சிரியாவில் இஸ்ரேல் விமானம் தாக்குதல் 28 பேர் பலி
சிரியாவில் இஸ்ரேல் விமானம் தாக்குதல் 28 பேர் பலி
கிழக்கு சிரியாவின் எல்லைப்புற பகுதியில் ஈரான் ஆதரவு படைகள் நிலை கொண்டுள்ளனர்
இவரக்களை இலக்கு வைத்து சிரியா விமானங்கள் தாக்குதலை நடத்தின
இதில் பலர் பலியாகியள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது
மேலும் Deir el-Zour பகுதியில் நடத்த பட்ட தாக்குதலில் சிக்கி 23 அப்பாவி
பொதுமக்கள்பலியாகினர் மேலும் 28 பேர் படுகாயமடைந்துள்ளனர் என மனித உரிமை காப்பகம் அறிவித்துள்ளது
அமெரிக்கா அதிபர்- டிரம்ப் வீடியோக்கள் பதிவிட கூகிள் தடை
அமெரிக்கா அதிபர்- டிரம்ப் வீடியோக்கள் பதிவிட கூகிள் தடை
ஆளும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் யூடுப் பக்கத்தில் காணொளிகள் பதிவிட ஒருவாரம் தடை செய்ய பட்டுள்ளது
எதிர்வரும் இருபதாம் திகதி டிரம்ப் பதவி விலகி புதிய அதிபருக்கு ஆட்சியை விட்டு கொடுக்க வேண்டும் ஆனால் அவர் முரண்டு
பிடித்து பதவி விலக மறுத்து வரும் நிலையில் சமூக வலைத்தளங்கள் ஊடக தடைகள் அதிகரித்து வருகிறது
ஜனாதிபதி பதவி விலகும் சட்ட மசோதா மூலம் நடவடிக்கைகள்
மேற்கொள்ள பட்டு வரும் நிலையில் இந்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
நடிகை கங்கனாவை கைது செய்ய கோர்ட்டு தடை
நடிகை கங்கனாவை கைது செய்ய கோர்ட்டு தடை
தேச துரோக வழக்கில் நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி ரங்கோலியை கைது செய்ய கோர்ட்டு தடை விதித்துள்ளது.
நடிகை கங்கனாவை கைது செய்ய கோர்ட்டு தடை
கங்கனா ரணாவத்
நடிகை கங்கனா ரணாவத் தொடர்ந்து சர்ச்சை கருதுக்களை வெளியிட்டு வருகிறார். ஏற்கனவே இந்தி பட உலகில் போதை
பொருள் புழக்கம் உள்ளது என்றும் போலீஸ் விசாரணை நடத்தினால் முன்னணி நடிகர்கள் சிக்குவார்கள் என்றும் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தி இருந்தார். மராட்டிய அரசையும், மும்பை
போலீசையும் சாடினார். இதையடுத்து அவரது அலுவலகம் இடிக்கப்பட்டது. இதனால் மும்பையில் பாதுகாப்பு இல்லை என்று
வெளியேறிய அவர் பல மாதங்களுக்கு பின்பு மீண்டும் மும்பை திரும்பி இருக்கிறார்.
கங்கனா ரணாவத்
இந்த நிலையில் கங்கனாவும் அவரது சகோதரி ரங்கோலியும் இரு சமூகத்தினர் இடையே மோதலை தூண்டும் வகையில் பேசியதாக போலீசார் தேச துரோக வழக்கு பதிவு செய்து நேரில் அழைத்து 2
மணிநேரம் விசாரித்தனர். இதையடுத்து தங்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி கங்கனாவும், ரங்கோலியும் மும்பை
கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி 25-ந்தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார். அதுவரை கங்கனா மற்றும்
ரங்கோலியை விசாரிக்கவும், கைது நடவடிக்கை எடுக்கவும் தடைவிதித்து உத்தரவிட்டார்
காணாமல் போன பிரபல நடிகர் கிணற்றில் பிணமாக மீட்பு
காணாமல் போன பிரபல நடிகர் கிணற்றில் பிணமாக மீட்பு
பிரபல மலையாள நடிகர் ஜனார்த்தனன் மூழிக்கராவின் உடல் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் நடத்தி வருகின்றனர்.
காணாமல் போன பிரபல நடிகர் கிணற்றில் பிணமாக மீட்பு…. போலீஸ் தீவிர விசாரணை
ஜனார்த்தனன் மூழிக்கரா
பிரபல மலையாள நடிகர் ஜனார்த்தனன் மூழிக்கரா. இவர் இங்கிலீஸ் மீடியம், காக்ஷி அம்மினி பில்லா, மழமேகப்ரவுள், ரமணம் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். முத்தப்பன்
என்ற மலையாள தொலைக்காட்சி தொடரிலும் நடித்து புகழ் பெற்றார். 50-க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும் நடித்து இருக்கிறார்.
ஜனார்த்தனன் கேரள மாநிலம் தலச்சேரியில் வசித்து வந்தார். ஜனார்த்தனனை திடீரென்று காணவில்லை. குடும்பத்தினர் அவரை தேடினார்கள். அப்போது வீட்டின் அருகே உள்ள கிணற்றில்
மூடப்பட்டு இருந்த வலை திறந்து இருந்தது. உள்ளே எட்டிப்பார்த்தபோது ஜனார்த்தனன் பிணமாக மிதந்தது கண்டு
அதிர்ச்சியானார்கள். இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ஜனார்த்தனன் உடலை கிணற்றில் இருந்து மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவர் எப்படி இறந்தார்? கொலையா? தற்கொலையா? என்று போலீசார்
விசாரிக்கிறார்கள். மரணம் அடைந்த ஜனார்த்தனத்துக்கு வயது 60. திருமணம் ஆகவில்லை. அவரது மறைவு மலையாள பட உலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
நடிகைக்கு கொரோனா
நடிகைக்கு கொரோனா
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம்.
காஞ்சனா பட நடிகைக்கு கொரோனா
ராய் லட்சுமி
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் ராய் லட்சுமி. இவர் தமிழில் லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான காஞ்சனா படத்தில்
நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் தற்போது சிண்ட்ரெல்லா படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை ராய் லட்சுமிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கடந்த ஒரு வாரமாக அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாராம்.
தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், இன்னும் சில தினங்களில் பூரண குணமடைந்து விடுவார் என்றும் கூறப்படுகிறது.
ராய் லட்சுமி
நேற்று இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்த ராய் லட்சுமி, “காலம் மாறிவிட்டது. நாம் அனைவரும் பாசிடிவ்-க்கு
பதிலாக நெகட்டிவ் முடிவுகளை தான் எதிர்பார்க்கிறோம்” என குறிப்பிட்டிருந்தார். கொரோனா பரிசோதனை முடிவுக்காக
காத்திருப்பதை தான் அவர் இவ்வாறு சூசகமாக பதிவிட்டுள்ளார் போல தெரிகிறது.
கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டு மது அருந்தக்கூடாது
கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டு மது அருந்தக்கூடாது
கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டு மது அருந்தக்கூடாது. தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டு மது அருந்தக்கூடாது- அமைச்சர் விஜயபாஸ்கர்
சென்னையில் இருந்து திருச்சி மண்டலத்திற்கு கொரோனா தடுப்பூசி மருந்துகள் இன்று அதிகாலை வந்தடைந்தன. அந்த மருந்துகளை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்
சி.விஜயபாஸ்கர், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் வளர்மதி மற்றும் கலெக்டர் சிவராசு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த தடுப்பூசி மருந்துகள் தகுந்த குளிர்பதன முறையில் பராமரிக்கப்பட்டு புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர்,
தஞ்சை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த தடுப்பூசி வாகனங்களை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கொடி அசைத்து அனுப்பி வைத்தார்.
பிறகு அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவில் வருகிற 16-ந்தேதி கொரோனா தடுப்பூசி போடுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கும் அதேநேரத்தில் தமிழகத்தில்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கிவைக்கிறார்.
முதற்கட்டமாக தமிழகத்திற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ள கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் 5 லட்சத்து 36 ஆயிரத்து 500 டோஸ் நேற்று
சென்னை வந்தடைந்தது. உட னடியாக அவை மண்டல அலுவலகங்களுக்கு குளிர்பதன முறையில் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த தடுப்பூசியை பொறுத்தமட்டில் முதல் தடுப்பூசி போட்ட 28-வது நாள் இரண்டாவது தடுப்பூசி (டோஸ்) போடவேண்டும். இரண்டாம் தடுப்பூசி போட்ட 14-வது நாள்தான் நமது உடலில் நோய் எதிர்ப்பு
சக்தி உருவாகும். முதல் தடுப்பூசி போடப்பட்டதில் இருந்து 48 நாட்கள் கழித்து தான் நோய் எதிர்ப்பு சக்தி வரும் என்று ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது.
முதல் கட்டமாக தடுப்பூசி போடுபவர்கள் போட்ட உடனேயே மது அருந்தக்கூடாது.
தமிழகத்தில் இந்த தடுப்பூசி போடுவதற்கு முன்னதாக ஒத்திகை, ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இதனால் திட்டமிட்டபடி தமிழகத்தில் 307 இடங்களில் கொரோனா தடுப்பூசி வருகிற16-
ந்தேதி முதல் தினமும் 100 பேருக்கு போடப்படும். தடுப்பூசியால் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது. தடுப்பூசி பற்றி சென்னை
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பரிச்சார்த்த முறையில் தடுப்பூசி போட்டு பரிசோதித்து, ஆய்வும் செய்துள்ளோம்.
இதில் எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. எனவே தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம். இந்த தடுப்பூசி மூலம் பொதுமக்கள் அச்சப்பட
வேண்டாம். முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நானும் முன் மாதிரியாக
தேவைப்பட்டால் அனுமதி பெற்று தடுப்பூசி போட தயாராக இருக்கிறேன்.
இப்போது கூட இங்கிலாந்து, இத்தாலி ஆகிய நாடுகளில் கொரோனா பரவி வருகிறது. ஆஸ்பத்திரியில் படுக்கைகள் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இந்தியாவில் தமிழகம்
தவிர்த்து பிற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு 3 சதவீதமாக இருக்கிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் 1.2 சதவீதமாக இருக்கிறது. இது மிகப் பெரிய வெற்றி. இங்கிலாந்து, பெல்ஜியம்
ஆகிய நாடுகளே ஆச்சரியப்படும் அளவுக்கு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
வலுவான சுகாதார கட்டமைப்பு மற்றும் முதல்வரின் போர்க்கால நடவடிக்கை, திட்டமிடுதல்களால் இன்று கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது.
மனைவியை நண்பர்கள் கற்பழிக்க விட்டு இரசித்த கணவன்
சென்னை வில்லிவாக்கத்தில் காதல் மனைவிக்கு நண்பர்களோடு சேர்ந்து கூட்டு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வாலிபரை கைது செய்துள்ளனர்.
நண்பர்களோடு கூட்டு பாலியல் தொல்லை- காதல் மனைவி புகாரால் சிக்கிய இளைஞர்
சென்னை கொளத்தூர் வெங்கடேஸ்வரா நகரில் வசித்து வந்த இளம்பெண் ஒருவர், பாரதி நகர் ஏ.பி.சி. காலனியைச் சேர்ந்த கணேஷ் என்ற வாலிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
முகநூலில் ஏற்பட்ட பழக்கம் காதலாகி, கல்யாணம் வரை சென்றுள்ளது. கடந்த மாதம் 5-ந்தேதி ஆள் நடமாட்டம் இல்லாத
இடத்தில் கணேஷ், இளம்பெண்ணின் கழுத்தில் தாலியை கட்டி குடும்பம் நடத்தி உள்ளார்.
இதன் பின்னர் காதல் மனைவி என்றும் பாராமல் கணேஷ் மிகவும் வக்கிரமாக நடந்து கொண்டு செக்ஸ் தொல்லை கொடுத்துள்ளார்.
17 வயது இளம்பெண் ஒருவரை வீட்டுக்கே அழைத்து வந்து மனைவி கண் எதிரே உல்லாசமாக இருந்துள்ளார். தனது நண்பர்களையும்
வீட்டுக்கு அழைத்துச் சென்று மனைவிக்கு கூட்டு பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார்.
கணவரின் செக்ஸ் தொல்லை எல்லை மீறி போனதால் அவரது பிடியில் இருந்து தப்பி வந்து வில்லிவாக்கம் அனைத்து மகளிர்
போலீஸ் நிலையத்தில் காதல் கணவரான கணேஷ் மீது இளம்பெண் பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. புகார் விவரம் வருமாறு:-
எனது பெற்றோரின் சம்மதம் இன்றி திருமணம் செய்து கொண்டதால் எனது பெற்றோர் என் மீது காவல் நிலையத்தில் புகார்
அளித்தனர். நான் எனது கணவர் கணேசுடன் வாழப்போவதாக கூறி விட்டு அவருடன் சென்று விட்டேன்.
நான் அணிந்திருந்த 1½ சவரன் செயின், ½ சவரன் மோதிரத்தை அடகு வைத்து முன் பணம் செலுத்தி கடந்த 23-ந்தேதி அன்று வில்லிவாக்கம் ராஜேஷ் நகரில் வாடகைக்கு குடியேறினோம். அன்று
இரவே எனக்கு துணையாகவும் வீட்டு வேலைக்கு உதவி செய்வதற்காகவும் என்று கூறி அயனாவரம், மங்களாபுரம் பகுதியில்
வசித்து வரும் 17 வயது பெண்ணை தோழி என்று எனக்கு அறிமுகப்படுத்தி அவரையும் அதே வீட்டில் தங்க வைத்தார்.
ஓரிரு நாட்களிலேயே எனக்கு அவர்கள் இருவரும் நடந்து கொண்ட விதத்தை கண்டு சந்தேகம் ஏற்பட்டு நான் எனது கணவரிடம்
கேட்டபோது எங்கள் இருவர் இடையே வாக்குவாதம் முற்றி அவர் என்னை அடித்து உதைத்தார்.
ஆபாச வார்த்தைகளால் திட்டியும் என்னை இது சம்மந்தமாக இனி எதுவும் கேட்கக்கூடாது. மீறி கேட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி வீட்டில் இருந்த அறைக்குள் வைத்து பூட்டி சென்றார்.
எனது இரு கைகளை கட்டியும், வாயை துணியால் அடைத்தும் பலமுறை செக்ஸ் சித்ரவதை செய்தார். இச்சம்பவத்தால் எனக்கு
உடல் ரீதியாக பாதிப்பும் காயமும் ஏற்பட்டது. ஆகவே நான் எனது வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கதறி அழுதேன்.
அப்போது என்னிடம் சமாதானம் பேசுவது போல் ஆசை வார்த்தை கூறி என்னை மது அருந்த கூறி வற்புறுத்தினார். அவரது
வற்புறுத்தலின்பேரில் நான் மது அருந்திய பின் அவருடன் இருந்த பெண்ணும் என்னிடம் தவறான முறையில் பாலியல் தொல்லை கொடுத்தார்.
எனது கணவர் அவரது போனில் வீடியோ எடுத்து அதை அவரது நண்பர்களுக்கும் அனுப்பி வைத்தார்.
எனது கணவரின் நணபர்கள் என்று 4 பேர் (பார்த்தால் அடையாளம் காட்ட கூடிய சுமார் 23 வயதுடையோர்) வரவழைத்து என்னிடம் கூட்டு பாலியலில் ஈடுபடும்படி கட்டாயப்படுத்தினார்.
ஆனால் நான் கத்தி கூச்சலிட்டு அழுத காரணத்தினால் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டார்கள். அவர்கள் சென்ற சிறிது
நேரத்திலேயே எனது கணவர் என்னை நிர்வாணப்படுத்தி கைகளை கட்டி போட்டு, வாயை துணியால் மூடி கடுமையாக சித்ரவதை செய்தார்.
நீ என்னுடைய 11-வது மனைவி. அது மட்டுமில்லாமல் என்னை படம் பிடித்தது போல் பல கல்யாணமான பெண்களின் அந்தரங்க
வீடியோவை என்னிடம் காட்டி மனரீதியான பாதிப்பை ஏற்படுத்தினார். எனது வீட்டின் உரிமையாளரிடம் கூறியதினால்
அவரது உதவியுடன் நான் அங்கிருந்து தப்பித்து எனது பெற்றோர் வீட்டுக்கு சென்று நடந்ததை கூறினேன்.
எனது கணவர் மற்றும் இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு புகாரில் கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து வில்லிவாக்கம் மகளிர் போலீசார் கணேஷ் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டனர். கணேசிடம் ஏமாந்த மற்ற 10 பெண்களும் யார்-யார்? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கணேசனுடன் சேர்ந்து கூட்டு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட வாலிபர்கள் பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள கணேஷ் ‘லவ்லி கணேஷ்’ என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளார். காதல் மன்னன் போல வில்லிவாக்கம் பகுதியில் இவர் வலம் வந்ததாகவும் தெரிகிறது. இதனாலேயே நண்பர்கள் லவ்லி கணேஷ் என்று அழைத்து வந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
இலங்கையிலும் புதிய வகை கொரோனா
இலங்கையிலும் புதிய வகை கொரோனா
ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வருகை தந்த நபர் ஒருவருக்கு இங்கிலாந்தில் இனங்காணப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ்
தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக விஷேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
வௌிநாடுகளில் இருந்து வருகை தரும் நபர்கள் தொடர்பில் கவனம் செலுத்தி மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் அடிப்படையில்
குறித்த தொற்றாளர் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் நீலிக மாளவிகே மற்றும் ஶ்ரீஜயவர்தனபுர
பல்கலைகழக ஆய்வு குழு இதனை உறுதி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிள்ளையான் விடுதலை – வழக்கு தள்ளுபடி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலான வழக்கில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை
சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட ஐந்து பேரும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற விசேட நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் இன்று (13) விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் ஐந்து பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், 2005ஆம் ஆண்டு டிசெம்பர்
மாதம் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர்
“பிரதீப் மாஸ்டர்” எனும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, “கஜன் மாமா” எனும் கனகநாயகம், இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தர் எம்.கலீல் மற்றும் முன்னாள் இராணுவ வீரரான
மதுசிங்க (வினோத்) ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், 2015ஆம் ஆண்டு தாங்கள் கைதுசெய்யப்பட்டு, குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்ட 1ஆம் மற்றும் 02ஆம் எதிரிகளின் வாக்குமூலமானது சுயேட்சையாக வழங்கப்படவில்லை, தூண்டுதல்
அல்லது அச்சுறுத்தல் காரணமாக அந்த வாக்குமூலத்தை வழங்கியிருந்தார்கள், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால்
நேரடியாக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு வாக்குமூலம் வழங்கியிருந்ததாக தெரிவித்து, மேன்முறையீட்டு நீதிமன்றில் மீளாய்வு விண்ணப்பித்தனர்.
இதன்பிரகாரம், குறித்த ஒப்புதல் வாக்குமூலத்தை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தன் அடிப்படையில், கடந்தாண்டு நவம்வர்
24ஆம் திகதி, மட்டக்களப்பு மேல்நீதிமன்றத்தில் சட்டமா அதிபரின் ஒப்புதலின் பேரில் பிணை வழங்கப்பட்டிருந்தது.
இதேவேளை, கடந்த திங்கட்கிழமை (11) சட்டமா அதிபர் திணைக்களம் இந்த வழக்கினை தொடர்ந்து நடத்தமுடியாது என
மட்டக்களப்பு மேல் நீதிமன்றுக்கு அறிவித்திருந்த நிலையில், வழக்கின் குற்றச்சாட்டுகளில் இருந்து இன்று அவர்களை விடுவித்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
விக்கி சம்பந்தி வாசுதேவ நாணயக்காரவுக்கு கொரனோ
ஜனவரி மாதம் 06 ஆம் திகதி முதல் தன்னை சந்தித்த சகலரும், தங்களை சுய தனிமைக்கு உட்படுத்துமாறு, கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ள அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கோரியுள்ளார்.
அமைச்சரின் ஊடகச் செயலாளர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல் அறிகுறி காரணமாக கடந்த 09 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டதையடுத்து, அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
கொரனோ தாக்குதல் 4 பேர் மரணம்
கொவிட் 19 தொற்றாளர்களாக நேற்று(12) 584 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை 49,537 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், கொவிட் 19 தொற்றுக்கு இலக்காகி மேலும் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து உயிரிழப்புகளின் எண்ணிக்கை 244 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு-13, ஹங்வெல்ல, மாத்தளை, வெல்லம்பிட்டிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்தோரே உயிரிழந்துள்ளனர்
காணாமல் போனவர் சடலமாக மீட்பு
காணாமல் போனவர் சடலமாக மீட்பு
கம்பளையில் கடந்த வெள்ளிக்கிழமை (08) காணாமல்போன ஆண் ஒருவர் நேற்று காலை மகாவலி கங்கையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கம்பளை, கங்கவட்ட பகுதியில் குடும்பம் ஒன்று சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் தனிமைப்படுத்தல் காலம்
முடிவடைந்ததை அடுத்து குறித்த வீட்டில் இருந்து நபர் ஒருவர் (வயது – 60) கடந்த வெள்ளிக்கிழமை வெளியில் சென்றுள்ளார்.
இவ்வாறு சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் பதற்றமடைந்த உறவினர்கள் அது தொடர்பில் கம்பளை பொலிஸ்
நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். பொலிஸ் விசாரணைகளும் ஆரம்பமாகி இருந்தன.
இந்நிலையில் கம்பளை ரயில்வே கடவைக்கு அருகில் மகாவலி கங்கையில் சடலம் ஒன்று இருப்பதாக பொலிஸாருக்கு நேற்று
தகவல் வழங்கப்பட்டுள்ளது. அது காணாமல்போன நபருடைய சடலம் என்பதனை உறவினர்கள் ஊடாக பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலைக்கு எடுத்து
செல்லப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
பேசும் காதல்
பேசும் காதல்
ஏங்க வைத்து ஏங்க வைத்து
ஏன் கிளியே போனாய்
எந்த நாட்டு செய்மதியில்
என்னை தேடி அலைந்தாய்
உலக நாட்டு உளவுத்துறை
உன்னை தேடுதோ …?- என்
உள்ளத்திலே நீ இருந்தாய்
காணவில்லையே …?
வானிருக்கும் காலம் மட்டும்
நீ இருப்பாய்
வாழும் வரை எந்தன் நெஞ்சில்
நீ உயிர்ப்பாய்
நீ தந்த நினைவுகளை
நான் மறவேன்
நீ இட்ட முத்தங்களை
நான் சுவைப்பேன்
உந்தன் மடி இன்றுவரை
நெஞ்சம் தேடும்
அந்த மடி உறங்கிவிட
ஆயூள் வேண்டும்
நீ இருக்கும் காலத்திலே
நான் இறக்க வேண்டும் – உன்
நீர் விழியை பார்க்க முன்னே
நான் மறைய வேண்டும்
நான் இல்லா காலத்திலே
என் செய்வாயோ ..?
நீ அழைத்தும் வரமாட்டேன்
என் செய்வாயோ …?
உடல் மட்டும் விழி
முன்னே காண மாட்டேன்
உள்ளத்திலே நீ இருக்க
கலங்க மாட்டேன்
இறக்கும் வரை உன்னுடனே
நான் வாழ்வேன்
இது தானே என் காதல்
புனிதம் என்றேன்
வன்னி மைந்தன்
ஆக்கம் 12-01-2021

மட்டு. போதனா வைத்தியசாலையில் 21 பேருக்கு கொரோனா
மட்டு. போதனா வைத்தியசாலையில் 21 பேருக்கு கொரோனா
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர்கள் 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் கே.கலாரஞ்சனி தெரிவித்தார்.
வைத்தியசாலை பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (12) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.
இது தொடர்பாக மேலும் கருத்துரைத்த வைத்தியசாலை பணிப்பாளர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்
ஊழியர்கள் 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், நோயாளிகளுக்கு வைரஸ் பரவாமலும்
நோயாளிகளிருந்து ஊழியர்களுக்குப் பரவாமலும் தடுப்பதற்கு சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளை, வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள், போதனா வைத்தியசாலைக்கு வருவதை தவிர்த்து,
அருகில் உள்ள வைத்தியசாலைகளில் தங்களுக்கான சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் கிளிக் வரும்
நோயாளிகள் தங்களது மருந்துகளை, கிராம சேவகர் ஊடாகவும் அல்லது 0653133330, 0653133331 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக பெற்றுக்கொள்ளுமாறும் அவர் அறிவித்தல் விடுத்தார்.
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறை
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறை
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன்
ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை மூன்று பேர் கொண்ட உயர் நீதிமன்ற
நீதியரசர்கள் குழாம் இன்று (12) பிறப்பித்துள்ளது.
புதியவகை கொரோனா கண்டுபிடிப்பு
புதியவகை கொரோனா கண்டுபிடிப்பு
இங்கிலாந்தில் உருவான உருமாறிய கொரோனாவில் இருந்து மாறுபட்ட புதிய வகை உருமாறிய கொரோனா, ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரேசில் நாட்டில் இருந்து விமானத்தில் டோக்கியோ விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த 4 பேரிடம் இந்த புதிய கொரோனா
உறுதி செய்யப்பட்டது. 45 வயதான ஆண், 35 வயதான பெண், 19 வயதுக்குட்பட்ட ஒரு ஆண், பெண் ஆகியோருக்கு இந்த கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் 2 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை. இருப்பினும், 4 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த
மாறுபட்ட கொரோனா குறித்து உலக சுகாதார நிறுவனத்துடனும், பிற நாடுகளுடனும் ஜப்பான் ஆலோசனை நடத்தி வருகின்றது.
தற்போதைய தடுப்பூசிகள், இந்த கொரோனாவுக்கு எதிராக செயல்படுமாஇ? என்பது இன்னும் தெளிவுப்படுத்தப்படவில்லை.
யாழ் பல்கலைக்கழக நினைவு தூபிநாம் உடைக்கவில்லை – சிங்கள இனவாதிகள் கொக்கரிப்பு
யாழ் பல்கலைக்கழக நினைவு தூபிநாம் உடைக்கவில்லை – சிங்கள இனவாதிகள் கொக்கரிப்பு
யாழ்ப்பாண பல்கலைக்கழக நினைவு தூபி உடைக்கப்பட்டது தொடர்பில் அரசாங்கத்திற்கு எந்தவித சம்பந்தமும் இல்லை. அதுதொடர்பில் அரசாங்கம் எந்தவித தீர்மானத்தையும்
மேற்கொள்ளவில்லை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்கள் மாநாட்டில் யாழ்;ப்பாண பல்கலைக்கழகத்தில் அகற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி தொடர்பாக
ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை கூறினார்.
இவ்வாறான நினைவு தூபிகள் வடக்கில் மாத்திரமின்றி நாட்டில் ஏனைய பல்லைக்கழகங்களிலும் உண்டு. இவ்வாறான நினைவு தூபிகளை உடைப்பதற்கு அரசாங்கம் அனுமதி அளித்ததா? என்ற
கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில், இந்த பல்கலைக்கழக நினைவு தூபியை உடைப்பதற்கு தீர்மானத்தை மேற்கொண்டது
பல்கலைக்கழக துணைவேந்தரும், பல்கலைக்கழக நிர்வாகமும் ஆகும். அதனை மீள அமைப்பதற்கு துணைவேந்தரும், நிர்வாகமுமே தீர்மானித்தனர் என்றும் அமைச்சர் கூறினார்.
பல்கலைக்கழங்களில் இருக்க வேண்டியதை தீர்மானிக்க வேண்டியது துணைவேந்தரும் அதன் நிர்வாகமுமே ஆகும். இதன் அடிப்படையில் அதனை மீள அமைப்பதற்கு தீர்மானித்துள்ளனர் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனை தொடர்பில் பிரதமர் தெரிவித்த கருத்து முக்கியமானது. அவர் அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் என்ற ரீதியில் பாராளுமன்றத்தில் இதுதொடர்பாக கேட்ட கேள்விக்கு பிரதமர் சமீபத்தில் பதிலளித்துள்ளார் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
திரைப்பட துறைக்கு ஈராண்டு வருடத்திற்கு பொழுதுபோக்கு வரி விலக்கு
திரைப்பட துறைக்கு ஈராண்டு வருடத்திற்கு பொழுதுபோக்கு வரி விலக்கு
கொவிட்-19 தொற்றுக்கு மத்தியில் உள்நாட்டு திரைப்படத்துறையை பாதுகாக்கும் நோக்கில் ஈராண்டு காலத்திற்கு நிவாரணம் பெற்றுத் தருமாறு திரைப்படத்துறை சார்ந்தவர்கள் முன்வைத்த
கோரிக்கைக்கு அமைய கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தீர்மானத்திற்கேற்ப திரைப்படத்துறையை ஈராண்டு
காலத்திற்கு பொழுதுபோக்கு வரியிலிருந்து விலக்களிப்பதற்கு நேற்று (2021.01.11) சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் ஒப்புதல் கிடைத்துள்ளது.
அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூரட்சி மன்ற அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி மற்றும் புத்தசாசன சமய
மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன ஆகியோரும் இத்தினத்தில் இது குறித்து ஒப்புதல் வழங்கியுள்ளனர்.
அதற்கமைய 2021-2022 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு திரைப்படத்துறையில் நாடளாவிய ரீதியில் தாக்கம் செலுத்தும் வகையில் பொழுதுபோக்கு வரியிலிருந்து விலக்களிக்கப்படும். 2023
ஆண்டு முதல் திரைப்படத்துறைக்கான பொழுதுபோக்கு வரியை 7.5 சதவீதமாக குறைப்பதற்கும் இதன்போது ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதுவரை 5 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை பல்வேறு சதவீதங்களின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சி
மன்றங்களினால் பொழுதுபோக்கு வரி அறவிடப்பட்டது. இப்புதிய ஒப்புதலுக்கமைய முழு நாட்டிற்கும் ஒரு பொழுதுபோக்கு வரி அறிமுகப்படுத்தப்படும்.
உள்ளூர் திரைப்பட கலைஞர்களின் கூட்டணி, இலங்கை திரைப்பட இயக்குநர் சங்கம், இலங்கை திரைப்பட காட்சிபடுத்துனர் சங்கம் மற்றும் இலங்கை திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்
ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி பல கலைஞர்கள் கடந்த 8ஆம் திகதி கௌரவ பிரதமரை சந்தித்து கொவிட்-19 நெருக்கடிக்கு
மத்தியில் திரைப்படத்துறை மிகவும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினர்.
அவர்களின் பிரதான கோரிக்கைகளில் பொழுதுபோக்கு வரியை நீக்குமாறும் கோரப்பட்டது. அதற்கமைய கௌரவ பிரதமரின்
தீர்மானத்திற்கேற்ப இன்றைய தினம் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
கொரனோ தாக்குதல் – அமெரிக்காவில் 1,946 மற்றும் பிரிட்டனில் 529 பேர் பலி
கொரனோ தாக்குதல் – அமெரிக்காவில் 1,946 மற்றும் பிரிட்டனில் 529 பேர் பலி
பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த 24 மணித்தியாலத்தில்
மட்டும் 1,946 பேர் பலியாகியுள்ளனர் மேலும் இதே நாளில் 213,915 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
அதே போல பிரிட்டனில் 529 பேர் பலியாகியும் 46,169 பேர் பாதிக்க படும் உள்ளனர்
நோயின் தாக்குதல் வீச்சு அதிகரிப்பை அடுத்து புதிய சட்டங்கள்
விரைவில் வரவுள்ளதாக தெரிவிக்க படுகிறது
ஈரான் கெமிக்கல் ஆயுதங்களை விற்பனைஸ் செய்கிறது – அமெரிக்கா
ஈரான் கெமிக்கல் ஆயுதங்களை விற்பனை செய்கிறது – அமெரிக்கா
ஈரான் ஈராக்கிற்கு உலகில் தடை செய்ய பட்ட கெமிக்கல்
ஆயுதங்களை வழங்கி வருவதாக அமெரிக்கா வெளியுறவு மந்திரி குற்றம் சுமத்தியுள்ளார்
ஈரான் மீது தடைகள் விதிக்க பட்டுள்ள பொழுதும் ,அது தாண்டி அது
தனது நாட்டின் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் நகர்வில் நகர்ந்து செல்கிறது
இதற்கு முட்டு கட்டை போடும் விதமாக உலக சண்டியர் இவ்விதம் வாய் சாடல் புரிந்து வருகின்றமை குறிப்பிட தக்கது








