சமந்தா பிரிய இதுதான் காரணமா?
சமந்தா பிரிய இதுதான் காரணமா?
நடிகை சமந்தா, காதல் திருமணம் செய்த நடிகர் நாக சைதன்யாவை பிரிவதற்கான பல காரணங்கள் தெலுங்கு பட உலகில் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றது.
கணவரை சமந்தா பிரிய இதுதான் காரணமா?
நாக சைதன்யா – சமந்தா
காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்து உள்ளனர். இவர்கள் விவாகரத்துக்கு பல காரணங்கள் இருப்பதாக தெலுங்கு பட உலகில் கிசுகிசுக்கின்றனர்.
குழந்தை பெற்றுக்கொள்ள சமந்தாவை நாகசைதன்யா குடும்பத்தினர் வற்புறுத்தினர். அவரோ அதிக படங்களில் நடிப்பதால் ஏற்கவில்லை. இது விவாகரத்துக்கு முக்கிய காரணம் என்கின்றனர்.
சமந்தா கவர்ச்சியாகவும், படுக்கை அறை காட்சிகளில் நெருக்கமாகவும் நடிப்பது நாகசைதன்யா குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. இதனால் சமந்தாவின் கதை தேர்விலும், அவர் யாருடன் நடிக்க வேண்டும் என்பதிலும் கணவர் குடும்பத்தினர் தலையிட்டு உள்ளனர். இது சமந்தாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாம்.
சமந்தா – நாக சைதன்யா
சமந்தா விருந்து நிகழ்ச்சிகளுக்கு செல்வதும், ஆடை வடிவமைப்பாளர் ஒருவரும், சமந்தாவும் நண்பர்களாக பழகியதும் நாகசைதன்யாவுக்கு பிடிக்கவில்லை என்று கூறுகின்றனர். நாகசைதன்யா தன்னுடன் நடித்த 2 நடிகைகளுடன் நெருக்கமாக பழகியதாவும், அந்த
நடிகைகளிடம் பேசக்கூடாது என்று சமந்தா கூறியதை அவர் ஏற்க மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. சமந்தா தன்னை விட அதிக படங்களில் நடித்து வெற்றிகரமான நடிகையாக
வளர்ந்தது, நாகசைதன்யாவுக்கு பொறாமையை ஏற்படுத்தியதாகவும், இதுவும் விவாகரத்துக்கு காரணம் என்றும் கூறுகின்றனர்
கடினமான காலம் உன்னை வலிமையாக்கும் – ஷாருக்கான் மகனுக்கு ஆறுதல் கூறிய பிரபல நடிகர்
கடினமான காலம் உன்னை வலிமையாக்கும் – ஷாருக்கான் மகனுக்கு ஆறுதல் கூறிய பிரபல நடிகர்
தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தியது தொடர்பாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடினமான காலம் உன்னை வலிமையாக்கும் – ஷாருக்கான் மகனுக்கு ஆறுதல் கூறிய பிரபல நடிகர்
ஷாருக்கானுடன் ஆரியன் கான்
மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் நடைபெற்ற விருந்தில் போதைப் பொருள் பயன்படுத்துவதாக, போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு
தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தியது தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கானும் ஒருவர் ஆவார்.
ஷாருக்கானின் மகனுக்கு ஆதரவாக பாலிவுட் பிரபலங்களான திரைப்பட தயாரிப்பாளர் ஹன்சல் மேத்தா, நடிகர்கள் பூஜா பட் மற்றும் சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கருத்து தெரிவித்து
உள்ளனர். தற்போது பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், சமூக வலைத்தள பக்கத்தில் ஆர்யனுக்கு ஆறுதலாக ஒரு கடிதம் வெளியிட்டு உள்ளார்.
அதில், என் அன்பான ஆரியன், வாழ்க்கை ஒரு விசித்திரமான பயணம். இது நிச்சயமற்றது என்பதால் அது சிறந்ததாக உள்ளது. அது உங்களுக்கு அனுபவங்களை கொடுக்கிறது. ஆனால் கடவுள் கனிவானவர். அவர் விளையாடுவதற்கு கடினமான பந்துகளை மட்டுமே கொடுக்கிறார்.
குழப்பங்களுக்கு மத்தியில் நீங்கள் உங்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கான அழுத்தத்தை உணரும்போது நீங்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். ஆர்யன்
தனது கோபம், குழப்பம், உதவியற்ற தன்மை ஆகியவற்றை அப்படியே தன்னுள் இருக்க அனுமதிக்க வேண்டும். கடினமான காலங்கள் உன்னை வலிமையாக்கும் என கூறி உள்ளார்.
பிரபாகரன் மகன் கொலை- அதிர்ந்த பாரளுமன்றம்- சீறிய ஸ்ரீதரன் எம்பி
பிரபாகரன் மகன் கொலை- அதிர்ந்த பாரளுமன்றம்- சீறிய ஸ்ரீதரன் எம்பி
அரசின் கோர முகத்தை அம்பலப்படுத்தி நிற்கும் சிறுவர் படுகொலைகள்: சிறீதரன் எம்.பியின் பேச்சால் நாடளுமன்றில் கூச்சல் குழப்பம்!
கடந்த வெள்ளிக்கிழமை, ஒக்ரோபர்.01 ஆம் திகதி சர்வதேச சிறுவர் தினமான அன்றைய நாள், இலங்கை அரசால் கோரமாகப் படுகொலை செய்யப்பட்ட, விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் மேதகு.வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் இளையமகன் செல்வன்.பிரபாகரன் பாலச்சந்திரன் அவர்களது 25 ஆவது அகவை நாளாகும்.
முள்ளிவாய்க்கால் மண்ணில் கொத்துக்கொத்தாகத் தமிழர்களைக் கொன்றொழித்த இனவாத அரசின் கோர முகத்தை இந்த உலகுக்கு எண்பித்த ஆகப்பெரும் போர்க்குற்றச் சாட்சியமாய் இசைப்பிரியாவின் இறுதிக் கணங்களும், பாலச்சந்திரனின் படுகொலையும் அமைந்திருந்தது.
சுற்றிவர மண்மூட்டைகளால் சூழப்பட்ட ஓர் மரப்பலகையில், கையில் ஒரு பிஸ்கட் பக்கற்றும், கையருகே ஓர் நீர்க்குவளையுமாக, எந்தச் சலனமுமற்று எதையோ வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்த பன்னிரு வயதுப் பாலகன் பாலச்சந்திரனின் புகைப்படத்தையும், அதே
பாலச்சந்திரன் மேலாடையற்ற மார்பில் ஐந்து துப்பாக்கிச் சன்னங்கள் துளைத்த அடையாளத்தோடு, உயிர்பிரிந்த நிலையில் தரையில்க் கிடந்த புகைப்படத்தையும் சனல்.4 தொலைக்காட்சி வெளியிட்ட அந்தக் கணங்கள், உலகப் பரப்பெங்கும் வாழும் இதயமுள்ள ஒவ்வொரு மனிதர்களையும் இனம், மொழி, மதம் கடந்து இரத்தக் கண்ணீர் வடிக்கச் செய்திருந்தது.
தமிழீழத் தேசியத் தலைவராக, தமிழர்கள் தம் நெஞ்சில் வைத்துப் பூசித்த வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் இளையமகன் என்ற ஒற்றைக் காரணமே, பன்னிரண்டு வயதுப் பாலகனான பாலச்சந்திரனை கோரமாகப் படுகொலைசெய்த இந்த இனவெறி அரசின்
உயிர்ப்பலிப் பசிக்குப் போதுமானதாக இருந்தது. காலம்காலமாக ஆட்சிக்குவந்த அத்தனை சிங்கள அதிகார பீடங்களும் தமிழர்கள் மீதான அதிகபட்ச அதிகார வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டிருந்தாலும், தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலராகவும்,
தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவும் இருந்த அப்போதைய ஆட்சிக் காலத்தில், முள்ளிவாய்க்கால் மண்ணில் வைத்து ஈழத்தமிழர்கள் மீது இரக்கமற்று நடத்தப்பட்ட
இன அழிப்பிற்கு ஏற்றுக்கொள்ளத்தக்க சாட்சியங்களுள் ஒன்றாய் அமைந்த பாலச்சந்திரனின் சாவு, ஒட்டுமொத்த தமிழர்களின் இதய ஓரங்களிலும் இன்னமும் ரணமாய் வலித்துக் கொண்டேதான் இருக்கிறது.
1990 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி, ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டுவரப்பட்ட சிறுவர் உரிமைகள் தொடர்பிலான பிரகடனத்தை ஏற்று, 1991 ஆம் ஆண்டு இலங்கை அதில்
கைச்சாத்திட்டுள்ள போதும், இந்த நாட்டில் தமிழ்ச் சிறுவர்களுக்கான அடிப்படை உரிமைகள் என்ற சொற்பிரயோகத்துக்கு எந்த அவசியமுமற்று, அவர்களுக்கான உயிர்வாழும் உரிமை கூட பௌத்த சிங்கள பேரினவாதிகளால் வலிந்து பறிக்கப்பட்டு வருவதை இவ்விடத்திலே நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.
இறுதிப்போரின் போது கொல்லப்பட்ட எண்ணுக்கணக்கற்ற சிறுவர்கள், ஆவணப்படுத்தப்படாத படுகொலைச் சம்பவங்கள், கணக்கிடப்படாத இழப்புக்களைக் கொண்ட படுகொலைகள் நீங்கலாக 1974 ஜனவரி 10 தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் படுகொலை முதல் 2008 டிசம்பர் 20
வட்டக்கச்சி குண்டுவெடிப்பு வரையான, ஆவணப்படுத்தப்பட்ட 95 படுகொலைச் சம்பவங்களில் மட்டும் கைக் குழந்தைகள் தொடக்கம் 18 வயது வரையான 1929 இற்கும் அதிகமான சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக வடக்கு, கிழக்கு மனித உரிமைகள் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றுள் மிக முக்கியமாக நவாலிப் படுகொலை உள்ளிட்ட, அரச படைகளால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித் தாக்குதல் சம்பவங்களைக் குறிப்பிடலாம். 1995 ஜீலை 9, பலாலி மற்றும் அளவெட்டிப் பகுதிகளில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர்த்
தாக்குதல்களால் நிலைகுலைந்து, உடுத்த உடைகளுடன் உயிரைக் கையில்பிடித்தபடி, நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள்,
வயோதிபர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் மீது புக்காரா விமானங்கள் ஈவிரக்கமின்றி வீசிச் சென்ற 13 குண்டுகளால், 147 பேர் கொல்லப்பட்டதோடு, 360 இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தனர். இதன்போது கொல்லப்பட்டவர்களுள் 46 சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர்.
1995 செம்ரெம்பர் 22 யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மகாவித்தியாலயம் மீது இலங்கை விமானப்படை மேற்கொண்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் 6 தொடக்கம் 16 வயதுக்குட்பட்ட 21 மாணவர்கள் உடல் சிதறிப் பலியாகியிருந்தார்கள்.
1996 செப்ரெம்பர் 7 ஆம் திகதி, யாஃசுண்டுக்குழி மகளிர் கல்லூரி மாணவியான செல்வி.கிருஷாந்தி குமாரசாமி அவர்கள், செம்மணி இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினரால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதோடு, அவரைத் தேடிச்சென்ற
தாயார் திருமதி.இராசம்மா குமாரசாமி, அயலவர் திரு.கிருபாமூர்த்தி, சகோதரன் செல்வன் குமாரசாமி பிரணவன் ஆகியோரையும் இராணுவத்தினர் படுகொலை செய்து செம்மணி வயல் வெளியில் புதைத்திருந்தனர்.
அக்காலப்பகுதியில் இராணுவத்தினரால் கடத்தப்பட்ட, காணாமலாக்கப்பட்ட 600 இற்கும் அதிகமான யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் அதே செம்மணி வயல் வெளியில் புதைக்கப்பட்டமையும் இந்த நாட்டில் நடைபெற்ற படுகொலைகளுக்கான சாட்சியங்களே!.
2006 ஓகஸ்ட் 14, முல்லைத்தீவு, வள்ளிபுனத்தில் சிறுவர் இல்லம், நலன்புரி நிலையம், குடியிருப்புக்கள் என்பன அமைந்திருந்த பகுதியில், அதிலும் குறிப்பாக அநாதரவான குழந்தைகளின் காப்பகமான செஞ்சோலைச் சிறுவர் இல்லத்தை இலக்குவைத்து, மிகப்
பயங்கரமாக 16 தடவைகள் மேற்கொள்ளப்பட்ட விமானக் குண்டுவீச்சில் பாடசாலை மாணவிகள், செஞசோலைச் சிறுவர் இல்லச் சிறுமிகள் உள்ளிட்ட 17 – 19 வயதிற்கு இடைப்பட்ட 61 பேர்
கோரமாகப் படுகொலை செய்யப்பட்டிருந்ததோடு, 120 இற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்திருந்தனர்.
2007 கார்த்திகை 27, தமிழ்த் தேசிய மாவீரர் தினமான அன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஐயங்கன்குளம் பகுதியில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் ஆறு மாணவர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
குழந்தைகள், சிறுவர்கள் என்ற எந்த பேதமுமற்று, அடிப்படை மனிதநேயச் சிந்தனைகூட இல்லாது, சர்வதேச நியமங்கள் அனைத்தையும் மீறி, தமிழர்கள் என்ற இனவெறிச் சிந்தனையின்
வெளிப்பாட்டால், பௌத்த, சிங்கள பேரினவாதத்தால் படுகொலைசெய்யப்பட்ட பாலச்சந்திரன் உள்ளிட்ட அத்தனை சிறுவர்களையும் நான் இந்த இடத்தில் நினைவுகூருகிறேன்.
இதற்கு அப்பால் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புப் போரின் இறுதிக் கணங்களில், படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து பல சிறுவர்கள், அதிலும் குறிப்பாக விடுதலைப்புலிகளின் முதல்நிலை உறுப்பினர்கள் பலரது பிள்ளைகள் காணாமலாக்கப்பட்டுள்ளனர்.
எம்மால் சேகரிக்க முடிந்த தகவல்களின் அடிப்படையில்
- விடுதலைப்புலிகளின் அரசியல்துறை அறிக்கைப் பொறுப்பாளர் அம்பி அவர்களின் குழந்தைகள் பிரியாளினி பரமேஸ்வரன், பிரதீபன் பரமேஸ்வரன், பிறையாளன் பரமேஸ்வரன்,
- மணலாறு தாக்குதல் படையணியைச் சேர்ந்த இளங்குமரன் அவர்களின் மகள் அறிவுமதி,
- யாழ் மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் இளம்பரிதி அவர்களின் பிள்ளைகளான தமிழொளி மகாலிங்கம், எழிலினி மகாலிங்கம், மகிழினி மகாலிங்கம்,
- கலை மாஸ்டரின் மகள்மாரான கானிலா திருச்செல்வம், லக்சாயினி திருச்செல்வம்,
- மணலாறு தளபதி மஜீத் அவர்களின் பிள்ளைகளான சாருஜன் முரளிதரன், அபிதா முரளிதரன்,
- அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் அவர்களின் மகன் ஜனகன் மகேந்திரன்,
- நிர்வாகசேவைப் பொறுப்பாளர் பிரியன் அவர்களின் ஒரு வயதேயான மகள் கலைச்சுடர் தயாசிறீ,
- விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் ராஜா அவர்களின் மகன்மாரான சாருஜன் கிருஸ்ணமூர்த்தி, நிகநிலான் கிருஸ்ணமூர்த்தி, ஆதிரையன் கிருஸ்ணமூர்த்தி,
- வனவளத்துறைப் பொறுப்பாளர் சக்தி அவர்களின் பிள்ளைகளான தமிழின்பன் சத்தியமூர்த்தி, தமிழ்முகிலன் சத்தியமூர்த்தி, இசைநிலா சத்தியமூர்த்தி,
- சுடர் அவர்களின் குழந்தைகளான அபிராமி சுரேஸ்குமார், அபிசன் சுரேஸ்குமார்,
- வனவளப் பாதுகாப்புக்கான மன்னார் மாவட்ட பொறுப்பாளர் சுமன் அவர்களின் மகள் தணிகைச்செல்வி செல்வகுமார்,
- அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் தங்கன் அவர்களின் பிள்ளைகளான துவாரகன் சுதாகரன், துவாரகா சுதாகரன், துர்க்கா சுதாகரன்,
- மன்னார் மாவட்ட படையணிப் பொறுப்பாளர் வாகீசன் அவர்களின் பிள்ளைகளான சிந்தரசி நிமலநாதன், கோகலை நிமலநாதன், கலையரசன் நிமலநாதன்,
- புகைப்படப்பிரிவுப் பொறுப்பாளர் ஜவான் அவர்களின் மகள் எழில்நிலா சற்சுதன் உள்ளிட்டோர் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் காணாமலாக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவங்கள் அனைத்தும் இலங்கை அரசின் கோர முகத்தை எண்பிக்கும் சாட்சியங்களாக, ராஜபக்சக்களின் கறைபடிந்த கரங்களின் விம்பங்களாக கடைசி ஈழத்தமிழன் உள்ளவரை, அவர்களின் வாழ்வியல் வலிசொல்லும் வடுக்களாக நெஞ்சப் பசுமைகளில் என்றுமே நிலைத்திருக்கும்.
இந்த நினைவுகளுக்கும், இலங்கை நாட்டின் சுதேசிய இனமான தமிழ்த்தேசிய இனம் காலம்காலமாக சிந்தி வரும் கண்ணீருக்கும், காரணமானவர்கள் கரிசனையற்றுக் கண்மூடி இருந்தாலும் காலமாவது பதில் சொல்லட்டும்.
கொரனோ மருத்துவ மண்டபத்தில் – மாவீரர் நாள் – லண்டன் புலிகள் அறிவிப்பு
கொரனோ மருத்துவ மண்டபத்தில் – மாவீரர் நாள் – லண்டன் புலிகள் அறிவிப்பு
பிரிட்டன் லண்டன் பகுதியில் கொரனோ காலத்தில் அதிக மக்கள் பாதிக்க பட்டனர் ,அவ்வாறான வேளை வழமையாக மாவீரர் நாள் இடம் பெறும் எஸ்சல் மண்டபம் தற்காலிக கொரனோ
மருத்துவமனையாக மாற்றம் பெற்றது ,அவ்வாறான அந்த மண்டபத்தில்
பிரித்தானிய புலிகள் குழு மாவீரர் நாள் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்
இது அப்பாவி தமிழ் மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது ,கொரனோ மீளவும் பரவி வரும் நிலையில் மூன்றாவது ஊசி செலுத்த பட்டு வருகிறது
இதனாலேயே மக்கள் பீதியடைந்துள்ளனர் ,இதனை கருத்தில் கொண்டு மேற்படி செயல்பாட்டு குழுவினர் செயல்படுவார்களா என்பதே மக்கள் கருத்தாக உள்ளது
கதலர்கள் ஓட்டம் – நண்பர்கள் சிறையில் – பளையில் நடந்த பயங்கரம்
கதலர்கள் ஓட்டம் – நண்பர்கள் சிறையில் – பளையில் நடந்த பயங்கரம்
நண்பர்களே அதிகம் பகிருங்கள்…
இந்த படத்தில் உள்ள நபர் பளை பிரதேச புலோப்பளையை சேர்ந்தவர்.இவர் தனது நண்பர்களிடம் தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் எனது காதலை சேரத்து வைக்குமாறும்
கேட்டிருக்கிறார்.இல்லாவிட்டால் தான் உயிரை மாய்த்து விடுவேன் என்று எச்சரித்துள்ளார். இதை கேட்ட அப்பாவி நண்பர்கள் அந்த பெண்ணின் வயது என்னவென்று கேட்ட போது அதற்கு அவர்
18வயது என்று பொய் கூறியுள்ளார். உடனே நண்பர்கள் சேர்ந்து அந்தப்பெண்ணை அவரது வீட்டில் இருந்து தூக்கி சென்று அந்த காதலனுடன் சேர்த்து வைத்துள்ளார்கள்.
அதன் பின் அந்த காதலன் அவரது தொலைபேசி அனைத்தையும் நிறுத்தி விட்டு தலை மறைவாககயுள்ளார்.
சேர்த்து வைத்த நண்பர்களை பளை பொலிசார் கைது செய்துள்ளனர்.அதன் பின்தான் தெரியும் அந்த பெண்ணுக்கு வயது 15என்று ஓடிச் சென்ற இருவரும் நிம்மதியாக இருக்க சேர்த்து வைத்த
இளைஞர்கள் கைதாகி சிறையில் வாடி நிற்கின்றனர்.தற்பொழுது கைதானவர்களின் உண்மையான நண்பர்கள் இரவு பகலாக உண்ணாமல் ஓடிய காதலர்களை தேடி வருகின்றனர்.
காரணம் அவர்கள் வந்தால்தான் சிறையில் இருப்பவர்கள் விடுதலை செய்யப்படுவார்களாம்.உண்மையில் சம்பந்தமே இல்லாமல் போலியான நண்பனுக்கு உதவிய
நண்பர்கள் விடுதலையாக நீங்களும் உதவி புரியுங்கள்.ஓடிய இருவரும் வடமாகாணத்தினுள்தான் சுற்றி திரிகின்றனர்.நண்பனை ஏமாற்றியவர்கள் அவர்கள் தங்கி நிற்கின்ற வீடுகளுக்கு பொய் வார்த்தைகளை கூறி நிற்கின்றனர்.
எனவே அன்பானவர்களே எந்த பிழையும் இல்லாமல் நண்பனின் ஏமாற்றத்தால் சிறையில் உள்ள நண்பர்கள் விடுதலையாக உதவிடுங்கள்.இவர்களை எங்கு கண்டாலும் தெரியப்படுத்துங்கள்.
நன்றி
பளை ஈசா
காதலர்கள் கருத்து தரப்படின் பகிர படும்
சிறைகளில் அடைபட்டிருக்கும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விடுவியுங்கள்; பா.உ முஷாரப்.
சிறைகளில் அடைபட்டிருக்கும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விடுவியுங்கள்; பா.உ முஷாரப்.
பைஷல் இஸ்மாயில் –
ஈஸ்டர் தாக்குதல் சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி முஸ்லிம்கள் விரைவாக விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம் முஷாரஃப் அவர்கள் தெரிவித்தார்.
2021-10-06 அன்றைய பாராளுமன்ற உரையின் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சந்தேக நபர்களாக நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களுள் எந்தவொரு குற்றமும் புரியாத பலரும் உள்ளனர். க.பொத. சா/த, உ/த பரீட்சைகளைத் தொடர்ந்து கிடைக்கின்ற விடுமுறையை பயனுள்ள வகையில்
கழிக்கும் நோக்குடன் சன்மார்க்க நற்போதனைகள் கேட்பதற்காக சென்ற இளைஞர்கள் கூட சந்தேகத்தின் பேரில் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நீதியான முறையில் விரைவாக விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்பட வேண்டும்.
“ஒரு தேசத்தின் சிறைகளுக்குள் இருக்கும் வரை யாரும் உண்மையிலேயே ஒரு தேசத்தை அறிய மாட்டார்கள். ஒரு தேசம் அதன் உயர்ந்த குடிமக்களை எவ்வாறு நடத்துகிறது என்பதிலன்றி,
கீழ்நிலை மக்களை எவ்வாறு நடத்துகின்றது என்பதிலேயே தேசம் குறித்து தீர்மானிக்கப்படல் வேண்டும்” என்கிறார் தென்னாபிரிக்காவின் தந்தை நெல்சன் மண்டேலா.
எமது அரசியலமைப்புச் சட்டமும் எந்தவொரு கைதியும் சித்திரவதைக்கு உட்படுத்தப்படக் கூடாது என்கிறது. இருப்பினும் மெகசின் சிறைச்சாலை உயிரிழப்பு சம்பவம், அநுராதபுரம் சிறைச்சாலை சம்பவம் என்பவற்றிற்கு பதில் கூற வேண்டிய அரசாங்கங்களின் பொறுப்பு கேள்வியாகவே
நீடிக்கிறது. சிறைகள், கைதிகளை புனர்வாழ்வளிக்கின்ற இடமாக இருக்க வேண்டுமே அன்றி குற்றங்களுக்கு துணைபோவதாக இருக்கக் கூடாது. சிறைக் கைதிகளின் உரிமைகள் கண்ணியத்துடன் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.
போத்தலில் உச்சா வடிக்கும் – முசுலிம் பயங்கரவாத எம்பி
போத்தலில் உச்சா வடிக்கும் – முசுலிம் பயங்கரவாத எம்பி
இலங்கையில் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க பட்டுள்ள ரிசார்ட் பதியுதீன்மாலை ஐந்து மணிக்கு பின்னர் போத்தலில் சிறுநீர்கழிப்பதாக பாராளுமன்றில் கலவரம் வெடித்துள்ளது
இது சிறைகளில் இயல்பான ஒன்று எனவும் இதனையே சிறையில் அடைக்க பட்டவர்கள் கடை பிடிக்கின்றார் என மாற்று கருத்து தெரிவிக்க பட்டுள்ளது
குண்டு வெடிப்பு ,மற்றும் வீட்டு பணிப்பெண் கொலை உட்பட்ட குற்றச்சாட்டுகளில் இவர் சிக்கி தவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது
எப்படி வாழ்வில் உயர்வாய்
எப்படி வாழ்வில் உயர்வாய்
மெல்லிய அலைகள் ஓடி விழ- வயலில்
மெலிந்த கடலலை ஆடி எழ
இரட்டை எருதுகள் கால் விழ
இங்கொரு துயர் முளை எழ
உழவு செய்வான் விவசாயி – இந்த
உயர் வதை செய்வான் அவன் பாவி
எருதை வதைத்தால் உயர்ந்திடுமா – உன்
வாழ்வில் ஏற்றம் வந்து பிறந்திடுமா ..?
முக்கி வதங்கி மூச்சடக்கி
முக்கால் வயிறு பசியடக்கி
முன்னே வாயால் நுரை தள்ள
முன்னே தன் பலம் அது தள்ள
அரை ஏக்கர் உளவு
அன்றைய தினம் பிளவு
ஓய்வு என்பது ஒரு மணிதான்
ஓல வாழ்வு அனுதினம் தான்
மதத்தில் சைவம் என்பானே
மாதா மாட்டை மிதிப்பானே
இப்படி வதைகள் இவர் விதைத்தால்
எப்படி வாழ்வில் உயர்வு வரும் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 07-10-2021
பயணிகள் விமானத்தில் ஆயுத கடத்தல் – சிக்கிய விமான நிறுவனம்
பயணிகள் விமானத்தில் ஆயுத கடத்தல் – சிக்கிய விமான நிறுவனம்
உலகில் புகழ்பெற்ற Ethiopian Airlines பயணிகள் விமானம் மூலம் எரித்திரியா போராளி குழுக்களுக்கு ஆயுதம் ஏற்றி சென்று வழங்கியுள்ளது அம்பலமாகியுள்ளது
மேற்படி ஆயுதம் விநியோகம் அங்குள்ள சில நபர்களினால் படம் பிடிக்க பட்டு வெளியான நிலையில் மேற்படி விடயம் பெரும் சிக்கலை அந்த விமான நிறுவனத்திற்கு ஏற்படுத்தியுள்ளது
இராணுவம் மீது தாக்குதல் 9 பேர் மரணம் – 11 பேர் காயம்
இராணுவம் மீது தாக்குதல் 9 பேர் மரணம் – 11 பேர் காயம்
மாலியில் அரச இராணுவம் மீது போராளி குழு தாக்குதல் நடத்தியதில் ஒன்பது இராணுவத்தினர் சம்பவ இடத்திலபலியாகினர் ,மேலும் பதினோரு பேர் படுகாயமடைந்துள்ளனர்
தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையில் மோதல்கள் வலுத்து வருகிறது
எல்லையில் பதட்டம் இல்லை – ஈரான் அறிவிப்பு
எல்லையில் பதட்டம் இல்லை – ஈரான் அறிவிப்பு
ஈரானின் வடதெற்க்கு பகுதிகளில் பதட்டம் இல்லை என ஈரானின் மூத்த இராணுவ அத்தளபதி ஒருவ தெரிவித்துள்ளார்
தலிபான்கள் ஆட்சியை அமைத்ததன் பின்னர் தமது எல்லைகளை பலப்படுத்தி தொடர் கண்காணிப்பில் ஈரானிய இராணுவம் ஈடுபடுத்த பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது .
புதிய சாதனை படைத்த மாநாடு டிரெய்லர்
புதிய சாதனை படைத்த மாநாடு டிரெய்லர்
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள மாநாடு திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
புதிய சாதனை படைத்த மாநாடு டிரெய்லர்
சிம்பு
சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற
கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
மாநாடு படத்தின் டிரெய்லர் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த டிரெய்லர், தற்போது புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதன்படி இப்படத்தின்
டிரெய்லர் யூடியூபில் 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்று உள்ளது. சிம்பு நடித்த படத்தின் டிரெய்லர் ஒன்று 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெறுவது இதுவே முதன்முறை. இதனை சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்
பிக்பாஸ் நிகழ்ச்சியால் ரொம்ப பாதிக்கப்பட்டேன் – ரம்யா பாண்டியன்
பிக்பாஸ் நிகழ்ச்சியால் ரொம்ப பாதிக்கப்பட்டேன் – ரம்யா பாண்டியன்
பட வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக நடிகை ரம்யா பாண்டியன் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியால் ரொம்ப பாதிக்கப்பட்டேன் – ஓப்பனாக சொன்ன ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்
தமிழில், டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரம்யா பாண்டியன், போட்டோஷூட் மூலம் பிரபலமானார். பின்னர் சின்னத்திரையில் குக் வித் கோமாளி
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அசத்தினார். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கி இறுதிப்போட்டி வரை முன்னேறினார். இந்நிகழ்ச்சி மூலம் அவரது ரசிகர் வட்டம் பெரிதானது. தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பிக்பாஸ், குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளில் உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சி எது என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள ரம்யா பாண்டியன், “பட வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து
கொண்டேன். ஆனால், அந்த நிகழ்ச்சியால் நான் ரொம்ப பாதிக்கப்பட்டேன். அதைவிட குக் வித் கோமாளி நிகழ்ச்சி பெஸ்ட். எனக்கு மிகவும் பிடிக்கும். காமெடியுடன் ஜாலியாக இருக்கும். ரசிகர்களிடம் இருந்து எந்தவித வெறுப்பும் வராது” என கூறியுள்ளார்.
கார் டிரைவரால் கடத்தப்பட்டாரா சஞ்சனா கல்ராணி
கார் டிரைவரால் கடத்தப்பட்டாரா சஞ்சனா கல்ராணி
போதைப்பொருள் பயன்படுத்தியதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நடிகை சஞ்சனா கல்ராணி, ஜாமீனில் வெளியே வந்தார்,
கார் டிரைவரால் கடத்தப்பட்டாரா சஞ்சனா கல்ராணி? – போலீஸ் விசாரணையில் வெளிவந்த உண்மை
சஞ்சனா கல்ராணி
கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் சஞ்சனா கல்ராணி. இவர் கடந்த ஆண்டு போதைப்பொருட்கள் வழக்கில் சிக்கினார். அதில் நடிகை சஞ்சனா போதைப்பொருட்கள் பயன்படுத்தி இருப்பது தடய அறிவியல் ஆய்வில் தெரியவந்துள்ளது. தற்போது ஜாமீனில் வெளியே இருந்து வருகிறார்.
இந்த நிலையில், பெங்களூரு இந்திராநகரில் இருந்து நேற்று முன்தினம் காலையில் வாடகை காரில் ராஜராஜேசுவரி நகரில் நடந்த சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்ள நடிகை சஞ்சனா சென்றார். அப்போது காரில் ஏ.சி. போடும் விவகாரம் தொடா்பாக சஞ்சனாவுக்கும், டிரைவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அந்த சந்தர்ப்பத்தில் டிரைவர் சூசை மணியை சஞ்சனா தகாத வார்த்தையில் திட்டியதாக தெரிகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக ராஜராஜேசுவரி நகர் போலீஸ் நிலையத்தில் நடிகை சஞ்சனா மீது டிரைவர் சூசை மணி புகார் அளித்துள்ளார். அந்த புகாரை போலீசார் பெற்றுக் கொண்டுள்ளனர். அத்துடன் சஞ்சனா தகாத வார்த்தையில் திட்டுவது தொடர்பான வீடியோ ஆதாரங்களையும் போலீசாரிடம் சூசைமணி வழங்கி உள்ளார். அதன்பேரில், ராஜராஜேசுவரி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக நடிகை சஞ்சனா நேற்று விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து நடிகை சஞ்சனா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது; நான் தவறு செய்யவில்லை. இந்திராநகரில் இருந்து ராஜராஜேசுவரி நகருக்கு நான் வாடகை காரில் சென்றேன். என்னிடம் சொந்தமாக கார் இல்லை. ஏற்கனவே இருந்த காரை கணவர் பயன்படுத்துகிறார். சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைக்கவில்லை. என்னிடம் பணமும் இல்லை. அதனால் தான் வாடகை காரில் சென்றேன்.
சஞ்சனா கல்ராணி
சஞ்சனா கல்ராணி
ஒரு சினிமா படப்பிடிப்பு நடந்த ராஜராஜேசுவரி நகருக்கு செல்ல வேண்டும் என்று டிரைவரிடம் கூறினேன். ராஜராஜேசுவரி நகருக்கு செல்வதற்கு பதிலாக கெங்கேரி நோக்கி கார் சென்றது. கார் வேறு பாதையில் சென்றதால், என்னை கடத்தி செல்வதாக உணர்ந்தேன். அதுபற்றி மட்டுமே டிரைவரிடம் கேட்டு தகராறு செய்தேன். அவரை தகாத வார்த்தையில் திட்டவில்லை. இந்த விவகாரத்தில் நான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை. என் மீது டிரைவர் போலீசில் புகார் அளித்துள்ளார். எனது தரப்பு நியாயம் பற்றி போலீசாரிடம் தெரிவிப்பேன்.
நான் மேக்கப் போடாத காரணத்தால், என்னை யாரும் அடையாளம் கண்டு கொள்ள முடியாது. மேக்கப் போடாமல் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருவேன். டிரைவருக்கும் நான் யார்? என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கார் டிரைவர் தவறான பாதையில் சென்றது பற்றி கேட்டதால் தான் என் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். நான் ஒரு நடிகை என்பதால், இந்த விவகாரம் பெரிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு நடிகை சஞ்சனா கூறினார்.
இந்த சம்பவம் குறித்து நடிகை சஞ்சனாவிடமும், கார் டிரைவரிடமும் போலீசார் விசாரித்து தகவல்களை பெற்று உள்ளனர். மேலும் 2 பேரையும் சமாதானப்படுத்தி போலீசார் அனுப்பி வைத்து உள்ளனர். இதற்கிடையில், கார் டிரைவருடன் நடந்த மோதல் விவகாரத்தில் சமூக வலைதளங்களில் நடிகை சஞ்சனா காரில் கடத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளிக்கூடத்திற்கு துப்பாக்கியுடன் சென்ற 16 வயது மாணவன்
பள்ளிக்கூடத்திற்கு துப்பாக்கியுடன் சென்ற 16 வயது மாணவன்
முசாபர்பூரில் பள்ளிக்கூடத்திற்கு துப்பாக்கி எடுத்துச் சென்ற மாணவன் கைது செய்யப்பட்டு சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார்.
பீகாரில் பள்ளிக்கூடத்திற்கு துப்பாக்கியுடன் சென்ற 16 வயது மாணவன்
கைப்பற்றப்பட்ட துப்பாக்கி
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் கத்ரா என்ற இடத்தில் அரசு பள்ளி இயங்கு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 16 வயது மாணவன் கடந்த 5-ந்தேதி துப்பாக்கியுடன் பள்ளிக்கு
வந்துள்ளான். மாணவன் துப்பாக்கி வைத்துள்ளான் என்ற தகவலை அறிந்த போலீசார், அதை கைப்பற்றி மாணவனை கைது செய்துள்ளனர். தற்போது மாணவரை சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளியில் அடைத்துள்ளனர்.
கை விலங்குடன் மாணவன்
துப்பாக்கி கிடைத்தது எப்படி? உள்ளிட்ட தகவலை பெற அவனிடம் விசாணை நடத்தி வருகிறோம் என முசாபர்பூர் கிழக்குப் பகுதி எஸ்.பி., எம்.கே. பாண்டே தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் பூகம்பம் – 20 பேர் பலி – 300 பேருக்கு காயம்
பாகிஸ்தானில் பூகம்பம் – 20 பேர் பலி – 300 பேருக்கு காயம்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இன்று (07) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 20பேர் பலியானார்கள், 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த பூகம்பம் 5.8 என்று ரிக்டர் அளவில் பதிவாகி இருந்தது. இந்த பூகம்பம் ஏற்பட்டபோது தலைநகர் இஸ்லாமாபாத் மட்டுமின்றி பல்வேறு நகரங்களையும் அதிரச் செய்தது, இந்தியாவின் டெல்லி உள்ளிட்ட பகுதிகளிலும் அதிர்வு உணரப்பட்டது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் மிர்பூரை மையமாகக் கொண்டு பூகம்பம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிர்பூர் நகரின் போலீஸ் டிஐஜி சர்தார் குல்பராஸ் கான் கூறுகையில், “இன்று ஏற்பட்ட பூகம்பத்தில் குறைந்தபட்சம் 20 பேர் பலியானார்கள் 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.
பாகிஸ்தான் புவியியல் அமைப்பு கூறுகையில், “ பஞ்சாப் மாநிலத்தின் ஜீலம் நகரின் மலைப்பகுதி அருகே, பூமிக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது 5.8 என ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளது
பூகம்பம் ஏற்பட்ட உடன் மிர்பூரில் உள்ள வீடுகள், கடைகள்,வர்த்தக கட்டிடங்கள் இடிந்து நொறுங்கின. இதனால் இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியுள்ளனர். இதனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு, காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
மிர்பூர் செல்லும் சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன, பூகம்பம் ஏற்பட்ட போது சாலையில் சென்ற பல வாகனங்கள் கவிழ்ந்தன, சில கார்கள் சாலை இரண்டாகப் பிளந்தபோது அதற்குள் சிக்கிக்கொண்டன.
பூகம்பம் ஏற்பட்டவுடன் வீடுகளிலும், கடைகளிலும் இருந்தமக்கள் அனைவரும் அலறியடித்துக்கொண்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்ள சாலைக்கு ஓடி வந்தனர்.
பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் குவாமர் ஜாவித் பஜ்வா கூறுகையில், “இடிபாடுகளில் சிக்கி இருக்கும் மக்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ராணுவப்படைகள், மருத்துவக்குழுக்கள் பூகம்பம் நடந்த இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.
பூகம்பத்தால் பெரும்பாலும் மிர்பூர், ஜீலம் நகரமே அதிகமான சேதம் அடைந்துள்ளன, ஏராளமானோர் வீடுகளையும், உடைமைகளையும் இழந்துள்ளனர், பலர் உறவுகளையும், உடைமைகளையும் இழந்து தவிக்கின்றனர்.
இந்த பூகம்த்தின் அதிர்வு பெஷாவர், ராவல்பிண்டி, லாகூர், கார்டு, கோஹத், சராசடா, கசூர், பைசலாபாத், குஜ்ராத், சாய்லகோட், அபோட்டாபாத், மான்செரா, சித்ரல், மாலாகன்ட், முல்தான், சாங்லா, ஓகரா, நவ்சேரா, அடாக்,ஜாங் ஆகிய நகரங்களில் உணரப்பட்டது.
பாகிஸ்தானின் மிகப்பெரிய அணைக்கட்டான மங்களா அணை, பூகம்பம் நடந்த பகுதிக்கு அருகே இருந்தது அந்த அணை எந்தவிதமான சேதாராமும் இன்றி இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நானும் மனைவியும் அப்பாவிகள்- மோசடி மன்னர் அழுகை
நானும் மனைவியும் அப்பாவிகள்- மோசடி மன்னர் அழுகை
பென்டோரா பத்திரிகை வெளிப்படுத்தியுள்ள ஆவணங்களில் தனது பெயரும்,
தனது மனைவின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பில்
பதிலளித்துள்ள பிரபல தொழிலதிபரான திருக்குமார் நடேசன், தானும் மனைவியும்
முழுமையாக அப்பாவிகள் எனத் தான் உறுதிப்படுத்துவோம் எனத் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளிலுள்ள சொத்துக்கள் தொடர்பான பென்டோரா ஆவணங்களில் நடேசனினதும்,
அவரது மனைவியான நிரூபமா ராஜபக்ஷ வினதும் பெயர்கள் இடம்பெற்றுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே
மேற்கண்டவாறு தெரிவித்துள்ள திருக்குமார் நடேசன், எப்பிழையையும் செய்யவில்லை எனக்
கூறியுள்ளார்.
இதேவேளை, சுயாதீன விசாரணையாளர் ஒருவர் மூலம் தாமதமில்லாமல் இவ்விடயத்தை
விசாரணை செய்யுமாறு நடேசன் தெரிவித்துள்ளார். ஓய்வு பெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற
நீதிபதியொருவர் விரும்பத்தக்கது எனக் குறிப்பிட்டுள்ளார்.
விசா அனுமதி பத்திரங்களினதும் செல்லுபடியாகும் கால எல்லை நீடிப்பு
விசா அனுமதி பத்திரங்களினதும் செல்லுபடியாகும் கால எல்லை நீடிப்பு
விசா அனுமதி பத்திரங்களினதும் செல்லுபடியாகும் கால எல்லை இன்று (07) முதல் மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் பெற்றுக் கொண்டுள்ள சகல விதமான விசாக்களும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை செல்லுப்படியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கடந்த மே மாதம் 11 ஆம் திகதி முதல் எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் வீசாக்களுக்கு அக்காலப் பிரிவுக்கான விசா கட்டணங்கள் மாத்திரம் அறவிடப்படும்.
அத்துடன் எந்தவித அபராதமும் அறவிடப்பட மாட்டாது என, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எரிபொருள் நிலைய ஊழியரை அடித்த இருவர் கைது
எரிபொருள் நிலைய ஊழியரை அடித்த இருவர் கைது
மீகொடை பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊழியர்கள் இருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (06) அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர், முகக்கவசம் அணியாது எரிபொருள் நிரம்புமாறு கோரியுள்ளார்.
இதன்போது, முகக்கவசம் அணியுமாறு கூறிய எரிபொருள் நிலைய ஊழியரிடம் கோப்பட்ட சந்தேக நபர், அங்கிருந்து சென்று மற்றுமொரு நபரை அழைத்து வந்துள்ளார்.
இதனையடுத்து, எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊழியரை இருவரும் சேர்ந்து கடுமையான முறையில் தாக்கியமை அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
அத்துடன், அவர்களில் ஒருவர் ஊழியரை தரையில் அடித்து தாக்கியதுடன், அதனை தடுத்த மற்றுமொரு ஊழியரையும் அவர்கள் தாக்கியமை அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது.
இதனையடுத்து, 24 மற்றும் 36 வயதுடைய சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
காயமடைந்த ஊழியர், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ் மக்களுக்கு எச்சரிக்கை
யாழ் மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்வானிலைமற்றும் கடல் நிலை ,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
2021 ஒக்டோபர் 07ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது
மழை நிலைமை:
காங்கேசந்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாகமாத்தறை வரையான கடற்பரப்புகளில் கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
மன்னாரிலிருந்து காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பரப்புகளிலும் காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை:
மன்னாரிலிருந்து காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளும் காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும்.












