Posted in சினிமா

திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்- தலைவர் பதவிக்கு 3 பேர் போட்டி

திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்- தலைவர் பதவிக்கு 3 பேர் போட்டி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) 22-ந்தேதி நடைபெற இருக்கிறது.

திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்- தலைவர் பதவிக்கு 3 பேர் போட்டி
டி.ராஜேந்தர்- முரளி- பி.எல்.தேனப்பன்


தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) 22-ந்தேதி நடைபெற இருக்கிறது.

அதில் தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், ‘தேனாண்டாள் பிலிம்ஸ்’ என்.ராமசாமி என்கிற முரளி ராம.நாராயணன், பி.எல்.தேனப்பன் ஆகிய 3 பேர் போட்டியிடுகிறார்கள். துணைத் தலைவர்கள்

பதவிக்கு சிவசக்தி பாண்டியன், பி.டி.செல்வகுமார், முருகன், ஆர்.கே.சுரேஷ் ஆகிய 4 பேர் போட்டியிடுகிறார்கள். செயலாளர்கள்

பதவிக்கு ‘கலைப்புலி’ ஜி.சேகரன், மன்னன், சுபாஷ் சந்திரபோஸ், ராதாகிருஷ்ணன், ராஜேஷ் ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு

கே.ராஜன், சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.

வேட்பு மனு தாக்கல், கடந்த 15-ந் தேதி தொடங்கியது. டி.ராஜேந்தர், முரளி, பி.எல்.தேனப்பன் ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் வேட்பு

மனு தாக்கல் செய்தார்கள். வேட்பு மனுவை வாபஸ் பெற வருகிற 29-ந்தேதி கடைசி நாள். ஓட்டுப்பதிவு நவம்பர் 22-ந்தேதி காலை 8

மணிக்கு தொடங்கும். அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படும்.

Posted in உலக செய்திகள் பிரான்ஸ் செய்திகள்

பிரான்சில் 52 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா

பிரான்சில் 52 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா

பிரான்ஸ் நாட்டில் மேலும் 52 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா

உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு பாதிப்பு எண்ணிக்கை 11 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

பிரான்சில் மேலும் 52 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா – 11 லட்சத்தை கடந்தது பாதிப்பு
கொரோனா பரிசோதனை

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம்

முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் ஸ்பெயினைப் பின்னுக்கு தள்ளி பிரான்ஸ் 5-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் மேலும் 52 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு

உள்ளது. இதனால் அங்கு வைரஸ் தாக்குதலுக்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11 லட்சத்து 38 ஆயிரத்து 507 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் அந்நாட்டில் 116 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்து

761 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Posted in உலக செய்திகள்

இன்று ஐரோப்பா எங்கும் நேர மாற்றம்

இன்று ஐரோப்பா எங்கும் நேர மாற்றம்

இன்று ஐரோப்பா எங்கும் நேர மாற்றம் இடம் பெறுகிறது ,குளிர்காலம்

வந்துள்ளதால்
ஒருமணி நேரம் பின் நகர்த்த படுகிறது

உதாரணம் பத்து மணி என்றால் அதுவே ஒன்பது மணியாக பின்

நகர்த்த படுகிறது

வேலைக்கு செல்பவர்கள் உங்கள் நேரங்களை சரி பார்த்து கொள்ளுங்கள்

நித்திரை பிரியர்களுக்கு குஷிதான்

Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் நான்கு மாகாணங்கள் முடக்கம் – பல மில்லியன் மக்கள் தவிப்பு

பிரிட்டனில் நான்கு மாகாணங்கள் முடக்கம் – பல மில்லியன் மக்கள் தவிப்பு

பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின்

தாக்குதலில் சிக்கி நான்கு மாகாணங்கள் மக்கள் நடமாட தடை விதிக்க பட்டுள்ளன

இதனால் பல மில்லியன் மக்கள் முடக்க பட்டுள்ளனர்

வீதிகளில் இராணுவம் ,போலீசார் காவலில் ஈடுபடுத்த பட்டுள்ளதுடன் ,

அதிக விதிமுறைகள் இடம் பெற்றுள்ளன .இதனை மீறுபவர்கள் மீது தண்டம் அறவிட படுகிறது

இதே போன்ற நிலை ஒட்டு மொத்த பிரிட்டனில் வரும் நான்கு

வாரங்களுக்குள் அமூல் படுத்த படலாம் என நம்ப படுகிறது

Posted in உலக செய்திகள்

தாலிபான்கள் முக்கிய தாக்குதல் தளபதி படுகொலை

தாலிபான்கள் முக்கிய தாக்குதல் தளபதி படுகொலை

ஆபிகானிஸ்தானில் அமெரிக்கா இராணுவத்தால் தேட படும் பட்டியலில்

இணைக்க பட்டு தேட பட்டு வந்த Abu Muhsin al-Masri என்ற முக்கிய

தளபதி நேற்று நடத்திய தாக்குதலில் படுகொலை செய்ய பட்டுள்ளார்

மக்கள் நிறைந்த இடமொன்றில் பதுங்கி இருந்த இவர் மீது நடத்த

பட்ட துல்லியமான தாக்குதலில் அவர் பலியானார்

இவர் பல்வேறு பட்ட முக்கிய தாக்குதலுக்கு மொழியாக செயல்பட்டவர் என அரச இராணுவம் தெரிவித்துள்ளது

தமது முக்கிய தாக்குதல் தளபதி பலியானதற்கு பதிலடியாக

தாலிபான்கள் பெரும் தாக்குதல் ஒன்றை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

கொழும்பு- பதுளை பயணித்த பேரூந்தில் கொரனோ – மக்களை தேடும் பொலிஸ்

கொழும்பு- பதுளை பயணித்த பேரூந்தில் கொரனோ – மக்களை தேடும் பொலிஸ்

கொழும்பு- பதுளைக்கு இடையிலான NB-9017 என்ற இலக்க பஸ்ஸில் பயணித்தவர்கள் உடனடியாக சுகாதார அதிகாரிகளை சந்திக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

பேலியகொட மீன் சந்தையில் பணியாற்றிய ஒருவருக்கு கொரோனா

தொற்று உறுதிபடுத்தப்பட்ட நிலையில், அவர் NB-9017 என்ற பஸ்ஸில் கொழும்பிலிருந்து ஹாலி-எலைக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மத்திய பஸ் தரிப்பிடத்திலிருந்து தலங்கம பஸ் டிப்போவுக்குச் சொந்தமான NB-9017 என்ற பஸ்ஸில் 23ஆம் திகதி

ஹாலிஎல நகருக்குச் சென்றுள்ள குறித்த நபர், அங்கு மதுபான கடையொன்றுக்குச் சென்று, மதுபானங்களை கொள்வனவு

செய்துள்ளதுடன், ஹாலிஎலயிலிருந்து மற்றுமொறு பஸ் வண்டியில் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இவர் ஹாலிஎலைக்கு பயணித்த பஸ் நேற்று முன்தினம் (23) பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த போது, அது பலாங்கொட

பிர​தேசத்தில் இடைநிறுத்தப்பட்டு, அதன் நடத்துனர், சாரதி, அதில் பயணித்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த தொற்றாளர் ஹாலி-எல ரொசட் தோட்டத்தில் ஒளிந்திருந்த போது, சுகாதார அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இவருடன் தொடர்பிலிருந்த 2 குடும்பங்களைச் சேர்ந்த 9 பேர்

தனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென ஹாலி- எல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Posted in இலங்கை செய்திகள்

கொரனோவை பரப்பிய 6 கடைகள் அடித்து பூட்டு

கொரனோவை பரப்பிய 6 கடைகள் அடித்து பூட்டு

கஹதுட்டுவையில் 6 வர்த்தக நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக,

கஹதுட்டுவ சுகாதார வைத்திய அதிகாரி, தனுக பத்மராஜ தெரிவித்துள்ளார்.

கஹதுட்டுவ- மினுவன்வில வீதியில் மீன் வர்த்தகர் ஒருவருக்கு

கொரோனா ​தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதையடுத்து 6 வர்த்தக

நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், குறித்த வர்த்தகருடன்

தொடர்பிலிருந்த 8 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தனுக பத்மராஜ தெரிவித்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் மீனில் கொரனோ – அரசு அவசர வேண்டுதல்

நன்கு சமைத்த மீன் ஊடாக கொ​ரோனா வைரஸ் பரவாது என விஞ்ஞானபூர்வமான ஆதாரத்தை சுகாதார அமைச்சு வலியுறுத்த #

விரும்புகிறது என சுகாதார அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் (பதில்) விசேட வைத்திய நிபுணர் சதாசிவம் சிறீதரனின் கையொப்பத்துடன்

அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கை​யிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கோட்பாட்டு அடிப்படையில் எந்தவொரு மேற்பரப்பிலும் கொரோனா வைரஸ் காணப்படலாம் என்பதால்,

சமைப்பதற்கு மீனைத் தயாரிக்கும் போது அல்லது மீனைச் சேமித்து வைக்கும்போது முகத்தை கைகளால் தொடுவதை

தவிர்ப்பதுடன் சமையல் பாத்திரங்கள் மற்றும் கரங்களை நன்கு கழுவிக்கொள்ளுதல் வேண்டும்.

மேலும் அடிப்படையற்ற விதத்தில் மீன் சந்தைகளை மூடுவது அநாவசியமாகும். ஆகையால் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார

நெறிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் மற்றும் கைகளை சவர்க்காரமிட்டு நன்கு கழுவுதல்

ஆகியவற்றை இறுக்கமாகப் பின்பற்றி மீன் சந்தைகளை தொடர்ந்தும் நடத்தலாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது என அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

மக்களை வீடுகளில் தங்கியிருக்குமாறு பொலிசார் வேண்டுகோள்

மக்களை வீடுகளில் தங்கியிருக்குமாறு பொலிசார் வேண்டுகோள்

மாளிகாவத்தை, வாழைத்தோட்டம், டேம் வீதி, ஆட்டுப்பட்டித் தெரு மற்றும்

கரையோர பொலிஸ் பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம்

விதிக்கப்பட்டிருப்பதாக கொவிட்-19 வைரஸ் பரவலைத் தடுக்கும் மத்திய மையம் அறிவித்துள்ளது.

கொத்தொட்டுவ, முல்லேரியாவ ஆகிய பொலிஸ் பிரதேசங்களில் நேற்றிரவு

7 மணியில் இருந்து மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுற்படுத்தப்பட்டுள்ளது.

நடமாட்டாங்களைத் தவிர்த்து வீடுகளில் தங்கியிருக்குமாறு பொலிசார் மக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

விசேடமாக ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கும் பிரதேசங்களில்

கொவிட்-19 தொற்றாளர்கள் இனங்காணப்படுவதினால் வீடுகளில்

தங்கியிருக்குமாறும் பொலிசார் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

Posted in உலக செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் வாக்களிப்பு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் வாக்களிப்பு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் புளோரிடா மாகாணத்தில் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் வாக்களித்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3 ஆம் திகதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக தற்போதைய

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் போட்டியிடுகிறார். இவரை

எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பிடன் போட்டியிடுகிறார்.download 1தேர்தல் நவம்பர் 3 ஆம்; திகதி

நடைபெற்றாலும், முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை அமெரிக்காவில்

உண்டு. வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்கள் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கவே முன்கூட்டியே

வாக்களிக்கும் வசதி உண்டு இந்நிலையில், தேர்தல் பிரசாரத்துக்காக புளோரிடா மாகாணத்துக்கு சென்ற ட்ரம்ப்,

அங்குள்ள வாக்களிப்பு மத்திய நிலையத்தில் தனது வாக்கைப் பதிவு செய்தார். அப்போது அவர் தனது முகத்தில் முககவசம் அணிந்து இருந்தார்.

ஜாதிபதி தேர்தலையொட்டி கிட்டத்தட்ட 5.5 கோடி அமெரிக்கர்கள் வாக்களித்துள்ளனர் என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துளளன..

Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் மேலும் சில பகுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம்

கொழும்பில் மேலும் சில பகுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம்

மீண்டும் அறிவிக்கும் வரையில் கோட்டை, புறக்கோட்டை, பொரள்ளை,

வெலிகடை ஆகிய பொலிஸ் வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்குள்

இன்று (25) மாலை 6 மணி தொடக்கம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம்

பிறப்பிக்கப்படுவதாக கொவிட் 19 வைரசு தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது

Posted in பிரான்ஸ் செய்திகள் முக்கிய செய்திகள்

பிரான்சில் கொரனோ தாக்குதலில் சிக்கி 298 பேர் பலி

பிரான்சில் கொரனோ தாக்குதலில் சிக்கி 298 பேர் பலி

பிரான்சில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி

42032 பேர் பாதிக்க பட்டுள்ளனர் மேலும் – 298 பேர் பலியாகியுள்ளனர்

இரண்டாம் அலையாக பரவி வரும் நோயின் தாக்குதலில் சிக்கி இந்த உயிரிழப்பு அதிகரித்துள்ளது

மேலும் பிரிட்டனில் இதேபோல 20530 பேர் பாதிக்க பட்டுள்ளனர் -224 பலியாகியுள்ளனர்

தொடர்ந்து குளிர்காலம் ஆரம்பிக்க பட்டுள்ளதால் இந்த நோயின் தாக்குதல் அதிகம் பரவும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

பிரிட்டன் பிரான்ஸ் என்பன முழு லொக்கடவுனுக்கு செல்லும் அபாயம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

மேலும் பிரிட்டனில் நான்கு மாநகரணங்கள் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்க

பட்டு அடித்து பூட்ட பட்டுள்ளமை குறிப்பிட தக்கது ,லண்டன் மாநகரம்

அதிக நோயாளர்களை கொண்ட பகுதியாக அறிவிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

    Posted in உலக செய்திகள்

    இந்தோனேசியாவில் 4,070 பேர் பாதிப்பு – 128 பேர் பலி

    இந்தோனேசியாவில் 4,070 பேர் பாதிப்பு – 128 பேர் பலி

    கடந்த இருபக்த்தி நமக்கு மணித்தியாலத்தில் பரவி வரும் கொரனோ

    வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி இந்தோனேசியாவில் 4,070 பேர் பாதிக்க பட்டுள்ளனர் மேலும் சுமார் 128 பேர் பலியாகியுள்ளனர்

    தொடர்ந்து அதிகமானவர்கள் பாதிக்க பட்டு வருவதால் உயிர்பலிகள் இரட்டிப்பாகலாம் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

    Posted in உலக செய்திகள்

    நையீரியாவில் தொடரும் வன்முறை 51 பேர் பலி

    நையீரியாவில் தொடரும் வன்முறை 51 பேர் பலி

    நையீரியாவில் ஆளும் அரசுக்கு எதிராக தொடரும் மக்கள் போராட்டத்தை

    தடுக்க ஆயுத படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் சிக்கி 51 மக்கள்

    பலியாகினர் ,மேலும் மக்கள் ,மற்றும் வன்முறையாளர்கள் நடத்திய திருப்பி

    தாக்குதலில் சிக்கி 11 போலீசார் மற்றும் ஏழு இராணுவத்தினர் உட்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்

    அது தவிர சுமார் முப்பத்தி ஏழு பொது மக்கள்

    படுகாயமடைந்துள்ளனர் ,மக்கள் சொத்துக்களும் சேதமாக்க பட்டுள்ளன .

    தொடர்ந்தது அரசுக்கு எதிராக போராட்டங்கள் இடம் பெற்றவண்ணம் உள்ளன

    Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள் பிரித்தானிய செய்தி

    வடக்கு லண்டனில் ஒருவர் வெட்டி கொலை

    வடக்கு லண்டனில் ஒருவர் வெட்டி கொலை

    பிரிட்டன் வடக்கு லண்டன் Westbury Road, Walthamstow, பகுதியில் கடந்த

    இரவு 9.20 மணியளவில் பத்தொன்பது வயது வாலிபர் மீது பலத்த கத்தி

    வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது
    இதில்

    அவர் பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பலியானார்

    இவரது கொலைக்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை

    பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

    லண்டன் பகுதியில் சாமீப காலமாக இவ்வாறான படுகொலைகள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

    Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள் பிரித்தானிய செய்தி

    பிரிட்டனில் 12 வயது சிறுமியுடன் செக்ஸ் உறவாட முனைந்த போலீஸ் ஊழியர் கைது

    பிரிட்டனில் 12 வயது சிறுமியுடன் செக்ஸ் உறவாட முனைந்த போலீஸ் ஊழியர் கைது

    பிரிட்டனில் Cheshire பகுதியை சேர்ந்த ஐம்பத்தி ஒன்பது வயதுடைய

    காவல்துறை ஊழியர் ஒருவர் செக்ஸ் உறவு வைத்திட முனைந்துள்ளார்

    குறித்த சிறுமிக்கு அது தொடர்பான படங்கள் என்பனவற்றை அனுப்பியுள்ளார்

    இதனால் இவரை பின்தொடர்தா நிழல் பிரிவினர் இவரை மடக்கி பிடித்தனர் ,

    இது தொடர்பான நீதி விசாரணியாகில் தொடர்ந்து இடம் பெற்ற வண்ணம்

    உள்ளது ,இவர் குற்றவாளி என தீர்ப்பு வழங்க பட்டால் பல்லாண்டு

    சிறை தண்டனை கிடைக்க பெறலாம் என எதிர்பார்க்க படுகிறது

    Posted in உலக செய்திகள்

    ஏழு மில்லியன் கஞ்சா மடக்கி பிடிப்பு – பலர் கைது

    ஏழு மில்லியன் கஞ்சா மடக்கி பிடிப்பு – பலர் கைது

    Dublin Port பகுதியில் பிரிட்டனை சேர்ந்த இருவர் மற்றும் Dublin னை சேர்ந்த

    இருவர் உள்ளிட்டவர்கள் மறைத்து வைத்திருந்த 352 கிலோ கஞ்சா மீட்க

    பட்டுள்ளது .இதன் மொத்த பெறுமதி சுமார் ஏழு மில்லியன்
    என தெரிவிக்க பட்டுள்ளது

    கைதானவர்களிடம் தொடர்விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது


    இவர்களுடன் தொடர்பில் உள்ள ஏனையவர்களை கைது செய்யும்

    வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

    Posted in இலங்கை செய்திகள்

    பண்டாரவளை ஞாயிறு சந்தைக்குப் பூட்டு

    பண்டாரவளை ஞாயிறு சந்தைக்குப் பூட்டு

    பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, பண்டாரவளை ஞாயிறு சந்தையை நடத்துவது மறுஅறிவித்தல்

    இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, பண்டாரவளை நகரசபை தலைவர் ஜனக்க நிஷாந்த ரத்நாயக்க தெரிவித்தார்.

    இது தொடர்பில், பண்டாரவளையிலுள்ள கிராமங்கள், தோட்டங்களுக்கு

    அறிவிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.

    வெல்லவாய, வெலிமடை, ஹப்புத்தளை ஆகிய பகுதிகளிலிருந்து அதிகளவான

    விவசாயிகள், பண்டாரவளை ஞாயிறு சந்தைக்கு மரக்கறிகளைக் கொண்டுவந்து

    விற்பனை செய்வதாகவும் அத்துடன், நுகர்வோர் உட்பட பெரும்ளவானோர்

    இந்தச் சந்தையால் பயனடைகின்றனர் என்றும் தெரிவித்த அவர், அவர்களது

    சுகாதார பாதுகாப்பைக் கருத்திற்கொண்டே மறுஅறிவித்தல் வரை ஞாயிறு சந்தையை இடைநிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

    Posted in இலங்கை செய்திகள்

    களுத்துறை, கொழும்பில் மேலும் சில பொலிஸ் பிரதேசங்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு

    களுத்துறை, கொழும்பில் மேலும் சில பொலிஸ் பிரதேசங்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு

    மேலும் சில பொலிஸ் பிரதேசங்களுக்கு தனிமைப்படுத்தல்

    ஊரடங்குச் சட்டம் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    தெமட்டகொட, மருதானை பொலிஸ் பிரதேசங்களுக்கு மறு அறிவித்தல்

    வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதாக

    கொவிட்-19 வைரஸைத் தடுக்கும் மத்திய நிலையம் தெரிவித்திருக்கின்றது.

    இதேவேளை, களுத்துறை மாவட்டத்தின் பயாகல, பேருவல, அளுத்கம

    ஆகிய பிரதேசங்களுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுற்படுத்தப்பட்டுள்ளது.

    Posted in இலங்கை செய்திகள்

    நாடு முழுவதும் முடக்க நிலை பிறப்பிக்கப்படும்- பீதியில் மக்கள்

    நாடு முழுவதும் முடக்க நிலை பிறப்பிக்கப்படும்- பீதியில் மக்கள்

    நாடு முழுவதும் முடக்க நிலை பிறப்பிக்கப்படும் என சிலர் போலிப் பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர்.

    அவ்வாறு நாட்டை முழுமையாக முடக்குவதற்கான எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்பவில்லை என்று பொலிஸ் ஊடகப்

    பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

    நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தற்போது 50 பொலிஸ் பிரிவுகளில் மட்டுமே அமுற்படுத்தப்பட்டிருப்பதாக

    தெரிவித்த அவர், ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் மக்கள் வீடுகளில் தங்கியிருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

    இதேவேளை, ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படாத பகுதிகளில் உள்ள மக்களும் அவசியமற்ற பிரயாணங்களைத் தவிர்த்து

    வீடுகளில் தங்கியிருக்குமாறும் பொலிஸ் ஊடகச் பேச்சாளர் கேட்டுக்கொண்டார்.