Posted in இலங்கை செய்திகள்

யாழ்,வன்னியில் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கையில் – டக்ளஸ்

யாழ்,வன்னியில் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கையில் – டக்ளஸ்

வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களங்களினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள விவசாய நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ள அமைச்சர்

டக்ளஸ் தேவானந்தா, வடக்கு கிழக்கு பிரதேசத்தில் நீர் வேளாண்மை பண்ணைகளை அமைப்பற்கு தேவையான காணிகள் தொடர்பாகவும் பிரஸ்தாபித்துள்ளார்.

வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் சி.பி. ரத்நாயக்காவுடனான சந்திப்பின் போதே கடற்றொழில் அமைச்சரினால் குறித்த விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

வனஜீவராசிகள் அமைச்சில் நேற்று (07) இடம்பெற்ற சந்திப்பின்போது, வடக்கு மாகாணத்தில் தற்போது வனத்துறையினரினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர்

காணிகளில், யுத்தத்திற்கு முற்பட்ட காலப் பகுதியில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமையினை அமைச்சர் டக்ளஸ் டக்ளஸ் தேவானந்தா துறைசார் அமைச்சர் சி.பி. இரத்நாயக்கவிற்கு தெளிவுபடுத்தினார்.

அத்துடன், குறித்த காணிகளில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வடக்கு விவசாயிகள் ஆர்வமாக இருப்பதனையும் சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

சம்மந்தப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்பட்டு விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் பட்சத்தில், அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத் திட்டத்தினை விரைவுபடத்த முடியும் எனவும் தெரிவித்தார்.

அதேபோன்று, வடக்கு கிழக்கு பிரதேசத்தில் ஏற்றுமதித் தரத்திலான நண்டு, இறால், மீன் வளர்ப்பு பண்ணைகளை உருவாக்கி நீர் வேளாண்மையை விருத்தி செய்வதன் மூலம் மேலதிக வருமானத்தை மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதுடன் அந்நியச் செலாவணியைப் பெற்றுக்

கொள்வதற்கும் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகின்ற நிலையில், வனப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள காணிகளில் நீர் வேளாண்மை பண்ணைகளை

அமைப்பதற்கு பொருத்தமான இடங்களை விடுவித்து பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக குறித்த சந்திப்பின் போது கடற்றொழில் அமைச்சரினால் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில் அமைச்சரின் கருத்துக்களை ஏற்றுக்கொண்ட அமைச்சர் சி.பி. இரத்நாயக்க, சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி, தேவையான நடவடிக்கைகளை

மேற்கொள்வதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிகளுக்கு பூரணமான ஒத்துழைப்பினை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

    Posted in Uncategorized

    தேர்தல் சட்டங்கள், தேர்தல் முறைமையில் மறுசீரமைப்பு

    தேர்தல் சட்டங்கள், தேர்தல் முறைமையில் மறுசீரமைப்பு

    தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட குழுவுக்கு 115 முன்மொழிவுகள் மற்றும் யோசனைகள்

    கிடைக்கப்பெற்றுள்ளதாக அக்குழுவின் தலைவர் சபை முதல்வரும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருமான தினேஷ் குணவர்தன 7 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அந்தக் குழுக் கூட்டத்தின் போது தெரிவித்தார்.

    இலங்கை பாராளுமன்ற பணிப்பாளரினால் (தொடர்பாடல்) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஏற்றுக்கொள்ளப்பட்ட 07 அரசியல் கட்சிகளின் மூலம் யோசனைகள் முவைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் 15 ஆம் திகதி வரை அந்தக் கட்சிகளுக்கு யோசனைகளை சமர்ப்பிக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

    அந்த யோசனைகளை sec.pscelectionreforms2021@parliament.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது செயலாளர், பாராளுமன்ற விசேட குழு, இலங்கை பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே எனும் முகவரிக்கோ அனுப்பிவைக்க முடியும்.

    தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் மறுசீரமைப்புகளை மேகொள்வது தொடர்பில் 2021 ஜூன் 30 ஆம் திகதி வரை கிடைக்கப்பெற்ற பொதுமக்களின் யோசனைகளை சபைக்கு

    சமர்ப்பித்தல் மற்றும் அந்த யோசனைகள் பற்றிய சாராம்சம் தொடர்பில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டது.

    உத்தேச மறுசீரமைப்புகள் தொடர்பில் நிபுணர்கள் குழுவொன்றை நியமிப்பது தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்தக் குழுக் கூட்டத்தில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற

    உறுப்பினர்களான அனுரகுமார திசாநாயக்க, கபீர் ஹஷீம், ரஞ்சித் மத்தும பண்டார, எம். ஏ. சுமந்திரன், மதுர விதானகே மற்றும் சாகர காரியவசம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    Posted in இலங்கை செய்திகள்

    யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கு இன்று தடுப்பூசி

    யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கு இன்று தடுப்பூசி

    யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி இன்று (09) வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படும் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    18 வயதிற்கு மேற்பட்ட ஆபத்துநிலை உடைய கர்ப்பிணித் தாய்மார்கள், 35 வயதிற்கு மேற்பட்ட அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கும், முன் களப் பணியாளர்களாக உள்ள கர்ப்பிணித்

    தாய்மார்களுக்கும் அவர்களுடைய சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் நாளை 10ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணிமுதல் தடுப்பூசிகள் வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

    யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட்-19 தடுப்பூசியேற்றும் திட்டத்தில் 2ஆம் கட்டத்தில் முதலாவது டோஸ் . கடந்த ஜூலை மாதம் 5ஆம் திகதி திங்கட்கிழமை முதல் வழங்கப்பட்டுவருகிறது.

    இத்திட்டத்தின்கீழ் ஜூலை மாதம் 5ஆம் திகதி முதல் நாளில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 9 ஆயிரத்து 465 பேருக்கும், 6ஆம் திகதி இரண்டாம் நாளில் 9 ஆயிரத்து 457 பேருக்கும், 7ஆம் திகதி

    மூன்றாம் நாளில் 12 ஆயிரத்து 34 பேருக்கும், 8ஆம் திகதியான இன்றைய நான்காம் நாளில் 7 ஆயிரத்து 497 பேருக்கும் என மொத்தமாக 38 ஆயிரத்து 456 பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

    தடுப்பூசி அல்லது வேறுமருந்துகளிற்கு ஒவ்வாமை உடையவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும், தெல்லிப்பழை, பருத்தித்துறை, சாவகச்சேரி

    மற்றம் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலைகளிலும் நாளை சனிக்கிழமை காலை 8.00 மணிமுதல் வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

    Posted in இலங்கை செய்திகள்

    தொடரும் காவல்துறை வேட்டை – 266 பேர் கைது

    தொடரும் காவல்துறை வேட்டை – 266 பேர் கைது

    நாட்டில் நிலவி வரும் கொரனோ பாதிப்பை அடுத்து தனிமை படுத்தல் விதிகள் அறிவிக்க பட்டன

    ,மேற்படி விதிகளை மீறி செயல்பட்ட குற்ற சாட்டின் பேரில் 266 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

    இவ்வாறு கைது செய்ய பட்டவர்களில் முகக்கவசம் இன்றி உலாவியமை மற்றும் ,மாகாண எல்லைகளை தாண்டிய குற்ற சாட்டு சுமத்த பட்டுள்ளது

      Posted in மருத்துவம்

      தாம்பத்தியத்திற்கு மகிழ்ச்சிக்கான – மனநிலை

      தாம்பத்தியத்திற்கு மகிழ்ச்சிக்கான – மனநிலை

      குளிர்காலத்தில் தம்பதிகள் தாம்பத்தியத்தில் அதிக நெருக்கம் காட்டுவதும், கோடைகாலத்தில் விலகியிருப்பதும் வழக்கமாக இருக்கிறது

      . அதுபோல் மனைவியின் நிலை அறிந்து கணவரும் நடந்துகொள்வது அவசியம்.


      தம்பதிகளுக்கு இடையேயான தாம்பத்திய வாழ்க்கையில் சீதோஷ்ணநிலை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. குளிர்காலத்தில் அவர்கள் தாம்பத்தியத்தில் அதிக நெருக்கம் காட்டுவதும்,

      கோடைகாலத்தில் விலகியிருப்பதும் வழக்கமாக இருக்கிறது. அதனால் காலநிலையை புரிந்துகொண்டு தம்பதிகள் தாம்பத்திய செயல்பாடுகளை அமைத்துக்கொள்வது அவர்களுக்குள் அதிக இணக்கத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும்.

      தென்னிந்தியாவில் ஜூலை முதல் ஜனவரி வரையிலான காலகட்டம் தாம்பத்தியத்திற்கு அதிக சவுகரியமானது என்று பாலியல் நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்

      . ஜூலை மாதத்தில் பெரும்பாலும் மழை இருந்துகொண்டிருக்கும். அதனால் கணவனும், மனைவியும் மனோரீதியாக அதிக

      உற்சாகத்துடன் காணப்படுவார்கள். மேகம் சூழ்ந்திருக்கும் சூழல் மனதில் எப்போதும் மகிழ்ச்சியை நிரப்பும். அது தாம்பத்திய இன்பத்திற்கு துணைபுரிவதாக அமையும்.

      பிப்ரவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டம் உஷ்ணம் நிறைந்தது. அப்போது உடல் எளிதாக சோர்ந்துவிடும். அது தாம்பத்திய ஆர்வத்தை வெகுவாக குறைத்துவிடும். அதே நேரத்தில்

      கோடைகாலத்தில் குளிர்பிரதேசங்களை நோக்கி பயணப்படுவதும், அங்கு ஜோடியாக தங்கியிருப்பதும் தாம்பத்திய ஆர்வத்தை தூண்டும் விதத்தில் அமையும். குளிர் பிரதேசங்களில்

      உள்ள அறைகளில் இரண்டு மூன்று நாட்கள் வெளியே வராமலே இருந்தால், தம்பதிகளிடம் இணக்கமும் புரிதலும் அதிகரிக்கும்.

      அவர்கள் உடலில் புத்துணர்ச்சியும், சக்தியும் அதிகரிக்கும். அது அவர்களது தாம்பத்தியத்திலும் எதிரொலிக்கும்.

      சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப ஆண்களின் மனநிலையிலும் வித்தியாசம் காணப்படும். ஆனாலும் பெரும்பாலும் ஆண்களின் மனநிலை சீராகத்தான் இருக்கும்.

      அதே நேரத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் ஹார்மோன் சுரப்பதில் சமச்சீரற்ற நிலை தோன்றும். அதற்கு தக்கபடி அவர்களது

      தாம்பத்தியத்திற்கு மகிழ்ச்சிக்கான – மனநிலை

      மனநிலையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும். குறிப்பாக பெண்களுக்கு மாதவிலக்குக்கு முந்தைய நாட்களில் ஏற்படும் ஹார்மோன் சுரப்பு வித்தியாசங்களால்

      அவர்களுக்கு எரிச்சல் கலந்த மனநிலை தோன்றிவிடும். அதனால் அமைதியற்றவர்களாக நடந்துகொள்வார்கள்.

      அது அவர்களது தாம்பத்திய ஆர்வத்தை வெகுவாக குறைத்துவிடும்.

      சில தருணங்களில் ஹார்மோன் மாற்றங்களால் பாலியல் உறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரித்து தாம்பத்திய ஆர்வத்தை தூண்டும்.

      ஆனால் அதை செயல்படுத்தும் விதத்தில்

      அவர்களது உடல்நிலை இருக்காது. அதனாலும் தாம்பத்திய உறவில் இருந்து விலகியிருக்க விரும்புவார்கள்.

      மாதவிலக்கு நாட்கள் முடிந்த பின்பு பொதுவாகவே பெண்களுக்கு தாம்பத்திய ஆர்வம் அதிகரிக்கும்.

      அதை கணவர் புரிந்துகொண்டு, மனைவியின் மனநோக்கம் அறிந்து செயல்பட்டு ஆர்வத்தை மேம்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டால் மகிழ்ச்சி நீடிக்கும். தாம்பத்திய

      தொடர்பை சிறப்பாக அமைத்துக்கொள்ள கணவரின் மனநிலையையும், உடல்நிலையையும் அறிந்து மனைவி நடந்துகொள்ளவேண்டும்.

      அதுபோல் மனைவியின் நிலை அறிந்து கணவரும் நடந்துகொள்வது அவசியம்.

        Posted in உலக செய்திகள்

        இந்தியாவில் ஆண்டுக்கு 7 லட்சம் இறப்பு

        இந்தியாவில் ஆண்டுக்கு 7 லட்சம் இறப்பு

        உலகமெங்கும் ஆண்டுக்கு 50 லட்சத்துக்கும் அதிகமான இறப்புகளுக்கு அசாதாரணமான வெப்ப நிலை காரணம் ஆகலாம்.

        இந்தியாவில் ஆண்டுக்கு 7 லட்சம் இறப்புக்கு அசாதாரண வெப்ப நிலை காரணம் – ஆய்வு தகவல்

        பருவ நிலை மாற்றம் தொடர்பாக ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை ‘தி லேன்செட் பிளேனட்டரி ஹெல்த்’ பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர்.

        இதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-

        • உலகமெங்கும் ஆண்டுக்கு 50 லட்சத்துக்கும் அதிகமான இறப்புகளுக்கு அசாதாரணமான வெப்ப நிலை காரணம் ஆகலாம்.
        • 2000-2019 ஆண்டுகளில் எல்லா பிராந்தியங்களிலும் சுட்டெரிக்கும் வெப்ப நிலை அதிகரித்து வந்துள்ளது. இது உலக வெப்பமயமாதல், எதிர்காலத்தில் அதிகளவிலான உயிரிழப்புகளுக்கு காரணமாகும் என காட்டுகிறது.
        • இந்தியாவில் அசாதாரண குளிரானது ஆண்டுக்கு 6 லட்சத்து 55 ஆயிரத்து 400 பேர் இறக்கவும், சுட்டெரிக்கும் அதிக வெப்பம் 83 ஆயிரத்து 700 பேர் உயிரிழக்கவும் காரணம் ஆகலாம்.
        • உலகளவில் நிகழப்போகிற இறப்புகளில் 9.43 சதவீதம் அதிக குளிர் மற்றும் மிதமிஞ்சிய வெப்பத்தால் நிகழும்.
        • இது ஒவ்வொரு ஒரு லட்சம் பேரிலும் 74 கூடுதலான இறப்புகள் நேர்வதற்கு சமமானது.

        இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

          Posted in Uncategorized

          கேரளாவில் சிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு

          கேரளாவில் சிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு

          கேரளாவில் கொரோனா ஏற்படுத்திய பாதிப்புகளே இன்னும் மறையாமல் இருக்கும் நிலையில், சிகா வைரசும் தலைகாட்டி இருப்பது மாநில அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

          முதல் முறையாக கேரளாவில் சிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு

          குமரி மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள கேரளாவை சேர்ந்த 24 வயது கர்ப்பிணி ஒருவர் காய்ச்சல், தலைவலி மற்றும் உடல் முழுவதும் சிவப்பு புள்ளிகள் ஏற்பட்டு அங்குள்ள தனியார்

          ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். கடந்த மாதம் 28-ந்தேதி அனுமதிக்கப்பட்ட அவருக்கு, கடந்த 7-ந்தேதி குழந்தையும் பிறந்தது.

          தொடர்ந்து அவதிப்பட்டு வந்த அந்த பெண்ணின் ரத்த மாதிரிகள் புனேயில் உள்ள வைரஸ் ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு சிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

          இதன் மூலம் கேரளாவில் இந்த தொற்று முதன் முதலாக கண்டறியப்பட்டு இருக்கிறது. இதை மாநில சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் நேற்று தெரிவித்தார்.

          கேரளாவில் கொரோனா ஏற்படுத்திய பாதிப்புகளே இன்னும் மறையாமல் இருக்கும் நிலையில், சிகா வைரசும் தலைகாட்டி இருப்பது மாநில அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரஸ் ஏடிஸ் கொசுக்களால் பரவக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

            Posted in சினிமா

            சின்னத்திரை நடிகரை மணந்தார் மிருதுளா விஜய்

            சின்னத்திரை நடிகரை மணந்தார் மிருதுளா விஜய்

            தமிழ் மற்றும் மலையாள மொழிப் படங்களில் நடித்த பிரபலமான மிருதுளா விஜய், சின்னத்திரை நடிகரை இன்று திருமணம் செய்து கொண்டார்.

            சின்னத்திரை நடிகரை மணந்தார் மிருதுளா விஜய்
            கணவருடன் மிருதுளா விஜய்


            பிரபல மலையாள நடிகை மிருதுளா விஜய். இவர் தமிழில், நூறாம் நாள், ஜெனிபர் கருப்பையா, கடன் அன்பை முறிக்கும் உள்பட சில படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

            மலையாளத்தில் இவர் நடித்த பிரிட்டீஷ் பங்களா, செலிபிரேசன் உள்ளிட்ட படங்கள் வரவேற்பை பெற்றன. தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் இசை ஆல்பங்களிலும் இவர் நடித்து இருக்கிறார்.

            இவருக்கும் மலையாள டிவி நடிகர் யுவகிருஷ்ணா என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நிச்சயமானது. இந்நிலையில் இவர்கள் திருமணம் திருவனந்தபுரத்தில் இன்று நடந்தது.

            மிருதுளா விஜய்

            கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றி நடந்த இவர்கள் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர்.

              Posted in சினிமா

              அஜித் பாணியில் அசத்தும் பிரபல நடிகை

              அஜித் பாணியில் அசத்தும் பிரபல நடிகை

              முன்னணி நடிகராக இருக்கும் அஜித் பாணியில் பிரபல நடிகை ஒருவர் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்.

              அஜித் பாணியில் அசத்தும் பிரபல நடிகை… குவியும் வாழ்த்துகள்
              அஜித் – நிவேதா பெத்துராஜ்


              ’ஒரு நாள் கூத்து’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ் அதன்பிறகு ’டிக் டிக் டிக்’ ’சங்கத்தமிழன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது இவர் நடித்துள்ள ’பொன்மாணிக்கவேல்’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

              நிவேதா
              நிவேதா பெத்துராஜ்

              கார் ஓட்டுவதில் அதிக விருப்பம் கொண்ட நிவேதா, தனது சமூக வலைத்தளத்தில் கார் ஓட்டியது குறித்த புகைப்படங்கள், வீடியோக்களை ஏற்கனவே வெளியிட்டு இருந்தார்.

              நிவேதா

              இந்த நிலையில் தற்போது ஸ்போர்ட்ஸ் கார் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டு வரும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

              இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது. மேலும் பலர் அஜித் பாணியில் நிவேதா கார் ரேஸில் இறங்கிவிட்டார் என்று பாராட்டி வருகின்றனர்.

                Posted in சினிமா

                பாட்ஷா ஸ்டைலில் ரஜினி… வைரலாகும் புகைப்படம்

                பாட்ஷா ஸ்டைலில் ரஜினி… வைரலாகும் புகைப்படம்

                தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் ரஜினியின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

                பாட்ஷா ஸ்டைலில் ரஜினி… வைரலாகும் புகைப்படம்
                ரஜினி


                தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படங்களில் ஒன்று பாட்ஷா. இந்த படத்தில் வில்லன்களுடன் அமர்ந்து பேசும்போது ரஜினியின் பக்கத்தில் நாய் ஒன்று இருக்கும்.

                ரஜினி

                அதேபோல் அமெரிக்கா சென்றுள்ள ரஜினிகாந்த் ரசிகர் ஒருவரை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது ரஜினியின்

                பக்கத்தில் நாய் ஒன்று உள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் அப்படியே பாட்ஷா படக்காட்சியை பார்ப்பது போலவே இருப்பதாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

                  Posted in Uncategorized

                  இலங்கையில் கொரனோவுக்கு 40 பேர் மரணம்

                  இலங்கையில் கொரனோவுக்கு 40 பேர் மரணம்

                  இலங்கையில் கடந்த தினம் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் நாற்பது பேர் மரணமாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

                  மேலும் நாட்டில் அதிகரித்து செல்லும் நோயினை தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள

                  பட்ட பொழுதும் ,மேற்படி மரணங்கள் நிகழ்ந்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                    Posted in இலங்கை செய்திகள்

                    வீசா இன்றி நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு-500 டொலர் தண்டம்

                    வீசா இன்றி நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு-500 டொலர் தண்டம்

                    வீசா இன்றி நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களிடம் தங்கியிருக்கும் காலத்துக்கான வீசா கட்டணத்துக்கு மேலதிகமாக 500 அமெரிக்க டொலரை அறவிடுவது உள்ளிட்ட வீசா வழங்கும்

                    நடைமுறைகளை மறுசீரமைக்கும் குடிவருவோர் குடியகல்வோர் ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்தின் அனுமதிக்காக சமர்ப்பிக்க நேற்று முன்தினம் (06) கூடிய பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

                    இலங்கை பாராளுமன்ற பணிப்பாளரினால் (தொடர்பாடல்) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

                    இதற்கமைய குடிவருவோர் குடியகல்வோர் ஒழுங்குவிதிகளுக்காக -2019 யூன் 03ஆம் திகதிய 2126/13 ஆம் இலக்க அதிவேட வர்த்தமானி பத்திரிகை யூலை 08ஆம் திகதி அனுமதிக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

                    உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் கூடிய இக்குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான

                    டிரான் அலஸ் மற்றும் மேஜர் பிரதீப் உந்துகொட ஆகியோர் கலந்துகொண்டிருந்ததுடன் அரசாங்க அதிகாரிகள் ஒன்லைன் முறையின் கீழ் கலந்துகொண்டனர்.

                    சுற்றுலா வீசா கட்டணத்தை அறவிடும்போது தற்பொழுது கடைப்பிடிக்கப்படும் குழப்பான முறைக்குப் பதிலாக ஒரே கட்டண முறையை அறிமுகப்படுத்துவது, சுற்றுலா வீசாவுக்காக

                    வழங்கப்படும் காலத்தை மூன்று மாதங்களிலிருந்து 09 மாதங்களாக மாற்றுவது உள்ளிட்டவை இதன்மூலம் மேற்கொள்ளப்படும் என குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் திரு.யூ.வீ.சரத் ரூபசிங்ஹ தெரிவித்தார்.

                    அத்துடன் தற்பொழுது இலங்கைப் பெறுமதியில் அறவிடப்படும் வீசா கட்டணம் அமெரிக்க டொலரில் அறவிடப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

                    இதனைவிட, 2018ஆம் ஆண்டுக்கான ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் நிதி அறிக்கை என்பனவும் இங்கு ஆராயப்பட்டு அனுமதிக்கப்பட்டது.

                      Posted in இலங்கை செய்திகள்

                      ஜே.வி.பியினர் ஆர்ப்பாட்டம் – நால்வர் கைது

                      ஜே.வி.பியினர் ஆர்ப்பாட்டம் – நால்வர் கைது

                      சேர் ஜோன் கொத்தலாவ தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்தை உடன் மீள

                      பெறுமாறு வலியுறுத்தி அட்டன் மணிக்கூட்டு கோபுரச்சந்திக்கு முன்பாக ஜே.வி.பியினர் இன்று (08) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

                      இதன்போது அக்கட்சியின் அரசியல் செயற்பாட்டாளர்கள் நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

                      கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என அரச தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

                      இந்நிலையில் போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு வந்த பொலிஸார், இவ்விடயத்தை சுட்டிக்காட்டி அதனை நிறுத்துமாறு வலியுறுத்தினர்.

                      எனினும், போராட்டக்காரர்களால் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டது. இதனால் பொலிஸாருக்கும், அரசியல் செயற்பாட்டாளர்களுக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

                      இதனையடுத்து நால்வர் அட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நால்வரையும் ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

                      Posted in Uncategorized

                      நிதி அமைச்சர் பசில் – பாராளுமன்றில் சத்திய பிரமாணம்

                      நிதி அமைச்சர் பசில் – பாராளுமன்றில் சத்திய பிரமாணம்

                      இலங்கையில் ஆளும் மகிந்த ,கோட்டா சகோதர்கள் ஆட்சியில் தற்பொழுது நிதி அமைச்சர் ,பசில் நாடாளுமன்ற உறுப்பினராக சத்திய பிரமாணம் செய்துள்ளார்

                      அலிபாவாவும் நாற்பது திருடர்களும் இணைந்து நாட்டை கொள்ளை இடுகின்றனர் ,ஆட்சி கவிழ்ப்பின் பின்னரே இந்த கொள்ளைகள் அம்பலமாகும் என்பது குறிப்பிட தக்கது

                        Posted in இலங்கை செய்திகள்

                        12 ஆம் திகதி முதல் அரச பாடசாலை ஆசிரியர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி

                        12 ஆம் திகதி முதல் அரச பாடசாலை ஆசிரியர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி

                        அரசாங்க பாடசாலை ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்விசாரா ஊழியர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

                        கொழும்பில் இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதொடர்பாக கல்வி அமைச்சர், மேலும் தெரிவிக்கையில் வயது வேறுபாடுயின்றி கொவிட் 19 தடுப்பூசி வழங்கப்படும் என்று கூறினார்.

                        ஜனாதிபதியுடன் சமீபத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது


                        அதற்கமைய, நாட்டிலுள்ள 10, 155 பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசார் ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றப்படுவதற்கான திட்டம் வகுக்கப்பட்டதாவும் அமைச்சர் கூறினார்.

                        மாகாண ஆளுநர்கள், மாகாண கல்விப் பணிப்பாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் இந்த விடயம் குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது தடுப்பூசி

                        ஏற்றும் மத்திய நிலையங்களுக்கு ஆசிரியர்களும் அதிபர்களும் கல்விசாரா ஊழியர்களும் வருகை தருவதற்குரிய திகதியும் நேரமும் முன்கூட்டியே அறிவிக்கப்படும் பாடசாலைகளை விரைவாக

                        ஆரம்பிக்கும் வகையில் முதற்கட்டமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மேலும் தெரிவித்தார்.

                          Posted in Uncategorized

                          15 வயது சிறுமி கூட்டு கற்பழிப்பு-கடற்படையின் சத்திர சிகிச்சை நிபுணர் சேவையிலிருந்து இடைநிறுத்தம் .

                          15 வயது சிறுமி கூட்டு கற்பழிப்பு-கடற்படையின் சத்திர சிகிச்சை நிபுணர் சேவையிலிருந்து இடைநிறுத்தம் .

                          15 வயது சிறுமியை பாலியல் நடவடிக்கைளுக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள கடற்படையின் சத்திர சிகிச்சை நிபுணர் சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டமை தொடர்பான ஊடக அறிக்கை

                          15வயது சிறுமியை பாலியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள கடற்படையின் சத்திர சிகிச்சை நிபுணர், பாதுகாப்பு அமைச்சின்

                          பணிப்புரைக்கமைய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

                          இந்த சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு வழி வகுக்கும் வகையில் மேற்படி சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட கடற்படையின் சத்திர

                          சிகிச்சை நிபுணரின் சேவையை பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைய இலங்கை கடற்படை உடனடியாக அமுலுக்கு வரும் வைகயில் இடைநிறுத்தம் செய்துள்ளது.

                          மேலும், பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய இந்த சம்பவம் குறித்து தனித்தனி உள்ளக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கடற்படைத் தளபதி, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

                          குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேகநபர் தொடர்பான மறுஅறிவித்தல் வரும் வரை குறித்த நபர் இலங்கை கடற்படையின்

                          எந்தவொரு கடற்படை தளத்திற்குளோ அதுசார்ந்த நிறுவனங்களுக்குள்ளோ பிரவேசிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

                            Posted in Uncategorized

                            அகோரா வெயில் – 107 பேர் மரணம்

                            அகோரா வெயில் – 107 பேர் மரணம்

                            அமெரிக்காவில் நிலவி வரும் கொடிய வெப்பம் காரணாமாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 107 பேர் மரணமாகியுள்ளனர்

                            ,இந்த வெப்பத்தின் அளவு ஐம்பது செல்சியஸ் ஆக உள்ளது ,மனிதர்கள் மட்டுமல்ல கால் நடைகள் ,விலங்குகளும் பலியாகியுள்ளன

                            மாறிவரும் கால நிலை சீற்றத்தின் காரணமாக இந்த வெப்பம் அதிகரித்து செல்கிறது ,இதனால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுளள்து

                              Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

                              அமெரிக்கா விமானத்தை துரத்திய ரசிய விமானம் – வானில் நடந்த பயங்கரம்

                              அமெரிக்கா விமானத்தை துரத்திய ரசிய விமானம் – வானில் நடந்த பயங்கரம்

                              அமெரிக்கா போயிங் ரக இராணுவ விமானத்தை கருங்கடல் பகுதியில் வைத்து ரசியாவின் Russian Sukhoi Su-30 fighter jets விமானம் வழிமறித்து துரதியுள்ளது

                              இதனால் வானில் பலத்த பர பரப்பு ஏற்பட்டுள்ளது

                              ரசியாவின் விமானங்கள் இவ்விதம் தொடராக செயல் பட்டு வருகின்மை நாடுகளுக்கு இடையில் பெரும் முறுகளை ஏற்படுத்தியுள்ள்து

                                Posted in Uncategorized

                                கடும் மோதல் – சவுதி ஆதரவு கிளர்ச்சி படைகள் 80 பேர் சுட்டு கொலை

                                கடும் மோதல் – சவுதி ஆதரவு கிளர்ச்சி படைகள் 80 பேர் சுட்டு கொலை

                                ஏமன் இராணுவம் நடத்திய அகோர தாக்குதலில் சவுதிய ஆதரவு படைகள் என்பது பேர் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளனர்

                                ஈரான் ஆதரவுடன் இயங்கி வரும் ஏமன் கிளர்ச்சி படைகளிற்கும் சவுதியை ஆதரவு படைகளிற்கும் இடையில் உக்கிர மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

                                  Posted in Uncategorized

                                  அமெரிக்கா இராணுவ தளம் மீது வீழ்ந்து வெடித்த 30 ஏவுகணைகள்

                                  அமெரிக்கா இராணுவ தளம் மீது வீழ்ந்து வெடித்த 30 ஏவுகணைகள்

                                  ஈராக்கில் உள்ள Ain al Asad இராணுவ தளம் மீது முப்பது ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளது ,இதில் அமெரிக்கா படைகளிற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது ,

                                  எனினும் அமெரிக்கா இராணுவம் தெரிவித்துள்ள தகவலின் அடைப்படையில் மூவர் காயமடைந்துள்ளனர் எனவும் ,முகாம் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                                  சுயாதீன தகவலோ நூறுக்கு மேற்பட்ட அமெரிக்கா படைகள் காயம் என தெரிவிக்கிறது

                                  கடந்த நான்கு வாரமாக தொடராக ஏவுகணை தாக்குதல் , இந்த முகமா மீது நடத்த பட்டு வந்த

                                  நிலையில் ,இம்முறை ஒரே தடவையில் முப்பது ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளமை குறிப்பிட தக்கது