உயர்தரப் பரீட்சை மோசடி – விசாரணை நடைபெறுவதாக அறிவிப்பு
உயர்தரப் பரீட்சை மோசடி – விசாரணை நடைபெறுவதாக அறிவிப்பு
தற்போது நடைபெறும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில்
மோசடியில் ஈடுபட்ட மாணவர்கள் தொடர்பில் விசாரணை
இடம்பெறுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பீ.சனத் பூஜித் தெரிவித்துள்ளார்.
குற்றப்புலனாய்வத் திணைக்களம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
மோசடிகளைத் தவிர்ப்பதற்கு அனைத்துப் பரீட்சை நிலையங்களுக்கும்
மேலதிக உதவி மண்டப தலைமை அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சூடு பிடிக்கும் அமெரிக்கா தேர்தல் 2,மில்லியன் விளம்பரங்களை அகற்றிய பேஸ்புக்
சூடு பிடிக்கும் அமெரிக்கா தேர்தல் 2,மில்லியன் விளம்பரங்களை அகற்றிய பேஸ்புக்
அமெரிக்காவில் இடம்பெற்றவுள்ள தேர்தலை அடுத்து சமுக வலைத்தளங்களை
மையப்படுத்தி தேர்தல் பரப்புரைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,
இதில் ஆளும் அரச அதிபர் டிரம்ப் பலத்த தோல்வியை தழுவுவார் எனவும் ,
பைடனே வெற்றிபெறுவார் என்ற கருது கணிப்பு பலமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இவ்வாறு இந்த போர் நடந்து கொண்டிருக்க பேஸ்புக் ,மற்றும் இன்ஸாகிராமில்
சுமார் .22 லட்சம் விளம்பரங்கள் அகற்ற பட்டுள்ளன ,மேலும் 120,000 பதிவுகள் அகற்ற பட்டுள்ளன
பேஸ்புக் எடுத்துள்ள இந்த அதிரடி முடிவினால் டிரம் மற்றும் பைடன்
தரப்பு கடும் அதி திருப்தியில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது
நியூலாந்தில் செத்து மிதந்த திமிங்கலங்கள் – நடந்தது என்ன …?
நியூலாந்தில் செத்து மிதந்த திமிங்கலங்கள் – நடந்தது என்ன …?
நியுசுலாந்து கடல் பகுதியில் இராட்சத திமிங்கலங்கள் திடீரென
செத்து மிதந்துள்ளது .இந்த மீன்கள் இறந்தமைக்கான உடனடி காரணம் தெரிவிக்க படவிலை
சுமார் ஐம்பதுக்கு மேற்பட்ட திமிங்கலகங்கள் கரையில் மிதந்ததாகவும்
இதில் சுமார் பல டசினுக்கு மேற்பட்டவை இறந்த நிலையில் காணப்படுவதாக
கடல்வாழ் உயிர் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்
இவ்வாறு இந்த திமிங்கலங்கள் கரை ஒதுங்கியது சுனாமி போன்ற
பேரழிவுகள் ஏற்பட கூடும் என்ற ஐயம் மக்கள் மத்தியில் நிலவுகிறது

இத்தாலியில் மீள அதிகரித்துள்ள கொரனோ 11,705 பேர் பாதிப்பு – 69 பேர் பலி
இத்தாலியில் மீள அதிகரித்துள்ள கொரனோ 11,705 பேர் பாதிப்பு – 69 பேர் பலி
இத்தாலியில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்
சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் சுமார்
11,705 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,
அதேபோல 69 பேர் பலியாகியுள்ளனர் ,இவை எதிர்வரும் நாட்களில் இரட்டிப்பாக
கூடும் என்ற அச்சம் வெளியிட பட்டுள்ளது ,மக்கள் அரசு கூறும் விதிகளை
கடை பிடிக்க மறுத்துவருவதால் இந்த தொற்று இடம்பெற்று வருவதாக தெரிவிக்க படுகிறது
சூட்டு வீழ்த்த பட்ட நவீன ரக போர் விமானம் – சண்டை உக்கிரம்
சூட்டு வீழ்த்த பட்ட நவீன ரக போர் விமானம் – சண்டை உக்கிரம்
Azerbaijan நாட்டு இராணுவத்தினால் சு 25 ராகத்தை சேர்ந்த அதி உயர்
தாக்குதல் விமானம் ஒன்று விமான எதிர்ப்பு ஏவுகணை மூலம் சுட்டு
வீழ்த்த பட்டுள்ளதாக குறித்த நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது
ஆனால் அர்மேனிய இராணுவமோ அதற்கு மேல் ஒரு படி மேல் சென்று
தாம் 25 விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக அறிக்கை போர் நடத்தி வருகிறது
இந்த பரப்புரைகள் ஒரு பக்கம் இடம்பெற்ற வண்னம் இருக்க ,மறுபுறத்தே
பல நகரங்களை மீட்டவாறு ஆர்மேனியா இராணுவம் நுழைந்த வண்ணம் உள்ளதாக சுயாதீன தகவல்கள் தெரிவித்துவருகின்றன
ஒரே நாளில் 400,000 பேர் கொரனோவால் பாதிப்பு
ஒரே நாளில் 400,000 பேர் கொரனோவால் பாதிப்பு
உலக நாடுகளை மீள நடுக்கத்தில் உறைய வைத்து வரும் கொரனோ
வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் நான்கு லட்சம் பேர் ஒரே
நாளில் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
இதுவே எதிர் வரும் நாட்களில் மேலும் அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை
விடுக்க பட்டுள்ளது ,இவ்வாறு
பாதிக்க
பட்ட நாடுகளில் ஐரோப்பா முன்னிலை வகிப்பதாக அந்த புள்ளி விபரம் தெரிவிக்கிறது
பிரிட்டனில் பாட்டி வைத்த வாலிபருக்கு £10,000 தண்டம்
பிரிட்டனில் பாட்டி வைத்த வாலிபருக்கு £10,000 தண்டம்
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின்
தாக்குதலை அடுத்து சட்டங்களில் மாறுதல் ஏற்பட்டு புதிய
நடைமுறை விதிமுறைகள் பிறப்பிக்க பட்டுள்ளன
சுமார் நூறு பேர் வரை பாட்டியின் கலந்து கொண்டனர் ,மேற்படி பாட்டியை
ஏற்பாடு செய்து நடத்திய வாலிபருக்கு பத்து ஆயிரம் பவுண்டுகள்
தண்டம் அறவிட பட்டுள்ளது
இவ்வாறு சில தமிழர்களுக்கும் அறவிட பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
ஆயுத முனையில் பிரிட்டனில் வீடு புகுந்து நாயை திருடி சென்ற திருடர்கள்
ஆயுத முனையில் பிரிட்டனில் வீடு புகுந்து நாயை திருடி சென்ற திருடர்கள்
பிரிட்டன் புறநகர் பகுதியான Liverpool பகுதியில் இன்று மதியம் 12,15
மணியளவில் வீட்டின் பின்புறவழியாக ஆயுதங்கள் மற்றும் கத்தியுடன்
நுழைந்த திருடர்கள் அங்கிருந்த அமெரிக்கா இனத்தை சேர்ந்த விலை உயர்ந்த நாய்களை திருடி சென்றுள்ளனர்
மேற்படி சம்பவம் பொலிசாருக்கு தெரிவிக்க பட்டதை அடுத்து
பறந்து வந்த போலீசார் திருடர்களுடன் சண்டையிட்டனர்
எனினும் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார்
மேற்படி
சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற் படுத்தியுள்ளதுடன் ,போலீசார் குறித்த நபர்கள் மீது துப்பாக்கி சூட்டு தாக்குதலையும் நடத்தினர்

இலங்கையில் பரவும் கொரனோ – 115 பேர் பாதிப்பு
இலங்கையில் பரவும் கொரனோ – 115 பேர் பாதிப்பு
நேற்றைய தினம் மினுவாங்கொட கொத்தனியில் அடையாளம் காணப்பட்ட 115 தொற்றாளர்களும் நாட்டின் 13
பிரதேசங்களிலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனரென,
கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காண்பட்டவர்களுள் 32 பேர்
மினுவாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் 30 பேர் கட்டுநாயக்க
பிரதேசத்தையும் 24 பேர் திவுலப்பிட்டிய, 11 பேர் பிங்கிரிய, 10 பேர் கம்பஹா
பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் மத்தகம, ராகம, காலி, குளியாப்பிட்டிய, நிட்டம்புவ, கொடிகாவத்த,
கராப்பிட்டிய, கஹத்துட்டுவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்குச் சட்டத்தால் வாழ்வாதாரத்தை இழந்த கம்பஹா மாவட்ட மக்களுக்கு ரூ.5,000 கொடுப்பனவு
ஊரடங்குச் சட்டத்தால் வாழ்வாதாரத்தை இழந்த கம்பஹா மாவட்ட மக்களுக்கு ரூ.5,000 கொடுப்பனவு
ஊரடங்குச் சட்டத்தால் வாழ்வாதாரத்தை இழந்த கம்பஹா மாவட்ட மக்களுக்கு
ரூ.5,000 கொடுப்பனவு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதற்காக, 400 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்குவதற்கு
அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
“இந்த கொடுப்பனவை செவ்வாய்க்கிழமை முதல் வழங்குவதற்கு
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்றும் அவர் தெரிவித்தார்.
கண்முன்னே எரிந்த கடை – கதறிய முதலாளி
கண்முன்னே எரிந்த கடை – கதறிய முதலாளி
தலவாக்கலை நகரில் இலங்கை வங்கிக்கு அருகில் உள்ள சில்லறை கடை
ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கடை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
இத்தீ விபத்து இன்று காலை 6 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
தலவாக்கலை பொலிஸார், மற்றும் பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார்
ஒரு மணித்தியாலயங்களுக்கு பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இதேவேளை குறித்த கடையின் உரிமையாளர் மற்றும் அவரின் உறவினர்கள்
கடையில் இல்லாத போதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீயினால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை கணிக்கப்படவில்லை எனவும்,
தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில்
தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பு நகரத்தில் மக்களின் இருப்பிடங்களுக்குச் சென்று பிசிஆர் பரிசோதனை
கொழும்பு நகரத்தில் மக்களின் இருப்பிடங்களுக்குச் சென்று பிசிஆர் பரிசோதனை
கொழும்பு மாவட்ட மக்களை கொவிட் 19 வைரசு தொற்றின் பிடியில் இருந்து
மீட்டெடுப்பதற்காக பல வேலைத்திட்டங்கள் தற்சமயம்
முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரட்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரத்தில் குடிசைவாழ் மக்களின் இருப்பிடங்களுக்குச் சென்று
பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பலநடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய பஸ் தரிப்பு நிலையம், சந்தைகள் உள்ளிட்ட பகுதிகளிலும் நபர்கள்
தெரிவு செய்யப்பட்டு அவர்களிடம் பிசிஆர் பரிசோதனைகள்
செய்யப்படுவதாகவும் கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.
20 ஆவது திருத்தச் சட்டத்தினால் தமிழ் மக்களுக்கு பாதிப்பில்லை – கனடாவுக்கு லட்டு கொடுத்த டக்ளஸ்!
20 ஆவது திருத்தச் சட்டத்தினால் தமிழ் மக்களுக்கு பாதிப்பில்லை – கனடாவுக்கு லட்டு கொடுத்த டக்ளஸ்!
கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அறுவடைக்குப் பின்னரான இழப்பு வீதத்தினை குறைப்பதற்கு கனேடிய அரசாங்கத்தின்
அனுபவத்தினையும் தொழில்நுட்ப உதவிகளையும் வரவேற்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கனேடிய உயர் ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சிற்கு (16.10.2020) வருகை தந்த கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட்
மைக்கினன் உடனான கலந்துரையாடலின் போதே கடற்றொழில் அமைச்சரினால் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இலங்கையில் கடற்றொழிலாளர்களினால் அறுவடை செய்யப்படுகின்ற கடலுணவுகளில் சுமார் 35 வீதத்திற்கு
மேற்பட்டவை விற்பனைக்கு தரமற்றவை என்ற அடிப்படையில் வீசப்படுகின்றன.
ஆனால், கனடா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் குறித்த இழப்பு வீதம் மிகவும் குறைந்தளவிலேயே காணப்படுகிறது.
இந்நிலையிலேயே கனேடிய உயர் ஸ்தானிகரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கனேடிய உயர் ஸ்தானிகர், அதுதொடர்பாக சாதகமாக பரசீலிப்பதாக தெரிவித்ததுடன்
இலங்கையின் சமுத்திர பல்கலைக் கழகத்துடன் இணைந்து கனேடிய கடல்சார் கல்வி நிறுவனம் மேற்கொண்டு வருகின்ற
செயற்பாடுகளினால் இலங்கை மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் தொடர்பாகவும் எடுத்துரைத்தார்.
மேலும், இலங்கையின் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பாக கனேடிய உயர் ஸ்தானிருடன் கருத்துக்களை பகிர்ந்து
கொண்ட அமைச்சர், தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதிக்கு அமைய அரசியலமைப்பின் இருபதாவது திருத்தச் சட்டத்தை உருவாக்கி வருவதாகவும், உயர்
நீதிமன்றத்தின் பரிந்துரைகளுக்கு அமைய அரசியலமைப்பில் குறித்த திருத்தச் சட்டம் உள்வாங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், 20 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படாது எனவும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்
சட்டத்தினை சரியாக கையாள்வதே தமிழ் மக்களின் அபிலாசைகளை பெற்றுக் கொள்வதற்கான ஆரம்பம் என்பதை தான் நம்புவதாகவும் தெரிவிததார்.
அத்துடன், தற்போதைய அரசாங்கம் தென்னிலங்கை மக்களின் ஆதரவினால் தெரிவு செய்யப்பட்ட போதிலும், தற்போது முழுநாட்டு மக்களினதும் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும்
வகையில் செயற்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர், தமிழ் மக்களின் மத நம்பிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில்
நவராத்திரி விழாவை கொண்டாடுவதற்கு அண்மையில் அரசாங்கத்தினால் நிதியுதவி வழங்கப்பட்டுள்மையையும் கனேடிய உயர் ஸ்தானிகருக்கு சுட்டிக் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது
படிக்காமல் முதல் முயற்சியிலேயே ‘நீட்’ தேர்வில்
படிக்காமல் முதல் முயற்சியிலேயே ‘நீட்’ தேர்வில்
பயிற்சி மையத்துக்கு சென்று படிக்காமல் முதல் முயற்சியிலேயே ‘நீட்’ தேர்வில் மாநில அளவில் 3-ம் இடம் பிடித்து சென்னை மாணவி சாதனை படைத்துள்ளார்.
பயிற்சி மையத்துக்கு சென்று படிக்காமல் முதல் முயற்சியிலேயே ‘நீட்’ தேர்வில் சாதித்த சென்னை மாணவி
சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த கணேஷ்குமார்-கலைச்செல்வி தம்பதியினரின் மகள் ஜி.ஸ்வேதா. இவர் சென்னை மேல
அயனம்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து முடித்தார். இவர் கடந்த மாதம் நடந்த ‘நீட்’ தேர்வில் பங்கேற்று 720 மதிப்பெண்களுக்கு 701 மதிப்பெண்கள்
பெற்றுள்ளார். அகில இந்திய அளவில் 62-வது இடமும், மாநில அளவில் 3-ம் இடமும் பிடித்து அவர் சாதனை படைத்துள்ளார்.
சாதனை மாணவி ஜி.ஸ்வேதாவுக்கு பாராட்டு விழா, சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் மெட்ரிகுலேசன்
மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. பள்ளியின் முதல்வர்கள் உமா மகேஸ்வரன், ஜெயந்தி ராஜகோபாலன் ஆகியோர் மாணவி
ஸ்வேதாவுக்கு பூங்கொத்து கொடுத்து பாராட்டினர். மாணவியின் பெற்றோர் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.
அதனைத்தொடர்ந்து மாணவி ஜி.ஸ்வேதா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சிறுவயதில் இருந்தே எனது கனவு டாக்டர் ஆவது தான். அதற்காகவே ‘நீட்’ தேர்வுக்கு தயாராகி வந்தேன். இதற்காக எந்த
பயிற்சி மையத்துக்கும் செல்லவில்லை. பள்ளியில் வழங்கப்படும் ‘நீட்’ தேர்வுக்கான ஆன்-லைன் வழி பயிற்சியில் முழுமூச்சாக
ஈடுபட்டேன். தினமும் 10 முதல் 12 மணி நேரம் வரை படிப்பேன். எனது முதல் முயற்சியிலேயே ‘நீட்’ தேர்வில் சாதித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றிக்கு பெற்றோரும், பள்ளி ஆசிரியர்கள்
கொடுத்த உத்வேகமும், ஊக்கமுமே காரணம். பள்ளிகள் வழக்கம்போல செயல்பட்டு வகுப்புகள் நடைபெற்றிருந்தால் நிச்சயம் இன்னும் அதிகமாக மதிப்பெண்கள் எடுத்திருப்பேன்.
பட்டினி குறியீட்டில் இந்தியா 94-வது இடம்
பட்டினி குறியீட்டில் இந்தியா 94-வது இடம்
உலகளாவிய பட்டினி குறியீட்டில் இந்தியா 94-வது இடம் வகிக்கிறது. இதற்காக மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சாடி உள்ளார்.
பட்டினி குறியீட்டில் இந்தியா 94-வது இடம் – மத்திய அரசு மீது ராகுல் காந்தி பாய்ச்சல்
உலகளாவிய பட்டினி குறியீட்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அட்டவணையானது, உலகெங்கும் உள்ள பட்டினி அளவையும், ஊட்டச்சத்து குறைபாட்டு அளவையும் கொண்டுள்ளது.
107 நாடுகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் இந்தியா 94-வது இடத்தில் உள்ளது.
கடந்த ஆண்டு 102 நாடுகளில் இந்தியா 94-வது இடத்தில் இருந்தது. எனவே இந்தியா நடப்பு ஆண்டில் சற்றே முன்னேற்றம் கண்டுள்ளது.
இருப்பினும் பாகிஸ்தான் (88-வது இடம்), வங்காளதேசம் (75-வது இடம்) ஆகிய நாடுகளைவிட இந்தியா பின்தங்கி இருக்கிறது.
இந்தியாவை விட 13 நாடுகள் மோசமான நிலையில் உள்ளன. அந்த நாடுகளில் ருவாண்டா (97), நைஜீரியா (98), லிபியா (102), மொசாம்பிக் (103), சாட் (107) அடங்கும்.
107 நாடுகளில் இந்தியாவின் மொத்த புள்ளிகள் 27.2 ஆகும். இது இந்தியாவை தீவிரமான பட்டினி பிரிவில் வைத்துள்ளது.
இந்த அட்டவணையின்படி, இந்தியாவில் 14 சதவீத மக்கள் ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்கள் என தெரியவந்துள்ளது.
இந்தியாவின் பட்டினி நிலை கண்டு மத்திய அரசு மீது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சாடி உள்ளார். இது குறித்து அவர்
டுவிட்டரில் நேற்று வெளியிட்ட ஒரு பதிவில், “இந்தியாவில் ஏழை மக்கள் பட்டினி கிடக்கிறார்கள். ஏனென்றால் அரசு, தனது சிறப்பு
நண்பர்களில் சிலரது பைகளை நிரப்புவதில் தீவிரமாக உள்ளது” என கூறி உள்ளார்.
உலகளாவிய பட்டினி குறியீட்டு அட்டவணை வரைபடத்தையும் டுவிட்டரில் ராகுல் காந்தி இணைத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை
மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை
ரேணிகுண்டா படம் மூலம் பிரபலமான இளம் நடிகை மன அழுத்தம் காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக கூறி இருக்கிறார்.
மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை
சனுஷா
தமிழில் அரண், காசி, பீமா போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த சனுஷா, ரேணிகுண்டா படத்தில்
கதாநாயகியானார். தொடர்ந்து நாளை நமதே, எத்தன், நந்தி, அலெக்ஸ் பாண்டியன், கொடிவீரன் ஆகிய படங்களிலும்
நடித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது:-
“கொரோனாவின் ஆரம்ப காலம் எனக்கு பெரிய அளவில் கஷ்டத்தை கொடுத்தது. சொந்த வாழ்க்கையிலும் தொழில் ரீதியாகவும் சங்கடங்கள் ஏற்பட்டன. எண்ணங்கள் என்னை
பயமுறுத்தின. இதனால் மன அழுத்தம் ஏற்பட்டது. பிரச்சினைகளை யாருடன் பகிர்ந்து கொள்வது என்றும் தெரியவில்லை. இதனால் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்தேன்.
தம்பியுடன் சனுஷா
அப்போது மிகவும் பாசம் வைத்துள்ள எனது தம்பியை பற்றி யோசித்தேன். நான் இறந்துபோனால் அவனால் தாங்கி கொள்ள
முடியாது என்பதை உணர்ந்து தற்கொலை முயற்சியை கைவிட்டேன். பிறகு டாக்டரை சந்தித்து சிகிச்சை எடுத்தேன்.
அதன் பிறகு எனது மனதில் இருந்து சுமைகள் விலகி பழைய நிலைக்கு மாறினேன். என்னைப்போல் யாருக்கேனும் மன அழுத்தம்
இருந்தால் அவர்கள் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதனை சொல்கிறேன்.”
இவ்வாறு சனுஷா கூறியுள்ளார்.
மதுபோதையில் அதிவேகமாக கார் ஓட்டிய நடிகை… போலீசார் அபராதம்
மதுபோதையில் அதிவேகமாக கார் ஓட்டிய நடிகை… போலீசார் அபராதம்
சென்னை கோடம்பாக்கத்தில் மது போதையில் அதிவேகமாக கார் ஓட்டிய கன்னட நடிகைக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.
மதுபோதையில் அதிவேகமாக கார் ஓட்டிய நடிகை… போலீசார் அபராதம்
வம்ஷிகா
சென்னை கோடம்பாக்கத்தில் நேற்று முன் தினம் இரவு அதிவேகமாக சென்ற காரை சில வாகன ஓட்டிகள் ஆற்காடு
சாலையில் மடக்கிப் பிடித்தனர். ஓட்டுனர் இருக்கையில் இருந்த பெண் குடிபோதையில் காரை ஓட்டி வந்தது தெரியவந்தது. அவர்
கர்நாடகவை சேர்ந்த நடிகை வம்ஷிகா என்பதும் தெரியவந்தது. பின்னர் பொது மக்களுடன் அந்த நடிகை வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நடிகை வம்ஷிகா குடிபோதையில் இருப்பதை உறுதி செய்ததையடுத்து
பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நேற்று மாலை விசாரணைக்காக பாண்டி பஜார்
காவல்நிலையம் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, காரின் பதிவு எண் கர்நாடக பகுதியை சேர்ந்தது ‘
என்பதால் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தான் மது அருந்திருந்ததாகவும் ஆனால் சுய நினைவோடுதான் இருந்ததாக தெரிவித்தார்.
வம்ஷிகா
மது அருந்துவிட்டு வாகனம் ஓட்டுவது தவறுதான், ஆனால் உலகில் யாரும் செய்யாத தவறை தான் செய்யவில்லை என
விளக்கமளித்தார். மேலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக காவல்துறையினர் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்திருப்பதாக நடிகை வம்ஷிகா தெரிவித்தார்.
மாஸ்க் அணியாமல் அபராதம் கட்டிய பிரபல நடிகை
மாஸ்க் அணியாமல் அபராதம் கட்டிய பிரபல நடிகை
மாஸ்க் அணியாமல் சுற்றுலா சென்ற பிரபல நடிகையிடம், சுகாதாரத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.
மாஸ்க் அணியாமல் அபராதம் கட்டிய பிரபல நடிகை
அதிதி பாலன்
கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது, அனைத்து சுற்றுலா தலங்களும்
மூடப்பட்டன. தற்போது தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு சுற்றுலா தலங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
வார விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
முகக்கவசம் இல்லாமல் வருபவர்களிடம் சுகாதாரத்துறை சார்பில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அதிதி பாலன்
அப்போது அங்கு முகக்கவசம் இன்றி வந்த நடிகை அதிதி பாலனிடம் சுகாதாரத்துறை
அதிகாரிகள் ரூ.200 அபராதம் விதித்தனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
பின்னர் அதிதி பாலன் 200 ரூபாயை அபராதம் கட்டி சென்றதாக கூறப்படுகிறது
. அதிகாரிகளிடம் நடிகை அதிதி வாக்குவாதத்தில் ஈடுபட்டது சில மணி நேரம் அங்கு பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
மத ஒற்றுமையை சீர்குலைப்பதாக நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு
மத ஒற்றுமையை சீர்குலைப்பதாக நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு
மத ஒற்றுமையை சீர்குலைப்பதாக நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி சந்தல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத ஒற்றுமையை சீர்குலைப்பதாக நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாகவும், மும்பை போலீசாரை
மாபியாக்களுடன் ஒப்பிட்டும் கருத்து தெரிவித்து பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் சர்ச்சையை கிளப்பினார்.
அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்த மகாராஷ்டிர அரசு சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த கங்கணாவின் மும்பை அலுவலகத்தின் ஒரு பகுதியை இடித்தது. மேலும், கங்கனா
மகாராஷ்டிர மாநிலம் வரவும் கடும் கண்டனங்கள் எழுந்தது. ஆனால், கங்கனாவுக்கு இமாச்சலபிரதேச அரசு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கியது.
இதையடுத்து, ’ஒய் பிளஸ்’ பாதுகாப்புடன் இமாச்சலபிரதேசத்தில் இருந்து கங்கனா மீண்டும் மகாராஷ்டிரா வந்தார். அவர் தற்போது தனது சொந்த மாநிலமான இமாச்சலபிரதேசம் வசித்து வருகிறார்.
அவர் கடந்த சில நாட்களாக தனது சமூகவலைதள பக்கமான டுவிட்டரில் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.
பாலிவுட்டில் போதைப்பொருள் பழக்கம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்து வருகிறார்.
இதற்கிடையில், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள பள்ளிக்கூடத்தில் வரலாற்று ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சாமுவேல் பெடி (47) நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை
மாணவர்களுக்கு காட்டியதற்காக 18 வயது இளைஞனால் நேற்று தலைதுண்டிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொடூரமான கொலைதொடர்பாக நேற்று முதல் தனது டுவிட்டர் பக்கத்தில் கங்கனா அடுக்கடுக்கான கருத்துக்களை பதிவு
செய்து வந்துள்ளார். கங்கனாவுடன் இணைந்து அவரது சகோதரி ரங்கோலி சந்தலும் சமூகவலைதளத்தில் கருத்து பதிவிட்டு வந்துள்ளார்.
பாரிஸ் ஆசிரியர் சாமுவேல் பெடி கொடூரக்கொலை தொடர்பாக கங்கனா மற்றும் அவரது சகோதரி ரங்கோலி சமூகவலைதளத்தில் பதிவு செய்த கருத்துக்கள் அனைத்தும் மத ஒற்றுமையை
சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக மும்பையில் உள்ள பாந்திரா மாஜிஸ்திரேட் மெட்ரோபொலிட்டன் நீதிமன்றத்தில் ஷகில் அஷ்ரப் அலி சயத் என்பர் புகார் மனு அளித்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கங்கனா மற்றும் அவரது சகோதரி மீது வழக்குப்பதிவு செய்ய காவல்த்துறைக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, மத ஒற்றுமையை சீர்குலைத்தல் நடவடிக்கையில் ஈடுபடுவதாக இந்திய தண்டனை சட்டப்பிரிவு 124 ஏ, 153 ஏ, 295 ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி
ரங்கோலி சந்தல் ஆகிய 2 பேர் மீதும் பாந்திரா போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
110 பேருக்கு ஒரே நாளில் கொரனோ – இலங்கையில் கோர தாண்டவம்
110 பேருக்கு ஒரே நாளில் கொரனோ – இலங்கையில் கோர தாண்டவம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 110 பேர் பாதிக்க பட்டுள்ளதாக
இலங்கை சுகாதார அமைச்சை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன
மேலும் இதன் பாதிப்பு அதிகரித்து செல்கிறது ,இந்த நோயின்
தாக்குதலை தடுக்க பல நகரங்கள் தனிமை படுத்தல் சட்டத்திற்கு
உள்ளாக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது







