புயலினால் சேதமான நெடுந்தீவு – படகுகள் சேதம்
அசாதாரண சூழ்நிலையால் நெடுந்தீவில் படகுப் பயணங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக நெடுந்தீவு மீனவ கூட்டுறவுச் சங்கங்களின்
சமாசத் தலைவர் பத்திமாதாஸன் லீலியான்குறுஸ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
தொடரும் மழை, மீனவ படகுகள் பல சேதம், கரையோரங்கள் கடுமையான அரிப்புக்கு உள்ளாகியுள்ளது.
மீனவர்களின் படகுகள் கரைகளில் உள்ள கற்பாறைகளுடன் மோதுண்டு பல படகுகள் மிகக் கடுமையான சேதங்களைச் சந்தித்துள்ளது.
படகுகளை பாதுகாப்பாக கட்டுவதற்கும் பாதுகாப்பு அணை வாண் இல்லாமை, இம் மீனவர்களது வாழ்வாதார முதலீடுகள் அழிக்கப்பட்டுள்ளது.
கடந்த புரவி சூறாவளியினால் நெடுந்தீவு J/1 தொடக்கம் J/6 வரையான கிராம சேவகர் பிரிவுகளிலும் 112 மீனவ குடும்பங்களின்
படகுகள் , இயந்திரம், தெப்பம், வலை, களஞ்கட்டி என்பன அழிவடைந்து பல இலட்சம் அழிவைச் சந்தித்துள்ளனர்.
நெடுந்தீவு J/ 1 தொடக்கம் J/6 வரையான கிராம சேவகர் பிரிவுகளிலும், 829 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்
கரையோரங்கள் பாரியளவில் சேதம் அடைந்து மீனவ குடும்பங்கள் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ளதாகவும் நெடுந்தீவு பிரதேச செயலர் F.C.சத்தியசோதி தெரிவித்தார்

யாழில் மக்களுக்கு உணவு வழங்கும் இராணுவம்
யாழில் மக்களுக்கு உணவு வழங்கும் இராணுவம்
யாழ்பாண பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 52 வது படைபிரிவின் 521 வது பிரிகேட்டின் 11 விஜயபாகு காலாட் படை
படையினர் 2020 டிசம்பர் மாதம் 03 ம் திகதி வல்வெட்டித்துறையில் சூறாவளி மற்றும் பாதகமான காலநிலை காரணமாக
பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு சமைத்த உணவுப் பொதிகளை விநியோகித்தனர்.
யாழ் பாதுகாப்புப் படை தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அந்த
சமைத்த உணவு விநியோகிப்பதை 52வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கிதசிரி லியானகே மேற்பார்வை செய்தார்.
521 வது பிரிகேட் தளபதி கர்ணல் மஹேன் சல்வதுர, 11 வது விஜயபாகு காலாட்படையின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட்
கேணல் கீத் முனகமகே, அதிகாரிகள் மற்றும் படையினர் அவர்களின் அவசர தேவைகள் குறித்து விசாரித்தனர்.

வவுனியா ஓமந்தையில் தீயில் எரிந்த பெண்
வவுனியா ஓமந்தையில் தீயில் எரிந்த பெண்
வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேமமடு பகுதியில் தீயில்
எரிந்து படுகாயமடைந்த பெண் ஒருவர் இன்று வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் தனது வீட்டில் இருந்த சமயம் தீயில் எரிவதை அவதானித்த
அயலவர்கள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், பொலிஸாருக்கும் தெரியப்படுத்தினர்.
சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த ரஞ்சனி வயது 41 என்ற பெண்ணே
படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்திற்கு குடும்ப விவகாரமே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
64 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 6,878 பேர்
64 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 6,878 பேர்
முப்படையினரால் நடத்தப்படு 64 தனிமைப்படுத்தல்
நிலையங்களில் 6,878 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் மேலும் 7,634 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, திவுலுப்பிட்டிய – பேலியகொட கொரோனா கொத்தணியில் இதுவரை 17 396 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

போலியாக கொரனோ சோதனை நடத்தி முடிவுகள் வழங்கிய இரு நபர்கள் கைது
போலியாக கொரனோ சோதனை நடத்தி முடிவுகள் வழங்கிய இரு நபர்கள் கைது
அமெரிக்காவில் பரவி வரும் கொரனோ நோயின் தொற்று தொடர்பாக
போலியாக இரத்த பரிசோதனை நடத்தி ,அதன் முடிவுகளை அறிவித்து
பணம் சம்பாதித்து வாட்ச் இரு நபர்கள் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்
பாதிக்க பட்டவர்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவலை அடுத்தே
மேற்படி நபர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்
காதலியை கத்தியால் குதி கொன்ற காதலன்
காதலியை கத்தியால் குதி கொன்ற காதலன்
அமெரிக்கா ஹாரோலினா பகுதியில் காதலியை காதலன் கோரமாக கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளார்
பலத்த காயங்களுக்கு உள்ளான அவர் போட்ட சத்தத்தில் அயலவர்கள்
விரைந்து பொலிசாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து விரைந்த வந்த
போலீசார் பலத்த காயத்தில் இருந்த அவரை மீட்ட பொழுதும் சம்பவ இடத்தில அவர் பலியானர்
காதலன் கொலை குற்ற சாட்டில் கைது செய்ய ப்பட்டுள்ளார் ,இவருக்கு
குழந்தை உள்ளது ,இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தகராரே இந்த கொலையில் முடிவடைந்துள்ளதாக முதல் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது
அரசியல் சரவெடி வசனங்களுடன் அதகளப்படுத்த தயாராகும் ‘அண்ணாத்த
அரசியல் சரவெடி வசனங்களுடன் அதகளப்படுத்த தயாராகும் ‘அண்ணாத்த
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் அரசியல் வசனங்கள் ஏராளமாக இடம்பெறும் என கூறப்படுகிறது.
அரசியல் சரவெடி வசனங்களுடன் அதகளப்படுத்த தயாராகும் ‘அண்ணாத்த’ – ஏப்ரலில் வெளியிட திட்டம்
ரஜினிகாந்த்
தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. ரஜினி அரசியல் கட்சி தொடங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவிப்பு வெளியிட்டார். ஜனவரி மாதம் கட்சி
தொடங்கப்போவதாகவும் தெரிவித்தார். கட்சி தொடங்கும் முன்பு ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை முடித்துக்கொடுக்கவும் திட்டமிட்டுள்ளார்.
அண்ணாத்த படத்தின் எஞ்சியுள்ள படப்பிடிப்பு ஐதராபாத்தில் வருகிற 15-ந்தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற 12-ந்தேதி தனது பிறந்தநாளை ரஜினி பெங்களூரில் உள்ள
தனது அண்ணன் சத்யநாராயணா வீட்டிலேயே கொண்டாடுகிறார். அதன்பிறகு 15-ந்தேதி அவர் ஐதராபாத்தில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினிகாந்த்
கொரோனா பரவல் காலகட்டம் என்பதால் ரஜினி மிகவும் பாதுகாப்புடன் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். படப்பிடிப்பு தளத்திலும் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு
கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. ஜனவரி மாதம் ரஜினி கட்சி தொடங்கும் முன்பு ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு
முடிந்துவிடும். ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு அன்று ‘அண்ணாத்த’ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
‘அண்ணாத்த’ படத்தில் அரசியல் சரவெடி வசனங்கள் இடம்பெறுகின்றன. தமிழ் புத்தாண்டு நேரத்தில் தமிழகத்தில்
தேர்தல் பிரசாரம் மிகவும் உச்சகட்டத்தில் இருக்கும். அப்போது ‘அண்ணாத்த’ படம் திரைக்கு வருவது அவரின் அரசியல்
பிரசாரத்துக்கு மிகவும் கை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. எனவே படத்தில் அரசியல் வசனங்கள் ஏராளமாக இடம்பெறும் என்று தெரிகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம் நடிகை பலி.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம் நடிகை பலி.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளம் நடிகை ஒருவர் மரணமடைந்திருப்பது திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம் நடிகை பலி…. சோகத்தில் திரையுலகினர்
திவ்யா பட்நாகர்
இந்தி சீரியல் நடிகை திவ்யா பட்நாகர்(வயது 34), யா ரிஷ்தா கியா
கேக்லதா ஹய், தேரா யார் ஹூன் மெயின் போன்ற டி.வி. தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவருக்கு கடந்த
வாரம் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மிகவும் மோசமானதை அடுத்து கடந்த சில
தினங்களுக்கு முன்னர் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று மரணமடைந்தார். இளம் வயதில் நடிகை ஒருவர் கொரோனாவுக்கு
பலியாகி இருப்பது இந்தி திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கரடி தாக்கி 4 பேர் பலி
கரடி தாக்கி 4 பேர் பலி
சத்தீஷ்கார் மாநிலம் தேவ்கார் வனப்பகுதியில் கரடி தாக்கியதில் 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்
சத்தீஷ்காரில் கரடி தாக்கி 4 பேர் பலி
கரடி தாக்குதல்
சத்தீஷ்கார் மாநிலம் கோரியா மாவட்டம் தேவ்கார் வனப்பகுதியை ஒட்டிய அன்க்வானி கிராமத்தில் கரடிகள் அட்டகாசம் செய்து வருகின்றன. இந்தநிலையில் பொதுமக்கள் சிலர் நேற்று முன்தினம்
காட்டுப்பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு வந்த கரடி ஒன்று 2 பெண்கள் உள்பட 4 பேரை தாக்கி கொன்றது. மேலும் ஒருவர் கரடிக்கு பயந்து மரத்தின் மேல் ஏறி தப்பினார்.
இறந்த 4 பேரின் உடல் அருகே அந்த கரடி விடியவிடிய உட்கார்ந்து இருந்தது. இதனால் மீட்புப்பணி பாதிக்கப்பட்டது. அதிகாலையில் கரடி அங்கிருந்து காட்டுக்குள் சென்று விட்டது. உடனே பொக்லைன்
எந்திரம் மூலமாக மரத்தில் ஏறி தப்பியவரை காப்பாற்றினர். கரடி தாக்கியதில் 3 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர
சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்
நாட்டில் 648 பேருக்கு புதிதாக கொரோனா
நாட்டில் 648 பேருக்கு புதிதாக கொரோனா
நாட்டில் நேற்று 648 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்களில் 451 பேர் சிறைச்சாலைக் கொத்தணியுடன் தொடர்பு டையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், என்றும் ஏனைய 197 பேரும் பேலியகொட கொத்தணியைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27ஆயிரத்து 876ஆக அதிகரித்துள்ளது.
பொலிசாரால் 39 பேர் கைது
பொலிசாரால் 39 பேர் கைது
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் நபர்கள் தொடர்பில் அவதானத்துடன் உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று (06) மாத்திரம் அவ்வாறான 39 நபர்களை கைது
செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
சாதாரண தர பரீட்சை ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு
சாதாரண தர பரீட்சை ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு
ஒத்திவைக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையை 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் திகதி முதல் 11
ஆம் திகதி வரையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளுக்கு வருகை தந்த மாணவர்கள் திருப்பி அனுப்பி வைப்பு
பாடசாலைகளுக்கு வருகை தந்த மாணவர்கள் திருப்பி அனுப்பி வைப்பு
நோர்வுட் தமிழ் மகா வித்தியாலயத்தில் பணிபுரிந்து வந்த ஆசிரியை ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து
நோர்வுட் பகுதில் உள்ள பாடசாலைகளுக்கு வருகை தந்த மாணவர்கள் மீண்டும் வீட்டுக்கு திருப்பி அனுப்பிவைக்கபட்டனர்.
நோர்வுட் தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று வரும் மாணவர்களோடு தொடர்புகளை பேணிவந்திருக்கலாம் என்ற
சந்தேகத்தில் நோர்வுட் நிவ்வெளி தமிழ் வித்தியாலயம் மற்றும் அயரபி தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு வருகை
தந்த மாணவர்கள் சிலர் வீட்டுக்கு திருப்பி அனுப்பபட்டதாக பாடசாலையின் அதிபர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை இன்றைய தினம் குறித்த பாடசாலைகளுக்கு குறைந்தளவிலான மாணவர்களே உள்வாங்கபட்டமை குறிப்பிடதக்கது
போதையில் போலீசாருடன் ரகளை பண்ணிய தமிழ் பெண்
போதையில் போலீசாருடன் ரகளை பண்ணிய தமிழ் பெண்
தமிழகத்தில் தமிழ் இளம் பெண் ஒருவர் அதிக போதையில் காரினை
செலுத்தி சென்றுள்ளார் அப்பொழுது நபர் ஒருவரை காரால் மோதினர் ,
தான் குற்றத்தை ஒப்பு கொள்ளாது போலீசாருடன் தகாத வார்த்தைகளை பேசி ரகளையில் ஈடுபட்டார் ,
எனினும் போலீசார் வழக்கு பதிவு செய்து சென்றதுடன் ,குறித்த குற்றம் தொடர்பில் வழக்கு விசாரணை நடத்த முடிவாகியுளளது

துருக்கி தாக்குதலில் 40 அப்பாவி மக்கள் பலி
துருக்கி தாக்குதலில் 40 அப்பாவி மக்கள் பலி
துருக்கிய அரச பயங்கரவாத இராணுவத்தினர் நடத்திய
தாக்குதலில் சிக்கி நாற்பது இராணுவத்தினர் பலியாகியுள்ளனர் ,
தொடர்ந்து தமது தாக்குதலை தீவிர படுத்தி வருகின்றனர் ,இந்த
படுகொலைகளுக்கு மனித உரிமை அமைப்பு
கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது
பிரிட்டனில் 231 பேர் கொரனோவால் பலி
பிரிட்டனில் 231 பேர் கொரனோவால் பலி
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில்
மட்டும் 231 பேர் பலியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
மேலும் இதுவரை ,மொத்தம் 61,245 பேர் பலியாகியுள்ளனர் ,தற்போது தடுப்பூசி மக்கள் பாவனைக்கு விடுவிக்க பட்டுள்ள
நிலையில் குறித்த நோயானது எதிர்வரும் ஆறுமாதங்களுக்குள் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும் என தெரிவிக்க படுகிறது
4 படங்கள்…. ரூ.1000 கோடி பட்ஜெட் – பிரம்மிப்பூட்டும் பிரபாஸ்
4 படங்கள்…. ரூ.1000 கோடி பட்ஜெட் – பிரம்மிப்பூட்டும் பிரபாஸ்
பாகுபலி படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான பிரபாஸின் அடுத்தடுத்த படங்களுக்கு சுமார் ரூ.1000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாம்.
அடுத்தடுத்து 4 படங்கள்…. ரூ.1000 கோடி பட்ஜெட் – பிரம்மிப்பூட்டும்
‘பாகுபலி’ திரைப்படங்கள் மூலம் தேசிய அளவில் கவனம் பெற்றவர் பிரபாஸ். இப்படத்தை தொடர்ந்து ‘சாஹோ’வில் நடித்தார்.
மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான ‘சாஹோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலை
வாரிக்குவித்தது. இதையடுத்து அவருக்கு பிரம்மாண்ட பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
அந்தவகையில் பிரபாஸின் 20-வது படத்தை, ‘சாஹோ’ படத்தை தயாரித்த யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கே கே
ராதா கிருஷ்ணா இயக்கும் இப்படத்திற்கு ‘ராதே ஷ்யாம்’ என பெயரிட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து பிரபாஸின் 21-வது படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி தேசிய விருது வென்ற ‘மகாநடி’ என்ற படத்தை
இயக்கிய நாக் அஸ்வின் இப்படத்தை இயக்க உள்ளார். இதில் பிரபாசுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார்.
பிரபாஸ்
பிரபாஸின் 22-வது படம் ஆதிபுருஷ். ராமாயண கதையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தை ஓம் ராவத்
இயக்குகிறார். இதையடுத்து பிரபாஸின் 23-வது படத்தை கே.ஜி.எப். இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்குகிறார். இப்படத்திற்கு ‘சலார்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நான்கு படங்களின் பட்ஜெட்டை சேர்த்தால் சுமார் ரூ.1,000 கோடியைத் தாண்டுகிறது. இதற்கு முன்னர் இந்தியத் திரையுலகில்
ஒரே சமயத்தில் ரூ.1,000 கோடி முதலீடு செய்யப்பட்ட நடிகர் வேறு யாருமில்லை என்று கூறப்படுகிறது.
துப்பாக்கி சுடும் பயிற்சி பெறும் அஜித்
துப்பாக்கி சுடும் பயிற்சி பெறும் அஜித்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் அஜித்குமார், தற்போது துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று வருகிறாராம்.
துப்பாக்கி சுடும் பயிற்சி பெறும் அஜித்
அஜித்
அஜித்குமார் இப்போது ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ்
ஸ்டுடியோவில் நடந்தது. முதலில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன. அஜித் ‘பைக்’கில் வேகமாக செல்வது போல் ஒரு காட்சி படமானது.
அப்போது, பைக் சறுக்கி அவருக்கு சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன. அதற்காக அஜித் ஓய்வு எடுத்துக்கொள்ளவில்லை. தொடர்ந்து
சண்டை காட்சியில் 7 நாட்கள் நடித்து வந்தார். அதன் பிறகு சென்னை திரும்பினார்.
அஜித்
அஜித்குமார் இப்போது, துப்பாக்கி சுடும் பயிற்சி பெறுகிறார். துப்பாக்கி சுடுவதில் அவருக்கு நீண்ட கால ஆர்வம் இருந்து
வருகிறது. ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் அவர் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று வருகிறார்.
ராணி எலிசபெத்துக்கு கொரோனா தடுப்பூசி
ராணி எலிசபெத்துக்கு கொரோனா தடுப்பூசி
இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கும், அவரது கணவர் இளவரசர் பிலிப்புக்கும் வரும் வாரங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராணி எலிசபெத்துக்கு கொரோனா தடுப்பூசி – வரும் வாரங்களில் போட நடவடிக்கை
இரண்டாம் எலிசபெத் ராணி
இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கும் (வயது 94), அவரது கணவர் இளவரசர் பிலிப்புக்கும் (99) வரும் வாரங்களில் அமெரிக்காவின் பைசர், ஜெர்மனியின் பயோ என்டெக்
நிறுவனங்கள் கூட்டாக தயாரித்துள்ள தடுப்பூசி போடப்படும் என்று இங்கிலாந்து நாளிதழ் ‘டெய்லி மெயில்’ கூறுகிறது.
கடந்த புதன்கிழமை, இந்த தடுப்பூசியின் அவசர பயன்பாட்டுக்கான அனுமதியை இங்கிலாந்து வழங்கியது நினைவு கூரத்தக்கது.
இந்த தடுப்பூசியின் 8 லட்சம் ‘டோஸ்’, அடுத்த வாரம் இங்கிலாந்து வந்து சேரும் என அதன் மந்திரிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த தடுப்பூசிகள் வந்ததும், நாளை (செவ்வாய்க்கிழமை) முதல்
அதிக முன்னுரிமை குழுக்களில் உள்ளவர்களுக்கு 50 ஆஸ்பத்திரி மையங்களில் தடுப்பூசி போடப்படும் என இங்கிலாந்து ஊடகங்கள் கூறுகின்றன
மணமகளுக்கு கொரோனா – பாதுகாப்பு உடையுடன் திருமணம் முடித்த ஜோடி
மணமகளுக்கு கொரோனா – பாதுகாப்பு உடையுடன் திருமணம் முடித்த ஜோடி
மணமகளுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பாதுகாப்பு உடை அணிந்து ஜோடி ஒன்று திருமணம் செய்துகொண்டது.
மணமகளுக்கு கொரோனா – பாதுகாப்பு உடையுடன் திருமணம் முடித்த ஜோடி
பாதுகாப்பு உடையுடன் திருமணம் செய்யும் ஜோடி
ராஜஸ்தான் மாநிலம் ஷாபாத் நகரில் பரா பகுதியில் ஜோடி ஒன்று திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தது. அதற்கு முன்னதாக,
மணமக்களுக்கு கொரோனா பாதிப்பு பற்றிய பரிசோதனை நடத்தப்பட்டது.
இதன் முடிவுகள் வெளியானதில், மணமகளுக்கு கொரோனா தொற்று
இருப்பது உறுதியானது. எனினும், திருமணம் செய்துகொள்வதில் இருவரும் உறுதியாக இருந்துள்ளனர்.
இதையடுத்து, மணமக்கள் இருவரும் கொரோனா தடுப்புக்கான தனிநபர் பாதுகாப்பு உடைகளை அணிந்து கொண்டனர். அதன்பின்
இருவரும் சடங்குகளை முறையாகப் பின்பற்றி திருமணம் செய்துகொண்டனர்.
அவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்த நபரும் தனிநபர் பாதுகாப்பு உடைகளை அணிந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மணமகன்
பாரம்பரிய தலைப்பாகை மற்றும் கையுறைகளை அணிந்து கொண்டார். இதேபோல் மணமகளும் முக கவசம் மற்றும் கையுறைகளை அணிந்தபடி காணப்பட்டார்.
கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து இந்த ஜோடி
திருமணம் செய்து கொண்டது. இவர்களின் இந்த திருமணம் பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.







