கென்யாவில் பாரிய வீதி விபத்து 48 பேர் மரணம்
கென்யாவில் பாரிய வீதி விபத்து 48 பேர் மரணம்
தென்மேற்கு கென்யாவில் வாகனங்களை ஏற்றி சென்று கொண்டிருந்த ,
டிராக் ஒன்று விபத்தில் சிக்கியதால் ,48 மக்கள் பலியாகியுள்ளனர்
கென்யாவின் மூன்றாவது பெரிய நகரமான நகுருவை கெரிச்சோ நகரத்துடன்
இணைக்கும் நெடுஞ்சாலை பகுதியில் லண்டியானி டிரக் சென்று கொண்டிருந்தது.
அப்பொழுது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து. பல மினிபஸ்கள்,
தனியார் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை மோதியதில் இந்த் பெரும் துயரம் இடம்பெற்றுள்ளது .
கென்யாவில் பாரிய வீதி விபத்து 48 பேர் மரணம்
இந்த விபத்தில் 48 பேர் பலியாகியும் ,மேலும்பலர் காயமடைந்துள்ளனர் .
10 க்கு மேற்பட்ட வாகனங்கள் ,மோட்டார் சைக்கிள்கள் என்பன ,
மோதி சிதறியுள்ள காட்சிகள் பார்ப்பவர்களை மிரள வைக்கிறது .
வாகன இடிபாடுகளில் இருந்து சடலங்கள் மீட்க பட்ட வண்ணம் உள்ளன .
இந்த ஆண்டில் இடம்பெற்ற மிக பெரும் விபத்தாக இது பதிய பெற்றுள்ளது .
Overlay6
ரஷ்ய ஆயுத கூடங்கள் அழிப்பு உக்ரைன் முழக்கம்
ரஷ்ய ஆயுத கூடங்கள் அழிப்பு உக்ரைன் முழக்கம்
ரஷ்யா இராணுவத்தின் பின்தள விநியோக சாலையில் ,
மறைத்து வைக்க பட்டிருந்த ஆயுத சேமிப்பு கூடங்கள் மீது ,
நடத்த பட்ட தாக்குதலில் ,அவை அழிக்க பட்டுள்ளதாக ,
உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது .
ஆறு ஆயுத கூடங்கள் இவ்வாறு முற்றாக எரியும் காட்சிகளை ,
உக்ரைன் இராணுவம் வெளியிட்டுள்ளது ,
இந்த தாக்குதலில் மிக பெரும் இழப்பை ரஷ்யா சந்தித்து ,
உள்ளதாக உக்ரைன் தெரிவிக்கிறது ,
ரஷ்ய ஆயுத கூடங்கள் அழிப்பு உக்ரைன் முழக்கம்
மேலு உக்ரைன் பல பகுதிகளை குறைவித்து ரஷ்யா அகோர ,
தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
இதில் பல அடுக்கு மாடி கட்டடங்கள் வர்த்தக மையங்கள் ,
என்பன இடித்து எரிகின்றன .,அப்பாவி மக்களும் காயமடைந்துள்ளனர் .,
மக்கள் வாழ்விடங்கள் அருகில் ஆயுத தொழில் சாலிகள் ,
உக்ரைன் இராணுவம் நிறுவி வைத்துள்ளது எனவும் ,அதனை தாக்கியதில்
இந்த மக்களும் பாதிக்க பட்டுள்ளதகாக எதிர் தரப்பு சாடுகிறது .
தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
இஸ்ரேலுக்கு எதிராக பல நாடுகள் தடை
பழிவாங்கிய ரஷ்யா 2 உக்ரைன் ஜெனரல்கள் மரணம்
பழிவாங்கிய ரஷ்யா 2 உக்ரைன் ஜெனரல்கள் மரணம்
உக்ரேனிய நகரமான கிராமடோர்ஸ்க் மீது நடத்திய தாக்குதலில்,
இரண்டு உக்ரேனிய ஜெனரல்கள் உள்ளிட்ட 50 அதிகாரிகள் வரை,
கொல்லப்பட்டதாக ரஷ்யா இராணுவம் தெரிவித்துள்ளது .
மேலும் இவர்க்ளுக்கு ஆதரவாவாக போராடிய 20 ,
வெளிநாட்டு கூலிப்படையினர் மற்றும் ஆலோசகர்களும் ,
கொல்லப்பட்டதாக ரஷ்யா இராணுவம் அறிவித்துள்ளது
பழிவாங்கிய ரஷ்யா 2 உக்ரைன் ஜெனரல்கள் மரணம்
ரஷ்யா படைகள் நடத்திய ஏவுகணை மற்றும் விமான தாக்குதலில் ,
உக்ரைன் படைகளுக்கு பலத்த இழப்பது ஏற்பட்டுள்ளது .
இதுவரை ரஷ்யா இராணுவத்தினருக்கு பாரிய தோல்வியென,
உக்ரைன் மற்றும் நட்டோ படைகள் தொடர்ந்து கூறி வருகின்றன .
ரஸ்யாவினால் ஆக்கரமிக்க பட்ட பகுதிகளை ,
இதுவரை மீட்க முடியாது ,உக்ரைன் திணறிய வண்ணம் உள்ளது
நவீன ஆயுதங்கள் வழங்க பட்ட பொழுதும் ,நேட்டோ இராணுவம் களத்தில் ,
போராடுகின்ற பொழுதும் ,வெற்றியை இழந்து உக்ரைன் ,
தவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .
Overlay6
மனித எச்சங்கள் காணப்படும் பகுதியை பாதுகாக்குமாறு பணிப்பு
மனித எச்சங்கள் காணப்படும் பகுதியை பாதுகாக்குமாறு பணிப்பு
முல்லைத்தீவில் மனித எச்சங்கள் காணப்படுகின்றன பகுதியில் எதிர்வரும் 6 ஆம் திகதி அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் (29) மாலை முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தினை தோண்டியபோது, நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டன.
இந்த சம்பவத்தினை தொடர்ந்து கொக்கிளாய் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து கொக்குளாய் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்தனர் .
மனித எச்சங்கள் காணப்படும் பகுதியை பாதுகாக்குமாறு பணிப்பு
இது தொடர்பாக நேற்று (30) நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், நேற்று(30) மாலை 2.30 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா குறித்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார்
இதன்போது குறித்த மனித எச்சங்கள் காணப்படுகின்றன பகுதியில் எதிர்வரும் 6 ஆம் திகதி அகழ்வு பணிக்கு நீதிபதி உத்தரவிட்டதோடு, அதற்குரிய நபர்களுக்கான உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறும் அதுவரை எச்சங்கள் அழிவடையாமால் பாதுகாக்குமாறும் கொக்கிளாய் பொலிசாருக்கு பணிப்பு விடுத்தார்.
இது பெண் போராளிகளின் தடையங்களாக காணப்படுகின்றன.
பெண்களின் மேலாடை மற்றும் பச்சை சீருடை மற்றும் எலும்பு எச்சங்கள் என்பன இதன்போது இனம் காணப்பட்டுள்ளன.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மக்கள் மத்தியில் பாரிய ஐயம் எழுந்துள்ள நிலையில், குறித்த பகுதிக்கு நீதிபதி வருகை தந்தபோது அங்கு மனித உரிமைகள் சட்டத்தரணி, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ,சமூக செயற்ப்பாட்டாளர் பீற்றர் இழஞ்செழியன்,கிராம மட்ட அமைப்புக்களின் தலைவர்கள் கிராம மக்கள் உள்ளிட்ட பலர் பிரசன்னமாகியிருந்தனர்.
யாழ் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு
யாழ் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு
யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாடகை சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் கட்டண மீட்டர் பொருத்துதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று (30) அரசாங்க அதிபர், முச்சக்கர வண்டி சங்கத்தினர், மற்றும் மாநகர சபை ஆணையாளர் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது குறித்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் யாழ்ப்பாண மாவட்ட முச்சக்கர வண்டிகள் சங்கத்தில் பதிவினை மேற்கொண்டு எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னதாக கட்டண மீட்டர்களை பொருத்த வேண்டுமென அறிவுறுத்த ப்பட்டுள்ளனர்.
யாழ் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு
அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 16, 17, மற்றும் 18 ஆம் திகதிகளில் கட்டண மீட்டர்கள் பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு பொலிஸாரினால் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும்.
எனவே யாழ்ப்பாண மாவட்ட முச்சக்கர வண்டிகள் சங்கத்தில் பதிவினை மேற்கொண்டு கட்டண மீட்டர்களை பொருத்தி, பொலிஸாரின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டே சேவையில் ஈடுபட முடியும்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியில் இருந்து குறித்த நடவடிக்கைகளை பின்பற்றாத முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட முடியாது.
முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு அமர்த்துவோர் பாதிப்பிற்குள்ளாகாது, பணத்தினை செலுத்துவதற்கும், முச்சக்கர வண்டி சாரதிகள் வெவ்வேறு விதமான கட்டணத்தினை அறவீடு செய்வதைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
6000 பேர் தொழிலை இழக்கும் அபாயம்
6000 பேர் தொழிலை இழக்கும் அபாயம்
ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை விரைந்து மறுசீரமைக்க தவறினால் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் 6000 பேர் தொழிலை இழக்க நேரிடும் என துறைமுகம் மற்றும் விமானச் சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
தொடர்ச்சியாக நட்டமீட்டிவரும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை அரசாங்கத்தினால் தொடர்ந்தும் நடத்திச் செல்ல முடியாதெனவும், மக்கள் பணத்தை வீணடிக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைக்கும் பணிகளுக்கு சர்வதேச நிதி செயற்பாடுகள் தொடர்பில் நிபுணத்துவம் பெற்றவர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்படும் என்றும் மிகவும் வெளிப்படைத் தன்மை மிக்கதாக அந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
6000 பேர் தொழிலை இழக்கும் அபாயம்
‘ஸ்திரமான நாட்டிற்கு, அனைவரும் ஒரே வழிக்கு’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (30) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
பல தசப்தங்களுக்கு முன்பு எமக்கான தனித்துவத்துடன் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ லங்கன் விமான சேவை, எமிரேட்ஸ் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்டபோது 30 மில்லியன் இலாபமீட்டியிருந்தது. அதன் பின்னரான காலப்பகுதியில் எவ்வித இலாபங்களையும் ஈட்டவில்லை என்றும் தெரிவித்தார்.
ஒருநாளும் விமானங்களை கண்டிராத மற்றும் விமானங்களில் காலடி வைக்க முடியாமல் இருக்கும் சாதாரண மக்களின் பணத்தினாலேயே இந்தச் சேவைகள் நடத்தப்படுகின்றன.
எமக்கென்ற தனியொரு விமான சேவை இருப்பது பெருமைக்குரியதாக இருந்தாலும் அதனை நடத்திச் செல்வதற்கு வழங்கப்படும் செலவு மிக அதிகமானதாக உள்ளதெனவும் தெரிவித்தார்.
இன்றளவில் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன்பட்டுள்ளது.
சர்வதேச பிணைமுறிகளின் கீழ் குத்தகைக்கு பெறப்பட்ட விமானங்களுக்கான கடன் தொகையை உள்நாட்டு வங்கிகள் உள்ளடங்களான சில நிறுவனங்களே செலுத்தியுள்ளன என்றும், எரிபொருள் கடனையும் செலுத்த வேண்டியிருப்பதாகவும் தெரிவித்த அமைச்சர், கடன் நெருக்கடிக்கு மத்தியில் விமானச் சேவையொன்றை நடத்திச் செல்வது சாத்தியமற்றதெனவும் சுட்டிக்காட்டினார்.
6000 பேர் தொழிலை இழக்கும் அபாயம்
நாட்டில் ஏற்பட்டுள்ள வெளிநாட்டு கையிருப்பு போதாமை உள்ளிட்ட பிரச்சினைகளின் காரணமாக முன்பை போன்று அரசாங்கத்தினால் நிதி வழங்க முடியாத நிலைமை காணப்படுகின்றது.
அவ்வாறு வழங்குவதும் நியாயமற்றது என்பதாலேயே ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி 51 சதவீதத்தினை அரசிடம் தக்கவைத்துக்கொண்டு மிகுதியான 49 சதவீதத்தியைனே மறுசீரமைப்புக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைக்கும் யோசனைக்கு ஆறு மாதங்களுக்கு முன்பாகவே அமைச்சரவை அனுமதி கிடைத்திருந்தது.
ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுனத்தின் கீழான இறங்குதுறை பணிகள் மற்றும் உணவு வழங்கல் நிறுவனம் ஆகியன வருமானம் ஈட்டுகின்றன. இருப்பினும் அதனால் விமானச் சேவையின் நட்டத்தை ஈடு செய்ய முடியாதுள்ளது என்றும் தெரிவித்தார்.
அதனால் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை தனித்தனியாக விற்பனை செய்ய வேண்டுமா என்பது பற்றியும் இது தொடர்பில் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்ட யோசனைகள் பற்றியும் சர்வதேச நிதி நிபுணத்துவம் கொண்டவர்களின் ஆலோசணைகள் பெற்றுக்கொள்வதற்காக சமர்பிக்கப்பட்டுள்ளன.
மேற்படிச் செயற்பாடுகளை மிகவும் வெளிப்படைத் தன்மை மிக்கதாக முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்குள் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைக்க எதிர்பார்த்துள்ள நிலையில் இந்தச் செயற்பாடுகளின் பின்னர் அதன் உரிமைகளை உறுதிப்படுத்திக்கொண்டு உரிய முதலீடுகளுக்காக வழங்க தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்
சிகரெட்டின் விலை உயர்வு
சிகரெட்டின் விலை உயர்வு
சிகரெட்டின் விலை இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கலால் வரி அதிகரிப்புடன் சிகரெட்டின் விலை இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 4 வகைகளின் கீழ் ஒரு சிகரெட்டின் விலை ரூ. 5 ரூபாய், 15 ரூபாய், 20 ரூபாய், மற்றும் 25 ரூபாயால் உயர்த்தப்பட்டுள்ளது.
அஸ்வெசும தொடர்பில் இலட்சக்கணக்கில் முறைப்பாடுகள்
அஸ்வெசும தொடர்பில் இலட்சக்கணக்கில் முறைப்பாடுகள்
அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் இதுவரையில் 4 இலட்சத்து 89 ஆயிரத்து 953 மேன்முறையீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் டீ.விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் இதுவரையில் 6 ஆயிரத்து 783 ஆட்சேபனைகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, எவரையும் கைவிடாத வகையில் ‘அஸ்வெசும’ திட்டத்தை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
- இஸ்ரேலுக்கு எதிராக பல நாடுகள் தடை

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியப் படைகள் வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்

- இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்

- கலு கங்கா துணைப் படுகைக்கான வெள்ள எச்சரிக்கை

- செப்டம்பரில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 100000 ஐத் தாண்டியது

- இலங்கை மத்திய வங்கி இப்படி அறிக்கை

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- கனமழை காரணமாக மேல் கோட்மலை நீர்த்தேக்கத்தின் வழிந்தோடும் கதவு திறக்கப்பட்டது

- பாராளுமன்றத்தில் 22வது திருத்தத்தின் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் நடைபெற்று வருகிறது

- ஈரானின் உச்ச தலைவர் கையெழுத்துக் குறிப்பில் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையைப் பாராட்டியுள்ளார்

முதலிரவில் பிள்ளை பெற்ற மணமகள் |தப்பி ஓடிய மாப்புள்ள |Ethiri News Crime
முதலிரவில் பிள்ளை பெற்ற மணமகள் |தப்பி ஓடிய மாப்புள்ள |Ethiri News Crime
இந்தியாவில் திருமண நாள் முதலிரவு ஆசையில் மாப்புள்ள காத்திருக்க ,முதலிரவில் புது மனைவி பிள்ளை பெற்ற செயலை கண்டு மாப்புள்ள தலை தெறிக்க ஓடிய பயங்கரம் இடம் பெற்றுள்ளது .
Overlay6
விமானங்களை உடைத்தெறிந்த ஏவுகணைகள் ஈரானில் இராணுவம் குவிப்பு
விமானங்களை உடைத்தெறிந்த ஏவுகணைகள் ஈரானில் இராணுவம் குவிப்பு
பொலிஸ் பாதுகாப்புடன் அனுராதபுரத்தில் இருந்து தமிழர் பகுதியில் உள்ள விகாரை நோக்கி நகரும் பௌத்த பிக்குகள்
பொலிஸ் பாதுகாப்புடன் அனுராதபுரத்தில் இருந்து தமிழர் பகுதியில் உள்ள விகாரை நோக்கி நகரும் பௌத்த பிக்குகள்
பொலிஸ் பாதுகாப்புடன் அனுராதபுரத்தில் இருந்து தமிழர் பகுதியான வவுனியாவில் உள்ள விகாரை நோக்கி பௌத்த பிக்குகள் பாதயாத்திரை ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

அனுராதபுரத்தில் உள்ள வராலற்று சிறப்பு மிக்க ருவென்வெலிசாய விகாரையில் கடந்த 28 ஆம் திகதி வணக்கத்திற்குரிய கல்காமு சாந்தபோதி பௌத்த பிக்கு தலைமையில் ஆரம்பமான குறித்த பாதயாத்திரையானது இன்று (30.06) காலை வவுனியா கண்டி வீதியில் உள்ள விகாரையை வந்தடைந்தது.
பொலிஸ் பாதுகாப்புடன் அனுராதபுரத்தில் இருந்து தமிழர் பகுதியில் உள்ள விகாரை நோக்கி நகரும் பௌத்த பிக்குகள்

அங்கிருந்து வவுனியாவில் தமிழர் பகுதியை கையகப்படுத்தி குடியேற்றம் செய்யப்பட்ட காலபோகஸ்வேவ பகுதியில் உள்ள சபுமல்கஸ்கட விகாரையை சென்றடையவுள்ளது. குறித்த பாத யாத்திரையில் 50 இற்கு மேற்பட்ட பௌத்த பிக்குகள் மறைந்த பௌத்த பிக்குகளின் கேசம், பற்சின்னம் உள்ளிட்ட புனிதப் பொருட்களுடன் சென்று அதனை அங்கு பார்வைக்கு வைப்பதுடன், எதிர்வரும் போயா தினத்தன்று விசேட பூஜை நிகழ்வையும் நடத்தவுள்ளனர்.

பௌத்த கலைகலாசார பாரம்பரியத்துடன் குறித்த பாதயாத்திரை இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழர் பகுதியில் இரவிரவாக வாள்வெட்டு: விசேட அதிரடிப்படையால் மடக்கிப் பிடிக்கப்பட்ட மூவர்
தமிழர் பகுதியில் இரவிரவாக வாள்வெட்டு: விசேட அதிரடிப்படையால் மடக்கிப் பிடிக்கப்பட்ட மூவர்
வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
நேற்று இரவு (30.06) 11 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, பண்டாரிக்குளம் பகுதிக்கு ஜீப் ரக வாகனம் மற்றும் மோட்டர் சைக்கிள் என்பவற்றில் வந்த குழுவினர் அப் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் மீது வாளால் வெட்டி விட்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். இதன்போது, கிராம மக்கள் வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கிய போதும் பொலிசார் சம்பவ இடத்திற்கு வரவில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழர் பகுதியில் இரவிரவாக வாள்வெட்டு: விசேட அதிரடிப்படையால் மடக்கிப் பிடிக்கப்பட்ட மூவர்
இதனையடுத்து, கிராம மக்கள் விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கியதையடுத்து அங்கு வந்த விசேட அதிரடிப்படையினர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மூன்று பேரை கைது செய்து வவுனியா பொலிசாரிடம் ஒப்படைந்துள்ளனர். அத்துடன் தாக்குதலில் ஈடுபட்டவர்களின் ஜீப் வண்டியும் மீட்கப்பட்டுள்ளதுடன், அதில் இருந்து இரு வாள்களும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
இச் சம்பவத்தில் பண்டாரிக்குளம் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய செல்வம் தவேந்திரன் வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் பண்டாரிக்குளம், மகாறம்பைக்குளம் மற்றும் வெளிக்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டைவிட்டு வெளியேறியுள்ள 50 விசேட வைத்தியர்கள்
நாட்டைவிட்டு வெளியேறியுள்ள 50 விசேட வைத்தியர்கள்
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் சுமார் 50 விசேட வைத்தியர்கள், நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தகவலை விசேட வைத்தியர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
அவசர விபத்துப் பிரிவு விசேட வைத்தியர்கள் 20 பேரும், மயக்க மருந்துவ நிபுணர்கள் 30 பேரும், இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனை, அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர், விசேட வைத்தியர் அசோக குணரத்ன கூறியுள்ளார்.
இதன் காரணமாக, விசேட வைத்தியர்களைப் பயிற்றுவிக்கும் பணிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
சிவப்பு நிறமாக மாறிய நதி பீதியில் மக்கள்
சிவப்பு நிறமாக மாறிய நதி பீதியில் மக்கள்
ஜப்பானின் ஒகினாவா மாகாணத்தில் உள்ள நாகோ நகர நதி, திடீரென கருஞ்சிவப்பு நிறமாக மாறியது. இதனால் மக்கள் அச்சமடைந்தனர்.
அங்குள்ள ஒரு மதுபான ஆலையில் உள்ள குளிரூட்டும் அமைப்பு ஒன்றில் இருந்து உணவில் நிறத்திற்காக சேர்க்கப்படும் சாயம் கசிந்ததால் நதியின் நிறம் மாறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் காலை 09:30 மணியளவில் கசிவு நிறுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட பீர் தயாரிப்பு ஆலையான ஓரியன் ப்ரூவரிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உணவுகளில் நிறத்திற்காக சேர்க்கப்படும் சாயம் ஆற்றில் கசிந்ததால் தண்ணீர் நிறம் மாறியதாகவும், இதனால் சுகாதார அபாயங்கள் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளது.
அதேசமயம், மிகப் பெரிய பிரச்சனை மற்றும் கவலையை ஏற்படுத்தியதற்காக மன்னிப்பும் கேட்கப்பட்டுள்ளது.
சிவப்பு நிறமாக மாறிய நதி பீதியில் மக்கள்
கசிவு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக நிறுவனத்தின் தலைவர் ஹஜிம் முரானோ தெரிவித்தார்.
இது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார். அழகு சாதன தொழில்களில் பெருமளவில் பயன்படுத்தப்படும் இந்த பொருள் பொதுவாக பாதுகாப்பானது என்று அமெரிக்க நச்சுப் பொருட்கள் மற்றும் நோய்ப் பதிவேடு முகமை தெரிவித்துள்ளது.
தொழிற்சாலைகளால் இந்த ரசாயனம் குளிர்விக்கும் செயல்பாட்டில் உணவு சேர்க்கையாக பயன்படுத்தப்படுகிறது
வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
தெல்தெனிய பிரதேசத்தில் திருடப்பட்ட 03 ஜீப் வண்டிகளுடன் சந்தேக நபர்கள் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று (29) காலை கெப் வண்டியில் வந்த சிலர் இந்த கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த வாகன காட்சியறையில் பணிபுரிந்த இரு ஊழியர்களை கட்டிப்போட்டுவிட்டு சந்தேக நபர்கள் 04 வாகனங்களை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
03 டிஃபென்டர் ரக ஜீப் வண்டிகள் மற்றும் வேன் என்பன கொள்ளையிட்டுச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் தெல்தெனிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
அதன்போது, வத்தேகம பகுதியிலுள்ள வீடொன்றின் பின்புறம் உள்ள கராஜ் ஒன்றில் திருடப்பட்ட 03 ஜீப்களில் 02 கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அப்போது, மூன்று சந்தேக நபர்களுடன் கொள்ளைக்காக வந்த கெப் வண்டியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
வத்தேகம பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன், தெல்தெனிய பொலிஸாரிடம் ஒப்படைத்த பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 27, 32 மற்றும் 34 வயதுடைய குன்னபான, தொரகமுவ மற்றும் ரஜவெல்ல பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
அத்துடன், கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின் பிரகாரம், நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்னில பிரதேசத்தில் திருடப்பட்ட மற்றைய ஜீப் வண்டியுடன் மற்றுமொரு சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 28 வயதுடைய வத்துபிட்டியலை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் தெல்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மூன்று விபத்துகளில் 3 பேர் உயிரிழப்பு
மூன்று விபத்துகளில் 3 பேர் உயிரிழப்பு
புத்தளம், பிட்டிகல, கிண்ணியா ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் பெண், சிறுமி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
கிண்ணியா பகுதியில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கல்வெட்டில் மோதியதில் 5 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்த சிறுமி, தந்தை, தாய் மற்றும் மற்றுமொரு குழந்தை மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளதுடன், சாரதியான தந்தை காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மூன்று விபத்துகளில் 3 பேர் உயிரிழப்பு
இதேவேளை, புத்தளம் வீதியில் இடது பக்கத்திலிருந்து வீதியின் வலது பக்கமாகத் திரும்ப முற்பட்ட போது அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் 48 வயதுடைய சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, பிட்டிகல பிரதேசத்தில் பஸ்ஸில் பயணித்த பெண் ஒருவர் கீழே இறங்கிய போது, அதே பஸ்ஸின் பின் சில்லில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அமுகொட பிரதேசத்தை சேர்ந்த 76 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
வீடுகளுக்குள் நுழைந்து வன்முறை; 25 பெண்கள் கைது
வீடுகளுக்குள் நுழைந்து வன்முறை; 25 பெண்கள் கைது
யாழ்ப்பாணம் – புத்தூரில் இரண்டு வீடுகளுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட 25 பெண்கள் உட்பட 31 பேர் அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் பலரை தேடி பொலிஸார் வலை விரித்துள்ளனர்.
புத்தூர், கலை ஒளி கிராமத்தில் இளைஞர்கள் இருவரின் வீடுகளுக்குள் புகுந்த 50 இற்கும் மேற்பட்டோர் இருவரையும் தாக்கியதுடன், பெறுமதியான பொருள்களையும் அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், இரண்டு வீடுகளும் முற்றிலும் சேதமடைந்ததுடன், இரண்டு இளைஞர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தின் போது காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அச்சுவேலி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்றார்.
வீடுகளுக்குள் நுழைந்து வன்முறை; 25 பெண்கள் கைது
பெண்களின் ஒளிப்படங்களை கணினியில் கிராபிக் செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர் என்ற அடிப்படையில் 21 வயது தொடக்கம் 25 வயதான இளைஞர்கள் இருவரின் வீடு மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தூர் கலை ஒளி கிராமத்தைச் சேர்ந்த பெண்களின் படங்களை கணினியில் கிராபிக் செய்து அசிங்கமாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டன என்று அச்சுவேலி பொலிஸ் நிலையம் ஊடாக சைபர் குற்றப் பிரிவில் மூன்று
மாதங்களுக்கு முன்னர் முறையிட்ட நிலையில், காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படாமையே குறித்த வன்முறைக்கு காரணம் என தெரியவருகிறது.
அவை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், இளைஞர்கள் இருவர் மீது சந்தேகம் கொண்டு, அவர்களின் வீடுகளுக்குள் நேற்றிரவு 11.30 மணியளவில் புகுந்த 50இற்கும் மேற்பட்டோர் அவர்களை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
அத்துடன், வீடுகளுக்குள் இருந்த பெறுமதியான பொருள்கள் மற்றும் வீட்டு வளாகத்திலிருந்த வாகனங்களும் அடித்து சேதப்படுத்தப்பட்டன.
காயமடைந்த இளைஞர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதை தடுத்த போதும் அங்கு வருகை தந்த பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி நிலமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த வன்முறை சம்பவம் தொடர்பிலான மேலும் பலரை கைது செய்ய அச்சுவேலி பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்
சொகுசு பஸ் எரிந்து நாசம்
சொகுசு பஸ் எரிந்து நாசம்
புத்தளம் – மதுரங்குளி செம்பட்டை பகுதியில் வௌ்ளிக்கிழமை (30) அதிகாலை இடம்பெற்ற தீ விபத்தில் சொகுசு பஸ் ஒன்று முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி 43 பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த அதிசொகுசு பஸ்ஸே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.
சொகுசு பஸ் எரிந்து நாசம்
மதுரங்குளி பொலிஸாருடன் இணைந்து புத்தளம் நகர சபை தீயணைக்கும் பிரிவினரும், இலங்கை விமானப் படையின் பாலாவி முகாமைச் சேர்ந்த
விமானப் படையினரும், பொதுமக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் குறித்த பஸ் முழுமையாக எரிந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
எனினும், இந்த தீ விபத்தில் பயணம் செய்த பயணிகள் எவருக்கும் காயங்களோ அல்லது உயிர்ச் சேதங்களோ ஏற்படவில்லை எனவும் பொலிஸார் கூறினர்.
இந்த சம்பவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
ரஸ்யாவை தாக்கும் ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா
ரஸ்யாவை தாக்கும் ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா
உக்ரைனுக்கு ATACMS நீண்ட தூர ஏவுகணைகளை வழங்கிட ,
அமெரிக்கா தயாராகி வருகிறது
இந்த ஏவுகணைகளை வழங்கிட தயக்கம் காட்டிய வெள்ளை மாளிகை ,
தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றி ,
உக்கிரனுக்கு அவசரமாக வழங்கிட கரணம் என்ன ,
என்பதை இதில் இருந்து கண்டு கொள்ள முடிகிறது .
ரஸ்யாவை தாக்கும் ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா
இந்த ஏவுகணையானது ,சுமார் 300 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும்
திறன் கொண்டதாகும் .
இதன் தாக்குதல் திறன் ,உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய ,
கைமஸ் ஏவுகணைகள் தாக்குதம் திறனின் ,
நான்கு மடங்கு சக்தி அதிகம் கொண்டது .
அவ்வாறு வழங்க படும் இந்த ஏவுகணை மூலம் ,
ரஸ்யா தலைநகரை குறிவைத்து அடிக்க முடியும் .
அதற்காவே இதனை இப்பொழுது அமெரிக்கா,
வெள்ள மாளிகை வழங்கிட ஒப்புதல் அளிக்கிறது .
எப்படியாவது ரஸ்யாவை முற்றாக அழித்துவிட நினைக்கும் ,அமெரிக்காவின் இந்த கொள்கை நிலைப்பாட்டுக்கு ,விரைவில் புட்டீன் ,தகுந்த ,
பதிலடியை வழங்குவர் என எதிர் பார்க்க படுகிறது .
ஈரான் அணுகுண்டு தயாரிக்க விடமாட்டோம் இஸ்ரேல் சூளுரை
ஈரான் அணுகுண்டு தயாரிக்க விடமாட்டோம் இஸ்ரேல் சூளுரை
ஈரான் நாடானாது அணுகுண்டு தயாரிக்கும் அணு செறிவார்க்கத்தை ,
தொடர்ந்து அதிக படுத்தி வருகிறது .
இவ்வாறு மேலும் நீடித்தால் ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என,
இஸ்ரேல் தொடர்ந்து மிரட்டி வருகிறது .
தாக்குதலை தடுக்க வேண்டுமாக இருந்தால் ,
உடனே பேச்சுக்கு வரவேண்டும் என, இஸ்ரேல் வேண்டுதல் விடுகிறது .
ஆனால் ஈரான் இவர்களுக்கு போக்கு காண்பித்து ,
தனது இலக்கு நோக்கி வேகமாக பயணித்த வண்ணம் உள்ளது .
ஈரானின் இந்த வேக பயணமும் ,வீரம் செறிந்த துணிச்சலும் ,
இஸ்ரேலை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .
ஈரான் அணுகுண்டு தயாரிக்க விடமாட்டோம் இஸ்ரேல் சூளுரை
முடிந்தால் அடித்து பார் அப்புறம் நாங்கள் யார் என்பது தெரியும் ,
என்பதை போல ,புரட்சி படை தளபதிகள் கருத்துக் குண்டுகளை வீசி வருகின்றனர் .,
இரு தரப்பிலும்வீழ்ந்து வெடிக்கும் இந்த குண்டுகளினால் ,
மத்திய கிழக்கில் பதட்டம் ஏற்பட்டுள்ளது .
சொல்லாமலே தாக்கி பின்னர் சேதங்களை கூறும் இஸ்ரேல் ,
இப்பொழுது ஈரான் எம்மீது தாக்குதல் நடத்திட தயங்கி வருவது ,
ஈரானின் அசுர வளர்ச்சியா ,அல்லது ஈரான் திருப்பி அடிக்கும் என்ற அச்சமா ,
என்ற கேள்வியே எழுந்து நிற்கிறது .
இதற்கு விரைவில் உரிய பதில் கிடைக்க பெறும் என நம்பலாம் .










































