யாழில் பெட்ரோல் குண்டு தாக்குதல்
யாழில் பெட்ரோல் குண்டு தாக்குதல்
அச்சுவேலி, பத்தமேனியிலுள்ள வீடு ஒன்று நேற்று (18) இரவு 9.20 மணி அளவில் பெட்ரோல் குண்டு வீசி சேதமாகப்பட்டுள்ளது.
முகத்தை துணியால் மறைத்தவாறு 2 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் குறித்த வீட்டில் ஜன்னல் கதவு என்பவற்றை அடித்து உடைத்து பெட்ரோல் குண்டு வீசி வீட்டின் பல பொருட்களை எரித்து சேதமாக்கியுள்ளனர்.
வீட்டில் இருந்த 42 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயார் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.
உணவகங்கள் சுற்றி வளைப்பு
உணவகங்கள் சுற்றி வளைப்பு
வாழைச்சேனை, ஓட்டமாவடி ஆகிய மூன்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களுக்குட்பட்ட உணவகங்களில் திங்கட்கிழமை (17) திடீர் சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
மட்டக்களப்பு பிராந்திய பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் சுமார் 48 உணவகங்கள் பரிசோதிக்கப்பட்டன.
அதில், சுகாதார சீர்கேட்டுடன் காணப்பட்ட 19 உணவகங்கள் மூடப்பட்டுள்ளதுடன், 6 உணவகங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
- இஸ்ரேலுக்கு எதிராக பல நாடுகள் தடைby நிருபர் காவலன்
- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியப் படைகள் வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்by நிருபர் காவலன்
- இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்by நிருபர் காவலன்
- கலு கங்கா துணைப் படுகைக்கான வெள்ள எச்சரிக்கைby நிருபர் காவலன்
- செப்டம்பரில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 100000 ஐத் தாண்டியதுby நிருபர் காவலன்
இலவச பஸ் பருவகால சீட்டுகள் வழங்கப்படும்
இலவச பஸ் பருவகால சீட்டுகள் வழங்கப்படும்
ஏழை மாணவர்களுக்கு எதுவித கட்டணமும் இன்றி பஸ் பருவகால சீட்டுக்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
நேற்றைய பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
‘சிசு செரிய’ பாடசாலை பஸ் சேவையை முன்னெடுத்துச் செல்வதற்கு வருடாந்தம் இரண்டு பில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிடுகிறது.
இலவச பஸ் பருவகால சீட்டுகள் வழங்கப்படும்
எனினும் நாட்டில் நிலவும் நிதி நெருக்கடி காரணமாக அதனை முழுமையாக வழங்குவதற்கு திறைசேரியில் பணம் கிடையாது.
அதனால் சிசு செரிய பஸ் சேவையை முன்னெடுத்துச் செல்வதில் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் துறையினருக்கும் பிரச்சினையாக உள்ளது.
அதனால் அமைச்சரவை அனுமதியுடன் அது தொடர்பில் ஆராய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக ஏழை மாணவர்களுக்கு எந்த கட்டணமும் அறவிடாமல் இலவசமாக பருவ கால சீட்டை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அவ்வாறு கொஞ்சம் பணத்தையாவது செலுத்த முடியுமானவர்களிடம் மூன்றில் ஒரு பகுதி கட்டணத்தை அறவிட்டு மேலும் இரண்டு பகுதியை நிவாரணமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்
பேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம்
பேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம்
கோதுமை மாவின் விலை குறைந்துள்ள போதிலும், பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைப்பதற்கான சாத்தியம் இல்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று(18) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அனைத்து வகையான கோதுமை மா விலைகளும் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக பிரீமா நிறுவனம் அறிவித்தது.
அதற்கமைய, பாண் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விற்பனை விலை 200 ரூபாவாக குறைவடைந்துள்ளது.
எனினும், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் குறைக்கப்பட்டதால் அவற்றின் விலைகளை மீண்டும் குறைப்பதற்கான இயலுமை இல்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் N.K.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
நான் ரணில் ராஜபக்க்ஷ அல்ல
நான் ரணில் ராஜபக்க்ஷ அல்ல
வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான சிறந்த பிரேரணையை தாம் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளதாகவும், அதனை
முன்னெடுத்துச் செல்வதா இல்லையா என்பதை தமிழ் கட்சிகளின் தலைவர்களே தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று (18) இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விருப்பம் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த ஜனாதிபதி, “நான் ரணில் விக்ரமசிங்க, ராஜபக்ச அல்ல” என்றும் தெரிவித்தார்.
வடகிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவே தான் விரும்புவதாகவும் அதிலிருந்து அரசியல் ஆதாயங்களைப் பெறுவதற்கு அல்ல என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி,
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் முழுமையான அதிகாரப் பகிர்வுக்கு இணங்கினால் மாத்திரமே அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு மக்களுக்கு தாம் ஒருபோதும் அநீதி இழைக்கப் போவதில்லை என்றும் அவர்களுக்காக மேலும் ஏதாவது செய்ய வேண்டுமாயின் கலந்துரையாடல் மற்றும் இணக்கப்பாட்டின் மூலம் பாராளுமன்றத்தின் முழுமையான ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பிலான பரிந்துரைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், பொலிஸ் அதிகாரங்கள் தவிர பிரேரணையில் முன்வைக்கப்பட்டுள்ள ஏனைய அனைத்து அதிகாரங்களையும் வழங்க முடியும் எனவும், பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்களும் ஏற்றுக் கொண்டால் மாத்திரமே பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதற்கு பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை தேவை எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
அதிகாரப் பகிர்வுக்கான அடிப்படை செயற்பாடுகள் நிறைவடைந்ததன் பின்னர் மாகாண சபைகளின் செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள உத்தேச சட்டமூலம் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. பிரதேச செயலாளர்கள் நியமனம், கல்வி, தொழிற்பயிற்சி மற்றும் உயர் கல்வி, விவசாயப் புத்தாக்கம் மற்றும் தொழிற்சாலைகள், சுற்றுலாத்துறை உள்ளிட்ட துறைகள் தொடர்பிலான சட்ட மூலங்களை சமர்பிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டது.
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்கும் போது, சில விடயங்கள் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திடமே இருக்கும் என்பதோடு அந்த விடயங்கள் தொடர்பில் சட்ட ரீதியாக அறிவிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்துக்கான வரைவு அரசியலமைப்பிற்கு அமைவானதா என்பதை அறிய சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் (ONUR) நல்லிணக்கத்திற்கான தேசிய செயற்திட்ட வரைவை விரைவில் அமைச்சரவையில் சமர்பிக்க இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பணிப்பாளர் நாயகம் நியமனத்தை தொடர்ந்தே உண்மையைக் கண்டறியும் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகம் ஸ்தாபிக்கப்பட்டதாகவும், அதற்குரிய தரப்பினர்களின் கருத்துக்களை உள்ளடக்கியதாக வழிக்காட்டல் வரைவுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு தேவையான பிரதான பணியாளர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதாகவும், அதற்குரிய சட்டம் அமுல்படுத்தப்பட்ட பின்னர் உரிய முறையான பொறிமுறை ஆரம்பமாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வடக்கு,கிழக்கு மாகாணங்களை இணைப்பது பற்றி தமிழ் எம்.பிக்கள் இங்கு கேள்வி எழுப்பியிருந்த நிலையில், எந்த விதத்திலும் வடக்கு கிழக்கை இணைப்பதற்கான ஏற்பாடோ அதுகுறித்த கலந்துரையாடல்களோ அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
வடக்கு, கிழக்கில் நீதி நிலைநாட்டும் செயற்பாடுகளில் வெளிநாட்டு நீதிபதிகளை ஈடுபடுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லையெனவும், அவசியம் ஏற்படும் பட்சத்தில் தெற்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் நடைமுறையில் உள்ள முறைமைகளுக்கு அமைய வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் அறிக்கைகளை மாத்திரம் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலம் மற்றும் காணாமல் போனோர் அலுவலகத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டதோடு, காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற 21,374 முறைப்பாடுகளில் இதுவரை 3,462 முறைப்பாடுகளின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், ஏனைய முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் இங்க குறிப்பிடப்பட்டது.
காணாமல் போனோர் தொடர்பிலான அலுவலகத்திற்கு, காணாமல் போனோர் தொடர்பிலான முழுமையான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என்பதை தமிழ் எம்.பிக்கள் சுட்டிக்காட்டியிருந்த நிலையில், அது தொடர்பில் அவர்களிடத்திலுள்ள தகவல்களை உண்மையை கண்டறிவதற்கான இடைக்கால பொறிமுறைக்கான செயலகத்திற்கு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தினார்.
ஊழல் ஒழிப்புச் சட்டம், ஜுலை 19 ஆம் திகதி பாராளுமன்ற குழுநிலையில் திருத்தங்களுக்கு உட்படுத்தப்படும் என்றும், உயர் நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்களும் பரிசீலிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக அரசாங்கத்தின் தற்போதைய வேலைத்திட்டம் தொடர்பிலும் ஜனாதிபதி இதன்போது விடயங்களைத் தெளிவுபடுத்தினார்.
வடக்கு மற்றும் கிழக்கில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களாக பசுமை ஹைட்ரஜன் மற்றும் அமோனியா உற்பத்தியில் முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குவது குறித்தும் பசுமை ஹைட்ரஜனின் ஊடாக கொழும்பு துறைமுக நகரத்தின் கவர்ச்சியை அதிகரிக்கும் திட்டம் குறித்தும் ஜனாதிபதி விளக்கினார்.
பசுமை ஹைட்ரஜன் மற்றும் அமோனியா உற்பத்தி மூலம் பிராந்தியத்தின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் திறனைப் பயன்படுத்துவதே வடக்கின் அபிவருத்தித் திட்டத்தின் விசேட நோக்கமாகும். இதன் மூலம் முதலீடுகளை ஈர்க்கவும் கொழும்பு துறைமுகத்தை மேம்படுத்தவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளதோடு, பூநகரி புதிய நகரத்தை புதுப்பிக்கத்தக்க வலுசக்தி பொருளாதார மையமாக பெயரிட்டு, இத்துறையில் வலுவான வளர்ச்சியை உருவாக்குவதே இதன் நோக்கமாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மேலும் “வடக்கிற்கு நீர்” திட்டத்தின் கீழ் பூநகரி ஏரி அபிவிருத்தி, யாழ்ப்பாணத்திற்கு நன்னீர் வழங்கும் நதிநீர் திட்டம், இரணைமடு நீர்த்தேக்கத்தின் கொள்ளளவை அதிகரிப்பது, சிறிய குளங்களின் புனரமைப்பு, காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் வவுனியா மற்றும் பலாலி விமான நிலைய அபிவிருத்தித் திட்டம், வட மாகாணத்தையும் தென்னிந்தியாவையும் இணைக்கும் படகுச் சேவை, காங்கேசன்துறை, பரந்தன் மற்றும் மாங்குளம் முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள் குறித்தும் ஜனாதிபதி இங்கு விளக்கினார்.
வடமாகாணத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் சுற்றுலாத்தலங்களின் அபிவிருத்தி, மன்னார் கோட்டை மற்றும் தீவுகள், காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் வடமராட்சி பிரதேசத்தில் சுற்றுலா படகுச் சவாரித் திட்டம், வன்னி மாவட்டத்தில் தென்னை பயிர்ச்செய்கையை ஊக்குவித்தல் மற்றும் பல்கலைக்கழக நகரமாக யாழ்ப்பாண நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டங்கள் குறித்து வடக்கு மற்றும் கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.
பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த், பிரசன்ன ரணதுங்க, விஜயதாச ராஜபக்ஷ, டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர்களான சுரேன் ராகவன், எஸ். வியாலேந்திரன், எஸ். சந்திரகாந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான ஆர், சம்பந்தன், எம்.ஏ. சுமந்திரன், சி.வி. விக்னேஷ்வரன், அங்கஜன் இராமநாதன், செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், எஸ். ஸ்ரீதரன், டி. சித்தார்த்தன், சாணக்கியன் இராசமாணிக்கம், தவராசா கலையரசன், கே. திலீபன், ஜி. கருணாகரன் உட்பட பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் உறுப்பினர்களும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உள்ளிட்ட அரச அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்
- கலு கங்கா துணைப் படுகைக்கான வெள்ள எச்சரிக்கைby நிருபர் காவலன்
- செப்டம்பரில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 100000 ஐத் தாண்டியதுby நிருபர் காவலன்
- இலங்கை மத்திய வங்கி இப்படி அறிக்கைby நிருபர் காவலன்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கைby நிருபர் காவலன்
- கனமழை காரணமாக மேல் கோட்மலை நீர்த்தேக்கத்தின் வழிந்தோடும் கதவு திறக்கப்பட்டதுby நிருபர் காவலன்
சுற்றி வளைக்க பட்ட இராணுவம் குவிக்க படும்ஆயுதங்கள்
சுற்றி வளைக்க பட்ட இராணுவம் குவிக்க படும்ஆயுதங்கள்
- இஸ்ரேலுக்கு எதிராக பல நாடுகள் தடை
- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியப் படைகள் வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்
- இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்
- ஈரானின் உச்ச தலைவர் கையெழுத்துக் குறிப்பில் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையைப் பாராட்டியுள்ளார்
- லெபனான் நகரில் இஸ்ரேலியத் தாக்குதலால் மின்வெட்டு
ஏவுகணைகள் குவிப்பு பதட்டமாகும் நாடுகள்
ஏவுகணைகள் குவிப்பு பதட்டமாகும் நாடுகள்
- இஸ்ரேலுக்கு எதிராக பல நாடுகள் தடை

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியப் படைகள் வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்

- இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்

- ஈரானின் உச்ச தலைவர் கையெழுத்துக் குறிப்பில் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையைப் பாராட்டியுள்ளார்

- லெபனான் நகரில் இஸ்ரேலியத் தாக்குதலால் மின்வெட்டு

ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விமானங்கள் குவிப்பு
ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விமானங்கள் குவிப்பு
- இஸ்ரேலுக்கு எதிராக பல நாடுகள் தடை

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியப் படைகள் வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்

- இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்

- ஈரானின் உச்ச தலைவர் கையெழுத்துக் குறிப்பில் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையைப் பாராட்டியுள்ளார்

- லெபனான் நகரில் இஸ்ரேலியத் தாக்குதலால் மின்வெட்டு

வவுனியாவில் இரு இளைஞர்கள் கைது
வவுனியாவில் இரு இளைஞர்கள் கைது
வவுனியாவில் இரு வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர்கள் இருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் இன்று (18.07) தெரிவித்தனர்.
வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் நடவடிக்கையின் போது கூமாங்குளம் பகுதியில் 5கிராம் 140மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியாவில் இரு இளைஞர்கள் கைது
அத்துடன், வேப்பங்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 5கிராம் 100மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களிடமும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட நபர்களையும் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப் பொருளையும் வவுனியா நீதிமன்றில் ஆயர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
துருக்கி படைகள் விலகும் வரை பேச்சுக்கு வரமுடியாது சிரியா
துருக்கி படைகள் விலகும் வரை பேச்சுக்கு வரமுடியாது சிரியா
துருக்கிய படைகள் தமது மண்ணில் இருந்து விலகினால்,
நாங்கள் பேச்சுக்கு வருவோம் ,அவ்வாறு தவறினால் ,
பேசுவதில் அர்த்தம் இல்லை என சிரியா தெரிவித்துள்ளது .
சிரியாவுக்கு ஆதரவாக ரஷ்யா இராணுவம் ,
களத்தில் நிற்பதாலையே ,துருக்கிய படைகள்,
முன்னேற்றம் தடுக்க பட்டு வருகிறது .
ரஸ்யா சிரியாவில் இருந்து விலகினால் ,சிரியா துருக்கி இஸ்ரேல் அமெரிக்காவினால் ,
முற்றுகையிட பட்டு ,அதன் செல்வங்கள் சூறையாட படும் நிலை ஏற்படும் ,
அதனால் தான் என்னவோ ,அமெரிக்காவின் சந்திப்பின் பின்னர் ,
சிரியாவை மிரட்டி பார்க்கிறது ,துருக்கி .
துருக்கி படைகள் விலகும் வரை பேச்சுக்கு வரமுடியாது சிரியா
சில நாட்களுக்கு முன்னதாக சிரியா பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட கவச வண்டிகள் ,
கனரக ஆயுதங்களுடன் ,அமெரிக்கா படைகள் குவிக்க பட்டு வருகின்றனர் .
இதன் அசைவு ரஷ்யா உக்ரைன் தோற்று போயுள்ளது ,
மேலும் சிரியாவில் உதவ முடியாது என கருதுவதால் ,
மிக பெரும் தாக்குதல் ஒன்றை நடத்தி பார்க்க முயல்கின்றனர் .
சவுதி எண்ணெய் குறைப்பை அடுத்து சிரியாவை ,
ஆக்கிரமிக்க வேடனா நிலைக்கு அமெரிக்கா கூட்டு படைகள் ,
தள்ள பட்டுள்ளன .
- இஸ்ரேலுக்கு எதிராக பல நாடுகள் தடை
- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியப் படைகள் வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்
- இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்
- ஈரானின் உச்ச தலைவர் கையெழுத்துக் குறிப்பில் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையைப் பாராட்டியுள்ளார்
- லெபனான் நகரில் இஸ்ரேலியத் தாக்குதலால் மின்வெட்டு
இந்தியாவில் வெள்ளத்தில் சிக்கிய 300 இஸ்ரேலியர்கள் மீட்பு உளவாளிகளா
இந்தியாவில் வெள்ளத்தில் சிக்கிய 300 இஸ்ரேலியர்கள் மீட்பு உளவாளிகளா ..?
இந்தியா இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட மிக பெரு வெள்ளத்தில் சிக்கி ,
கொண்ட முந்நூறுக்கு மேற்பட்ட இஸ்ரேல் நடத்தவர்கள் மீட்க பட்டுள்ளனர் .
இவ்வாறு மிக பெரும் தொகையில் மீட்க பட்ட இஸ்ரேலியர்கள் யாவரும் உல்லாச பயணிகள்,என தெரிவிக்க படுகிறது .
அவ்வாறு அதனை நம்பலாமா நீங்கள் என்ன ..?இவர்கள் உடல் மொழி கூற்று வேறாக உள்ளதுடன் ,பயிற்றுவிக்க பட்ட சிறந்த இராணுவ உளவுத்துறை நபர்களாக தெரிகிறது .
சரி அப்படி என்றால் இந்தியா மிக உன்னிப்பாக கண்காணிக்க படுகிறது .
சீனா நாட்டின் அருகில் குடி கொண்டு இவர்கள் அங்கிருந்து ஏதோ முக்கிய விடயங்களை,செய்கின்றார்கள் என வைத்து கொள்ளாலாம் .
இந்தியாவில் வெள்ளத்தில் சிக்கிய 300 இஸ்ரேலியர்கள் மீட்பு உளவாளிகளா
இவ்வளவு பெரும் தொகையில் ஒரு பகுதியில் இவர்கள குடி கொள்ள காரணம் என்ன …?அணைத்து விதமான வடிவத்திலும் நம்மவர்கள் உள்ளார்கள் என ,
இஸ்ரேல் பிரதமர் தெரிவித்து இருந்ததை இங்கே கருத்தில் கொள்ளவது உசிதம் .
இந்தியா லஞ்ச ஊழலில் சிக்கி மூழ்கியுள்ளது .இதனை உடைத்து வெளியில் வர மறுத்தால் ,இந்தியா பல நாடுகளாக இவர்கள் உடைப்பார்கள் ,என்பதை மறந்து விட கூடாது என்பதே,விவரம் அறிந்தவர்கள் பார்வையாக உள்ளது .
இந்தியா சீனாவில் மட்டும் அல்ல மேற்கு நாடுகளினாலும் குறி வைக்க படுகிறது என்பதை ,இந்தியா மத்தி புரிந்து கொள்ள வேண்டும் ,
என்பதே இந்தியாவை நேசிக்கும் மக்கள் நிலைப்பாடாக உள்ளது .
- இஸ்ரேலுக்கு எதிராக பல நாடுகள் தடை
- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியப் படைகள் வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்
- இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்
- ஈரானின் உச்ச தலைவர் கையெழுத்துக் குறிப்பில் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையைப் பாராட்டியுள்ளார்
- லெபனான் நகரில் இஸ்ரேலியத் தாக்குதலால் மின்வெட்டு
குவிக்க பட்ட கொடிய ஆயுதங்கள் சுற்றி வளைத்த நாடுகள்
குவிக்க பட்ட கொடிய ஆயுதங்கள் சுற்றி வளைத்த நாடுகள்
- இஸ்ரேலுக்கு எதிராக பல நாடுகள் தடை

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியப் படைகள் வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்

- இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்

- ஈரானின் உச்ச தலைவர் கையெழுத்துக் குறிப்பில் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையைப் பாராட்டியுள்ளார்

- லெபனான் நகரில் இஸ்ரேலியத் தாக்குதலால் மின்வெட்டு

எல்ல விபத்தில் ஒருவர் பலி8 பேர் காயம்
எல்ல விபத்தில் ஒருவர் பலி8 பேர் காயம்
எல்ல – வெல்லவாய வீதியின் ரஹதன்கந்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து செவ்வாய்க்கிழமை (18) காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தனியார் பஸ் ஒன்று பள்ளமொன்றில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த மேலும் 8 பேர் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- கலு கங்கா துணைப் படுகைக்கான வெள்ள எச்சரிக்கை
by நிருபர் காவலன் - செப்டம்பரில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 100000 ஐத் தாண்டியது
by நிருபர் காவலன் - இலங்கை மத்திய வங்கி இப்படி அறிக்கை
by நிருபர் காவலன் - பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
by நிருபர் காவலன் - கனமழை காரணமாக மேல் கோட்மலை நீர்த்தேக்கத்தின் வழிந்தோடும் கதவு திறக்கப்பட்டது
by நிருபர் காவலன்
இலங்கை அகதிகளை அவுஸ்திரேலியா அனுப்ப முயன்ற வழக்கு: 7 பேர் விடுதலை
இலங்கை அகதிகளை அவுஸ்திரேலியா அனுப்ப முயன்ற வழக்கு: 7 பேர் விடுதலை
2010-ம் ஆண்டு இலங்கை அகதிகள் 15 பேரை புதுவை தேங்காய்த்திட்டு துறைமுகத்திலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு மீன்பிடி படகு மூலம் அனுப்ப சிலர் முயன்றனர். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
வீராம்பட்டினத்தை சேர்ந்த திராவிடர் விடுதலைக்கழக தலைவர் லோகு.ஐயப்பன், தி.மு.க.வை சேர்ந்த சக்திவேல், காரைக்கால் மாவட்ட பா.ம.க.
செயலாளர் தேவமணி உட்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் 3 பேர் தலைமறைவாகினர். 8 பேர் சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் வெளிவந்தனர்.
இதற்கிடையே சக்திவேல், லோகுஐயப்பன், தேவமணி ஆகியோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.
இலங்கை அகதிகளை அவுஸ்திரேலியா அனுப்ப முயன்ற வழக்கு: 7 பேர் விடுதலை
இதிலிருந்து விடுவிக்கக்கோரி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அவர்கள் கடிதம் எழுதினர். இதன்பின் 3 பேரும் அந்த சட்டத்திலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அஸ்திரேலியாவுக்கு ஆட்கடத்தல் வழக்கு புதுவை தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மோகன், ஆட்கடத்தல் வழக்கு நிரூபிக்கப்படாததால், அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக அறிவித்தார்.
வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தேவமணி 2021-ல் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி
உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி
மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெலேவத்த பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய மாணவி ஒருவர் தன் உயிரை மாய்த்து உயிரிழந்து உள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை (17) பாடசாலை சென்று வீடு திரும்பிய குறித்த மாணவி உயிரிழந்த நிலையில் தனது அறையில் கிடந்ததை அவருடைய தந்தையார் கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் மாணவியின் மரணம் தொடர்பில் மொனராகலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுப்பெண் காய்ச்சலால் மரணம்
புதுப்பெண் காய்ச்சலால் மரணம்
திருமணமாகி 4 மாதங்களேயான யாழ்ப்பாணம் கொல்லங்கலட்டி பகுதியை சேர்ந்த சுகிர்தராசா நிதர்சினி (வயது 27) காய்ச்சல் காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
மூன்று நாட்களாக கடுமையான காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் திங்கட்கிழமை (17) தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- இஸ்ரேலுக்கு எதிராக பல நாடுகள் தடை
by நிருபர் காவலன் - தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியப் படைகள் வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்
by நிருபர் காவலன் - இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்
by நிருபர் காவலன் - கலு கங்கா துணைப் படுகைக்கான வெள்ள எச்சரிக்கை
by நிருபர் காவலன் - செப்டம்பரில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 100000 ஐத் தாண்டியது
by நிருபர் காவலன்
பாவனைக்கு உதவாத இனிப்பு பண்டங்களை விற்றவருக்கு சிக்கல்
பாவனைக்கு உதவாத இனிப்பு பண்டங்களை விற்றவருக்கு சிக்கல்
சிறார்களின் மனங்களை கவரும் வகையில், கண்டி நகரில் ஒரு பெரிய காட்சியறையை நடத்தி, மனித பாவனைக்கு உதவாத, காலவதியான இனிப்புப் பண்டங்களை விற்பனை செய்தவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
எடுக்கப்படவுள்ளது. டொபி, சொக்கலேட் உள்ளிட்ட இனிப்புப் பண்டங்களை மோசடியான முறையில் விற்பனை செய்யப்பட்ட விற்பனை நிலையம், கண்டி மாநகர சபையின் சுகாதார பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது.
அதன்போது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட அந்த இனிப்பு பண்டங்களில், உற்பத்தித் திகதி மறைக்கப்பட்டு, காலவதியான திகதி மாற்றப்பட்டு,
விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது. அதன்பின்னர், அந்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் கடுமையாக எச்சரிக்கப்பட்டார்.
அவருக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வடக்கு கிழக்கு பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு
வடக்கு கிழக்கு பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையிலான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.
பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று மாலை 3 மணிக்கு இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
இன்றைய கூட்டத்தை புறக்கணிக்கவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.
சாணக்கியன் மீது தாக்குதல் முயற்சி
சாணக்கியன் மீது தாக்குதல் முயற்சி
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆரையம்பதி வட்டார தலைவர் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை தாக்குவதற்கு முற்பட்டுள்ளார்.
அண்மையில் மன்னம்பிட்டிய பகுதியில் இடம் பெற்ற பேருந்து விபத்தின் போது 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகவும் மட்டக்களப்பில் இயங்கி வரும் பேருந்து உரிமையாளர்கள், சாரதிகளின் பிரச்சனை தொடர்பாகவும் இன்றைய தினம் (17) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன் போது வீதி போக்குவரத்து அனுமதிப் பத்திரம் இன்றி 10 பேருந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும் இதன் பின் அரசியல் பின்னணி இருப்பதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
சாணக்கியன் மீது தாக்குதல் முயற்சி
ஆகவே இன்றைய ஆர்ப்பாட்டத்தின் போது சட்ட விரோதமான முறையில் இயங்கி வரும் பேருந்துகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.
கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகாரியின் அசமந்த செயற்பாட்டின் காரணமாக இன்று 11 உயிர்கள் இழக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு நடவடிக்கை எடுக்க கோரியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியுள்ளனர்.
குறித்த விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கும் போது உள்நுழைந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் இருவர் பாராளுமன்ற
சாணக்கியன் மீது தாக்குதல் முயற்சி
உறுப்பினர் சாணக்கியனை தாக்குவதற்கு முற்பட்டதன் காரணமாக போராட்டக்காரர்களால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் இருவர் நையப்புடைக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
இன்றைய தினம் (17) பொலிஸாரின் உதவியுடன் சாணக்கியன் இராசமாணிக்கம் பேரூந்துகளின் அனுமதிப் பத்திரங்களையும் அதிரடியாக சோதனை செய்தார்.
ஒழுங்கான முறையில் விதிப் போக்குவரத்து அனுமதி பத்திரங்கள் இன்றி போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகள் சேவையில் ஈடுபடுகின்ற காரணத்தினால் குறுந்தூர பேருந்து சாரதிகளுக்கும் நெடுந்தூரப் பேருந்து சாரதிகளுக்கு இடையிலே போட்டித் தன்மை காரணமாகவே இந்த விபத்துக்கள் இடம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை பணி பெண்ணுக்கு நடந்த கொடூரம்
இலங்கை பணி பெண்ணுக்கு நடந்த கொடூரம்
சவூதி அரேபியாவில், ரியாட் நகரில் வீட்டு வேலை பணிக்காகச் சென்ற ஒரு பெண் அந்நாட்டில் பல்வேறு வகையான இன்னல்களுக்கு முகம்கொடுத்துள்ளார்.
குறித்த பெண்ணுக்கு சவூதி அரேபியாவில் ஊசியால் குத்தி சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாக அப்பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அந்த பெண்ணின் கணவர் பொலிஸில் நேற்று (16) புகார் செய்துள்ளார்.
தலவாக்கலை பகுதியை சேர்ந்த வி. சிவரஞ்சனி (வயது 30) என்பவரே இவ்வாறு பல்வேறு வகையான இன்னல்களுக்கு முகம்கொடுத்துள்ளார்.



























