Posted in இலங்கை செய்திகள்

குண்டு வெடித்தது எப்படி – மைத்திரியிடம் இன்றும் விசாரணை

குண்டு வெடித்தது எப்படி – மைத்திரியிடம் இன்றும் விசாரணை

இலங்கையின் முன்னாள் நல்லாட்சி மைந்தர் என அழைக்க பட்ட

மைத்திரி ஆட்சியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தொடர்பில்

மைத்திரியிடம் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்துகிறது

இன்றும் அவர் மீது இந்த விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளனவாம்

Posted in இலங்கை செய்திகள்

யாழ். கோண்டாவில் பகுதியில் -மோட்டார் சைக்கிள்களில் வந்து வாள்வெட்டு தாக்குதல்

யாழ். கோண்டாவில் பகுதியில் -மோட்டார் சைக்கிள்களில் வந்து வாள்வெட்டு தாக்குதல்

யாழ். கோண்டாவில் கிழக்கு – அரசடி பகுதியில் உள்ள வீடு ஒன்றின்

மீது வாள்வெட்டு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

நேற்று (16) இரவு 8.30 மணி அளவில் இரு மோட்டார் சைக்கிள்களில் முகத்தை

மறைத்தவாறு வாள்களுடன் நுழைந்த வாள்வெட்டு கும்பல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

தாக்குதலில் வீட்டின் முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார்

ஒன்றும், வீட்டின் கதவு, ஐன்னல்களும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வாள்வெட்டு
வாள்வெட்டு
Posted in இலங்கை செய்திகள்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக-நிஷாந்த த சொய்சா நியமனம்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக-நிஷாந்த த சொய்சா நியமனம்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த த சொய்சா

நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

கொரனோ நெருக்கடி- பாதிக்கப்பட்ட வர்த்தகர்ளுக்கு 133 பில்லியன் ரூபா நிதி உதவி

கொரனோ நெருக்கடி- பாதிக்கப்பட்ட வர்த்தகர்ளுக்கு 133 பில்லியன் ரூபா நிதி உதவி

இலங்கை மத்திய வங்கி, சௌபாக்யா கொவிட் – 19 புத்துயிரளித்தல் வசதியினூடாக ரூ.178 பில்லியன் தொகையான 61,907 கடன்களுக்கு ஒப்புதலளித்துள்ளது

இலங்கை மத்திய வங்கியானது 2020 ஒத்தோபர் 15ஆம் திகதி வரையில் கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற 61,907 கடன்

விண்ணப்பங்களுக்கு ஒப்புதலளித்தது. இந்த விண்ணப்பங்கள் மொத்தமாக ரூ.177,954 மில்லியனை வகைகூறுவதுடன் சௌபாக்யா கொவிட்-19 புத்துயிரளித்தல் வசதியின் மூன்று

கட்டங்களின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது வரையில், உரிமம்பெற்ற வங்கிகள் நாடுமுழுவதும் பாதிக்கப்பட்ட 45,582

வியாபாரங்களுக்கிடையில் ரூ.133,192 மில்லியன் கடன்களை விடுவித்துள்ளது. (தகவல்களுக்கு அட்டவணை 01 இனைப் பார்க்கவும்)

கடன் திட்டத்தின் முதற்கட்டம் 2020 ஏப்பிறல் 01 இலிருந்து அமுலுக்குவரும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. கடன் திட்டத்தின் கட்டம் II மற்றும் கட்டம் III ஆகிய இரண்டும் 2020 யூலை

01இல் இருந்து அமுலுக்குவரும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது, இந்த திட்டங்களின் நோக்கமானது ஆண்டிற்கு 4 சதவீத வட்டிவீதத்தில் மொத்தமாக ரூ.150 பில்லியனை தொழிற்படு

மூலதனக் கடன்களாக வழங்குவதாகும். இந்த கடன்கள் 6 மாத சலுகைக்காலம் உள்ளடங்கலாக 24 மாதங்கள் மீளச்செலுத்தும்

காலத்தினை வழங்குகின்றது. கொவிட்-19 வெளித்தாக்கத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட சுயதொழில் மற்றும் தனிநபர்கள்

உள்ளடங்கலான வியாபாரங்கள் இதன் பயன்பெறுநர்களாகக் காணப்படுகின்றனர்.

பாதிக்கப்பட்ட வியாபாரங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற அதிக எண்ணிக்கையிலான கோரிக்கைகளை கருத்திற்கொண்டு,

இலங்கை மத்திய வங்கியானது முன்னதாக எதிர்பார்க்கப்பட்ட ரூ.150 பில்லியன் வரையறையினைக் கருத்திற்கொள்ளாது விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்குத் தீர்மானித்தது.

அறிவிக்கப்பட்ட முடிவுத்திகதி வரையில் கிடைக்கப்பெற்ற பாதிக்கப்பட்ட வியாபாரங்களின் அனைத்து விண்ணப்பங்களும் இந்தக்கடன் திட்டத்தினூடாக சேவையாற்றப்படுகின்றது.

Posted in உலக செய்திகள்

அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி – மீனவர்களுக்கு எச்சரிக்கை

அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி – மீனவர்களுக்கு எச்சரிக்கை

அந்தமான் கடல் பகுதிகளில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால் 18-ஆம் திகதி (நாளை) அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். 19 ஆம்

திகதி மத்திய வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். 20 ஆம் திகதி மத்திய மேற்கு வங்கக் கடல், வட தமிழகம் மற்றும் ஆந்திர கடலோர

பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு

மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். என்றும் சென்னை வானிலை ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது.

வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி,

நாகை ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் (இன்று) ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும். வரும் 19 ஆம் திகதி (நாளை மறுதினம்) மத்திய

கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது

மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில் ஆந்திரா கடற்கரையை நோக்கி

நகரக்கூடும்.என்றும் சென்னை வானிலை ஆய்வு நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Posted in பிரான்ஸ் செய்திகள் முக்கிய செய்திகள்

பிரான்சில் ஆசியர் கழுத்து வெட்டி கொலை – தீவிரவாதிகள் வெறியாட்டம்

பிரான்சில் ஆசியர் கழுத்து வெட்டி கொலை – தீவிரவாதிகள் வெறியாட்டம்

பிரான்சில் மிக புகழ் பெற்ற பாடசாலை ஒன்றில் வரலாற்று ஆரியர் ஒருவர்

மாணவர்கள் முன்பாக மிக கொடூரமாக கழுத்துவெட்டி படுகொலை

செய்ய பட்டுள்ளார் ,இந்த தாக்குதலை மேற்கொண்ட தீவிரவாதி சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார்

மேற்படி சம்பவம் உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது ,

தற்போது குறித்த பகுதிகள் எங்கும் பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது

,மேலும் முக்கிய நகரங்கள் எங்கு இரகசிய போலீசார் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டுள்ளது

நத்தார் தினத்தை முன்னிட்டு பெரும் தாக்குதல்களை தீவிரவாதிகள் நடத்த

கூடும் என்பதால் இந்த திடீர் நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளது குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

கொரனோ வெறியாட்டம் =-அமெரிக்காவில் அம்புலன்ஸ் இன்றி மருத்துவமனைகள் திணறல்

கொரனோ வெறியாட்டம் =-அமெரிக்காவில் அம்புலன்ஸ் இன்றி மருத்துவமனைகள் திணறல்

அமெரிக்காவில் கொரனோ வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில்

Kansas City, Missouri, போன்ற மருத்துவமனைகளில் அம்புலன்ஸ்

அனுப்பிட அந்த அமருத்துவ மனைகள் மறுத்து வருகிறது

கரணம் நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்த திணறல் ஏற்பட்டுள்ளது

அவசர நோயாளர்கள் மட்டும் அம்புலன்ஸ் அழைக்க அனுமதிக்க படுகின்றனர்

,இதில் எது அவசர நோயாளர் என்ற வரையறை காணப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர் .

வல்லரசு அமெரிக்காவில் கோரத் தாண்டவம் ஆடும் கொரனோ தாக்குதலினால்

அந்த நாடு சின்னா பின்னமாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் எட்டு மில்லியன் பேர் கொரனோவால் பாதிப்பு

அமெரிக்காவில் எட்டு மில்லியன் பேர் கொரனோவால் பாதிப்பு

உலக மிரளவ வைத்து வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி அமெரிக்காவில்

இதுவரை சுமார் எட்டு மில்லியன் பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,

மேலும் எதிர் வரும் மாதங்களில் இதன் பாதகிப்பு விகிதம்

இரட்டிப்பாகும் என கடும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளதுடன்

மார்கழி மாதம் முடிவதற்குள் ஐந்து லட்சம் பேர் வரை பலியாக கூடும் என எதிர்பார்க்க படுகிறது

Posted in உலக செய்திகள்

பாங்கொக்கில் அரச அதிபரை பதவி விலக கோரி மக்கள் போராட்டம்

பாங்கொக்கில் அரச அதிபரை பதவி விலக கோரி மக்கள் போராட்டம்

பாங்கொக்கில் ஆளும் அரச அதிபரை பதவி விலக கோரி மக்கள்

பெரும் எழுச்சியுடன் போராட்டத்தை நடத்தினர்

இதில் கலந்து கொண்ட மக்கள் மீது தடியடி ,கண்ணீர் புகை குண்டு தாக்குதல் மேற்கொள்ள பட்டது

மேலும் வன்முறை ,கலவரத்தை தூண்டினார்கள் என்ற குற்ற சாட்டில்

நூற்றுக்கு மேற்பட்டவர்கள் அரச பயங்கரவதை அடக்குமுறைக்கு உள்ளாக்க பட்டு கைது செய்ய பட்டுள்ளனர்

மேற்படி போராட்ட காரர்களின் பின்னால் சீனா உள்ளது என ஆளும்

அரச அதிபர் தெரிவித்து வருகின்றமை கவனிக்க தக்கது

பாங்கொக்கில் அரச அதிபரை
பாங்கொக்கில் அரச அதிபரை
Posted in இலங்கை செய்திகள்

20 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பான விவாதம் குறித்து கட்சி தலைவர்களிடையே கலந்துரையாடல்

20 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பான விவாதம் குறித்து

கட்சி தலைவர்களிடையே கலந்துரையாடல்

20 ஆவது அரசியல் யாப்பு திருத்தத்தில் உள்ள சரத்துக்கள் அரசியல் யாப்பிற்கு

அனுகூலமானதா இல்லையா என்பது தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள

முடிவு சபாநாயகரினால் எதிர்வரும் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படவுள்ளது.

இது தொடர்பான விவாதம் நடத்தப்படும் நாட்கள் குறித்து கட்சி தலைவர்களிடையே

கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. கட்சி

தலைவர்களுக்கிடையிலான கூட்டம் இன்று பாராளுமன்ற கட்டட தொகுதியில் நடைபெறவுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 147 பேர் கைது

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 147 பேர் கைது

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள கம்பஹா மாவட்டத்தில்

19 பொலிஸ் வலையங்களில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விற்பனை

நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் இன்று காலை 8.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரையில் திறந்திருக்கும்.

இதேவேளை கடந்த 24 மணித்தியாலத்தில் கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தல்

ஊரடங்கு சட்டத்தை மீறிய 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒக்டோபர்

மாதம் 4 ஆம் திகதி தொடக்கம் இதுவரையில் 167 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன். 60 வாகனங்கள் பொறுப்பேற்க்கப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இவற்றுள் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளாகும்.

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் -மக்கள் பார்க்க வாலிபன் மீது கத்தி வெட்டு

லண்டனில் -மக்கள் பார்க்க வாலிபன் மீது கத்தி வெட்டு

இன்று மதியம் 12.15 மணியளவில் Surrey Quays Shopping Centre

,பகுதியில் பதினெட்டு வயது வாலிபன் மீது மர்ம நபர்கள் திடீர் கத்தி வெட்டு தாக்குதலை நடத்தினர் .

இதில் பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளான வாலிபர் அம்புலன்ஸ்

உலங்குவானூர்தி மூலம் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டார்

காயமடைந்த வாலிபர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் ,போலீசார்

இது தொடர்பான விசாரணைகளை தீவிர படுத்தி விசாரித்து வருகின்றனர்

இந்த படுகொலை தாக்குதலுக்கு உரிய காரணம் உடனடியாக தெரிய வரவில்லை

லண்டனில் மக்கள் பார்க்க
லண்டனில் மக்கள் பார்க்க
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் நாள் ஒன்றுக்கு 28,000 பேர் கொரனோவால் பாதிப்பு-138 பேர் பலி

பிரிட்டனில் நாள் ஒன்றுக்கு 28,000 பேர் கொரனோவால் பாதிப்பு-138 பேர் பலி

பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின்

தாக்குதலில் சிக்கி நாள் தோறும் இருபத்தி எட்டாயிரம் பேர் பாதிக்க பட்டு வருகின்றனர்

ஐப்பசி மாதத்தின் முதல் வாரத்தில் நாள் ஒன்றுக்கு 28,000 என்ற விகிதத்தில் இந்த தொற்று கண்டறிய பட்டு வருகிறது

இதுவே இம் மாதம் இறுதியில் நாற்பது ஆயிரத்தி கடக்கும் என அச்சம் வெளியிட பட்டுள்ளது

நாள் ஒன்றுக்கு மரணம் நூறுக்கு மேல் ஏற்பட்டுள்ளது,கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 138 பேர் பலியாகியுள்ளனர்

இதுவே எதிர்வரும் நான்கு வாரத்திற்குள் பலநூறு மக்கள் பலியாக

கூடும் என்ற அபாய எச்சரிக்கை மீள் விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

Posted in சினிமா

போதை பொருள் வழக்கு – ராகினி கொடுத்த தகவலின் பேரில் பிரபல நடிகர் வீட்டில் விசாரணை

போதை பொருள் வழக்கு – ராகினி கொடுத்த தகவலின் பேரில் பிரபல நடிகர் வீட்டில் விசாரணை

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராகினி கொடுத்த தகவலின் பேரில் அஜித் பட நடிகர் வீட்டில் விசாரணை நடைபெற்றுள்ளது.

போதை பொருள் வழக்கு – ராகினி கொடுத்த தகவலின் பேரில் பிரபல நடிகர் வீட்டில் விசாரணை
ராகினி
நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்குப் பின்னர் போதைப் பொருள் குறித்த விவாதங்கள் பாலிவுட் விவாதங்கள் சூடு பிடிக்கத் தொடங்கி

விட்டது. ஆனால் கர்நாடக திரை நட்சத்திரங்கள் மத்தியில் போதைப் பொருள் புழங்குவதாக பல மாதங்களுக்கு முன்பே விசாரணை தொடங்கப்பட்டு விட்டது.

இந்த விசாரணை மத்தியக் குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல்

தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் போதைப் பொருள்

பயன்படுத்தியது மற்றும் அந்தக் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக

நடிகை ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி மற்றும் அவர்களது நண்பர்கள்

என 14 பேர் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

விவேக் ஓபராய்

இந்நிலையில் பெங்களூரு சிறையில் இருக்கும் நடிகை ராகினி திவேதி

அளித்த தகவலின்பேரில் மும்பையில் உள்ள நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

Posted in சினிமா

வீடு திரும்பிய தமன்னா… கட்டியணைத்து வரவேற்ற பெற்றோர்கள்

வீடு திரும்பிய தமன்னா… கட்டியணைத்து வரவேற்ற பெற்றோர்கள்

முன்னணி நடிகையான தமன்னா, கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீட்டுக்குச் சென்ற போது அவரது பெற்றோர்கள் கட்டியணைத்து வரவேற்றிருக்கிறார்கள்.

வீடு திரும்பிய தமன்னா… கட்டியணைத்து வரவேற்ற பெற்றோர்கள்
தமன்னா


தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. கடந்த ஆகஸ்ட் மாதம் தமன்னாவின் பெற்றோருக்கு

கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தனக்கும் குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களுக்கும் பணியாளர்களுக்கும் தொற்று இல்லை” எனக்கூறியிருந்தார்.

இதையடுத்து ஷூட்டிங்கிற்காக ஐதராபாத் சென்ற தமன்னாவிற்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர்

ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஐதராபாத்தில் சில நாட்கள் தங்கி இருந்தார்.

தமன்னா

இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்ட தமன்னா மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றிருக்கிறார். வீட்டிற்கு

வரும் தமன்னாவை வாசலிலேயே வரவேற்று அவருடைய அப்பாவும், அம்மாவும் கட்டியணைத்து வரவேற்றார்கள். தான் மீண்டு

வந்ததைப் பற்றியும் உருக்கமான வீடியோ ஒன்றை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

வீடு திரும்பிய தமன்னா
வீடு திரும்பிய தமன்னா
Posted in உலக செய்திகள்

போலி பாஸ்போர்ட்டில் தப்ப முயன்ற அமெரிக்க தமிழர் கைது

போலி பாஸ்போர்ட்டில் தப்ப முயன்ற அமெரிக்க தமிழர் கைது

போலி பாஸ்போர்ட்டில் அமெரிக்காவை விட்டு தப்ப முயன்ற அமெரிக்க தமிழரை அதிகாரிகள் கைது செய்தனர்.

போலி பாஸ்போர்ட்டில் தப்ப முயன்ற அமெரிக்க தமிழர் கைது
கைது

அமெரிக்காவில் வசித்து வரும் தமிழர் துரைகந்தன் முருகன் (வயது 41). சிறுமியை

பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக அவர் மீது நியூ ஜெர்சி மாகாணத்தில் வழக்கு இருக்கிறது.

இதற்கிடையே, அமெரிக்காவை விட்டு தப்புவதற்காக, சிகாகோ சர்வதேச விமான நிலையத்துக்கு முருகன் வந்தார்.

வழக்கமான விசாரணைக்காக, எல்விஸ் டயாஸ் என்பவர் பெயரிலான இந்திய பாஸ்போர்ட்டையும், பயண அனுமதி

அட்டையையும் அதிகாரிகளிடம் அளித்தார். ஆனால், அவரது உடைமைகளை பரிசோதித்தபோது, முருகன் பெயருக்குரிய ஆவணங்கள் இருந்தன.

உடற்கூறு பரிசோதனையின்போது, அவர் பெயரில் பாலியல் வழக்கு நிலுவையில் இருப்பதை காட்டியது.

இதையடுத்து, அவரிடம் விசாரித்தபோது, தன் பெயர் முருகன் என்றும்,

உடல்நலமின்றி இருக்கும் தனது தந்தையை பார்ப்பதற்காக, நண்பரின் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி அமெரிக்காவை விட்டு

செல்ல முயன்றதாக ஒப்புக்கொண்டார். அவர் கைது செய்யப்பட்டு, நியூ ஜெர்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

உயிருடன் குளிர்பதன பெட்டியில் சகோதரனை அடைத்து கொன்ற கொடூரம் உயிரிழப்பு

உயிருடன் குளிர்பதன பெட்டியில் சகோதரனை அடைத்து கொன்ற கொடூரம் உயிரிழப்பு

சேலத்தில் உயிருடன் குளிர்பதன பெட்டியில் வைக்கப்பட்டு மீட்கப்பட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

உயிருடன் குளிர்பதன பெட்டியில் வைக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு


உயிரிழந்த முதியவர் பாலசுப்பிரமணிய குமார்
சேலம்:

சேலம் கந்தம்பட்டி பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணிய குமார் (வயது 74).

இவருடைய தம்பி சரவணன் (70). இவர்களின் தங்கை மகள்கள் ஜெயப்பிரியா, கீதா. இவர்கள் 4 பேரும் ஒரே வீட்டில் வசித்து

வருகின்றனர். இந்த நிலையில் பாலசுப்பிரமணிய குமாருக்கு உடல்நிலை பாதித்தது.

இதையடுத்து சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். சம்பவத்தன்று ஆஸ்பத்திரியில் இருந்து

பாலசுப்பிரமணிய குமாரை அவரது தம்பி சரவணன் வீட்டுக்கு அழைத்து வந்தார். பின்னர் அண்ணன் இறந்துவிட்டார் என்று

கூறிக்கொண்டு உயிருடன் உள்ளவரை இறந்தவர்களின் உடலை வைக்க கூடிய குளிர் பதன பெட்டியில் (பிரீசர் பாக்ஸ்) வைத்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூரமங்கலம் போலீசார் வந்து குளிர்பதன பெட்டியில் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த

முதியவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

இதைத்தொடர்ந்து மிகவும் அஜாக்கிரதையாக எந்திரத்தை கையாண்டதாகவும், முரட்டுத்தனமாக செயல்பட்டு உயிருடன் உள்ள அண்ணனை குளிர்பதன பெட்டியில் வைத்ததற்காகவும் 2

பிரிவுகளின் கீழ் சரவணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சரவணன் சற்று மனநலம் பாதித்தவர் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலசுப்பிரமணிய குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிருடன் குளிர்பதன பெட்டியில்
உயிருடன் குளிர்பதன பெட்டியில்
Posted in இலங்கை செய்திகள்

பிரதமர் மகிந்தா அலுவலகத்தின் பிரதானியாக மகன் யோஷித நியமனம்

பிரதமர் மகிந்தா அலுவலகத்தின் பிரதானியாக மகன் யோஷித நியமனம்

பிரதமர் அலுவலகத்தின் பிரதானியாக யோஷித ராஜபக்ஷ

நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அண்மையில் யோஷித ராஜபக்ஷவை சந்தித்த இலங்கைக்கான

பதில் சீன தூதுவர் ஹுவெய், அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதாக தூதரகத்தின் டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

உலகம் முழுவதும் சிறிது நேரம் முடங்கிய டுவிட்டர்

உலகம் முழுவதும் சிறிது நேரம் முடங்கிய டுவிட்டர்

டுவிட்டர் சிறிது நேரம் முடங்கியதில் பாதுகாப்பு மீறலோ அல்லது ஹேக் செய்யப்பட்டதற்கான ஆதாரமோ இல்லை என டுவிட்டர் நிறுவனம் கூறி உள்ளது.

உலகம் முழுவதும் சிறிது நேரம் முடங்கிய டுவிட்டர் -நெட்டிசன்கள் டென்ஷன்

பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டர் நேற்று பிற்பகல் முடங்கியது. பயனர்கள் டுவிட் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

ஏற்கனவே வந்த தகவல்களையும் பார்க்க முடியவில்லை. திரும்பத் திரும்ப டுவிட் செய்யும் முயற்சியில் ஈடுபட்டும் பலன் அளிக்கவில்லை. இதனால் நெட்டிசன்கள் டென்ஷன் அடைந்தனர்.

ஹேக்கர்கள் டுவிட்டரை முடக்கியிருக்கலாம் என பலரும் கருத்து பதிவிட்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு டுவிட்டர் செயல்பட தொடங்கியது.

இதுபற்றி டுவிட்டர் நிறுவனம் கூறுகையில், ‘பயனர்களில் பலருக்கு டுவிட்டர் செயல் இழந்திருக்கும். எங்கள் உள் அமைப்புகளில்

நாங்கள் செய்த கவனக்குறைவான மாற்றம் காரணமாக சிக்கல் ஏற்பட்டது. தற்போது பிரச்சினை சரி செய்யப்பட்டுவிட்டது.

இதுபற்றி விசாரணை நடத்தப்படுகிறது. பாதுகாப்பு மீறல் அல்லது ஹேக் செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை’ என டுவிட்டர் விளக்கம் அளித்துள்ளது.

இதேபோல் கடந்த பிப்ரவரி மாதமும் டுவிட்டர் சில மணி நேரம் முடங்கி, பின்னர் செயல்படத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் பெரும்பாலான அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், முக்கிய பிரமுகர்கள் முதல்

சாமானிய மக்கள் வரை அனைத்து தரப்பினரும் டுவிட்டரில் கணக்கு வைத்துள்ளனர். அரசியல் தலைவர்கள தங்கள்

கருத்துக்களை இப்போது பெரும்பாலும் டுவிட்டர் மூலமாகவே கூறுகின்றனர். தகவல் வேகமாக உலகம் முழுவதும்

சென்றடைவதால் பலரும் டுவிட்டரை பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

சஜித் பிரேமதாசவின் வீட்டுக்கு சென்ற CID

சஜித் பிரேமதாசவின் வீட்டுக்கு சென்ற CID

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தொடர்பில் வாக்குமூலம்

பெற்றுக்கொள்ள குற்றப்புலனாய்வு பிரிவினர், எதிர்க்கட்சித் தலைவர்

சஜித் பிரேமதாசவின் வீட்டுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் எதிர்க்கட்சித்

தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் தொலைபேசி

உரையாடல் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.