Posted in மருத்துவம்

உணவுகள் ஏற்படுத்தும் விளைவுகள்

உணவுகள் ஏற்படுத்தும் விளைவுகள்

செரிக்க கடினமான, கனமான உணவுப் பொருட்களை, செரிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் உணவுகளை அரை வயிறு உண்டுவிட்டு நிறுத்திவிட வேண்டும்.

அஜீரண உணவுகள் ஏற்படுத்தும் விளைவுகள்


பழைய காலங்களில் சாதாரண நாட்களில் இனிப்பு, கார வகைகள், நொறுக்கு தீனிகள் சாப்பிடுவது வழக்கமாக இருந்ததில்லை.

என்றைக்காவது வரும் பண்டிகை நாட்களில்தான் இட்லி, தோசையே கிடைத்து வந்தது. ஆனால் இன்றைக்கு தடுக்கி விழுந்தால் ஒரு நொறுக்குத்தீனி

கடையில் முட்டும் அளவுக்கு கடைகள் பெருகிவிட்டன. நொறுக்குத்தீனி உண்பதும் கட்டுப்பாடு இல்லாமல் பெருகிவிட்டது.

ஏன் எல்லா நாட்களிலும் அளவுடன் உண்ண வேண்டும் என்பதை ஆயுர்வேதம் மாத்ராதீசியம் என்ற பெயரில் விளக்குகிறது. தக்க முறைப்படி உண்பதுதான்

மாத்திரை. அளவை குறைத்தோ, கூட்டியோ உண்ணக் கூடாது. அஜீரணத்தை ஏற்படுத்தும் உணவை பற்றி நினைக்கவும் கூடாது; நன்மை பயக்கும் உணவையும், கெட்ட உணவையும் சேர்த்து உண்ணக் கூடாது;

ஒரு முறை சாப்பிட்ட உணவு செரிமானம் அடைவதற்கு முன்பு உண்ணக் கூடாது.

உணவின் அளவை பொறுத்து உடலில் இருக்கின்ற ஜடாராக்னி வேலை செய்கிறது. ஒருவருடைய செரிக்கும் சக்தியான அக்னியின் பலத்தை பொறுத்து, உணவின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது.

எந்த அளவு உணவு இயற்கையாக உடலை கெடுக்காமல், உரிய காலத்தில் ஜீரணமாகிறதோ அது ஒருவருக்கு தேவையான உணவாகும். அக்னியின் தன்மைக்கேற்ப உணவை உண்ண வேண்டும்.

அக்னியின் பலத்தை பொறுத்தே, மனிதனின் பலம் உருவாகிறது. அதன் அடிப்படையிலேயே நம்முடைய செயல்பாடுகள், வேலைகள் அமைகின்றன. செரிக்க கடினமான, கனமான உணவுப்

பொருட்களை, செரிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் உணவுகளை அரை வயிறு உண்டுவிட்டு நிறுத்திவிட வேண்டும்.

இலகுவான உணவுப் பொருட்களை சற்று கூடுதலாக சாப்பிடலாம். உண்ட உணவு, தக்க காலத்தில் தீங்கு செய்யாமல் செரிக்க வேண்டும்.

உணவின் அளவை மிகவும் குறைத்து உண்டால் உடலின் பலமும், பொலிவும் குறையும், வாத நோய்கள் உண்டாகும். உண்ட உணவு செரிக்காமல், வாந்தி ஆகாமல், மலம் ஆகாமல் மந்தமாக

உடலில் தங்கி இருக்கும். சில நேரங்களில் வயிற்றை ஊசியால் குத்துவது போன்று காணப்படலாம். வயிற்று வலி, வயிற்று பொருமல்,

தலைவலி, தலைச்சுற்றல், விரைப்பு, வாந்தி, சளி உருவாதல் போன்றவை காணப்படும். பலம் குறையும், இவற்றுக்கு `ஆமம்’ என்று பெயர்.

தகாத உணவை, கூடாத உணவை அளவுக்கு அதிகமாக உண்டால் அது விஷத்தன்மை பெறும். பழைய காலத்தில் இப்படிப்பட்டவர்களுக்கு வசம்பு, இந்துப்பு ஆகியவற்றைக்

கொடுத்து வாந்தி வரச் செய்வார்கள். இலகுவான அரிசி கஞ்சியைக் கொடுப்பார்கள். அஜீரண நிலையில் மருந்து

உணவுகள் ஏற்படுத்தும் விளைவுகள்

கொடுக்க மாட்டார்கள், தானாக உபவாசம் இருந்து செரிக்க விடுவார்கள். பிறகு செரிப்பதற்கான மருந்துகளைக் கொடுப்பார்கள். இந்த செமிக்காத உணவு எந்த நிலையில் இருக்கிறது என்பதை

பொறுத்து சிகிச்சை மாறும். குறைந்த நிலையில் இருந்தால் உபவாசம் இருப்பது நல்லது. நடுநிலையில் இருந்தால் உபவாசத்துடன் பக்குவ தன்மையுடைய மருந்து தரலாம். மிக அதிகமாக இருந்தால் தோஷங்களை வெளியேற்றும் சிகிச்சை செய்வார்கள்.

எப்போதும் உடலுக்கு பழக்கமான, ஒத்துக்கொள்ளக்கூடிய, சுத்தமான, நன்மை தரக்கூடிய உணவை மனதை ஒருநிலைப்படுத்தி உண்ண வேண்டும். அவசரமாகவும் இல்லாமல்,

சோம்பலாகவும் இல்லாமல் நடுத்தர அளவில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய நெய்ப்பு, உஷ்ணமுடைய, இனிப்பு, அறுசுவை உணவை உண்ண வேண்டும்.

குளித்துவிட்டு, அமைதியான மனநிலையுடன் உணவைச் சாப்பிட வேண்டும். உணவு சற்று திரவமாக இருக்க வேண்டும். அதிகமாக தயிர்,

சமைக்காத முள்ளங்கி, உளுந்து, சிறுகடலை, மாவு பண்டங்கள், சர்க்கரை பாகு ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பலாப்பழம், மாம்பழம் முதலியவை எளிதில் ஜீரணமாகாது.

    Posted in சினிமா

    தடுப்பூசி போட்டுக் கொண்ட விஜய் பட நடிகை

    தடுப்பூசி போட்டுக் கொண்ட விஜய் பட நடிகை

    தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து தற்போது தமிழில் விஜய்யுடன் நடித்து வரும் நடிகை கொரோனா தடுப்பூசி போட்டு இருக்கிறார்.

    கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட விஜய் பட நடிகை
    பூஜா ஹெக்ட

    Ethiri.com – எதிரி இணையம்


    தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. பின்னர் தெலுங்கு, இந்தி படங்களில் பிரபல நடிகர்களுடன் நடித்து முன்னணி

    நடிகையானார். தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே கொரோனா முதல் தடுப்பூசி போட்டு இருப்பதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்திருக்கிறார்.

    பூஜா ஹெக்டே
    பூஜா ஹெக்டே

    கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நடிகை பூஜா ஹெக்டே, கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதன்பின் சிகிச்சைக்குப் பிறகு தொற்றில் இருந்து மீண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

      Posted in சினிமா

      ரஜினியுடன் மீண்டும் ஜோடி சேரும் பிரபல பாலிவுட் நடிகை

      ரஜினியுடன் மீண்டும் ஜோடி சேரும் பிரபல பாலிவுட் நடிகை

      அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்க உள்ள புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

      ரஜினியுடன் மீண்டும் ஜோடி சேரும் பிரபல பாலிவுட் நடிகை?
      ரஜினிகாந்த்
      இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

      நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்

      ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று வெளியிடப்பட உள்ளது.

      இதையடுத்து நடிகர் ரஜினியின் 169-வது படத்தை, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

      படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளதாகவும், இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

      இந்நிலையில், இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே

      நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே ரஜினிக்கு ஜோடியாக கோச்சடையான் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

        Posted in சினிமா

        சாண்டி – சில்வியா தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது

        சாண்டி – சில்வியா தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது

        Ethiri.com – எதிரி இணையம்

        தமிழ் சினிமாவில் நடன இயக்குனராகவும், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளருமான சாண்டி மாஸ்டருக்கு குழந்தை பிறந்துள்ளது.

        சாண்டி – சில்வியா தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது
        மனைவியுடன் சாண்டி மாஸ்டர்


        தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக இருப்பவர் சாண்டி மாஸ்டர். இவர் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டார். இவர் இறுதிப்

        போட்டி வரை சென்று ரன்னராக வெற்றி பெற்றார். சாண்டியின் மனைவி சில்வியா மற்றும் மகள் லாலா பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து ரசிகர்களை கவர்ந்தார்கள்.

        சமீபத்தில் மனைவி சில்வியா கர்ப்பமாக இருப்பதாக சாண்டி மாஸ்டர் அறிவித்தார். பின்னர் சில்வியாவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி

        வைரலானது. இந்நிலையில், இந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை சாண்டி மாஸ்டர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்

        Posted in உலக செய்திகள்

        தமிழ்நாட்டின் காட்டை 33 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை

        தமிழ்நாட்டின் காட்டை 33 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை

        தமிழ்நாட்டில் உள்ள 3 உயிர்க்கோள் காப்பகங்களான நீலகிரி உயிர்க்கோள் காப்பகம், மன்னார் வளைகுடா உயிர்க்கோள் காப்பகம் மற்றும் அகஸ்தியர் மலை உயிர்க்கோள் காப்பகம் ஆகியவற்றை மேம்படுத்தவும், சிறப்பாக பராமரிக்கவும் வேண்டும் என்று அரசு அதிகாரிகளை முதல்-அமைச்சர் வலியுறுத்தினார்.

        தமிழ்நாட்டின் வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை – முக ஸ்டாலின் வலியுறுத்தல்

        சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்தும், அடுத்த 10 ஆண்டுகளில் இத்துறைகளில் தொலைநோக்குடன் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 22-ந் தேதி (நேற்று) தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

        மரம் நடுதல் திட்டத்தைத் தீவிரப்படுத்தி தமிழ்நாட்டின் வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மனிதர்கள், வனவிலங்குகளுக்கு இடையேயான மோதல்களைக் கட்டுப்படுத்துவதற்கான உரிய வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.

        வனப்பாதுகாப்பைப் பொறுத்தவரையில், தமிழ்நாட்டில் உள்ள 3 உயிர்க்கோள் காப்பகங்களான நீலகிரி உயிர்க்கோள் காப்பகம், மன்னார் வளைகுடா உயிர்க்கோள் காப்பகம் மற்றும் அகஸ்தியர் மலை உயிர்க்கோள் காப்பகம் ஆகியவற்றை மேம்படுத்தவும், சிறப்பாக பராமரிக்கவும் வேண்டும்.

        தமிழ்நாட்டிலுள்ள வன உயிரின சரணாலயங்கள், புலிகள் காப்பகங்கள் போன்ற பாதுகாப்பு வனப்பகுதிகளில் உள்ள வன உயிரினங்களை பாதுகாப்பது தொடர்பான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும். விலங்குகளை வேட்டையாடுவதைத் தடுக்கவும், வனக் குற்றங்களைத் தடுக்கவும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

        மாநிலத்தில் உள்ள பறவைகள் சரணாலயம், புலிகள் சரணாலயம், உயிரியல் பூங்காக்கள் ஆகியவற்றில் தற்போது உள்ள கட்டமைப்பு வசதிகளை மேலும் மேம்படுத்த வேண்டும். காலநிலை மாற்றத்தைப் பொறுத்த வரையில், தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் மற்றும் பாதிப்புகளை குறைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

        தொழில்துறையினருக்குச் சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும். பொதுமக்கள் மற்றும் இளைய தலைமுறையினரைச் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் அதிக அளவு ஈடுபடுத்த வேண்டும். தொழிற்சாலைகள் மூலம் நீர், நிலம், காற்று மாசுபடுதலைத் தடுப்பது, குறைப்பது மற்றும் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

        தமிழ்நாடு தேயிலைத் தோட்டக்கழகம், தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம், அரசு ரப்பர் கழகம் ஆகியவற்றின் மேம்பாட்டுப் பணிகள் குறித்தும் முதல்-அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள் கா. ராமச்சந்திரன், சிவ.வீ.மெய்யநாதன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, நிதித்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாகு,

        முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அசோக் உபரேதி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் சிறப்புச் செயலாளர் எம்.ஜெயந்தி, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர் சேகர் குமார் நீரஜ், வனத்துறைச் சிறப்புச் செயலாளர் கே.ராஜ்குமார், சுற்றுச்சூழல்துறை இயக்குநர் பொ.ராஜேஸ்வரி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலாளர் செல்வன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

        இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

        Posted in Uncategorized உலக செய்திகள்

        லண்டனில் எகிறும் வீடு அற்றவர்கள் எண்ணிக்கை

        உலக

        லண்டனில் எகிறும் வீடு அற்றவர்கள் எண்ணிக்கை

        பிரிட்டனில் கடந்த மாசி மாதம் முதல் இதுவரை 62,250 பேர் வீடு அற்று வீதிகளில் உறங்கும் அவலம் அதிகரித்துள்ளது
        இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க மறந்து வருவதான குற்ற சாட்டுக்கள் அதிகரித்துள்ளது

        வீதியில் இவ்விதம் உறங்கும் நபர்கள் அரசினால் கைவிட பட்ட எவ்வித உதவிகளும் அற்றவர்கள் என தெரிவிக்க படுகிறது

          Posted in Uncategorized

          மான் குட்டிக்கு உதவிய நபர் -= வைரலாகும் வீடியோ

          மான் குட்டிக்கு உதவிய நபர் -= வைரலாகும் வீடியோ

          நபர் ஒருவர் தனது ஊந்துருளியில் பயணத்தை மேற்கொள்கிறார் ,அவ்வேளை அந்த சாலையில் மான் குட்டி ஒன்று தனித்து நின்றதால் ,பீதியடைந்து ஓடுகிறது ,அவ்வேளை தனது வண்டியின்

          இயந்திரத்தை அணைத்து அது பயமில்லாமல் கடந்து போக உதவிய காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது


          இப்படியும் மனிதாபிமானிகள் இருக்கத்தான் செய்கின்றனர்

          click here video

          Posted in இலங்கை செய்திகள்

          கொவிட் 19 தொற்று நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் நிலையம் திறந்து வைப்பு

          கொவிட் 19 தொற்று நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் நிலையம் திறந்து வைப்பு

          கொவிட் 19 தொற்று நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் சிகிச்சை நிலையமாக

          மட்டக்களப்பு – புதுக்குடியிருப்பு தள ஆயுர்வேத வைத்தியசாலையின் ஒரு பகுதி மாற்றியமைக்கப்பட்டு (16) திறந்து வைக்கப்பட்டது.

          கிழக்கு மாகாண சுதேச மருத்துத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி இ.ஸ்ரீதர் தலைமையில்

          இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

          இதன்போது, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் மற்றும் மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி இ.ஸ்ரீதர் ஆகியோரினால் கொவிட் 19

          தனிமைப்படுத்தும் சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டு சிகிச்சை நிலையத்துக்குத் தேவையான பொருட்களையும் வழங்கி வைத்தனர்.

          கொரோனாத் தொற்றுப் பாதிப்புக்குள்ளனா 100 நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் சிகிச்சை நிலையமாக மட்டக்களப்பு – புதுக்குடியிருப்பு தள ஆயுர்வேத

          வைத்தியசாலையின் ஒரு பகுதி மாற்றியமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

          இந்நிகழ்வில் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் திருமதி ஜெயலட்சுமி

          பாஸ்கரன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் வைத்தியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

          Posted in Uncategorized

          யாழில் இராணுவ சிப்பாய் தன்னை தானே சுட்டு தற்கொலை

          யாழில் இராணுவ சிப்பாய் தன்னை தானே சுட்டு தற்கொலை

          இன்று (22) அதிகாலை நாவற்குழி தெற்கு கெமுனு வோச் படைப்பிரிவு படை முகாமில் கடமையில்

          இருந்த இராணுவ வீரர் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

          குறித்த சிப்பாய் இராணுவத்தில் இணைந்து 10 மாதங்களே ஆகியுள்ள நிலையில் வீட்டில் ஏற்பட்டுள்ள தகராறு காரணமாகவே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது

          குறித்த சம்பவம் தொடர்பில் இராணுவ பொலிஸார் மற்றும் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

          மரண விசாரணையின் பின்னர் உயிரிழந்த இராணுவ வீரரின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக இராணுவ தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

          Posted in Uncategorized

          இராணுவத்தினரால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய இயந்திரம்

          இராணுவத்தினரால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய இயந்திரம்

          சேதன பசளை உற்பத்திக்கு பயன்படும் இலை குழைகளை சிறு சிறு துண்டுகளாக்கும் “அக்ரி ஷ்ரெடர் பிபி 1” எனும் புதிய இயந்திரம் அண்மையில் இராணுவத்தினரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

          இந்த புதிய இயந்திரம் இராணுவத்தின் 4வது மின் மற்றும் இயந்திர பொறியியலாளர் படையணி மற்றும் 5வது பொறியியலாளர் சேவை படையணியின் கூட்டு முயற்சியினால் உருவாக்கப்பட்டுள்ளது.

          இந்த அக்ரி ஷ்ரெடர் பிபி 1 இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு 3.5 மெட்ரிக் தொன் புதர்களை 10 மில்லி மீற்றர் துகள்களாக வெட்டக் கூடிய ஆளுமை கொண்டது என இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

          இந்த வகை இயந்திரத்தின் சந்தை விலை ரூ. 750,000.00 ஆகும். ஆனால் மின் மற்றும் இயந்திர பொறியியலாளர் படையணி மற்றும் பொறியியலாளர் சேவை படையணியின் கூட்டு முயற்சியினால் உருவாக்கப்பட்ட இந்த இயந்திர தயாரிப்புக்கு சுமார் 150,000.00 ரூபாய் செலவாகியது.

          இதை யாழ்- பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் தலைமை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் பி.டி.எல்.ஏ.சி சிறிசேனா வடிவமைத்துள்ளார் என இராணுவம் தெரிவித்துள்ளது.

          Posted in Uncategorized

          இஷாலினி மரணத்தின் மர்மம் கண்டறியப்பட வேண்டும்-சிவஞானம் சிறீதரன்

          இஷாலினி மரணத்தின் மர்மம் கண்டறியப்பட வேண்டும்-சிவஞானம் சிறீதரன்

          முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீனின் இல்லத்தில் பணிப் பெண்ணாக இருந்த இஷாலினி என்னும் 15 வயதான மலையகச் சிறுமியின் மரணம் எம்

          எல்லோரது மனங்களையும் பாதித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

          இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள அவர், அதேவேளை அச்சிறுமியின் மரணத்துக்குப் பின்னுள்ள மர்மங்கள் வெளிப்படுத்தப்பட்டு அவரது குடும்பத்திற்கு நீதியைப்

          பெற்றுக்கொடுக்க வேண்டுமென்பதே நான் உட்பட அனைத்துத் தரப்பினரதும் கோரிக்கையாக உள்ளது.

          கடந்த 2021.07.03 ஆம் திகதி பலத்த தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, 2021.07.15 ஆம் திகதி சிகிச்சை பயனின்றி உயிரிழந்திருந்தார்.

          கொழும்பு விசேட சட்ட வைத்திய நிபுணர் எம்.என்.ரூஹுல் ஹக்னினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது இஷாலினி நீண்டகாலமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

          மாணவப் பருவத்தை தாண்டியிராத அச்சிறுமியின் அவலத்திற்கு காரணமானவர்கள் கண்டறியப்பட்டு, நீதி நிலைநாட்டப்பட வேண்டும். 15 வயதேயான சிறுமியை பணிப்பெண்ணாக

          வீட்டு வேலைக்கு அனுப்புமளவுக்கு பொருண்மியத்தால் நலிவுற்றிருக்கும் அந்தக் குடும்பத்திற்கு நீதி வழங்கப்பட வேண்டும்.

          ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாகியிருக்கின்ற இஷாலினி என்ற ஒற்றைச் சிறுமியின் அவலத்தைத் தாண்டி, இன்னமும் எங்களால் பேசப்படாத எத்தனை

          எத்தனையோ சிறுமிகளுக்கு இத்தகைய துன்பியல் சம்பவங்கள் நாளாந்தம் நடந்த வண்ணமே இருக்கின்றன. மிஹிந்தலைப் பகுதியைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமியை பாலியல்

          நடவடிக்கைகளுக்காக இணையவழியில் விற்பனை செய்த சம்பவம் அண்மையில் எமது நாட்டில் நடந்திருக்கிறது.

          இவற்றையெல்லாம் தாண்டி இயல்பாகவோ, எளிதாகவோ கடந்து செல்ல முடியாத அளவுக்கு இஷாலினிக்கு நேர்ந்திருக்கும் அவலத்தின் பின்னணியில் யார் இருந்தாலும் அவர்கள் சட்டத்தின்

          முன் நிறுத்தப்பட வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணி புரிபவர்களை மையப்படுத்தி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை ஊடகங்கள் வாயிலாக அறியமுடிகிறது.

          அதற்கு அப்பால் முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீனை அரசியலிலிருந்து முழுமையாக ஓரம்கட்டுவதற்கான முஸ்தீபுகள் தற்போதைய அரசால்

          முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டுவரும் காலச்சூழலில் சிறுமியின் மரணத்தின் பின்னணியில் வேறேதும் சதித் திட்டங்களுக்கோ, அரச கைக்கூலிகளுக்கோ தொடர்புள்ளதா என்பது குறித்தும் நேர்மையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

          Posted in Uncategorized

          இலங்கை கடலோர பாதுகாப்பு படைக்கு சர்வதேச பயிற்சிகள்

          இலங்கை கடலோர பாதுகாப்பு படைக்கு சர்வதேச பயிற்சிகள்

          ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகம் மற்றும் மிரிஸ்ஸ உயர் பயிற்சி நிலையம் ஆகியவற்றின் உலகளாவிய கடல்சார் குற்றத் தடுப்பு திட்டம் நடத்திய

          விஜயம் செய்தல், தரித்திருத்தல், தேடல் மற்றும் பறிமுதல் செய்தல் பாடத்திட்டத்தை இலங்கை கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் பதினாறு பேர் வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.

          இந்த வகையில் சர்வதேச நன்கொடை நிறுவனங்களுடன் இணைந்து மேம்பட்ட பயிற்சி திறன்களைப் பெறுவதற்கான ஒரு பிரதான திட்டமாக விஜயம் செய்தல், தரித்திருத்தல், தேடல்

          மற்றும் பறிமுதல் செய்தல் பாடநெறி கருதப்படுவதாக கடலோர பாதுகாப்பு படை தகவல்கள் தெறிவிக்கின்றன.

          இந்த பாடநெறியில் பங்கேற்பாளர்கள் பரந்த தத்துவார்த்த மற்றும் நடைமுறை அறிவைப் பெற்றுள்ளனர்.

          இந்த நிகழ்வில் கடலோர பாதுகாப்பு படையின் சிரேஷ்ட அதிகாரிகள், சர்வதேச நன்கொடை நிறுவனங்களின் அதிதிகள், இராஜதந்திர பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பங்குபற்றியதாக கடலோர பாதுகாப்பு படை தெறிவித்துள்ளது.

          Posted in இலங்கை செய்திகள்

          யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி – யாழ் மாவட்ட அரச அதிபருக்கிடையில் சந்திப்பு

          யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி – யாழ் மாவட்ட அரச அதிபருக்கிடையில் சந்திப்பு

          யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியாக பதவியேற்ற மேஜர் ஜெனரல் கொடித்துவக்கு நேற்று (21.07.2021)

          யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு யாழ்மாவட்ட அரசாங்க அதிபருடன் மரியாதை நிமித்தமான சந்திப்பை மேற்கொண்டார்.

          குறித்த சந்திப்பின் பின் இராணுவ தளபதியினால் யாழ் மாவட்ட அரசாங்க அதிபருக்கு நினைவுப் பரிசில் கையளிக்கப்பட்டது.

          குறித்த சந்திப்பில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மேலதிக அரசாங்க

          அதிபர்(காணி) சு.முரளிதரன், மற்றும் இராணுவத்தின் பலாலி இராணுவ கட்டளை தலைமையக உயர் அதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

          Posted in இலங்கை செய்திகள்

          சர்வதேச விமான நிறுவனங்கள் இலங்கையுடன் புதிய விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை

          சர்வதேச விமான நிறுவனங்கள் இலங்கையுடன் புதிய விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை

          சில சர்வதேச விமான நிறுவனங்கள் இலங்கையுடன் புதிய விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளன.

          தற்போது 32 சர்வதேச விமான நிறுவனங்கள் இலங்கையுடன் விமான சேவைகளில் ஈடுபட்டு வருவதுடன், மேலும் புதிய நான்கு விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பாக

          கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

          இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

          பிரான்ஸ் விமான நிறுவனம் மற்றும் மத்திய கிழக்கு விமான நிறுவனம் ஒன்றும் இலங்கையுடன் விரைவில் விமான சேவைகளை ஆரம்பிக்க இணங்கியுள்ளன. கட்டுநாயக்க பண்டார நாயக்க

          சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றை உள்ளடக்கி விமான சேவைகளை ஆரம்பிக்க இணங்கியுள்ளன.

          இதேவேளை, ஓமானுக்கு சொந்தமான சலாம் விமான நிறுவனம் மத்தள சர்வதேச விமான நிலையத்துடன் மீண்டும் விமான சேவைகளை ஆரம்பிக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

          அத்துடன், சினமன் விமான நிறுவனம் இலங்கை முழுதும் உள்ள உள்நாட்டு விமான நிலையங்களை உள்ளடக்கிய விமான சேவைகளை ஆரம்பிக்க உடன்பட்டுள்ளது.

          மேலும், புதிய வேலைத்திட்டத்தின் கீழ், இலங்கையை விமான சேவைத் துறையில் ஒரு கேந்மிர நிலையமாக மேம்படுத்துவதுட் விமான சேவையில் சாதகமான போட்டியை உருவாக்குவதன்

          மூலம் இலங்கையின் விமான நிலையங்களின் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

          நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த சர்வதே சுற்றுலா ஊக்குவிப்பு பிரச்சாரத்திற்கு ஏற்ப விமான நேரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

          உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு விமான சேவைகளை விரிவுபடுத்துவதால், எதிர்காலத்தில்

          நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளொன்றிற்கு ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கும் என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

          Posted in இலங்கை செய்திகள்

          சட்டவிரோத கடலட்டை செயற்பாடுகளை கட்டுப்படுத்த கடற்றொழில் அமைச்சர் பணிப்பு

          சட்டவிரோத கடலட்டை செயற்பாடுகளை கட்டுப்படுத்த கடற்றொழில் அமைச்சர் பணிப்பு

          குருநகர் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத கடலட்டை செயற்பாடுகளை உடனடியாகக் கட்டுப்படுத்துமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அறிவறுத்தப்பட்டுள்ளது.

          நாரா எனப்படும் தேசிய நீரியல்வள ஆராய்ச்சி நிறுவனத்தினால் அடையாளப்படுத்தபட்ட பகுதிகளை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இழுவைவலைப் படகுகளைப் பயன்படுத்துவதற்கு

          தடைவிதிக்கப்படடுள்ள நிலையில், அதனை மீறுகின்ற வகையிலும் கடற்றொழில் சங்க ஒழுங்கு விதிகளை மீறும் வகையிலும் சுமார் 39 இழுவை வலைப்படகுகள் கடலட்டை தொழிலில் ஈடுபட்டு

          வருவதாக குருநகர் கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகளினால் நேற்று (21.07.2021) கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

          இதனையடுத்து, தடைசெய்யப்பட்ட தொழில் முறைகள் அனைத்தும் கட்டுப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இழுவை வலைப் படகுகளைப் பயன்படுத்

          தி கடலட்டை தொழில் ஈடுபடுகின்றவர்களையும் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு, கடற்றொழில் திணைக்களத்தின் யாழ்.மாவட்ட பிரதானி ஜெ. சுதாகரனுக்கு கடற்றொழில் அமைச்சரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

          Posted in Uncategorized

          ஆசிய பசுபிக் பகுதியில் பிரிட்டன் போர் கப்பல்கள்



          ஆசிய பசுபிக் பகுதியில் பிரிட்டன் போர் கப்பல்கள்

          பிரிட்டன் தனது நாட்டின் பாதுகாப்பபு கருதி ஆசியா மற்றும் பசுபிக் கடல் பகுதியில் தனது இரண்டு போர் கப்பல்களை நிரந்தரமாக தரித்து வைக்க முடிவு செய்துள்ளது

          ஜப்பானில் ஏற்பட்டுள்ள போர் நெருக்கடி மற்றும் சீனாவின் அத்துமீறல் காரணமாக இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள படுவதாக தெரிவிக்க படுகிறது

          மறு முனையில் ஆசியாவை நோக்கி அமெரிக்கா கூட்டு படைகள் ஆக்கிரமிக்கும் செயல்

          நடவடிக்கை எதிர் வரும் காலங்களில் முன்னெடுக்கும் அபாயம் உள்ளதாக போரியல் நிபுணர்கள் எச்சரிகை விடுத்து வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது

            Posted in Uncategorized

            சீனா வெள்ளத்தில் சிக்கி 25 பேர் மரணம்

            சீனா வெள்ளத்தில் சிக்கி 25 பேர் மரணம்

            சீனாவில் பரவிய வெள்ள பெருக்கு காரணமாக இதுவரை 25 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் இரண்டு லட்சம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்

            தொடர்ந்து பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது .

              Posted in உலக செய்திகள்

              200 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஆங்கிலேயர் கல்லறையை தேடும் அதிகாரிகள்

              200 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஆங்கிலேயர் கல்லறையை தேடும் அதிகாரிகள்

              ஐகோர்ட்டு உத்தரவின்படி கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஆங்கிலேயரின் கல்லறையை திண்டுக்கல்லில் மாநகராட்சி அலுவலர்கள் தேடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


              200 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஆங்கிலேயர் கல்லறையை கண்டறியும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்கள்.
              இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

              திண்டுக்கல்:

              ஐரோப்பாவை சேர்ந்தவர் ஒயிட்என்னிஸ். இவர் கடந்த 1810-ம் ஆண்டு சென்னை மாகாண கலெக்டராக இருந்தவர். இவருடைய கல்லறை திண்டுக்கல்லில் இருக்கலாம் என்று சந்தேகம்

              எழுந்தது. இதனையடுத்து அதுகுறித்து ஆராய மதுரை ஐகோர்ட்டு கிளை திண்டுக்கல் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டது.

              இதனையடுத்து மாவட்டகலெக்டர் விசாகன் உத்தரவின்பேரில் மாநகராட்சி கமி‌ஷனர் சிவசுப்பிரமணியன் மேற்பார்வையில் நகர்நல அலுவலர் லட்சியவர்ணா தலைமையில்

              கல்லறையை தேடும் பணியில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரம் பகுதியில் உள்ள காமராஜ்நகரில் கல்லறை தோட்டம் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

              இதனையடுத்து புதர்மண்டி கிடந்த அந்த பகுதியை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அப்போது அங்கு 40-க்கும் மேற்பட்ட கல்லறைகள் இருப்பதை பார்த்து

              அதிர்ச்சி அடைந்தனர். இதில் பெரும்பாலானோர் ஆங்கிலேயே அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் கிறிஸ்தவ மத போதகர்கள் ஆகியோரின் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டது.

              ஆனால் ஒயிட்என்னிஸ் கல்லறை கிடைக்கவில்லை. இதனையடுத்து வேறு ஏதேனும் பகுதியில் அவரது கல்லறை உள்ளதா என்று தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லறை இருந்ததே

              தெரியாமல் அப்பகுதி மக்கள் வசித்து வந்தநிலையில் தற்போது 200 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் நகரில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

                Posted in மருத்துவம்

                பெண்களின் தொடைப் பகுதியில் கொழுப்பு சேரக்காரணம் ஏன் தெரியுமா

                பெண்களின் தொடைப் பகுதியில் கொழுப்பு சேரக்காரணம் ஏன் தெரியுமா

                ஆண்களை விட பெண்களுக்குத்தான் தொடை பகுதியில் கூடுதல் கொழுப்புகள் சேரும். அதற்கான காரணங்களையும், அதை குறைக்கும் வழிமுறைகளையும் அறிந்து கொள்ளலாம்.

                சிலருக்கு தொடை பகுதியில் கொழுப்பு படிந்து காணப்படும். பொதுவாக நேராக நிமிர்ந்து நிற்கும்போது இடுப்பு பகுதியில் இருந்து மூட்டு பகுதி வரை ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்க

                வேண்டும். அப்படி இல்லாமல் தொடைப் பகுதியில் தசைகள் குவிந்திருந்தால் அங்கு கொழுப்பு சேர்ந்திருப்பதாக அர்த்தம். அவை ‘சாடில் பேக்குகள்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்த

                கொழுப்பை கரைப்பது சற்று கடினமானது. ஆனால் சாத்தியமற்றது அல்ல. சில எளிய பயிற்சிகள்

                மூலம் கொழுப்பு சேர்வதை தடுத்துவிடலாம். ஆண்களை விட பெண்களுக்குத்தான் தொடை பகுதியில் கூடுதல் கொழுப்புகள் சேரும். அதற்கான காரணங்கள்:

                மரபியல்: தொடையின் வெளிப்புற பகுதியில் கொழுப்புகளை உருவாக்குவதில் மரபணுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

                தாய் அல்லது பாட்டி மூலம் மரபணு ரீதியாக ‘சாடில் பேக்குகள்’ பிரச்சினை தோன்றுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

                பருவமடைதல்: இளம் பெண்களாக வளர்ந்து பருவமடையும்போது மார்பகங்கள், இடுப்பு, தொடை போன்ற பகுதிகளில் கொழுப்பு சேர தொடங்கும்.

                சில நேரங்களில் கூடுதல் கொழுப்புகள் தொடையின் வெளிப்புற பகுதிகளில் குவிந்துவிடும்.

                கர்ப்பம்: ‘சாடில் பேக்குகள்’ பிரச்சினைக்கு கர்ப்பமும் மற்றொரு காரணியாக அமைந்திருக்கிறது. கர்ப்பகாலத்தில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் ஹார்மோன்களின் பங்களிப்பு

                முக்கியமானது. இவை கர்ப்பகாலம் முழுவதும் சுரக்கக்கூடியது. இதில் ஈஸ்ட்ரோஜன், தொடைப் பகுதியுடன் வயிற்று பகுதியை சுற்றி கொழுப்பு குவிவதற்கு காரணமாகிவிடுகிறது.

                உட்காருதல்: உடல் இயக்க செயல்பாடுகள் இல்லாதது, ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது பல உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். நாள் முழுவதும் ஒரே இடத்தில் நீண்ட நேரம்

                பெண்களின் தொடைப் பகுதியில் கொழுப்பு சேரக்காரணம் ஏன் தெரியுமா

                உட்கார்ந்திருக்கும்போது உடல் இயக்கம் அதிகம் இல்லாததால் ரத்த ஓட்டம் குறையும். அது ‘சாடில் பேக்குகள்’ எனப்படும் தொடையில் கொழுப்புகள் சேருவதற்கு வழிவகுத்துவிடும்.

                கொழுப்பு: உடலில் கொழுப்புகள் சேருவதற்கு இடம் கொடுப்பது ‘சாடில் பேக்குகள்’ பிரச் சினைக்கு பிரதான காரணமாக அமைந்திருக்கும்.

                உடலில் கொழுப்பு சதவீதத்தின் அளவை குறைப்பது ‘சாடில் பேக்குகள்’ உருவாக்கத்தை கட்டுப்படுத்திவிடும்.

                உணவு: ஒரு நாளைக்கு மூன்று முறை சாலட் சாப்பிடாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் ஆரோக்கியமற்ற

                ‘ஜங்க் புட்’ சாப்பிடுவது தொடையில் கொழுப்பு சேர்வதற்கு வழிவகுத்துவிடும். புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த சீரான உணவை உண்ணுங்கள்.

                முதுகு: முதுகின் அடிப்பகுதிக்கும், ‘சாடில் பேக்குகளுக்கும்’ இடையே நேரடி தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

                முதுகு பகுதி ஆரோக்கியமாக இருந்தால் தொடையில் கொழுப்புகள் சேருவதற்கான வாய்ப்புகள் குறைவு.

                  Posted in சினிமா

                  ஷாருக்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா

                  ஷாருக்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா

                  தமிழில் முன்னணி நடிகையாக வலம் நயன்தாரா, ஷாருக்கான் படத்தின் மூலம் முதல்முறையாக பாலிவுட்டில் என்ட்ரியாக இருக்கிறார்.

                  ஷாருக்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா
                  நயன்தாரா – ஷாருக்கான்


                  ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த அவர், அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில்

                  ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து, முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.

                  அடுத்ததாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் அட்லீ. பிரம்மாண்

                  ட பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு இறுதியில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.

                  ஷாருக்கான் – நயன்தாரா

                  இந்நிலையில், இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க இருப்பதாக

                  உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.