உக்ரைன் குளக்கட்டு உடைப்பில் சிக்கி 109 மக்கள் மாயம்
Posted in உலக செய்திகள்

உக்ரைன் குளக்கட்டு உடைப்பில் சிக்கி 109 மக்கள் மாயம்

உக்ரைன் குளக்கட்டு உடைப்பில் சிக்கி 109 மக்கள் மாயம்

உக்ரைன் கார்க்கோவ்க குளக்கட்டு உடைப்பில்
சிக்கி இதுவரை 109 மக்கள் காணமல் போயுள்ளனர் .

இவ்வாறு காணாமல் போனவர்கள்,
யாவரும் இறந்திருக்க கூடும் என அஞ்ச படுகிறது .

தகவல் தெரிந்தும் உக்ரைன் ஆளும் அரசு அதனை ,
மூடி மறைத்து வருவதான குற்ற சாட்டுக்கள் முன் வைக்க
பட்டுள்ளன .

தமது குளக்கட்டு அணையை ,தாமே உடைத்து விட்டு ,
அதனை ரஸ்யா உடைத்ததாக உக்ரைன் தெரிவித்துவருவதாக ,
குற்ற சாட்டு வலுப்பெற்று வருகிறது .

உக்ரைன் குளக்கட்டு உடைப்பில் சிக்கி 109 மக்கள் மாயம்

எனினும் இந்த கூற்றை உக்ரைன் மறுத்து வருகிறது ,
தொடர்ந்து உக்ரைன் கிழக்கு மற்றும் கீவ் பகுதிகள் மீது
கடும் வான்வழி ஏவுகணை தாக்குதலை ரஷ்ய நடத்திய வண்ணம் உள்ளது .

மேற்கு நாடுக்ளின் ஆயுத கூடங்களை தேடி அழிக்கும் நடவடிக்கையில் ,
ரஷ்யா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது .

குறிப்பாக கைமாஸ் மற்றும் புயல் நிழல் ஏவுகணைகளை ,
இலக்கு வைத்தது கடுமையான தாக்குதலை நடத்துகிறது .

உக்ரைன் விமான தயாரிப்பு மையம் மற்றும் பீரங்கி குண்டு தயரிப்பு மையம் என்பன
அழிக்க பட்டுள்ளதாக, ரஷ்யா ஆதரவு தரப்பு தெரிவித்துள்ளது .

மேற்குலக நாடுகளின் ஆயுதங்கள் தமக்கு இழப்பை வழங்கும் என்பதால் ,
இந்த தேடி அழிப்பு நடவடிக்கையை, ரஸ்யா தொடர்ந்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

இஸ்ரேலை தாக்கிட ஈரானில் கமாஸ் தளபதிகள் பேச்சு
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்கிட ஈரானில் கமாஸ் தளபதிகள் பேச்சு

இஸ்ரேலை தாக்கிட ஈரானில் கமாஸ் தளபதிகள் பேச்சு

இஸ்ரேல் இராணுவம் புரிந்து வரும் தொடர் அடக்குமுறை ,மக்கள் படுகொலையை தடுக்க ஈரான் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது .

ஈரான் இராணுவ தளபதிகள் தொடர் படுகொலைகளுக்கு ,தகுந்த பதிலடி வழங்கிட ,ஈரான் துடிக்கிறது .அதற்கு தமது வலது கையாக விளங்கும் காமாஸ் போராளிகள் அமைப்பை தயார் செய்து வருகிறது .

No posts found.
வெடித்து சிதறிய ரஷ்யா ஆயுத தொழில் சாலை பலர் மரணம்
Posted in உலக செய்திகள்

வெடித்து சிதறிய ரஷ்யா ஆயுத தொழில் சாலை பலர் மரணம்

வெடித்து சிதறிய ரஷ்யா ஆயுத தொழில் சாலை பலர் மரணம்

ரஷ்ய துப்பாக்கித் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ,
நான்கு பேர் கொல்லப்பட்டதாக அரச ஊடகம் தெரிவித்துளளது .
இங்கு இடம்பெற்ற வெடி விபத்துக்கான கரணம் தொடர்பாக தெரிவிக்க படவில்லை

மாஸ்கோவிற்கு தென்கிழக்கே சுமார் 400 கிமீ தொலைவில் உள்ள ,
டாம்போவ் பகுதியில் உள்ள ஆலையிலேயே ,
இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர்

உக்ரைன் மீதான ரஷ்யா ஆக்கிரமிப்பு போரை அடுத்து ,
ரஸ்யாவுக்கு உள்ளே ,இவ்வாறான குண்டு வெடிப்புக்கள் ,
தீ பற்றால் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

No posts found.
கனடாவில் வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி
Posted in உலக செய்திகள்

கனடாவில் வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி

கனடாவில் வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி

கனடாவில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பயிற்சியில் ஈடுபட்ட ,
இராணுவ ஹெலிகாப்டர் ஒட்டாவா ஆற்றில் விழுந்ததில்,
அவ்வேளை அதில் பயணித்த இரண்டு பணியாளர்கள் காணாமல் போயுள்ளனர் ,மேலும் இருவர் காயங்களுக்கு உள்ளான் நிலையில் உயிருக்கு போராடிய வண்னம் உள்ளனர் .

குறித்த உங்கள வானூர்தியில் நான்கு கனேடிய இராணுவத்தினர் ,
இருந்தனர் என்று தேசிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார் .

காணாமல் போன இரண்டு இராணுவத்தினரை தேடும் பணிகள்,
தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,
இந்த வானூர்தி விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .

தொடந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

No posts found.
வீடுகளின் மீது குண்டுத்தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாண வீதியில் 2 வைத்தியர்கள் வீடுகளின் மீது குண்டுத்தாக்குதல்

யாழ்ப்பாண வீதியில் 2 வைத்தியர்கள் வீடுகளின் மீது குண்டுத்தாக்குதல்

யாழ்ப்பாணம் கந்தர்மடம் பழம் வீதியில் இரு மருத்துவர் வீடுகள் மீது குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது .

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட காணிப்பிணக்கு காரணமாக இந்த பெட்ரோல் குண்டு தாக்குதல் இடம் ம்பெற்றுள்ளது .

குறித்த சம்பவத்தை அடுத்து போலீசாரை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் ,

No posts found.
கிழக்கு மாகாண ஆளுநர் ஜப்பானுக்கு விஜயம்
Posted in இலங்கை செய்திகள்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜப்பானுக்கு விஜயம்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜப்பானுக்கு விஜயம்

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், மியாசாகி பாராளுமன்ற உறுப்பினர் ஷிம்பே

மட்ஷிதாவை சந்தித்து கிழக்கு மாகாணம் மற்றும் மலையகத்தில் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பது குறித்து கலந்துரையாடினார்.

இலங்கையின் நீண்டகால நண்பரான மியாசாகியின் பாராளுமன்ற உறுப்பினர் ஷிம்பே மட்ஷிதாவின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஜப்பான் பாராளுமன்றத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

ஜப்பான் பாராளுமன்றத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநர் செந்தில் தொண்டமான், இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தல் மற்றும் இரு தரப்பு சுற்றுலாத்துறையை ஊக்குவித்தல் குறித்தும் கலந்துரையாடினார்.

கிழக்கு மாகாண ஆளுநர் ஜப்பானுக்கு விஜயம்

ஜப்பானில் உள்ள மியாசாகி கடற்கரைக்கு வருகை தரும் உலாவர்கள் (sufers) ஊடாக இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள உலகத் தரம் வாய்ந்த உலாவல் இடங்களில் (surf-spot) ஒன்றாக அருகம்பே கடற்கரையை ஊக்குவிக்க கடற்கரை அதிகாரிகள் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.

அத்துடன், அருகம்பே போன்ற உலாவல் இடங்களில் (surf-spot) சமமான ஆற்றலைக் கொண்ட ஜப்பானின் மியாசாகி கடற்கரையை ஊக்குவிப்பது போல், அருகம்பே கடற்கரையை உள்ளூர் அதிகாரிகளால் சர்வதேச உலாவர்களுக்காக (Surfers) ஊக்குவிக்கப்படும் எனவும் ஷிம்பேய் மட்ஷிதாவிடம் கூறினார்.

அருகம்பே கடற்கரையை சர்வதேச உலாவர்களுக்கு (Surfers) ஊக்குவிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஷிம்பேய் மட்ஷிதா ஆளுநரிடம் உறுதியளித்தார்.

மேலும் ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளுக்காக கிழக்கு மாகாணம் மற்றும் மலையகத்தின் சுற்றுலாத் தளங்களை மேம்படுத்துவது குறித்தும் ஆளுநர் கலந்துரையாடினார். அதற்கும் ஷிம்பேய் மட்ஷிதா தனது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.

No posts found.
ஒருவர் சுட்டு கொலை | இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

ஒருவர் சுட்டு கொலை

கொட்டாவை தர்மபால கல்லூரிக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி சூடடில் ஒருவர் படுகொலை செய்ய பட்டுள்ளார் .

பலியானவர் 33 வயதுடைய இளம் வாலிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளது ,இந்த துப்பாக்கி சூட்டு படுகொலைக்கான காரணம் உடனடியாக தெரியவாவில்லை .

போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

No posts found.
மலையக மக்களின் வாக்குகளை ஏலம் போட இடமளியேன்
Posted in இலங்கை செய்திகள்

மலையக மக்களின் வாக்குகளை ஏலம் போட இடமளியேன்

மலையக மக்களின் வாக்குகளை ஏலம் போட இடமளியேன்

இந்த நாட்டில் ஒட்டு மொத்தமாக மலையக மக்களின் 17 இலட்சம் வாக்குகள் இருப்பதாகவும்இந்த வாக்குகள் இல்லாமல் எதிர்காலத்தில் யாரும் ஆட்சியமைக்கவோ அல்லது ஜனாதிபதி


ஆகவோ முடியாது என்றும் தெரிவித்த பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல்சுரேஷ் இந்த வாக்குகளை எதிர்காலத்தில் எவரும் ஏலம் போட இடமளிக்க மாட்டேன் என்று தெரிவித்தார்.

மத்துரட்ட பெருந்தோட்ட நிர்வாகத்தை பொறுப்பேற்று முகாமைத்துவம் செய்யும் ஹைபொரஸ்ட் தோட்ட நிர்வாகம் அத் தோட்ட தொழிலாளர்களுக்கு

இழைத்து வரும் பல்வேறு அநீதிகளுக்கு தீர்வு காணும் வகையில் நுவரெலியா மாவட்ட தொழில் திணைக்களத்தில் திங்கட்கிழமை (19) காலை பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது.

மலையக மக்களின் வாக்குகளை ஏலம் போட இடமளியேன்

இதையடுத்து இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவித்ததாவது,

“இன்று இந்த நாட்டில் வாழும் எமது ஒட்டு மொத்த மலையக மக்கள் பொருளாதார சிக்கலுக்கு முகம் கொடுத்துள்ள அதேநேரத்தில் கல்வியில் சிறந்தவர்களாக, சிந்தித்து செயலாற்றக்கூடிய சக்தியுள்ளவர்களாகவும் இருக்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த காலங்களைப் போல எமது மலையக மக்களின் வாக்குகளை யாரும் விலை பேசிட முடியாது. குறிப்பாக மலையக மக்களின் வாக்குகளை விலை பேசிட இடம் கொடுக்க மாட்டேன்.

ஆகவே மலையக மக்களுடைய இந்த 17 இலட்சம் வாக்குகள் இல்லாமல் யாரும் இந்த நாட்டில் அரசாங்கத்தை அமைக்கவோ அல்லது ஜனாதிபதி ஆகவோ முடியாது என்று நாம் ஒரு தீர்க்கமான முடிவு ஒன்றை எடுப்போம்.

அதேநேரத்தில் எம்மிடத்திலும் சில குறை நிறைகள் உள்ளது. அவற்றை நிவர்த்தி செய்து கொண்டு எமது பிரதநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும்.

அத்துடன் எமது மலையக மக்களுக்கும், மலையகம் சார்ந்த ஏனைய மக்களுக்கும் வாழ்வாதாரம் உட்பட பொருளாதார பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ள இந்த நிலையில் தேர்தல் ஒன்று பற்றி சிந்திக்க முடியாதுள்ளது.

மலையக மக்களின் வாக்குகளை ஏலம் போட இடமளியேன்

அதேநேரத்தில் பெருந்தோட்ட மலையக மக்களுக்கும் மலையகத்தை சார்ந்த ஏனைய மக்களுக்கும் சமுர்த்தி உதவிகள், உலக வங்கியால் வழங்கப்படும் விசேட கொடுப்பனவுகள், வருமானம் குறைந்தவர்களாக வழங்கப்படும் சலுகைகள் எமது மக்களுக்கு வழங்குவது அரிதாக உள்ளது.

ஆகவே மலையக மக்கள் யாவரும் வறுமை காட்டுக்கு கீழ் உள்ளவர்களாக காணப்படுவதால் நாட்டில் ஏனைய மக்களுக்கு வழங்கப்படும் உதவு பட்டியலில் இவர்களும் உள்ளாக்கப்பட்ட வேண்டும் என ஜனாதிபதியிடம் வேண்டுகோள் முன் வைத்துள்ளேன்.

அதேநேரம் ஜனாதிபதி இவ்விடயம் தொடர்பாக அதிகாரிகளை நியமித்துள்ளார்.

எனவே எதிர்காலத்தில் மலையகத்தை சார்ந்த மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், சமுர்த்தி அதிகாரிகள் மற்றும் கிராம உத்தியோகஸ்தர்கள் பொறுப்புடன் செயலாற்றுவார்கள் என நம்புகிறேன்.

இவ்வாறு நியமிக்கப்படுவோர் தமது பொறுப்புகளை மீறும் பட்சத்தில் அது ஒரு பாரிய பாதிப்பை இந்த நாட்டில் ஏற்படுத்தும். அது தேர்தலிலும் இருக்கலாம் அல்லது வேறு ஏதேனும் விடயங்களில் இருக்கலாம்.

எனவே எமது மக்களின் வாழ்வாதார பிரச்சினை பொருளாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி பிரச்சின்களுக்கு சிறந்த தீர்வு காணப்படாமல் தேர்தல் ஒன்றுக்கு சிந்திக்க முடியாது” என்றார்

No posts found.
நாடெங்கும் மழை மக்களுக்கு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

நாடெங்கும் மழை மக்களுக்கு எச்சரிக்கை

நாடெங்கும் மழை மக்களுக்கு எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யும். ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு

மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடெங்கும் மழை மக்களுக்கு எச்சரிக்கை

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம், அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No posts found.
பிரித்தானிய தமிழர்களுக்கு பெருமை சேர்த்த சிறுமி
Posted in இலங்கை செய்திகள்

பிரித்தானிய தமிழர்களுக்கு பெருமை சேர்த்த சிறுமி

பிரித்தானிய தமிழர்களுக்கு பெருமை சேர்த்த சிறுமி


ஜோர்ஜியாவில் நடைபெற்ற 8 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான பிரிவில் வாகையாளராக பிரித்தானியா வாழ் தமிழ் சிறுமி முதலாவது இடம் பிடித்துள்ளார்.

லண்டன் கரோ பகுதியை சேர்ந்த போதனா சிவானந்தன் பெண்களுக்கான பிரிவில் வாகையாளராக முதலாவது இடம் பிடித்துள்ளார்.

உலகளவில் நடைபெற்ற இத் தொடரின் Rapid chess மற்றும் Blitz chess ஆகிய இரு வகையான போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.

போதனா கலந்து கொண்ட அனைத்துப் போட்டிகளிலுமே வென்றுள்ளார்.தமிழ்நாட்டை சேர்ந்த சிவானந்தன் தம்பதியின் மகளான

போதனா பல அபார திறமைகளை வெளிக்காட்டி வருவதாக பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

நன்றி ஈழம் ரஞ்சன்

No posts found.
வங்கிகள் ஓடாது பணத்தை வைப்பு செய்யுங்கள் அரசு
Posted in இலங்கை செய்திகள்

வங்கிகள் ஓடாது பணத்தை வைப்பு செய்யுங்கள் அரசு

வங்கிகள் ஓடாது பணத்தை வைப்பு செய்யுங்கள் அரசு

இலங்கையில் உள்ள வங்கிகள் நிதி சீராக உள்ளது ,அவற்ற்றுக்கு பாதிப்பு ஏற்பாடாது எனவும் ,வங்கிகள் நாட்டை விட்டு ஓடாது என,ஆளும் அரசின் முக்கிய அமைச்சர் ஒருவர் முழங்கியுளளார் .

இவரது இந்த உத்தரவாத கருத்தின் மூலம் ,இலங்கையில் வாங்கி ஒன்று மிக மோசமான நிதி நெருக்கடிக்கு ,உள்ளாகி போவதாக மறைபொருளில் கூறியுள்ளார் .

வங்கிகள் ஓடாது பணத்தை வைப்பு செய்யுங்கள் அரசு

மக்கள் வங்கிகளில் இருந்து பணத்தை மீள பெற்று வருவதால் ,வங்கிகள் நெருக்கடியை சந்தித்து வருகின்றன .

வட்டி வீதங்கள் அதிகமாக வழங்க படுகின்ற பொழுதும் ,மக்கள் அச்ச நிலை காரணமாக பணத்தினை மீள பெற்று வருகின்றமை ,நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது .

No posts found.
மருத்துவர்கள் அடிதடி உடைந்த மண்டை
Posted in இலங்கை செய்திகள்

மருத்துவர்கள் அடிதடி உடைந்த மண்டை

மருத்துவர்கள் அடிதடி உடைந்த மண்டை

இலங்கை அனுராதபுரம் மருத்துவ மனையில் மூத்த மருத்துவர்கள் இவருக்கு இடையில் , ஏற்பட்ட மோதல் சம்பவம் கை கலப்பில் முடிந்துள்ளது .

இரு மருத்துவர்களுக்கு இடையில் நீண்டகாலமாக உள்ளக பனிப்போர் இடம்பெற்ற வண்ணம் இருந்துள்ளது ,அதுவே ஒருநாள் வெடித்து கிளம்பி அடிதடியில் முடிந்துள்ளது,.

மருத்துவர்கள் அடிதடி உடைந்த மண்டை

பொறுப்பதிகரியாக விளங்கும் மருத்துவர் , நேரம் ,மற்றும் மேலதிக வேலை நேரம் என்பனவற்றை எல்லாமே வெட்டியுளளார் ,மேலும் பல நெருக்கடிகளை வழங்கியுள்ளார் .

இதனால் ஆத்திரம் உற்ற அவர் தாக்குதலை நடாத்தியுள்ளார் ,தற்போது இருவரும் விசாரணைகளிற்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர் .

ஒருவருக்கு சுகாதார அமைச்சர் நெருக்கமாக உள்ளதால் ,மற்றவர் பழிவாங்க படலாம் என எதிர் பார்க்க பாடுகிறது .

No posts found.
பலாலி விமான நிலையம் விஸ்தரிப்பு புதிய ஓடுபாதை
Posted in இலங்கை செய்திகள்

பலாலி விமான நிலையம் விஸ்தரிப்பு புதிய ஓடுபாதை

பலாலி விமான நிலையம் விஸ்தரிப்பு புதிய ஓடுபாதை

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதைகள் ,புனரமைக்க பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது .

அதற்கு ஏற்ப புதிய ஓடுபாதை மற்றும் ,900 ஈட்டர் ஓடுபாதை புனரமைப்பு என்பன இடம்பெற் உள்ளதாக அறிவித்துள்ளது .

உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பும் ,அதனால் ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் நோக்குடன் இந்த விஸ்தரிப்பு இடம்பெறுகிறது .

இந்த புதிய அபிவிருத்திக்கு என 168 மில்லியன் ஒதுக்க பட்டுள்ளது .இதில் பல மில்லியன் பொறுப்புள்ளவர்களினாலே ஒதுக்க படும் என எதிர் பார்க்க படுகிறது .

No posts found.
வீழ்ந்த இராணுவ உலங்குவானூர்தி
Posted in உலக செய்திகள்

வீழ்ந்த இராணுவ உலங்குவானூர்தி

வீழ்ந்த இராணுவ உலங்குவானூர்தி

ஜோர்டான் இராணுவத்தின் இராணுவ ஹெலிகாப்டர் , ஒன்று
வழமையான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது
திடீரென வீழ்ந்து நொறுங்கியது .

ராயல் ஜோர்டானிய விமானப்படைக்கு சொந்தமான ,
கோப்ரா வகை ராணுவ ஹெலிகாப்டர்,வீழ்ந்து நொறுங்கிய போதிலும்,
மக்களுக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை .

பலத்த காயங்களுக்கு உள்ளான விமானிகள் இருவரும்,
மீட்க பட்டு மருத்துவ மனையில்
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

12 வயது சிறுமியுடன் ஓடிய 28 வயது காதலன்
Posted in இலங்கை செய்திகள்

12 வயது சிறுமியுடன் ஓடிய 28 வயது காதலன்

12 வயது சிறுமியுடன் ஓடிய 28 வயது காதலன்

12 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியை கட்டுப்படுத்த முடியவில்லை என அவரது பெற்றோர் வெலிமடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளாா்.

விசாரணைகளின் பின்னர் குறித்த சிறுமி, சிறுவர் சீர்திருத்த நிலையத்தில் வைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

இருந்த போதிலும், நன்னடத்தை அதிகாரியிடமிருந்து பெறப்பட்ட உத்தரவின் அடிப்படையில் சிறுமியின் தந்தை மீண்டும் ஒருமுறை அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றிருந்தாா்.

12 வயது சிறுமியுடன் ஓடிய 28 வயது காதலன்

இருந்த போதிலும், கடந்த ஜூன் மாதம் 11 ஆம் திகதி சிறுமி வெலிமடை நகரில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சிறுமியை அழைத்துச் சென்று பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில், பொலிஸாரின் சந்தேகத்தின் அடிப்படையில் சிறுமியை மருத்துவரிடம் ஆஜர்படுத்தியபோது, ​​சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டது.

இதையும் மீறி, ஜூன் மாதம் 18ம் திகதி, சிறுமி மீண்டும் நகாில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அதிகாரிகள் அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

பின்னா் இது குறித்து பெற்றோருக்குத் தெரியப்படுத்தியதையடுத்து பொலிஸ் நிலையத்திற்கு வந்த தாயும், தந்தையும் பொலிஸ் நிலையத்தினுள் உள்ள பொது மலசலகூடத்தில் விஷத்தினை குடித்துள்ளனா்.

இதனையடுத்து அவா்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

12 வயது சிறுமியுடன் ஓடிய 28 வயது காதலன்

எனினும் சிகிச்சை பெற்று வந்த சிறுமியின் தந்தை சிகிச்சை முடியும் முன்னரே வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், தாய் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சிறுவர் சீர்திருத்த நிலையத்தில் வைக்கப்பட்ட சிறுமியை பெற்றோர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்ற போதும் உரிய முறையில் பராமரிக்க முடியாத நிலையில் உள்ளதாக தொிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பாலியல் துஷ்பிரயோகம் தொடா்பில் சந்தேகத்தில் 28 வயதான நபரை வெலிமடை பொலிஸார் கைது செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளாா்.

குறித்த நபர் எதிா்வரும் ஜூலை மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

No posts found.
இஸ்ரேல் வெறியாட்டம் ஈரான் எச்சரிக்கை
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் வெறியாட்டம் ஈரான் எச்சரிக்கை

இஸ்ரேல் வெறியாட்டம் ஈரான் எச்சரிக்கை

பல்ஸதினம் மேற்குக்கரையில் மக்கள் அகதிகள் முகாமின் மீது ,
அத்துமீறி நுழைந்து ,வன்முறை தாக்குதலை நடத்திய இஸ்ரேல் அரச படைகளின்,மிலோச்சத்தனமான செயலுக்கு ,ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது .

இங்கு நடந்த இஸ்ரேல் இராணுவ தாக்குதலில் நல்லவர் பலியாகியும் ,
45 பேர் காயமடைந்துள்ளனர் .

மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை குறித்து கவலை
Posted in இலங்கை செய்திகள்

மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை குறித்து கவலை

மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை குறித்து கவலை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக்கூறல் தொடர்பான சில முன்மொழிவுகளை இலங்கை அரசாங்கம் வருத்தத்திற்குாிய வகையில் நிராகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த பிரேரணைகள் நிராகரிக்கப்பட்ட போதிலும், தமது பேரவையின் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக இலங்கைக்கு விஜயம் செய்து தொடர்புகளை பேணி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த தசாப்தத்தில் பேரவையின் பல பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்து அவர்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அதிகாரிகளை ஊக்குவித்துள்ளதாக மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை குறித்து கவலை

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடரை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

ஜெனீவாவில் நேற்று (19) ஆரம்பமான இந்த அமர்வு எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இலங்கை தொடர்பான உலகளாவிய காலமுறை மீளாய்வு தொடர்பான செயற்குழுவின் அறிக்கையும் இங்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது.

No posts found.
கண்டி வீதியில் இடம்பெற்ற கோர விபத்து
Posted in இலங்கை செய்திகள்

கண்டி வீதியில் இடம்பெற்ற கோர விபத்து

கண்டி வீதியில் இடம்பெற்ற கோர விபத்து

கொழும்பு – கண்டி வீதியில் நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (20) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 5 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

கொழும்பில் இருந்து கண்டி திசை நோக்கி இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று எதிர்திசையில் வந்த பௌசருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கண்டி வீதியில் இடம்பெற்ற கோர விபத்து

விபத்தின் போது, ​​வேனில் 6 இராணுவ அதிகாரிகள் இருந்ததாகவும், அவர்களில் 5 பேர் காயமடைந்து வத்துப்பிட்டியல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு

பின்னா், மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றியனுப்பப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகிறது.

பொல்ஹேன்கொடை இராணுவ முகாம் அதிகாரிகள் குழுவொன்று கிரிதலே முகாமிற்கு கடமைகளுக்காக சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடா்பில் பௌசரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.
கிளிநொச்சி மாணவி சாதனை
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாணவி சாதனை

கிளிநொச்சி மாணவி சாதனை

கிளிநொச்சி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த மாணவி டி சனுஜா, இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெற்ற இந்திய ஓபன் சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் -2023 போட்டியில் 3வது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இந்தப் போட்டி, ஜூன் 17/18 ஆம் திகதிகளில் நடைபெற்றது.

No posts found.
சீமெந்து விலை அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

சீமெந்து விலை அதிகரிப்பு

சீமெந்து விலை அதிகரிப்பு

சீமெந்து மீதான இறக்குமதி வரியை அரசாங்கம் திருத்தியமைத்துள்ள நிலையில், ஜூன் 17ஆம் திகதி முதல் சீமெந்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கூற்றுப்படி, 1 கிலோ கிராம் செயற்கை வண்ணமூட்டப்பட்ட மற்றும் நிறமற்ற சீமெந்துக்கு விதிக்கப்பட்ட CESS வரியானது 3 ரூபாயிலிருந்து ரூ. 5.00 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சீமெந்து விலை அதிகரிப்பு

50 கிலோ மற்றும் அதற்கும் குறைவான பொதிகளில் இறக்குமதி செய்யப்படும் மற்ற போர்ட்லேண்ட் சீமெந்துக்கான செஸ் வரி ரூ. 5 இலிருந்து ரூ. 8.00 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேவேளை 50 கிலோவுக்கு மேலான சீமெந்துக்கான செஸ் வரி ரூ. 3.00 முதல் ரூ. 5 வரை உயர்த்தப்பட்டுள்ளது

No posts found.