Posted in மருத்துவம்

கொரோனா நோயாளிக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுவது எப்படி?

கொரோனா நோயாளிக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுவது எப்படி?

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுவது எவ்வாறு? என்பது குறித்து குமரி மாவட்ட காசநோய் தடுப்பு துணை இயக்குனர் டாக்டர் துரை கூறியதாவது:-

ஒரு நோயாளிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டவுடன் காய்ச்சல் ஏற்படும். சிலருக்கு இருமல், உடல்வலி போன்ற பிரச்சினைகள் இருக்கும்.

கொரோனா கிருமி நமது உடலுக்குள் சென்றவுடன்

அதை எதிர்த்து நமது உடலிலுள்ள வெள்ளை அணுக்கள் போராடும். அப்போது நமது உடல் வெற்றி பெற்றால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு விடும்.

ஆனால் தற்போது உள்ள கொரோனாவை எதிர்த்து வெள்ளை அணுக்கள் தூண்டப்படும்போது சைட்டோகெய்ன்ஸ் எனப்படும் திரவங்கள் சுரக்கும். அது எதற்காக என்றால் வைரசை

கொல்வதற்காகத்தான். ஆனால் இந்தத் திரவம் வைரஸை மட்டும் கொல்லாது. நமது நுரையீரலில் இருந்து ரத்தத்துக்கு பிராணவாயு செல்லும் இடத்தையும் சேதப்படுத்தும். இது கொரோனா பாதிப்பு

ஏற்பட்ட நபருக்கு 5-வது நாள் அல்லது 6-வது நாளில் நடக்கும். நமது உடலில் கொரோனா வைரஸ் இந்த சேதத்தை ஏற்படுத்த வில்லை. அந்த வைரசை எதிர்த்துப் போராடும் நமது உடலில் உள்ள

வெள்ளை அணுக்கள் அளவுக்கதிகமாக செயல்பட்டு சைட்டோகெய்ன்ஸ் திரவத்தை சுரப்பதினால் நுரையீரலின் மாற்றம் நடைபெறும் பகுதி சேதம் ஏற்படுகிறது.

சேதத்தை பொறுத்து சம்பந்தப்பட்ட நபருக்கு ஆக்சிஜன் அளவு குறைய தொடங்கும்.

அதனால் தான் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க டாக்டர்களால் சீராய்டு மருந்து கொடுக்கப்படுகிறது.

கொரோனா நோயாளிக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுவது எப்படி?

இந்த சீராய்டு மருந்து வெள்ளை அணுக்களால் அதிகமாக சுரக்கப்படும் சைட்டோகெய்ன்ஸ் திரவத்தை கட்டுப்படுத்துகிறது.

கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நபருக்கு காய்ச்சல் வந்தால் இரண்டு நாள் அல்லது மூன்று நாட்களில் சரியாகிவிடும்.

சம்பந்தப்பட்ட நபர் காய்ச்சல் ஏற்பட்டதும் மாத்திரைகளை மருந்து

கடைகளில் வாங்கி சாப்பிடுவார். அதன் மூலம் குணமாகிவிடும். ஐந்து அல்லது ஆறாவது நாளில் மூச்சுத்திணறல் தொடங்கும்.

அப்படி தொடங்கினாலே கொரோனா வைரஸ் நுரையீரல் பகுதியில் வலுவாக இருக்கிறது என்று அர்த்தம்.

எனவே முதலிலேயே நோயாளிகள் சிகிச்சைக்கு வந்துவிட்டால் எளிதாக அவர்களது உயிரைக் காப்பாற்றி விடலாம்.

இவ்வாறு துணை இயக்குனர் டாக்டர் துரை கூறினார்.

    Posted in சினிமா

    பாலியல் புகார் சுமத்தப்பட்டவருக்கு விருதா… வைரமுத்துக்கு எதிராக பிரபல நடிகை.

    பாலியல் புகார் சுமத்தப்பட்டவருக்கு விருதா… வைரமுத்துக்கு எதிராக பிரபல நடிகை.

    கவிஞராகவும், பாடலாசிரியராகவும் இருக்கும் வைரமுத்துக்கு ஓ.என்.வி விருது வழங்க பட்டத்துக்கு பிரபல நடிகை எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.

    பாலியல் புகார் சுமத்தப்பட்டவருக்கு விருதா… வைரமுத்துக்கு எதிராக பிரபல நடிகை
    வைரமுத்து


    மலையாள பெரும் கவிஞர்களுள் ஒருவர் ஓ.என்.வி குறுப். ஞானபீட விருது பெற்றவர். அவர் பெயரால் 2017-ம் ஆண்டு நிறுவப்பட்டது ஓ.என்.வி. இலக்கிய விருது. இதுவரை மூத்த மலையாளப்

    படைப்பாளர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்து, இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    முதல் முறையாக மலையாளி அல்லாத ஒரு இலக்கியவாதிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில் வைரமுத்து இந்த விருது வழங்கப்பட்டதுக்கு தமிழில் பூ, மரியான் படங்களில் நடித்த மலையாள நடிகை பார்வதி எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.

    வைரமுத்து – பார்வதி
    வைரமுத்து – பார்வதி

    ஓஎன்வி சார் நமது பெருமை, ஒரு கவிஞராகவும், பாடலாசிரியராகவும் அவரது பங்களிப்பு ஈடு இணையற்றது

    . பாலியல் புகார்கள் பல சுமத்தப்பட்டிருக்கும் ஒருவருக்கு அவர் பெயரில் விருது வழங்குவது பெரும் அவமரியாதை என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார் பார்வதி.

      Posted in சினிமா

      நடிகைகளின் புதிய சம்பள பட்டியல்.. யார் யார் எத்தனை கோடி வாங்குகிறார்கள் தெரியுமா?

      நடிகைகளின் புதிய சம்பள பட்டியல்.. யார் யார் எத்தனை கோடி வாங்குகிறார்கள் தெரியுமா?

      நடிகைகள் படத்துக்கு படம் சம்பளத்தை உயர்த்துகிறார்கள் என்றும் படம் வெற்றிபெறும்போது சம்பளத்தை ஏற்றும் நடிகைகள், தோல்வி அடையும்போது குறைப்பது இல்லை என்றும் பட அதிபர்கள் மத்தியில் அதிருப்தி உள்ளது.

      இந்த நிலையில் தென்னிந்திய முன்னணி கதாநாயகிகளின் புதிய சம்பள பட்டியல் இணையதளத்தில் பரவி வருகிறது. நயன்தாரா ஒரு படத்துக்கு ரூ.4 கோடி முதல் 5 கோடி வரை

      கேட்பதாக அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தற்போது நயன்தாரா கைவசம் நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன.

      அனுஷ்கா ரூ.3 கோடி வாங்குகிறார். சமந்தா ஒரு படத்துக்கு ரூ.3 கோடியே 50 லட்சம் கேட்பதாக கூறப்படுகிறது. இவர் கைவசம் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் தெலுங்கில் சாகுந்தலம் படங்கள் உள்ளன. பேமிலிமேன் 2 வெப் தொடரிலும் நடித்துள்ளார்.

      தமன்னா – திரிஷா
      தமன்னா – திரிஷா

      கீர்த்தி சுரேஷ் ரூ.3 கோடி கேட்பதாக தகவல். இவர் அண்ணாத்த, சாணிகாகிதம் மற்றும் மலையாளம், தெலுங்கில் தலா ஒரு படங்கள் கைவசம் வைத்துள்ளார். காஜல் அகர்வால் ரூ.2 கோடி

      வாங்குகிறார். இந்தியன் 2, பாரீஸ் பாரீஸ், தெலுங்கில் ஆச்சார்யா உள்பட 7 படங்கள் காஜல் அகர்வாலிடம் உள்ளன. திரிஷா ரூ.2 கோடியும், சுருதிஹாசன், தமன்னா ஆகியோர் ரூ.1 கோடியே 50 லட்சமும் கேட்பதாக கூறப்படுகிறது

        Posted in சினிமா

        லாஸ்லியா… கலாய்க்கும் நெட்டிசன்கள்

        லாஸ்லியா… கலாய்க்கும் நெட்டிசன்கள்

        பிக்பாஸ் தமிழின் 3-வது சீசன் மூலம் தமிழக திரை ரசிகர்களுக்கு அறிமுகமானவர் இலங்கையை

        சேர்ந்த லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, பிரண்ட்ஷிப் உள்ளிட்ட பெயரிடப்படாத மேலும் 4 படங்களில் நடித்து வருகிறார் நடிகை லாஸ்லியா.

        லாஸ்லியா

        சமூக வலைத்தளத்தில் இவர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இதற்கு ரசிகர்கள் அதிக லைக்குகளை குவிப்பார்கள்.

        ஆனால், தற்போது காதில் பூ வைத்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதற்கு நெட்டிசன்கள் பலரும் பல கருத்துகளை பதிவு செய்து கலாய்த்து வருகிறார்கள்.

          Posted in Uncategorized

          சென்னையில் 20 வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை

          சென்னையில் 20 வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை

          சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்திரி பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்-லைன் வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

          அரைகுறை ஆடையுடன் ஆன்-லைன் வகுப்புகளை நடத்திய ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

          இந்த நிலையில் விளையாட்டு பயிற்சியாளர் ஒருவர் இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அதிர்ச்சி அளிக்கும் புதிய புகார் எழுந்துள்ளது.

          சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல ஸ்போர்ட்ஸ் அகாடமி பயிற்சியாளர் ஒருவர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

          ஸ்போர்ட்ஸ் அகாடமியில் தடகள பயிற்சிக்காக வரும் மாணவிகளுக்கு இந்த பயிற்சியாளர் பயிற்சி அளிக்கும் போது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

          இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் பயம் காரணமாக புகார் அளிக்கவில்லை.

          இந்த நிலையில் சம்பந்தப்பட்ட பயிற்சியாளரின் பெயர் மற்றும் புகைப்படத்தோடு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சென்னையைச் சேர்ந்த ஒருவர் டுவிட்டர் பதிவு போட்டுள்ளார்.

          புகார்

          அதில், 20 பெண்களுக்கு மேல் பயிற்சியாளரால் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

          இதையடுத்து சம்பந்தப்பட்ட பயிற்சியாளர் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

            Posted in Uncategorized

            திருமலையின் வீதியோரங்களில் துள்ளி விளையாடும் மான் photo

            திருமலையின் வீதியோரங்களில் துள்ளி விளையாடும் மான் photo

            திருமலையின் அழகே, வீதியோரங்களில் துள்ளி விளையாடும் மான் கூட்டங்களே !!

            தற்போது லெக்டவுன் காரணத்தினால் திருமலையின் வீதிகளில் வாகன சத்தமும், நெருக்கடியும்

            இல்லாத காரணத்தினால் மான்கள் கூட்டம் கூட்டமாக வீதியோரங்களில் திரியும் அழகே அழகு

            மான்
            மான்
            மான்
              Posted in Uncategorized

              யாழில் மோட்டர் சைக்கிளில் இராணுவ பெண்கள் – அச்சத்தில் மக்கள்

              யாழில் மோட்டர் சைக்கிளில் இராணுவ பெண்கள் – அச்சத்தில் மக்கள்

              கொவிட் பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள சுகாதார சட்டங்களை மீறுபவர்களை கைது செய்ய, மற்றும் சுகாதார சட்டங்களை மீறுகின்றவர்களைத் தேடிப் பிடிப்பதற்கும் யாழ்ப்பாணப்

              பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினால், இராணுவ மகளிர் வீராங்கனைகளைக் கொண்ட விசேட மகளிர் மோட்டார் சைக்கிள் குழுவொன்று நிறுவப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

              யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைகளின் தளபதி – மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் மேற்பார்வையில் இந்த விசேட மகளிர் மோட்டார் சைக்கிள் குழு நிறுவப்பட்டுள்ளது.

              இந்த புதிய மோட்டார் சைக்கிள் குழுவானது, சுகாதார சட்டங்களை மீறுகின்றவர்களைத் தேடுதல், அவசரகால வீதித் தடைகளை அமைப்பதன் மூலம் சுகாதாரச் சட்டங்களுக்கு

              இணங்காதவர்களைக் கைது செய்தல் போன்ற நோக்கங்களுக்காக நிறுவப்பட்டுள்ளது என யாழ்ப்பாணம், பாதுகாப்புப் படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

              இதேவேளை, இந்த சிறப்பு மகளிர் மோட்டார் சைக்கிள் குழு இம் மாதம் 25 ஆம் திகதியிலிருந்து

              தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக யாழ்ப்பாணம், பாதுகாப்புப் படைத் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது

                Posted in இலங்கை செய்திகள்

                கடல் உணவுகளை பயமின்றி சாப்பிடுங்க – டக்கிளஸ் தாத்தா முழக்கம்

                கடல் உணவுகளை பயமின்றி சாப்பிடுங்க – டக்கிளஸ் தாத்தா முழக்கம்

                கடலுணவுகளை உட்கொள்வதற்கு மக்கள் தயங்கத் தேவையில்லை என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கப்பல் விபத்துக்குள்ளான கொழும்பு மற்றும்

                கம்பஹா மாவட்ட கடல் பிரதேசத்தில் மீன்பிடி செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

                கொழும்பு துறைமுகதிற்கு இரசாயனப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை ஏற்றிவந்த சரக்கு கப்பலில் ஏற்பட்ட வெடி விபத்தின் காரணமாக உயிரினங்களுக்கு கேடு ஏற்படுத்தக்கூடிய இரசாயனப் பதார்த்தங்கள் கடலில் கலந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகின்றது.

                இதன்காரணமாகக் கடலுணவுகளை உண்பது தொடர்பாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்ச நிலையை நீக்கும் வகையில் கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

                இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

                “இதுவரையில், குறித்த சம்பவத்தினால் கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை.

                எவ்வாறெனினும், கப்பலில் விபத்து ஏற்பட்ட நேரத்தில் இருந்து சம்மந்தப்பட்ட கடல் பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படடுள்ளது.

                அதேவேளை, கடலில் கலந்திருக்கக் கூடிய பாதார்த்தங்கள் தொடர்பாகவும், அவற்றினால் உருவாக்கக்கூடிய தாக்கங்கள் தொடர்பாகவும் கண்டறிவதற்கான ஆய்வுகளில் நாரா எனப்படும் தேசிய நீரியல்வள ஆராய்ச்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

                குறித்த ஆராய்ச்சி அறிக்கை கிடைக்கும் வரையில், சம்மந்தப்பட்ட கடல் பிரதேசத்தில் மீன்பிடிச் செயற்பாடுகளுக்கான தடையை இறுக்கமாக அமுல்ப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

                அதேவேளை, போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள காலப் பகுதியிலும் நாடளாவிய ரீதியில் கடலுணவுசார் போக்குவரத்துகளை மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

                எனவே, பேலியகொட உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள சந்தைகளில் கொழும்பு மற்றும் கம்பஹா போன்ற சந்தேகத்திற்கிடமான கடல் பிரதேசங்களைத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இருந்து

                கொண்டு வரப்படட கடலுணவுகளே விற்பனை செய்யப்படுகின்றன என்ற அடிப்படையில், அவற்றை உட்கொள்வது தொடர்பாக மக்கள் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்

                  Posted in Uncategorized

                  சிரியாவுக்குள் நுழைந்த அமெரிக்கா இராணுவமே வெளியேறு – ஈரான் காட்டம்

                  சிரியாவுக்குள் நுழைந்த அமெரிக்கா இராணுவமே வெளியேறு – ஈரான் காட்டம்

                  சிரியா நாட்டுக்குள் அழையாது நுழைந்த அமெரிக்கா இராணுவம் முற்றாக விலக வேண்டும் என ஈரான் வேண்டுதல் விடுத்துள்ளது .

                  மத்திய கிழக்கு முஸ்லீம் நாடுகளை ஆக்கிரமித்து ,அந்த மக்களை படுகொலை புரிந்து ,அவர்கள் வளம் கொழிக்கும் எண்ணெய்களை திருடி செல்கிறது அமெரிக்கா ,


                  அவ்விதமான உலக கொள்ளையர்கள் அந்த மண்ணில் இருந்து விலக வேண்டும் என ஈரான் காட்டமாக தெரிவித்துள்ளது .

                  ஈரான் இந்த கோரிக்கையை ஏற்று அமெரிக்கா படைகள் வெளியேறுமா என்பது சந்தேகமே

                    Posted in Uncategorized

                    AstraZeneca வை விட பைசர் செலுத்திய மக்கள் அதிகம் மரணம் – திடுக்கிடும் தகவல்

                    AstraZeneca வை விட பைசர் செலுத்திய மக்கள் அதிகம் மரணம் – திடுக்கிடும் தகவல்

                    உலகில் பரவி வரும் கொடிய கொரனோ நோயினை தடுக்க தடுப்பூசிகள் கண்டு பிடிக்க பட்டன ,அதில் அதிகம் விற்பனையானது AstraZeneca ஆகும் ,ஆனால் அந்த ஊசியை செலுத்தியவர்கள்

                    இரத்த உறைவால் இறந்தனர் என்ற குற்ற சாட்டுக்கள் முன் வைக்க பட்ட நிலையில் ஐரோப்பாவில் தடை செய்ய பட்டுள்ளது

                    அமெரிக்காவின் பைசர் ஊசியே அதிகம் பாதுகாப்பானது என தெரிவிக்க பட்டு செலுத்த பட்டு

                    வருகிறது ,ரசியாவை தலமாக கொண்ட நிறுவனம் ஒன்று வெளியிட்ட புள்ளி விபர தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                    கீழ் வரும் பட்டியலில் நாடுகள் தழுவிய ரீதியில் இறந்த மக்கள் கணக்கை பாருங்கள்

                    ஐயா சாமி ..அப்படி என்றால் எந்த ஊசி தாங்க பாதுகாப்பு ..? அரசியல் வியாபாரிகளே சொல்லுங்கப்பா …!

                    fatal cases per million doses for Pfizer versus 17.9 for AstraZeneca. For Germany, the numbers are 29.9 versus 6.5,
                    respectively, for the UK — 20.7 and 24.2, Norway — 164.3 and 44.6, Austria — 47.5 and 7.5, and Italy — 10.9 and 7.3.

                      Posted in இலங்கை செய்திகள்

                      காவல் துறையால் 28 வாகனங்கள் பறிமுதல்

                      காவல் துறையால் 28 வாகனங்கள் பறிமுதல்

                      இலங்கையில் நிகழ்கால கொரனோ தனிமை படுத்தல் விதிகளை மீறிய 28 வாகனங்கள் காவல்துறையால் பறிமுதல் செய்ய பட்டுள்ளன

                      அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்களை கொள்வனவு செய்யும் படியும்

                      ,வாகனங்களில் செல்ல வேண்டாம் என எச்சரிக்க பட்டிருந்தது


                      அவ்விதம் விடுக்க பட்ட எச்சரிக்கையை மீறி செயல் பட்டவர்களது வாகனங்களே இவ்விதம் பறிமுதல் செய்ய பட்டுள்ளது

                        Posted in Uncategorized

                        முகமாலையில் காற்றில் பறந்த வீட்டு கூரைகள்

                        முகமாலையில் காற்றில் பறந்த வீட்டு கூரைகள்

                        கடந்த தினம் முகமாலை பகுதியில் வீசிய கடும் காற்றினால் வீட்டு கூரைகள் காற்றில்

                        பறந்துள்ளது ,இதில் வயோதிபர் ஒருவர் படு காயமடைந்துள்ளார்

                        பாதிக்க பட்டவருக்கு உதவிகளை வழங்கும் பணிகள் முன்னெடுக்க பட்டுள்ளன

                        வீட்டு கூரைகள்

                        வீட்டு கூரைகள்
                          Posted in இலங்கை செய்திகள்

                          587 பேர் கைது – தொடரும் காவல் வேட்டை

                          587 பேர் கைது – தொடரும் காவல் வேட்டை

                          இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் 587 பேர் கடந்த 24

                          மணித்தியாலத்தில் கைது செய்ய பட்டுள்ளனர்

                          முககவசம் அணியாமை ,மற்றும் எல்லைகள் தாண்டிய குற்ற சாட்டில் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன

                            Posted in Uncategorized

                            கோட்டா ஆட்சியில் தீயில் எரிந்த இரண்டாவது கப்பல்

                            கோட்டா ஆட்சியில் தீயில் எரிந்த இரண்டாவது கப்பல்

                            தமிழ் இனக் கொலையாளி கோத்த பாயவின் ஆட்சியில் சர்வதேச சரக்கு கப்பல்கள் இரண்டு தொடராக தீ பிடித்து எரிந்துள்ளன

                            கடந்த தினம் இவ்விதம் இரண்டாவது கப்பல் தீ பற்றி எரிந்துள்ளது ,

                            இது கோட்டா நிழல் டிவிஷன் படைகளினால் கப்பலுக்கு தீ வைக்க பட்டுஎரிக்க படுகின்றனவா என்ற சந்தேகம் வலுத்துள்ளது

                            கடந்த முறையும் இந்தியா கடல் படையே தீயில் எரிந்த கப்பலை ,தீயணைக்க உதவியது ,

                            அதே போன்று இம்முறையும் இடம் பெற்றுள்ளது ,இரு சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று ஒத்து போகின்றன ,அபப்டி என்றால் சமாச்சாரம் வேறாக உள்ளது

                            கோட்டா ஆட்சி கவிழ்க்க பட்டதன் பின்னர் இந்த மர்மங்கள் வெளியாகும் எனலாம்

                              Posted in Uncategorized

                              லண்டனில் புலிக்கொடி பறக்கிறது – இலங்கை கவலை – லண்டனுடன் பேச்சு

                              லண்டனில் புலிக்கொடி பறக்கிறது – இலங்கை கவலை – லண்டனுடன் பேச்சு

                              இலங்கையில் புலிகள் அழிக்க பட்டதன் பின்னர் ,அவர்கள் செயல் பாடுகளை சர்வதேச ரீதியாக

                              தடை செய்யும் நோக்கில் சிங்கள பவுத்த பேரினவாதம் ஈடுபட்டு வருகிறது .

                              ஆனால் அதையும் கடந்து தமிழர்கள் தமது வீரம் செறிந்த விடுதலை வேட்கையை தொடர்ந்த

                              வண்ணம் உள்ளனர் ,மக்கள் எழுச்சி அவ்வாறே உள்ளது சிங்களத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

                              முள்ளி வாய்க்கால் தினத்தன்று புலிக்கொடியை தாங்கிய படி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டன

                              ர் ,தற்போது லண்டன் புலிகளை ஊக்குவிக்கிறது என இலங்கை இராணுவ அமைச்சர் பாரளுமன்றில் முழங்கியுள்ளார்

                              அப்படி என்றால் புலி கொடி பிடித்தவர்கள் இலங்கை அரசினால் கைது செய்ய படும் நிலை உருவாகியுள்ளது

                                Posted in இலங்கை செய்திகள்

                                புதியசட்ட மா அதிபர் பதவிப்பிரமாணம்

                                புதியசட்ட மா அதிபர் பதவிப்பிரமாணம்

                                புதிய சட்ட மா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி திரு.சஞ்சய் ராஜரத்னம் (Sanjay Rajaratnam) இன்று

                                (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

                                திரு.சஞ்சய ராஜரத்னம் நாட்டின் 48வது சட்ட மா அதிபராவார்.

                                சட்ட மா அதிபர் திணைக்களத்தில் 34 வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்துள்ள திரு.ராஜரத்னம், அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணியாகவும் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல், மேலதிக

                                சொலிஸிட்டர் ஜெனரல், சிரேஷ்ட மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் மற்றும் பதில் சொலிஸிட்டர் ஜெனரலாக பதவி வகித்துள்ளார்.

                                கொழும்பு புனித பீட்டர் கல்லூரி, ரோயல் கல்லூரிகளில் கல்விகற்றுள்ள அவர், லண்டனில் உள்ள

                                குயின்மேரி பல்கலைக்கழகத்தில் சட்ட முதுமானிப் பட்டத்தைப் பெற்றுள்ளார். திரு.ராஜரத்னம் இங்கிலாந்து மற்றும் வேல்சின் சொலிஸிட்டராவார்.

                                அவர் 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி சட்டத்தரணியாக பதவிப்பிரமாணம் செய்தார்

                                . சிவில் மற்றும் குற்றவியல் சட்டத்துறை குறித்து விரிவான அனுபவத்தை பெற்றுள்ள அவர், நீண்டகாலமாக உயர் நீதிமன்றங்களில் ஆஜராகியுள்ளார்.

                                இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட சில அரசாங்க நிறுவனங்களில்

                                ஆலோசகர் பதவியை வகித்துள்ள அவர், இலங்கை சட்ட ஆணைக்குழு, சட்டக் கல்விப் பேரவை ஆகியவற்றின் உறுப்பினராவார்.

                                பதவிப்பிரமாண நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர அவர்களும் பிரசன்னமாகியிருந்தார்.

                                  Posted in Uncategorized

                                  கொரோனா அலையில் இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கு காரணம்

                                  கொரோனா அலையில் இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கு காரணம்

                                  இந்தியாவில் தற்போது பரவி வரும் கொரோனா இரண்டாம் அலை பெருமளவில் நடுத்தர வயதுள்ளவர்களே அதிகளவில் பாதித்து வருகிறது. முதல் அலையின்போது இணைநோய்

                                  உள்ளவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இணை நோய் இல்லாதவர்களும் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஜனவரி மாதத்தில்

                                  கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களில் 18 சதவிகிதம் பேர் இணை நோய் இல்லாதவர்கள். மே 9ஆம் தேதி நிலவரப்படி,

                                  கொரோனாவுக்கு பலியானவர்களில் 39 சதவிகிதம் பேர் இணை நோய் இல்லாதவர்கள். அதுபோன்று, நேற்று உயிரிழந்த 298 பேரில், 78 பேர் இணை நோய் இல்லாதவர்கள்.

                                  இந்நிலையில், கடந்த நான்கைந்து மாதங்களில் கொரோனாவுக்கு இளைஞர்கள் உயிரிழப்பது அதிகரித்துள்ளது என கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் வசந்தமணி

                                  தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஜனவரி முதல் மே மாதம் வரை 31-40 வயதுள்ள 37 சதவிகித்தினர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

                                  மத்திய அரசின் தகவலின்படி, முதல் அலையின்போது 30 வயதுக்கு கீழுள்ளவர்களின் பாதிப்பு விகிதம் 31 சதவிகிதமாக இருந்தது. இந்த எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டில் 32 ஆக உயர்ந்துள்ளது.

                                  கொரோனா அலையில் இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கு காரணம்

                                  இந்நிலையில், இரண்டாம் அலைக்கு இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கான காரணம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் விளக்கமளித்துள்ளார்.

                                  இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் பால்ராம் பார்கவா கூறுகையில், “கொரோனா முதல் அலையுடன், இரண்டாம் அலையை ஒப்பீடும்போது, 40 வயதுக்கு

                                  மேற்பட்டவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், இரண்டாம் அலையில் இளைஞர்கள் பாதிக்கப்படுவது சற்று உயர்ந்துள்ளது. இளைஞர்கள் தேவையின்றி வெளியே செல்வது

                                  அதிகரித்துள்ளது. அவ்வாறு செல்லும்போது அலட்சியமாக முகக்கவசம் உள்ளிட்ட வழிமுறைகளை

                                  பின்பற்றாமல் செல்வது, மற்றும் நாட்டில் சில புதிய உருமாறிய கொரோனா வகைகளும்தான், இளைஞர்கள் மத்தியில் கொரோனா பரவ காரணம்” என்கிறார்.

                                  பெரும் முதலைகள் அரசியல் செல்வாக்குத்தான் இந்த நோய்களை உருவாக்காகி வருகின்றனர் என்ற சர்ச்சையை தற்போது எழுந்துள்ளது

                                    Posted in சினிமா

                                    அப்படி நடிக்க மாட்டேன் – கார்த்தி.

                                    கோடி கொடுத்தாலும் அப்படி நடிக்க மாட்டேன் – கார்த்தி.

                                    தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில்

                                    கடைசியாக வெளியான சுல்தான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக ஒரு நல்ல படமாக அமைந்துவிட்டது.

                                    கார்த்தி

                                    சமீபத்தில் முன்னணி நடிகர்கள் பலரும் மாஸ் காட்டுவதற்காக புகை பிடிக்கும் காட்சிகளை படங்களில் வைத்து வருகின்றனர்.

                                    பல வருடங்களாக சினிமாவில் இருந்தாலும் வெறும் 20 படங்கள் மட்டுமே நடித்திருக்கும் கார்த்தி

                                    தன்னுடைய படங்களில் பெரும்பாலும் புகைபிடிக்கும் காட்சிகளைத் தவிர்த்து வருகிறார். இது

                                    குறித்து கூறிய கார்த்தி, கோடி ரூபாய் கொடுத்தாலும் புகைப்பிடிக்கும் படி நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      மின்சாரம் இன்றி தவிக்கும் 76 ஆயிரம் மக்கள்

                                      மின்சாரம் இன்றி தவிக்கும் 76 ஆயிரம் மக்கள்

                                      இலங்கையில் நிலவி வரும் சீரற்ற கால நிலை காரணாமாக மின்சாரம் துண்டிக்க பட்டுள்ளது

                                      ,இதனால் நாடளாவிய ரீதியில் எழுபத்தி ஆறாயிரம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்

                                      செயல் இழந்த இணைப்புக்களை சீர் செய்வதில் மின்சார சபை ஈடுபட்டுள்ளது

                                        Posted in இலங்கை செய்திகள்

                                        ஒரே நாளில் 29 பேர் கொரனோவுக்கு பலி

                                        ஒரே நாளில் 29 பேர் கொரனோவுக்கு பலி

                                        இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 29 பேர் ஒரே நாளில் பலியாகியுள்ளனர்

                                        இதுவரை இந்த நோயில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 1.298 என தெரிவிக்க பட்டுள்ளது