும் நாள் இதுவாகும்.
அவ்வாறான நாளிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .
இராணுவ வாகனம் மோதி ஒருவர் பலி
இராணுவ வாகனம் மோதி ஒருவர் பலி
மொரட்டுவ பிரதேசத்தில் இராணுவ வாகனம் மோதியதில் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாணந்துறை ஹொரேதுடுவ பிரதேசத்தில் வசிக்கும் 58 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்துக்குள்ளான வாகனம் சைக்கிளில் பயணித்தவர் மீது மோதிய பின்னர் வீதியில் பயணித்த பெண்ணின் மீது மோதியிருந்தது.
பலத்த காயம் அடைந்த 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் வாகனத்தை ஓட்டிச் சென்ற இராணுவ சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.













































