Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் மேலும் சில பகுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம்

கொழும்பில் மேலும் சில பகுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம்

மீண்டும் அறிவிக்கும் வரையில் கோட்டை, புறக்கோட்டை, பொரள்ளை,

வெலிகடை ஆகிய பொலிஸ் வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்குள்

இன்று (25) மாலை 6 மணி தொடக்கம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம்

பிறப்பிக்கப்படுவதாக கொவிட் 19 வைரசு தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது

Posted in இலங்கை செய்திகள்

ஊரடங்கு சட்டம் குறித்து புதிய அறிவிப்பு

ஊரடங்கு சட்டம் குறித்து புதிய அறிவிப்பு

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு

சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

மே 24, ஞாயிறு மற்றும் 25 திங்கள் ஆகிய இரு தினங்களும் நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்.

கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை

23, சனி இரவு 8.00 மணி முதல் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் மே 26,

செவ்வாய் அதிகாலை 5.00 மணிக்கு தளர்த்தப்படும். இம்மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தினமும் இரவு 8.00 மணி

முதல் அதிகாலை 5.00 மணி வரை மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த போதும் இயல்பு வாழ்க்கையை

வழமை நிலைக்கு கொண்டுவருவதற்காக ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டம் நாளைய தினமும் நடைமுறையில் இருக்கும்

அதேநேரம் மே,26 செவ்வாய் முதல் முன்னர் போன்று தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

முன்னர் வெளியிடப்பட்ட அறிவித்தல்களில் குறிப்பிடப்பட்ட ஊரடங்கு

சட்டத்துடன் தொடர்புடைய நிபந்தனைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லை.

      Posted in இலங்கை செய்திகள்

      ஊரடங்கு சட்டம் வௌ்ளிக்கிழமை வரை நீடிப்பு,

      ஊரடங்கு சட்டம் வௌ்ளிக்கிழமை வரை நீடிப்பு

      கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களுக்கு இன்று காலை

      தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

      எதிர்வரும் 26 ஆம் திகதி காலை 6 மணி வரை இந்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

      பின்னர், 26 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி முதல் ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

      இதேவேளை, கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.

      பின்னர், நண்பகல்12.00 மணிக்கு குறித்த பிரதேசங்களுக்கு மீண்டும் அமுல்ப்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் எதிர்வரும்

      வௌ்ளிக்கிழமை (27) காலை 6 மணி வரையில் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

      27 ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு மீண்டும் குறித்த மாவட்டங்களுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

      இதேவேளை, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடக பிரிவு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

      மேலும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நகர்த்தப்படுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

      அதேபோல், ஊரடங்கு உத்தரவின் போது அனைத்து மாவட்டத்திலும் விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

      அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகளின் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.

      இந்த நடவடிக்கைகளை முறையாக கையாள வேண்டும் என விவசாய மற்றும் வர்த்தக அமைச்சருக்கு அரசாங்கத்தால் அறிவுறுத்தியுள்ளது.

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கையில் தொடர்கிறது ஊரடங்கு சட்டம் – மக்கள் வீடுகளுக்குள் முடக்கம்,

      இலங்கையில் தொடர்கிறது ஊரடங்கு சட்டம் – மக்கள் வீடுகளுக்குள் முடக்கம்,

      உலக நாடுகளை ஆட்டி படைத்தது வரும் கொரனோ வைரஸ்

      தாக்குதல் இலங்கையில் வேகமாக பரவி வரும் நிலையில்

      தற்பொழுது ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த பட்டுள்ளது

      இன்று முதல் திங்கள் கிழமை வரையும் சில இடங்களில் ஊரடங்கு

      சட்டம் அமுலில் உள்ளது என அறிவிக்க பட்டுள்ளது

      பரவி வரும் நோயில் இருந்து மக்களை காப்பாற்றி கொள்ள இந்த

      நடவடிக்கை முன்னெடுக்க பட்டுள்ளது


      என அரசு தெரிவித்துள்ளது

      இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்க பட்டுள்ளது

      ஊரடங்கு சட்டம்
      ஊரடங்கு சட்டம்