Posted in Uncategorized

1,000 ரூபாய் சம்பள விவகாரம் – கோட்டா காதில் ஒதால்

1,000 ரூபாய் சம்பள விவகாரம் – கோட்டா காதில் ஒதால்

1,000 ரூபாய் சம்பளத்தை முழுமையாக அனுபவிக்க முடியாத அவல நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் இருப்பதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்த குமார் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (19) இடம்பெற்ற ஆளும் கட்சியின் குழு கூட்டத்தில் இந்த விடயத்தை எடுத்து கூறியதாக அவர் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.

எனவே பெருந்தோட்ட கம்பனிகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் இதற்காக தொழில் அமைச்சும், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சும் தலையீடு செய்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் எடுத்து கூறியதாகவும் அவர் கூறினார்.

அதேபோல் விலைவாசிகளின் அதிகரிப்பால் பெருந்தோட்ட மக்கள் பல சிரமங்களை எதிர்கொள்வது தொடர்பிலும் ஜனாதிபதியிடம் எடுத்து கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சேதன பசளை பாவனை குறித்து மக்களுக்கு பூரண தெளிவூட்டல் இல்லை எனவும் எனவே அது குறித்து மக்களை மேலும் தெளிவூட்டுவது அவசியம் எனவும் ஜனாதிபதியிடம் எடுத்து கூறியுள்ளதாகவும் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் வெளிவாரி பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் பட்டம் பெற்றும் அவை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால்

அங்கிகரிக்கப்பட்டும் வெளிவாரி பட்டதாரிகள் அரச தொழில் வாய்ப்புகளில் புறக்கணிக்கப்படுவதையும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

    Posted in Uncategorized

    பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர் கைது

    பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர் கைது

    உஸ்பகிஸ்தான் நாட்டு பெண் ஒருவரை இந்நாட்டிற்கு அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    வௌ்ளவத்த பகுதியை சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

    வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட குறித்த பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

    குறித்த பெண்ணுக்கு 36 வயது எனவும் இவ்வாறு கைது செய்யப்பட்டவரின் மனைவியும் உஸ்பகிஸ்தான் நாட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது

      Posted in இலங்கை செய்திகள்

      வியட்நாமின் புதிய தூதுவர் வெளிநாட்டு அமைச்சருடன் சந்திப்பு

      வியட்நாமின் புதிய தூதுவர் வெளிநாட்டு அமைச்சருடன் சந்திப்பு

      புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ஹோ தி தன் ட்ரக் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தனவை 2021 ஜூலை 15ஆந் திகதி சந்தித்தார்.

      இது தொடர்பாக வெளிநாட்டு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

      ஊடக வெளியீடு

      வியட்நாமின் புதிய தூதுவர் வெளிநாட்டு அமைச்சருடன் சந்திப்பு

      புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ஹோ தி தன் ட்ரக் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தனவை 2021 ஜூலை 15ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சில் சந்தித்தார்.

      இலங்கைக்கான வியட்நாம் தூதுவரை வரவேற்ற அமைச்சர் குணவர்தன, அனைத்து பன்முக அரங்குகளிலும் இலங்கைக்கு தொடர்ச்சியாக வியட்நாம் நல்கிய ஆதரவுகளுக்காக நன்றிகளைத் தெரிவித்தார். குறிப்பாக விவசாயம், மீன்பிடி மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இலங்கை –

      வியட்நாம் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு பங்களிக்கும் திட்டங்களுக்கு அமைச்சர் அவதானம் செலுத்தினார். அரசியல், பொருளாதாரம், முதலீடு, வர்த்தகம், விவசாயம்,

      தேசிய பாதுகாப்பு, விஞ்ஞானம் – தொழில்நுட்பம், கலாச்சாரம் மற்றும் கல்வி ஆகியவற்றில் காணப்படுகின்ற பொறிமுறைகளின் மூலம் ஒத்துழைப்பை உயர்த்துவதற்கும்

      மேம்படுத்துவதற்குமான அதிகரித்த ஆற்றல் இரு நாடுகளுக்கும் இருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

      இலங்கை – வியட்நாம் உறவுகள் தாபிக்கப்பட்டு 51 ஆண்டுகள் நிறைவடையும் விழா இந்த ஆண்டு அனுஷ்டிக்கப்படவிருக்கும் முக்கியமான மைல்கல்லை கவனத்தில் கொண்ட தூதுவர் ட்ரக்,

      நிறுவப்பட்ட பாராளுமன்ற நட்புறவுக் குழுவின் மூலம் அரசியல் உறவுகளை புத்துயிர் பெறச் செய்வதன் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தினார். இரு நாடுகளுக்குமிடையேயான

      நட்புறவின் வலுவான பிணைப்புக்களையும் வெளிநாட்டு அமைச்சர் குணவர்தன வலியுறுத்தினார். அணிசேராக் கொள்கையின் அடிப்படையில் வியட்நாமுக்கு இலங்கை

      அளித்துள்ள ஆதரவுகள் குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர், சாத்தியமான பகுதிகளில் இலங்கை மற்றும் வியட்நாமுக்கு இடையில் சிறந்த ஒத்துழைப்பை உருவாக்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டார்.

      ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஆகியோர் 2021 ஜூன் 14ஆந் திகதி தொலைபேசி வாயிலான உரையாடலொன்றை வெற்றிகரமாக

      முன்னெடுத்தனர். இந்த ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக பயனுள்ள ஒத்துழைப்புக்கு வழிவகுக்கும் இலங்கைக்கும் வியட்நாமுக்குமிடையிலான பாரம்பரிய நட்பு குறித்து இரு தலைவர்களும் இந்த உரையாடலின் போது கருத்து தெரிவித்தனர்.

      2020ஆம் ஆண்டில் இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதன் மூலம், பல நூற்றாண்டுகள் பழமையான வியட்நாம் இலங்கை உறவுகள் முக்கியமானதொரு மைல்கல்லைக் குறித்து நிற்கின்றது. இந்த ஆழமாக வேரூன்றிய

      நட்புறவானது, கலாச்சாரம், வரலாற்று ஒற்றுமைகள் மற்றும் மிக முக்கியமாக, இரு நாடுகளினதும் மக்களிடையேயான வலுவானதொரு பிணைப்பு நூலாக பௌத்த மதத்தின் பொதுவான பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டது. 17ஆம் நூற்றாண்டில் தென் வியட்நாமில்

      பௌத்தம் அறிமுகப்படுத்தப்பட்டதாக வரலாற்றுப் பதிவுகள் எமக்குக் கூறுகின்ற அதே வேளை, தென் வியட்நாமில் தேரவாத பௌத்த மதத்தை ஸ்தாபிப்பதற்காக இலங்கை மதகுருமார்கள் பங்களிப்புச் செய்ததாகவும் நம்பப்படுகின்றது.

      2013 நவம்பர் 23ஆந் திகதி கொழும்பு பொது நூலகத்தில் மறைந்த ஜனாதிபதி ஹோ சி மின் அவர்களின் மார்பிளவு சிலை இலங்கையினால் திறந்து வைக்கப்பட்டது. மேலும், மறைந்த

      ஜனாதிபதி ஹோ சி மின் அவர்களின் 124வது பிறந்த தினத்தை நினைவுகூரும் வகையில், 2014ஆம் ஆண்டில் நினைவு முத்திரையொன்றும் வெளியிடப்பட்டது. மேற்கண்ட திட்டங்கள்

      வியட்நாமுடனான இலங்கையின் நட்புறவை விளக்குவதுடன், ஒரு காலத்தில் தேசிய இயக்கத்தின் போது வியட்நாமுடனான இலங்கையின் ஒத்துழைப்பின் ஒரு முக்கியமான மைல்கல்லையும் குறித்து நிற்கின்றது.

      வெளிநாட்டு அமைச்சு மற்றும் கொழும்பில் உள்ள வியட்நாம் தூதரகம் ஆகியவற்றின் அதிகாரிகள் இந்த சந்திப்பில் இணைந்திருந்தனர்.

      வெளிநாட்டு அமைச்சு

        Posted in இலங்கை செய்திகள்

        சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

        சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

        கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் கிராம உத்தியோகத்தர் பிரிவொன்றும்

        பிரதேசமொன்றும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலைத்

        தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிராதானியும் இராணுவ தளபதியுமாக ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

          Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

          பிரபலங்கள் கைபேசியை கைக் புரியும் இஸ்ரேல் இராணுவம்

          பிரபலங்கள் கைபேசியை கைக் புரியும் இஸ்ரேல் இராணுவம்

          உலக நாடுகளில் மிக முக்கிய பிரபலங்களது கைப்பேசிக்குள் நுழைந்து அவர்களுக்கு தெரியாது அவர்களது இரகசியங்களை திருடி செல்வதாக இஸ்ரேல் மீது குற்றம் சுமத்த பட்டுள்ளது

          இவர்களது பிரதான இலக்கு ஊடக நபர்கள்மீது நடத்த பட்டுள்ளது

          இவர்க்ளுடன் தொடர்பில் இருந்த முக்கிய பிரபலங்களும் இதில் சிக்கியுள்ளதான ஆதார குற்ற சட்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

          எனினும் மேற்படி குற்ற சாட்டை இஸ்ரேல் மறுத்து வருகின்றமை குறிப்பிட தக்கது

            Posted in Uncategorized

            AstraZeneca செலுத்திய பெண்ணுக்கு இரத்தஉறைதல் – 77 நாளின் பின் உயிர் தப்பிய அதிசயம்

            AstraZeneca செலுத்திய பெண்ணுக்கு இரத்தஉறைதல் – 77 நாளின் பின் உயிர் தப்பிய அதிசயம்

            அவுஸ்ரேலியாவில் மூதாட்டி ஒருவருக்கு அஷ்டா செனிக்கா ஊசி செலுத்த பட்டது ,அதில் அவரது

            இரத்தம் உறைந்துள்ளது ,இதனால பெரிதும் அவதியுற்ற அவர் 77 நாட்கள் தீவிர சிகிச்சையின் பின்னர் மீள் உயிர் தப்பி வந்துள்ளார்

            ஆனாலும் அவரது கைகளில் இப்பொழுதும் இரத்த கண்டல்கள் உள்ளதை காணமுடிகிறது

            படங்களை பாருங்கள்

            AstraZeneca
              Posted in சினிமா

              வைரலாகும் அமலாபாலின் கவர்ச்சி புகைப்படங்கள்

              வைரலாகும் அமலாபாலின் கவர்ச்சி புகைப்படங்கள்

              தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான அமலாபாலின் புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

              வைரலாகும் அமலாபாலின் கவர்ச்சி புகைப்படங்கள்
              அமலாபால்


              தமிழில் மைனா, வேட்டை, தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் அமலாபால். தெலுங்கு,

              மலையாளம், இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

              இந்நிலையில், தற்போது புதிய கவர்ச்சி புகைப்படங்களை அமலாபால் பதிவு செய்திருக்கிறார்.

              இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து லைக்குகளை குவித்து வருகிறது. மேலும் சமூக வலைத்தளத்திலும் வைரலாகி வருகிறது.

                Posted in சினிமா

                கதாநாயகியாக நடிக்கும் பத்மபிரியா

                கதாநாயகியாக நடிக்கும் பத்மபிரியா

                தவமாய் தவமிருந்து, சத்தம் போடாதே, மிருகம், பொக்கிஷம் படங்களில் நடித்த பத்மபிரியா மீண்டும் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.

                மீண்டும் கதாநாயகியாக நடிக்கும் பத்மபிரியா
                பத்மபிரியா


                சேரன் இயக்கிய தவமாய் தவமிருந்து படத்தில் அறிமுகமானவர் பத்மபிரியா. இப்படம் படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர், சத்தம் போடாதே, மிருகம், பொக்கிஷம், உள்ளிட்ட படங்களில்

                நடித்தார். அதேசமயம் மலையாள திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் வந்தார். 2014 ஆம் ஆண்டு ஜாஸ்மின் ஷா என்பவரை திருமணம் செய்துகொண்டு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.

                பத்மபிரியா

                தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தில் பத்மபிரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் பத்மபிரியா, மலையாளத்தில்

                பிஜுமேனன் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும் பல படங்களில் நடிக்க பத்மபிரியா ஆர்வம் காண்பித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

                  Posted in சினிமா

                  போட்டோ ஷூட் எடுக்கும்போது தவறி விழுந்த ரித்திகா சிங்

                  போட்டோ ஷூட் எடுக்கும்போது தவறி விழுந்த ரித்திகா சிங்

                  தமிழில் இறுதிச்சுற்று, ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரித்திகா சிங், போட்டோஷூட் எடுக்கும் போது தவறி விழுந்து இருக்கிறார்.

                  போட்டோ ஷூட் எடுக்கும்போது தவறி விழுந்த ரித்திகா சிங்… வைரலாகும் வீடியோ
                  ரித்திகா சிங்


                  சுதா கொங்கரா இயக்கத்தில் குத்துச் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் இறுதிச்சுற்று. இந்த படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை ரித்திகா சிங், தேசிய

                  குத்துச் சண்டை வீராங்கனை. இறுதிச்சுற்று பெரிய வெற்றி பெற்றதால் குத்துச் சண்டையை மூட்டை விட்டு முழு நேர நடிகை ஆனார்.

                  இறுதிச்சுற்று படத்திற்குப் பிறகு தமிழில் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே படங்களில் நடித்தார். இவர் நடித்து முடித்துள்ள வணங்காமுடி படம் இன்னும் வெளிவரவில்லை.

                  இந்நிலையில், ரித்திகா சிங் குளம் அருகே போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த குளத்தில் தவறி விழுந்து இருக்கிறார்.

                  ரித்திகா சிங்

                  அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோவை ரித்திகா சிங், தனது சமூக வலைத்தள

                  பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

                    Posted in Uncategorized

                    ஆபாசப் படங்களைத் தயாரித்த- ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது

                    ஆபாசப் படங்களைத் தயாரித்த- ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது

                    ஆபாசப் படங்களைத் தயாரித்த ராஜ் குந்த்ரா அவற்றை மொபைல் செயலி மூலம் விநியோகம் செய்ததாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.

                    நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கைது
                    ராஜ் குந்த்ரா

                    பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்த வழக்கில் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

                    இந்த விஷயத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும், இதில் ராஜ்

                    குந்த்ராவுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் உள்ளது எனவும் தொடர்ந்து விசாரணை நடப்பதாகவும் மும்பை போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

                      Posted in Uncategorized

                      சசிகலாவால் -அதிமுகவை வீழ்த்த முடியாது – எடப்பாடி

                      சசிகலாவால் -அதிமுகவை வீழ்த்த முடியாது – எடப்பாடி

                      சேலம் மாவட்டம் எடப்பாடியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

                      நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை தி.மு.க. ஏமாற்றி விட்டது. வாக்குகளைப் பெறுவதற்காக பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தி.மு.க. மக்களை ஏமாற்றி விட்டது.

                      சசிகலா எத்தனை பொய்யான தகவல்களைப் பரப்பினாலும் அ.தி.மு.க.வை வீழ்த்த முடியாது. சசிகலா அ.தி.மு.க.விலிருந்த காலகட்டத்திலும் தேர்தலில் அ.தி.மு.க .தோல்வியைச் சந்தித்துள்ளது.

                      கொரோனா தடுப்பூசிகளை நாங்கள் வேண்டுமென்றே வீணடிக்கவில்லை. ஆரம்பக் காலத்தில் விழிப்புணர்வு இல்லாமல் கொரோனா தடுப்பூசி வீணடிக்கப்பட்டது என தெரிவித்தார்.

                        Posted in Uncategorized

                        விநாயகர் கோவில் கட்டிய கிறிஸ்தவ தொழிலதிபர்

                        விநாயகர் கோவில் கட்டிய கிறிஸ்தவ தொழிலதிபர்

                        தனது தந்தை, தாயின் நினைவாக ஒரு விநாயகர் கோவிலை கட்டித் தந்த கிறிஸ்தவ தொழிலதிபரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

                        ரூ.2 கோடி மதிப்பில் சித்தி விநாயகர் கோவில் கட்டிய கிறிஸ்தவ தொழிலதிபர்
                        சித்தி விநாயகர் கோவில்

                        உடுப்பியில் ஒரு கிறிஸ்தவ தொழில் அதிபர் ரூ.2 கோடி செலவில் விநாயகர் கோவிலை கட்டி அந்த கோவிலை இந்து பக்தர்களுக்கு அர்ப்பணித்து சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டி உள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:

                        உடுப்பி மாவட்டம் சிருவா பகுதியை சேர்ந்தவர் கேபிரியல் நாசரேத் (77). இவர் தொழிலதிபர் ஆவார்.

                        கேபிரியலின் தந்தை பேபியன் செபஸ்டின் உயிரிழப்பதற்கு முன் கேபிரியலுக்கு 15 சென்ட் நிலத்தைக் கொடுத்து இருந்தார். பின்னர் உடல்நலக்குறைவால் செபஸ்டினும், அவரது மனைவி சபீனாவும் உயிரிழந்தனர்.

                        இந்நிலையில், தனது தந்தை, தாயின் நினைவாக 15 சென்ட் நிலத்தில் ஒரு விநாயகர் கோவிலை கட்ட கேபிரியல் முடிவு செய்தார். அதன்படி ரூ.2 கோடி செலவில் சித்தி விநாயகர் கோவிலையும், அதன் அருகே அர்ச்சகர் தங்க ஒரு வீட்டையும் கேபிரியல் கட்டி முடித்தார்.

                        கேபிரியல் நாசரேத்

                        அந்த கோவிலுக்குள் 36 அங்குலம் விநாயகர் சிலை உள்ளது. பின்னர் அந்தக் கோவிலை இந்து பக்தர்களுக்கு அவர் அர்ப்பணித்தார்.

                        இந்தக் கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பு கேபிரியலின் நண்பர்களான சதீஷ் ஷெட்டி, ரத்னாகர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

                        இதுதொடர்பாக கேபிரியல் கூறுகையில், நான் கடந்த 1959-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. படித்து முடித்ததும் வேலைக்காக மும்பைக்குச் சென்றேன். மும்பையில் உள்ள பிரபாதேவி கோவிலுக்கு

                        தினமும் செல்வேன். அப்போது எனக்கு சொந்த செலவில் விநாயகர் கோவில் கட்ட வேண்டும் என்று ஆசை வந்தது. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு சிருவாவுக்கு வந்த நான் கோவிலை கட்ட முடிவு

                        செய்து, தற்போது கட்டி முடித்து இந்து நணபர்களுக்கு அர்ப்பணித்துள்ளேன். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.

                          Posted in Uncategorized

                          போலீசார் திடீர் சுற்றிவளைப்பு -3.009 பேர் கைது

                          போலீசார் திடீர் சுற்றிவளைப்பு -3.009 பேர் கைது

                          இலங்கை காவல்துறையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் பொழுது 3,009 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                          இவ்வாறு கைது செய்ய பட்டவர்களில் பல் வேறு பட்ட குற்ற செயல்களுடன் தொடர்பு பட்டவர்கள் நீதிமன்ற பிடியானையின் மூலம் கைது செய்ய பட்டுள்ளனர்

                          மேலும் மது போதையில் வாகனம் செலுத்திய 580 பெரும் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                            Posted in Uncategorized

                            கொழும்பு துறைமுகத்திற்குள் நுழைய முற்பட்ட சீன நாட்டவர் உள்ளிட்ட ஐவர் கைது

                            கொழும்பு துறைமுகத்திற்குள் நுழைய முற்பட்ட சீன நாட்டவர் உள்ளிட்ட ஐவர் கைது

                            கொழும்பு துறைமுகத்திற்குள் அனுமதியின்றி நுழைய முற்பட்ட சீன நாட்டவர் உள்ளிட்ட ஐவர் கைது செய்ய பட்டுள்ளனர்

                            உள்ளே நுழைவதற்கான அனுமதி பத்திரங்கள் எதுவும் இன்றி சட்ட விரோதமாக நுழைய முற்பட்ட

                            குற்றத்திற்கு கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

                              Posted in இலங்கை செய்திகள்

                              இலங்கை வந்தடைந்த 70,200 பைசர் தடுப்பூசிகள்

                              இலங்கை வந்தடைந்த 70,200 பைசர் தடுப்பூசிகள்

                              இன்று அமெரிக்காவில் இருந்து இளங்க்கு சுமார் 70,200 பைசர் தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளன

                              இவ்வாறு வந்தடைந்த ஊசிகள் விரைவில் மக்களுக்கு செலுத்த படும் என சுகாதர அமைச்சு அறிவித்துள்ளது

                                Posted in Uncategorized

                                தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண் சடலமாக மீட்பு

                                தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண் சடலமாக மீட்பு

                                ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்தாவ பகுதியில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                                இச்சம்பவம் இன்று (18) மாலை இடம்பெற்றுள்ளது.

                                இவ்வாறு மீட்கப்பட்டவர் ஹொரவ்பொத்தானை – கரடிக்குளம், கல்கந்தாவ பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான ஹனீபா நுஸ்ரினா (24 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

                                சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

                                குறித்த பெண் குருநாகல் பகுதியைச் சேர்ந்த ஒருவரை திருமணம் முடித்து தமது சொந்த ஊரான

                                கல்கந்தாவ பகுதியில் வசித்து வந்ததாகவும் கடந்த சில நாட்களாக குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

                                சடலம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரேத பரிசோதனைக்காக

                                அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.

                                  Posted in Uncategorized

                                  வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்கா உலங்கு வானூர்தி

                                  வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்கா உலங்கு வானூர்தி

                                  அமெரிக்கா கடல் படை கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த MH-60 “Knighthawk ரக உலங்கு வானூர்தி ஒன்று கலிபோனியா பகுதியில் வீழ்ந்து நொறுங்கியது

                                  எனினும் இதில் பயணித்த நால்வரும் காப்பாற்ற பட்டுள்ளனர் என இராணுவம் தெரிவித்துள்ளது

                                  மேற்படி வானூர்தி விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                                    Posted in Uncategorized

                                    ஒயில் டாங்கர் வெடித்து சிதறியதில் உடல் கருகி 13 பேர் மரணம்

                                    ஒயில் டாங்கர் வெடித்து சிதறியதில் உடல் கருகி 13 பேர் மரணம்

                                    தெற்கு கென்யாவில் ஆயில் ஏற்றி கொண்டு பயணித்த தாங்கி திடீரென வெடித்து சிதறியதில் 13 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர்

                                    மேலும் பல டசின் பேர் ஏறி காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

                                    மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                                      Posted in Uncategorized

                                      அரசை பதவி விலக கோரி -தாய்லாந்தில் மக்கள் போலீசார் மோதல்

                                      அரசை பதவி விலக கோரி -தாய்லாந்தில் மக்கள் போலீசார் மோதல்

                                      தாய்லாந்தில் ஆளும் அதிபரை பதிவை விலக கோரி மக்கள்பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

                                      மக்கள் போராட்டத்தை நசுக்கும் நோக்குடன் தண்ணியடி ,மற்றும் ரப்பர் குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ள பட்டு வருகின்றது

                                      எனினும் மக்கள் காவல்துறையின் அடக்குமுறையை உடைத்தெறிந்து போராடிய வண்ணம் உள்ளனர்

                                        Posted in உலக செய்திகள்

                                        இந்தியா நிலச் சரிவில் சிக்கி 20 பேர் மரணம்

                                        இந்தியா நிலச் சரிவில் சிக்கி 20 பேர் மரணம்

                                        இந்திய மும்பாய் பகுதியில் ஏற்பட்ட கடும் மழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி இருபது

                                        பேர் பலியாகியுள்ளனர்
                                        மேலும் சிலர் காணாமல் போயுள்ளனர்

                                        பாதிக்க பட்ட பகுதிகளில் தொடர் மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது