அந்த கோலத்தில் தர்ஷா குப்தா
அந்த கோலத்தில் தர்ஷா குப்தா
சின்னத்திரை சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை தர்ஷா குப்தாவின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
திருமண கோலத்தில் தர்ஷா குப்தா… வைரலாகும் புகைப்படம்
தர்ஷா குப்தா
தமிழில் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘திரெளபதி’. இப்படத்தை இயக்கிய
மோகன் ஜி, அடுத்ததாக ‘ருத்ர தாண்டவம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். ‘திரெளபதி’ பட நாயகன் ரிச்சர்ட் ரிஷி, இந்தப் படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார்.
சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா இப்படத்தின் மூலம் ஹீரோயினாக
அறிமுகமாகிறார். மேலும் இயக்குனர் கவுதம் மேனன், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
தர்ஷா குப்தா
ரிச்சர்ட் ரிஷி – தர்ஷா குப்தா
இந்த நிலையில், ருத்ரதாண்டவம் படத்தில் ரிச்சர்ட் ரிசி மற்றும் தர்ஷா குப்தா இருவரும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பவர் ஸ்டார் சீனிவாசனை திருமணம் செய்த வனிதா
பவர் ஸ்டார் சீனிவாசனை திருமணம் செய்த வனிதா
நடிகை வனிதா விஜயகுமாருக்கு 4-வது திருமணம் செய்துக் கொள்ளும் யோகம் இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கும் நிலையில், திருமண புகைப்படம் வெளியாகியுள்ளது.
பவர் ஸ்டார் சீனிவாசனை திருமணம் செய்த வனிதா… வைரலாகும் புகைப்படம்
பவர்ஸ்டார் சீனிவாசன் – வனிதா
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் வனிதா. ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற இவர், கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் பீட்டர்பால் என்பவரை 3-
வது திருமணம் செய்து சர்ச்சையில் சிக்கினார். பின்னர் சில தினங்களிலேயே அவரை குடிகாரர் என்று உதறித் தள்ளி மேலும் பரபரப்பு ஏற்படுத்தினார்.
சில தினங்களுக்கு முன்பு வனிதா 4-வது திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியானது.
இதற்கு வனிதா மறுப்பு தெரிவித்தார். பின்னர் வனிதாவின் எதிர்காலத்தை கணித்த ஜோதிடர் ஒருவர், அவருக்கு மீண்டும் திருமணம் நடக்கும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் நடிகை வனிதா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் பவர்ஸ்டார் சீனிவாசனுடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள்
பலரும் திருமண வாழ்த்துகள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது
யாழில் வீடு புகுந்து கணவன் மனைவி மீது வாள்வெட்டு
யாழில் வீடு புகுந்து கணவன் மனைவி மீது வாள்வெட்டு
யாழ்ப்பாணம் இணுவில் காரைக்கால் பகுதியில் வாள்வெட்டு தெரு ரவுடிகள் வீடு புகுந்து கணவன் மனைவி மீது வாள்வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளனர்
இதில் இருவரும் பலத்த படுகாயமடைந்த நிலையில் யாழ்போதன வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
மகனை தேடி வந்த குழுவினர் அவர் அங்கு இல்லாததினால் பெற்றவர்கள் மீதுதாக்குதலை நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளது
மேற்படி சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்
- ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் ‘நீண்ட காலம் நீடிக்காது’ என டிரம்ப் அச்சுறுத்தல்
- அவசரகால கையிருப்பில் இருந்து டீசலை வெளியிடுமாறு ஐரோப்பாவிடம் அமெரிக்கா கோரிக்கை விடுக்கக்கூடும் என டிரம்ப் கூறுகிறார்
- கடந்த 24 மணி நேரத்தில் ஹூதிகளுக்கும் அரசாங்க ஆதரவுப் படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 80 பேர் உயிரிழந்தனர்
- ஏமனில் சாதனை அளவிலான மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்
- பிரெஞ்சு தூதருடன் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சவால்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் விவாதித்தார்
ஆசிரியர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பம்
ஆசிரியர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பம்
வட மத்திய மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் மற்றும்
டிப்ளோமா தாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பம் வட மத்திய மாகாண அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் கோரப்பட்டுள்ளது.
பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையின் 03 ஆம் வகுப்பு 1 ( அ ) தரத்திற்கும் , டிப்ளோமாதாரிகளை 03 ஆம் வகுப்பு 1 ( இ ) தரத்திற்கும் சேர்த்துக் கொள்வதற்காக கல்வி வலய
மட்டத்தில் ஆட்சேர்கும் பொருட்டு ஆண், பெண் இருபாலாரிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 31 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாயின் வாயில் சிசுவின் சடலம் – பதறி ஓடிய மக்கள்
நாயின் வாயில் சிசுவின் சடலம் – பதறி ஓடிய மக்கள்
நுவரெலியா கொன்கோடியா தேயிலை தோட்டத்தில் நாய் ஒன்று சிசுவின் சடலம் ஒன்றை காவி சென்றுள்ளது ,இதனை கண்ணுற்ற அங்கு பணிபுரிந்த மக்கள் பதறி ஓடி காவல்துறைக்கு தெரிவித்தனர்
மீட்க பட்ட சிசுவின் சடலத்தில் இரு கால்களும் அற்ற நிலையில் சடலம் காணப்பட்டுள்ளது
குறித்த சிசு பிறந்து இரண்டு நாட்களில் ,தயார் சிசுவை இப்பகுதியில் வீசி விட்டு தலை மறைவாகியுள்ளதாக நம்ப படுகிறது
கள்ள தொடர்பின் மூலம் இந்த் சிசு பிந்திருக்கலாம் எனவும் ,அதனாலேயே இந்த சிசு கொலை இடம்பெற்றுள்தக தெரிவிக்க படுகிறது
போலீசார் தொடர் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்
இலங்கையில் எகிறும் வாகன விபத்து – ஒரே நாளில் 7 பேர் மரணம்
இலங்கையில் எகிறும் வாகன விபத்து – ஒரே நாளில் 7 பேர் மரணம்
இலங்கையில் சமீப காலங்களாக வாகன விபத்துக்கள் அதிகம் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் சுமார் ஏழுபேர் இந்த விபத்துக்களில் பலியாகியள்ளனர்
இதனை கட்டு படுத்தும் நடவடிக்கையில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
18 வயதுக்கு குறைவானவர்கள் பணியில் அமர்த்த தடை
18 வயதுக்கு குறைவானவர்கள் பணியில் அமர்த்த தடை
இலங்கையில் 18 வயதுக்கு கீழ் பட்டவர்களை வீட்டு வேலைக்கு அமர்த்துவது தடை விதிக்க
பட்டுள்ளது ,இதனை மீறி அனுப்ப பட்டால் அவர்கள் மீது விசாரணைகள் நடத்த பட்டு நடவடிக்கை
மேற்கொள்ள படும் என ஜீவன் தொண்டமான் அறிவித்துள்ளார்
ரிச்சார்ட் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த 15 வயது சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்க பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது
தொடரும் அத்துமீறல் – 207 பேர் கைது
தொடரும் அத்துமீறல் – 207 பேர் கைது
இலங்கையில் நிகழ்கால கொரனோ விதிகளை மீறி செயல் பட்ட காரணத்தினால் கடந்த தினம்
மட்டும் 207 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்கள் முக கவசம் அணிய மறுத்தமை, மற்றும் மாகாண எல்லைகளை மீறிய குற்ற சாட்டில் இந்த கைது இடம்பெற்றுள்ளது
- ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் ‘நீண்ட காலம் நீடிக்காது’ என டிரம்ப் அச்சுறுத்தல்
- அவசரகால கையிருப்பில் இருந்து டீசலை வெளியிடுமாறு ஐரோப்பாவிடம் அமெரிக்கா கோரிக்கை விடுக்கக்கூடும் என டிரம்ப் கூறுகிறார்
- கடந்த 24 மணி நேரத்தில் ஹூதிகளுக்கும் அரசாங்க ஆதரவுப் படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 80 பேர் உயிரிழந்தனர்
- ஏமனில் சாதனை அளவிலான மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்
- பிரெஞ்சு தூதருடன் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சவால்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் விவாதித்தார்
கொரோனா-நேற்றைய தினம் 43 உயிரிழப்பு
கொரோனா-நேற்றைய தினம் 43 உயிரிழப்பு
இலங்கையில் நேற்றைய (19) தினம் மேலும் 43 பேர் கொரோனா வைரசு தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதி செய்திருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று (20) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான தளத்தை பாதுகாக்க – அமெரிக்கா உதவியை கோரும் துருக்கிய அதிபர்
விமான தளத்தை பாதுகாக்க – அமெரிக்கா உதவியை கோரும் துருக்கிய அதிபர்
ஆப்கானில் இருந்து அமெரிக்கா மற்றும் பல் நாட்டு படைகள் வெளியேறிய நிலையில் காபூல்
சர்வதேச விமான நிலையத்தை துருக்கிய இராணுவத்தினர் காவல் காத்து வருகின்றனர்
தலிபான்கள் ஆதிக்கம் மீள படர்ந்து வரும் நிலையில் எவ்வேளையும் விமான தளம் மீது தாக்குதல்
நடத்தி அதனை அவர்கள் தம்வச படுத்தலாம் என்பதால் அமெரிக்கா இராணுவ உதவியை துருக்கி கோரியுள்ளது
இதுவே பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது
அமெரிக்கா முக்கிய நிறுவனங்கள் மீது சீனா சைபர் தாக்குதல்
அமெரிக்கா முக்கிய நிறுவனங்கள் மீது சீனா சைபர் தாக்குதல்
அமெரிக்காவின் மிக முக்கிய நிறுவனங்களை இலக்கு வைத்து சீனாவின் இணையை சைபர் தாக்குதல் பிரிவினர் கைக்கிங் செய்துள்ளனர்
மைக்கிரோ சொப்ட் உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்கள் மற்றும் அமெரிக்கா பாதுகாப்பு துறைக்குள்ளும் நுழைந்து இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது
இதனால் இரு நாடுகளுக்கு இடையில் கடும் வாய் மோதல் இடம்பெற்று வருகிறது ,சீனாவின் மீது ஆளும் அமெரிக்கா அதிபர் தொடர் தடைகளை விதிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது
உளவுத்துறை எச்சரிக்கை – டெல்லி செங்கோட்டைக்குள் நுழைய தடை
.உளவுத்துறை எச்சரிக்கை – டெல்லி செங்கோட்டைக்குள் நுழைய தடை
சுதந்திர தினத்திற்கு முன்பு ஆள் இல்லா விமானம் மூலம் டெல்லியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உளவுத்துறை எச்சரிக்கை எதிரொலி – டெல்லி செங்கோட்டைக்குள் நுழைய ஆகஸ்டு 15 வரை தடை
டெல்லி செங்கோட்டை
நாடு முழுவதும் ஆகஸ்டு 15-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அதற்கான பணிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பலப்படுத்தி வருகிறது.
இதற்கிடையே, பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பு டெல்லியில் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதென கூறப்படுகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ம் தேதி ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது. அந்த நாளில் டெல்லியில் தாக்குதல் நடத்த
வாய்ப்பிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. சமீபத்தில் காஷ்மீர் பகுதிகளில்
ஆளில்லா விமானம் மூலம் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த சம்பவங்கள் உளவுத்துறையின் சந்தேகங்களை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
ஆபரேஷன் ஜிகாத் என்ற பெயரில் பயங்கரவாதிகள் மற்றும் சமூக விரோதிகள் இந்த தாக்குதலை டெல்லியில் நடத்தக்கூடும் என கூறப்படுகிறது.
இதற்கேற்றாற் போல், உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட அல்-கொய்தா இயக்கத்தின் 2 பயங்கரவாதிகள்,
சுதந்திர தினத்தினை முன்னிட்டு பெரிய அளவில் டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்திய தொல்லியல் துறை வெளியிட்டுள்ள செய்தியில் இன்று முதல் ஆகஸ்டு 15-ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டம் முடிவடையும் வரை டெல்லி செங்கோட்டைக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.
தெலுங்கில் அறிமுகமாகும் ‘கர்ணன்’ பட நடிகை
தெலுங்கில் அறிமுகமாகும் ‘கர்ணன்’ பட நடிகை
கர்ணன் படம் மூலம் தமிழில் அறிமுகமான மலையாள நடிகை ரஜிஷா விஜயன், அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
தெலுங்கில் அறிமுகமாகும் ‘கர்ணன்’ பட நடிகை
ரஜிஷா விஜயன்
மலையாளத்தில் கடந்த 2016-ல் வெளியான ‘அனுராக கரிக்கின் வெள்ளம்’ என்கிற படத்தின் மூலம் அறிமுகமான ரஜிஷா விஜயன், தனது முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான மாநில அரசு
விருதை வென்றார். தொடர்ந்து மலையாளத்தில் நடித்து வந்த இவர், அண்மையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படத்தில் அவரது எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
ரஜிஷா விஜயன்
ரஜிஷா விஜயன்
இதையடுத்து இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவிந்தன. தற்போது கார்த்தி, சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் ரஜிஷா, அடுத்ததாக தெலுங்கில் அறிமுகமாக
உள்ளார். அதன்படி பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா ஹீரோவாக நடிக்கும் ‘ராமாராவ்’ படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனர் சரத் மாந்தவா என்பவர் இயக்க உள்ளார். சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்
படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய சாக்ஷி அகர்வால்
படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய சாக்ஷி அகர்வால்
நடிகையும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவருமான சாக்ஷி அகர்வால், படப்பிடிப்பில் தனது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்.
படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய சாக்ஷி அகர்வால்
சாக்ஷி அகர்வால்
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ்
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். தற்போது நடிகை சாக்ஷி, சிண்ட்ரெல்லா, புரவி, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன.
மேலும் தி நைட் என்னும் படத்தில் சாக்ஷி அகர்வால் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது. இன்று பிறந்தநாள் காணும் சாக்ஷி அகர்வால், தி நைட்
படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
இதற்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து, பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.
குஷ்புவின் டுவிட்டர் கணக்கு மீட்பு
குஷ்புவின் டுவிட்டர் கணக்கு மீட்பு
நடிகையாகவும், அரசியல்வாதியாகவும் வலம் வரும் குஷ்புவின் டுவிட்டர் கணக்கை விஷமிகள் சிலர் முடக்கி இருந்தார்கள்.
குஷ்புவின் டுவிட்டர் கணக்கு மீட்பு
குஷ்பு
தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. தற்போது ரஜினி நடிப்பில் உருவாகி
வரும் அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட குஷ்பு, அங்கு தோல்வியை தழுவினார். அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்ட குஷ்பு, டுவிட்டரில் ஆக்டிவாக இயங்கி வந்தார்.
குஷ்பு
முடக்கம் செய்யப்பட்ட போது இருந்த டுவிட்டர் பக்கம்
இந்நிலையில், இன்று காலை நடிகை குஷ்புவின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டது. அவர் பதிவிட்டிருந்த அனைத்து
பதிவுகளும் அழித்து ஹேக்கர்கள் கைவரிசை காட்டி இருந்தனர். மேலும் டுவிட்டர் பக்கத்தில் khushsundar என்பதற்கு பதிலாக briann என மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
குஷ்பு
மீட்கப்பட்ட நிலையில் இருக்கும் டுவிட்டர் பக்கம்
இது தொடர்பாக நடிகை குஷ்பு தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது குஷ்புவின் டுவிட்டர் பக்கம் மீட்கப்பட்டுள்ளது. இதுவரை குஷ்பு பதிவு செய்திருந்த அனைத்து பதிவுகளும் மீட்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பை தடுப்பதற்கு மாற்று வழி
எரிபொருள் விலை அதிகரிப்பை தடுப்பதற்கு மாற்று வழி
நாட்டின் எரிபொருள் விலை பிரச்சனை நீண்டகாலப் பிரச்சினை என்பதால், அதனை தீர்ப்பதற்கு
முறையான திட்டம் ஒன்று வகுக்கப்பட வேண்டும் என்று இன்று (20) பாராளுமன்றத்தில் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
தமக்கு எதிராக எதிர்க் கட்சியினர் கொண்டு வந்த பிரேரணை தொடர்பில் எதிர்க்கட்சியினர்
எரிபொருள் விலையை அதிகரிப்பை தடுப்பதற்கான மாற்று வழியை முன்வைப்பதற்கு தவறி விட்டனர் என்றும் சுட்டிக்காட்டினார்.
கடந்த காலங்களில் உலக சந்தையில் எரிபொருள் விலை பத்து சதவீதமாக அதிகரித்த போதும், இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவில்லை. விலைச் சூத்திரம் காணப்பட்டிருந்தால்,
ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 179 ரூபாவாகவும், ஒரு லீற்றர் டீசலின் விலை 134 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டிருக்கும் என அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டார்
மதுசூதனனை ஒரே நேரத்தில் பார்க்க வந்த எடப்பாடி பழனிசாமி, சசிகலா
மதுசூதனனை ஒரே நேரத்தில் பார்க்க வந்த எடப்பாடி பழனிசாமி, சசிகலா
தேர்தல் நேரத்தில் சிறையில் இருந்து விடுதலையான சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக முதலில் அறிவித்தார். பின்னர் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்று அறிக்கை வெளியிட்டு ஒதுங்கி இருந்தார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறைக்கு சென்றார்.
இதன்பிறகு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் ஒன்றிணைந்து அவரை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கினார்கள்.
தேர்தல் நேரத்தில் சிறையில் இருந்து விடுதலையான சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக முதலில் அறிவித்தார். பின்னர் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்று அறிக்கை வெளியிட்டு ஒதுங்கி இருந்தார்.
தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்ததை தொடர்ந்து கடந்த சில நாட்களாக அ.தி.மு.க. வினருடன் அவர் பேசிய பரபரப்பான ஆடியோக்கள் தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கிறது. அ.தி.மு. க.வினருடன் பேசும் ஆடியோக்களில், ‘நான் மீண்டும் வந்துவிடுவேன்’ என்று அவர் கூறி வருகிறார். இதனால் சசிகலா மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடலாம் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனனை சந்திக்க சசிகலா இன்று மதியம் 12.45 மணி அளவில் திடீரென வருகை தந்தார்.
அதிமுக
அவரது காரில் அ.தி.மு.க. கொடி கட்டப்பட்டு இருந்தது. ஆஸ்பத்திரிக்கு சென்ற சசிகலா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள மதுசூதனனின் உடல் நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
அ.தி.மு.க.வினருடன் தொலைபேசி வாயிலாக மட்டும் பேசிக்கொண்டிருந்த சசிகலா முதல் முறையாக கட்சியின் மூத்த நிர்வாகியான மதுசூதனனின் உடல்நிலை பற்றி கேட்டறிய ஆஸ்பத்திரிக்கே நேரில் சென்றிருப்பது, அ.தி.மு.க. வினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சசிகலா அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வருவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு தான் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி, மதுசூதனனின் உடல்நிலை பற்றி விசாரிப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தார்.
எடப்பாடி பழனிசாமி ஆஸ்பத்திரிக்குள் இருக்கும் போது சசிகலாவின் கார் ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் நுழைந்தது.
சசிகலா, மதுசூதனனை சந்திக்க சென்றபோது எடப்பாடி பழனிசாமிஆஸ்பத்திரியில் இல்லை. அவர் அங்கிருந்து உடனடியாக வெளியேறிவிட்டார்.
பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையான பிறகு சசிகலா தி.நகரில் உள்ள வீட்டிலேயே இருந்து வருகிறார். இதுவரை வெளியில் வந்ததில்லை.
முதல்முறையாக இன்று வீட்டில் இருந்து அவர் வெளியில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டன் கடல் பகுதியில் நடமாடி சென்ற ஈரானிய கப்பல்
பிரிட்டன் கடல் பகுதியில் நடமாடி சென்ற ஈரானிய கப்பல்
தெற்கு பிரிட்டன் கடல் பகுதிக்குள் இரண்டு ஈரானிய போர் கப்பல்கள் ஊடுருவி உளவு பார்த்து சென்றுள்ளன
மேற்படி சம்பவம் நாடுகளுக்கு இடையில் முறுகளை ஏற்படுத்தியுள்ளது
ரசியா ,மற்றும் ஈரானிய கப்பல்கள் ஊடுருவல் பிரிட்டனை கொதிப்பில் ஆழ்தியுள்ளது
300 பொலிஸாருக்குக் கொரோனா
300 பொலிஸாருக்குக் கொரோனா
தடுப்பூசி செலுத்திக் கொண்ட 300 க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குக்
கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட தடுப்பூசியையும் செலுத்திக் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கே
இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிஷாட் வீட்டில் உயிரிழந்த மலையக சிறுமிக்கு நீதி கோரி, கொழும்பில் ஆர்ப்பாட்டம்
ரிஷாட் வீட்டில் உயிரிழந்த மலையக சிறுமிக்கு நீதி கோரி, கொழும்பில் ஆர்ப்பாட்டம்
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த மலையக சிறுமிக்கு நீதி கோரி, கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு − பெளத்தாலோக்க மாவத்தை பகுதியிலுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டுக்கு முன்பாக இடம்பெற்ற இவ்ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளர் எஸ். ஆனந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது ” சிறுவர்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது என்பது, அமைச்சராக இருந்த ரிஷாட் பதியூதீனுக்கு தெரியாதா?” என ஆனந்தகுமார் கேள்வி எழுப்பினார்.
அத்துடன் ”மலையகத்திலிருந்து சிறுவர்கள் அதிகளவில் செல்வந்தர்களின் வீடுகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், இவ்வாறு சிறுவர் தொழிலாளர்களை வேலைக்கு
அமர்த்துவதற்கு எதிராகக் கடும் சட்டங்களை இயற்ற வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
மேலும் ”இந்த சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமான அனைவரும் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு, உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும், சிறுமிக்கு நீதி கிடைக்க
தாமதமாகும் பட்சத்தில், இன்று அமைதி வழியாக நடத்தப்பட்ட போராட்டம், நாளை பாரியளவில் நடத்தப்படும் எனவும் தெரிவித்தா













