ஏவுகணைகளை குவிக்கும் ஈரான் எல்லையில் போர்பதட்டம்
ஏவுகணைகளை குவிக்கும் ஈரான் எல்லையில் போர்பதட்டம்,அணு உலை மீது தாக்குதல் நடத்த இரகசிய திட்டமிடல் ,தடுக்க தயாராகும் ஈரான் ,வெடிக்க போகும் பெரும் யுத்தம்
ஜனாதிபதி ரணில் கைதிகளுக்கு பொது மன்னிப்பு
ஜனாதிபதி ரணில் கைதிகளுக்கு பொது மன்னிப்பு
பொசன் போயாவை முன்னிட்டு கைதிகள் குழுவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அரச மன்னிப்பை வழங்கியுள்ளார்.
அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த மன்னிப்பு வழங்கப்படுமென சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பல கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுடன் கைதிகளுக்கு விசேட பொதுமன்னிப்பு வழங்கப்பட உள்ளது.
அபராதம் செலுத்தாததால் சிறை தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் எஞ்சிய தண்டனை காலத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அபராதம் உட்பட 40 வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு நாளையுடன் 20 வருட சிறைத்தண்டனையை அனுபவித்த கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளது.
அழகுசாதனப் பொருட்களுடன் ஓடிய தம்பதியினர்
அழகுசாதனப் பொருட்களுடன் ஓடிய தம்பதியினர்
அலுபோமுல்ல குருச சந்தி பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியில் இருந்து சுமார் 15,000 ரூபாய் பெறுமதியான அழகுசாதனப் பொருட்கள் மற்றும் வாசனைத் திரவியங்களை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்ற கணவனும் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 21ஆம் திகதி குறித்த தம்பதியினர் மோட்டார் சைக்கிளில் பல்பொருள் அங்காடிக்கு வந்து கைப் பையில் பல பொருட்களை திருடிக்கொண்டு, ஒரே ஒரு பொருளுக்கு மட்டும் பணம் செலுத்தியதாக அலுபோமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராக்களை சோதனை செய்ததில் தம்பதிகள் மோட்டார் சைக்கிளில் கடைக்கு வந்து திருட்டில் ஈடுபட்டமை தெரியவந்தது.
அழகுசாதனப் பொருட்களுடன் ஓடிய தம்பதியினர்
கடைக்கு முன்பாக நின்ற மோட்டார் சைக்கிளை பொலிஸார் கைப்பற்றியதுடன், சந்தேகநபர்கள் மொரட்டுவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, புளத்சிங்கள பிரதேசத்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிலும் பொருட்களைத் திருடியதற்காக புளத்சிங்கள பொலிஸாரால் தேடப்பட்டு வரும் தம்பதிகள் அவர்கள் எனத் தெரியவந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சந்தேகநபர்களான தம்பதியினர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்
வட்டி வீதத்தை குறைக்க தீர்மானம்
வட்டி வீதத்தை குறைக்க தீர்மானம்
மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதத்தை 2.5 வீதத்தால் குறைக்கும் தீர்மானத்தின் பிரகாரம், உரிமம் பெற்ற வங்கிகள் வட்டி வீதங்களை குறைக்கும் என எதிர்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
மத்திய வங்கியின் நாணய சபை நேற்று முன்தினம் கூடிய போது, கொள்கை வட்டி வீதத்தை 2.5 வீதத்தால் குறைக்க தீர்மானித்துள்ளது.
இதற்கிணங்க, மத்திய வங்கியின் நிலையான வைப்பு வட்டி வீதம் 15 வீதத்திலிருந்து 13 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
வட்டி வீதத்தை குறைக்க தீர்மானம்
துணை நிலை கடன் வழங்கலுக்கான வட்டி வீதத்தை 14 வீதத்திற்கும் 250 அடிப்படை புள்ளிகளால் குறைப்பதற்கும் மத்திய வங்கியின் நாணயசபை தீர்மானித்துள்ளது.
அத்துடன், தற்போது மிகவும் வேகமாக பணவீக்கம் குறைவடைந்து வருவதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்
காலி துறைமுகத்தில் வெளிநாட்டவர் உயிரிழப்பு
காலி துறைமுகத்தில் வெளிநாட்டவர் உயிரிழப்பு
காலி துறைமுகத்தில் நீரில் மூழ்கி 61 வயதான லிதுவேனியா நாட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சிங்கப்பூரில் இருந்து அபுதாபி நோக்கி பயணித்த கப்பல் ஒன்று காலி துறைமுகத்திற்கு பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக வந்த போது குறித்த நபர் துறைமுகத்தில் இறங்க முற்பட்ட வேளையில் கடலில் தவறி விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர், கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேல் விமான நிலையத்தில் குண்டு சுற்றிவளைத்த இராணுவம்
இஸ்ரேல் விமான நிலையத்தில் குண்டு சுற்றிவளைத்த இராணுவம்
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் உள்ள டேவிட் பென் குரியன்,
விமான நிலையத்தில் இராணுவத்தினரால் ,
வெடிகுண்டு கண்டுபிடிக்க பட்டதை அடுத்து, ஆயுதம் ஏந்திய
இராணுவத்தினரால் சுற்றி வளைக்க பட்டது .
விமான நிலையத்தில் கார் பாக்கிங் பகுதியில் ,
காருக்குள் பொதிக்குள் ,இந்த குண்டு
கண்டு பிடிக்கப் பட்டுள்ளது .
இஸ்ரேல் விமான நிலையத்தில் குண்டு சுற்றிவளைத்த இராணுவம்
ஆனால் இதனால் விமான நிலையத்தின் போக்குவரத்து,
மற்றும் விமான அட்டவணையில் எந்த மாற்றமும்
ஏற்படவில்லை ,சேவைகள் வளமை போன்று இடம்பெற்றன .
வெடி குண்டு அகற்றும் படையினர் வரவழைக்க பட்டு ,
குண்டு பிடிக்கப்பட்டதால், விமான நிலைய வாகன நிறுத்துமிடத்தின்,
ஒரு பகுதி அடித்து மூடப்பட்டது,
மேற்படி சம்பவம் இராணுவத்தினரை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது ,
ரஷ்ய தலைநகரை போல ,இஸ்ரேல் தலைநகருக்கு, குண்டு
தாக்குதல் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றமை ,அதன் எதிர்காலாம்
எவ்வாறு அமையும் என்பதை வெளிச்சம் இட்டு காட்டியுள்ளது .
இந்தியாவில் மரத்துடன் மோதிய பேரூந்து 40 பேர் காயம்
இந்தியாவில் மரத்துடன் மோதிய பேரூந்து 40 பேர் காயம்
இந்தியா ஹிமாச்சல் பிரேதேச பகுதியில்,
பயணிகளை காவிய படி பயணித்த பேரூந்து விபத்தில் சிக்கியது .
சாரதியின் கட்டு பாட்டை இழந்து ,மரத்துடன் மோதி விபத்தில் சிக்கியதால் ,அதில் பயணித்த 30 க்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்தனர் .
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
மலையடி வாரத்தில் பயணித்த பெருந்தே ,
இவ்விதம் விபத்தில்சிக்கியதாக தெரிவிக்க பட்டுள்ளது .
குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இஸ்ரேல் விமான நிலையத்தில் குண்டு சிதறிய விமானங்கள்
இஸ்ரேல் விமான நிலையத்தில் குண்டு சிதறிய விமானங்கள் |
சுற்றிவளைத்த இராணுவம் ,
4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக 04 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி மாத்தறை, இரத்தினபுரி, காலி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சிரேஷ்ட புவிசரிதவியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்தார்.
இதன்படி, மாத்தறை மாவட்டம், பிடபெத்தர, குறிப்பாக களுபோவிட்டான பிரதேசங்களில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இதேவேளை, காலி மாவட்டத்தின் நாகொட மற்றும் நெலுவ பிரதேச மக்களுக்கும் களுத்துறை மாவட்டத்தின் வளல்லாவிட்ட, பாலிந்தநுவர, மத்துகம, அகலவத்தை மற்றும் புலத்சிங்கள பிரதேச மக்களுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
வீழ்ந்து நொறுங்கிய இந்தியா விமானம்
வீழ்ந்து நொறுங்கிய இந்தியா விமானம்
இந்தியா இராணுவத்தின் விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியுள்ளது .
வழமையான பயிற்சி பணிகள் ஈடுபட்டு கொண்டிருந்த விமானம் ,கர்னாடக,
மகளி கிராம பகுதியில் வீழ்ந்து நொறுங்கியது .
இந்த விபத்தில் விமானி பரசூட் மூலம் ,
குதித்து தப்பித்து கொண்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .
ஒரு வாரத்தில் இடம்பெற்ற மூன்றாவது விமான விபத்தாக இது பதிய பெற்றுள்ளது .
உலங்கு வானூர்தி ஒன்று வயல் வெளியில், தரை நிறங்கிய நிலையில் காணப்பட்டது .
அதற்கு முன்னதாக போர் விமானம் வீழ்ந்து நொறுங்கியது .
இந்திய விமான படையின் நம்பிக்கை நட்ஷத்திரமாக விளங்கும் ,
இந்த அதி உயர் சண்டை விமானங்கள் தொடராக வீழ்ந்த வண்ணம் உள்ளமை ,
பல சநதேகங்களை எழுப்பியுள்ளது .
வீழ்ந்து நொறுங்கிய இந்தியா விமானம்
சீனா இராணுவம் ,இந்தியா எல்லைகளில் ஆழ ஊடுருவிய பின்னர் ,
தொடராக இந்திய விமானங்கள் வீழ்ந்த வண்ணம் உள்ளன .
இவை சீன இராணுவத்தினர் விமானங்களில் கோளாறை ஏற்படுத்தி ,
அதன் அலைவரிசையை குழப்பி ,கைக்கிங் செய்து வீழ்த்துவதான ,
சந்தேகம் வலுத்துள்ளது .
இவ்வாறான தொடர் விமான விபத்துக்கள் ,இந்திய விமானப்படையின் பலத்தில் ,
ஓட்டைகள் உள்ளதை ,அல்லது பயன் பாடற்ற விமானங்களை
வைத்திருப்பதாக காண்ப்பிக்கிறது .
உக்ரைன் விமானங்கள் பல இவ்வாரூ செயல் இழந்த நிலையில் காணப்படுகின்றன ,
இவ்வாறான நிலையில் இந்தியாவும் உள்ளாக்க பட்டுள்ளதா ,
என்ற சந்தேகத்தை இவை எழுப்பியுள்ளது .
விமலிடம் இழப்பீடு கோரிய சவேந்திர சில்வா
விமலிடம் இழப்பீடு கோரிய சவேந்திர சில்வா
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவிடம் இருந்து பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இழப்பீடு கோரி கோரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அண்மையில் வெளியான புத்தகத்தின் மூலம் தனக்கும் இராணுவத்தினருக்கும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்து இவ்வாறு செயற்பட நடவடிக்கை எடுத்துள்ளார்
இளஞ்செழியனின் மற்றுமொரு அதிரடி தீர்ப்பு
இளஞ்செழியனின் மற்றுமொரு அதிரடி தீர்ப்பு
கடந்த 2013 ஆம் ஆண்டு முச்சக்கர வண்டி சாரதியான சதாசிவம் குகானந்தன் என்பவரை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் பிறிதொரு முச்சக்கர வண்டி
சாரதியான வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்று தீர்ப்பளித்தார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு தை மாதம் 28 ஆம் திகதி வவுனியா, மருக்காரம்பளை பகுதியில் உள்ள முச்சக்கர வண்டி சாரதி ஒருவரின் வீட்டில் புதுமனை புகுவிழா இடம் பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு முடிந்ததும் இரவு இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது குறித்த அங்கு கலந்து கொண்டவர்களுக்கிடையில் கைகலப்பு இடம்பெற்றுள்ளது. பின்பு அவரவர் தமது வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
இளஞ்செழியனின் மற்றுமொரு அதிரடி தீர்ப்பு
மறுநாள் 29 ஆம் திகதி காலை 7 மணியளவில் வவுனியா இலங்கை வங்கியில் இருந்து 100 மீற்றர் தூரத்தில் புகையிரத கடவையில் சடலம் ஒன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த சடலம் தடவியல் பொலிசாரின் உதவியுடன் மீட்கப்பட்டதுடன், முச்சக்கர வண்டி ஒன்றில் இரத்தக்கறை காணப்படுவதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்தது.
இதனையடுத்து முதலாம் சந்தேக நபரான வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த முச்சக்கரண்டி சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், இரண்டாம் சந்தேக நபரான பிறிதொரு முச்சக்கர வண்டி சாரதி சந்தேகத்தில் கைது செய்யப்பட்டார்.
வழக்கு விசாரணைகள் நடைபெற்று தடுப்பு காவலில் இருந்து இருவரும் விடுவிக்கப்பட்டு, கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 07 குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் முதலாம் மற்றம் இரண்டாம் எதிரிகளுக்கு எதிராக
இளஞ்செழியனின் மற்றுமொரு அதிரடி தீர்ப்பு
சட்டமா அதிபர் திணைக் களத்தால் அரச சட்ட வாதியான தர்சிகா திருக்குமரநாதன் அவர்களின் நெறிப்படுத்தலில் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த போது முச்சக்கர வண்டியில் பெறப்பட்ட இரத்த மாதிரியும், கொலை செய்யப்பட்ட நபரின் இரத்த மாதிரியும் ஒன்றுடன் ஒன்று ஒத்து போவதை தடவியல் பொலிஸார் சாட்சியத்தின் மூலம் வெளிப்படுத்தினர்.
அத்துடன், மொட்டை விசை பாவித்ததன் மூலம் வெளிக்காயம் மற்றும் உட்காயம் ஏற்பட்டு குறித்த மரணம் ஏற்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி மன்றில் சாட்சியமளித்தார்.
சந்தர்ப்பம், சூழ்நிலை, சாட்சியம் மூலம் முதலாம் எதிரியான பொதுக்கிணறு வீதி தோணிக்கல்லைச் சேர்ந்த ஜேசுதாசன் இலங்கேஸ்வரன் தான் குறித்த கொலையை நிகழ்த்தியுள்ளார் என்பதை அரச சட்டவாதியால் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூப்பிக்கப்பட்டுள்ளதால், முதலாம் சந்தேகநபருக்கு மரண தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்ததுடன், இரண்டாம் எதிரியான சந்தேக நபரை விடுவித்து மேல் நீதிமன்று தீர்ப்பளித்தது
உக்ரைனுக்கு 300 மில்லியன் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா
உக்ரைனுக்கு 300 மில்லியன் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா
உக்ரனுக்கு அவசர உதவியாக மேலும் 300 மில்லியன் டொலர் ,
பெறுமதியான ஆயுதங்களை
அமெரிக்கா வழங்கிட ஒப்புதல் அளித்துள்ளது .
சில வாரங்களில் இந்த நவீன ஆயுதங்களுக்கரைன் வந்தடையும் .
இந்த ஆயுத தொகுதியில் ,பட்ரியட் ஏவுகணைகள் ,
வான் தடுப்பு ஏவுகணைகள் .155 பீரங்கி எறிகணைகள் ,
உள்ளிட்டவனி முதன்மை பெறுகின்றன .
ரஷ்ய தலைநகர் மஸ்கொவ ,உக்ரைன் விமானங்கள் ,
தாக்கிய 48 மணித்தியாலத்தில் ,இந்த மிக பெரும் ,
ஆயுத உதவியை ,அமெரிக்கா அறிவித்துள்ளது.
ரஸ்யாவுக்குள் நெருக்கடி தரும் தாக்குதல்களை ,
உக்ரைன் மேற்கொண்டது, தமக்கு கிடைத்த வெற்றியக அமெரிக்கா
கருதுகிறது .
அதனால் ரஸ்யாவின் நாடித்துடிப்பை ஆழம் பார்க்க ,
மேலும் நவீன ஆயுதங்களை வழங்கிட ,
இவர்கள் தயாராகி வருகின்றனர் .
உக்ரைனுக்கு 300 மில்லியன் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா
புட்டீன் அடுத்து ,தனது ஆட்டத்தை ஆரம்பிக்க ,
இவர்கள் எண்ணையை ஊற்றி விடுகின்றனர் .
விளங்கும் படி சொல்ல போனாலே, எரிகிற வீட்டில் எண்ணெய் ஊற்ற பட்டுள்ளது .
ரஷ்ய தனது நாட்டை பாதுகாத்து கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளதால் ,
தனது தாக்குதல்களை, வேகப்படுத்த வேண்டிய நிலைக்கு ,
செல்லவேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது .
உக்ரைனால் , ரஸ்யாவின் உள்கட்டமைப்புக்கள் சிதைக்க படும் ,
அணு ஆயுத தளங்கள் கூட தாக்க படலாம் ,அவ்வாறு தாக்க பட்டால் ,
அதுவே ரஸ்யாவுக்கு மிக பெரும் அவமானமாக மாற்றம் பெறும் ,
அத்துடன் இராணுவ சமன் நிலையில் பெரும் சறுக்கலை ஏற்படுத்தும் ,
அதற்க்கு முன்னதாக ,விழித்து கொள்ள வேண்டிய நிலைக்கு ரஷ்ய தள்ள பட்டுள்ளது .
மேற்குலக நாடுகள்,ரஸ்யாவை ரவுண்டு கட்டி அடிக்க ,
முழு வீச்சாக செயல்படுவதை ,ரஷ்ய தலை
நகர் தாக்குதல்கள் எடுத்து காட்டுகின்றன .
ரஸ்யாவை தகர்க்க ஜெர்மன் வழங்கும் கொடிய விமானங்கள்
ரஸ்யாவை தகர்க்க ஜெர்மன் வழங்கும் கொடியவிமானங்கள்
திசை மாறும் உக்ரைன் போறும் ,அழிவின் விளிம்பில் அடியெடுத்து வைக்கும் ரஷ்ய நிலையம் ,ஐரோப்பாவுக்கு புட்டீன் வைக்க போகும் ஆப்பு ,இந்தியா விமானங்களை வீழ்த்தும் சீனா .
சகோதரியின் கணவரை நடுவீதியில் வைத்து வெட்டிய சகோதரர்கள்
சகோதரியின் கணவரை நடுவீதியில் வைத்து வெட்டிய சகோதரர்கள்
மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை வெட்டி காயப்படுத்திய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கைது செய்ய கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் இன்று காலை மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நபர் மீது மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் கூரிய ஆயுதத்தினால் வெட்டி காயப்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
இதன் போது இச்சம்பவத்தில் 41 வயது மதிக்கத்தக்க இஸ்மாலெப்பை சிறாஜ்டீன் என்ற மேசன் வேலை செய்யும் குடும்பஸ்தரே காயமடைந்துள்ள நிலையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சகோதரியின் கணவரை நடுவீதியில் வைத்து வெட்டிய சகோதரர்கள்
சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை தலைமையக பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியுமான பிரதம பொலிஸ் பரிசோதகர் அலியார் றபீக் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சம்பவத்தின் பின்னணி
இரண்டாவது திருமணத்தில் இணைந்த ஒருவர் அவரது மனைவிக்கு தினம் தோறும் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து இத்தொந்தரவு செயற்பாடு தொடர்பில் பாதிக்கப்பட்டவர் தனது சகோதர்களிடம் முறையிட்டிருந்தார்.
சகோதரியின் கணவரை நடுவீதியில் வைத்து வெட்டிய சகோதரர்கள்
இந்நிலையில் சகோதரிக்கு தொந்தரவு செய்து வந்த மச்சானை இரு சகோதரர்களும் வீதியில் இடைமறித்து தாக்குதல் மேற்கொண்டிருப்பதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
மேலும் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் இவ்விடயம் தொடர்பில் மனைவி தரப்பிலும் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் தாக்குதலுக்கு இலக்கானவரும் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது இத்தாக்குதலுடன் சம்பந்தப்பட்டு தலைமைறைவான மற்றுமொரு சந்தேக நபரை கைது செய்ய கல்முனை தலைமையக பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கப்பலோடு மூழ்கிய இஸ்ரேல் உளவாளிகள் அதிர்ச்சியில் இஸ்ரேல்
பாணந்துறை இடம்பெற்ற கொடூரமான கொலை சம்பவம்
பாணந்துறை இடம்பெற்ற கொடூரமான கொலை சம்பவம்
பாணந்துறை வெகட பிரதேசத்தில் நேற்றிரவு ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறையில் உள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு முன்பாக குறித்த இளைஞன் வாளால் தாக்கப்பட்டதுடன் தாக்குதலுக்குள்ளான இளைஞன் காயங்களுடன் ஆடைத்தொழிற்சாலை வளாகத்திற்கு ஓடியுள்ளார்.
அவரைப் பின்தொடர்ந்து வந்த கொலையாளி அந்த இடத்திற்குள் நுழைந்து அந்த இளைஞனை வாளால் தாக்கிய விதம் சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.
பாணந்துறை இடம்பெற்ற கொடூரமான கொலை சம்பவம்
இளைஞன் தலையில் பலமுறை அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மொதரவில அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 23 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொலையைச் செய்த சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
காட்டுக்குள் அபாயகரமான ஆயுதங்கள்
காட்டுக்குள் அபாயகரமான ஆயுதங்கள்
அச்சுவேலி – செல்வநாயகபுரம் பகுதியில் காட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அபாயகரமான ஆயுதங்கள் கைபெற்றப்பட்டுள்ளன.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த கஜேந்திரா வாள்கள் என கூறப்படும் இந்த வாழ்வில் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
கைப்பெற்றப்பட்ட வாள்கள் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளன
கவனயீர்ப்பு போராட்டம்
கவனயீர்ப்பு போராட்டம்
வெளிநாடுகளுக்கு வாழ்வாதாரத்தை தேடி சென்று நிர்க்கதியான பெண்களுக்கு பாதுகாப்பை கோரி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் இன்று இடம்பெற்றது.
வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு ஏற்பாடு செய்திருந்த குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் வவுனியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது மத்தியகிழக்கு நாடுகளும் தொழிலுக்காக சென்று நிர்க்கதியான பெண்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்வதுடன் போலி முகவர்கள் தொடர்பிலும் அரசாங்கம் கவனமெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
நாட்டில் மருந்துத் தட்டுப்பாடு
நாட்டில் மருந்துத் தட்டுப்பாடு
நாட்டில் 111 மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியதாக தெரிவித்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இவ்விடயம் தொடர்பில்
அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதுடன், பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
”மூன்று மாதங்களுக்கு முன்னர் 200 வகையான மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியது.
அது தற்போது 111 ஆக குறைந்துள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அந்த எண்ணிக்கை 70 ஆகக் குறைவடையும்” என அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டில் மருந்துத் தட்டுப்பாடு
மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்யப் போதுமான நிதி உள்ளதா எனக் கேட்ட போது ” இலங்கை கடந்த வருடத்திலிருந்து கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கின்றது என்பது மறுக்க முடியாத விடயம்.
நாம் இப்போது அதை சரிசெய்து கொண்டு இருக்கின்றோம். இந்நிலையில் நிதியை விடுவிப்பதில் சிறு சிக்கல்கள் இருக்கின்றன.
இருந்தாலும் திறைசேரியிலிருந்து மருந்துக் கொள்வனவுக்குப் போதுமான நிதியைப் பெற்று வருகின்றோம்” என அவர் தெரிவித்தார்.











































