கொரோனா வைரஸ் தொற்று- நாவலப்பிட்டி பூட்டு
கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக, நாவலப்பிட்டி
நகர வர்த்தக நிலையங்களை, எதிர்வரும் 18ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாவலப்பிட்டி பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியலயத்துக்கு உட்பட்ட பகுதியில், 16 பேருக்கு கொரோனா தொற்று
உறுதிதானதையடுத்தே, நாவலப்பிட்டி வர்த்தக சங்கத்தினர் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
நாவலப்பிட்டி நகர் முழுவதும் தொற்று நீக்கப்பட்டதன் பின்னர், வர்த்தக
நிலையங்கள் திறக்கப்படும் என வர்த்தக சங்கத்தின் தலைவர் கித்சிறி கருணாதாஸ தெரிவித்தார்.
இலங்கை கடற்படையின் பிரதானியாக ரியர் அத்மிரல் சுமித் வீரசிங்க நியமனம்
இலங்கை கடற்படையின் பிரதானியாக ரியர் அத்மிரல் சுமித் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது
தெற்காசியாவின் மிகப்பெரிய டயர் தொழிற்சாலை கோட்டாவால் திறப்பு
தெற்காசியாவின் மிகப்பெரிய டயர் தொழிற்சாலை கோட்டாவால் திறப்பு
தெற்காசியாவின் மிகப்பெரிய டயர் மற்றும் ரேடியேட்டர் டயர் உற்பத்தி ஆலையான “ஃபெரெண்டினோ டயர் கோர்ப்பரேஷன்“
நிறுவனம் நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
ஹொரன வகவத்த முதலீட்டுச் சபை கைத்தொழில் வலயத்திற்கு சொந்தமான 155 ஏக்கர் நிலத்தில் இந்த கைத்தொழில்த வளாகம் அமைந்துள்ளது. முதல் கட்டத்திற்கான முதலீடு 100 மில்லியன்
அமெரிக்க டொலர்கள் ஆகும். ஐரோப்பிய தொழில்நுட்பத்துடன் உலகின் நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகிறது.
SUV வாகனங்கள், மோட்டார் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பல உலகத் தரம் வாய்ந்த டயர்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறன. 80% உற்பத்தி ஏற்றுமதி செய்யப்படுவதுடன்
, மீதமுள்ள 20% உள்ளூர் சந்தைக்கு வழங்கப்படுகிறது. நிறுவனத்தின் முதல் தொகுதி உற்பத்தி இந்த மாதம்
அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொழிற்சாலையின் நன்மைகளில், நாட்டின் ஏற்றுமதி சந்தை அபிவிருத்தி, ஏராளமான நேரடி மற்றும் மறைமுக
வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் உள்ளூர் இறப்பர் செய்கையாளர்களுக்கு கிடைக்கும் அதிக விலைகள் ஆகியவை அடங்கும்.
உற்பத்தித் துறையின் நிலையான எல்லைகளை கடந்து, தொழில்நுட்பத் துறை பதவிகளுக்கு தகுதியான பெண்களை நியமிக்க நிறுவனத்தின் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தொழிற்சாலை வளாகம் சூழல் நட்புடையதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். நிகழ்வு இடம்பெறும் இடத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களை
ஃபெரெண்டினோ டயர் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் நந்தன லொகுவிதான வரவேற்றார்.
நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்த ஜனாதிபதி அவர்கள் டயர் உற்பத்தி நிறுவனத்தின் முழு செயல்முறையையும் பார்வையிட்டார். கடந்த புலமைப் பரிசில் பரீட்சையில் 200
புள்ளிகள் பெற்ற இங்கிரிய சுமனஜோதி வித்தியாலயத்தின் மாணவி யசஸ்மி தெவ்மிக்கு ஜனாதிபதி அவர்கள் அன்பளிப்பொன்றை வழங்கினார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரி தர்ம மகா சங்க சபையின் சங்கைக்குரிய இத்தேபானே ஸ்ரீ தம்மாலங்கார தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், அமைச்சர்களான விமல் வீரவங்ச,
ரோஹித அபேகுணவர்தன, மஹிந்த அமரவீர, ரமேஷ் பதிரண, இராஜாங்க அமைச்சர்களான பியல் நிஷாந்த, கனக ஹேரத், டீ.வீ. சானக, பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன மற்றும்
அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

வெள்ளத்தில் மிதக்கும் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பெய்துவந்த அடைமழை காரணமாக 10,561 குடும்பங்களைச் சேர்ந்த 34, 415 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க
அதிபர் கே. கருணாகரன் தகவல் திணைக்கள மாவட்ட ஊடகப்பிரிவுக்கு தகவல்கள் தெரிவித்தார்.
கடந்த 2 நாட்களாக பெய்த அடைமழை காரணமாக மாவட்டத்தின் 9 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 3,576
குடும்பங்களைச் சேர்ந்த 12304 நபர்களும், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 1965 குடும்பங்களைச் சேர்ந்த 5841 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் 1698 குடும்பங்களைச் சேர்ந்த 5283 நபர்களும், பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் 73 குடும்பங்களைச் சேர்ந்த 217
நபர்களும், ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் 878 குடும்பங்களைச் சேர்ந்த 2670 நபர்களும், போரதீவுப்பற்று வெள்ளாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 162 குடும்பங்களைச்
சேர்ந்த 482 நபர்களும், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 933 குடும்பங்களைச் சேர்ந்த 2975 நபர்களும், ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் பிரிவில் 1260 குடும்பங்களைச் சேர்ந்த 4584
நபர்களும், கோரளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் 16 குடும்பங்களைச்சேர்ந்த 59 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர கிரான், செங்கலடி, மண்முனை வடக்கு, காத்தான்குடி, ஆரையம்பதி, பட்டிப்பளை, போரதீவுப்பற்று பிரதேசங்களில் தலா
ஒரு வீடுமாக மொத்தம் 7 வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
இவ் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சுகாதார விதிகளுக்கமைவாக
உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாளியை அடித்து கொன்ற தொழிலாளி
முதலாளியை அடித்து கொன்ற தொழிலாளி
வெலிகம, பெலென சுற்றுவட்டத்தை அண்மித்த பகுதியில் தனியார் பஸ் நடத்துநரால்
மற்றுமொரு தனியார் பஸ் நடத்துநர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சில வாரங்களுக்கு முன்னர் அம்பலாங்கொடை பஸ் நிறுத்தத்தில் ஏற்பட்ட
முரண்பாடு காரணமாக இந்த படுகொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாத்தறை – கொழும்பு சேவையில் ஈடுபடும், ஹக்மன பகுதியை சேர்ந்த 40 வயதுடைய நடத்துநரே இவ்வாறு கொலை
செய்யப்பட்டுள்ளதுடன், அந்த பஸ்ஸின் உரிமையாளரும் அவரே என்று தகவல் வெளியாகியுள்ளது.
சடலம் மாத்தறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கைதுசெய்ய
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
லண்டனில் கொரனோ பரப்பும் தமிழர்கள்
லண்டனில் கொரனோ பரப்பும் தமிழர்கள்
பிரிட்டன் தழுவிய நிலையில் பரவி வரும் கொரனோ நோயினால்
நாள் தோறும் பல நூறு மக்கள் பலியாகி வருகின்றனர்
இவ்வேளை தமிழர்களும் அதிகம் பாதிக்க பட்டுள்ளனர் ,இவ்வாறு
நோயினால்பாதிக்க பட்ட சில தமிழர்கள் தமது குடும்பத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்
எனினும் இவர்கள் தம்மை சுய தனிமை படுத்தலுக்குஉள்ளாக்க பட வேண்டும் .,
ஆனால் இவர்கள் அரசும் கூறும் அந்த விதிகளை ஏறி நிகழ்வுகளில் கலந்த
கொள்வது மற்றும் ,தனிமை படுத்துதலை மறைத்து ,தமக்கு நோயுள்ளதையும்
மறைத்து சாதாரண மனிதர்கள் போல கலந்து கொளவதாக மக்கள் மத்தியில் பேச படுகிறது
இவ்வாறு தனிமை படுத்துதலை மேற்கொள்ள மறுத்து வெளியில் நடமாடிய
தமிழர்கள் சிலருக்கு பல்லாயிரம் பவுண்டுகள் தண்டம் அறவிட பட்டுள்ளது
,அதிக கூடிய தொகையாக பத்து ஆயிரம் பவுண்டுகள் அறவிட படுகிறது ,அத்துடன் கிரிமினல் குற்றம் ஆகிறது என்பது குறிப்பிட தக்கது
கொரனோ தாக்குதலில் சிக்கி லண்டனில் தமிழர் மரணம்
கொரனோ தாக்குதலில் சிக்கி லண்டனில் தமிழர் மரணம்
பிரிட்டன் லண்டன் பகுதியில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
தமிழ் வாலிபர் ஒருவர் பலியாகியுள்ளார் ,இவரை போன்று ஐம்பதுக்கு மேற்பட்ட தமிழர்கள் பலியாகியுள்ளனர்
இரண்டாம் அலையாக வீரியம் கொண்டு பரவி வரும் கொரனோ நோயின்
தாக்குதலில் சிக்கி கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 1500 க்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் பிரிட்டன் தழுவிய நிலையில்
பலியாகியுள்ளனர்
ஐம்பது ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளனர்
,தொடர்ந்து பத்து ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிட தக்கது
சிறுமி கொலை – விசாரணை செய்ய கோரி மக்கள் போராட்டம்
மட்டக்களப்பு – களுவாஞ்சிடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் சுதாகரன் அஸ்வினி என்ற 11 வயதுச் சிறுமியின் மரணம் தொடர்பில் முறையான விசாரணை
நடத்தக்கோரியும் சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்யுமாறு வலியுறுத்தியும், பெரியகல்லாறு பிரதான வீதியில் நேற்று (13) மாலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில், கொட்டும் மழையின் மத்தியிலும் வீதியை மறித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது சிறுமியின் மரணம் கொலையெனவும் சிறுமி கடுமையான முறையில் சித்திரவதை செய்யப்பட்டுள்ளாரெனவும்
அவரது மரணத்துக்கு நியாயம் வேண்டும் எனவும் அவர்கள் கோசமெழுப்பினர்.
இதனையடுத்து போராட்ட இடத்துக்கு வந்த களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொதுமக்களுடன்
கலந்துரையாடியதுடன், குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கை
முன்னெடுக்கப்படுவதாகவும் 48 மணித்தியாலத்துக்குள் அவர்களை கைது
செய்வோம் எனவும் வழங்கிய உறுதிமொழியையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

லண்டனில் புலி குழுக்களுக்கு மண்டை கழுவும் சுமந்திரன்
லண்டனில் புலி குழுக்களுக்கு மண்டை கழுவும் சுமந்திரன்
லண்டனில் மைய படுத்தி இயங்கி வரும் தமிழ் விடுதலை புலிகளின் ஆதரவு சக்திகளுக்கு மகிந்த கோட்டபாய நேரடியாக தொடர்பை
ஏற்படுத்து பணத்தை வீசி வருகின்றனர் ,
மேலும் அவர்களது பைபவங்களுக்கு எல்லாம் வாழ்த்துக்களும் பரிமாறி வருகின்றனர்
முக்கிய தலைகளுக்கு பணத்தை வீசுவதன் மூலம் , தமிழர் பலத்தை நசுக்கலாம் என கங்கணம் கட்டி சிங்கள தேசம் இயங்கி வருகிறது
அதற்கு அமைவாக கூட்டமைப்பின் நாரதர் சுமந்திரனை நகர்த்தி அவர் ஊடாக புலிகள் குழுக்கள் ,மற்றும் ஆதரவாளர்களை விலை
பேசி வாங்கி வைத்துள்ளது சிங்களம் .இதன் பின்னால் சுமந்திரனின் பல நரி விளையாடடுக்கள் தமிழ் தேசிய அரசியலை நசுக்கும் நகர்வில் ஈடுபட்டுள்ளார்
இவரது இந்த தொடர்பில் உள்ளவர்கள் விபரங்கள் விரைவில் வெளியாகும் ,அவ்வேளை பணத்துக்கு ஆசைப்பட்டு தமிழ்
மக்களினால் துரத்த படும் நிலைக்கு இந்த விலை போனவர்கள் செல்ல போகும் அபாயம் எழப்போகிறது
இப்பொழுதே மக்கள் கவனித்து பார்க்கலாம் ,புலிகள் நிகழ்வுகள் எவையும் நினைவு கூற படுவது ,இல்லை அவர் தம் நிகழ்வுகள்
யாவும் மழுங்கடிக்க பட்டு மறக்கடிக்க பட்டு வருகின்றன
ஆனாலும் தாம் தேசிய வாதிகள் என்றே முழக்கமிடுகின்றனர்
தமிழர்களே ,குறிப்பாக அகதிகள் எச்சரிக்கியாக இருங்கள் ,பெரும்
சதி இடம்பெறுகிறது,உங்கள் விபரங்கள் சிங்கள தேசத்திற்கு கைமாறு படுகிறது ,
சூத்து மாத்து சுமந்திரனின் சூத்து விளையாட்டும் ,அவருக்கு காவடி
தூக்கும் கூலி குழுக்களும் விரைவில் முட்டை தாக்குதலுக்கு உள்ளாவார்கள் என்பது நிலையாகிறது
கோட்டா தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி
கோட்டா தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி
உழவர் திருநாளான தைப்பொங்கல், உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களின் முதன்மையான சமய மற்றும் கலாச்சார பண்டிகையாகும். இது இயற்கையுடன் பிணைந்த, விவசாயத்தை
அடிப்படையாகக் கொண்ட பாரம்பரிய வாழ்க்கை முறையையும் பயிர்களுக்கு வளம் சேர்த்த சூரியனுக்கு நன்றி செலுத்துவதையும் குறிக்கிறது. இந்து சமயத்தின்படி வாழும் தமிழ் மக்கள்
தைத்திருநாளை தங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் ஒரு புதிய ஆண்டின் விடியலாக கருதுகின்றனர். அந்த மகிழ்ச்சியை
கொண்டாடும் எமது நாட்டின் சகோதர தமிழ் மக்களுடன் நானும் மகிழ்ச்சியுடன் இணைந்து கொள்கிறேன்.
விளைச்சலின் மூலம் கிடைக்கும் புத்தரிசியை பாலுடன் சேர்த்து பொங்க வைத்து தங்களுக்கும், தங்கள் குடும்பத்திற்கும், நாட்டிற்கும், முழு உலகிற்கும் சுபீட்சம் கிட்ட வேண்டும் என்று
அவர்கள் பிரார்த்திக்கின்றனர். இன, மத பேதமின்றி இலங்கை மக்கள் அனைவருக்கும் சுபீட்சத்தை கொண்டுவருவது
என்னுடையவும் எமது அரசாங்கத்தினதும் ஒரே நோக்கமாகும். இந்த உன்னதமான நோக்கத்தை அடைந்துகொள்வதற்கான
வழிவகைகள் எமது அரசாங்கத்தின் நாட்டைக் கட்டியெழுப்பும் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
நன்றியுணர்வு என்பது இலங்கை சமூகத்தின் ஒரு தனித்துவமான பண்பாகும். அறுவடையின் முதல் பகுதியை சூரியனுக்கு படைக்கும் தைப்பொங்கல் பண்டிகை, பழங்காலத்திலிருந்தே நம் சமூகம்
மதித்து வரும் விழுமியங்களை குறிக்கிறது. இதன் காரணமாக தைப்பொங்கல் பண்டிகை தேசிய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளது.
மனித சமூகத்தின் உன்னதமான நன்னெறிகளை குறிக்கும் வகையில், தைப்பொங்கல் திருநாளை கொண்டாடும் இலங்கை
வாழ் தமிழ் மக்களுக்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
யுத்த பகுதியில் மாடுகளை திருடும் இராணுவம்
யுத்த பகுதியில் மாடுகளை திருடும் இராணுவம்
வடக்கு சிரியாவின் அல் அமீர் கிராமத்தில் வசித்து வந்த மக்களின் கால்நடைகளை
துருக்கிய ஆதரவுடன் இயங்கி வரும் துணை இராணுவ குழுக்கள் திருடி செல்கின்றனர்
இவ்விதம் ஒரே நாளில் இருபது மாடுகள் திருடி செல்ல பட்டுள்ளன ,இவற்றுடன்
ஆடுகளும் உள்ளடங்கும் என் பாதிக்க பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்
சமரச காலத்தில் இவ்விதம் இந்த கால்நடைகள் திருட்டு போவது
மக்கள் மத்தியில் துயரை ஏற்படுத்தியுளளது

மரணத்தில் இருந்து தப்பி ரசியா திரும்பும் எதிர்க்கட்சி தலைவர்
மரணத்தில் இருந்து தப்பி ரசியா திரும்பும் எதிர்க்கட்சி தலைவர்
ரசியாவின் எதிர்க்கட்சி தலைவர் விமானத்தில் பயணிக்கும் பொழுது
அவருக்கு நச்சு மருந்து கலந்து கொடுக்க பட்டு உயிருக்கு போராடிய வண்ணம்
இருந்தார் ,இவர் அந்த மரணத்தில் இருந்து தப்பித்து இந்த வார இறுதியில் நாடு திரும்புகிறார்
இவர் நாயடு திரும்பிய பின்னர் அரசியலை தொடங்குவாரா அதற்கு
புட்டீன் இடம் அளிப்பாரா என்பது தொடர்பாக வாத பிரதி வாதங்கள் இடம்பெறுகிறது
மீளவும் இவர் கொலை செய்ய படலாம் என அஞ்ச படுகிறது
கொரனோ அகோரம் -அமெரிக்காவில் 4,447 மற்றும் பிரிட்டனில் 1,564 பேர் பலி
கொரனோ அகோரம் -அமெரிக்காவில் 4,447 மற்றும் பிரிட்டனில் 1,564 பேர் பலி
பிறவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த 24 மணித்தியாலத்தில்மட்டும் அமெரிக்காவில் 4,447 பேர்
பலியாகியுள்ளனர் மேலும் அதே நாளில் 228,132 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இதே போல பிரிட்டனில் இன்றைய தினம் அதிக தொகையில் மக்கள் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது
1,564 பேர் பலியாகியுள்ளனர் மேலும் 45,533 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
வரும் நாடுகளில் இதன் பாதிப்பு மேலும் அதிகரிக்க படும் என் ஏதிர்பாரக்க படுகிறது
27-ந் தேதி சசிகலா விடுதலை- சூடாகும் தமிழகம்
27-ந் தேதி சசிகலா விடுதலை- சூடாகும் தமிழகம்
விடுதலையாகி வெளியே வரும் சசிகலாவுக்கு கர்நாடக தமிழக எல்லையான, ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் தேசிய
நெடுஞ்சாலையில் வரவேற்பு அளிக்க, அமமுக நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர்.
வருகிற 27-ந் தேதி சசிகலா விடுதலை: ஓசூர் சொகுசு விடுதியில் தங்க ஏற்பாடு
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு பெங்களூரு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
இதையடுத்து 3 பேரும், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறையில் சசிகலா விதிமுறைகளை மீறி, சிறப்பு சலுகையை அனுபவித்ததாக குற்றச்சாட்டு இருந்ததால், அவர் முன்கூட்டியே விடுதலையாவதில் சிக்கல் இருந்தது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் பெற்ற தகவல்படி அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய வாய்ப்பில்லை என்றும், அபராதத் தொகை
செலுத்திவிட்டால் ஜனவரி 27-ம் தேதி விடுதலை ஆவார் என்றும் சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து சசிகலா கடந்த மாதம் அபராத தொகை செலுத்தினார். இதையடுத்து வரும் 27-ம் தேதி சசிகலா விடுதலை ஆவது உறுதியானது.
விடுதலையாகி வெளியே வரும் சசிகலாவுக்கு கர்நாடக – தமிழக எல்லையான, ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வரவேற்பு அளிக்க, அ.ம.மு.க., நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர்.
தமிழக எல்லைக்கு வருவதற்கே, இரவு வெகு நேரம் ஆகிவிடும் என்பதால், சசிகலா, சென்னை செல்லாமல், ஓசூரிலுள்ள தனியார் சொகுசு விடுதியில் அல்லது சூளகிரி அருகே உள்ள ஓட்டல் ஒன்றில்
தங்க அதிகவாய்ப்புள்ளது. அதற்காக, கட்சியின் மேல்மட்ட தலைவர்கள் ஓட்டல்களை பார்வையிட்டு, புக்கிங் செய்து விட்டதாக
உளவு பிரிவு போலீசார் அரசுக்கு தகவல் அனுப்பி உள்ளனர். மேலும், சசிகலாவுக்கு சிறை வளாகத்தில் வரவேற்பு அளிக்க செல்லும்
அ.ம.மு.க., நிர்வாகிகள் தங்கவும், ஓசூரிலுள்ள பிரபல ஓட்டல்களை புக்கிங் செய்துள்ளனர்.
ஓசூரில் 27-ம் தேதி இரவு தங்கி விட்டு, 28-ம் தேதி காலை புறப்பட்டு, கிருஷ்ணகிரி, வேலூர் வழியாக சசிகலா சென்னை வந்து
அடைகிறார். வரும் வழியில் அவருக்கு 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து அ.ம.மு.க.வினர் சிலர் கூறுகையில், சசிகலா வரும் 27-ம் தேதி இரவு விடுதலையாகி பெங்களூருவில் தங்கி விட்டு மறுநாள்
28-ம் தேதி காலை அங்கிருந்து புறப்பட்டு ஓசூர் வழியாக சென்னை செல்வார் என்று தெரிவித்தனர்.
பிக்பாஸ் 4’-ல் பணப் பெட்டியுடன் வெளியேறும் போட்டியாளர் இவரா? – தீயாய் பரவும் தகவல்
பிக்பாஸ் 4’-ல் பணப் பெட்டியுடன் வெளியேறும் போட்டியாளர் இவரா? – தீயாய் பரவும் தகவல்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளர் ஒருவர் பிக்பாஸ் வழங்கும் பணப் பெட்டியுடன் வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது.
‘பிக்பாஸ் 4’-ல் பணப் பெட்டியுடன் வெளியேறும் போட்டியாளர் இவரா? – தீயாய் பரவும் தகவல்
பிக்பாஸ் 4 போட்டியாளர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் இறுதி வாரத்தை எட்டியுள்ளது. வழக்கமாக ஒவ்வொரு சீசனிலும் இறுதி வாரத்தில், ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கிக் கொண்டு போட்டியிலிருந்து விலக
போட்டியாளர்களுக்கு ஒரு வாய்ப்பை பிக்பாஸ் வழங்குவார். கடந்த சீசனில் டைட்டில் வின்னர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கவின்,
பிக்பாஸ் வழங்கிய தொகையை பெற்றுக் கொண்டு வெளியேறினார்.
ரம்யா
அதேபோல் இந்த சீசனிலும் போட்டியாளர்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சீசனில் ஆரி, பாலா, ரம்யா, சோம், கேபி, ரியோ ஆகியோர் இறுதிப்
போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், அவர்களில் ரம்யா பாண்டியன் பிக்பாஸ் வழங்கும் தொகையை வாங்கிக் கொண்டு
வெளியேறியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இருப்பினும் இது உண்மையா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்

படப்பிடிப்பு தளத்திற்கு சைக்கிளில் சென்ற பிரபல நடிகை
படப்பிடிப்பு தளத்திற்கு சைக்கிளில் சென்ற பிரபல நடிகை
தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபல நடிகையாக இருப்பவர் படப்பிடிப்பு தளத்திற்கு சைக்கிளில் சென்றுள்ளார்.
படப்பிடிப்பு தளத்திற்கு சைக்கிளில் சென்ற பிரபல நடிகை
ரகுல் பிரீத் சிங்
தமிழ் திரையுலகில் நடிகை ரகுல் பிரீத் சிங் என்னமோ ஏதோ, தீரன்
அதிகாரம் ஒன்று, என்ஜிகே ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் சிவகார்த்திகேயனின் அயலான் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை ரகுல் பிரீத் சிங் கொரோனாவால்
பாதிக்கப்பட்டு பின் குணமடைந்தார். தற்போது அவர் மீண்டும் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டுள்ளார். அந்த வகையில்
பாலிவுட்டில் மிக பிரம்மாண்டமாக தயாராகி வரும் ‘மே டே’ என்ற படத்தில் நடிகை ரகுல் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் கதாநாயகனாக அஜய் தேவ்கன் நடிக்கிறார். இந்நிலையில் நடிகை ரகுல் இந்த படத்தின் படப்பிடிப்புக்காக தான்
தங்கியிருக்கும் ஹோட்டலில் இருந்து படப்பிடிப்பு தளத்திற்கு சைக்கிளிலேயே சென்றுள்ளார்.
ரகுல் பிரீத் சிங்
அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 12 கிலோமீட்டர் சைக்கிளில் செல்வது தனக்கு நல்ல அனுபவமாக இருந்ததாக பதிவிட்டுள்ளார்.
மேலும் சைக்கிளில் சென்ற வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .

சீமானை கிண்டலிடிக்கும் விஜய் சேதுபதி படம் – சர்ச்சையில் சிக்கியது
சீமானை கிண்டலிடிக்கும் விஜய் சேதுபதி படம் – சர்ச்சையில் சிக்கியது
விஜய் சேதுபதி படம் சர்ச்சைக்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் நடிகர் பார்த்திபன் பேசியுள்ளார்.
விஜய் சேதுபதி பட சர்ச்சை – சீமானிடம் பேசிய பார்த்திபன்
விஜய் சேதுபதி
தில்லிபிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பார்த்திபன், மஞ்சிமா மோகன், ராஷி கண்ணா, கருணாகரன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம்
‘துக்ளக் தர்பார்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
ஜனவரி 11-ம் தேதி ‘துக்ளக் தர்பார்’ படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசர் நாம் தமிழர் கட்சியினரைக் கடும் கோபத்துக்கு
ஆளாக்கியது. அதில் ‘ராசிமான்’ என்ற கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடித்துள்ளார் எனத் தெரிகிறது.
ஒரு காட்சியில் அந்த போஸ்டர்களை எல்லாம் கிழிப்பது போன்று காட்சி இடம்பெற்றுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானைத்தான் கிண்டல் செய்துள்ளார்கள் எனக் கருதி, படக்குழுவினருக்கு நாம்
தமிழர் கட்சியினர் கடும் எச்சரிக்கை விடுத்தனர். இதனிடையே, இந்தச்
சர்ச்சை தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமானிடம் பேசியுள்ளார் பார்த்திபன்.
இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில் பார்த்திபன் கூறியிருப்பதாவது:
பார்த்திபன்
“நண்பர் சீமானிடம் நேரடியாக ‘துக்ளக் தர்பார்’ குறித்து விளக்கமளித்துவிட்டேன். அவரும் பெருந்தன்மையாகப் பதில் அளித்தார். ராசிமான் என்ற பெயர் சீண்ட வேண்டுமென்று
வைக்கப்பட்டதல்ல. இருந்திருந்தால் அதற்கு நானே இடம் தந்திருக்க மாட்டேன். இந்நிமிடம் வரை நான் எக்கட்சியையும் சார்ந்தவனல்ல
. (புதிய பாதை நமது) இருப்பினும் இடையறாது உழைத்து தங்களின் லட்சிய இலக்கை அடையப் போராடும் ‘நாம் தமிழர்’ தோழர்களின்
முயற்சிகளைக் கிண்டல் செய்ய நான் இடம் தரமாட்டேன். எனவே, உள்நோக்கமின்றி
நடந்த பெயர் பிரச்சினையை இயக்குநரிடம் கூறி, ராசிமான் என்ற பெயரை மாற்ற முயற்சி செய்து வருகிறேன்”.
இவ்வாறு பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் அமெரிக்காவுக்கு ஆபத்தானவர் – சபாநாயகர் போர்க்கொடி
டிரம்ப் அமெரிக்காவுக்கு ஆபத்தானவர் – சபாநாயகர் போர்க்கொடி
டொனால்டு டிரம்ப் அமெரிக்காவுக்கு ஆபத்தானவர் என பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.
டொனால்டு டிரம்ப் அமெரிக்காவுக்கு ஆபத்தானவர் – பாராளுமன்ற சபாநாயகர்
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் டிரம்ப் தோல்வி அடைந்தார்.
இதற்கிடையே கடந்த 6-ந் தேதி ஜோபைடனின் வெற்றியை உறுதி செய்து சான்றிதழ் அளிப்பதற்காக பாராளுமன்றம் கூடியது. அப்போது டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்துக்குள் நுழைந்து பெரும் வன்முறையில் ஈடுபட்டனர்.
இந்த கலவரத்தில் போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்த கலவரத்துக்கு டிரம்ப் காரணம் என்றும் அவர் தனது ஆதரவாளர்களை தூண்டியதாகவும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இதையடுத்து அவரை அதிபர் பதவியில் இருந்து 25-வது சட்ட திருத்தத்தை பயன்படுத்தி நீக்க வேண்டும் என்று ஜனநாயக
கட்சியினர் முயற்சித்தனர். ஆனால், அதிபர் டிரம்பை 25-வது சட்ட திருத்தத்தை பயன்படுத்தி பதவி நீக்கம் செய்ய மறுத்துவிட்டார்.
இதனால், ஜனநாயக கட்சியின் பெரும்பான்மையாக உள்ள பிரதிநிதிகள் சபை மூலம் டொனால்டு டிரம்பை பதவி நீக்கம்
செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான வாக்கெடுப்பு இன்று அதிகாலை நடைபெற உள்ளது.
அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்யும் நடைமுறை தொடர்பாக வாக்க்டுப்பு நடைபெற உள்ள நிலையில் இது தொடர்பான விவாதம்
பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு உறுப்பினர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி பேசியதாவது:-
நாட்டுக்கு எதிராக அதிபர் டிரம்ப் வன்முறையை தூண்டிவிட்டுள்ளார். அவர் தனது பதவியில் இருந்து
வெளியேற்றப்பட வேண்டும். நாம் விரும்பும் நமது அமெரிக்க நாட்டின் தற்போதைய ஆபத்து டொனால்டு டிரம்ப் தான்.
ஏன் என்னை ஏமாற்றினாய்
ஏன் என்னை ஏமாற்றினாய்
நீ எறிந்த வெடிகுண்டு
என் மனதை உடைக்கலையே
என் மீது காதல் கொண்டு
அது வீழ்ந்தும் வெடிக்கலையே
குண்டுக்கே என் மீது
கொலை வெறி காதலடி
உங்ககேனோ என் மீது
இல்லையது பிரியமடி …?
வாய் எல்லாம் பொய்வைத்து
வழி யோரம் நடப்பவளே
விழியிரண்டு நீர் கொட்ட
வீழ்ந்தழுவாய் காத்திரு
பாவை உன்னை நான் தேடி
பாதணிகள் தேய்ந்திருச்சு
அது கூடி என்னோட
அரை உடல் இழந்திருச்சு
என்னை காத்த அது இன்று
எமன் வாயில் சிக்கிருச்சு
அதுக்குள்ள பாசம் கூட
உனக்கில்லா ஏன் போச்சு …?
வன்னி மைந்தன்
ஆக்கம் 13-01-2021

ஓமான் வளைகுடாவில் ஈரான் ஏவுகணை சோதனை – பதட்டம் அதிகரிப்பு
ஓமான் வளைகுடாவில் ஈரான் ஏவுகணை சோதனை – பதட்டம் அதிகரிப்பு
ஈரான் கடல் பரப்பை சுற்றி அமெரிக்கா ,இஸ்ரேல் ,தென்கொரியா கப்பல்கள்
முற்றுகை இட்டுள்ளன ,இவர்களின் வரவை அடுத்து ஈரானிய போர்
கப்பல்கள் ஓமான் வளைகுடா பகுதியில் திடீர் ஏவுகணை சோதனை ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன
இதனால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது ,மேலும்
எழுநூறு சூப்பர் டோரா சண்டை படகுகள் பாரசீக வளைகுடா பகுதியில் நிறுத்தி வைக்க பட்டுள்ளன
இவற்றில் கனரக ஏவுகணைகள் உள்ளன ,அமெரிக்காவின் மிரட்டலுக்கு
தகுந்த பதிலடி வழங்க படும் என ஈரான் அறிவித்து வரும் நிலையில் இந்த காப்பு நடவடிக்கை ஏற்படுத்த பட்டுள்ளது
அணுகுண்டு சோதனை இருபது வீதம் நிறைவு பெற்றுள்ளதாக
அறிவிக்க பட்டதன் பின்னர் நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது குறிப்பிட தக்கது







