வீதி அபிவிருத்தி அதிகார சபை எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

வீதி அபிவிருத்தி அதிகார சபை எச்சரிக்கை

வீதி அபிவிருத்தி அதிகார சபை எச்சரிக்கை

மழையுடனான வானிலையுடன் வீதிகளின் தன்மைகளை புரிந்துகொண்டு வாகனங்களை செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை, சாரதிகளை கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்பாக அதிவேக வீதிகள் மற்றும் மலையக வீதிகளில் மிகவும் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், கற்பாறைகள் சரிந்து வீழ்தல் மற்றும் மண்சரிவு ஏற்படலாம் என்பதால் மலையக வீதிகளில் அவதானத்துடன் வாகங்களை செலுத்துமாறு சாரதிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

ரஷ்யா விமானி நீர்த்தேக்கத்தில் சடலமாக மீட்பு
Posted in உலக செய்திகள்

ரஷ்யா விமானி நீர்த்தேக்கத்தில் சடலமாக மீட்பு

ரஷ்யா விமானி நீர்த்தேக்கத்தில் சடலமாக மீட்பு

உக்ரைன் போர் முனையில் தாக்குதலில் ஈடுபட்ட ரஷ்ய உலங்குவானூர்தி
உக்காரன் படைகளினால் சுட்டு வீழ்த்த பட்டது .

அவ்வாறு சுட்டு வீழ்த்த பட்ட வானூர்தியின் விமானி பாராசூட் மூலம் ,
குதித்து தப்பிக்க முயன்றார் .
ஆனால் சூட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில்
நீர் தேக்கத்தில் வீழ்ந்து பலியாகியுள்ளார் .

இந்த சம்பவம் கடந்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் ,
சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய ஹெலிகாப்டர்,
பைலட் ரோமன் மான்கிஷேவின் சடலம்
கியேவ் நீர்த்தேக்கத்தின் கரையில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

வீழ்ந்தவர் ரஷ்ய ஹெலிகாப்டரின் தளபதி என்று
உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது .

Error: View 9293b2au4w may not exist
காதல் நீயே புனிதம்|காதல் கவிதை|வன்னி மைந்தன் கவிதை |tamil kavithai|tamil kavithaikal
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

காதல் நீயே புனிதம்|காதல் கவிதை|வன்னி மைந்தன் கவிதை |tamil kavithai|tamil kavithaikal

காதல் நீயே புனிதம்|காதல் கவிதை|வன்னி மைந்தன் கவிதை |tamil kavithai|tamil kavithaikal

https://youtu.be/qrRGAOBZOng
ஓமானில் உள்ள 74 இலங்கைப் பெண்களின் உருக்கமான கோரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

ஓமானில் உள்ள 74 இலங்கைப் பெண்களின் உருக்கமான கோரிக்கை

ஓமானில் உள்ள 74 இலங்கைப் பெண்களின் உருக்கமான கோரிக்கை

ஓமான் நாட்டுக்கு பணிப் பெண்களாக அழைத்துச் செல்லப்பட்டு, பல்வேறு சித்திரவதையால் இலங்கை தூதரகத்தில் தஞ்சமடைந்து 9 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 74 பணிப்பெண்களை காப்பாற்றி நாட்டிற்கு அனுப்புமாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் உருக்கமாக கோரிக்கை விடுத்து காணொளி வெளியிட்டுள்ளனர். .

நாட்டிலுள்ள முகவர்கள் ஊடாக ஓமான் நாட்டிற்கு பணிப்பெண்களாக சென்ற பெண்கள் அங்குள்ள வீடுகளில் வீட்டின் உரிமையாளர்களால் அடித்து மற்றும்

நெருப்பால் சூடு வைத்தும் சித்திரவதைக்கு உள்ளானவர்கள் மற்றும் சம்பளம் வழங்காமை போன்ற பல்வேறு சித்திரவதை காரணமாக அங்கிருந்து வெளியேறி இலங்கை தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

ஓமானில் உள்ள 74 இலங்கைப் பெண்களின் உருக்கமான கோரிக்கை

இவ்வாறு தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளவர்களை (சேவ் கவுஸ்) என்ற இடத்தில் தங்கவைத்துள்ளதுடன் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு உறவினர்களுடன் கூட தொடர்பு கொள்ள முடியாதளவிற்கு அடைத்து வைத்துள்ளனர்

இவர்களை நாட்டுக்கு அனுப்பாது 9 மாதங்கள் வரை தடுத்து வைத்துள்ளதுடன், பலர் பல நோய்களினால் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கி வருகின்றதுடன் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் போல எங்களை நடாத்துகின்றனர்.

இங்கு நடக்கும் அட்டூழியங்கள் எதுவும் வெளியே தெரிவிக்க முடியாத நிலையிலுள்ளதுடன், இங்கிருந்து நாட்டுக்கு செல்லுகின்ற பெண் ஒருவரின் கையடக்க தொலைபேசியில் நாங்கள் உரையாடி அவரிடம் இந்தனை

வெளியிடுமாறு தெரிவித்து கதைத்து அனுப்பியுள்ளோம். எனவே எங்களை இங்கிருந்து காப்பாற்றுங்கள் கைகூப்பி கேட்கின்றோம். என கோரிக்கை விடுத்து வெளியிட்டுள்ள வீடியோவில் பதிவிட்டுள்ளனர்.

அரச வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் சிகிச்சை அறை
Posted in இலங்கை செய்திகள்

அரச வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் சிகிச்சை அறை

அரச வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் சிகிச்சை அறை

அரச வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் சிகிச்சை அறைகளை ஸ்தாபிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதன்படி, இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டினருக்காக, நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் இவ்வாறான கட்டணம் செலுத்தும் அறைகள் ஸ்தாபிக்கப்படவுள்ளன.

பாராளுமன்றம் சபாநாயகர் தலைமையில் ஆரம்பமானது.
Posted in இலங்கை செய்திகள்

பாராளுமன்றம் சபாநாயகர் தலைமையில் ஆரம்பமானது.

பாராளுமன்றம் சபாநாயகர் தலைமையில் ஆரம்பமானது.

மத்திய வங்கியை சுயாதீன நிறுவனமாக மாற்றும் நோக்கில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மத்திய வங்கி சட்டமூலத்தை எதிர்வரும் வியாழக்கிழமை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையால் நிறைவேற்றுவதாக இருந்தால் பல சரத்துகளில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த சட்டமூலம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சூறாவளி நிலை விருத்தியடையக் கூடிய சாத்தியம்
Posted in இலங்கை செய்திகள்

சூறாவளி நிலை விருத்தியடையக் கூடிய சாத்தியம்

சூறாவளி நிலை விருத்தியடையக் கூடிய சாத்தியம்

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேற்கு மற்றும் தெற்கு கரையோரப் பிரதேசங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சூறாவளி நிலை விருத்தியடையக் கூடிய சாத்தியம்

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்துள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் இன்று, மே 09 ஆம் திகதி ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், படிப்படியாக ஒரு சூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வட அகலாங்குகள் 02N இற்கும் 15N இற்கும் கிழக்கு நெடுங்கோடுகள் 85E இற்கும்100E இற்கும் இடையில் உள்ள கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

சூறாவளி நிலை விருத்தியடையக் கூடிய சாத்தியம்

மழை நிலைமை : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு அல்லது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொழும்பிலிருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

3 200 அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சமாதான நீதவான் பதவி
Posted in இலங்கை செய்திகள்

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வர் விடுப்பு

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வர் விடுப்பு

மன்னார் மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தச்சனா மருத மடு பகுதியில் நபர் ஒருவர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் வெடி பட்டு மரணம் அடைந்தமை தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் 4 சந்தேக நபர்கள் கடந்த 3 மாதம் 25 ஆம் திகதி அன்று கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்கள்.

குறித்த வழக்கானது நேற்று (08) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் குறித்த மரணம் இறந்த நபரின் கவனக்குறைவினால் ஏற்பட்டதாக பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட

முதல் அறிக்கையையும், மேற்கொள்காட்டி சந்தேக நபர்கள் சார்பில் மன்றில் முன்னிலையாகி சட்டத்தரணி செ. டினேசன் சமர்ப்பணம் மேற்கொள்ளப்பட்டது.

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வர் விடுப்பு

அதனை தொடர்ந்து வழக்கில் மடு பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட கடந்த கால அறிக்கை மற்றும் சாட்சிகளின் வாக்கு மூலங்களின் அடிப்படையில் குறித்த 4 சந்தேக நபர்களும் வழக்கிலிருந்து மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதியால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொலை தொடர்பான வழக்குகளில் மேல் நீதிமன்றத்தின் ஊடாகவே பிணை வழங்கப்படுகின்ற நிலையில் குறித்த வழக்கில் விசேட காரணங்களின் அடிப்படையில் நீதவான் நீதிமன்றத்தால் சந்தேக நபர்கள் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் 10 பிராந்தியங்கள் மீது ரஷ்யா கடும் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

உக்ரைன் 10 பிராந்தியங்கள் மீது ரஷ்யா கடும் தாக்குதல்

உக்ரைன் 10 பிராந்தியங்கள் மீது ரஷ்யா கடும் தாக்குதல்

கடந்த 24 மணி நேரத்தில், உக்ரைனில் உள்ள 10 பிராந்தியங்கள் மீது
ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் 28 பேர் காயமடைந்துள்ளனர்,
மேலும் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

இராணுவ ஊடக மையம் வழங்கிய தகவல்களின்படி,
ரஷ்ய துருப்புக்கள் நடத்திய தாக்குதலில் , 127 குடியிருப்புகள் மீது மோட்டார்,
டாங்கிகள், பீரங்கிகள்,விமான எதிர்ப்பு ஏவுகணைகள்,
விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த பட்டது .

மேலும் உக்ரைனின்
139 உள்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்துள்ளன.

இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதும் ,
28 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,
தொடர்ந்து கடும் சண்டைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

Error: View 9293b2au4w may not exist
டுவிட்டரில் ஊடகங்கள் பதிவுகள் படிக்க கட்டணம் அறவிட அனுமதி
Posted in உலக செய்திகள்

டுவிட்டரில் ஊடகங்கள் பதிவுகள் படிக்க கட்டணம் அறவிட அனுமதி

டுவிட்டரில் ஊடகங்கள் பதிவுகள் படிக்க கட்டணம் அறவிட அனுமதி

டுவிட்டர் சமுக வலைத்தளங்களில் ஊடகங்கள் ,அல்லது வெளியீட்டாளர்கள்,
தமது பக்கத்தில் வெளியிட படும் தரவுகளை படிக்க ,மாதம்
தோறும் சந்தா பெறும் திட்டத்தை அறிவித்துள்ளார் .

இதன் ஊடக டுவிட்டர் மற்றும் ,பதிப்பாளர்கள் பயன் அடையும் விடய ,
விடயங்கள் வடிவமைக்க பட்டுள்ளன .இந்த மாதம் முதலாம் திகதி முதல் ,இந்த விடயம் நடைமுறைக்கு வந்துள்ளது .

இதன் மூலம் டுவிட்டர் அதிக வருமானத்தை சம்பாதிக்கும் ,நிலைக்கு செல்லும் என எதிர் பார்க்க படுகிறது .

சமூக வலைத்தளங்களில் முதன் முதலாக, பதிப்பாளர்களா தமது ,வாசகர்களிடம் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை அறிமுக படுத்திய முதன்மையான இடத்தை டுவிட்டர் பெற்றுள்ளது .

Error: View 9293b2au4w may not exist
பெண்கள் கற்க அனுமதிக்க படுவார்கள் தலிபான்கள் திடீர் குத்து கரணம்
Posted in உலக செய்திகள்

பெண்கள் கற்க அனுமதிக்க படுவார்கள் தலிபான்கள் திடீர் குத்து கரணம்

பெண்கள் கற்க அனுமதிக்க படுவார்கள் தலிபான்கள் திடீர் குத்து கரணம்

ஆப்கானிஸ்தான் நாட்டை தற்போது ஆட்சி செய்து வரும்,
தலிபான் அமைப்பு ,பெண்கள் கல்வி பயில முற்றாக தடை விதித்தது .

தலிபான்கள் இந்த அடக்குமுறை நடவடிக்கையை ,
உலக நாடுகள் பலதும் கடுமையாக கண்டித்தன .
மேலும் இவர்களின் இந்த முடிவினால் ,அவர்களுடன்,
ராஜ்ய தொடர்புகளை வைத்து கொள்வதில்லை எனவும் அறிவித்தது .

பெண்கள் கற்க அனுமதிக்க படுவார்கள் தலிபான்கள் திடீர் குத்து கரணம்

அதை அடுத்து தலிபான்கள் வெளியுறவு மந்திரி பாகிஸ்தான் சென்று இருந்தார் ,அங்கு இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் ,பெண்க்ளுக்கு விதிக்க பட்ட கல்வி தடை,என்பது நிரந்தம் அல்ல எனவும் ,விரைவில் பெண்கள் கற்க,
அனுமதிக்க படுவார்கள் என அவர் அந்தர் பெல்ட்டி அடித்து கருத்தை உரைத்துள்ளார் .

தலிபான்கள் கடும் போக்கினால் ,உலக நாடுகளிடம் , இருந்து தனிமை படுத்த பட்டு ,வருவதான கருத்து வலுப்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது .

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேலை சுற்றி ஏவுகணைகளை குவிக்கும் ஈரான்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை சுற்றி ஏவுகணைகளை குவிக்கும் ஈரான்

இஸ்ரேலை சுற்றி ஏவுகணைகளை குவிக்கும் ஈரான்

இஸ்ரேலை சுற்றி ஏவுகணைகளை குவிக்கும் ஈரான் ,
பதட்டமாகும் மத்திய கிழக்கு .போர் எப்போதும் வெடிக்கலாம் .

இஸ்ரேலை சுற்றி ஏவுகணைகளை குவிக்கும் ஈரான்

Error: View 9293b2au4w may not exist
வாழ்வோம் வா
Posted in கவிதைகள்

வாழ்வோம் வா

வாழ்வோம் வா

உள்ளம் தரவா உள்ளம் தரவா
உன்னை தொழ வா
உயிரே உயிராய் உன்னை நானும்
உள்ளம் சுமக்க வா

நாளும் உன்னை தேடி
நானும் நடக்கிறேன்
நயாகரா அருவியாக
நாளும் துடிக்கிறேன்

விண்ணும் மண்ணும் மோதுதே
விளையாடல் புரியுதே
காலம் இது தான் வா வா
காதல் செய்வோம் வா வா

வெட்கம் விட்டு நீயும்
கொஞ்சம் பேசு – இந்த
வேளையில எந்தன் மனதை உரசு -இந்த
வேளையில உரசு

வாழ்வு கொஞ்ச காலம் தான்
வாழ்ந்து பார்க்கலாம் வா
இந்த வையத்தை
இன்றே ஆண்டு போகலாம் வா

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 08-05-2023

வாழ்வோம் வா
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

வாழ்வோம் வா

வாழ்வோம் வா .

நாளும் உன்னை தேடி
நானும் நடக்கிறேன்
நயாகரா அருவியாக
நாளும் துடிக்கிறேன் .

வாழ்வோம் வா click here full video

https://youtu.be/qwaAv9ilNoA
முத்திரை சந்தியில் கோரம் பெண் படுகாயம்
Posted in இலங்கை செய்திகள்

முத்திரை சந்தியில் கோரம் பெண் படுகாயம்

முத்திரை சந்தியில் கோரம் பெண் படுகாயம்

யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ் நல்லூர் ஆலயத்திற்கு முன்பக்கமாகவுள்ள பருத்திதுறை வீதியும் செம்மனி வீதியும் இணைகின்ற முத்திரைப் சந்தியில் திங்கட்கிழமை (08) காலையில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

முத்திரை சந்தியில் கோரம் பெண் படுகாயம்

வீதியில் தரித்து நின்றிருந்த கார் திடிரென சடுதியாக திருப்ப முற்பட்ட போது வீதியால் துவிச்சக்கர வண்டியில் வந்து கொண்டிருந்த பெண் மீது மோதியதில் இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் துவிச்சவண்டியில் பயணித்த பெண் பலத்த காயமடைந்து இரத்தம் வழிந்தோடிய நிலையில் அந்த வீதியால் சென்றவர்களும் அப்பகுதியில் உள்ளவர்களுமாக இணைந்து காயமடைந்தவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எரியும் ரஷ்யா ஓடும் மக்கள்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

எரியும் ரஷ்யா ஓடும் மக்கள்

எரியும் ரஷ்யா ஓடும் மக்கள்

எரியும் ரஷ்யா ஓடும் மக்கள் ,
உக்ரைன் அமெரிக்கா சதி ,தாக்குதல் உச்சம் .

எரியும் ரஷ்யா ஓடும் மக்கள்


Error: View 9293b2au4w may not exist
வீழ்ந்து நொறுங்கிய இந்திய போர் விமானம்
Posted in உலக செய்திகள்

வீழ்ந்து நொறுங்கிய இந்திய போர் விமானம்

வீழ்ந்து நொறுங்கிய இந்திய போர் விமானம்

இந்தியா இராணுவத்தின்மிக 21 ரக போர் விமானம் ஒன்று ,
ராஜஸ்தான் பகுதியில் வீழ்ந்து நொறுங்கியது ,
இதன் பொழுது இரண்டு பெண்கள் பலியாகியும் ,ஆண் ஒருவர் காயமடைந்துள்ளார் .

விமானி பாராசூட் மூலம் குதித்து தப்பித்த போதிலும் ,காயமடைந்த நிலையில்
சிகிச்சை பெற்று வருகிறார்

இந்த விபத்துக்கான காரணாம் உடடியாக தெரியவரவில்லை ,
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

இதே பகுதியில் முன்னரும் சில போர் விமானங்கள் ,
வீழ்ந்து நொருங்கய இருந்தமை தெரிந்ததே .

Error: View 9293b2au4w may not exist
எரியும் உக்ரைன் பழிவாங்கிய ரஷ்யா கப்பலை பிடிப்போம் ஈரான்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

எரியும் உக்ரைன் பழிவாங்கிய ரஷ்யா கப்பலை பிடிப்போம் ஈரான்

எரியும் உக்ரைன் பழிவாங்கிய ரஷ்யா கப்பலை பிடிப்போம் ஈரான்

எரியும் உக்ரைன் பழிவாங்கிய ரஷ்யா கப்பலை பிடிப்போம் ஈரான் ,
பல விமானங்கள் சுட்டு வீழ்த்தல் ,அமெரிக்கா கப்பல் பிடிப்போம் மிரட்டும் ஈரான் ,

எரியும் உக்ரைன் பழிவாங்கிய ரஷ்யா கப்பலை பிடிப்போம் ஈரான்


Error: View 9293b2au4w may not exist
19 வயதுடைய இளம் ஜோடி மாயம்
Posted in இலங்கை செய்திகள்

19 வயதுடைய இளம் ஜோடி மாயம்

19 வயதுடைய இளம் ஜோடி மாயம்

அத்தனகலு ஓயாவின் கிளையான எல் ஓயாவில் நீராடச் சென்ற போது திருமணம் செய்யவிருந்த ஜோடியொன்று அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.

இவர்கள் நேற்று (07) வெயாங்கொடை, மெதவத்தை பிரதேசத்தில் இருந்து எல் ஓயாவில் குளிப்பதற்குச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெயாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரும், குடாஓயா, லபுதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதி ஒருவருமே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போனவர்களை தேடி வெயாங்கொடை பொலிஸ் அதிகாரிகள், பிரதேசவாசிகள், இராணுவம் மற்றும் கடற்படையினரின் ஆதரவுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சவேந்திர சில்வா அதி உயர் விருதை பெற்றார்
Posted in இலங்கை செய்திகள்

தையிட்டி விகாரையை அகற்ற முடியாது

தையிட்டி விகாரையை அகற்ற முடியாது

யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை ஒருபோதும் அகற்றமுடியாது என்று பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் திகதி அப்போது இராணுவத் தளபதியாக இருந்த சவேந்திர சில்வா அடிக்கல் நட்டிருந்தார்.

தையிட்டி விகாரையை அகற்ற முடியாது

தனியார் காணிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மேற்படி விகாரையை அகற்றி அந்தக் காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்களால் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இந்த போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சவேந்திர சில்வா, குறித்த திஸ்ஸ விகாரை அரசின் முழுமையான அனுமதியுடன் இராணுவத்தினரின் வழிபாட்டுக்காக அமைக்கப்பட்டது என்றார்.

மேலும் இனவாத, மதவாதக் கண்ணோட்டத்துடன் இதனை நோக்குவதை தமிழ்க் கட்சிகளும் அவர்களது ஆதரவாளர்களும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.