சொல்லி அடித்திருக்கிறார் இயக்குனர் சிவா – ரஜினி புகழாரம்
சொல்லி அடித்திருக்கிறார் இயக்குனர் சிவா – ரஜினி புகழாரம்
தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகி, வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் அண்ணாத்த படத்தை பற்றி நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.
சொல்லி அடித்திருக்கிறார் இயக்குனர் சிவா – ரஜினி புகழாரம்
சிவா – ரஜினிகாந்த்
ரஜினி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று
வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பை கொடுத்தார்கள்.
இந்நிலையில் இப்படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில், இயக்குனர் சிவா ‘அண்ணாத்த’ கதை சொல்லும்போதே என் கண்கள் கலங்கின. ’அண்ணாத்த’
படம் உங்கள் ரசிகர்களுக்கு மட்டுமின்றி, பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் என சிவா அப்பவே சொன்னார். அதே மாதிரி சொல்லி அடித்திருக்கிறார்’ என்று பதிவு செய்திருக்கிறார்.
ரஜினி
அண்ணாத்த படத்தில் ரஜினியுடன், குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பாண்டியராஜ், சத்யன், லிவிங்ஸ்டன், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எரிபொருள் தட்டுப்பாடு வதந்தி – அரசு
எரிபொருள் தட்டுப்பாடு வதந்தி – அரசு
சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதால் எரிபொருள்
தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக பரவி வரும் செய்திகளில் எதுவித உண்மையும் இல்லை என எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தச் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடாக நாட்டின் மொத்த எரிபொருள் தேவையில் 17 சதவீத
பெற்றோலும், 29 சதவீத டீசலும் மாத்திரமே உற்பத்தி செய்யப்படுகின்றன. கேள்விக்கு ஏற்ற
வகையில் போதுமான எரிபொருள் நாட்டில்
இருப்பதால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என தேவையில்லாமல் அஞ்ச வேண்டாமென
அமைச்சு பொதுமக்களைக் கேட்டுள்ளது.
காவல்துறை வேட்டை 86 பேர் கைது
காவல்துறை வேட்டை 86 பேர் கைது
இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறி செயல் பட்ட எண்பத்தி ஆறு பேர் கடந்த தினம்
கைது செய்ய பட்டுள்ளனர்
இதுவரை 82 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கைது செய்ய பட்டுள்ளதாக போலீசார்
தெரிவித்துள்ளனர்
கடைகளுக்கு எச்சரிக்கை – மீறினால் அனுமதி இரத்து
கடைகளுக்கு எச்சரிக்கை – மீறினால் அனுமதி இரத்து
பொதுமக்கள் முறையான சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுகிறார்களா என்பதை
பரிசீலிப்பதற்காக மேல் மாகாணத்தில் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
அதன்படி, பஸ்களில் இருக்கைகளுக்கு அதிகமாகப் பயணிகளை ஏற்றிச் செல்வது, முகக்கவசம் அணியாமை, குளிரூட்டப்பட்ட பஸ்களுக்கு நடமாடும் வியாபாரிகள் நுழைதல் போன்ற
நடடிக்கைகளை ஆராய்வதற்காக, இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (14) நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணிவரையிலான இரண்டு மணிநேர சோதனை
நடவடிக்கையில், 451 பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
318 பஸ் ஊழியர்கள், 65 குளிரூட்டப்பட்ட பஸ்கள் மற்றும் 505 வர்த்தக நிலையங்களுக்கு சுகாதார
வழிகாட்டுதல்களை மீறுவதற்கு எதிராக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கிளிநொச்சியில் கற்க வந்த மாணவி – விபத்தில் மரணம்
இலங்கை
கிளிநொச்சியில் கற்க வந்த மாணவி – விபத்தில் மரணம்
கிளிநொச்சி – ஊற்றுப்புலம் கிராமத்தில் இருந்து உயர்தரம் கற்பதற்கான அனுமதிக்கு, கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு வருகை தந்த மாணவியே, இவ்வாறு விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி – ஊற்றுப்புலம் பாடசாலையில் க.பொ.த சாதாரண தரம் கல்வி கற்ற மாணவிகள் மூவர், உயர்தர கல்விக்காக, கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு
அனுமதி பெறுவதற்காக பாடசாலைக்கு வருகை தந்தனர்.
இதன் போது, ஏ9 வீதியில் மேற்கு பக்கத்திலிருந்து பாடசாலை பக்கமாக உள்ள மஞ்சல் கடவையில் வீதியை கடக்க முற்பட்ட போது, ஏ9 வீதியில் பயணித்த பட்டா ரக வாகனம் மாணவிகள் கடந்து செல்வதற்காக நிறுத்தியது.
இதன் பின் வந்த மின்சார சபை ஒப்பந்தகாரருடைய ஹன்ரர் ரக வாகனமும் நிறுத்தியிருந்த போது, பின்னால் வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ், ஹன்ரர் ரக வாகனத்தை மோதியதில், ஹன்ரர் வாகனம் பட்டாவுடன், மோதி குறித்த வாகனங்கள் இரண்டும் மாணவிகள் மீது மோதியுள்ளன.
இதன்போது சம்பவ இடத்திலயே, திருவாசகம் மதுசாளினி (வயது 17) என்ற மாணவி உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு மாணவி காயமடைந்துள்ளார்.
குறித்த மாணவியின் தந்தை, சைக்கிளில், நாளாந்தம் ஊற்றுப்புலத்தில் இருந்து கிளிநொச்சிக்கு விறகு வெட்டி விற்பனை செய்யும் தொழிலாளி என்பதுடன், மிகவும் வறுமைக்குட்பட்ட நிலையில் தனது மகளை உயர்தரத்துக்கு கற்பித்து அனுப்பிய நிலையில், முதல் நாளே இப்பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது.
சம்பவம் தொடர்பில், கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த விபத்தை அடுத்து, சிவில் சமூக அமைப்பினர், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பெற்றோர்கள், மாணவர்கள் என பல்லும் இணைந்து, கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்
வீதி ஒழுங்குகளை கடைபிடிக்க வேண்டிய பொலிஸார் உரிய காலத்தில் கடமையில் இருப்பதில்லை என்றும் வாகன சாரதிகள் விழிப்புணர்வின்றி வாகனங்களைச் செலுத்துதல் உள்ளிட்ட பல விடயங்களை கண்டித்து, குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வீட்டில் பாரிய வெடிப்பு – இருவர் காயம்
வீட்டில் பாரிய வெடிப்பு – இருவர் காயம்
இலங்கை அலவ்வயில் பன்கொல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் தீடிரென வெடிப்பு சம்பவம்
இடம்பெற்றுள்ளது
இதன் பொழுது அங்கிருந்த இருவர் படுகாயமடைந்துள்ளனர்
மேற்படி வெடிப்பு தொடர்பில் போலீஸ் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை
மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை
இலங்னைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை
தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
2021 நவம்பர்15ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
தென் அந்தமான் கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகியுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது மத்திய அந்தமான் கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டுள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், நவம்பர் 17ஆம் திகதியளவில் மேற்கு – மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது. அதன்பின் அது தொடர்ந்தும் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 18ஆம் திகதியளவில் ஆந்திரப் பிரதேசத்திற்கு அண்மையான கரையைக் கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டிற்கு கிழக்காக உள்ள ஆழம் கூடிய கடற்பரப்புகளில் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாகவும் எதிர்கால முன்னறிவிப்புகள் தொடர்பாகவும் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
மழை நிலைமை:
காங்கேசந்துறையிலிருந்து மன்னார், புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு அல்லது மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
காங்கேசந்துறையிலிருந்து மன்னார், கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை:
காங்கேசந்துறையிலிருந்து மன்னார், கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன், நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.
வாள்கள் ,கோடாளியுடன் மூவர் கைது
வாள்கள் ,கோடாளியுடன் மூவர் கைது
மட்டக்களப்பு சந்திவெளி பகுதியில் வாள்கள் கோடாலியுடன் மூவர் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
இவர்கள் சமூக விரோத செயல் பாட்டில் ஈடுபட்டவர்கள் என தெரிவிக்க படுகிறது
பிரிட்டன் லீவர் பூல் மருத்துவமனையில் வெடித்துசிதறிய கார் – நடந்தது என்ன ..?
பிரிட்டன் லீவர் பூல் மருத்துவமனையில் வெடித்து சிதறிய கார் – நடந்தது என்ன ..?
பிரிட்டன் லிவர்பூல் பகுதி மருத்துவமனைக்குள் நிறுத்தி வைக்க பட்டிருந்த கார் ஒன்று திடீரென
வெடித்து சிதறியுள்ளது
இதில் சம்பவ இடத்தில ஒருவர் பலியாகியுள்ளார்
மேலும் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார்
மேற்படி விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளது ,இது தீவிரவாத
செயலா என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை
ஈரானுக்கு தொடர்ந்து ஆயுத உதவிகள் – ரஷியா அதிரடி அறிவிப்பு
ஈரானுக்கு தொடர்ந்து ஆயுத உதவிகள் – ரஷியா அதிரடி அறிவிப்பு
ஈரானுக்கு தொடர்ந்து ரஷியா உதவிகளை வழங்குவோம் என ரசியா அதிரடியாக அறிவித்துள்ளது
இரு நாடுகளின் தேசிய பாதுகாப்பை முன்னிட்டு மேற்படி இராணுவ ஒத்துழைப்பு தொடரும் என
அதிரடியாக அறிவித்துள்ளது ,அமெரிக்கா மற்றும் அதன் கூட்டு நாடுகளுக்கு பெரும் பீதியை
ஏற்படுத்தியுள்ளது
லிபியாவில் கடாபி மகன் போட்டி – அமெரிக்கா அழிக்க படுமா
லிபியாவில் கடாபி மகன் போட்டி – அமெரிக்கா அழிக்க படுமா
மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்கில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் கடாபியின் மகன் செயிப் அல் இஸ்லாம் தேடப்படுகிறார்.
லிபியா அதிபர் தேர்தலில் கடாபி மகன் போட்டி
கடாபி மகன் வேட்பு மனு தாக்கல்
லிபியாவில் அடுத்த மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஐ.நா. தலைமையில் பல வருடங்களாக ஜனநாயக ரீதியிலான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும், நாட்டின் உள்நாட்டு
போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்குப் பிறகு, வரும் அடுத்த மாதம் 24ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.
இதில், மறைந்த சர்வாதிகாரி கடாபியின் மகன் செயிப் அல் இஸ்லாம் போட்டியிடுகிறார். அவர் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்திருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு செயிப் அல் இஸ்லாம் பேசியபோது பதிவு செய்யப்பட்ட வீடியோவை தேர்தல் அதிகாரி ஒருவர் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பேசிய சீப் அல்
இஸ்லாம், நாட்டின் எதிர்காலத்திற்கான சரியான பாதையை கடவுள் தீர்மானிப்பார் என்றார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, செயிப் அல்-இஸ்லாம் பொதுவெளியில் தோன்றுவது இதுவே முதல் முறை ஆகும்.
லிபியாவில் கடாபி மகன் போட்டி – அமெரிக்கா அழிக்க படுமா
லிபியாவில் கடந்த 2011ல் ஏற்பட்ட கலவரத்துடன் தொடர்புடைய மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்கில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் செயிப் அல் இஸ்லாம் தேடப்படுகிறார்.
40 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த கடாபியின் ஆட்சி, மக்கள் எழுச்சியால் 2011ல் கவிழ்ந்தது. அதன்பின்னர் கடாபியின் மகன் செயிப் அல் இஸ்லாமை கிளர்ச்சியாளர்கள் சிறைப்பிடித்தனர்.
அதனைத் தொடர்ந்து நடந்த சண்டை, உள்நாட்டு போருக்கு மத்தியில் கடாபி கொல்லப்பட்டார். 5 ஆண்டுகள் தடுப்புக் காவலுக்குப் பிறகு 2017ல் செயிப் அல் இஸ்லாம் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த தேர்தலில் இவர் வெல்ல பட்டால் அது அமெரிக்காவிற்கு எதிராக காட்சிகள் மாறும் என அடித்து கூறலாம்
தற்போது அவர் தேர்தலில் போட்டியிடுவது, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் என தெரிகிறது.
- ஐக்கிய அரபு அமீரகம் வரும் நெதன்யாகு ஈரான் எச்சரிக்கை
- நெதன்யாகுவை ‘போர்க் குற்றவாளி’ என கத்தார் பிரதமர் சாடினார்
- ஈரானில் கலவரத்தை உருவாக்க இஸ்ரேல் அமெரிக்கா சதி
- காசா முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஒரு பாலஸ்தீனியர் கொல்லப்பட்டார்
- நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய ஞானசார தேரருக்கு கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது
காலை உணவை தவிர்த்தால் இது நடக்கும்
காலை உணவை தவிர்த்தால் இது நடக்கும்
உடல் எடையைக் குறைப்பதில் காலை உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை குறையும் என பலர் கருதுகின்றனர். இது பல்வேறு நோய்களுக்கு காரணமாக அமைந்து விடும்.
ஒரு நாளை ஆரோக்கியமாகத் தொடங்குவதற்கு காலை உணவு முக்கியமானது. இரவில் நன்றாகத் தூங்கி காலையில் எழுந்ததும் சாப்பிடும் முதல் உணவு ஆரோக்கியமானதாகவும், புத்துணர்வு அளிப்பதாகவும் இருக்க வேண்டும். அதன் மூலம் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க முடியும்.
முளைகட்டிய தானியங்கள், பாசிப்பயறு, நிலக்கடலை, பழங்கள் அல்லது பழச்சாறு, ராகி கஞ்சி, சத்துமாவு கஞ்சி, இட்லி, தோசை, சிறுதானிய பொங்கல் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை காலை உணவாக சாப்பிடலாம்.
காலை உணவைத் தவிர்ப்பதால் வரும் பிரச்சினைகள்
உடல் சோர்வு அடையும். நாள் முழுவதும் இயங்குவதற்கான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது. இரவு முழுவதும் உணவு சாப்பிடாமல், நீண்ட நேரம் வயிறு காலியாக இருப்பதால், அமிலம் அதிகமாக சுரந்து கொண்டே இருக்கும்.
இந்த நேரத்தில் காலை உணவைத் தவிர்க்கும்போது வயிற்று புண் போன்ற பிரச்சினைகள் வரும். உடல் எடை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. காலையில் சாப்பிடாமல், நீண்ட இடைவெளிக்கு பிறகு உண்ணும்போது நம்மை அறியாமல் அதிகமாக சாப்பிடக்கூடும்.
காலை உணவின் முக்கியத்துவம்
உடல் எடையைக் குறைப்பதில் காலை உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை குறையும் என பலர் கருதுகின்றனர். அவர்கள் முதலில் தவிர்ப்பது காலை உணவை தான். இது பல்வேறு நோய்களுக்கு காரணமாக அமைந்து விடும்.
குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் காலை உணவை தவிர்ப்பதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு
காலை உணவை தவிர்த்தால் இது நடக்கும்
கூடும். ஓரிரு நாட்கள் காலை உணவை தவிர்க்கும்போது பெரிய வித்தியாசம் தெரியாது. நாளடைவில் இது உடல்நிலையில் எதிர்மறை மாற்றத்தை ஏற்படுத்தும்.
சில உணவு முறைகள் காலை உணவை தவிர்க்க வேண்டும் என பரிந்துரை செய்கின்றன. இது ஆரோக்கியமானதா? என மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு செயல்பட வேண்டும்
. காலை உணவை அரசன் போல சாப்பிட வேண்டும் என்று பழமொழி உள்ளது. அரசன் போன்று
அனைத்து ஊட்டச்சத்துகள் மிக்க உணவை சாப்பிட வேண்டும் என்பதே இதன் பொருளாகும். இது உடல் எடையை சீராக வைத்துக்கொள்வதற்கு உதவும்
நீச்சல் உடையில் பூனம் பாஜ்வா
நீச்சல் உடையில் பூனம் பாஜ்வா
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பூனம் பாஜ்வா, அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
நீச்சல் உடையில் பூனம் பாஜ்வா – வைரலாகும் புகைப்படங்கள்
பூனம் பாஜ்வா
‘சேவல்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. இதைத்தொடர்ந்து ஜீவாவின் ‘தெனவாட்டு’, ‘கச்சேரி ஆரம்பம்’ படங்களில் நடித்த இவர், சுந்தர்.சி
இயக்கிய ‘அரண்மனை 2’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இதில் இவருடைய கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
பின்னர் சுந்தர்.சி-யுடன் ‘முத்தின கத்திரிக்கா’ படத்தில் நடித்தார். அதுக்கு அடுத்தப்படியாக முன்னணி நாயகர்களின் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். படவாய்ப்பு
குறைந்தாலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
பூனம் பாஜ்வா
அந்த வகையில், தற்போது நீச்சல் உடையில் படுகவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி, அதன்
புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பூனம் பாஜ்வா. வைரலாகி வரும் இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது.
பிக்பாஸில் இருந்து இந்த வாரம் எலிமினேட் ஆனது இவர்தான்
பிக்பாஸில் இருந்து இந்த வாரம் எலிமினேட் ஆனது இவர்தான்
இணையத்தில் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியேற்றுப் படலம் நடக்கும்.
எதிர்பாராததை எதிர்பாருங்கள்…. பிக்பாஸில் இருந்து இந்த வாரம் எலிமினேட் ஆனது இவர்தான்?
‘பிக்பாஸ் 5’ லோகோ
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர்
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம். மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் இந்த வெளியேற்றுப்
படலம் நடக்கும். அதன்படி நதியா சங், அபிஷேக் ராஜா, சின்னப்பொண்ணு, சுருதி ஆகியோர் இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி குறைந்த வாக்குகள் பெற்றதன் காரணமாக மதுமிதா
வெளியேற்றப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. வெகுளித்தனமான பேச்சால் ரசிகர்களை கவர்ந்து
வந்த மதுமிதா, திடீரென வெளியேற்றப்பட்டுள்ளது பிக்பாஸ் பார்வையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் அஜித்தின் வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்
நடிகர் அஜித்தின் வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்
வலிமை படத்தில் அஜித்தின் சகோதரராக நடித்துள்ள ராஜ் ஐயப்பா, நடிகர் அஜித்தின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
வைரலாகும் நடிகர் அஜித்தின் வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்
அஜித்
நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி உள்ள இப்படத்தை எச்.வினோத் இயக்கி உள்ளார். போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து
பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு இப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.
வலிமை படத்தில் அஜித்தின் சகோதரராக நடித்துள்ள ராஜ் ஐயப்பா, நடிகர் அஜித்தின் வாட்ஸ் அப்
ஸ்டேட்டஸை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அஜித்திடம் அனுமதி பெற்ற பின்னரே இதனை பகிர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அந்த ஸ்டேட்டஸில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: “ஏழை, நடுத்தரவர்க்கம், பணக்காரர் என்பது ஒரு தனி நபரின் பொருளாதார நிலையை குறிக்கிறதே தவிர அவரது குணத்தை அல்ல. சமூகத்தின்
அனைத்து பிரிவுகளிலும் நல்ல மனிதர்களும், கெட்ட மனிதர்களும் இருக்கிறார்கள். அதனால் ஒரு
நபரின் பொருளாதார நிலையை வைத்து குணத்தை மதிப்பிடுவதை நாம் நிறுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்
திருமணம் குறித்து மனம்திறந்த பட நாயகி
திருமணம் குறித்து மனம்திறந்த பட நாயகி
கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என பிசியான நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே, சமீபத்திய பேட்டியில் திருமணம் குறித்து பேசியுள்ளார்.
திருமணம் குறித்து மனம்திறந்த ‘பீஸ்ட்’ பட நாயகி
பூஜா ஹெக்டே
தமிழில் ஜீவா ஜோடியாக முகமூடி படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்
பூஜா ஹெக்டே. அந்த படத்துக்கு பின்னர் டோலிவுட்டுக்கு சென்ற அவர் அங்கு முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படம் மூலம் கோலிவுட்டில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ள பூஜா ஹெக்டே, அப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்
இதுதவிர தெலுங்கு, இந்தி படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே, சமீபத்திய பேட்டியில் திருமணம் குறித்து பேசி உள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது: “திருமண வயது வந்துவிட்டது என்பதற்காகவோ அல்லது திருமணம்
செய்து கொள்ள இதுதான் சரியான நேரம் என்பதற்காகவோ திருமணம் செய்து கொள்வது கண்டிப்பாக சரியல்ல.
வாழ்க்கை எல்லாம் சேர்ந்து இருக்க முடியும் என ஒரு மனிதரோடு இருக்கும்போது தோன்றினால்
அப்போது அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும். அவர்தான் வாழ்க்கைக்கு நல்ல கணவராக இருப்பார்” என்றார்.
132 வயது பாட்டி மரணம்
132 வயது பாட்டி மரணம்
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள கொடிபங்கு பஞ்சாயத்துக்குட்பட்ட வேலாங்குடி கிராமத்தில்தான் சந்தனம்மாள் வாழ்ந்து வந்தார்.
25 பேரன், பேத்திகள், 50 கொள்ளுபேரன், பேத்திகள்: 4 தலைமுறை கண்ட 132 வயது பாட்டி மரணம்
இன்றைய உலகில் இளம் வயதிலேயே பலரும் நோய்வாய்பட்டு மருந்து, மாத்திரைகளுக்கு அடிமையாகி உள்ளனர். ஆனால் நூற்றாண்டு கடந்து நலமுடன் மூதாட்டி வாழ்ந்து தனது 132-வது வயதில் மரணத்தை சந்தித்துள்ளார்.
இவர் நோய்வாய்பட்டு ஆஸ்பத்திரிக்கு சென்றதில்லை என்கின்றனர் அவரது வம்சாவழியினர். 132 வயதில் மரணத்தை சந்தித்த மூதாட்டியின் பெயர் சந்தனம்மாள்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள கொடிபங்கு பஞ்சாயத்துக்குட்பட்ட வேலாங்குடி கிராமத்தில்தான் சந்தனம்மாள் வாழ்ந்து வந்தார்.
கடந்த 18.5.1889-ம் ஆண்டு பிறந்த சந்தனம்மாளின் கணவர் பெயர் ஆரோக்கியம் என்ற வேளாணி.
இந்த தம்பதிகளுக்கு 10 குழந்தைகள்.அதில் தற்போது பிரான்சிஸ், சேசுராஜ், அருளானந்த் ஆகிய 3 மகன்களும், தேவநேசம், பாத்திமாமேரி, பாக்கியம்மேரி ஆகிய 3 மகள்களும் உள்ளனர். 1982-ம்
ஆண்டு கணவர் ஆரோக்கியம் என்ற வேளாணி இறந்து விட்ட நிலையில் மகள் பாக்கியம் மேரியுடன் சந்தனம்மாள் வசித்து வந்தார்.
இவருக்கு 25 பேரன், பேத்திகள் உள்ளனர். அவர்கள் மூலம் 50 கொள்ளுபேரன், பேத்திகளையும் சந்தனம்மாள் பார்த்துள்ளார். மொத்தத்தில் 4 தலைமுறைகளை சந்தித்த சந்தனம்மாளுக்கு கடந்த சில ஆண்டுகளாக வயோதிகம் காரணமாக பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது.
ஆனாலும் அவர் எந்த ஆஸ்பத்திரிக்கும் சென்றதில்லை. மீன் குழம்பை விரும்பி சாப்பிடும் சந்தனம்மாளுக்கு கடந்த தீபாவளிக்கு பின்னர் சற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதனால் பாதிக்கப்பட்ட அவர் தனது 132-வது வயதில் நேற்று இறந்தார்.
இதனை கேள்விபட்டதும் சுற்றுவட்டார மக்கள் திரண்டு வந்து சந்தனம்மாளுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இலங்கையில் தொடரும் மர்ம கொலைகள் – வீட்டுக்குள் தூர் நாற்றம்
இலங்கையில் தொடரும் மர்ம கொலைகள் – வீட்டுக்குள் தூர் நாற்றம்
இலங்கையில் ஆளும் கொலையாளிகள் ஆட்சியில் நாடெங்கும் பல மர்ம கொலைகள் இடம்பெற்ற
வண்ணம் உள்ளன, இவை நேரடி பார்வைக்கு தற்கொலை என காண்பிக்க படும் ,ஆனால்
அவையோ திரை மறைவில் திட்டமிடப்பட்ட படுகொலைகளாக பெற்றுள்ளன
இவ்விதம் புத்தளம் பகுதியில் வீடொன்றுக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம்
மீட்க பட்டுள்ளது
இது தற்கொலை என தெரிவிக்க படுகின்ற பொழுதும் அவை திட்டமிட்ட பட்ட படுகொலை என்ற நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்
இலங்கையில் கொரானாவுக்கு 22 பேர் மரணம்
இலங்கையில் கொரானாவுக்கு 22 பேர் மரணம்
நேற்று முன்தினம் இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இருபத்தி
இரண்டு பேர் பலியாகியுள்ளனர்
மேலும் அதே நாளில் எழுநூறுக்கு மேற்பட்டவர்கள் புதிய தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்
மழைக் காலத்தில் மேற்படி நோயானது வேகமாக பரவி வருகின்றமை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
இலங்கைக்கு அமெரிக்கா 150 மில்லியன் நிதியுதவி
இலங்கைக்கு அமெரிக்கா 150 மில்லியன் நிதியுதவி
இலங்கை அரசின் வேண்டுதலுக்கு இணங்க அமெரிக்கா 50 மில்லியன் டொலர் கடன் உதவி
வழங்கியுள்ளது
நாட்டின் அபிவிருத்திக்கு இந்த நிதி பயன் படுத்த பட உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
ஆளும் கோட்டா ,மகிந்தா ஆட்சியில் பலத்த லஞ்சம் ,ஊழல் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
,இவ்வேளை
இந்த நிதி உதவிகள் செல்வதும் அதிலும் மோசடிகள் இடம்பெறுவதும் குறிப்பிட தக்கது












