Posted in உளவு செய்திகள்

சிரியாவில்- ரசியா புதியவகை குண்டு வீச்சு சோதனை

சிரியாவில்- ரசியா புதியவகை குண்டு வீச்சு சோதனை

சிரியாவில் அகல கால்பதித்துள்ள ரசியா தனது அதி முக்கிய சண்டை

விமானங்களில் அதி உயர் ரக வெடிகுண்டுகளை தாங்கி சென்று தாக்கும்

திறன் வாய்ந்த புதுவகை குண்டு வீச்சு சோதனையை நடாத்தியுள்ளதாக ரசியா பாதுகாப்பு அமைச்சு அதிரடியாக அறிவித்துள்ளது

அத்துடன் மேலும் நாப்பது புதிய ஒப்பந்தங்களில் சிரியா ,ரசியா கைச்சாத்திட்டுள்ளது ,


இவை ஆளும் அசாத் அரசை காப்பாற்றும் முகமாகவும் ,சிரியாவுக்குள்

அத்துமீறி ஆக்கிரமிப்பு நடத்தி வரும் பல் நாட்டு படைகளை அந்த மண்ணில்

இருந்து விலக வைக்கும் புதிய தந்திரோபாய நகர்வுகளில் ஒன்றாகவும் அமைய பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

Posted in உளவு செய்திகள்

உலக நாடுகளுக்கு உளவு விமானத்தை விற்க போகிறோம் – அமெரிக்காவை அலறவிட்ட -ஈரான்

உலக நாடுகளுக்கு உளவு விமானத்தை விற்க போகிறோம் – அமெரிக்காவை அலறவிட்ட -ஈரான்

உலக சண்டியர் அமெரிக்காவுக்கு எதிராக பலம் பெற்று வரும் ஈரான்

புதிதாக தாம் தயாரித்துள்ள புதியவகை உளவு விமானங்களை

சர்வதேச சந்தையில் விற்க போவதாதாக அதிரடியாக அறிவித்துள்ளது

சர்வ தேச சந்தையில் உள்ள தமது ஆயுத கொள்வனவு வாடிக்கையாளர்களுக்கு

இந்த விமானங்களை விற்க போகிறோம் என தடாலடியாக

அறிவித்து அமெரிக்கா ,இஸ்ரேலை அலற வைத்துள்ளது ஈரான்

ஈரானின் முக்கிய தளபதி சோலைமானி படுகொலை செய்ய பட்டதன்

பின்னர் இந்த அதிரடி அறிவிப்பை ஈரான் வெளியிட்டுள்ளது அமெரிக்கா இஸ்ரேலுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

கொரனோ எதிரொலி – பிரிட்டனின் ஒரு பகுதியில் உணவகங்கள் ,பார்கள் அடித்து பூட்டு

கொரனோ எதிரொலி – பிரிட்டனின் ஒரு பகுதியில் உணவகங்கள் ,பார்கள் அடித்து பூட்டு

பிரிட்டனில் குளிர்காலத்தை முன்னிட்டு மீள வேகமாக பரவி வரும்

கொரனோ நோயின் தாக்குதலினால் பிரிட்டன் மன்ஸிஸ்டர் பகுதி பலமாக பாதிக்க பட்டுள்ளது

இதே பகுதியில் உள்ள போல்டன் எனும் பிரதேசத்தில் உள்ள பார்கள் ,உணவகங்கள்

,இரவுகளியாட்ட விடுதிகள் என்பன நடத்த தடைகள் விதிக்க பட்டுள்ளன ,

உணவகங்களில் டெக்கே வே மட்டும் சுகாதாரமுறைக்கு உட்படுத்த பட்டு எடுத்து செல்ல அனுமதிக்க படுகிறது

இங்கே ஒருலட்சம் பேரில் 120 பேர் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளது

கண்டுபிடிக்க பட்டுள்ளதை அடுத்து சுகாதார அமைச்சின்

வேண்டுகோளுக்கு இணங்க இந்த தடை உத்தரவுகள் பிறப்பிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

    Posted in பிரித்தானிய செய்தி

    பிரிட்டனில் கொரனோ தாக்குதல்-57,400 பேர் பலி

    பிரிட்டனில் கொரனோ தாக்குதல்-57,400 பேர் பலி

    பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை

    சுமார் 57,400 பேர் பலியாகியுள்ளனர் என தற்போது அறிவிக்க பட்டுள்ளது

    மேலும் மீளவும் இந்த நோயின் தாக்குதல் அதிகரித்து செல்வதாக புள்ளி விபரங்கள் தெரிவித்து வருகின்றன


    எதிர்வரும் குளிர்காலத்தை முன்னிட்டு இந்த நோயின் தாக்கம் அதிகரிக்கும்

    எனவும் இதனால் எண்பத்தி ஐந்தாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள்

    பலியாக கூடும் என நோய் தடுப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

    இதற்கான பல காரணங்கள் முன் வைக்க படுகிறது ,மேலும் மக்கள் அரசு

    அறிவுறுத்தும் சுகாதார முறைமையை பின்பற்றாது அலட்சியமாக செல்வதாகவும் ,

    இதனால் இதை விட பாதிப்பு இரட்டிப்பாக செல்லும் அபாயம் எழக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

    Posted in இலங்கை செய்திகள்

    கோட்டா ஆட்சியில் புதுமையான பஸ் நிலையம்- பாருங்க

    கோட்டா ஆட்சியில் புதுமையான பஸ் நிலையம்- பாருங்க

    கண்டி நுவரெலியா பிரதான பாதையில் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட குடாஒயா பிரேதேசத்தில் நுவரெலியாவில் இருந்து கண்டி நோக்கி செல்லும் பஸ்கள் நிறுத்துவதற்காக மத்திய

    மாகாண போக்குவரத்து அதிகார சபையினால் அமைக்கபட்ட பஸ் நிலையமே இது. தற்போது இந்த பஸ் நிலையம் உடைவடைந்து கூரைகள் இன்றி பாதிக்கபட்ட நிலையில் காணப்படுகின்றது.

    இதனை திருத்தி அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கபட்ட போதும். இது வரைக்கும் திருத்தி

    அமைக்கபடவில்லை. இந்த பஸ் நிலையத்தில் பஸ்சிற்காக காத்திருக்க வேண்டுமானால் மழைக்காலங்களில் குடையுடனே செல்ல வேண்டும்

    இந்த பிரதேசத்தில் குடாஓயா வித்தியாலயம் காணப்படுகின்றது. இங்கு கல்வி கற்க வரும் நூற்றுக் கணக்கான மாணவர்களும்

    ஆசிரியர்களும் கிராம மக்களும் லபுக்கலை தோட்ட மக்களும் நாளாந்தம் இந்த பஸ் நிலையத்தை பாவித்து வருகின்றனர்.

    இவ்வாறான நிலையில் இந்த பஸ் நிலையத்தை உடனடியாக திருத்தி அமைத்து கொடுக்க வேண்டியது மத்திய மாகாண

    போக்குவரத்து அதிகார சபையின் கடமையாகும். இதனை உடனடியாக திருத்தி அமைத்து தருமாறு இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    Posted in இலங்கை செய்திகள்

    1300 இரண்டாம் மொழி பயிலுனர்களுக்கு ஆப்பு வைத்த கோட்டா – இருந்த தொழிலும் போச்சு

    1300 இரண்டாம் மொழி பயிலுனர்களுக்கு ஆப்பு வைத்த கோட்டா – இருந்த தொழிலும் போச்சு

    அன்மையில் தேசிய ஒருமைபாடு அரசகரும மொழிகள் சழூக மேப்பாடு அமைச்சின் ஊடாக இரண்டாம் மொழியை கற்பிப்பதற்கு மொழிகளில் தகமை உள்ள 1300 விண்ணப்பதாரிகள்; தெரிவு

    செய்யப்பட்டார்கள். இவர்களுக்காகன நியமன கடிதங்கள் முன்னால் அமைச்சர் மனோ கணேசன் அவர்களின் ஏற்பாட்டில் முன்னால் பிரதமர் ரனில் விக்கரமசிங்க தலைமையில் கடந்த 2019

    செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி அலரி மாலிகையில் வழங்கி கைக்கப்பட்டது. இவர்களில் தமிழ் மொழி மூலம் 800 பேரும்

    சிங்களமொழி மூலம் 300 பேரும் ஆங்கில மொழிமூலம் 200 பேருமாக அடங்குவர்.

    இந்த இரண்டாம் மொழி கற்பிப்பதற்காக தெரிவு செயய்பட்டவர்களுக்கு நாடாளாவிய ரீதியில் காணப்படும் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் ஊடாக பயிற்சிகள்

    ஆரம்பிக்கபட்டு நடைபெற்று வந்தன. கடந்த மாதம் 15 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்காக இவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்ட போதும் இது வரை பயிற்சிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவில்லை.

    இந் நிலமை குறித்து பயிலுனர்கள் குறித்த பயிற்சி நிறுவன அதிகாரிகளையும் பயிற்றுவிப்பாளர்களையும் தொடர்பு கொண்டு வினவிய போதும் பொருத்தமான பதில்கள் வழங்காததினாலும்

    பயிற்சிகள் ஆரம்பிப்பது குறித்து உரிய திகதியை வழங்காதிதினாலும் பயிற்றுவிப்பாளர்கள் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.

    குறிப்பாக இந்த நியமனங்களை பெற்றவர்கள் ஏற்கனவே சில அரச மற்றும் தனியார் துறைகளில் தொழில் புரிந்தவர்கள். தங்களுக்கு ஒரு பொருத்தமான தொழி;ல் கிடைக்க போகின்றது என்ற நோக்கில்

    இருந்த தொழிலையும் விட்டுவிட்டு இந்த தொழிலில் இணைந்து பயிற்சிகளை பெற்று வந்தனர். இவ்வாறான நிலையில் இவை எந்த காரணம் இன்றியும் உரிய பதில்கள் இன்றியும் இடை

    நிருத்தப்பட்டமையால் பயிலுனர்கள் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளனர். இரண்டாம் மொழி சிங்களம் கற்பிக்க தமிழ்மொழி மூலம் 800 பயிலுனர்கள் தெரிவு செயய்பட்டு

    இருந்தனர.; இவர்களில் பெரும்பாலானோர் மலையத்தை சேர்ந்த இளைஞர் யுவதிகள். இவர்களுக்கு சிங்களமொழியில் கூடிய பரீட்சயம் இருந்ததாலும் சிங்களவர்களுக்கு தமிழ்மொழி கற்பிக்க

    கூடிய தகமை இருந்ததாலும் இவர்கள் தெரிவு செய்யப்பட்டு இருந்தார்கள். தற்போது இவர்களின் நிலை கேள்வி குறியாகி உள்ளதுடன். உலரீதியில் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.

    தற்போது தெரிவு செய்யபட்ட சில பயிலுனர்களுக்கு இருந்த தொழிலும் இல்லாமல் போய் கிடைத்த தொழிலும் இல்லாமல் போய் உள்ளது. நாட்டில் மொழிக் கொள்கையை திறம்பட முன்னெடுத்து

    செல்ல வேண்டும் என்ற நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்த செயற்திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். இதனை நம்பி இத்துறைக்கு விண்ணப்பித்து தற்போது நிர்க்கதியாகி

    உள்ளவர்களுக்கு உரிய தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டும் என பாதிக்கபட்ட விண்ணப்பதாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    Posted in உலக செய்திகள்

    கொரனோவால் பிரேசில் ,மெஸ்சிக்கோவில் பலநூறு பேர் ஒரே நாளில் பலி

    கொரனோவால் பிரேசில் ,மெஸ்சிக்கோவில் பலநூறு பேர் ஒரே நாளில் பலி

    உலக நாடுகளை மிரளவைத்து வரும் கொரனோ நோயின் தாக்குதலில்

    சிக்கி பிரேசில் மற்றும் மெஸ்சிக்கோ நாடுகளில் அதிகளவான மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்

    இதில் பிரேசில் நாட்டில் 310 பேரும் மெஸ்சிக்கோவில் 223 பேரும் ஒரே நாளில் பலியாகியுள்ளனர்

    மேலும் அதிகரித்து செல்லும் இந்த நோயினை கட்டு படுத்த முடியாது அரசுகள் தினறி வருகின்றன

    Posted in உலக செய்திகள்

    அமெரிக்காவில் – தீயில் எரிந்து இரண்டு மில்லியன் ஏக்கர் காடு

    அமெரிக்காவில் – தீயில் எரிந்து இரண்டு மில்லியன் ஏக்கர் காடு

    அமெரிக்காவில் கடந்த பன்னிரண்டு மாதங்காளிகள் சுமார்

    இரண்டு மில்லியன் ஏக்கர் காடுகள் தீயில் எரிந்து அழிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளன

    இந்த தீ விபத்தினால் பல நூறு வீடுகள் மற்றும் சொத்துக்கள் எரிந்துள்ளன

    வன விலங்குகள் மற்றும் உடைமைகள் என்பனவும் தீயில் எரிந்து அழிந்துள்ளன


    மக்கள் வாழ்விடங்களை விட்டு அகதிகளாக இடம்பெயரந்துள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது

    Posted in உளவு செய்திகள் வினோத வீடுப்பு

    இந்திய சீனா எல்லையில் துப்பாக்கி சூடு – பதட்டம் அதிகரிப்பு

    இந்திய சீனா எல்லையில் துப்பாக்கி சூடு – பதட்டம் அதிகரிப்பு


    இந்தியா சீன செல்லியான லடாக் பகுதியில் மெனெடும் போர் பதட்டம் அதிகரித்துள்ளது

    இரு நாட்டு இராணுவமும் வானை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளன .


    இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திய வண்ணம் உள்ளன

    இந்த துப்பாக்கி சூடுகளை அடுத்து தற்பொழுது போர் பதட்டம் அதிகரித்துள்ளது ,


    சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் போர் மூண்டால் இதில் சீனாவே வெற்றி பெறும்
    என அடித்து கூறலாம்

    Posted in இலங்கை செய்திகள்

    பிரபாகரனைச் சந்தித்தது ஏன்?

    பிரபாகரனைச் சந்தித்தது ஏன்?

    பயங்கரவாதிகளுக்குப் புனர்வாழ்வளித்ததாக கூறும் மஹிந்த ராஜபக்‌ஷ, 2005ஆம் ஆண்டு அப்போதைய நோர்வே நாட்டின்

    சமாதான தூதுவர் ஊடாக தேசிய தலைவர் பிரபாகரனைச் சந்திக்க ஆசைப்பட்டது ஏன்?” என, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பினார்.

    யாழ்ப்பாணத்தில், இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

    அங்கு தொடர்ந்துரைத்த அவர், 2002ஆம் ஆண்டில், அப்போதைய நாட்டின்

    பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைவர் பிரபாகரனுடன் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றினை செய்திருந்தாரென்றார்.

    அத்தோடு, இராணுவ உயர் அதிகாரிகளும் நாட்டின் அரசியல் தலைவர்களும்

    ஏன் தலைவர் பிரபாகரனைப் பாராட்டுகிறார்கள் எனவும், அவர் வினவினார்.

    Posted in இலங்கை செய்திகள்

    இரத்தினக்கல், தங்க ஆபரணக் கைத்தொழில் மீது விதிக்கப்பட்ட வரி நீக்கம்

    இரத்தினக்கல், தங்க ஆபரணக் கைத்தொழில் மீது விதிக்கப்பட்ட வரி நீக்கம்

    ஆபரண உற்பத்தியாளர்களுக்கு 4மூ வீத வட்டிக்கு ஒரு மில்லியன் ரூபா

    இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணக் கைத்தொழிலாளர்கள் ஈட்டும் இலாபத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த 14மூ வீத வருமான வரி

    மற்றும் 15மூ வீத தங்க இறக்குமதி வரிகளை நீக்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானம் மேற்கொண்டுள்ளார்.

    1971ஆம் ஆண்டு முதல் தங்கம் மற்றும் ஆபரணக் கைத்தொழிலுக்கு வழங்கப்பட்டிருந்த வரிச் சலுகை 2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வருமான வரிக் கொள்கையில்

    நீக்கப்பட்டது. தங்கம் மற்றும் ஆபரண ஏற்றுமதியில் ஈட்டப்படும் உண்மையான வருமானம் இதன் மூலம் வெளிக்கொணரப்படாத நிலை தோன்றியது.

    2018ஆம் ஆண்டு தங்க இறக்குமதிக்கு 15மூ வீத வரி விதிக்கப்பட்டது. தங்க நகைகளின் விலை உயர்வடைவதற்கு இவ்வரி காரணமாக அமைந்தது. குறித்த வரியை உடனடியாக

    நீக்கிஇ இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண கைத்தொழிலின் மேம்பாட்டிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

    இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் சார் கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று (07) பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

    உலகச் சந்தையில் இலங்கை இரத்தினக்கல்லின் கேந்திர நிலையமாக மாறுவதற்கு முடியாமல் போனமைஇ அவை சார்ந்த

    பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே முன்வைத்த 14 ஆலோசனைகள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது.

    இந்நாட்டில் கண்டெடுக்கப்படாத உலகின் ஏனைய நாடுகளுக்குரிய விலை கூடிய இரத்தினக்கற்களை இறக்குமதி செய்வதற்கான

    வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவும் மற்றும் இரத்தினக்கல் கையிருப்பை பாதுகாத்து வருவதன் முக்கியத்துவம் பற்றியும் லொஹான் ரத்வத்தே சுட்டிக்காட்டினார்.

    இரத்தினக்கல் அகழ்வுக்கான அனுமதி பத்திரம் விநியோகிக்கும்போது இடம்பெறுகின்ற தாமதங்களை தடுப்பதற்காக உரிய அனைத்து நிறுவனங்களையும் ஒரே இடத்தில்

    ஸ்தாபிக்குமாறு ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். தங்க நகை உற்பத்தியாளர்கள் மற்றும் சம்பிரதாய ரீதியாக தங்க நகைகளை

    உற்பத்தி செய்பவர்களுக்கு தங்கத்தை கொள்வனவு செய்வதற்காக அரச வங்கிகளினால் 4மூ வீத சலுகை வட்டி அடிப்படையி்ல் 10 இலட்சம் ரூபா கடன் வழங்குமாறு ஜனாதிபதி அரச வங்கிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

    பெருந்தோட்ட நிறுவனங்களுக்குரிய இரத்தினக்கல் படிவுகளைக்கொண்ட பயிரிடப்படாத காணிகளை இரத்தினக்கல் கைத்தொழிலுக்கு வழங்குவதற்கு தடையாக உள்ள விடயங்களை

    நீக்கி அகழ்வுக்காக பெற்றுக்கொள்வதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இரத்தினபுரி தெமுவாவத்தையில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ள இரத்தினக்கல் விற்பனை

    சந்தைத்தொகுதி மற்றும் பயிற்சி மத்திய நிலையத்தின் பணிகளை உடனடியாக நிறைவு செய்யுமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

    இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினக்கல் பரவலாக உள்ள பிரதேசங்களில் அனுமதி இன்றி இரத்தினக்கல் அகழ்வு நடவடிக்கைகள் பாரியளவில் இடம்பெற்று வருகின்றன.

    இயந்திரங்களை பயன்படுத்தி சுற்றாடலைப் பாதிக்கும் வகையில் இடம்பெற்று வருகின்ற இரத்தினக்கல் அகழ்வுகளை உடனடியாக

    நிறுத்துவதற்கும் சம்பிரதாயமாக இரத்தினக்கல் அகழ்வுகளில் ஈடுபட்டுள்ளவர்கள் முகங்கொடுத்து வருகின்ற தடைகளை நீக்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டார்.

    தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் இரத்தினக்கல் ஆய்வு கூடத்தை சர்வதேச தரத்திற்கு தரம்

    உயர்த்துதல் உட்பட இத்துறையின் மேம்பாட்டிற்கான பல கருத்துக்கள் இக்கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்டது.

    அமைச்சர் விமல் வீரவங்சஇ இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேஇ பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷஇ ஜனாதிபதியின்

    செயலாளர் பீ.பி.ஜயசுந்தர ஆகியோருடன் துறைசார் அமைச்சுக்களின் அதிகாரிகள் மற்றும் இரத்தினக்கல்இ ஆபரணக் கைத்தொழிலாளர்கள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

    Posted in இலங்கை செய்திகள்

    கப்பலில் மீண்டும் தீ – கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை

    கப்பலில் மீண்டும் தீ – கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை

    கிழக்குக் கடற்பரப்பில்; தீ விபத்திற்கு உள்ளான MT New Diamond எரிபொருள் கப்பலில் இரண்டாவது தடவையாக ஏற்பட்ட தீ ஓரளவு

    கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.

    கப்பலின் வெப்பநிலை மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களினால் தீ மீண்டும் வருவதைத் தடுக்க இரசாயனங்கள் மற்றும் தண்ணீரைப்

    பயன்படுத்தி பேரழிவு மேலாண்மை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    இருப்பினும், சங்கமங்கந்த பிரதேசத்தில் இருந்து சுமார் 30 கடல் மைல் தொலைவில் இந்த கப்பல் நிறுத்தப்பட்டுள்ள கடல் பகுதியில்

    நிலவும் பாதகமான வானிலை காரணமாக மற்றும் அதிக உஷ்ணத்துடன் கப்பல் இருந்த நிலையில் இவ்வாறு மீண்டும் தீ பரவியுள்ளது.

    கப்பலின் மூலம் ஏற்படக்கூடிய சமுத்திரவியல் பாதிப்புக்களைப் பற்றி ஆராய்வதற்காக இன்று அதிகாலை நான்கு மணியளவில் நிபுணர்கள் குழுவொன்று ஸ்தலத்திற்கு

    அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கடற்படையின் பேச்சாளர் கப்டர் இந்திக்க டீ சில்வா தெரிவித்தார்.

    இந்தக் கப்பல் முதற்தடவையாக தீ விபத்திற்கு உள்ளான இடத்தில் இருந்து பெறப்பட்ட கடல் நீர் மாதிரிகள் இன்று சோதனையிடப்படவுள்ளன. இது தொடர்பான விசேட

    கலந்துரையாடல் நேற்று துறைமுக மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்றது. அமைச்சர் ரோஹித்த அபய குணவர்த்தன இதனை தலைமை தாங்கினார்.

    Posted in இலங்கை செய்திகள்

    போதைப்பொருள் பயன்படுத்திய 547 பேர் கைது

    போதைப்பொருள் பயன்படுத்திய 547 பேர் கைது

    மேல் மாகாணத்தில் பொது இடங்களில் போதைப்பொருளை பயன்படுத்திய 547 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    நேற்று மாலை 6.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணிவரையில் முன்

    னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சந்தேக நபர்கள் மத்தியில் ஆக கூடுதலானோர் ஹெரோயின் போதைப்பொருளை பயன்படுத்தியுள்ளனர். இவர்களின்

    எண்ணிக்கை 265 ஆகும். இவர்களிடம் இருந்து 89 கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது

    Posted in இலங்கை செய்திகள்

    அனைத்து பாடசாலைகளிலும் இன்று முதல் கல்வி நடவடிக்கைககள் வழமைக்குத் திரும்பின.

    அனைத்து பாடசாலைகளிலும் இன்று முதல் கல்வி நடவடிக்கைககள் வழமைக்குத் திரும்பின.

    நாட்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்ட

    அனைத்து பாடசாலைகளிலும் இன்று (08) முதல் கல்வி நடவடிக்கைககள் வழமைக்குத் திரும்பியுள்ளன.

    இதனடிப்படையில், காலை 7.30 மணி முதல் பகல் 1.30 மணி வரை வழமையான

    நேரத்தில் கல்வி நடவடிக்கைகள் நடைபெறும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

    எனினும், பாடசாலைகளில் மாணவர்கள் சுகாதார நடைமுறைகளை

    தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும் எனவும் கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

    கொரோனா தொற்று காரணமாக விடுமுறை வழங்கப்பட்ட அனைத்து

    அரச பாடசாலைகளிலும் கடந்த 10 ஆம் திகதி முதல் கட்டம் கட்டமாக கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

    Posted in இலங்கை செய்திகள்

    பாலம் உடைந்ததினால் இரு
    ஊர்கள் பிரிந்தது

    பாலம் உடைந்ததினால் இரு
    ஊர்கள் பிரிந்தது

    கண்டி மாவட்டம் உடபளாத்த பிரதேசத்திற்கு உட்பட்ட கம்பளை நகர சபையையும் கங்கஹிகலகோரல பிரதேச சபைக்கு உட்பட்ட கம்பலவெல பிரதேசத்தையும் இணைக்கும் கம்பலவெல பிரதான

    பாலத்தின் ஒரு பகுதி உடைவடைந்து உள்ளது. இந்த பாலம் உடைவடைந்து 06 வருடங்கள் ஆன போதும் இதனை திருத்துவதற்கான எந்தவித நடவடிக்கைகளும் இது வரைக்கும்

    யாராலும் முன்னெடுக்கவில்லை. இதனால் கம்பளை நகர சபைக்கும் கங்கஹிகலகோரல பிரதேச சபைக்கும் உட்பட்ட பிரதேசங்களின் தொடர்பு முற்றாக துண்டிக்கபட்டுள்ளதுடன்

    குறித்த பிரதேசங்களுக்கு செல்வதற்கு பல கிலோமீற்றர் தூரம் செல்ல வேண்டியுள்ளது. இந் நிiலில் இந்த பாலத்தை அமைத்து தருமாறுகோரி விடும் அதே வேலை இந்த பாலத்தை அமைத்து

    தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்து பல ஆர்பாட்டங்களையும் நடாத்தினர். இது வரைக்கும் அவையும் வெற்றியளிக்கவில்லை.

    இந்த பாலத்தின் ஊடாகவே கம்பலவெல பிரதேச மக்கள் தங்களின் நாளாந்த தேவைகளுக்காவும் மாணவர்கள் தங்கள் கல்வி நடவடிக்கைகளுக்காகவும் கம்பளை நகரத்திற்கு வந்து

    செல்கின்றனர். தற்போது இதற்காக பல கிலோ மீற்றர் தூரம் நடந்தும் வாகனங்களுக்கு அதிக பணம் கொடுத்தும் தங்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. இந் நிலையில் இந்த

    பாலத்தினை சம்பந்தபட்டவர்கள் கவனத்தில் கொண்டு திருத்தி அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    Posted in இலங்கை செய்திகள்

    பாதை அவலத்தால் பாதிக்கப்பட்டுள்ள கஷ்ட பிரதேச தோட்ட மக்கள்

    பாதை அவலத்தால் பாதிக்கப்பட்டுள்ள
    கஷ்ட பிரதேச தோட்ட மக்கள்

    நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட வெதமுல்ல கிராம சேவகர் பிரிவு 474எல் வெதமுல்ல தோட்டம் கெமினிதன் பிரிவிற்கு செல்லும் பிரதான பாதையே இது.

    இந்த பாதையில் நாளாந்தம் 1000 க்கு மேற்பட்டோர் பயணித்து வருகின்றனர். இந்த தோட்ட பிரதேசத்தில் 500 ஏக்கருக்கு மேற்பட்ட காணியில் விவசாய நடவடிக்கைகளும் முன்னெடுக்கபடுகின்றது.

    ஆரம்ப பாடசாலை ஒன்றும் காணப்படுகின்றது. 166 குடும்பங்களை சேரந்த 750 மேற்பட்ட பொது மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 533 வாக்குகள் இங்கு காணப்படுகின்றது. அத்துடன் விவசாய

    செய்கைக்கு வெளி இடங்களில் இருந்து வந்து தற்காலிகமாக நூற்றுக்கு மேற்பட்N;டார் வசித்து வருகின்றனர். மாணவரகள் ஆரம்ப மற்றும் உயர்நிலை கல்வி கற்பதற்கு இந்த தோட்டத்தில்

    இருந்து இறம்பொடை தமிழ் மகா வித்தியாலயம் உட்பட ஏனைய பாடசாலைகளுக்கு நாளாந்தம் மாணவர்கள் நடந்தும் லொரி மற்றும் தனியார் வாகனங்ளிலும் நடந்துமே செல்கின்றனர். இங்கு

    முறையான போக்குவரத்து சேவை இல்லை. தோட்ட பாடசாலைக்கு செல்லும் ஆசிரியர்களின் நிலமையும் இதுவே. இந்த பிரதேசம் மிகவும் குளிர்ந்த ஒரு கஷ்ட பிரதேசமாகும். கடல் மட்டத்தில் இருந்து

    5000 அடிக்கு மேல் இந்த தோட்டம் காணப்படுகின்றது. நடந்து செல்லும் போது செங்குத்தான மலையில் 1200 படிகள் ஏற வேண்டும்.

    நுவரெலியா கண்டி பிரதான பாதையில் வெதமுல்ல சந்தியில் இருந்து வெதமுல்ல தோட்டம் கயிர்கட்டி தோட்டம் ஊடாக இந்த கெமினிதன் தோட்டத்திற்கு செல்ல 11 கிலோமீற்றர் தூரம்

    காணப்படுகின்றது. இந்த பாதையின் இடையிடையே குறிப்pட்ட தூரம் மலையக அரசியல் பிரமுகர்களின் பங்களிப்பு ஊடாக செப்பனிடபட்டாலும் பெருமளலாவான பாதை இன்னமும்

    திருத்தப்படாமல் காணப்படுகின்றஙது. இங்குள்ள மக்கள் தங்களின் அபிருத்திகளுக்காக முன்னெடுக்கப்படும் அனைத்து செயற்பாடுகளுக்கும் பாதை அவலம் ஒரு தடையாக இருக்கின்றது.

    தங்களது வீடுகளை கூட கட்டிக் கொள்ள முடியவி;ல்லை. அதற்கான மூலப்பொருட்களை கொண்டு செல்வதிலும் அதற்கான செலவும் அதிகமாக இருக்கின்றது.

    இந்த பாதை அவலம் காரணமாக தோட்ட பொது மக்கள் பாடசாலை மாணவர்கள் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர். விவசாயிகளின் விவசாய உற்பத்திகளுக்கு உற்பத்தி செலவும்

    உற்பத்திகளை வினியோகிக்க சந்தைப்படுத்தும் செலவும் அதிகரித்து வருகின்றது. இதனால் விவசாயிகளும் பாதிப்படைந்து வருகின்றனர். விவசாய செயற்பாடுகளுக்கு வாகனங்களை

    பயன்படுத்த முடியாத நிலையும் தோன்றி உள்ளது. அதற்கான செலவும் அதிகம். தோட்ட தொழிலாளர்கள் தங்கள் வருமானத்தை அதிகரித்து கொள்வதற்காக விவசாய நடவடிக்கைகளில்

    ஈடுபட்டாலும் அதில் அவர்களுக்கு போதிய வருமானம் இல்லை. மக்கள் நாளாந்தம் தங்களின் வைத்திய சேவைகளை பெற்றுக் கொள்வதற்காகவும் அவசர தேவைகளின் போதும் இந்த

    பாதையையே பாவித்து வருகின்றனர். இதனால் கர்பினி பெண்கள் வயோதிபர்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர். இந் நிலையில் இந்த

    பாதையை சரி செய்து கொடுத்து இந்த மக்களின் சுபீட்சத்திற்கு வழி சமைத்து கொடுக்க வேண்டியது பொறுப்பானவர்களின் கடமையாகும்.

    Posted in இலங்கை செய்திகள்

    06 பாடசாலைகளுக்கான ஆசிரியர்கள் உரிய நேரத்திற்கு பாடசலைக்கு செல்லாததினால் மாணவர்கள் பாதிப்பு

    06 பாடசாலைகளுக்கான ஆசிரியர்கள் உரிய நேரத்திற்கு பாடசலைக்கு செல்லாததினால் மாணவர்கள் பாதிப்பு

    புசல்லாவை நகரிலிருந்து பொரட்டாசி தோட்டத்திற்கு காலை வேலையில் செல்லும் பஸ் போக்குவரத்து முறையான நேரத்திற்கு இன்மையால் இப்பகுதியிலுள்ள 06 பாடசாலைகளுக்கு செல்லும்

    ஆசிரியர்களும் மற்றும் ஏனய அரச ஊழியர்கள்¸ தோட்ட உத்தியோகஸ்தர்கள் பெரிதும் பாதிப்புக்களை எதிர்நோக்கி

    வருகின்றனர். மாணவர்கள் தனியார் வாகனங்களிலேயே புஸ்ஸல்லாவ நகரத்தில் இருக்கும் பாடசாலைகளுக்கு செல்கின்றனர

    இப் பிரதேசத்தில் உள்ள நுவரெலியா மாவட்டம் கொத்மலை கல்வி வலையத்திற்கு உட்பட்ட ஹெல்பொட வடக்கு தமிழ் மகா வித்தியாலம் மேமொழி தமிழ் வித்தியாலயம் அயரி தமிழ் மகா

    வித்தியாலயம்;; புரட்டொப் தமிழ் வித்தியாலயம் ரஸ்புரூக் தமிழ் வித்தியாலயம் கெமினிதன் தமிழ் வித்தியாலயம் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கும் வரும் ஆசிரியர்கள் அதிபர்கள்

    சரியான போக்குவரத்து வசதி இன்மையால் பாடசாலைகளுக்கு காலை 09 மணி நேரங்களிலேயே பாடசாலைகளுக்கு செல்கின்றனர். காலை புஸ்ஸல்லாவ நகரத்திலிருந்து பெரட்டாசி

    பிரதேசத்திற்கு 7.30 மணியளவிலேயே தனியார் பஸ் தனது சேவையை ஆரம்பிக்கின்றது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சேவை சுமார் 10 வருட காலமாக இல்லை.

    அசிரியர்கள் மீண்டும் பாடசாலை விடுவதற்கு முன் பகல் 01.30 மணிக்கெல்லாம் வீடு திரும்பியும் விடுகின்றார்கள். காரணம் இந்த பஸ்சை விட்டால் அடுத்த பஸ்சிற்காக நீண்ட நேரம் காத்திருக்க

    வேண்டும். ஒரு சில அதிபர்களும் ஆசிரியர்களும் தங்களது சொந்த மோட்டார் சைக்கில் முற்சக்கர வண்டி ஆகியவற்றில் நேரத்திற்கு செல்கின்றனர். ஒரு ஆசிரியருக்கு தனது பாடசாலைக்கான சேவை

    நேரத்தில் நான்கு மணித்தியாலயங்கள் மாத்திரமே பாடசாலையில் சேவை செய்யக் கூடியதாக இருக்கின்றது.
    இந்த விடயம் தொடர்பில் தனியார் பஸ் உரிமையாளர்களிடம்

    வினவிய போது நாங்கள் எங்கள் பஸ் சேவையை உரிய நேரத்திற்கு ஆரம்பிக்க ஆயுத்தமாக உள்ளோம். ஆசிரியர்கள் குறித்த நேரத்திற்கு வருவதில்லை விட்டு விட்டு போகவும் முடியாது.

    இவர்கள் தங்கள் பிள்ளைகளை புஸ்ஸல்லாவ பிரசே பாடசாலைகளில் விட்டுவிட்டே வருகின்றனர் அது வரைக்கும் காத்து நிற்க்க வேண்டும். எங்களுக்கும் அதிகமானவர்கள்

    பயணித்தால் தான் இலாபம் கிடைக்கும் பாதை அவலம் காரணமாக பஸ் அடிக்கடி உடைந்து விடுகின்றது. அதற்கும் செலவு செய்ய வேண்டும். மேற்படி பாடசாலைகளுக்கு எங்கள் பஸ்சில்

    செல்லாத சொந்த வாகனங்களில் செல்பவர்களும் பாடசாலைகளுக்கு அருகில் இருப்பவர்களும் இவர்கள் வரும் வரைக்கும் இவர்களுடனே செல்கின்றனர். அவர்களும் பொருப்புடன்

    நடந்துக் கொள்ள வேண்டும். இந்த தவைணையில் இருந்தே காலை 7.30 பஸ் போகின்றது இதற்கு முன்னர் பல வருடங்களாக காலை 8.15 க்கே பஸ் புறப்பட்டது தற்போது நாங்கள் ஒரு படி முன்னேறி

    உள்ளோம். எங்களுக்கும் இந்த சமூகம் தொடர்பில் அக்கரை இருக்கின்றது. சிலர் செய்கின்ற குறைகளை பஸ் உரிமையாளர் எங்களை பாதிக்கின்றது. யாரும் எதுவும் கேட்டால் பஸ் லேட் என

    இலகுவாக கூறி தப்பித்துக் கொள்கின்றனர். தற்போதைக்கு 8 பஸ்கள் சேவையில் உள்ளது என்று கூறினர்.

    மேற்படி பிரதேசங்கள் மிகவும் பாதிக்கபட்ட ஒரு கஷ்ட்டபட்ட பிரதேசமாகும். இங்குள்ள மாணவர்கள் திறமையானவர்கள் நன்கு கல்வி கற்க கூடியவர்கள். பலர் பல்கலைகழகம் உட்பட தேசிய

    கல்வியல் கல்லூரிகளில் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களுக்கான முiறான களம் அமைக்கப்படுமானால் மேலும் இவர்கள் அபிவிருத்தியை நோக்கி செல்வர். இதற்கு

    பொருப்பானவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

    குறைபாடுகள் காரணமாக இப்பிரதேசதில் வாழும் தோட்ட தொழிலார்களின் பிள்ளைகளின் கல்வியில் பாரிய வீழ்ச்சி காணப்படுவதுடன் ஆசிரியர்கள் அதிபர்கள் பல இன்னல்களை

    எதிர்நோக்கியும் வருகின்றனர். இதை எந்த கல்விசார் ஆளனியினரும் கண்டுக் கொள்வதில்லை. புஸ்ஸலாலவ நகரத்தில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மணி

    ‘நேரம் கழித்தே மேற்படி தூர பிரதேச பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் செல்கின்றனர். முன்னுக்கு உள்ள பாடசாலைகளுக்கு நேரத்திற்கு சென்றாலும் ரஸ்புரூக் பாடசாலைக்கு ஆசிரியர்கள்

    செல்லும் நேரம் அதிகமாகவே இருக்கின்றது. இவர்களின் இந்த பிரச்சனைக்கு இந்த பாதை ஒரு பாரிய காரணமாக இருந்தாலும் தற்போது இந்த பாதையின் ஒரு பகுதி திருத்தப்பட்டு

    மிகுதியானவை செப்பனிடப்பட்டு வருகின்றன. இந் நிலையில் சரியான நேரத்திற்கான போக்குவரத்து வசதிகளை இவர்களுக்கு செய்து கொடுக்க வேண்டியது சம்பந்தபட்டவர்களின்

    கடமையாகும். காலை 7.00 மணிக்கு புஸ்ஸல்லாவ நகரத்தில் இருந்து பஸ் மேற்படி பிரதேசத்திற்கு செல்லுமானால் அதிபர்கள் ஆசிரியர்கள் நேரத்திற்கு பாடசாலை செல்லலாம். அதே போல் பி.ப

    2.00 மணிக்கு பின்னர் பஸ் மீண்டும் புஸ்ஸல்லாவ வருமானால் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிட்டும் இதனை சம்பந்தபட்டவர்கள்

    செய்யாததினால் இந்த பிரச்சனை தொடர்ந்து 15 வருடங்களுக்கு மேல் இருந்து வருகின்றது.

    பாதையின் அவல நிலை காரணமாக தனியார் பஸ் வண்டிகளும் அடிக்கடி பழுதடைகின்றன. இதனால் போக்குவரத்து மேற்கொள்வதில் பெரும்பாதிப்புகளை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக இப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றன.;

    பாடசாலை மாணவர்களுக்கும் இந் நிலையே சிங்களம் மற்றும் தமிழ்மொழி மூலமான மாணவர்கள் இப்பிரதேசத்திலிருந்து நகர பாடசாலைக்கும் செல்கின்றனர் இவர்களுக்கும் இந் நிலையே.

    இதனால் மாணவர்களின் கல்வி நிலை பாதிப்புக்கு உள்ளாகின்றது. இதற்கு முன்னர் இரண்டு அரச இ.போ.ச வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன அவை தற்போது இ;ல்லை.

    இந்நிலைமை குறித்த கம்பளை பஸ் டிப்போ முகாமையாளரை தொடர்பு கொண்டு கேட்ட போது சேவையில் ஈடுபட்டு வந்த இரண்டு பஸ் வண்டிகளும் பழுதடைந்து விட்டன. புதிய பஸ்

    வண்டிகள் வாங்கும் வரை காத்திருக்கின்றோம். அத்துடன் பாதை பழுதடைந்தையால் பஸ் சேவையை முன்னெடுக்க முடியாமல் உள்ளதாக தெரிவித்தார். இருந்தும் தற்போது பாதை

    செப்பனிடப்பட்டு வருவதால் உரிய நேரத்திற்கு செல்லக் கூடிய தனியார் அல்லது இ.போ.ச பஸ்களை சேவையில் ஈடுப்படுத்த முடியும்.


    கடந்த காலங்களில் இப்பகுதியிலுள்ள வீதிகளையே 05 முறை பாரிய பஸ் விபத்துக்கள் இடம் பெற்றன. இவ் வீபத்துக்களில்

    பாதிப்புக்குள்ளான நூற்றுக்கு;மேற்பட்டோர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுள்ளனர். இதில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் இவர்களின் பிரச்சினைகளுக்கு இதற்குறிய தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வருவார்களா?

    Posted in பிரித்தானிய செய்தி

    பெரும் பண கடத்தல் முறியடிப்பு – லொறியை மடக்கி பிடித்த லண்டன் பொலிஸ்

    பெரும் பண கடத்தல் முறியடிப்பு – லொறியை மடக்கி பிடித்த லண்டன் பொலிஸ்

    லண்டனில் இருந்து பெல்ஜியம் நாட்டிற்கு லொறியில் கடத்தில் செல்லப்பட்ட

    ஒரு மில்லியன் பவுண்டுகள் லண்டன் டோவர் எல்லையோர காவல்துறையினரால் முறியடிக்க பட்டுள்ளது

    இரண்டு லாரிகளில் இவ்விதம் கடத்தி செல்லப்பட்ட ஒருமில்லியன் பவண்டுகளே பொலிஸாரினால் முறியடிக்க பட்டுள்ளது

    முதலாவது லொறியில் £830,000பவுண்டுகளும் இரண்டாவது லொறியில் 330,000 பவுண்டுகளும் கடத்தி செல்ல பட்டுள்ளது

    குறித்த ஐரோப்பிய நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரே நிறுவனத்துக்கு

    சொந்தமான இரண்டு லொறிகளில் இந்த பணம் எடுத்து செல்ல பட்டுள்ளது

    நீண்ட நாட்களாக இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளது விசாரணைகள் மூலம்

    தெரிய வந்துள்ளது ,கைதான இரு சாரதிகளும் தற்போது நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்

    பெரும் பண கடத்தல் முறியடிப்பு
    பெரும் பண கடத்தல் முறியடிப்பு
      Posted in பிரித்தானிய செய்தி

      பிரிட்டன் Birmingham.பகுதியில் மக்களுக்கு கத்தி குத்து – போலீசார் குவிப்பு

      பிரிட்டன் Birmingham.பகுதியில் மக்களுக்கு கத்தி குத்து – போலீசார் குவிப்பு

      கடந்த தினம் மதியம் ,பிரிட்டன் Birmingham.பகுதியில் இருபத்தி ஏழுவயது

      நபர் ஒருவர் மக்கள் மீது சரமாரியாக கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டார்

      இதில் ஏழுபேர் படுகாயமடைந்துள்ளனர் ,குற்றவாளி கைது செய்ய பட்டுள்ளார் ,

      காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க

      படுகிறது ,இந்த கத்தி குத்து தாக்குதல் தீவிரவாத செயலுடன் தொடர்புடையாதா

      என்பது தொடர்பில் தெரியவரவிலை
      தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

      பிரிட்டன் Birmingham.பகுதியில்
      பிரிட்டன் Birmingham.பகுதியில்
        Posted in இலங்கை செய்திகள்

        வெள்ளத்தால் பாதிக்க பட்டவர்களுக்கு -நிதி உதவி -அரசு அறிவிப்பு

        வெள்ளத்தால் பாதிக்க பட்டவர்களுக்கு -நிதி உதவி -அரசு அறிவிப்பு

        சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 21 மாவட்டங்களில் 1000 திற்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

        இவ்வாறு பாதிக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்காக பத்து மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

        மூன்று மாவட்டங்களுக்கு துரித நிவாரணம் வழங்குவதற்காக 15 இலட்சம்

        ரூபாவை அரசாங்கம் வழங்கியிருப்பதாக தேசிய அனர்த்த நிவாரண

        சேவை மத்தியநிலையத்தின் உதவிப் பணிப்பாளர் சாவித்திரி ஜயகொடி தெரிவித்துள்ளார்.