அமெரிக்கா இராணுவ தளம் மீது கடும் ஏவுகணை தாக்குதல்
அமெரிக்கா இராணுவ தளம் மீது கடும் ஏவுகணை தாக்குதல்
சிரியாவில் உள்ள அமெரிக்காவின் Conoco இராணுவ தளம் மீது கடும் ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,
இந்த
அமெரிக்கா இராணுவத்தின் அதி முக்கிய இராணுவ தளபாடங்கள் மற்றும்
படைகள் குவிக்க பட்டுள்ளன
ஏவுகணை தடுப்பு மையங்களும் அமைய பெற்றுள்ளன
அவ்விதமான உயர் அடுக்கு பாதுகாப்பு கொண்ட இந்த இராணுவ தளம்
மீது வீழ்ந்து வெடித்துள்ள ஏவுகணைகளினால் அமெரிக்கா படைகள் நிலை குலைந்துள்ளன
ஈரான் அதரவு படைகள் இந்த துல்லியமான தாக்குதலை தொடராக நடத்தி வருவதாக தெரிவிக்க படுகிறது
எனினும் இந்த தாக்குதலினால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை

- சவூதி அரேபியா மீதான ‘பதற்றத்தை அதிகரிக்கும்’ ஹூதி தாக்குதல்களை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்

- ஹோர்முஸ் இராணுவம் மற்றும் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் ‘முழுமையான கண்காணிப்பில்’ உள்ளது IRAN

- புதிய அமைச்சரவையில் ஈரான் ஆதரவு குழுக்களை இணைப்பதற்கு ஈராக் அரசாங்கத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது

- அல்பேனியாவின் கலவரம் வங்கிகள் எரிப்பு

- பாகிஸ்தான் பள்ளி கூரை இடிந்து விழுந்ததில் 28 பேர் பலி

சவூதி விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல் – மக்கள் சிதறி ஓட்டம்
சவூதி விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல் – மக்கள் சிதறி ஓட்டம்
சவூதி நாட்டின் முக்கிய Abha சர்வதேச விமான நிலையம் மீது வடக்கு
ஏமனில் உள்ள Ansarallah கிளர்ச்சி படைகள் திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளனர்
கடத்த இரவு ஆள் இல்லா உளவு விமானம் மூலம் இந்த திடீர் தாக்குதலை
நடத்தினர்
இதில் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை
குறித்த கிளர்ச்சி படைகள் மீது சவூதி விமானங்கள் அகோர
தாக்குதலை நடத்தி வந்தன, அதற்க்கு பதிலடியாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது
இந்த ஏவுகணை வீழ்ந்து வெடித்த வேளை மக்கள் சிதறி ஓடினர் என தெரிவிக்க படுகிறது

- சவூதி அரேபியா மீதான ‘பதற்றத்தை அதிகரிக்கும்’ ஹூதி தாக்குதல்களை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்

- ஹோர்முஸ் இராணுவம் மற்றும் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் ‘முழுமையான கண்காணிப்பில்’ உள்ளது IRAN

- புதிய அமைச்சரவையில் ஈரான் ஆதரவு குழுக்களை இணைப்பதற்கு ஈராக் அரசாங்கத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது

- அல்பேனியாவின் கலவரம் வங்கிகள் எரிப்பு

- பாகிஸ்தான் பள்ளி கூரை இடிந்து விழுந்ததில் 28 பேர் பலி

உணவில் நஞ்சு 25 பேர் பாதிப்பு – நோர்வேயில் பயங்கரம்
உணவில் நஞ்சு 25 பேர் பாதிப்பு – நோர்வேயில் பயங்கரம்
நோர்வேயில் சட்ட விரோதமாக இடம்பெற்ற விருந்து பாட்டி ஒன்றில்
இருபத்தி ஐந்து பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இவர்கள் உண்ட உணவில் நஞ்சு ஊறிய நிலையில் இருபத்தி ஐந்து
பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும் ஐவர் அப்பதான நிலையில் உள்ளனர்
இதில் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களும் அடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது
குறித்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
சிரியாவுக்குள் குவிக்க படும் துருக்கி இராணுவம் – பதட்டம் அதிகரிப்பு
சிரியாவுக்குள் குவிக்க படும் துருக்கி இராணுவம் – பதட்டம் அதிகரிப்பு
சிரியாவின் வடக்கு இட்லீ பகுதியை இலக்கு வைத்து துருக்கிய அரச பயங்கரவாத இராணுவம் குவிக்க பட்டு வருகிறது .
இதுவரை இடம் பெற்று வரும் சமாதான கால பகுதியில் மட்டும் 6,225 இராணுவ
வாகனங்களுடன் துருக்கி இராணுவம் குவிக்க பட்டுள்ளதாக சரத்வதேச யுத்த கண்காணிப்பு குழு அறிவித்துள்ளது
லிபியா ,சிரியா ,ஈராக் பகுதிகளில் துருக்கி இராணுவத்தை குவித்து வருகிறது
இதனால் நாடுகளுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது
சிரியாவில் ஒன்பது ஆண்டுகள் கடந்து பல் நாட்டு படைகள் ஆக்கிரமிப்பு போர் நடவடிக்கை தொடர்ந்த வண்ணம் உள்ளது ,
இந்த போரில் மூன்று லட்சத்திற்கு அதிகமான மக்கள் பலியாகியும்
,இருபது லட்சத்திற்கு அதிகமான மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளமை குறிப்பிட தக்கது

- சவூதி அரேபியா மீதான ‘பதற்றத்தை அதிகரிக்கும்’ ஹூதி தாக்குதல்களை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்

- ஹோர்முஸ் இராணுவம் மற்றும் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் ‘முழுமையான கண்காணிப்பில்’ உள்ளது IRAN

- புதிய அமைச்சரவையில் ஈரான் ஆதரவு குழுக்களை இணைப்பதற்கு ஈராக் அரசாங்கத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது

- அல்பேனியாவின் கலவரம் வங்கிகள் எரிப்பு

- பாகிஸ்தான் பள்ளி கூரை இடிந்து விழுந்ததில் 28 பேர் பலி

கடும் ரொக்கட் தாக்குதல் – அதிரும் போர்முனை
கடும் ரொக்கட் தாக்குதல் – அதிரும் போர்முனை
சிரியாவின் தெற்கு இட்லீ பகுதியை குறிவைத்து பல் குழல் ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுளள்து
சுமார் ஒருமணித்தியாலம் இடை விடாது நடத்த பட்ட இந்த தாக்குதலில்
துருக்கி மற்றும் துருக்கிய ஆதரவு படைகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளதாக இராணுவ மையம் தெரிவித்துள்ளது
தொடர்ந்து இரு பகுதிக்கும் இடையில் பர்ஸபர மோதல்கள் வெடித்து பறக்கின்றன

- சவூதி அரேபியா மீதான ‘பதற்றத்தை அதிகரிக்கும்’ ஹூதி தாக்குதல்களை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்

- ஹோர்முஸ் இராணுவம் மற்றும் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் ‘முழுமையான கண்காணிப்பில்’ உள்ளது IRAN

- புதிய அமைச்சரவையில் ஈரான் ஆதரவு குழுக்களை இணைப்பதற்கு ஈராக் அரசாங்கத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது

- அல்பேனியாவின் கலவரம் வங்கிகள் எரிப்பு

- பாகிஸ்தான் பள்ளி கூரை இடிந்து விழுந்ததில் 28 பேர் பலி

ரணில் மீது விசாரணை – கோட்டா அரசு அதிரடி நகர்வு
ரணில் மீது விசாரணை – கோட்டா அரசு அதிரடி நகர்வு
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் பிரதமர்
ரணில் விக்கிரமசிங்க, இன்று (31) ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில்
ஆஜராகியுள்ளாரென அந்த ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு வாக்குமூலமளிப்பதற்காக, இந்த மாதம் 21ஆம் திகதி முன்னாள்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைக்கப்பட்டிருந்த போதும், அன்றைய தினம் தன்னால் வரமுடியாது என்றும், இன்றே தன்னால்
ஆஜராக முடியுமென ரணில் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க, தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில்
கலந்துகொண்டிருந்தமை தொடர்பாக வாக்குமூலமளிக்கவே இன்று அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வாகனங்கள், விலை திடீரென அதிகரிப்பு
இலங்கையில் வாகனங்கள், விலை திடீரென அதிகரிப்பு
இலங்கையில் வாகனகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டு பட்டால் தற்போது
இலங்கை சந்தையில் வாகனங்களின் விலை அதிகரிக்க பட்டுள்ளது
வாகன இறக்குமதியை அரசு குறைத்த நிலையில் இந்த விலை அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
லெபனான் குண்டு வெடிப்பு 24 இலங்கையர்கள் பாதிப்பு
லெபனான் குண்டு வெடிப்பு 24 இலங்கையர்கள் பாதிப்பு
லெபனானில் இடம்பெற்ற கூட்னு வெடிப்பு சம்பவத்தில் சிக்கி
இருபத்தி நான்கு இலங்கையர்கள் பாதிக்க பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது
காயமடைந்த அனைவரையும் இலங்கைக்கு அழைத்து வரும்
நடவடிகை தீவிர படுத்த பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்க படுகிறது
கிழக்கு தமிழர்களின் குரல் நானே – வியாழேந்திரன் கொக்கரிப்பு
கிழக்கு தமிழர்களின் குரல் நானே – வியாழேந்திரன் கொக்கரிப்பு
பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் சரி வெளியேயும் சரி கிழக்கு தமிழர்களுக்கான ஒரே ஒரு பலமான குரல் நாம் மாத்திரமே என்பது
எமது மக்களுக்கு நன்றாக தெரியும் என தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
துறைநீலாவணையில் நேற்று முன்தினம் (29) சனிக்கிழமை நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்திருந்தார்.
துறைநீலாவனை பொது மக்களும் துறையூர் முற்போக்கு தமிழர் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சருக்கு மலர் மாலைகள் அணிவித்து,
பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவம் அழிக்கப்பட்டது. இதன்போது மேலும் அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழ் தேசிய
கூட்டமைப்பில் இருக்கும் போதே நாங்கள் முற்போக்கு தமிழர் அமைப்பு என்று சகல போராட்டங்களையும் முன்னெடுத்திருந்தோம். அது அனைவருக்கும் தெரியும், அதனால்
தான் எமது மக்கள் இம்முறை கட்சியை பார்க்காமல் எமக்கு வாக்களித்து, எம்மை வெற்றி பெறச் செய்து மீண்டும் பாராளுமன்றம் அனுப்பி வைத்துள்ளார்கள்.
கடந்த காலங்களில் சிலர் கூறியிருந்தார்கள் நான் வீட்டில் கேட்டதனால்தான் வெற்றிபெற்றிருந்தேன் என்று, அப்படியானால் இம்முறை நாம் எப்படி வெற்றிபெற்றோம், இவை அனைத்தும்
வீட்டிற்கு கிடைத்த வாக்குக்களா, எம்மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். எம்மை பொறுத்தவரை உரிமையோடு கூடிய அபிவிருத்தி சார்ந்த அரசியலை நாங்கள் இந்த
மாகாணத்தில் கட்டியெழுப்பவேண்டும். இந்த மாவட்டத்தில் 58.9 வீதமாகவிருந்த நாங்கள் தற்போது 38.6 வீதமாக இருக்கின்றோம். எமது இன, வள, பொருளாதாரம் போன்ற பல்வேறுபட்ட துறை
சார்ந்த வளர்ச்சி என்பது ஒரு அசமந்த போக்கில்தான் தமிழர்களை பொறுத்தவரையில் சென்றுகொண்டிருக்கின்றது. இந்த நிலைமை
மாற்றியமைக்கப்படவேண்டும். இதனடிப்படியில் ஆரோக்கியமான ஒரு அரசியலை நாம் இந்த மாகாணத்தில் கட்டியெழுப்ப வேண்டும்.
இந்த மாகாணத்திலே பல பிரச்சனைகளோடு, வேதனைகளோடு, சவால்களோடு இருக்கின்ற ஒரே ஒரு சமூகமென்றால் அது தமிழ் சமூகமாகத்தான் இருக்கும். இதை யாரும் மறுக்கவும் முடியாது
மறைக்கவும் முடியாது. இவற்றை எல்லாம் கருத்திற்கொண்டு எமது மக்கள் எமக்குத் தந்த அங்கீகாரத்தைக் கொண்டு பிரதமர் அவர்களுடைய வழிகாட்டலில் பொதுஜன பெரமுன கட்சியின்
தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ அவர்களது நெறிப்படுத்தலில் இந்த தபால் சேவைகள் மற்றும் வெகுஜன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு எமக்கு கிடைத்துள்ளது. இந்த
அமைச்சின் ஊடாக நாங்கள் எமது மக்களை பாதுகாப்பதுடன், எமது பணிகளை நாடு பூராகவும் முன்னெடுக்கவுள்ளோம் என தெரிவித்தார்..
போலீசார் திடீர் தேடுதல் வேட்டை – 400 பேர் கைது
போலீசார் திடீர் தேடுதல் வேட்டை – 400 பேர் கைது
மேல் மாகாணத்தில் நேற்று காலை 6 மணி தொடக்கம் இன்று காலை 5 மணி வரையிலான காலப்பகுதியில் பொலிஸார்
மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் போதைப்பொருள் சட்டவிரோத
செயற்பாடுகள் தொடர்பில் 400 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கெரோயின் போதைப்பொருளுடன் தொடர்புடைய 171 தேடுதல் நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் 171 பேர் சந்தேகத்தின் பேரில்
கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா போதைப்பொருள் தொடர்பில் 94 பேர் கைது
செய்யப்பட்டுள்ளதுடன் சட்டவிரோத மதுபானம் தொடர்பில் 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
மக்களுக்கு தனி வீடுகளை வழங்குவோம் -ஜீவன் தொண்டமான முழக்கம்
மாடிவீடு என்ற போலி கதைகளை நம்பவேண்டாம். தனி வீடுகளையே நாம் அமைப்போம்.’ – என்று இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
கலைஞர்களை நாம் ஊக்குவிக்கவேண்டும் என்பதுடன் அவர்களுக்கான களத்தை அமைத்துக்கொடுத்து உரிய அங்கீகாரம் வழங்கவேண்டும். கலைஞர்கள் வாழ்ந்தால் மட்டுமே கலைகள்
வாழும். அவ்வாறு இல்லாவிட்டால் கலைகள் அழிந்துவிடும். எனவே, கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்காமல் கலைகளை பாதுகாக்கமுடியாது. அதனை நாம் நிச்சயம் செய்வோம் என்றும்
அவர் கூறினார்.thumbnailசௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் கீழ் இயங்கும் தொண்டமான் கலாச்சார
நிலையத்தில் 9ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு (30.08.2020) நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்நிகழ்வின் போது ரம்பொடை சௌமியமூர்த்தி தொண்டமான் கலாச்சார நிலையத்தின் அழகியற் கல்லூரி மாணவர்களின் கலை, கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.thumbnail JEEvan
thondaமலையகத்துக்கான வீட்டுத்திட்டம் தொடர்பில் பிரதமருடன் அண்மையில் கலந்துரையாடல் நடத்தினோம். எனினும், மாடி வீடு, மாடி வீடு என அது தொடர்பில் தவறான கருத்து
பரப்பட்டுவருகின்றது. கூரைக்கு பதிலாக ‘கொங்ரீட்’ போட்ட தனி வீடுகளையே நாம் அமைக்கவுள்ளோம். எனவே,
போலித்தகவல்களை நம்பவேண்டாம். விரைவில் உண்மை என்னவென்பதை உங்களால் நேரில் காணமுடியும்.
சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மண்டபத்தின்கீழ் நான்கு நிறுவனங்கள் வருகின்றன. அவை தொடர்பிலும்
கலந்துரையாடினோம். மேற்படி நிறுவனங்களில் வளப்பற்றாக்குறை இருந்தது. அவை குறித்து சுட்டிக்காட்டினோம்
பொலிஸ் வேட்டை – 28 ஆண் பெண்கள் கைது
பொலிஸ் வேட்டை – 28 ஆண் பெண்கள் கைது
பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபாசாரம் ஒன்றில் போதைப்பொருள்களுடன் இருந்த 28 இளைஞர், யுவதிகளை அக்மீமன பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள் 26 இளைஞர்களும் 2 யுவதிகளும் உள்ளடங்குவதாகவும் இவர்கள் மாத்தளை,
அநுராதபுரம், மொரட்டுவ, அம்பாறை மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கராப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரால் இந்த விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் இவ்வாறு
கைதுசெய்யப்பட்ட அனைவரும் விஷ போதைப்பொருள்களை பயன்படுத்தியமை மற்றும் தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களை
மீறியமை ஆகியவற்றின் கீழ், இன்று காலி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக அக்மீமன பொலிஸார் தெரிவித்துள்ளனர்
பதுளையில் போதையில் குழந்தையை சுட்ட தந்தை
பதுளையில் போதையில் குழந்தையை சுட்ட தந்தை
அதிக மதுபோதையில் இருந்த தந்தையொருவர், இரண்டு வயதான தனது மகன் மீதும் தன் மதும் கட்டுத்ததுப்பாக்கியால் சுட்டதால்,
இருவரும் பலத்த காயங்களுடன் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், பசறை- பிபிலேகம பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய தந்தையே, இவ்வாறு துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்.
இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், அதிக மதுபோதையில் இருந்ததாகத் தெரிவித்துள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பில்
மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
கண்டியில் உணரப்பட்ட அதிர்வு – நில நடுக்கம் அல்ல
கண்டியில் உணரப்பட்ட அதிர்வு – நில நடுக்கம் அல்ல
கண்டியில் நேற்றிரவு உணரப்பட்ட அதிர்வு நில நடுக்கம் அல்ல என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கண்டியில் ஹாரகம , அனுரகம மயிலப்பிட்டிய ஆகிய பிரதேசங்களில்
மக்கள் நேற்றிரவு 8.38 அளவில் ஒரு வகையான சத்தத்துடன் அதிர்வொன்று ஏற்பட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து தலாத்துஓயா பொலிசாருக்கு மக்கள் அறிவித்தனர்
இதுதொடர்பாக புவிச்சரிதவியல் மற்றும் இரத்தினக்கல் அகழ்வு ஆராய்ச்சிப் பணியகம் தெரிவிக்கையில் ,குறிப்பிட்ட இந்த
பிரதேசங்களில் நில நடுக்கம் எதுவும் பதிவாகவில்லை என்று குறிப்பிட்டனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழுவொன்று இன்று பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும்
புவிச்சரிதவியல் மற்றும் இரத்தினக்கல் அகழ்வு ஆராய்ச்சிப் பணியகம் மேலும் தெரிவித்தது.
காரைநகர் கடல்வழியாக நடத்த பட்ட பெரும் தங்க கடத்தல் முறியடிப்பு
காரைநகர் கடல்வழியாக நடத்த பட்ட பெரும் தங்க கடத்தல் முறியடிப்பு
இந்தியாவில் இருந்து காரைநகர் கடல்வழியாக இலங்குக்குள் ஐந்து கிலோவுக்கு
மேற்பட்ட தங்கத்தை கடத்திவர முற்ப்பட்ட பொழுது அவை கடற்படையினரின்
தீவிர ரோந்து கண் காணிப்பினால் முறியடிக்க பட்டுள்ளதாக வடக்கு கடல் படை தலைமையகம் அறிவித்துள்ளது
இந்த கடத்தலை மேற்கொண்ட நபர்கள் கைது செய்ய பட்டுள்ளதாக சிங்கள கடற்படையினர் தெரிவித்துள்ளனர்
கட்டுநாயக்கா விமான நிலையம் மக்கள் பாவனைக்கு முழுமையாக திறக்க படுகிறது
கட்டுநாயக்கா விமான நிலையம் மக்கள் பாவனைக்கு முழுமையாக திறக்க படுகிறது
இலங்கை தலைநகர் அருகில் அமைந்துள்ள கட்டு நாயாக்க சர்வதேச
விமான நிலையம் மீள் மக்கள் பாவனைக்கு திறக்கப்படவுள்ளதாக முக்கிய அமைச்சர் தெரிவித்துள்ளார்
கொரனோ நோயின் தாக்குதல் அச்சறுத்தல் உள்ளபோதும் வெளிநாடுகளில்
இருந்து இலங்கைக்குள் நுழைபவர்க்ள அடையாளம் காணப்பட்டால் அவர்கள்
தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க பட்ட பின்னர் விடுதலை செய்யும் சுழற்றி முறையினை அரசு கையாள உள்ளதாக தெரிவிக்க படுகிறது
வீழ்ந்து கிடக்கும் பொருளாதரத்தை இத்துடன் நிமிர்த்தி விட இலங்கை ஆளும் அரசு முயற்சிப்பது குறிப்பிட தக்கது
கூட்டுறவு சங்கங்கள் – நிறுவனங்களின் செயற்பாடுகள் திருப்தியானதாக இல்லை- வடக்கு ஆளுநர்
கூட்டுறவு சங்கங்கள் – நிறுவனங்களின் செயற்பாடுகள் திருப்தியானதாக இல்லை- வடக்கு ஆளுநர்
வட மாகாண கூட்டுறவு சங்கங்கள் மற்;றும் நிறுவனங்களின் செயற்பாடுகள் திருப்தி கரமானதாக இல்லை என்று வட மாகாண தெரிவித்துள்ளார்.
இலங்கை மட்டுமல்ல உலக நாடுகளின் பொருளாதார வளர்;;ச்சியென்பது கூட்டுறவுத் துறையின் செயற்பாடுகள் மற்றும் வளர்ச்சியைப் பொறுத்தே அமைந்துள்ளது. சீனாவிலுள்ள
பெரும்பாலான வங்கிகள் விவசாய வங்கிகளே. இத்தாலி நாட்டிலுள்ள பெரும்பாலான பல்பொருள் அங்காடிகள் கூட்டுறவுத்துறையினரதே. அங்கிருக்கும் இறைச்சி, பற்பசை உட்பட அனைத்தும் கூட்டுறவுத்துறையின் தாயாரிப்புக்களாவே
காணப்படுகின்றது. எனவே, கூட்டுறவுத்துறையென்பது ஒரு நாட்டின் முதுகெலும்பாக அமைகின்றது. ஆனால், நமது
மாகாணத்தில் அத்துறையொரு தோல்வியின் துறையாக மாறிக்கொண்டிருக்கின்றது என்றும் அவர் கூறினார்.
வட மாகாணக் கூட்டுறவு திணைக்கள அதிகாரிகள், கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்கள் மற்றும் முகாமையாளர்கள் கலந்துகொண்ட கலந்துரையாடலொன்று வட மாகாண ஆளுநர்
திருமதி.பீ.எஸ்.எம்.சாளஸ் தலைமையில் (27-8-2020); ஆளுநர் செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் வட மாகாணப் பிரதம் செயலாளர், ஆளுநரின் செயலாளர், கூட்டுறவுத் திணைக்கள ஆணையாளர் கலந்துகொண்டனர்.
கூட்டுறவு சங்கங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் சவால்களையும் கேட்டறிந்த ஆளுநர் மேலும் தெரிவிக்கையில் , கூட்டுறவே நாட்டுயர்வு என்று கூறுவார்கள். அவ்வடிப்படையில்
பார்த்தால் நமது மாகாணத்திலுள்ள பெரும்பாலான கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் வளர்ச்சியடையாமலும் சில
சங்கங்கள் இயங்காமலும் உள்ளதாக எனக்களிக்கப்பட்ட அறிக்கையினூடாக அறிந்துகொண்டேன். அப்படிப் பார்க்கும்போது மாகாண அரசு எவ்வளவு முயன்றும் முன்னேற்றத்தைக் காணமுடியவில்லை. அதற்குக் காரணம் என்னவென்பது எனக்குத் தெரியவில்லை. கூட்டு உறவாக இல்லாமல் தனிமனித சிந்தனையுள்ளவர்களாக நாமிருப்துதான் காரணமாக இருக்குமோவென நான் நினைக்கின்றேன்.
மக்களோடு இணைந்திருக்கும் ஒரு திணைக்களம் தான் இந்தக் கூட்டுறவுத் திணைக்களம். அதற்குப் பரந்த செயற்பாடுகளும் அதிகாரங்களும் இருக்கின்றன. அதனூடாகப் பல கடமைகள்
இருக்கின்றன. நமது பொருளாதாரத்தையும் தமத வர்த்தக செயற்பாடுகளையும் வளர்த்தெடுப்பதற்கான கடப்பாடு
கூட்டுறவுத்துறைக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால், அப்படிப்பட்ட ஒரு துறையின் செயற்பாடுகள் சீரான முன்னேற்றப் பாதையில் இல்லையென்பதே கவலையளிக்கின்ற விடயமாகவுள்ளது.
சீரழிந்துபோயிருக்கின்ற நமது மாகாணத்தின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவேண்டுமென்றால் மக்களோடு மக்களாகவிருக்கும் கூட்டுறவுத்துறையின் செயற்பாட்டில்தான் உள்ளது. தனிமனித
செயற்பாடுகளையும் சிந்தனைகளையும் தவிர்த்துப் பொது நலனில் அக்கறை கொண்டவர்களாக கூட்டுறவுத்துறையைச் சார்ந்தவர்கள் செயற்படவேண்டும். அப்போதுதான் மாகாணசபையின்
ஒத்துழைப்பை தொடர்ந்தும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்க இயலும். கூட்டுறவுத்துறையின் வளர்ச்சியின்மை தொடர்பான தெளிவானதும் துள்ளியமானதுமான அறிக்கையை
கூட்டுறவுத்திணைக்கள ஆணையாளர்கள் மற்றும் பணிப்பாளர்கள் எனக்குப் சமர்ப்பிக்கவேண்டும்.
கூட்டுறவு சங்கங்களின் வளர்ச்சியிலும் செயற்பாடுகளிலும் ஒத்துழைக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நமது உற்பத்தி மற்றும் தேவைகள் பற்றிய ஒரு திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும். நமக்குத் தேவையான அனைத்தையும்
கூடுமானவரை நாமே உற்பத்தி செய்துகொள்ளவேண்டும். வெளியிலிருந்து கொள்வனவு செய்வதைக் குறைக்கவேண்டும். நமது உற்பத்திப் பொருட்களின் சந்தைப்படுத்தலையும் நாமே
செய்யவேண்டும். வெளிநபர்கள் அதைச் செய்வதைத் தவிர்க்கவேண்டும். தொழிற்துறைகள் வளரவில்லையென்றால் ஆணையாளர்களும் பணிப்பாளர்களும் அதற்குப் பொறுப்பேற்க
வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை கூட்டுறவுத் திணைக்களம் முன்னெடுக்கவேண்டும் என்று தெரிவித்தார்.
மூல நோய் வரக்காரணமும் தடுக்கும் வழிமுறைகளும்
மூல நோய் வரக்காரணமும் தடுக்கும் வழிமுறைகளும்
சில கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் மூல நோய் (Piles) வரும். இது தற்காலிகமானது தான் என்றாலும் கவனமாக இருக்க வேண்டும்.
கர்ப்பிணிகளுக்கு மூல நோய் வரக்காரணமும் தடுக்கும் வழிமுறைகளும்
கர்ப்பிணிகளுக்கு மூல நோய் வரக்காரணமும் தடுக்கும் வழிமுறைகளும்
மூல நோய்… இந்த நோய் வந்தாலோ அல்லது இந்த நோய் அறிகுறிகள் இருந்தாலோ பெரும்பாலும் இதை வெளியில் யாரும் சொல்வது இல்லை. சில கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் மூல
நோய் (Piles) வரும். இது தற்காலிகமானது தான் என்றாலும் கவனமாக இருக்க வேண்டும். தற்போது சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை மூல நோய் வருவதாக சொல்லப்படுகிறது.
மூல நோய் பிரச்னையை சரி செய்யும் வழிகளைப் பார்க்கலாம். சரியாக மலக் கழிக்காத குழந்தைகள், இளம் பருவத்தினர், 40
வயதைக் கடந்த ஆண், பெண் இருப்பாலினருக்கும் ஆசனவாயில் மூன்று பிரச்னைகள் வருகின்றன.
- மூலம் (Piles)
2.ஆசனவாய் வெடிப்பு(Fissure)
- மூன்றாவது, பௌத்திரம் (Fistula)
உடலில் அசுத்த ரத்தம் செல்லும் சிரை ரத்தக் குழாய்களில் சரியான இடைவெளிகளில் வால்வுகள் இருக்கும். இவை தேவையில்லாமல் ரத்தம் தேங்கி நிற்பதைத் தடுக்கும். ஆனால், நம் உடலில் ஏதாவது ஒரு காரணத்தால் ரத்தம் தேங்கி, சிறிய பலூன் போல ரத்தக் குழாய் வீங்குவதே ‘மூலநோய்’ என்கிறோம்.
ஆசன வாயின் உள்ளே சளிப்படலத்தில் உருண்டையாகப் புதைந்து இருப்பது ‘உள் மூலம்’. தொட்டுப் பார்த்து கண்டுபிடிக்க முடியாது.
மருத்துவரால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். வெளிப்புறத்தில் தோன்றுவது ‘வெளி மூலம்’. இதைத் தொட்டுப் பார்த்தே கண்டு பிடிக்கலாம்.
அறிகுறிகள்…
மலம் கழிக்கையில் ரத்தம் சொட்டுவது மலத்துடன் ரத்தமும் வெளி வருதல் மலம் கழித்த பின் லேசாக ஆசன வாயில் வீக்கம்
மலம் இறுகி எளிதில் வெளியேறாது
அடிக்கடி சிறுகச் சிறுக வயிறு மற்றும் ஆசன வாயில் வலி, எரிச்சலுடன் மலம் கழித்தல்.
மூல சதை வெளித்தள்ளுதல்
செரிமான பிரச்னை
புளித்த ஏப்பம்
யாருக்கெல்லாம் மூல நோய் வரலாம்?
நீண்ட தூரம் பைக் ஓட்டுபவர்கள் காரமான உணவுகளை உண்பவர்கள் அதிகமாக நின்று கொண்டே இருப்பவர்கள்
வெரிகோஸ் வெயின் பிரச்னை உள்ளவர்கள் உடல்பருமன் அதிக எடை தூக்குபவர்கள் மலம், சிறுநீர் அடக்குபவர்கள் உட்கார்ந்தே வேலை செய்யும் பணியாளர்கள்
மூல நோய் வர என்ன காரணம்?
இந்த வீக்கம் ஏற்பட பலக் காரணங்கள் உண்டு. அவற்றில், நாட்பட்ட மலச்சிக்கல் தான் மிக முக்கியமான காரணம். மலச்சிக்கல்
இருக்கும் போது, முக்க வேண்டியுள்ளதால் ஆசன வாயுக்கு அதிக அழுத்தம் தரப்படுகிறது. இதனால் மூல நோய் வருகிறது.
கர்ப்பிணி களுக்கு மூல நோய்…
கர்ப்பிணிகளின் வயிற்றில் கரு வளர வளர அடிவயிற்று உறுப்புகள் கீழ்நோக்கித் தள்ளப்படும். ஆசனவாய் குழாய்களில் அழுத்தம் ஏற்படுவதால் வீக்கம் உண்டாகும். இதனால் சில கர்ப்பணிகளுக்கு அக்காலத்தில் மட்டும் மூலநோய் வருகிறது. சிலருக்குப் மரபியல் மூலமாகவும் மூலநோய் வரலாம்.
வீட்டு வைத்திய முறைகள்…
ஆமணக்கு இலையை நெய் விட்டு இளஞ்சூடாக வதக்கவும். இரவு தூங்கும் முன்பு, மூலம் உள்ள இடத்தில் வைத்து உறங்கலாம். அரை
ஸ்பூன் கடுக்காய் தூளை இளஞ்சூடான தண்ணீரில் கலந்து இரவில் குடிக்க வேண்டும். துத்திக் கீரையை நறுக்கி அதனுடன்
பாசிப்பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய் விட்டு கடைய வேண்டும்.
வாரம் இரண்டு முறை மதிய உணவுக்குப் பின் சாப்பிட்டு வரலாம். நார்ச்சத்து அடங்கிய உணவுகளை உட்கொள்வது மிகவும் முக்கியமாகும். காலையும் மாலையும் துத்தி இலையை அரைத்து
ஒரு நெல்லிக்காய் அளவு விழுங்கிய வுடன் மோர் குடிக்கலாம். மதிய உணவில், 5 சின்ன வெங்காயத்தை வைத்துக் கொண்டு சாப்பிடும் பழக்கம் இருப்பவர் களுக்கு பைல்ஸ் வராது.
அத்திப் பழத்தை இரவில் ஊற வைத்து விட்டு மறுநாள் காலை அதை நன்கு மென்று சாப்பிடவும். அந்த நீரையும் குடித்து விடுங்கள்.
மாதுளை தோலை சுத்தம் செய்து விட்ட பின் நீரில் போட்டு கொதிக்க விட்ட பின்னர் அதை வடிகட்டி அந்த நீரை குடித்து வரலாம்.
மூலம் வராமல் இருக்க என்ன சாப்பிட வேண்டும்?
தினமும், நார்ச்சத்து உணவுகளை சாப்பிடுங்கள். பச்சை நிற காய்கறிகள் அனைத்துக் கீரைகள் பீன்ஸ், அவரை புடலங்காய் வெண்டை காய் தினம் ஒரு கீரை சிவப்பரிசி சாதம், கைக்குத்தல் சாதம் 2-3 வகை பழங்கள் வாழைப்பழம் அவசியம் பப்பாளி சாத்துகுடி, கமலா பழம் 2- 3 லிட்டர் தண்ணீர்
தவிர்க்க வேண்டியவை
சப்பாத்தி, பரோட்டா இரும்பு சத்து மாத்திரைகள் காரம், புளிப்பு உணவுகள் அதிகமான அசைவ உணவுகள் பீட்சா, பர்கர் சீஸ் உள்ள பேஸ்டி உணவுகள் பசை போல இழுக்கின்ற உணவுகள் மைதா உணவுகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.
பிக்பாஸ் 4 சீசனில் பிரபல கவர்ச்சி நடிகை
.பிக்பாஸ் 4 சீசனில் பிரபல கவர்ச்சி நடிகை
நடிகர் கமல் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் 4வது சீசனில் பிரபல கவர்ச்சி நடிகை கலந்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் 4 சீசனில் பிரபல கவர்ச்சி நடிகை
பிக் பாஸ் 4
வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக இந்திய தொலைகாட்சிகளிலும்
ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியில் இதுவரை 13 சீசன்கள் முடிந்துள்ளது.
தமிழில் 3 சீசன்கள் முடிந்துள்ளது. இதனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ் பிக்பாஸின் 4-வது சீசன் நடக்குமா என்பது கேள்விக்குறியாக
இருந்தது. சமீபத்தில் இதன் புரமோ வெளியாகி பிக்பாஸ் 4 சீசன் விரைவில் தொடங்க இருப்பதாக உறுதி செய்யப்பட்டது.
நடிகை கிரண்
இதில் பங்கு பெறும் போட்டியாளர்கள் யார் யார் விபரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கும் நிலையில், பிரபல கவர்ச்சி
நடிகை கிரண் பிக்பாஸ் 4 சீசனில் கலந்துக் கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
நடிகை கிரண், தமிழில் ஜெமினி, வில்லன், வின்னர் உள்ளிட்ட படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவில் இருந்து மீண்ட நடிகை ஜெனிலியா
கொரோனாவில் இருந்து மீண்ட நடிகை ஜெனிலியா
தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஜெனிலியா, கொரோனாவில் இருந்து மீண்டு இருப்பதாக கூறியிருக்கிறார்.
கொரோனாவில் இருந்து மீண்ட நடிகை ஜெனிலியா
ஜெனிலியா
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பாலிவுட் பிரபலங்கள் பலரும்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் கொரோனா தொற்றால்
பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்பு அவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர்.
இந்நிலையில் நடிகை ஜெனிலியா கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும், தற்போது அதிலிருந்து குணமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியதாவது, ‘கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு எனக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 21 நாட்களாக எனக்கு எந்த
அறிகுறியும் இல்லை. கடவுளின் ஆசிர்வாதத்தால் இன்று எனக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்துள்ளது.
இந்த நோய்த்தொற்றுக்கு எதிராக என்னுடைய போராட்டம் எளிமையானதாக இருந்ததற்கு கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன்








