எரியும் இஸ்ரேல் வெடித்த போராட்டம்
எரியும் இஸ்ரேல் வெடித்த போராட்டம்
இஸ்ரேலினால் ஆக்கிரமிக்க பட்ட மேற்கு கரையில் ,
பூர்வீக மக்கள் நடத்திய போராட்த்திற்கு எதிராக ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவம்,நடத்திய வன்முறை கலந்த தாக்குதலில் பல டசின் மக்கள் காயமடைந்துள்ளனர் .
கண்ணீர் புகை மற்றும் ரப்பர் குண்டுகளை பயன் படுத்தி தாக்குதல்
நடத்த பட்டுள்ளது .
இஸ்ரேல் இராணுவத்தின் தொடர் அத்துமீறல் நடவடிக்கையால் ,
பலஸ்தீன போராளிகள் இஸ்ரேல் மீது ,
மீண்டும் கடும் தாக்குதலை நடத்திடும் முக்கிய நகர்வுகள் ,
இதில் இருந்து ஆரம்பிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
கமாஸ் ஈரான் பேச்சுக்கள் இடம்பெற்று 48 மணித்தியாலத்தில் ,
இஸ்ரேலில் மக்கள் ,மோதல்கள் இடம்பெற்று வருகின்றமை கவனிக்க தக்கது .
முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதிரணில்
முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி ரணில்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார் என, முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி ரணில்
ஜனாதிபதி செயலகம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில், நடமாடும் சேவை ஒன்று, ஜூலை மாத முற்பகுதியில் நடைபெறவுள்ளது.
இந்த நடமாடும் சேவைக்கு பிரதம விருந்தினராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்ளவுள்ளார் என முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்
பஸ் விபத்தில் ஒருவர் பலி – பலர் படுகாயம்
பஸ் விபத்தில் ஒருவர் பலி – பலர் படுகாயம்
ஹோமாகம, பிடிபன பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழந்துடன், மேலும் 13 பேர் படுகாயமடைந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹோமாகம பொலிஸார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
பெண் போன்று நடித்து மாணவன் துஷ்பிரயோகம்
பெண் போன்று நடித்து மாணவன் துஷ்பிரயோகம்
பேஸ்புக்கில் பெண் போன்று நடித்து 14 வயது சிறுவனை கம்பஹா பிரதேசத்திற்கு வரவழைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்துடன்,
தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர்.
துஷ்பிரயோகத்துக்கு உள்ளான சிறுவன் ருவன்வெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் எனவும், பெண்ணாக தன்னை
காட்டிக்கொண்ட சந்தேக நபர், பேஸ்புக் ஊடாக அவருடன் உரையாடி பின்னர் கம்பஹாவுக்கு அழைத்து வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துஷ்பிரயோகத்துக்கு உள்ளான சிறுவனின் தந்தை கம்பஹா பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, சிறுவனிடம் வாக்குமூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு, கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
யாழில் மனித சடலம் – வீடு அத்திவராம வெட்டிய பொழுது நடந்த பயங்கரம்
யாழில் மனித சடலம் – வீடு அத்திவராம வெட்டிய பொழுது நடந்த பயங்கரம்
யாழ்ப்பாணம் அல்லப்பிட்டி பகுதியில் வீட்டுக்கு அத்திவாரம் வெட்டும் பொழுது மனித சடலம் ஒன்று கண்டு பிடிக்க பட்டதால் பெரும் பர பரப்பு நிலவியது .
சடலம் கண்டு பிடிக்க பட்ட பகுதிக்கு நீதிபதி அவர்கள் நேரில் வந்து பார்வையிட்டு ,அகழ்வு பணியை கண்காணித்தார் .
இது யார் சடலம் எவ்வாறு வந்தது என்பது தொடர்பிலும் ,எத்தனை ஆண்டுகளாக சடலம் இங்கே புதைக்க பட்டது என்பது தொடர்பிலான மண் ஆய்வு ,என பல விடயங்கள் முடுக்கி விட பட்டுள்ளன .
மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் ,
பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
அடையாளம் காண முடியாதவாறு சடலம் மீட்பு
அடையாளம் காண முடியாதவாறு சடலம் மீட்பு
யாழ். வல்லை – தொண்டைமானாறு வீதியில் அடையாளம் காணப்படாத சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்று (22) காலை குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் சடலம் அடையாளம் காண முடியாதவாறு சிதைந்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
லண்டன் காம லீலை சாமியார் பிணையின்றி சிறையில் அடைப்பு -சாட்சிகளை குழப்ப நடவடிக்கை
லண்டன் காம லீலைசாமியார் பிணையின்றி சிறையில் அடைப்பு -சாட்சிகளை குழப்ப நடவடிக்கை
லண்டன் காம லீலை சாமியார் பிணையின்றி சிறையில் அடைப்பு -சாட்சிகளை குழப்ப நடவடிக்கை சமீப காலமாக லண்டனில் உள்ள,கேரளாவை சேர்ந்த சாமியார் ஒருவரின் ,
காம லீலைகள் மற்றும் பணமோசடி
காம லீலைகள் மற்றும் பணமோசடி சம்பந்தமான செய்திகளை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
பாலியல் குற்ற சாட்டு
அவர் மீது சிலர் கொடுத்த பாலியல் குற்ற சாட்டு முறமை காரணமாக ,
நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை
அவரை லண்டன் போலீசார் கைது செய்து விசாரித்த பின்னர் ,நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்த பட்ட பொழுதும் ,
நீதிமன்றத்தினால் பிணை வழங்க மறுக்கப்பட்டு ,
தற்போது நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தடுப்புக்காவலில் வைக்க பட்டுள்ளார் .
போலி பரப்புரை
இவருடைய கைதுக்கு பின்னால் ,சிவப்ரியன் என்பவர் உள்ளார் ,
அவர் சாமியாரின் பழைய பக்தகோடி என்றும் ,
போலியான பரப்புரைகள் ,
அவர் சாமியாரை உள்ளே தள்ளி விட்டு ,ஆலயத்தை அபகரிக்க திட்டமிட்டு ,
செயல்பபடுவதாக போலியான பரப்புரைகள் ,
சாமியாரின் ஆதரவு கூலிகளினால் மேற்கொள்ள படுகிறது .
இந்த ஆலய அபகரிப்புக்கு ,சிவப்ரியனுடன் சில பெண்களும் இணைந்து ,
செயல்படுவதாகவும், மக்களை குழப்பும் போலியான ,பொய்யான உண்மைக்கு புறம்பான ,ஆதாரமற்ற கதைகள் பரப்ப பட்டு வருகின்றன .
இந்த செய்தி காணொளி குறிப்பு காணொளியில் பார்க்க அழுத்துங்கள்
மக்களை ஏமாற்றியும் ,மந்திரத்தால் வாய் கட்டு போட்டு விடுவார் என்ற ,
பயமுறுத்தல் ஊடாகவும் , சாமியார் ஏமாற்றி சுருட்டும் பணத்தில்,
சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் ,போலி சாமியாரை ,மனித புனிதனாக்க
இவ்வாறு பரப்ப படுகின்றன .
லண்டன் காம லீலை சாமியார் பிணையின்றி சிறையில் அடைப்பு -சாட்சிகளை குழப்ப நடவடிக்கை
அதற்கு காரணம் ,அது யாதெனில் சாட்சிகள் பலமாக, மன திடத்துடன் உள்ளனர் ,இவ்வாறு சாமியாருக்கு எதிராக மாறிய பெண்களை,சாட்சிகளை ,
மக்கள் முன்பாக கலங்க படுத்துவதன் ஊடாக ,அவர்களுக்கு மன,
உளைச்சலை வழங்க முயற்சிகள் மேற்கொள்ள படுகின்றன .
அவ்வாறு புரிந்தால் சாட்சிகள் போலியானவர்கள் என்ற ,
தோற்றத்தை ஏற்படுத்தி சாமியாரை ,
தப்பிக்க வைக்கும் தந்திர குள்ள நரி திட்டமாக இது பார்க்க படுகிறது .
இவ்வாறு தரம் தாழ்தி செய்தி வெளியிட்டு ,சிவப்ரியனை மிரட்டுவதன் மூலம் ,
வழக்கு தொடுத்தவர்களை வாபஸ் வாங்க வைக்கலாம் என, ரூம் போட்டு ,
யோசித்தவர்களின், சில்மிஷங்கள் வெளியே கசிந்துவிட்டதை அவர்கள் அறியவில்லை.
யார் இந்த சிவப்ரியன்? இங்கிலாந்து சட்டத்துக்கு தலை வணங்கி ,
பலரின் வாழ்க்கைக்கு விளக்கேற்றி வைக்கும் இலங்கை ,
தமிழருக்கான ஒரு பொக்கிசம்.
இலங்கை தமிழர்களை குறிப்பாக இளம் பெண்களை ,
சாமியாரிடம் இருந்து காப்பற்ற வேண்டும் என்று,
தனது சொந்த உயிரை பணயம் வைத்த, தனது மக்களுக்காக அயராது உழைத்து வருபவர் ,பிரிட்டன் தமிழர் மத்தியில் தனக்கென இடம் பிடித்தவர் .
சிவப்ரியனைப்பற்றி அவதூறு பரப்புவதன் மூலம் ,
அவரின் தர்ம யுத்தத்துக்கும் ,இலங்கை தமிழருக்கான சேவைகளையும் ,
தடுத்து நிறுத்தலாம் என சாமியாரின் அடியாட்கள் ,அல்லது ஆதரவாளர்கள் பகல் கனவு காண்கிறார்கள்.
இலங்கை தமிழரின் கற்பை சூறையாட நினைக்கும் ,
இந்த போலி மோசடி சாமியாருக்கு சிவப்ரியன் போன்றவர்கள்
சிம்மசொற்பனமே.
லண்டன் காம லீலை சாமியார் பிணையின்றி சிறையில் அடைப்பு -சாட்சிகளை குழப்ப நடவடிக்கை
குறிப்பாக அனைத்து ஈழத்தமிழர்களும் அவரின் பின்னால் அணிதி ரள்வார்கள்,என்பதனை சாமியாருக்கு வக்காளத்து வாங்கும் ,குழுவுக்கு
ஆணித்தரமாக கூறுவதோடு ,இலங்கை மக்களை ஏமாற்றுபவர்களை தமிழர்கள், சட்டத்தின் முன் நிறுத்துவார்கள்.
சாமியார் மீது சுமத்த பட்ட குற்ற சாட்டுக்கள் ,மற்றும் சாட்சிகளினால் வழங்க பட்ட ஆதாரங்கள் யாவையும் ,நீதிமன்றம் குற்றத்தின் தன்மையை ஆராய்ந்து ,முடிவெடுத்து தீர்ப்பினை வழங்கும் .
சிறை சாலையில் பலத்த கண்காணிப்பு
மேலும் பிணை இன்றி ஒருவர் நீதிமன்றின் உத்தரவின் பேரில் அடைக்க படுகிறார் எனின் ,அவர் சிறை சாலையில் பலத்த கண்காணிப்புக்கு உள்ளாக்க
படலாம் ,மேலும்,குற்றத்தின் விடயம் உச்சமாக அமைய பெற்றால் மட்டுமே இந்த பிணை மறுப்பு உத்தரவிட படும் .
அப்படி என்றால் இந்த வழக்கின் தன்மையை இபோழுதே ,
மக்கள் எளிதாக விளங்கி கொள்ள முடியும் .
மேலும் வழக்கு இடம்பெறும் பொழுது வழக்கை முன்னெடுத்து செல்பவர்களுக்கு எதிராக,இவ்வாறான போலிகளால் பரப்ப படும், இவ்வாறான
போலி செய்திகள் ,கவனத்திற்கு உள்வாங்க பட்டு ,அவர்கள் மீதும் ,நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்புக்கள் ஏற்படலாம் என்பதாக விடயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .
சாமியார், ஆலயத்துடன் தொடர்பு கொண்ட பொழுதும் அழைப்புக்கு பதில் ,இல்லை
உங்கள் கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால் எம்மை தொடர்பு கொள்ளுங்கள் ,
இந்தியாவில் கவிழ்ந்த கார் 9 பேர் மரணம்
இந்தியாவில் கவிழ்ந்த கார் 9 பேர் மரணம்
இந்தியா உத்தரகாண்ட பகுதியில் பயணித்த கார் ஒன்று
சாரதியின் கட்டு பாட்டை இழந்து மலையடி பள்ளத்தாக்கில் வீழ்ந்து நொறுங்கியது .
இதன் பொழுது அந்த காரில் பயணித்த ஒன்பது பேர் சம்பவ இடத்தில பலியாகினர் .
மேலும் இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .சாரதியின் அலட்சியமே இந்த விபத்துக்கு கரணம் என தெரிவிக்க படுகிறது .
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
சீனாவில் வெடிப்பு 31 பேர் மரணம்
சீனாவில் வெடிப்பு 31 பேர் மரணம்
சீனாவின் வடமேற்கு நிங்சியா பகுதியில் உள்ள ,
பார்பிக்யூ உணவகத்தில் எரிவாயு வெடித்ததில் 31 பேர் பலியாகியுள்ளனர் .
உணவகத்தில் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு தொட்டியில் ,
கசிவு ஏற்பட்டதால் ஏற்பட்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது .
மேலும் ஏழு பேர் தீக்காயங்கள் மற்றும் கண்ணாடி உடைந்த காயங்களுக்கு,
உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர் ..
இந்த வெடிப்பு சம்பவங்கள் சீனாவை அச்சுறுத்தும் தாக்குதலாக இருக்கலாம் என்பதால் ,தற்போது நாயடு முழுவதும் பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது .
உக்ரைன் போரில் ரஸ்யாவுக்கு ஆதரவாக சீனா ஈடுபட்டு வருவதால் ,இந்த தாக்குதல்கள் இடம்பெற்று இருக்குமோ என்ற சந்தேகத்தை அதிக படுத்தியுள்ளது
ரஷ்யா விமானங்களை துரத்திய நேட்டோ விமானங்கள்
ரஷ்யா விமானங்களை துரத்திய நேட்டோ விமானங்கள்
நேட்டோ வான்வெளிக்கு அருகே பிறந்து கொண்டிருந்த ,
3 ரஷ்ய ராணுவ விமானங்களை ,பிரித்தானிய போர் விமானங்கள் இடைமறித்து துரத்தின சென்றன .
ரஸ்யாவுக்குள் நுழைந்து உளவு பார்த்தலில் நேட்டோ விமானகளும் ஈடுபட்ட வண்ணம் உள்ளன ,அதற்கு பதிலடியாக ரஸ்யாவும் இவ்வாறு உள்நுழைந்தது வேவு பார்க்கும்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது ,
தொடரும் இரு தரப்பு அத்துமீறல் உள்நுழைதல் நடவடிக்கையால் ,
மேலும் பதட்டம் ஏற்பட்டுள்ளது .
துப்பாக்கிச்சூட்டில் சிறுவன் மரணம்
துப்பாக்கிச்சூட்டில் சிறுவன் மரணம்
துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 16 வயதுடைய சிறுவன் ஒருவன் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பன்வெல கெத்பஹூவ பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தையடுத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய சிறுவன் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
துப்பாக்கிச்சூட்டில் சிறுவன் மரணம்
வயல்வெளியிலிருக்கும் குடிசையில் தனித்திருக்கும் போது குறித்த சிறுவன் துப்பாக்கியைக் கையாண்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதையடுத்து, வயலில் அன்றாட வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்த சிறுவனின் பெற்றோர், குடிசைக்கு விரைந்து வந்து பார்த்த போது சிறுவன் காயமடைந்து கிடந்துள்ளான்.
சம்பவம் தொடர்பில் அம்பன்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னேடுத்து வருகின்றனர்.
என்னை சங்கடப்படுத்தாதீர்கள்; பொன்சேகா
என்னை சங்கடப்படுத்தாதீர்கள்; பொன்சேகா
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவீர்களா என்று என்னிடம் தொடர்ந்து கேட்டு என்னை அசௌகரியத்திற்கு உள்ளாக்காதீர்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஊடகவியலாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
என்னை சங்கடப்படுத்தாதீர்கள்; பொன்சேகா
”இங்கிருக்கும் யாரைக் கேட்டாலும் அவர்கள் வேட்பாளராக போட்டியிட விரும்புவதாக தான் கூறுவார்கள்.
அதனால் மீண்டும் அதே கேள்வியை என்னிடம் கேட்டு என்னை சங்கடத்திற்கு ஆளாக்காதீர்கள்” என அவர் ஊடகவியலாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.
அத்துடன் தம்மீது நம்பிக்கை வைத்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி வாக்காளர்களுக்கு கட்சியில் இருந்து பிரிந்து சென்று துரோகம் செய்ய மாட்டேன் என பொன்சேகா வலியுறுத்தினா
மகளுக்கு ஏன் இந்த அநீதி நீதிக் கேட்டு தாய் மன்றாட்டம்
மகளுக்கு ஏன் இந்த அநீதி நீதிக் கேட்டு தாய் மன்றாட்டம்
எனது பிள்ளையை பாடசாலையில் இணைத்தால் தங்களது பிள்ளையை பாடசாலைக்கு அனுப்ப மாட்டோம் என அந்த பாடசாலையில் உள்ள மாணவர்களின் தாய்மார்கள் கூறுகிறார்கள், ஆகையால் என் மகளை சிறிய
பாடசாலையில் சேர்த்துக்கொள்ளுமாறு தாயொருவர், தனது பிள்ளையை தோளில் சுமந்தவாறு ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
அங்கு வந்த பொலிஸார், அப்பெண்ணை அங்கிருந்து செல்லுமாறு வலியுறுத்தினர். எனினும், தாய் தனது வயிற்றில் பிள்ளையை சுமக்க முடியும்
என்றால், தாயால் ஏன்? தோளில் சுமக்க முடியாது என்றும் அப்பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த காணொளி, சமூக வலைத்தளங்களில் பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்த்தது.
எனது பிள்ளையை பெரிய பாடசாலைகளில் இணைத்துகொள்ள வேண்டாம் ஒரு சிறிய பாடசாலையிலாவது சேர்த்துக்கொண்டால் போதும் என்றும் மன்றாடினார்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த தாய் நாட்டில் இயற்றப்பட்ட சட்டமொன்றைக் காரணங்காட்டி எனது பிள்ளையை பெரிய பாடசாலைகளில் இணைத்துக்கொள்ள மறுக்கிறார்கள் என்றார்.
புலிகளின் முக்கிய தலைவருக்கு விளக்கமறியல்
புலிகளின் முக்கிய தலைவருக்கு விளக்கமறியல்
தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான செல்வபாக்கியம் சுதாகரன், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் தலைமறைவாகி இருந்தபோது, இலங்கையால் விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அறிவித்தலின் பிரகாரம், சர்வதேச பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, நாடுக்கு அனுப்பிவைக்கப்பட்ட செல்வபாக்கியம் சுதாகரன் தொடர்பில் சட்டமா அதிபர் விடுத்திருந்த ஆலோசனைக்கு அமையவே அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டதன் பின்னர், தங்களுடைய பிரிவில் 90 நாட்கள் தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தியதாக பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.
புலிகளின் முக்கிய தலைவருக்கு விளக்கமறியல்
எல்.ரி.ரி.ஈ அமைப்பு தொடர்பில் இந்நாட்டு படையினருக்கு தகவல்களை வழங்கிய நபர்களை படுகொலைச் செய்தல் உள்ளிட்டவை இந்த சந்தேகநபர் உள்ளிட்ட குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது.
அதற்கான திட்டங்களை இக்குழுவினர் தீட்டி வந்ததாக விசாரணைகளின் ஊடாக தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.
மூதூர் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட மேற்படி நபர், 2019 ஆம் ஆண்டு நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண பிரபல தலைவரான “இலங்கீத் மாஸ்டர்” என்பவருடனேயே இவர் தப்பியோடியுள்ளார் என்பதும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
இவ்விருவம் இந்நாட்டுக்குள் புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நிதி சேகரித்தல் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்துள்ளனர் என்பதும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என்றும் நீதிமன்றத்தில் அறிக்கையிடப்பட்டுள்ளது.
புதிய ஏவுகணைகளை பயன் படுத்த தயராகும் ரஷ்யா
புதிய ஏவுகணைகளை பயன் படுத்த தயராகும் ரஷ்யா
ரஷ்யாவின் புதிய சர்மட் அணுசக்தி ஏவுகணைகளை
விரைவில் பயன்படுத்தப்படும் என புட்டீன் உறுமியுள்ளார் .
10 அல்லது அதற்கு மேற்பட்ட அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன்
கொண்ட ரஷ்யாவின் புதிய சர்மாட் ,கண்டம் விட்டு கண்டம் பாயும்
ஏவுகணைகள் விரைவில் போர்வலய பகுதிக்கு எடுத்து செல்ல
படவுள்ளது என மிரட்டியுள்ளார் .
இராணுவ அகாடமிகளின் புதிய பட்டதாரிகளுக்கு ஆற்றிய
உரையின் போதே புட்டீன் இதனை தெரிவித்துள்ளார் .
புதிய ஏவுகணைகளை பயன் படுத்த தயராகும் ரஷ்யா
ரஷ்யா தலைநகர் மற்றும் புட்டீன் மாளிகை அருகில் ,உக்ரைன் டிரோன்கள் தாக்குதல் நடத்தியதன் பின்னர் ,இந்த அறிவிப்பை ரஷ்யா வெளியிட்டுள்ளது ,
மேற்குலகை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
உக்ரைன் களத்தில் நேட்டோ அமெரிக்கா பலத்த அடியை வாங்கி சுருண்டுள்ள நிலையில் ,மேலும் நாசகார தாக்குதல்களை நடத்த முயன்று வரும் இவ்வேளையில் ,புட்டீன் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளார் .
ஆற்றில் வீழ்ந்த இளம் பெண்ணை காப்பாற்றிய தமிழ் ஆமி
ஆற்றில் வீழ்ந்த இளம் பெண்ணை காப்பாற்றிய தமிழ் ஆமி
இந்தியா பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில்,
பக்ரா கால்வாயில் தவறுதலாக விழுந்த 19 வயது மாணவியை ,தமிழ் நாட்டை
சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவர் துணிச்சலாக காப்பாற்றிய ,
காணொளிகள் வைரலாகிய வண்ணம் உள்ளன .
இராணுவ வீரர் நவநீதகிருஷ்ணனுக்கு இந்திய ராணுவத்தின்,
தலைமை இராணுவ தளபதி ,அவரது செயலை பாராட்டி அவருக்கு ,
தங்க பதக்கம் வழங்கி கவுரவித்துள்ளார் .
இந்த சிப்பாயின் துணிச்சலான செயலினால் ஒரு இளம் பெண் காப்பாற்ற பட்ட செயலுக்கு மக்கள் வாழ்த்துக்களையும் ,பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர் .
லண்டன் மலையாள பாலியல் சாமியாரால் ஓடும் பக்தர்கள்
லண்டன் மலையாள பாலியல் சாமியாரால் ஓடும் பக்தர்கள்
பிரிட்டன் லண்டன் புறநகர் பகுதியில் முருகனின் பெயரால் ஆலயம் ஒன்றை அமைத்து ,தன்னை தெய்வ புனிதன் என காண்பித்த காம சாமியாரை காப்பாற்றும் நகர்வில்,சில கூலிகளை செயல்பட்டு வருகின்றன .
பெண்களுடன் ஆபாசமாக பேசி நித்தியானந்தா பாணியில் ,சித்து விளையாட்டு ஆடிய, ஓம் ஓம் சர சவண பாலியல் சாமியார் ,தன்னை மனித புனிதாக்க ,பலத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் .
லண்டன் மலையாள பாலியல் சாமியாரால் ஓடும் பக்தர்கள்
அதற்காக பல ஆயிரம் பவுண்டுகளை வாரி இறைத்து ,கூலிகள் ஊடக தன்னை புனிதனாக காண்பிக்க முயல்கிறார் என முன்னால் பக்த கோடிகள் தெரிவிக்கின்றன .
காணொளியில் பெண்ணுக்கு நாக்கை காட்டுவதும் ,மேலும் அந்தரங்க லீலையில் ஈடுபட்ட்தும் ,பல மக்களிடம் மிரட்டி பணம் பறித்தார் என ,பல பிரதான குற்ற சாட்டுக்கள் முன் வைக்க பட்டதாக ,
கருத்துக்கள் ,காணொளிகளாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன .
இவ்வாறான நிலையில் காவல்துறையால் கைது செய்யப்பட்டு ,
விசாரணைகளை எதிர்கொண்டு வரும் சாமியார் செயலினால் ,குறித்த ஆலயத்தின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது .
மேலும் சாட்சிகளை மிரட்டி அதில் இருந்து பின்வாங்க வைக்கும் நடவடிக்கையில் ,விஷமிகள் ஈடுபட்டு வருகின்றனர் ..
மேலும் வழக்கை நடத்தி வரும் நபர்களின் பேருக்கு களங்கத்தை ஏற்படுத்தி ,மனசோர்வை உண்டாக்கும் நடவடிக்கையை திட்டம் இட்டு செய்து வருகின்றனர் .
மேலும் பக்த கோடிகள் வரவு வீழ்ச்சியடைந்து விட்டது .அதனால் அந்த ஆலயத்தின் வியாபாரம் தெட்ஷனை வீழ்ச்சியடைந்து விட்டது .
மேலும் தனது வழக்கை திசை திருப்பவுவதில் இருந்து தப்பபிக்கும் நடவடிக்கையில் ஒன்றாக இது பார்க்க படுகிறது .
அதனால் இந்த புனித புதிய கவர்ச்சி விளம்பரத்தில் ,லண்டன் ஓம் ஓம் புடி நித்தியானந்தா சாமியார் ஈடுபட்டுள்ளார் என மக்கள் பேசி கொள்கின்றனர்
பிரான்சில் பாரிய வெடிப்பு 16 பேர் காயம்
பிரான்சில் பாரிய வெடிப்பு 16 பேர் காயம்
பிரான்ஸ் மத்திய பாரிஸில் புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்ற பாரிய
வெடிப்பு சம்பவத்தில் 16 பேர் காயமடைந்தனர் .
இந்த வெடிப்பு சம்பவமானது ,வாயு கசிவு காரணமாக,
ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது .
நகரின் 5வது வட்டாரத்தில் உள்ள Rue Saint-Jacques இல்
பிற்பகல் வெடிப்பு நிகழ்ந்ததாக தெரிவிக்க பட்டுள்ளது .
இந்த வெடிப்பினால் பல கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்துள்ளன ,
தீ பரவியதை அடுத்து அதனை , சுற்றியுள்ள தெருக்கள் அடித்து மூடப்பட்டன .
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள், இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,இது தீவிரவாத செயலா என்பது தொடர்பில் தெரியவரவில்லை.
வடக்கில் பிறப்பு வீதம் குறைவடைந்து விட்டதால் புலம்பெயர் உறவுகளுக்கு வடக்கு ஆளுனர் விட்ட கோரிக்கை
வடக்கில் பிறப்பு வீதம் குறைவடைந்து விட்டதால் புலம்பெயர் உறவுகளுக்கு வடக்கு ஆளுனர் விட்ட கோரிக்கை
வடக்கில் பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளதாக வடமாகாண ஆளுனர் பீ.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.
இன்று (21.06) கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவிலே பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
வெற்றிடம் என்ற விடயம் கனகராயன்குளம் மகாவித்தியாலத்திற்கு மட்டுமான பிரச்சனை இல்லை. வடக்கு, கிழக்கில் பல இடங்களிலும் காணப்படுகின்ற ஒரு பிரச்சனையாகும்.
வடக்கில் பிறப்பு வீதம் குறைவடைந்து விட்டதால் புலம்பெயர் உறவுகளுக்கு வடக்கு ஆளுனர் விட்ட கோரிக்கை
வடக்கை பொறுத்தவரை சுமார் 194 பாடசாலைகள் மாணவர்கள் இல்லாமையினால் மூடப்பட்டிருக்கின்றது. இதற்கு காரணம் கிராமப்புறங்களில் இருந்து நகரங்களை நோக்கி மாணவர்கள் நகரத் தொடங்கியிருக்கின்றமையும், பிறப்பு வீதம் குறைந்து செல்வதுமே ஆகும்.
இதே நிலை மட்டக்களப்பில் 07 வருடங்கள் அரச அதிபராக கடைமையாற்றும் போதும் ஏற்பட்டது. இதற்கும் காரணமாக பிறப்பு வீதம் குறைவடைந்து வருகின்றமை மற்றும் 01ம் வகுப்பிலே மாணவர்களை அனுமதிப்பதில் சில பாடசாலைகளில் பூச்சிய மட்டத்தில் காணப்படுகின்றதாகவும் பிரதேச செயலாளர்களால் அப்போது தெரிவித்தனர்.
எனவே இந்த விடயங்கள் புலம்பெயர்ந்த சமூகத்தினாலும் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்ற சமூகத்தினாலும் கருத்தில் எடுக்கப்பட வேண்டும். நாங்கள் வாழ வைக்க வேண்டும் என எண்ணுகின்ற எங்களது சமூகம், இந்த பிரதேசம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் உணர வேண்டும் என்பதுடன் இச்சமூகத்தை வாழவைக்கின்ற வழிவகைகளை செய்கின்றவர்களாக நீங்கள் இருக்க வேண்டும்.
இதேவேளை, சில விடயங்களின் புள்ளிவிபரங்கள் இச்சமூகத்திலே அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக இச்சமூகத்திலே விவாகரத்து அதிகரித்தல், குழந்தை பேறு குறைவடைந்தமை, வயது சென்ற திருமணங்கள் அதிகரித்து காணப்படுதல் மற்றும் குடிபோதை, போதைவஸ்து, தற்கொலை போன்ற பல்வேறு சமூக பிரச்சனைகள் அதிகரித்து காணப்படுகின்றன.
எனவே இவற்றை எல்லாம் கடந்து இச் சமூகம் வாழ வேண்டும் என்றால் புலம்பெயர்ந்த சமூகம் ஆற்ற வேண்டிய பணி நிறைய இருக்கின்றது. அதேபோன்று சிறிய பணிகளோடு மட்டும் நின்று விடாது இச்சமூகத்திலே புரையோடிப்போயிருக்கின்ற பல்வேறு உளநல பிரச்சினைகளிற்கும் தீர்வு தேட வேண்டிய காலம் தற்போது நிலவுகிறது.
வெறுமனே உரிமை பிரச்சனையோ, அரசியல் பிரச்சனையோ அல்லாமல் எங்களது பிரச்சனைகள் எது என உணர்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இளைய சமூகத்திடமும், மாணவர்களிடையேயும், சிறுவர்களிடையேயும், குடும்பங்களிடையேயும் புரையோடிப்போயிருக்கின்ற சமூக உளநல பிரச்சினைகளிற்கு தீர்வு காண வேண்டிய தேவையும் அவசரமும் இன்று எங்களிடம் காணப்படுகின்றது.
அதை இங்கே கூடியிருக்கின்ற புலம்பெயர் சமூகங்களும், உள்ளூர் சமூகங்களும் இணைந்து செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மற்றும் பண்டாரவன்னியன் ஆகியோரும் சிலைகள் வவுனியாவில் திறந்து வைப்பு
இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மற்றும் பண்டாரவன்னியன் ஆகியோரும் சிலைகள் வவுனியாவில் திறந்து வைப்பு
வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவில் இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மற்றும் வன்னி மன்னன் பண்டாரவன்னியன் ஆகியோரின் சிலைகளும் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பிரதமவிருந்தினராக வடமாகாண ஆளுனர் பீ.எஸ்.எம். சாள்ஸ் கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட பாடசாலையின் பிரதான நூழைவாயிலினை திறந்து வைத்ததுடன், கௌரவ விருந்தினர்களான வவுனியா வடக்கு வலயக்கல்வி பணிப்பாளர் லெனின் அறிவழகன், மற்றும் பாடசாலையின் பழைய மாணவர் த.இராசரத்தினம் ஆகியோரால் திருவள்ளுவர், பண்டாரவன்னியன் மற்றும் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி மறைந்த கலாநிதி அப்துல்கலாம் ஆகியோரின் சிலைகளும் திறந்து வைக்கப்பட்டிருந்தது.
இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மற்றும் பண்டாரவன்னியன் ஆகியோரும் சிலைகள் வவுனியாவில் திறந்து வைப்பு

இதன்போது சாதாரண தரம், உயர்தரம் மற்றும் விளையாட்டுக்களில் சிறந்த பெறுபேறுகளை பெற்றவர்களிற்கான கௌரவிப்புகளும் இடம்பெற்றிருந்தது.

பாடசாலை அதிபர் கோ.குலேந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், பாடாசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.






































