மண்சரிவு அபாயம் மக்களுக்கு எச்சரிக்கை
மண்சரிவு அபாயம் மக்களுக்கு எச்சரிக்கை
சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்
சரிவு அனர்த்த எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருப்பதாக கட்டட ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய
மாவட்டங்களுக்கே இந்த அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை
சீரற்ற கலநிலையின் காரணமாக பல பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு ஆமர் விதி, தும்முல்ல சந்தி உள்ளிட்ட சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன
தடம் புரண்ட ரயில் போக்குவரத்து பாதிப்பு
தடம் புரண்ட ரயில் போக்குவரத்து பாதிப்பு
களுத்துறை தெற்கில் இருந்து நீர்கொழும்பு வரையில் சேவையில் ஈடுபடும்
கடுகதி ரயில் கொழும்பு கோட்டைக்கும் மருதாணைக்கும் இடையில் தடம்புரண்டுள்ளது.
இன்று காலை 8.15 மணியளவில் ரயில் இவ்வாறு தடம்புரண்டுள்ளது. இது
தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளபட்டிருப்பதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
காதலனுடன் கிளம்பிய பிரபல நடிகை
காதலனுடன் கிளம்பிய பிரபல நடிகை
கொரோனாவில் இருந்து மீண்ட பிரபல நடிகை தனது காதலனுடன் ஏர்போர்ட்டில் ஜாலியாக சுற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
கொரோனா குணமானதும் காதலனுடன் கிளம்பிய பிரபல நடிகை
நிக்கி கல்ராணி, ஆதி
யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்துள்ள ஆதிக்கும் நடிகை நிக்கி கல்ராணிக்கும்
காதல் மலர்ந்துள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு ரகசியமாக
காதலித்து வருவதாக கூறப்பட்டது. இருவரும் இந்த செய்திக்கு எந்த வித மறுப்பும் தெரிவிக்காமல் இருந்து வந்தனர்.
ஆதி, நிக்கி கல்ராணி
இந்நிலையில் ஆதியும், நிக்கி கல்ராணியும் ஐதராபாத் விமான நிலையத்தில் பெட்டிகளை தள்ளிக்கொண்டு ஒன்றாக செல்லும்
புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட அவர்கள்
இருவரும், ஒரு சிறிய விடுமுறைக்காக வெளியூர் செல்ல விமான நிலையம் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும்
காதலிப்பதை மெய்ப்பிக்கும் வகையில் இந்த புகைப்படம் அமைந்துள்ளது.
பிகினி புகைப்படத்தை வெளியிட்ட தனுஷ் பட நடிகை.
பிகினி புகைப்படத்தை வெளியிட்ட தனுஷ் பட நடிகை.
தனுஷ் பட நடிகை ஒருவர் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
பிகினி புகைப்படத்தை வெளியிட்ட தனுஷ் பட நடிகை…. திக்குமுக்காடிப் போன ரசிகர்கள்
சாரா அலிகான்
பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகான்- நடிகை அம்ரிதா சிங் தம்பதியின் மகளான சாரா அலிகான், பெற்றோரைப்போல் இந்தி
படங்களில் நடித்து வருகிறார். நடிகை அம்ரிதா சிங்கை விவாகரத்து செய்து விட்டு நடிகை கரீனா கபூரை சயீப் அலிகான் 2-வது
திருமணம் செய்து கொண்டார். தற்போது சாரா அலிகான் தனது தாயுடன் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் சாரா அலிகான் தான் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில்
வெளியிட்டுள்ளார். பிங்க் நிற பிகினி உடை அணிந்து நீச்சல் குளத்தில் ஹாயாக படுத்துக்கொண்டு புத்தகம் படித்தபடி அந்த புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருக்கிறார் சாரா அலிகான்.
சாரா அலிகான்
பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் சாரா அலிகான், அடுத்ததாக ஆனந்த் எல் ராய் இயக்கும் அத்ரங்கி ரே படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
அக்ஷய்குமாரும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் மதுரையில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
கேக் வெட்டி மனைவியுடன் திருமண நாளை கொண்டாடிய எஸ்.பி.பி
கேக் வெட்டி மனைவியுடன் திருமண நாளை கொண்டாடிய எஸ்.பி.பி
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி. தனது மனைவியுடன், ஐ.சி.யூ.வில் கேக் வெட்டி திருமண நாளை கொண்டாடி உள்ளார்.
ஐ.சி.யூ.வில் கேக் வெட்டி மனைவியுடன் திருமண நாளை கொண்டாடிய எஸ்.பி.பி
எஸ்.பி. பாலசுப்ரமணியம், சாவித்ரி
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் கடந்த ஆகஸ்ட் 5-ந் தேதி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மிதமான அறிகுறிகளே இருந்த நிலையில், ஆகஸ்ட் 13-ம் தேதியன்று இரவு அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, உயிர் காக்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு
வருகிறது. அவரது உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று எஸ்.பி.பி. – சாவித்ரி தம்பதியின் 51வது திருமண நாள் என்பதால், எஸ்.பி.பி.யை பார்க்க மருத்துவமனைக்கு
வந்த அவரது மனைவி சாவித்ரி, தங்களது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐ.சி.யூ.வில்
வைத்து டாக்டர்கள் உதவியுடன் எஸ்.பி.பி. – சாவித்ரி தம்பதி கேக் வெட்டியதாக கூறப்படுகிறது
முத்தக்காட்சியில் நடிக்க மறுத்ததால் மிரட்டினார்கள்- சமீரா ரெட்டி
முத்தக்காட்சியில் நடிக்க மறுத்ததால் மிரட்டினார்கள்- சமீரா ரெட்டி
பாலிவுட்டில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, லிப்லாக் முத்தக்காட்சியில் நடிக்க சிலர் வற்புறுத்தியதாக நடிகை சமீரா ரெட்டி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
லிப்லாக் முத்தக்காட்சியில் நடிக்க மறுத்ததால் மிரட்டினார்கள்-
வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னாவாக தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் சமீரா ரெட்டி. பின்னர் வேட்டை, அசல்
, வெடி என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சமீரா இந்தி, தமிழ்,
தெலுங்கு மற்றும் வங்க மொழி படங்களிலும் நடித்துள்ளார். சமீராவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் பாலிவுட் படத்தில் நடித்தபோது தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து நடிகை சமீரா ரெட்டி பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியதாவது: பாலிவுட்டில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று லிப்லாக் முத்தக்காட்சியில் நடிக்க
வேண்டும் என்றார்கள். இதை முதலில் ஏன் சொல்லவில்லை என்று கேட்டேன்.
சமீரா ரெட்டி
நீங்க ஏற்கனவே முசாபிர் படத்தில் அவ்வாறு நடித்திருக்கிறீர்களே? அதனால் இதிலும் அப்படி நடியுங்கள் என்றார்கள். ஒரு படத்தில்
செய்தால், அதை ஒவ்வொரு படத்திலும் செய்ய வேண்டுமா? என கேட்டேன். அவ்வாறு நடிக்கவில்லை என்றால் நீங்கள் மாற்றப்படலாம் என்றார்கள்.
மற்றொரு படத்தில் நடித்தபோது அந்த படத்தின் ஹீரோ, உங்களுடன் நடிப்பது போர் அடிக்கிறது, நீங்கள் ஜாலியாக
இருப்பதில்லை என சொன்னார். இனி, இவரோடு நடிக்கக் கூடாது எனவும் கூறினார். அதன் பின்னர் நான் அவருடன் நடிக்கவே இல்லை” என கூறியுள்ளார்.
ஆட்டோ ஓட்டி வரும் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்
ஆட்டோ ஓட்டி வரும் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தொல்லையால் வேலையை உதறிவிட்டு அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவர் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார்.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தொல்லையால் வேலையை உதறிவிட்டு ஆட்டோ ஓட்டி வரும் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்
ஆட்டோ டிரைவராக மாறிய டாக்டர் ரவிந்தீரநாத்.
பெங்களூரு:
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தொல்லையால் வேலையை உதறிவிட்டு அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவர் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி
வருகிறார். இதுபற்றி அறிந்த சுகாதாரத் துறை மந்திரி ஸ்ரீராமுலு, பணிக்கு திரும்பும்படி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த சம்பவம் பற்றி விவரம் வருமாறு:-
கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தில் உள்ள பிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி நிபுணராக டாக்டர் ரவீந்திரநாத்
பணியாற்றி வந்தார். இவரது சொந்த ஊர் தாவணகெரே மாவட்டம் பாட கிராமம் ஆகும். தற்போது கொரோனா பரவல் காரணமாக பல்லாரி பிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் டாக்டர் ரவீந்திரநாத்தை, ஆஸ்பத்திரியின் கொரோனா சிறப்பு
வார்டில் தினமும் பணியாற்றும்படி அதிகாரிகள் வற்புறுத்தியதாக தெரிகிறது. இதன் காரணமாக மனம் உடைந்த அவர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதனால் அவர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார். இந்த விடுப்பு முடிந்து பணிக்கு வந்த மறுநாளே 2-வது முறையாக அவருக்கு
கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டது. இதனால் மனம் உடைந்த டாக்டர் ரவீந்திரநாத் தனது வேலையை உதறினார். இதற்கு காரணம்
சுகாதாரத் துறை, மருத்துவத் துறையில் உள்ள 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தான் காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் வேலையை விட்டு நின்ற டாக்டர் ரவீந்திரநாத், தனது சொந்த ஊரான பாட கிராமத்திற்கு குடும்பத்தினருடன் இடம்பெயர்ந்தார்.
அங்கு தற்போது ரவீந்திரநாத் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார்.
அந்த ஆட்டோவின் முன்பகுதியில் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகத்தால் தொல்லை கொடுத்ததாக வாசகத்தை எழுதியுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கர்நாடக சுகாதாரத் துறை மந்திரி ஸ்ரீராமுலு, ஆட்டோ ஓட்டி வரும் டாக்டர் ரவீந்திரநாத்தை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது
உங்களது குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள் என்னை நேரில் வந்து சந்தித்து உங்கள் பிரச்சினைகளை தெரிவியுங்கள். மீண்டும் நீங்கள் பணிக்கு
திரும்பும் படி கேட்டுக்கொள்கிறேன் என்று மந்திரி ஸ்ரீராமுலு, டாக்டர் ரவீந்திரநாத்திடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.
அதன்படி விரைவில் டாக்டர் ரவீந்திரநாத், மந்திர ஸ்ரீராமுலுவை சந்தித்து தனக்கு தொல்லை கொடுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பற்றி புகார் கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கண் தானம் செய்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
கண் தானம் செய்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
நாளை தேசிய கண் தான தினத்தையொட்டி கண் தானம் செய்வதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கண் தானம் செய்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
சென்னை:
நாளை தேசிய கண்தான தினத்தையொட்டி கண் தானம் செய்வதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கண் தானம் செய்வதற்கான படிவத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டார்.
கண் தானத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது கண்களை தானம் செய்வதாக அறிவித்துள்ளார்..
இலங்கையில் நிலநடுக்கம் – பீதியில் மக்கள்
இலங்கையில் நிலநடுக்கம் – பீதியில் மக்கள்
மகாவலி நீர்த்தேக்க பகுதியில், எதிர்வரும் காலங்களில் சிறிய, சிறிய நிலநடுக்கங்கள், குறுகிய காலத்துக்குள் ஏற்படக்கூடுமென
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் பேராசிரியர் சி.பீ. திஸாநாயக்க தெரிவித்தார்.
இத்தகைய அதிர்ச்சிகள் நீர்த்தேக்கங்களில் உள்ள நீரின் அழுத்தம் அல்லது நீர்த்தேக்கங்களுக்கு அருகிலுள்ள சுண்ணாம்பு
கற்பாறைகளின் வெடிப்பால் ஏற்படுகின்றன எனத் தெரிவித்த அவர், நீர்த்தேக்கத்தின் நீர் அதிகரித்து, குறைவடையும் போது
இவ்வாறான அதிர்வுகளை எதிர்பார்க்க முடியுமென பேராசிரியர் திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.
“ஓகஸ்ட் 29ஆம் திகதி இரவும் அதன்பின்னர் அவ்வப்போது, விக்டோரியா நீர்த்தேகத்தை அண்மித்த பிரதேசத்தங்களில் 2
ரிக்டருக்கு குறைவான அலகில், பூமியதிர்ச்சி பதிவாகியிருந்தது. இது, விக்டோரியா நீர்த்தேக்கத்துக்கு கீழே மையப்பகுதியில்
ஏற்பட்டது; சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை” என்றார்.
“பாறைகளில் ஏற்பட்டிருந்த அழுத்தம் குறைந்து, கூடும். அதுவே, கண்டியில் ஏற்பட்டிருந்த இரண்டு, பூமியதிர்வுகளுக்கும் காரணமாக
அமைந்திருந்தது. இதனை சிறிய விடயமெனக் கருதி, நிராகரித்துவிடக்கூடாது. விக்டோரியா, ரத்தெனிகல, ரத்டெம்பே
ஆகிய நீர்த்தேக்கங்களில் பொருத்தப்பட்டுள்ள சமிக்ஞைக் கருவி தொகுதிகளிலும் நில அதிர்வு பதியப்பட்டுள்ளது” என்றார்
வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள் – மக்கள் அவதி
நாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக,
நீர்கொழும்பு கட்டுவ புவகவத்தை பிரதேசத்திலுள்ள பல வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
மேற்படி பிரதேசத்தை ஊடறுத்துச் செல்லும் ‘தெபா எல’ வாவியில், சட்டவிரோதமாக
தனிநபர் ஒருவர் கட்டி வரும் பாலம் ஒன்றின் காரணமாக தற்போது இந்த நிலை
ஏறபட்டுள்ளதாகவும் பாலத்தின் கீழ குப்பைகள் சேர்ந்துள்ளதன் காரணமாக,
நீரோட்டம் தடைப்பட்டுள்ளமையும் இதற்குக் காரணமாகுமென, பிரதேசவாசிகள் குற்றஞ்சான்றுகின்றனர்.
ஐந்து வீடுகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய வீடுகளில்
உள்ளவர்கள் மழை நீர் தேங்கி நிற்பதன் காரணமாக, வெளியில் செல்ல முடியாத நிலை எற்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக மழை பெய்யுமாயின் எனைய வீடுகளும் பாதிக்கப்படும் என பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

இலங்கையில் பரவும் கொரனோ – மேலும் பலர் பாதிப்பு
இலங்கையில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த இருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3,123 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் பூரணமாக
குணமடைந்து வீடு திருப்பியவர்களின் எண்ணிக்கை 2,925ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Covid-19 பரம்பலின் புதுப்பிக்கப்பட்ட தரவுகள் 2020-09-07 06:26:15
உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் – 3123
சிகிச்சை பெறும் நோயாளிகள் – 186
புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள் – 2
குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை – 2925
இறப்பு எண்ணிக்கை – 12
கடும் புயல் -கடலுக்கு செல்லாதீர் – எச்சரிக்கை
இன்று (07 ஆம் திகதி) முற்பகல் 09.00 மணி வரையான காலப்பகுதியில் நாட்டைச் சூழவுள்ள ஆழம் கூடிய மற்றும் ஆழம்
குறைந்த கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய
சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை நிலைமை:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் மேற்கு மற்றும் தென்மேற்கு ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது
மணித்தியாலத்துக்கு 45-55 கிலோ மீற்றர் வரை காணப்படும். காற்றின்
வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக்காணப்படும்.
குறிப்பிட்ட காலப்பகுதியில் கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆபத்தானது என மீனவர்கள்
அறிவுறுத்தப்படுவதோடு, கடலில் பயணம் செய்வோர் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
பேருவளையிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில்கடல் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரை (இது
கரைக்கு வரும் அலைகளின் உயரம் அல்ல) மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் நாட்டிற்கு மதிப்பிட முடியாதளவு பாதிப்பு
19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் நாட்டிற்கு மதிப்பிட முடியாதளவு பாதிப்பு
நாட்டிற்கு 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் மதிப்பிட
முடியாத அளவு பாதிப்பு ஏற்பட்டதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதனை நீக்கி, 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவர
மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தை அரசாங்கத்திற்கு வழங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அனைத்துப் பிரதேச செயலாளர் பிரிவிலும் ஒரு தேசிய பாடசாலையை
ஆரம்பிக்க அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாகவும், ஜனாதிபதி
கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து இதற்கான ஆலோசனை பெறப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வவுனியாவில் 8 பேர் அதிரடி கைது
வவுனியாவில் 8 பேர் அதிரடி கைது
வவுனியா – பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரபாநகர் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட 8 பேரை கைது செய்துள்ளதாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (05) காலை 9.30 மணியளவில் அரபாநகர் பகுதியிலுள்ள காணியொன்றில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் சிலர்
ஈடுபட்டு வருவதாக பூவரசங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து அப்பகுதிக்கு சென்ற பொலிஸார் 8 பேரை கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் கொழும்பு, வவுனியா உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதுடன்,
அவர்களிடமிருந்து நிலத்தை தோண்டுவதற்கு பயன்படும் மண்வெட்டி உட்பட சில பொருட்களையும், இரண்டு சொகுசு கார்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களுள் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தராக கடமையாற்றி வருவதாக தெரிவித்த பொலிஸார், அவர்கள்
அனைவரும் நாளையதினம் வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.
குளிக்க சென்ற சிறுமி – நீரில் மூக்கி மரணம்
வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் மீள் குடியேற்ற கிராமமான குகனேசபுரம் கிராமத்தில் குளத்தில் நீராடச் சென்ற சிறுமி நீரில்
மூழ்கி மரணமடைந்த சம்பவம் ஒன்று நேற்று (05) மாலை இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் மீள் குடியேற்ற கிராமமான குகனேசபுரம் காலிகோவில் வீதி 06ம் குறுக்கை சேர்ந்த சன்முகநாதன் விஜய ரூகினியும் அவரது சகோதரியும் நேற்று
மாலை ஆலம்குளத்திற்கு குளிக்கச்சென்ற போதே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருவதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
ஆலம்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 06 ல் கல்வி பயின்று வந்த சன்முகநாதன் விஜய ரூகினி (வயது 12) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மூன்று பேர் உள்ள குடும்பத்தில் இச் சிறுமி மூன்றாவது பிள்ளை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தென் இலங்கையில் உள்ளவர்கள் நடிக்கிறார்கள்- விக்கி காட்டம்
தென் இலங்கையில் உள்ளவர்கள் நடிக்கிறார்கள்- விக்கி காட்டம்
தமிழ் மொழி மூத்த மொழியென இந்திய உள்ளிட்ட பல உலக நாடுகளிலும் கூறப்படுகின்றதென தெரிவிக்கும் நாடாளுமன்ற
உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், தான் அதனை கூறிய போது, தென்னிலங்கையில் உள்ளவர்கள் அதனை அறியாதவர்கள் போல நடிக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
கிளிநொச்சி சந்தைக்கு அருகில் இன்று (05) நடைபெற்ற மக்கள் சந்திபொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர்,
தன்மை நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்து மக்கள் தனது பொறுப்புக்களை அதிகரித்துள்ளனர் என்றும், தனித்து பயணிப்பது
தனக்கொரு புதிய அரசியல் அனுபவமாக உள்ளதெனவும் தெரிவித்தார்.
தமிழ் தலைமையகள் காலத்துக்கு காலம் செய்வது ஒன்றும் சொல்வது ஒன்றுமாக இருந்த காரணத்தாலேயே மக்களுக்கு
அரசியல் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளதெனவும், தற்போதைய மாற்றம் தமிழ் தேசியத்தின் எழுச்சிக்கு வழி செய்யும் என்றும் தெரிவித்தார்.
தென்னிலங்கை அரசியல் சக்திகளும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சகலரும் தன்மீது பெரும் அவதூறுகளை சாட்டியுள்ளனர்
எனத் தெரிவித்த அவர், அவற்றை நம்பாது தனக்கு வாக்களித்த மக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
அதன்படி, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறுகின்ற நிலைதான் எமது அரசியலின் முதல் பிழையாகவும்
தோல்வியாகவும் அமைகின்றது எனத் தெரிவித்த அவர், தேர்தலில் வெற்றி பெற்ற எனக்கு முன்னால் மிகப் பெரும் கடமைகள் காத்திருக்கின்றன என்றார்.
இப்போது, நாடாளுமன்றத்தில் தனக்கு எதிர்ப்பு வருகின்ற போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் மௌனிகளாக
இருக்கின்றார்கள் என்று தெரிவித்த அவர், தான் அவர்களுக்காத்தான் மறந்துபோயுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழி உலகின் மூத்த மொழி என்று இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் கூறப்படுகின்றதென தெரிவித்துள்ள அவர், அதனை
தான் கூறும்போது தென்னிலங்கையில் உள்ளவர்கள் நடிக்கிறார்கள் என்றும், சாடினார்.
பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைப்பதற்குரிய நிலையமாக தங்காலை பழைய சிறைச்சாலை பயன்படுத்தப்படவுள்ளது
பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைப்பதற்குரிய நிலையமாக தங்காலை பழைய சிறைச்சாலை பயன்படுத்தப்படவுள்ளது
பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைப்பதற்குரிய நிலையமாக தங்காலை பழைய சிறைச்சாலை பயன்படுத்தப்படவுள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவிப்பு நேற்று (04) வெளியிடப்பட்டுள்ளது.
1982 ஆண்டு இலக்கம் 10 யின் கீழான பயங்கரவாதததை; தடுக்கும் (தற்காலிக விசேட ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டத்துடன்
வாசிக்கப்பட வேண்டிய 1979 ஆண்டு இலக்கம் 48யின் கீழ் பயங்கரவாதத்தை தடுக்கும் (தற்காலிக) ஒழுங்கு விதிகள்
சட்டததின் 15 ஆவது சரத்தின் கீழ் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக அந்த சரத்தில் கூறப்பட்டுள்ள
பணிகளுக்காக – தங்காலை பழைய சிறைச்சாலையை பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைக்கும் இடமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவிற்கு
அமைய, பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன, இதற்குரிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்
நாடெங்கும் கனமழை – மக்களுக்கு எச்சரிக்கை
நாடெங்கும் கனமழை – மக்களுக்கு எச்சரிக்கை
நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் இன்று அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையோ
அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, மத்தியமற்றும்வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,மன்னார்மற்றும்முல்லைத்தீவுமாவட்டங்களிலும் சில
இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
நாடு முழுவதும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம்
காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை
குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
சூரியனின் தென் திசை நோக்கிய தொடர்பான இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையின்
அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. இன்று (06ஆம் திகதி) பெந்தோட்டை, மீகம, தொடம்பபிட்டிய, பெலவத்தை,
போதகம மற்றும் கதிர்காமம் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.09 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் எனக்கே வாக்களிப்பார்கள் – டிரம்ப்
ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் எனக்கே வாக்களிப்பார்கள் – டிரம்ப்
ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் தனக்கே வாக்களிப்பார்கள் என ஜனாதிபதி டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் எனக்கே வாக்களிப்பார்கள் – டிரம்ப் நம்பிக்கை
டிரம்ப்
வாஷிங்டன்:
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் 2-வது முறையாக போட்டியிடுகிறார்.
குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் களம் இறக்கப்பட்டு உள்ளார். மேலும் அந்த கட்சியின்
சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகிறார்.
எனவே அமெரிக்காவில் உள்ள இந்தியர்களின் வாக்கு ஜனநாயக கட்சிக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம்
குடியரசு கட்சியினரும் அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்குகளை கவரும் வகையில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் தனக்கே வாக்களிப்பார்கள் என ஜனாதிபதி டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்தியாவில் இருந்து எங்களுக்கு
பெரும் ஆதரவு உள்ளது. பிரதமர் மோடியிடம் இருந்து எங்களுக்கு பெரும் ஆதரவு உள்ளது. அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்கு
இந்த ஜனாதிபதி தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும். அவர்கள் எனக்கே வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” எனக் கூறினார்.
கனடாவில் துப்பாக்கிச் சூடு – 5 பேர் பலி
கனடாவில் துப்பாக்கிச் சூடு – 5 பேர் பலி
கனடாவில் டொரண்டோவில் உள்ள ஒரு வீட்டில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உள்பட 5 பேர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.
கனடாவில் துப்பாக்கிச் சூடு – 5 பேர் பலி
துப்பாக்கிச்சூடு நடந்த இடம்
ஒட்டாவா:
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் தலைநகர் டொரண்டோவில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் மாலை திடீரென துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதைக்கேட்டு
அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், துப்பாக்கிச் சூடு நடந்த வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு ஒரு
பெண் உள்பட 5 பேர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். மேலும் ஒரு பெண் படுகாயங்களுடன் உயிருக்கு
போராடிக்கொண்டிருந்தார். போலீசார் உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் யார்? துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் என்ன? என்பன உள்ளிட்ட தகவல்கள் தெரியவில்லை.
இதுபற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதேசமயம் இந்த துப்பாக்கிச்சூடு பயங்கரவாத தாக்குதலுடன்
தொடர்புடையது அல்ல என்றும் பொதுமக்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.







