Posted in மருத்துவம்

முதல் குழந்தைக்கும், இரண்டாம் குழந்தைக்கும் இடையே எவ்வளவு கால இடைவெளி தேவை

முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

முதல் குழந்தை, இரண்டாம் குழந்தைக்கும் இடையே எவ்வளவு கால இடைவெளி தேவை


முதல் குழந்தைக்கு, இரண்டாம் குழந்தைக்கும் இடையே எவ்வளவு கால இடைவெளி தேவை


முதல் குழந்தையை பெற்று எடுத்த பின்னர், அடுத்த குழந்தையை பெற்று எடுக்க சரியான கால இடைவெளி தேவைப்படுகிறது; ஏன்

இந்த கால இடைவெளி தேவை என்றால், முதல் பிரசவத்தின் போது ஏற்பட்ட காயங்கள் மற்றும் தழும்புகளை ஆறவும், கர்ப்பபையை

பழைய நிலைக்கு கொண்டு வரவும், பெண் உடல் வலிமை பெற்று உடலளவிலும், மனதளவிலும் அடுத்த குழந்தையை ஏற்க ஆயத்தமாக வேண்டியது அவசியம்.

முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும, ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

  1. உங்களது முதல் பிரசவம் சிசேரியனாக இருந்தால், குறைந்தது 6 மாத காலமாவது நீங்கள் காத்திருக்க வேண்டும்; ஏனெனில் சிசேரியனால், உண்டான புண்கள் ஆறவே, 3 மாதமாகும்,
  2. மேலும் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டும். ஆகையால், முதல் குழந்தைக்கும் இரண்டாம் குழந்தைக்கும்
  3. வருடக்கணக்கில் இடைவெளி இருப்பது நல்லது என்கின்றனர், மருத்துவர்கள். இதுவே, உங்களுக்கு சுகப்பிரசவம் ஆகி
  4. இருந்தால், குறைந்தது ஒரு வருட இடைவெளியாவது அவசியம் ஆகும்.
  5. பிரசவத்தால் ஏற்பட்ட காயங்கள் மற்றும் உடல் சோர்வு போன்ற உடல் சார்ந்த மற்றும் மனம் சார்ந்த விஷயங்கள் குணமாக, இயல்பாக நீங்கள் குறைந்தது 12-18 மாதங்கள் என்ற கால
  6. இடைவெளியை எடுத்துக் கொள்வது நல்லது. நல்ல சத்தான உணவுகளை உண்டு, உடலை பழைய பலம் பெறச் செய்த
  7. பின்னர் அடுத்த குழந்தையை பற்றிய சிந்தனையை தொடங்குங்கள்.
  8. இந்த கால இடைவெளி ஏன் அவசியம் என்றால், உங்கள் முதல் பிரசவத்திற்கும், இரண்டாம் குழந்தையை கருத்தரிப்பதற்கு சரியான கால இடைவெளி இல்லாமல் இருந்தால், உங்களுக்கு
  9. உடல் நலக்குறைபாடுகள் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் பிறக்கப்போகும் குழந்தைக்கு சரியான
  10. ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், நஞ்சுக்கொடி சுற்றல், நஞ்சுக்கொடி குறுக்கீடு போன்ற பற்பல உடல் நலக்
  11. குறைபாடுகளும், முதல் குழந்தையை சரியாக கவனிக்க முடியாமல் அதற்கும் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம்.
  12. நீங்கள் சரியாக திட்டமிட்டு இரண்டாம் குழந்தையை பெற்றுக்கொண்டால், நீங்கள், குழந்தை என அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழலாம்; எனவே, என்ன
  13. பிரசவமானாலும் முதல் மற்றும் இரண்டாம் குழந்தைக்கு இடையே குறைந்தது 18 மாத கால இடைவெளியாவது இருக்க வேண்டும்.
  14. கர்ப்பகாலம், தாய்ப்பால் ஊட்டும் காலம் என அனைத்திலும் உங்கள் உடல் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்பட்டிருக்கும்; எனவே, உங்கள் உடல் சரியான ஆரோக்கிய நிலையை அடைந்த

  1. பின்னர், இரண்டாம் குழந்தையை பற்றி சிந்திப்பது சிறந்தது.
  2. முதல் மற்றும் இரண்டாம் குழந்தையை பெற்றுக் கொள்ளும் கால இடைவெளி குறைந்தால், பிரசவத்தில் 36-37
  3. வாரங்களுக்கு முன்பாகவே, குறை மாதத்தில் குழந்தை பிறக்க வாய்ப்புண்டு;
  4. முதல் குழந்தையை பெற்று எடுத்த கொஞ்ச மாதங்களிலே அல்லது அதிக கால தாமதமாக – உதாரணத்திற்கு 35 வயதிற்கு மேல் இரண்டாம் குழந்தையை பெற்றுக்கொள்ள திட்டம்
  5. கொண்டாலோ மருத்துவ ஆலோசனை பெறுங்கள்; உங்கள் சூழ்நிலை எதுவாயினும், தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்று, இரண்டாம் குழந்தையை பெற்றுக்கொள்ள திட்டமிடுங்கள்..!
      Posted in உலக செய்திகள் சினிமா

      அமிதாப்பச்சன் மகன் ,அபிஷேக்பச்சனுக்கும் கொரோனா – அதிர்ச்சியில் ரசிகர்கள்

      அமிதாப்பச்சன் மகன் ,அபிஷேக்பச்சனுக்கும் கொரோனா – அதிர்ச்சியில் ரசிகர்கள்

      பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனை தொடர்ந்து அவரது மகன் அபிஷேபச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது.

      அமிதாப்பை தொடர்ந்து அபிஷேக்பச்சனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி
      அமிதாப்புடன் அபிஷேக்பச்சன்

      இந்தியாவில் கொரோனா தொற்று தினமும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கொரோனா தொற்றில் மகாராஷ்டிரா மாநிலம்

      முதலிடம் வகித்து வருகிறது. அங்கு இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

      இதற்கிடையே, பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்

      மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
      அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

      இதுதொடர்பாக, அமிதாப்பச்சன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியி, நான் கொரோனா பரிசோதனை செய்தேன் ..

      மருத்துவமனைக்கு மாற்றப்பட்டேன் .. மருத்துவமனை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளது .. குடும்பத்தினர் மற்றும் ஊழியர்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர், அதற்கான

      முடிவுகளுக்காக காத்திருக்கிறோம் .. கடந்த 10 நாட்களில் எனக்கு நெருக்கமாக இருந்த அனைவருமே தயவு செய்து பரிசோதனை

      செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என பதிவிட்டுள்ளார்.

      இந்நிலையில், நடிகர் அமிதாப்பச்சனை தொடர்ந்து அவரது மகன் அபிஷேக்பச்சன், தனக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

      அமிதாப்பச்சன் மகன்
      அமிதாப்பச்சன் மகன்
          Posted in இலங்கை செய்திகள்

          வவுனியாவில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்க பட்ட அரசியல்வாதி

          வவுனியாவில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்க பட்ட அரசியல்வாதி

          வவுனியா சுந்தரபுரம் பகுதியில் பொதுஐன பெரமுன கட்சியின் ஆதரவாளர்

          ஒருவர் நேற்று (10) இரவு 9.20 மணியளவில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

          வவுனியா சுந்தபுரம் பகுதியில் இடம்பெற்ற சடங்கு நிகழ்வு ஒன்றில் குறித்த

          நபர் கலந்து கொண்டுள்ளார். இரவு 9.00 மணியளவில் அவரை காணவில்லையேன

          தேடிய சமயத்தில் சடங்கு நிகழ்வு இடம்பெற்ற வீட்டில் காணப்படும் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

          சடலத்தினை மீட்டேடுத்த அயலவர்கள் சடலத்தினை வைத்தியசாலைக்கு எடுத்து சென்றனர்.

          சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில்

          வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

              Posted in சினிமா வினோத வீடுப்பு

              படம் நடிக்கும் விஜய் மகன் – குஷியில் ரசிகர்கள்

              படம் நடிக்கும் விஜய் மகன் – குஷியில் ரசிகர்கள்

              விஜய் மகன் சஞ்சய் அறிமுகமாகும் படத்தை பிரிட்டோ தயாரிக்க இருப்பதாக வந்த செய்திக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

              விஜய் மகன் படத்தை தயாரிப்பது குறித்து பிரிட்டோ விளக்கம்
              சஞ்ஜய் – விஜய்


              விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தை அவரது நெருங்கிய உறவினரான பிரிட்டோ தயாரித்த நிலையில் விஜய் மகன் சஞ்சய்

              அறிமுகமாகும் படத்தையும் பிரிட்டோ தான் தயாரிக்க இருப்பதாக ஒரு சில ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இதுகுறித்து

              ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பிரிட்டோ விளக்கம் அளித்து உள்ளார்.

              விஜய் மகன் சஞ்சய்க்கு இயக்குனராக தான் அதிக ஆர்வம் உள்ளது. அவருக்கு ஹீரோவாக நடிக்கும் ஆர்வம் இருக்கிறதா இல்லையா

              என்பது கூட எனக்கு தெரியாது. தற்போது அவர் கனடாவில் படித்து வருகிறார். படித்து முடித்த பிறகு அவர் எந்த துறையை

              தேர்ந்தெடுக்கிறார் என்பதை அதன் பின் தான் முடிவு செய்ய முடியும்.

              விஜயுடன் தயாரிப்பாளர் பிரிட்டோ

              சஞ்சய் படத்தை நான் தயாரிக்கவிருப்பதாக் வெளிவந்த செய்தி முற்றிலும் வதந்தி. இதுகுறித்து நான் விஜய்யிடம் பேசினதே இல்லை’ என்று கூறினார்.

              படம் நடிக்கும் விஜய் மகன்
              படம் நடிக்கும் விஜய் மகன்
                  Posted in சினிமா

                  எவரையும் பின் தொடர விருப்பம் இல்லை – ஓவியா

                  எவரையும் பின் தொடர விருப்பம் இல்லை – ஓவியா

                  தமிழில் மிகவும் பிரபலமான நடிகையாக இருக்கும் ஓவியா எவரையும் பின் தொடர விருப்பம் இல்லை என்று கூறியிருக்கிறார்.

                  எவரையும் பின் தொடர விருப்பம் இல்லை – ஓவியா
                  ஓவியா


                  களவாணி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவார் நடிகை ஓவியா.

                  அதன்பின் சில படங்களில் நடித்த ஓவியா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

                  ஓவியா டுவிட்

                  நடிகை ஓவியாவிற்கு இணையத்தில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர்.

                  ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு ஓவியா பதிலளிப்பது வழக்கமான

                  ஒன்று. இந்நிலையில், ரசிகர் ஒருவர் ஏன் டுவிட்டரில் எவரை பின் தொடரவில்லை

                  என்று கேட்டார். அதற்கு ஓவியா மற்றவர்களின் வாழ்க்கையில் பின் தொடர விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார்

                  ஓவியா
                  ஓவியா
                      Posted in சினிமா

                      குண்டு பூசணிக்காய் என்று நடிகையை கிண்டல் கிண்டல் செய்யம் ரசிகர்கள் -வைரலாகும் படம்

                      குண்டு பூசணிக்காய் என்று நடிகையை கிண்டல் கிண்டல் செய்யம் ரசிகர்கள் -வைரலாகும் படம்

                      பிரபல நடிகையாக இருக்கும் சாக்‌ஷி அகர்வால், என்னை குண்டு

                      பூசணிக்காய் என்று கிண்டல் செய்வார்கள் என்று கூறி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

                      குண்டு பூசணிக்காய் என்று கிண்டல் செய்வார்கள்… வைரலாகும் சாக்‌ஷியின் புகைப்படம்,சாக்‌ஷி அகர்வால்


                      தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்‌ஷி அகர்வால்.

                      இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில்

                      நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ் போட்டியிலும் கலந்து கொண்டு

                      ரசிகர்களை கவர்ந்தார். தற்போது சாக்‌ஷி சின்ட்ரெல்லா, டெடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

                      குண்டு பூசணிக்காய்
                      குண்டு பூசணிக்காய்

                          Posted in சினிமா வினோத வீடுப்பு

                          என்னை விமர்சித்து சந்தோஷப்படுகிறார்கள் – வனிதா

                          என்னை விமர்சித்து சந்தோஷப்படுகிறார்கள் – வனிதா

                          நடிகை வனிதா, உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியாமல் என்னை விமர்சித்து சந்தோஷப்படுகிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

                          என்னை விமர்சித்து சந்தோஷப்படுகிறார்கள் – வனிதா
                          வனிதா


                          நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகையுமான வனிதா ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற பின் சமீபத்தில் பீட்டர்

                          பால் என்பவரை 3-வது திருமணம் செய்து கொண்டார். பீட்டர் பாலுக்கும் ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தையும்

                          உள்ளனர். முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை மணந்ததாக சர்ச்சை எழுந்தது. முதல் மனைவி போலீசிலும் புகார் அளித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

                          ஏற்கனவே திருமணமாகி சட்டப்படி விவாகரத்து பெறாதவரை வனிதா எப்படி திருமணம் செய்தார் என்று நடிகை லட்சுமி

                          ராமகிருஷ்ணன் விமர்சித்தார். நடிகை குட்டி பத்மினியும் குறை கூறினார். விமர்சனங்களுக்கு பதில் அளித்து வனிதா டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

                          வனிதா – பீட்டர் பால்

                          “உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியாமல் என்னை விமர்சித்து சந்தோஷப்படுகிறார்கள். முதலில் உண்மையை

                          தெரிந்து கொள்ளுங்கள். ஒருவரை துன்புறுத்துவதும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்துவதும் சட்டத்துக்கு எதிரானது.

                          இணைய தளத்தில் துன்புறுத்துவது ஒருவரின் வாழ்க்கையை பாதிக்கும். நீங்கள் செய்வதை நான் கடுமையாக எடுத்து இருந்தால்

                          மன அழுத்தத்தில் விரக்தியாகி என்னையே துன்புறுத்தி இருக்கலாம். அது உங்களை கொலைகாரர்கள் ஆக்கி விடும். இதை

                          யோசியுங்கள். நான் உண்மையில் குற்றம் செய்து இருந்தால் சட்டம் என்னை சும்மா விடாது. கடவுள் மீது நம்பிக்கை உள்ளது. நான்

                          கடவுளுக்கும் மனசாட்சிக்கும் பதில் சொன்னால் போதும். நான் தவறு செய்யவில்லை.”

                          இவ்வாறு வனிதா கூறியுள்ளார்.

                          என்னை விமர்சித்து
                          என்னை விமர்சித்து
                              Posted in இலங்கை செய்திகள்

                              வீடு புகுந்து இளம் பெண்ணை கற்பழிக்க முயன்ற நபர் கைது

                              வீடு புகுந்து இளம் பெண்ணை கற்பழிக்க முயன்ற நபர் கைது

                              திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யுவதியொருவரின்

                              வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரை

                              நேற்றிரவு (10) கைது செய்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

                              சிறிமங்களபுர, சோமபுர, பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

                              சந்தேக நபரான மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் 18 வயதுடைய யுவதியொருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து

                              பாலியல் செயற்பாடுகளை மேற்கொள்ள முயற்சித்ததாக யுவதியின் தாய் சேருநுவர பொலிஸ் நிலையத்தின் அவசர

                              தொலைபேசிக்கு விடுத்த முறைப்பாட்டையடுத்து சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

                              சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  கட்டுநாயக்கா விமான நிலையத்தில் 20 மில்லியன் போதைவஸ்து மீட்பு

                                  கட்டுநாயக்கா விமான நிலையத்தில் 20 மில்லியன் போதைவஸ்து மீட்பு

                                  பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 20 மில்லியன்

                                  பெறுமதியான மெத்தாம்பேட்டமைன் என்ற போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

                                  ´கொழும்பு கார்கோ எக்ஸ்பிரஸ்´ என்ற நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட சந்தேகத்திற்கிடமான விமான அஞ்சல் பொதியில் இந்த போதைப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது,

                                  அந்த அஞ்சல் பொதியில் சூட்சுமான முறையில் பொலிதீன் பைகளில் மறைத்து வைக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட 5716

                                  மெத்தாம்பேட்டமைன் மாத்திரைகளே இவ்வாறு கைப்பற்றப்பற்றுள்ளன.

                                  அந்த அஞ்சல் பொதி கொழும்பு புதுக்கடை பகுதியில் வசிக்கும் 35 வயதான ஒருவருக்கு பரிசாக பிரான்சிலிருந்து அனுப்பப்பட்டது என தெரிவிக்கப்படுகின்றது.

                                  விமான நிலையத்தில் உள்ள சுங்க அதிகாரிகள் சந்தேகநபரை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்

                                      Posted in உலக செய்திகள்

                                      டிக் டாக்கை தடை செய்ய உத்தரவிட்ட அமேசான் நிறுவனம் – வெடித்தது சர்ச்சசை

                                      டிக் டாக்கை தடை செய்ய உத்தரவிட்ட அமேசான் நிறுவனம் – வெடித்தது சர்ச்சசை

                                      உலகில் மிக பெரும் நிறுவனமாக விளங்கி வரும் அமோசான் நிறுவனம் தற்பொழுது மக்கள் மத்தியில் பிரபலமாகி வரும்

                                      டிக்ட்டாக செயலியை பயன்படுத்த கூடாது என தமது நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு அறிவித்துள்ளதக வெளியான தகவலினால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது

                                      இதனை அடுத்து தாம் அவ்விதம் ஏதும் தெரிவிக்கவில்லை என விழுந்தடித்து மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது

                                      மேற்படி செயல் சீனாவுக்கும் அமோசான் நிறுவனத்திற்கும் இடையில் முறுகளை ஏற்படுத்தி இருந்த நிலையில்
                                      இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது

                                          Posted in இலங்கை செய்திகள்

                                          நாவலப்பிட்டியில் ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு

                                          நாவலப்பிட்டியில் ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு

                                          நாவலப்பிட்டிய நகருக்கு இன்று (10) வருகை தந்திருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

                                          அத்துடன், பொதுமக்களுடன் சிநேகப்பூர்வமாக கலந்துரையாடிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவர்களின் குறைநிறைகளையும் கேட்டறிந்துகொண்டார்.

                                          2020 ஆகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெறும் பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் கீழ்

                                          போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதி மாவட்டந்தோறும் பிரச்சாரப் பயணத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

                                          இதன்படி, கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று களப்பயணம் மேற்கொண்டிருந்தார். இதன் முதற்கட்டமாக நாவலப்பிட்டியவுக்கு ஜனாதிபதி வருகைதந்தார்.

                                          நாவலப்பிட்டிய ஜயதிலக்க மைதானத்தில் வந்திறங்கிய அவர், சர்வமத வழிபாட்டில் பங்கேற்றபின்னர், மக்களை சந்திப்பதற்கு சென்றார்.

                                          நாவலப்பிட்டிய பேருந்து நிலையத்தில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மக்கள் திரண்டிருந்தனர். ஜனாதிபதியை கண்டதும்

                                          ‘ஜனாதிபதி வாழ்க, ஜனாதிபதி வாழ்க’ என கோஷம் எழுப்பி தமது ஆதரவை வெளிப்படுத்தி – வரவேற்பளித்தனர்.

                                          இதன்பின்னர் பலர் ஜனாதிபதியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துகொண்டனர். மக்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி குறைநிறைகளையும் கேட்டறிந்துகொண்டார்.

                                          நாவலப்பிட்டியில் ஜனாதிபதிக்கு
                                          நாவலப்பிட்டியில் ஜனாதிபதிக்கு
                                              Posted in உலக செய்திகள்

                                              பிரான்சில் பேரூந்து சாரதி அடித்து கொலை – மக்கள் கொதிப்பு

                                              பிரான்சில் பேரூந்து சாரதி அடித்து கொலை – மக்கள் கொதிப்பு

                                              மக்கள் பயணிகள் பேரூந்து சாரதியாக பணியாற்றி வந்த 59 வயதுடைய சாரதி ஒருவர் பயணிகளிடம் முக கவசம் அணியும் படி கோரியுளளார்

                                              அதற்கு மறுத்த பயணி அவரை சரமாரியாக திடீரென தாக்கினார்

                                              இதில் பலத்த அடிகாயங்களுக்கு உள்ளான அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவ மனையில் பலியானார்


                                              இதனை அடுத்து இவரது இந்த படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர்,இப்படியும் பயணிகள் இருக்கத்தான் செய்கின்றனர்

                                              பிரான்சில் பேரூந்து சாரதி
                                              பிரான்சில் பேரூந்து சாரதி
                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                  நகைக்கடையில் விற்பனைக்கு வந்த வைரம் பதித்த முகக்கவசம்

                                                  நகைக்கடையில் விற்பனைக்கு வந்த வைரம் பதித்த முகக்கவசம்

                                                  சூரத்தில் உள்ள நகைக்கடையில் வைரம் பதித்த முகக்கவசங்களை விற்பனைக்கு வைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

                                                  நகைக்கடையில் விற்பனைக்கு வந்த வைரம் பதித்த முகக்கவசம்
                                                  வைரம் பதித்த முகக்கவசம்
                                                  சூரத்:

                                                  கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் ஒரு நடவடிக்கையாக முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால்,

                                                  மக்களை கவர பல்வேறு வண்ணங்கள் மற்றும் பிரபலங்களின் படங்களுடன் முகக்கவசங்கள் விற்பனை செய்யப்படும் செய்திகளை பார்த்து வருகிறோம்.

                                                  ஆனால், சூரத்தில் உள்ள நகைக்கடை இதற்கு எல்லாம் ஒரு படி மேலே சென்று வைரம் பதித்த முகக்கவசங்களை விற்பனைக்கு

                                                  வைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வைரம் பதித்த இந்த முகக்கவசங்கள் ரூ. 1.5 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் ரூபாய்

                                                  வரையிலான விலையில் நகைக்கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

                                                  இதுதொடர்பாக நகைக் கடையின் உரிமையாளர் தீபக் சோக்ஸி கூறும்போது, வாடிக்கையாளர் ஒருவர் தனது வீட்டில் வைத்து

                                                  நடைபெறும் திருமணத்திற்காக எங்கள் கடைக்கு வந்து, மணமகனுக்கும், மணமகளுக்கும் தனித்துவமான முகக்கவசங்கள்

                                                  வேண்டும் என கோரியதைத் தொடர்ந்து, தனக்கு இந்த யோசனை வந்ததாக கூறினார்.

                                                  தங்கத்தில் முக கவசம் – கோப்புப்படம்

                                                  இதே போல் மராட்டிய மாநிலம், புனே சிஞ்ச்வாடை சேர்ந்த சங்கர் என்பவர், 2 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் தங்கத்தில் முக கவசம் செய்து அணிந்து கொண்டிருந்தார் என்பது நினைவில் இருக்கலாம்.

                                                  நகைக்கடையில் விற்பனைக்கு
                                                  நகைக்கடையில் விற்பனைக்கு
                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                      இலங்கையில் 196 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்

                                                      இலங்கையில் 196 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்

                                                      கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து மேலும் 196 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

                                                      நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். நேற்றைய

                                                      தினம் குறித்த நிலையத்தில் 56 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் இதுவரை கந்தகாடு

                                                      புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் 252 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

                                                      மேலும், கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையில் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்கக்கூடும் என

                                                      எதிர்ப்பார்ப்பதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் வைத்திய அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

                                                      அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின எண்ணிக்கை 2350 ஆக

                                                      அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 1979 பேர் பூரணமாக

                                                      குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

                                                      தற்போது, 360 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இதுவரை 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                          பூஸ்ஸ, கற்பிட்டி கடற்படை தனிமைப்படுத்தல் மையங்களை விட்டு மேலும் 54 நபர்கள் வெளியேறினர்

                                                          பூஸ்ஸ, கற்பிட்டி கடற்படை தனிமைப்படுத்தல் மையங்களை விட்டு மேலும் 54 நபர்கள் வெளியேறினர்

                                                          பூஸ்ஸ கடற்படை முகாமில் மற்றும் கற்பிட்டி பகுதியில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது

                                                          தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 54 நபர்கள் 2020 ஜூலை 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் மையங்களை விட்டு வெளியேறினர்.

                                                          தனிமைப்படுத்தப்பட்ட பணியை வெற்றிகரமாக முடித்த இந்த 54 நபர்களின் 53 நபர்கள் பூஸ்ஸ கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்தும் 01 நபர் கற்பிட்டி கடற்படை

                                                          தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்தும் வெளியேறினர். இவர்கள் அனைவரும் அரசாங்கத்தின் சுகாதார

                                                          வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வீடுகளுக்கு அனுப்பப்பட்டதுடன் தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்ததற்கான சான்றிதழ்கள் கடற்படையால் வழங்கப்பட்டன.

                                                          தற்போதைய நிலவரப்படி, 430 நபர்கள் பூஸ்ஸ கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து வெளியேறிவிட்டனர்,

                                                          மேலும் 52 நபர்கள் அங்கு தனிமைப்படுத்தப்பட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், 63 நபர்கள்

                                                          கற்பிட்டியில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து

                                                          வெளியேறியுள்ளனர், மேலும் 28 நபர்கள் அங்கு தனிமைப்படுத்தப்பட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றன

                                                          பூஸ்ஸ கற்பிட்டி
                                                          பூஸ்ஸ கற்பிட்டி
                                                              Posted in இலங்கை செய்திகள்

                                                              இராணுவ தொண்டர் படையில் இனைவதற்கு தமிழர்களுக்கு அழைப்பு- கோட்டா அரசின் பயங்கரவாதம்

                                                              இராணுவ தொண்டர் படையில் இனைவதற்கு தமிழர்களுக்கு அழைப்பு- கோட்டா அரசின் பயங்கரவாதம்

                                                              மதிப்புமிக்க வாழ்க்கையைத் தொடர விரும்பும் நாட்டின் இளைஞர்கள், ஜூலை 27 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை

                                                              இராணுவ தொண்டர் படையில் கெடட் அதிகாரியாக இணைவதற்கு அழைக்கப்படுகிறார்கள்.

                                                              கீழ் காணும் விளம்பரத்தின் பிரகாரம் உங்களுக்கு தேவையான தகவல்களை

                                                              பெற்றுக் கொள்ளலாம். இணையதளம் மற்றும் தொலைபேசி இலக்கங்களின் விபரங்கள் கீழ்வருமாறு.

                                                              இராணுவ தொண்டர்
                                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                                  விரட்டும் கொரனோ -10 வீடுகளை சேர்ந்த 40 பேர் சுய தனிமைப்படுத்தல்

                                                                  விரட்டும் கொரனோ -10 வீடுகளை சேர்ந்த 40 பேர் சுய தனிமைப்படுத்தல்

                                                                  கொவிட் 19 தொற்றாளராக இனங்காணப்பட்ட கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் ஆலோசகரான பெண்ணுடன்

                                                                  நெருங்கிப் பழகியதாக கூறப்படும் தரப்பினரே இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

                                                                  குறித்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்களும் தற்போதைய நிலையில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள

                                                                  நிலையில், அவர்கள் அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

                                                                  மேலும், கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து விடுமுறைக்காக சென்றுள்ள 8 ஆலோசகர்களை மீள அழைத்துக்

                                                                  கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

                                                                  கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையம் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மத்திய

                                                                  நிலையமாகும். பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னரே குறித்த மத்திய நிலையத்தில் நபர்கள் உள்வாங்கப்படுகின்றனர்.

                                                                  எனினும், அங்கிருந்த ஒருவர் எவ்வாறு கொவிட் 19 தொற்றுக்கு உள்ளானார் என்பது தொடர்பில் விசாரணைகள்

                                                                  மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

                                                                      Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                                                                      முல்லைத்தீவு முள்ளியவளையில் பெற்ற மகளை வெட்டிய தந்தை

                                                                      முல்லைத்தீவு முள்ளியவளையில் பெற்ற மகளை வெட்டிய தந்தை

                                                                      முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட

                                                                      கேப்பாபுலவு பகுதியில் குடும்பத் தகராற்றில் தந்தையால்

                                                                      வெட்டப்பட்ட சிறுமியொருவர் முல்லைத்தீவு மாவட்ட

                                                                      வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

                                                                      குறித்த சம்பவம் கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்றுள்ள நிலையில், 5 வயதுடைய

                                                                      சிறுமியொருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.இச்சம்பவத்தினை

                                                                      தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையான 28 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

                                                                      சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிசார் மேலதிக

                                                                      விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்

                                                                      முல்லைத்தீவு முள்ளியவளையில்
                                                                      முல்லைத்தீவு முள்ளியவளையில்
                                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                                          அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

                                                                          அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

                                                                          அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் 4 மாதங்கள் நீடிக்கப்பட்டுள்ளது.

                                                                          அதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வரையில் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி

                                                                          ஆணைக்குழுவின் பதவிக்காலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

                                                                          ஆணைக்குழுவின் தலைவரான ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்னவினால், இது குறித்து ஜனாதிபதியிடம்

                                                                          எழுத்து மூலம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதியால் குறித்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.

                                                                          கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற அரசியல் பழிலாங்கல்கள் தொடர்பாக ஆராய்வதற்காக கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் திகதி

                                                                          ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குறித்த ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டது.

                                                                          இந்த ஆணைக்குழுவின் பதவிக் காலம் எதிர்வரும் 16 ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளது.

                                                                          இந்த நிலையில், இடம்பெற்றுவரும் விசாரணைகள் நிறைவடையாதுள்ளமை காரணமாக, அதன் அதிகார காலத்தை

                                                                          நீடிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

                                                                              இட்லி தோசைக்கு பதிலாக 10 நிமிடத்தில் ஈசியான டிபன் sidedish தேவையில்லை| உடனடி டிபன்|No sidedish டிபன்
                                                                              Posted in இலங்கை செய்திகள்

                                                                              லொறி, ஆட்டோ நேருக்கு நேர் மோதால் ! மூவர் பலி

                                                                              லொறி, ஆட்டோ நேருக்கு நேர் மோதால் ! மூவர் பலி

                                                                              வெல்லவாய – மொனராகலை பிரதான வீதியின் வருணகம

                                                                              பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

                                                                              லொறி ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.

                                                                              இன்று (10) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள்தாக தெரிவிக்கப்படுகிறது.