சூரிய சக்தியில் இயங்கும் மீன்பிடி படகு
Posted in இலங்கை செய்திகள்

4 இலங்கையர்கள் இந்தியாவில் தஞ்சம்

4 இலங்கையர்கள் இந்தியாவில் தஞ்சம்

வவுனியா மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அகதிகளாக படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையை இன்று (31) காலை சென்றடைந்துள்ளனர்.

தகவல் அறிந்த மரைன் பொலிஸார் அவர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

4 இலங்கையர்கள் இந்தியாவில் தஞ்சம்

இவ்வாறு தஞ்சமடைந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன்,மனைவி மற்றும் இரு பிள்ளைகள் என தெரிய வந்துள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 269 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

எல்லை தாண்டிய காதல்: இலங்கை பெண்ணுக்கு நோட்டீஸ்

எல்லை தாண்டிய காதல்: இலங்கை பெண்ணுக்கு நோட்டீஸ்

இலங்கையை சேர்ந்தவர் விக்னேஸ்வரி. இவருக்கு ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள வி.கோட்டா அடுத்த அரிமகுலப்பள்ளியை சேர்ந்த லட்சுமணன் (கட்டிட மேஸ்திரி) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். லட்சுமணனை திருமணம் செய்ய விக்னேஸ்வரி முடிவு செய்தார்.

இதற்காக சுற்றுலா விசா பெற்று இலங்கையில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். விமான நிலையத்தில் லட்சுமணன், விக்னேஸ்வரியை வரவேற்று தனது வீட்டிற்கு அழைத்து சென்றார்.

தனது குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்து வைத்தார். லட்சுமணன் குடும்பத்தினரும் இவர்கள் காதலை ஏற்று கொண்டனர்.

எல்லை தாண்டிய காதல்: இலங்கை பெண்ணுக்கு நோட்டீஸ்

இதனை தொடர்ந்து, ஊர்பெரியவர்கள் முன்னிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அதேபகுதியில் உள்ள சாய் பாபா கோவிலில் திருமணம் செய்து

கொண்டனர். இதற்கிடையே, விக்னேஷ்வரியின் விசா ஆகஸ்ட் 6-ந் தேதியுடன் முடிவடைய உள்ளது.

எனவே அதற்குள் விக்னேஸ்வரி நாட்டை விட்டு வெளியேறுமாறு போலிஸார் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

மேலும், வெளிநாட்டு இளம்பெண்ணின் திருமணத்தை இலங்கையில் உள்ள விக்னேஸ்வரியின் பெற்றோருக்கு தெரிவித்து சட்டப்பூர்வமாக பதிவு செய்யுமாறு போலிஸார் அறிவுறுத்தினர்.

தற்போது எல்லை தாண்டிய காதல் அதிகரித்து வருகிறது. அந்த பட்டியலில் இவர்களும் சேர்ந்துள்ளனர்.

இராணுவ மேஜர் வீட்டில் கை வைத்த திருடன்| இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

உண்டியல் திருடன் விடுதலை

உண்டியல் திருடன் விடுதலை

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சுதுமலை அம்மன் கோவில், பிள்ளையார் கோவில் மற்றும் வைரவர் கோவில் என நான்கு

கோவில்களில் உண்டியல் உடைத்து பணம் திருடிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உண்டியல் உடைத்து திருடப்பட்ட ஆலயங்களில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கமராக்களில் பதிவான காட்சிகளின் உதவியுடன்

விசாரணைகளை முன்னெடுத்த மானிப்பாய் பொலிஸார், சந்தேக நபரை அடையாளம் கண்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை (30) யாழ்.நகர் பகுதியில் வைத்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

உண்டியல் திருடன் விடுதலை

கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து ஒரு தொகை உண்டியல் பணத்தை மீட்டுள்ளதாகவும், குறித்த நபர் யாழ். நகர் பகுதியில் உள்ள ஆலய

உண்டியல்களை உடைத்து திருடிய குற்றத்தில் நீதிமன்றினால் 03 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அண்மையில் தான் சிறையில் இருந்து விடுதலையாகி இருந்தார் என பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் கர்ப்பிணி மரணம்
Posted in இலங்கை செய்திகள்

சட்டவிரோத கருத்தரிப்பு அதிகரிப்பு

சட்டவிரோத கருத்தரிப்பு அதிகரிப்பு

நாடளாவிய ரீதியில் சட்டவிரோதமாக கருத்தரிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இவ்வாறு கருத்தரிப்போரில் கூடுதலானவர்கள், திருமணம் முடிக்காதவர்கள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சட்டவிரோத கருத்தரித்தல் உள்ளிட்ட பெரும்பாலான தவறுகள் முக்கியமாக அலைபேசிகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் ஏற்படும் உறவுகளால் ஏற்படுவதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டவிரோத கருத்தரிப்பு அதிகரிப்பு

இவ்வாறான தவறுகள் 2020 ஆம் ஆண்டு 34 இடம்பெற்றுள்ளன. 2021 இல் 48 ஆக அதிகரித்தது. இது 41 சதவீதமாகும். 2022 இல் 65 ஆக அதிகரித்தது. இது 35 சதவீத அதிகரிப்பாகும் என்பது பொலிஸ் தலைமையகத்தின் 2022 வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் 2021 இல் 63 சதவீதமாகவும் 2022 இல் 46 சதவீதமாகவும் குறைந்துள்ளது என்றும் பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் புதிய டீலால் முடக்க படும் அமெரிக்கா பணம்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் புதிய டீலால் முடக்க படும் அமெரிக்கா பணம்

ஈரான் புதிய டீலால் முடக்க படும் அமெரிக்கா பணம்

https://youtu.be/9KGdkSRz77w
வெடித்த குண்டு 200 பேர் மரணம் தப்பி ஓடிய மக்கள் 
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

வெடித்த குண்டு 200 பேர் மரணம் தப்பி ஓடிய மக்கள் 

வெடித்த குண்டு 200 பேர் மரணம் தப்பி ஓடிய மக்கள் 

பங்கு சந்தையில் இப்படி பணத்தை அள்ளுங்க video
Posted in பங்கு சந்தை Forex Trade

பங்கு சந்தையில் இப்படி பணத்தை அள்ளுங்க video

பங்கு சந்தையில் இப்படி பணத்தை அள்ளுங்க video

பங்கு சந்தையில் அதிக பணம் சம்பாதிக்க இதோ வழிமுறை .
பங்கு சந்தையில் ஒரே நாளில் செல்வந்தராக வழியும் உள்ளது .

அதற்கு அதனை முறையாக கற்று அனுபவத்தின் மூலம் நகர்ந்தால் வெற்றி பெறலாம் .

இதில் அழுத்தி காணொளி பார்க்கலாம்

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் நடந்த துப்பாக்கிச் சூடு

கொழும்பில் நடந்த துப்பாக்கிச் சூடு

இன்று (30) மாலை வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மார்டிஸ் லேன் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் வீதியின் அருகில் நின்றிருந்த இளைஞரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

வவுனியாவில் விபத்தில் ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் விபத்தில் ஒருவர் பலி

வவுனியாவில் விபத்தில் ஒருவர் பலி

வவுனியா – ஓமந்தை பகுதியில் அமைந்துள்ள இராணுவ சோதனை சாவடிக்கு அருகாமையில் இன்று (30) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் மற்றொரு நபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, இன்று (30) அதிகாலை ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடிக்கு அருகாமையில் நின்றிருந்த உழவு இயந்திரம் மற்றும் பழுதடைந்து நின்ற கப்ரக வாகனம் ஆகியவற்றுடன் அதே திசையில் பயணித்த பாரவூர்தி மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.

வவுனியாவில் விபத்தில் ஒருவர் பலி

விபத்தில் கப்ரக வாகனத்தில் இருந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன், மற்றொரு நபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் 23 வயதுடைய இராமச்சந்திரன் சதீஸ்குமார் என்ற இளைஞரே பலியாகியுள்ளார். விபத்து தொடர்பான விசாரனைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

எரியும் கப்பல் வீழ்ந்த விமானங்கள் VIDEO IN
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

எரியும் கப்பல் வீழ்ந்த விமானங்கள் VIDEO IN

எரியும் கப்பல் வீழ்ந்த விமானங்கள் VIDEO IN

உன்னால் துடிக்கிறோம்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

உன்னால் துடிக்கிறோம்

உன்னால் துடிக்கிறோம்

உன்னால் துடிக்கிறோம்

உன்னால் துடிக்கிறோம்

துயர் தந்து விழி மூடி எங்கோடினாய் – விழி
துளியாலே நனைந்திட ஏன் வாடினாய்
அன்புக்கும் பண்புக்கும் முதலாகினாய்
அறத்திலே நீயோர் தாயாகினாய்

அன்பிலே நனைகின்ற சேயாகினாய்
அறத்திலே விளைகின்ற பயிராகினாய்
போதனை பொழிகின்ற அருவியானாய்
பொறுமைக்குள் உறைகின்ற பெருமையனாய்

கண்ணுக்குள் ஒளிர்கின்ற ஒளியுமானாய்
கருணையில் நீயோர் தெய்வமானாய்
பெருமைக்கும் உரிமைக்கும் நீயே ஆனாய்
பேறுகள் பேசும் நூலே ஆனாய்

உனக்குள்ளே எத்தனை ஆற்றல் கண்டேன்
உன் சுயசரிதை நூலால் நானே மிரண்டேன்
வழிகளை சொல்கின்ற துணிவு கொண்டாய் -எவர்க்கும்
வளையாத எழுதிடும் பெருமை கொண்டாய்

உன்னை தினம் நான் படிக்கையிலே
உள்ளத்தில் உயர்வான ஆற்றல் கொண்டேன்
உன் உடல் நான் வந்து பார்க்கையிலே
உதடு சிரித்து எனை அழைத்தாய்

சிந்தை இழந்தேன் சில நிமிடம் – நீ
சிகரமே உணர்ந்தேன் அவ் நிமிடம்
உனக்கும் எனக்குள்ள உறவாடல் -இந்த
உலகத்தில் எழுதாத புது பாடல்

உன்னாலே துயராகி வாடுகிறோம்
ஊன் உருகி நித்தம் தேய்கிறோம்
என்றுன்னை இனி நாம் காண்போம்
ஏங்கியே ஏங்கியே தவிக்கிறோம் ..!

சண்முக பெரியப்பா துயர் பிரிவில் ,
அவர்க்கு என் கண்ணீர் சமர்ப்பணம் .
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 30-07-2023

இஸ்ரேலை தாக்குவோம் ஹிஸ்புல்லா மிரட்டல்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்குவோம் ஹிஸ்புல்லா மிரட்டல்

இஸ்ரேலை தாக்குவோம் ஹிஸ்புல்லா மிரட்டல்

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-56 விண்கலம்
Posted in உலக செய்திகள்

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-56 விண்கலம்

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-56 விண்கலம்

இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 7 செயற்கை கோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-56 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது விண்கல ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-56 விண்கலம் இன்று காலை 6.30 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்த விண்கலத்தில் சிங்கப்பூர் நாட்டுக்கு சொந்தமான 360 கிலோ எடை கொண்ட ‘டிஎஸ்-சொட்’ என்ற பிரதான செயற்கை கோள் உட்பட மொத்தம் 7 செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-56 விண்கலம்

இந்த ‘டிஎஸ்-சொட்’ செயற்கை கோள் டி.எஸ்.டி.ஏ. (சிங்கப்பூர் அரசாங்கம்) மற்றும் எஸ்.டி. என்ஜினீயரிங் இடையேயான கூட்டாண்மையின் கீழ் உருவாக்கப்பட்டது.

‘இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ்’ (ஐ.ஏ.ஐ) உருவாக்கிய செயற்கை துளை ரேடார் கருவியை கொண்டுள்ள இந்த செயற்கை கோள் அனைத்து வானிலை தகவல்களையும் துல்லியமான படங்களையும் வழங்கும் திறன் கொண்டதாகும்.

இந்த செயற்கை கோள் பூமியில் இருந்து 5 டிகிரி சாய்வில் 535 கி.மீ. உயரத்தில் பூமத்திய ரேகை சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

கவிழ்ந்த பயணிகள் பேரூந்து
Posted in இலங்கை செய்திகள்

கவிழ்ந்த பயணிகள் பேரூந்து

கவிழ்ந்த பயணிகள் பேரூந்து

இரத்தினபுரி – எம்பிலிபிட்டிய வீதியின் கலஹிட்டிய பிரதேசத்தில் இன்று (30) காலை தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பில் இருந்து மொனராகலை நோக்கி பயணித்த பேருந்து இன்று காலை 5 மற்றும் 6 மணிக்கு இடையில் வீதியில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.

ஜப்பானின் வெளிவிவகார அமைச்சருடன் சஜித் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

ஜப்பானின் வெளிவிவகார அமைச்சருடன் சஜித் சந்திப்பு

ஜப்பானின் வெளிவிவகார அமைச்சருடன் சஜித் சந்திப்பு

ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஜப்பானின் கல்விக் கட்டமைப்பின் அனுகூலமான அணுகுமுறையைப் பாராட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜப்பானிய மக்களின் ஒழுக்கம், அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் நேர்மை ஆகியவற்றுக்கு தாம் மதிப்பளிப்பதாக தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் வெளிவிவகார அமைச்சருடன் சஜித் சந்திப்பு

மீன்பிடித் தொழிலை மேம்படுத்த ஜப்பானிய தொழில்நுட்பத்தை பெற்றுக்கொடுக்குமாறும், கிராமங்களில் உள்ள பிள்ளைகளின் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்த உதவுமாறும், வீழ்ச்சி கண்டுள்ள நாட்டைக்

கட்டியெழுப்புவதற்காக வழங்கக்கூடிய அனைத்து ஒத்துழைப்புகளையும் இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் பெற்றுக்கொடுக்குமாறும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சரிடம் எதிர்க்கட்சித் தலைவர் கோரியுள்ளார்

குழந்தை வரம் கேட்டன் மாதா தரவில்லை சிலைகளை உடைத்தேன்
Posted in இலங்கை செய்திகள்

குழந்தை வரம் கேட்டன் மாதா தரவில்லை சிலைகளை உடைத்தேன்

குழந்தை வரம் கேட்டன் மாதா தரவில்லை சிலைகளை உடைத்தேன்

மாதாவிடம் நேர்த்தி வைத்தும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை” அந்த விரக்தியிலேயே ஆனைக்கோட்டையில் மாதா சிலைகளை சேதப்படுத்தினேன் என , மாதா சிலைகளை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைதான சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவில் ஆறுக்கு மேற்பட்ட இடங்களில் மாதா சிலைகள் வெள்ளிக்கிழமை (28) அதிகாலையில் சேதப்படுத்தப்பட்டிருந்தன.

குழந்தை வரம் கேட்டன் மாதா தரவில்லை சிலைகளை உடைத்தேன்

அது தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்த மானிப்பாய் பொலிஸார், சுதுமலை தெற்கு, சாவல்காடு பகுதியை சேர்ந்த 32 வயதான ஒருவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில், நான் சைவ சமயத்தை சேர்ந்தான். மனைவி கிறிஸ்தவர். இருவரும் திருமணம் செய்து சில வருடங்களாகின்றன. குழந்தை கிடைக்காத விரக்தியில் இருந்தேன்.

அவ்வேளையில் , “குழந்தை வேண்டுமென மாதவிடம் நேர்த்தி வைத்தேன். இருந்தும், பிள்ளை கிடைக்காத விரக்தியில் இருந்தேன். இதனால், ஆத்திரத்தில் மாதா சிலைகளை சேதப்படுத்தினேன்“ என தெரிவித்துள்ளார்.

உழவு இயந்திரம் விபத்து சாரதி பலி
Posted in இலங்கை செய்திகள்

உழவு இயந்திரம் விபத்து சாரதி பலி

உழவு இயந்திரம் விபத்து சாரதி பலி

பத்தனை மவுனட்வேனன் தோட்டத்தில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து டெக்டர் வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதன் சாரதி உயிரிழந்துள்ளார். மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். அதில் பயணித்த ஏனைய இருவர் தெய்வாதீனமாக உயிர்த்தப்பியுள்ளனர்.

இந்த விபத்து சனிக்கிழமை (29) பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெறுள்ளது.

விறகுகளையும் .கொழுந்துகளையும் ஏற்றி சென்ற டெக்டர் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானது

விபத்தில் இருவர் தப்பித்த நிலையில் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளார்.

உழவு இயந்திரம் விபத்து சாரதி பலி

குறித்த வாகனத்தின் ஓட்டுனரான 3 பிள்ளைகளின் தந்தை எட்வர்ட் (52 வயது) என்பவரே பலத்த காயங்களுடன் அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விபத்து நடந்த இடம் மிகவும் மோசமான பள்ளத்தாக்கான இடதுக்கு ட்ரெக்டர் வந்ததும் மற்றைய மூவரையும் வாகனத்தை விட்டு இறங்குமாறும் வாகனத்தில் ( பிரேக்) இல்லை எனவும் சாரதி சொல்லிவிட்டு வாகனத்தை செலுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பத்தனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மலிவு விலையில் புதிய phone |CHEAP PHONE SHOP IN FRANCE Gare Du Nord video
Posted in உலக செய்திகள்

மலிவு விலையில் புதிய phone |CHEAP PHONE SHOP IN FRANCE Gare Du Nord video

மலிவு விலையில் புதிய phone |CHEAP PHONE SHOP IN FRANCE Gare Du Nord video

நுழைந்த ஈரான் கப்பல் மிரட்டும் நாடுகள்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

நுழைந்த ஈரான் கப்பல் மிரட்டும் நாடுகள்

நுழைந்த ஈரான் கப்பல் மிரட்டும் நாடுகள்

https://youtu.be/mn2XbCz56uY
சுற்றிவளைக்க படும் நாடு குவிக்க படும் அமெரிக்கா இராணுவம்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

சுற்றிவளைக்க படும் நாடு குவிக்க படும் அமெரிக்கா இராணுவம்

சுற்றிவளைக்க படும் நாடு குவிக்க படும் அமெரிக்கா இராணுவம்