ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
ஐந்து மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை கட்டிட ஆய்வு அமைப்பினால் விடுக்கப்பட்டுள்ளது.
காலி, களுத்துறை, கொழும்பு, இரத்தினபுரி மற்றும் கேகாலை
ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை நாளை காலை 9.00 மணி வரையில் ஏற்புடையதாகும்.
தமிழர்கள் இன விடுதலைக்காக சேர்ந்து பயணிக்கக் கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது-சிறிதரன்
தமிழர்கள் இன விடுதலைக்காக சேர்ந்து பயணிக்கக் கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது-சிறிதரன்
தமிழர்கள் இன விடுதலைக்காக சேர்ந்து பயணிக்கக் கூடாது என்பதில் அரசாங்கம் கவனமாக உள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான சி. சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் நேற்று (19) இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நாங்கள் இந்த நாட்டிலே மிக முக்கியமான தருணத்திலே நிற்கின்றோம். மிக நெருக்கடியான தருணத்திலே நிற்கின்றோம். காரணம் தேர்தல் வருகின்ற போது தான் அந்த தேர்தல் காலத்திலே எங்கள் கட்சியின் உடைய கடந்த கால செயற்பாடுகள் இந்த அடுத்த 5 ஆண்டுகளிலே என்ன விடயங்களை கையாளப் போகின்றது என்ற முக்கிய விடயங்களை தேர்தல் களத்திலே நாங்கள் சொல்லுகின்றோம்.
60 வருடங்களுக்கு முதல் இந்த மண் எவ்வளவு காடாக இருந்திருக்கும் இந்த பிரதேசம். எவ்வாறு இருந்தது இந்த பிரதேசத்தில் நாங்கள் குடியேறி எவ்வாறு மாற்றி அமைத்தோம் இன்றைக்கு 60 ஆண்டுகள் கடந்து இந்த இடம் எப்படி மாறி இருக்கிறது ஏன் நாங்கள் இந்த இடத்திலே குடியேறினோம் அதற்கான காரணம் என்ன?
58 க்களில் அல்லைக் கந்தளாயிலே முதன் முதலில் 156 விவசாயிகள் காடையர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்கள். அதே ஆண்டுகளில் தான் அநுராதபுரம் பகுதியில் பெரும்பாண்மையாக வாழ்ந்த எங்கள் மக்களும் திருகோணமலையில் பெரும்பாண்மையாக வாழ்ந்த எங்கள் மக்களும் மலையக பகுதியில் வாழ்ந்த எங்கள் மக்கள் இனம் என்பதனை மையமாக வைத்து பலி எடுக்கப்பட்டார்கள். இவ்வாறு எல்லாம் கடந்து வந்த இனப் படுகொலைகளைத் தாண்டி நாங்கள் எங்களுடைய ஈழதேசத்திலே குடியேறி நில அடையாளங்களோடு எங்களை நாங்கள் அடையாளப்படுத்திக் கொண்டோம்.
அடையாளப்படுத்தி வாழுகின்ற காலத்தில் தான் ஒரு பெரும் தலைவருக்கு கீழே ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தோம். தந்தை செல்வாவின் வழிகாட்டலிலே அறவழிப் போராட்டங்களைத் தொடர்ந்து ஒரு ஆயுதப் போராட்டத்தின் முக்கியத்துவம் இந்த மன்ணிலே முதன்மை பெற்றிருந்தது.
அதற்காக பல ஆயிரக் கணக்கானவர்களை இந்த மண்ணிலே விதைத்திருக்கின்றோம். பல லட்சக் கணக்கான மக்களை இழந்திருக்கின்றோம். கோடிக் கணக்கான சொத்துக்களை இழந்திருக்கின்றோம். இவற்றை எல்லாம் இழந்து தான் இந்த மன்ணிலே ஒரு தேர்தல் மூலமாக அடுத்த வாழ்வைப் பற்றி சிந்திக்கின்றோம். இந்தக் காலத்திலே எங்களை இழந்து போனால் அல்லது நாங்கள் தமிழினம் என்பதனை சொல்ல மறந்து போனால் எமது வாழ்க்கையும் இல்லாமல் போகும் என்பதனை பலர் விளக்கமாக சொன்னார்கள்.
33 கட்சிகள் இருக்கின்றன பல நூற்றுக் கணக்கானவர்கள் இங்கு போட்டியிடுகிறார்கள். காரணம் இலங்கையில் இருக்கின்ற அரசியல் எங்களை கொஞ்சம் கொஞ்சமாக கூறுபோட்டு எங்களிடம் இருக்கின்ற அரசியல் பலத்தை எங்களிடம் அடிப்படையாக உள்ள கொள்கையை சிதைப்பதற்கான முழு முயற்சிகளையும் அவர்கள் மேற்கொள்கிறார்கள். அந்த முயற்சிகளில் இருந்து விடுபட வேண்டுமா அல்லது நாங்கள் எங்களுடைய வாக்குக்களை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு சிதறடித்து யாரும் இல்லாத இனமாக அழிந்து போகப் போகின்றோமா?என அவர் மேலும் தெரிவித்தார்.
மோதி சிதறிய இராணுவ வண்டி – இராணுவம் பலி
மோதி சிதறிய இராணுவ வண்டி – இராணுவம் பலி
நுகேகொட மேம்பாலத்தில் தனியார் பேருந்து ஒன்றும் இராணுவ
கெப் ரக வாகனம் ஒன்றும் இன்று (20) காலை நேருக்கு நேர் மோதி
விபத்துக்கு உள்ளானதில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் மேலும் இரு இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தை முந்திச்செல்ல முற்பட்ட மற்றுமொரு
பஸ் வண்டி எதிரே வந்த இராணுவ கெப் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இராணுவ கெப் வண்டியின் சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ்
ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த இராணுவ வீரர்கள் இருவரும் கொழும்பு தேசிய
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தெற்கு நெடுஞ்சாலையில் ஒரு பகுதி தற்காலிகமாக மூடல்
தெற்கு நெடுஞ்சாலையில் ஒரு பகுதி தற்காலிகமாக மூடல்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதூவ மற்றும் இம்மதுவ
இடையிலான பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அப்பகுதியில் ஏற்பட்ட சிறிய மண் சரிவு காரணமாக இப்பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று (20) காலை முதல் நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற வானிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கோபப்படும் கணவருடன் குடும்பம் நடத்துவது எப்படி?
கோபப்படும் கணவருடன் குடும்பம் நடத்துவது எப்படி?
சில வீட்டில் கணவன்மார்கள் எதற்குக் கோபப்படுவார்கள், எப்போது கோபப்படுவார்கள் என்பதே மனைவியால்
புரிந்துகொள்ள முடியாது. அவர்களை புரிந்துகொள்ள இந்த ட்ரிக்ஸ் டிரை பண்ணி பாருங்க…
எதற்கெடுத்தாலும் கோபப்படும் கணவருடன் குடும்பம் நடத்துவது எப்படி?குடும்ப சண்டை
கணவன், மனைவி என்று இருந்தால் சண்டையில்லாமல் இருக்காது.
சண்டை போட்டால் சமாதானம் ஆகும் வழியைத் தான் பார்க்க வேண்டுமே தவிர பிரச்சனையை பெரிதுபடுத்த முயற்சி்க்கக் கூடாது.
இது மிகவும் முக்கியமான ட்ரிக்ஸ். துணை கோபப்படுகிறார் எனில் நீங்களும் உடனே கோபப்படாமல் அமைதியாக பொறுமைக் காப்பது சிறந்தது. உங்கள் மீது தவறான குற்றச்சாட்டுகளை முன்
வைத்தாலும் அந்த நேரத்தில் அமைதியாக விட்டுவிட்டு பின் அதைப்பற்றி பேசுங்கள். உங்கள் மீது தவறு இருந்தால் மன்னிப்பு
கேட்டுவிடுவதில் தப்பில்லை. அது அவரின் உட்சபட்ச கோபத்தையும் சாந்தமாக்கிவிடும்.
உங்களின் சில செயல்கள் கூட அவர்களுக்குக் கோபத்தை உண்டாக்கலாம். எனவே உங்கள் ஒழுக்க நெறிகள், நடவடிக்கைகள், செயல்களை கவனித்து அதற்கு ஏற்ப நடந்துகொள்வதால்
பிரச்னைகளை தவிர்க்கலாம். விட்டுக்கொடுத்து போவதும் சில நேரங்களில் கோபத்தை தவிர்க்க உதவும். குடும்பம் சிதறாமல் தடுக்க உதவும்.
தவறு உங்கள் மீது தான் இருக்கிறது என்று தெரிந்தால் நீங்களாகவே முன்வந்து என்னங்க, மன்னிச்சுக்கோங்க தெரியாம பேசிட்டேன், மனசில வச்சுக்காதீங்க என்று கூறலாம். அவர் கண்டிப்பாக
மன்னித்துவிடுவார். மாறாக ஈகோ பார்த்தால் பிரச்சனை தான் பெரிதாகும். கணவன் மனைவிக்குள் ஈகோ பார்க்கக் கூடாது.
சண்டை போட்டால் ஆளுக்கொரு அறையில் இருக்காதீர்கள். கணவர் அருகில் அமர்ந்து அவரது கையை எடுத்து உங்களை கையில் வைத்துக் கொண்டு ஏதோ திடீர் என்று கோபம்
வந்துவிட்டது. அதனால் கத்திட்டேன். அதையெல்லாம் கண்டுக்காதீங்க. என் கோபம் 5 நிமிடம் தான் என்று சொல்லிப் பாருங்கள். அவருக்குத் தானாகவே சிரிப்பு வந்துவிடும்.
நீங்க மட்டும் என்னவாம், கோபம் வந்துச்சுனா தாட், பூட்னு குதிக்கிறீங்களே என்று அவர் சமாதானம் ஆன பிறகு கூறுங்கள். அடுத்த முறை அவர் கோபத்தை அடக்க முயற்சிப்பார்.
அதைவிட்டுவிட்டு அவர் கோபத்தில் இருக்கையில் ஏட்டிக்குப் போட்டியாக பேசினீர்கள் என்றால் உறவு தான் கெடும். பொறுமையாக இருப்பதால் நீங்கள் ஒன்றையும் இழந்துவிடப் போவதில்லை.
நான் அன்னைக்கு கோபப்பட்டு என் மனைவியைக் கத்திட்டேன். ஆனால் அவ ஒரு வார்த்தை கூட பதில் பேசாம் பொறுமையா
இருந்தா. இதே வேற ஒருத்தியா இருந்தா வீட்டையே இரண்டாகியிருப்பா என்று உங்கள் கணவர் பெருமையாகக் கூறுவார்.
என் கூட சண்டை போட்டீங்கள்ள, இன்றைக்கு உங்களுக்கு சாப்பாடு கிடையாது என்று சமைக்காமல் இருக்காதீர்கள். அன்றைக்கு கணவருக்கு பிடித்த உணவை சமைத்து முடிந்தால் உட்கார வைத்து ஊட்டி விடுங்கள்.
சமைக்கும் எண்ணம் இல்லையா அவருடன் சேர்ந்து ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டு வாருங்கள்.வெளியே எங்கும் செல்ல
விருப்பமில்லையா மொட்டை மாடியிலாவது சற்று நேரம் உலாவச் செல்லுங்கள். மனம் லேசாகும். கோபத்தைக் குறைத்து சாந்தமாக, கணவருடன் கைகோர்த்து வாக்கிங் போகலாம்.
சண்டை போட்டால் பெண்கள் ஒரு ஓரமாகப் போய் உட்கார்ந்துகொள்வார்கள். கணவர் தன்னை சமாதானப்படுத்த வருகிறாரா என்று ஓரக்கண்ணால் பார்ப்பார்கள். அந்நேரம் நீங்கள்
உங்கள் மனைவி அருகில் சென்று அவர் தோளில் கையைப் போட்டு அன்பாகப் பேசினாலே போதும் அவர் கோபம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
கணவன், மனைவிக்குள் அடிக்கடி சண்டை வருவது சகஜம் தான். ஆனால் அதை அப்பொழுதே மறந்துவிடுவது உங்கள் உறவுக்கு நல்லது. சின்னச் சின்ன வி்ட்டுக் கொடுத்தல்கள், கொஞ்சல்கள்,
கெஞ்சல்கள், பாச மழை என பல்வறு உத்திகளைப் பயன்படுத்தி ஊடல்களை விரட்டி விட்டு கூடல்களுக்கு வித்திட முடியும்.
காதலர்கள் தான் மணிக்கணக்கில் கடலை போட வேண்டும் என்று விதி ஒன்றும் இல்லை. கணவனும், மனைவியும் கூட மணிக்கணிக்கல் காதல் மொழி பேசலாம். பேசப் பேசத்தான்
உறவுகள் பலமாகும், வலுவாகும். அப்புறம் என்ன, வீட்டிலே சண்டையா, பேசிப் பிரச்சினையை சரி செய்யப் பாருங்க…!
அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? – விசாரணையில் வெளியான திடுக் தகவல்
அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? – விசாரணையில் வெளியான திடுக் தகவல்
அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கைது செய்த போலீசார், அவர் குறித்த திடுக் தகவலை வெளியிட்டுள்ளனர்.
அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? – விசாரணையில் வெளியான திடுக் தகவல்
அஜித்
சென்னை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம ஆசாமி,
நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு வைத்து இருப்பதாகவும், அது வெடிக்கும் என்றும் கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
உடனடியாக நடிகர் அஜித் வீடு உள்ள திருவான்மியூர் மற்றும் நீலாங்கரை போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. நீலாங்கரை அருகே ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நடிகர் அஜித்
வீட்டுக்கு நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் மோப்ப நாயுடன் விரைந்தனர்.
அப்போது வீட்டில் நடிகர் அஜித், தனது குடும்பத்தினருடன் இருந்தார். வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலை போலீசார் தெரிவித்ததும், நடிகர் அஜித் முழு ஒத்துழைப்பு வழங்கினார். போலீசாரை
முககவசத்துடன் ஒவ்வொரு அறையாக அழைத்துச்சென்று சோதனை செய்ய செய்தார். போலீசார் சுமார் 1 மணிநேரம்
சோதனை செய்தும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. பின்னர்தான் தொலைபேசியில் வந்த மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.
அஜித்
அதேபோல் திருவான்மியூரில் உள்ள நடிகர் அஜித்தின் வீட்டுக்கு திருவான்மியூர் போலீசார் சென்று சோதனை செய்தனர். ஆனால்
அங்கும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அதுவும் புரளி என தெரியவந்தது.
போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்போன் எண் மரக்காணம், புதுச்சேரி பகுதியில் இருப்பதாக தெரியவந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் மிரட்டல் விடுத்தது
மரக்காணத்தை சேர்ந்த புவனேஸ்வரன் எனத் தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட புவனேஸ்வரன், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய் வீட்டுக்கும் இதுபோல் வெடிகுண்டு மிரட்டல்
விடுத்து கைது செய்யப்படவர் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தெருவில் வசிக்கும் நபர்களுக்கு 100 நாட்களாக உதவிய சூர்யா ரசிகர்கள்
தெருவில் வசிக்கும் நபர்களுக்கு 100 நாட்களாக உதவிய சூர்யா ரசிகர்கள்
வீடுகள் இல்லாமல் தெருவில் வசிக்கும் நபர்களுக்கு 100 நாட்களாக உதவிய சூர்யா ரசிகர்கள், அவர்களுடன் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடியுள்ளனர்.
தெருவில் வசிக்கும் நபர்களுக்கு 100 நாட்களாக உதவிய சூர்யா ரசிகர்கள்… அவர்களுடன் கேக் வெட்டி உற்சாகம்
சூர்யா – கேக் வெட்டும் மக்கள்
கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு நடிகர் சூர்யா ரசிகர்கள் உதவி வருகின்றனர்.
இதில் வடசென்னை மாவட்ட சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக வட சென்னை மாவட்டத்தில், திரு. வி. க நகர் மண்டலத்தில் உட்பட்ட பெரம்பூர், கொளத்தூர், மாதாவரம் திருவிக நகர், பகுதிகளில்,
பெரம்பூர் பேருந்து நிலையம், பெரம்பூர் ரயில் நிலையம், ஜீவா ரயில் நிலையம், அயனாவரம், ஜமாலியா, புளியந்தோப்பு, மாதாவரம் பைபாஸ், மூலக்கடை போன்ற பகுதிகளில் லாக்டவுனில் வீடுகள்
இல்லாமல் தெருவில் வசித்து வரும் நபர்களுக்கு கடந்த 100 நாட்களாக தினமும் மதியம் மற்றும் இரவு சூர்யா நற்பணி இயக்கத்தை சார்ந்த நண்பர்கள் தலைமையில் தினமும்
உணவளித்து வருகிறார்கள். 100 நாட்களில் இதுவரை சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டுள்ளது.
சூர்யா ரசிகர்கள்
இந்நிலையில் 100வது நாள் என்பதால் தெருவில் வசிக்கும் ஆதரவற்ற மக்களுடன் இணைந்து கேக் வெட்டி உற்சாகமாக
கொண்டாடி உள்ளனர். சூர்யா ரசிகர்களின் இந்த நற்செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

வீதியில் பற்றி எரியும் போதைவஸ்து கடத்தல் விமானம் – video
வீதியில் பற்றி எரியும் போதைவஸ்து கடத்தல் விமானம் – video
போதைவஸ்து கடத்தி வந்த சிறிய ரக விமானம் ஒன்று திடீரெனெ
இயந்திர கோளாறு காரணமாக வீதியில் தரை இறங்கியது
அவ்வேளை அந்த விமானம் தீ பற்றி எரியும் திகில் காட்சி வெளியாகி
பர பரப்பை கிளப்பியுள்ளது
போதைவஸ்து கடத்தலில் பெயர் பெற்ற நாடாக மெஸ்சிக்கோ விளங்குவது குறிப்பிட தக்கது
கோப்பி கோட்டைக்குள் போதைவஸ்து – இத்தாலி விமான நிலையம் முற்றுகை – படம் உள்ளே
கோப்பி கோட்டைக்குள் போதைவஸ்து – இத்தாலி விமான நிலையம் முற்றுகை – படம் உள்ளே
இத்தாலிய மிலான் விமான நிலையத்திற்கு வந்த பொதிகளை சோதனை செய்த பொழுது சுங்க பிரிவினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது
கோப்பி கோட்டைக்குள் போதைவஸ்து அடைக்க பட்டு இத்தாலிக்கு அனுப்பி வைக்க பட்டுள்ளது .
கொலம்பியாவில் இருந்து இவ்விதம் இத்தாலிக்கு அனுப்பி வைக்க பட்டுள்ள பொழுதே இந்த விடயம் கண்டு பிடிக்க பட்டுள்ளது
மேற்படி போதைவஸ்து கடத்தலுடன் தொடர்புடைய நபர்களை கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்


பெற்றமைகளை கொடூரமாக கொன்ற தந்தை – அதிர்ச்சியில் போலீஸ்
பெற்றமைகளை கொடூரமாக கொன்ற தந்தை – அதிர்ச்சியில் போலீஸ்
Eden Hills பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து அவசர உதவி பிரிவுக்கு
அழைப்பு ஒன்று பறந்து வந்தது ,விரைந்து சென்ற மருத்துவ உதவி
குழுவினர் அறையை திறந்து பார்த்த பொழுதும் அதிர்ச்சி காத்திருந்தது
எரிவாயுவை திறந்த விட்ட படி அரை எங்கும் நச்சு கலந்த நிலையில் காண பட்டது
இதில் சிக்கி மூன்று வயது இசிறுமி பலியானர் ,தந்தை ஆபத்தான நிலையில் மீட்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் .
திட்டமிட்டு மக்களை கொலை செய்தார் என்ற குற்ற சாட்டில் 43 வயது தந்தையார் கைது செய்ய பட்டுளளார்
தொடர்ந்து மேற்படி கொலை தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

அகோர எறிகணை தாக்குதல் – இராணுவ வெறியாட்டம் -அப்பாவி மக்கள் பலி
அகோர எறிகணை தாக்குதல் – இராணுவ வெறியாட்டம் -அப்பாவி மக்கள் பலி
சிரியாவின் இட்லி பகுதியில் அமைய பெற்றுள்ள Tal Wasit கிராமத்தை
நோக்கி நடத்த பட்ட சரமாரியான பல்குழல் எறிகணை தாக்குதலில்
சிக்கி பல டசின் அப்பாவி மக்கள் பலியாகியும் படுகாயமடைந்துள்ளனர்
தொடர்ந்து சிரியா அரச இராணுவம் மற்றும் துருக்கிய ஆதரவு கிளர்ச்சி
படைகளுக்கு இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
கடந்த ஒன்பது ஆண்டுகளாக நீண்டு செல்லும் சிரியாவின் போரில் சுமார் நன்கு லட்சம் மக்கள் வரை பலியாகியும் முப்பது லட்சம்
மக்கள் அகதிகளாக இடம்பெயரந்துள்ளனர் என்பது குறிப்பிட தக்கது

நட்டத்தில் ஓடும் இலங்கை பேரூந்து – நாள் ஒன்றுக்கு 10 மில்லியன் இழப்பு
நட்டத்தில் ஓடும் இலங்கை பேரூந்து – நாள் ஒன்றுக்கு 10 மில்லியன் இழப்பு
கொவிட்-19 தொற்றுக ;காரணமாக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு
நாளாந்தம் சுமார் பத்து மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுவதாக
அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பொதுப் போக்கு வரத்துச் சேவையின் ஊடாக பயணம் மேற்கொள்ளும்
பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்ததன் காரணத்தினால் போக்கு
வரத்துத் துறை வீழ்சி அடையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை போக்கு வரத்துச் சபைக்கு சொந்தமான ஐயாயிரத்து 300 பஸ்கள்
நாளாந்தம் குறைந்த வருமானத்திலேயே சேவையில் ஈடுபடுவதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

முகக்கவசம் அணியாத 3061 பேருக்கு போலிஸ் எச்சரிக்கை
முகக்கவசம் அணியாத 3061 பேருக்கு போலிஸ் எச்சரிக்கை
முகக்கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியைப் முன்னெடுக்காத 3061 பேருக்கு மேல் மாகாணத்தில் கடந்த 24
மணித்தியாள காலப்பகுதியல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.
முகக்கவசம் அணியாமை தொடர்பில் 2093பேரும் சமூக இடைவெளியைப் முன்னெடுக்காத 968 பேரும் இவ்வாறு
எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக மேல்மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை , இன்று அதிகாலை 5 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை
நடவடிக்கைகளின் போது ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த 349 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பெலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது கஞ்சா போதைப்பொருளை வைத்திருந்த 158 பேரும், ஐய்ஸ் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த 14 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத மதுபானங்களை தம்வசம் வைத்திருந்த 206 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் பிடியாணைப் பிறப்பிக்கப்பட்ட 771 பேரும் இந்த விசேட சோதனையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்
அமிதாப், அபிஷேக் பச்சன் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்கள் – மருத்துவமனை.
அமிதாப், அபிஷேக் பச்சன் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்கள் – மருத்துவமனை.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் அமிதாப் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோரின் சிகிச்சைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.
அமிதாப், அபிஷேக் பச்சன் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்கள் – மருத்துவமனை தகவல்
அமிதாப், அபிஷேக் பச்சன்
இந்தி திரையுலகில் பிரபல நடிகரான அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகிய இருவருக்கும் கொரோனா
பாதிப்பு இருப்பது கடந்த 11ந்தேதி உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் மும்பை நானாவதி
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து நடிகர் அமிதாப்பச்சனின் மனைவி ஜெயா பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கும் கொரோனா
பரிசோதனைகள் செய்யப்பட்டன. இந்த பரிசோதனையின் முடிவில் அபிஷேக் பச்சனின் மனைவி நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும், மகள்
ஆரத்யாவுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. எனினும் ஜெயா பச்சனுக்கு பாதிப்பு இல்லை என மகாராஷ்டிர சுகாதாரத்துறை மந்திரி உறுதிபடுத்தினார்
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகை ஐஸ்வர்யா ராய், அவருடைய மகள் ஆரத்யா ஆகிய இருவரின்
உடல்நிலையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமிதாப்பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகிய இருவரும் இன்னும் ஓரிரு நாள்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் ஐஸ்வர்யா
ராய்க்கு இருமல் இருந்து வந்த நிலையில் தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நடனம் ஆடும் போது கீழே விழுந்த லட்சுமி மேனன்
நடனம் ஆடும் போது கீழே விழுந்த லட்சுமி மேனன்
நடிகை லட்சுமி மேனன் பரதநாட்டியம் ஆடும் போது தவறி விழுந்த வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
நடனம் ஆடும் போது கீழே விழுந்த லட்சுமி மேனன்
லட்சுமி மேனன்
‘கும்கி’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன். இப்படத்தை தொடர்ந்து பாண்டியநாடு, சுந்தர
பாண்டியன், கொம்பன், மிருதன், வேதாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
கடைசியாக விஜய் சேதுபதியுடன் ‘றெக்க’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார். அதற்குப் பின் அவர் நடிப்பில் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
லட்சுமி மேனன்
இந்நிலையில் லட்சுமி மேனன் பரதநாட்டியம் ஆடும் போது கீழே தவறி விழும் வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாகி
வருகிறது. தரையில் தண்ணீர் இருப்பதை கவனிக்காததால் தவறி விழுந்ததாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது

கனடாவில் மலைப் பகுதியில் கவிழந்த பேரூந்து 3பேர் பலி – பலர் காயம்
கனடாவில் மலைப் பகுதியில் கவிழந்த பேரூந்து 3பேர் பலி – பலர் காயம்
கனடாவின் Jasper National Park பகுதியில் உல்லாச பயணிக்களை காவிய படி பயணித்த பேரூந்து ஒன்று திடீரென சாலையை விட்டு கவிழ்ந்ததில்
அதில் பயணித்த மூவர் சம்பவ இடத்தில பலியாகினர் ,மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ,அம்புலன்ஸ் உலங்கு வானூர்தி மூலம் சிலர் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டனர்
மேற்படி விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

டிரம்ப் தேர்தல் பரப்புரை விளம்பரத்தை அகற்றிய டிவிட்டர் – அதிர்ச்சியில் அமெரிக்கா அதிபர்
டிரம்ப் தேர்தல் பரப்புரை விளம்பரத்தை அகற்றிய டிவிட்டர் – அதிர்ச்சியில் அமெரிக்கா அதிபர்
உலக நாடுகளின் முக்கிய தலைவர்கள் அதிகம் பயனப்டுத்தி வரும் டுவிட்டர்
தளத்தில் ஆளும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் தனது தேர்தல் பரப்புரை விளம்பரத்தை புரிந்து வந்தார்
மேற்படி இவரது விளம்பரத்தை டிவிட்டர் அதிரடியாக நீக்கியுள்ளது
குறித்த சமூக வலைதளத்தின் இந்த அதிரடி நடவடிக்கியால் டிரம்ப் கடும் கொதிப்பில் உறைந்துள்ளார்
சீனா வெள்ளத்தில் சிக்கி 14 பேர் பலி
சீனா வெள்ளத்தில் சிக்கி 14 பேர் பலி
தெற்கு சீனாவில் குளம் உடைத்து பாய்ந்ததில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில்
சிக்கி இதுவரை பதின் நான்கு பேர் பலியாகியுள்ளனர்
மேலும் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதினால் சொத்து சேத அழிவு அதிகரித்துள்ளது
தற்போது பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன ,மேலும் வெள்ளம் வீடுகளுக்குள் நுழையாத வண்ணம்
தடுப்பு அரண்கள் கட்ட பட்டு வருகிறது
இந்த வெள்ளமானது 15 அடி உயரம் வரை பாய்ந்துள்ளது குறிப்பிட தக்கது

போதைவஸ்து கும்பலை வேட்டையாடும் இராணுவம்
போதைவஸ்து கும்பலை வேட்டையாடும் இராணுவம்
மெக்சிக்கோவில் போதைவஸ்து கடத்தல் குழு பெரும் அட்டூழியம் புரிந்து
வருகிறது ,இவ்வாறான கிரிமினல் குழுவினால் ஆண்டு தோறும் , பலநூறு மக்கள் படுகொலை செய்ய பட்டு வருகின்றனர்
இவ்வாறானவர்களை கண்டுபிடித்து அழிக்கும் நடவடிக்கையில் இராணுவம் ஈடுபட்டுள்ளது
குறித்த குழுவினர் பதுங்கி இருந்த பகுதியை சுற்றிவளைத்துள்ள இராணுவ முற்றுகை காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித் குமார் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
அஜித்
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித் குமார் வீட்டுக்கு வெடிகுண்டு
மிரட்டல் விடுக்கப்பட்டது. காவல்துறையினர் மோப்பநாய் உதவியுடன்
நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்துள்ளது.
காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகாரை அடுத்து போலீசார் ஆய்வு
செய்தனர். விழுப்புரத்தை சேர்ந்த நபர் மிரட்டல் விடுத்ததாக தகவல் கிடைத்ததை
அடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.







