தலைவருக்கு வீரவணக்கம் வெடித்த மக்கள்போர்
Posted in இலங்கை செய்திகள்

தலைவருக்கு வீரவணக்கம் வெடித்த மக்கள்போர்

தலைவருக்கு வீரவணக்கம் வெடித்த மக்கள்போர்

தலைவருக்கு வீரவணக்கம் வெடித்த மக்கள்போர் ,தலைவருக்கு வீரவணக்கம் வெடித்த மக்கள் போர் ஆஸ்திரேலியா மற்றும் சுவிஸ் நாடுகளில் இடம்பெற்று வருகின்ற தலைவர் பிரபாகரன் அவர் வீரமரணம் அடைந்துவிட்டார் என்ற

விளக்கேற்ற நிகழ்வுக்கு எதிராக தமிழர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தலைவர் இறந்துவிட்டார் என தெரிவித்து இலங்கை அனுரா அரசின் ஏற்பாட்டில் இவ்வாறான சித்து விளையாட்டுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தலைவர் இறந்தால் அதற்கான ஆதாரத்தை காட்டும்படி கேட்ட பொழுது அதை காண்பிக்க மறுத்த இந்த கூட்டங்கள் தற்பொழுது இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது .

இதற்கு எதிராக தற்பொழுது சர்வதேச ரீதியில் மக்கள் தமது எதிர்ப்பை காண்பித்து வருகின்றனர்.

அதேபோன்று ஆஸ்திரேலியா மற்றும் ஸ்விஸ் நாட்டில் அமைக்கப்பட்டுள்ள மண்டபங்களுக்கு முன்பாக கூடிய தமிழர்கள் மிகப் பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இது மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுடன் அங்கு பெரும் முறுகல் நிலை அடைந்துள்ளதால் போலீசார் மேலதிகமாக குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

செம்மணியில் மீட்கப்பட்ட 54 சான்று
Posted in இலங்கை செய்திகள்

செம்மணியில் மீட்கப்பட்ட 54 சான்று

செம்மணியில் மீட்கப்பட்ட 54 சான்று

செம்மணியில் மீட்கப்பட்ட 54 சான்று ப் பொருட்களை காட்சிப்படுத்த நடவடிக்கை

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட 54 சான்றுப் பொருட்களை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்

அடையாளம் காண உதவும் வகையில் காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதக் கொலை விசாரணைப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி, யாழ் நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த

விண்ணப்பத்தின் அடிப்படையில், இந்தச் சான்றுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

அதன்படி, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (05-08-2025) மதியம் 1:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை,

அரியாலை சிந்துப்பாத்தி இந்து மயானத்தில்

அரியாலை சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் இப்பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன.

செம்மணி புதைகுழிகளில் இதுவரை மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களில் புத்தகப் பைகள், சிறுவர்களின் காலணிகள், குழந்தையின் பால் போத்தல், வளையல்கள் உள்ளிட்ட 54 பொருட்கள் அடங்கும்.

இவை தற்போது நீதிமன்றக் கட்டுப்பாட்டில் உள்ளன. இப்பொருட்களை அடையாளம் காணக்கூடியவர்கள், நீதிமன்றத்திற்கு அல்லது குற்றப்

புலனாய்வுத் திணைக்களத்திற்கு தகவல் தெரிவித்து, விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

சான்றுப் பொருட்களைப் பார்வையிட வருவோருக்கான கட்டுப்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான விவரங்கள் நாளை (02) அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முட்டைகளை கழுவிசேமித்து வைப்பதால் ஆபத்து
Posted in இலங்கை செய்திகள்

முட்டைகளை கழுவிசேமித்து வைப்பதால் ஆபத்து

முட்டைகளை கழுவிசேமித்து வைப்பதால் ஆபத்து

முட்டைகளை கழுவிசேமித்து வைப்பதால் ஆபத்து முட்டைகளை கழுவிய பின் சேமித்து வைப்பது நுகர்வுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

முட்டைகளைக் கழுவுவதன் ஊடாக

முட்டைகளைக் கழுவுவதன் ஊடாக முட்டையின் மேற்பரப்பில் உள்ள கிருமிகள் முட்டைக்குள் செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் புலின ரணசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து வௌியிட்ட புலின ரணசிங்க,

“முட்டை ஓடு என்பது முழுமையாக மூடப்பட்ட ஒன்றல்ல. இது மிக நுண்ணிய துளைகளைக் கொண்டுள்ளது. எனவே, முட்டைகளைக் கழுவும்போது,

மேற்பரப்பில் உள்ள அழுக்கு, தூசி மற்றும் விலங்குகளின் மலம் தண்ணீரில் கரைந்து முட்டையின் உள்ளே செல்லும்.

முட்டையின் உள்ளே புரதம் நிறைந்துள்ளது. நுண்ணுயிரிகள் அதில் நுழைந்தால், அவை விரைவாக வளர்ந்து நச்சு நிலைமைகளை ஏற்படுத்தும். எனவே, கழுவிய பின் முட்டைகளை சேமிக்க முடியாது.

இதன் பொருள் முட்டைகளை சமைக்கும்போது கழுவ வேண்டும் என்பதல்ல.

கழுவிய முட்டைகள் சந்தையில் பொதி செய்யப்படுவதில்லை என்று நினைக்கிறேன். முட்டை உற்பத்தி செயல்முறையின் போது அழுக்கு, தூசி

மற்றும் மலம் மாசுபடுவதைக் கட்டுப்படுத்த நல்ல தரமான முகாமைத்துவ முறைகளைப் பின்பற்றி உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் உள்ளன.

உலகில் சாதாரணமாக முட்டைகளை சுத்தப்படுத்தும் செயற்பாடுகளை இயந்திரங்களின் ஊடாகவே மேற்கொள்வது வழக்கம். அவைகள் கழுவி சுத்தப்படுத்தப்படுவதில்லை” என்றார்.

22 பேர் கடற்படையினரால் கைது
Posted in இலங்கை செய்திகள்

22 பேர் கடற்படையினரால் கைது

22 பேர் கடற்படையினரால் கைது

22 பேர் கடற்படையினரால் கைது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள், டைவிங் உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி

முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 22 நபர்களுடன் 5 டிங்கி படகுகளையும் கடற்படை கைது செய்துள்ளது.

கடற்படை, பொலிஸார்

கடற்படை, பொலிஸார் மற்றும் மீன்வளம் மற்றும் நீர்வளத் துறை ஆகியவை ஜூலை 23 முதல் 31 வரை நாட்டின் கடல் எல்லைகளை உள்ளடக்கியதாக இந்த சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டன.

சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த 210 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டார்.

திருகோணமலையின் கோட்பே, கும்புறுப்பிட்டி, கிண்ணியா, மூதூர் மற்றும் மன்னாரின் கக்கரதீவு

ஆகிய கடற்கரை மற்றும் கடல் பகுதிகளை உள்ளடக்கியதாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சொத்துக்களை குவித்த நபர் கைது
Posted in இலங்கை செய்திகள்

சொத்துக்களை குவித்த நபர் கைது

சொத்துக்களை குவித்த நபர் கைது

சொத்துக்களை குவித்த நபர் கைது ,பிலியந்தலை, போகுந்தர பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் போதைப்பொருள் வர்த்தகத்தின் ஊடாக ஈட்டிய

பணத்தின் மூலம் சொத்துக்களை வாங்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோத சொத்துக்கள்

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, சந்தேக நபர் கடந்த 29 ஆம் திகதி பணமோசடி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் போகுந்தர, பிலியந்தல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய பெண் ஆவார்.

சந்தேக நபரின் முந்தைய குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில், அவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சந்தேக நபர் சட்டவிரோதமாக சம்பாதித்த சுமார் 3 கோடி ரூபாவைக் கொண்டு வாங்கிய பிலியந்தலை பகுதியில் உள்ள ஒரு நிலம், பணமோசடி சட்டத்தின் கீழ் 9ஆம் திகதி முதல் 7 நாட்களுக்கு முடக்கப்பட்டது. இது

தொடர்பாக ஹோமாகம மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்த பின்னர், இந்த முடக்கம் தொடர்பான உத்தரவை 15.10.2025 வரை நீதிமன்றம் நீடித்துள்ளது.

இதேவேளை, சந்தேகநபர் கடந்த 29ஆம் திகதி கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும்

தலா 500,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டார்.

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

கண்டியில் விசேட போக்குவரத்து திட்டம்
Posted in இலங்கை செய்திகள்

கண்டியில் விசேட போக்குவரத்து திட்டம்

கண்டியில் விசேட போக்குவரத்து திட்டம்

கண்டியில் விசேட போக்குவரத்து திட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி ஸ்ரீ தலதா மாளிகை எசல பெரஹெரவின் நான்காவது கும்பல் பெரஹெர இன்று (2) இடம்பெறவுள்ளது.

குறித்த காலப்பகுதியில் செயல்படுத்தப்பட வேண்டிய போக்குவரத்துத் திட்டம் மற்றும் மாற்று வழிகள் குறித்து பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.

போக்குவரத்துத் திட்டம் மற்றும் மாற்று வழிகள் பின்வருமாறு,

கட்டுகஸ்தொடையிலிருந்து கண்டி நகரத்திற்கு வரும் அனைத்து கனரக வாகனங்களும் மஹய்யாவ சந்தியிலிருந்து திலக் ரத்நாயக்க மாவத்தை வழியாக பொலிஸ் சந்தி வழியாக கண்டி நகரத்திற்கு பயணிக்க முடியும்.

கட்டுகஸ்தோட்டையிலிருந்து வரும் இலகுரக வாகனங்கள் டி.எஸ். சேனநாயக்க வீதி வழியாக உள்ளே நுழைந்து, குறுக்கு வீதியைக் கடந்து யட்டிநுவர வீதிக்குச் சென்று, வலதுபுறம் திரும்பி மீரமக்கம் தேவாலயத்திற்கு அருகில் இடதுபுறம் திரும்பி, திலக் ரத்நாயக்க மாவத்தை வழியாகச் செல்லலாம்.

கட்டுகஸ்தொடை நோக்கிச் செல்லும் வாகனங்கள், பொலிஸ் சந்தியிலிருந்து திலக் ரத்நாயக்க மாவத்தை வழியாக மஹய்யாவ நோக்கிச் செல்லலாம்.

தென்னேகும்புர மற்றும் அம்பிட்டிய திசைகளிலிருந்து வரும் வாகனங்கள் சங்கராஜ மாவத்தை வழியாக வேல்ஸ் பார்க் சந்திக்குச் சென்று எஹெலேபொல குமாரிஹாமி மாவத்தையில் வலதுபுறம் திரும்பலாம். ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள

போகம்பரை நோக்கிச் செல்லும் வாகனங்களும், கொழும்பு நோக்கிச் செல்லும் வாகனங்களும் இடதுபுறமாகவும், கண்டி நகரம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் வலதுபுறமாகவும் செல்லலாம்.

அதேபோல ரஜபிஹில்ல மாவத்தை சந்தியிலிருந்து பள்ளிவாசல் வீதி வழியாகவும் கண்டி நகரத்திற்குள் நுழையலாம்.

நகரத்திலிருந்து அம்பிட்டிய, தெல்தெனிய வீதியில் பயணிக்கும் வாகனங்களானது கடிகார கோபுர சுற்றுவட்டத்திலிருந்து தலதா வீதி வழியாகச் சென்று, குயின்

ஹோட்டலின் பக்கவாட்டு நுழைவாயிலுக்கு அருகிலுள்ள ஜோய் படகு சேவையைக் கடந்து, சங்கராஜ மாவத்தை வழியாகச் செல்லலாம்.

மேலும், போகம்பர சுற்றுவட்டத்தில் எஹெலேபொல குமாரிஹாமி மாவத்தை, ரஜபிஹில்ல மாவத்தை, வேல்ஸ் பார்க் சந்தி ஊடாக சங்கராஜ மாவத்தை வழியாக அம்பிட்டிய மற்றும் தென்னேகும்புர நோக்கிச் செல்லலாம்.

பள்ளிவாசல் வீதி இரு பக்கங்களுக்கும் பயணிக்கும் வகையில் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து கண்டி நகருக்குள் நுழையும் மற்றும் கண்டியிருந்து கொழும்பு நோக்கி வெளியேறும் வாகனங்கள் பழைய பேராதனை வீதி மற்றும் வில்லியம் கோபல்லவ மாவத்தை வழியாக பயணிக்க முடியும்.

கண்டி எசல பெரஹெர கடந்த 30ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில், எதிர்வரும் 8ஆம் திகதி வரை வீதி ஊர்வலம் இடம்பெறும்.

இதற்காக பொலிஸார் விசேட பாதுகாப்பு திட்டம் மற்றும் போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். வீதித் தடைகள், பாதுகாப்பு கடமைகள், வாகனங்கள்

மற்றும் மக்களைச் சரிபார்த்தல், சுற்றுலாப் பயணிகளை வழிநடத்துதல் மற்றும் வாகனங்களை நிறுத்துதல் உள்ளிட்ட விசேட திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அவிசாவளை பேருந்து கவிழ்ந்து விபத்து
Posted in இலங்கை செய்திகள்

அவிசாவளை பேருந்து கவிழ்ந்து விபத்து

அவிசாவளை பேருந்து கவிழ்ந்து விபத்து

அவிசாவளை பேருந்து கவிழ்ந்து விபத்து ,கேகாலை – அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட, தெம்பிலியான பகுதியில் பேருந்து விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தானது இன்று (02) அதிகாலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது பேருந்தில் 41 பேர் பயணித்துள்ளதாகவும், இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெரணியகலையில் இருந்து அவிசாவளை கைத்தொழில் பேட்டைக்கு பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது.

விபத்துக்கான காரணம் குறித்து தெஹியோவிட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐயனாரே அய்யனாரே பக்தி பாடல்
Posted in பாடல்கள்

ஐயனாரே அய்யனாரே பக்தி பாடல்

ஐயனாரே அய்யனாரே பக்தி பாடல்

அய்யனாரே பக்தி பாடல் |aiyanare aiyanare pakthi paadal சுடரி என அழைக்கப்படும் கௌரி அவர்களது ஐயனாரே அய்யனாரே பக்தி பாடல் வெளியாகியுள்ளது .

பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன் இசை – இலங்கை செல்லப்பா வெளியீடு – எதிரி இனையம் வன்னி மைந்தன் டிக் டாக் தளம் ஊடாக அறிமுகமாகும் 16 வது பாடலாசிரியராக சுடரி அல்லது கவுரி அவர்கள் அறிமுகம் செய்யப்பட்டுளளார் .

புதிய சாமி பாடல் குத்து இசை

சாமி பாடல் குத்து இசையில் சிறப்பாக வெளி வந்துள்ளது ,வாழ்த்துக்கள் சுடரி அக்கா கவுரியின் ஐயனாரே அய்யனாரே பக்தி பாடல் மக்கள் நன்மதிப்பை பெற்றுள்ளது .

வன்னி மைந்தன் டிக் டாக் மற்றும் எதிரி இணையம் இணைந்து முன்னெடுக்கும் நூறு பாடல் உருவாக்கத்தில் 16 வது பாடலாசிரியராக சுடரி அறிமுக படுத்த பட்டுளளார் .

ஜெர்மனியை சேர்ந்த பாடலாசிரியர் சுடரி

ஜெர்மனியை சேர்ந்த பாடலாசிரியர் சுடரியை அடுத்து ,தொடர்ந்து மேலும் பல உறவுகள் அறிமுகம் செய்ய படவுள்ளனர் .

இத்தகையை திறமை கொண்டவர்களை ,பாடல் ஆசிரியராக அறிமுகம் செய்து வரும் ,இளங்கோ செல்லப்பா மற்றும் ,பாடகர் பாவேந்தன் ஆகியோருக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .

கொஞ்சம் எடு பயிற்சி ,கொஞ்சம் எடு முயற்சி ,,நாளை நீயே தான் சாதனையாளன் .

இதில் அழுத்தி சுடரி பாடல் காட்சியை பார்க்கவும்

புதிய பேட்ரியாட் வான் பாதுகாப்பு
Posted in உலக செய்திகள்

புதிய பேட்ரியாட் வான் பாதுகாப்பு

புதிய பேட்ரியாட் வான் பாதுகாப்பு

புதிய பேட்ரியாட் வான் பாதுகாப்பு ,கியேவுக்கு 2 பேட்ரியாட் அமைப்புகளை வழங்க அமெரிக்காவுடன் ஜெர்மனி உடன்படுகிறது.

வான் பாதுகாப்பு அமைப்பு

பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளைப் பெறுவது குறித்து ஜெர்மனி அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டியுள்ளது, இது பெர்லின்

தனது இரண்டு பழைய அமைப்புகளை உக்ரைனுக்கு மாற்ற உதவும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“ஆரம்பத்திலிருந்தே, கியேவுக்கு அமைப்பு கூறுகளை வழங்க ஜெர்மனி தயாராக இருப்பதாக அறிவித்தது.

கூட்டணிக்கான தனது கடமைகளை ஜெர்மனி தொடர்ந்து நிறைவேற்றும் வகையில், அமெரிக்க உற்பத்தியாளரால்

புதிய பேட்ரியாட் அமைப்புகளை முன்கூட்டியே வழங்குவதே கட்டாய நிபந்தனையாகும்.

இந்த உறுதிமொழியை அமெரிக்கா நிறைவேற்றியுள்ளது. எனவே, ஜெர்மனி முதலில் உக்ரைனை ஏவுகணைகள் மூலமாகவும், பின்னர்

கூடுதல் பேட்ரியாட் அமைப்பு

கூடுதல் பேட்ரியாட் அமைப்பு கூறுகள் மூலமாகவும் ஆதரிக்க முடியும்,” என்று அமைச்சகத்தின் செய்தி சேவை, உயர் ஜெர்மன் பாதுகாப்பு அதிகாரி போரிஸ் பிஸ்டோரியஸ் கூறியதாக மேற்கோளிட்டுள்ளது.

அமைச்சகத்தின் கூற்றுப்படி, பன்டேஸ்வெர் உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகளை “வரும் நாட்களில்” வழங்கும். அடுத்த இரண்டு முதல் மூன்று

மாதங்களுக்குள் கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள் கியேவிடம் ஒப்படைக்கப்படும்.

துருக்கியின் புதிய குண்டால் அலறும் எதிரி
Posted in உலக செய்திகள்

துருக்கியின் புதிய குண்டால் அலறும் எதிரி

துருக்கியின் புதிய குண்டால் அலறும் எதிரி

துருக்கியின் புதிய குண்டால் அலறும் எதிரி துருக்கி மிகவும் சக்திவாய்ந்த தெர்மோபாரிக் குண்டை வெளியிட்டது

970 கிலோகிராம் எடையுள்ள போர்முனை கொண்ட அதன் மிகவும் சக்திவாய்ந்த வழக்கமான விமான குண்டான GAZAP ஐ துருக்கி வெளியிட்டுள்ளது.

துருக்கியின் தேசிய பாதுகாப்பு

துருக்கியின் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) மையத்தால் வடிவமைக்கப்பட்ட

இந்த குண்டு, இஸ்தான்புல்லில் நடந்த சர்வதேச பாதுகாப்பு தொழில் கண்காட்சி (IDEF) 2025 இல் வெளியிடப்பட்டது.

GAZAP 3 மீட்டருக்கு பதிலாக ஒரு மீட்டருக்கு 10.16 துண்டு வெடிப்புகளை சிதறடிக்கும் என்று ஒரு அதிகாரி அனடோலுவிடம் தெரிவித்தார்.

அதன் வெடிப்பு விளைவுடன், வெடிகுண்டு மிகவும் அழிவுகரமான திறனைக் கொண்டுள்ளது, இது F-16 போர் விமானத்திலிருந்து வீசப்படலாம்.

“ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் வெடிக்கும் மற்றும் நிரப்பு வடிவமைப்பை மாற்றியமைத்துள்ளது” என்று அதிகாரி கூறினார்.

“தகுதி மற்றும் சான்றிதழ் செயல்முறைகள் முழுமையானவை மற்றும் பயன்படுத்த தயாராக உள்ளன.”

970 கிலோ எடையுள்ள மற்றொரு குண்டு

970 கிலோ எடையுள்ள மற்றொரு குண்டு, NEB-2 Ghost பற்றிய தகவல்களை வழங்குகையில், இது “களத்தில் சிறந்த பதுங்கு குழி-பஸ்டர்” என்று அதிகாரி குறிப்பிட்டார்.

“பொதுவாக, அணு மின் நிலையங்களில், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகள் 2.4 மீட்டர் C35 (நிலையான கான்கிரீட்) வழியாக ஊடுருவுகின்றன.

NEB-2 C50 இன் 7 மீட்டர் (அணு மின் நிலையங்களை விட மூன்று மடங்கு வலிமையான கான்கிரீட்) வழியாகவும் ஊடுருவுகிறது,” என்று அந்த அதிகாரி கூறினார்.

பங்கர்-பஸ்டர் குண்டை F-16 போர் விமானத்திலிருந்தும் வீசலாம்.

அதன் விமான சோதனையின் ஒரு பகுதியாக, NEB-2 குண்டு ஒரு தீவில் வீசப்பட்டு 90 மீட்டர் தூரம் ஊடுருவி, 160 மீ விட்டம் கொண்ட தீவில்

நிலச்சரிவுகள், எரிவாயு கசிவுகள் மற்றும் பாறை அழிவை ஏற்படுத்தியது என்று அதிகாரி விளக்கினார், அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது.

“வழக்கமாக 25 எம்எஸ் (மில்லி விநாடிகள்) எடுக்கும் வெடிப்பு, 240 எம்எஸ் ஆக நிர்ணயிக்கப்பட்டது, இது மிகவும் அழிவுகரமானதாக மாற்றியது,” என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

83பாலஸ்தீனியர்கள் பலி 554பேர் காயம்
Posted in உலக செய்திகள்

83பாலஸ்தீனியர்கள் பலி 554பேர் காயம்

83பாலஸ்தீனியர்கள் பலி 554பேர் காயம்

83பாலஸ்தீனியர்கள் பலி 554பேர் காயம் ,காசாவில் குறைந்தது 83 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், 554 பேர் காயமடைந்தனர்

இஸ்ரேலிய நடவடிக்கை

இஸ்ரேலிய நடவடிக்கைகளால் கடந்த 24 மணி நேரத்தில் பாலஸ்தீன காசா பகுதியில் குறைந்தது 83 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 554 பேர் காயமடைந்தனர்.

இஸ்ரேலிய நடவடிக்கைகளால் கடந்த 24 மணி நேரத்தில் பாலஸ்தீன காசா பகுதியில் குறைந்தது 83 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 554 பேர்

காயமடைந்தனர் என்று அந்த பகுதியின் சுகாதார அமைச்சகம் அதன் அதிகாரப்பூர்வ டெலிகிராம் சேனல் வழியாக தெரிவித்துள்ளது.

இடிபாடுகளுக்கு அடியில் சடலங்கள்

“கடந்த 24 மணி நேரத்தில், காசா பகுதியில் உள்ள மருத்துவமனைகள் இறந்தவர்களின் 83 [உடல்களை] (இடிபாடுகளுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்ட

ஒருவர் உட்பட) பெற்றன, மேலும் 554 பேர் காயமடைந்தனர்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அக்டோபர் 2023 முதல் காசாவில் மோதல் அதிகரித்ததில் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 60,332 ஆகவும், 147,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் இது காட்டுகிறது.

இஸ்ரேலை தாக்கும் ஏமன் ஏவுகணைகள்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலை தாக்கும் ஏமன் ஏவுகணைகள்

இஸ்ரேலை தாக்கும் ஏமன் ஏவுகணைகள்

இஸ்ரேலை தாக்கும் ஏமன் ஏவுகணைகள் ,ஏமன் ஏவுகணை மில்லியன் கணக்கான சியோனிஸ்டுகளை முகாம்களுக்கு அனுப்புகிறது

ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தின் மீது தனது நாடு நடத்திய ஏவுகணைத் தாக்குதல் மில்லியன்

ஏமன் ஆயுதப் படைகளின் செய்தித் தொடர்பாளர்

கணக்கான சியோனிஸ்டுகளை முகாம்களுக்கு அனுப்புகிறது என்று ஏமன் ஆயுதப் படைகளின் செய்தித் தொடர்பாளர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

ஏமன் உள்ளூர் அல்-மசிரா தொலைக்காட்சியின்படி, ஏமன் ஆயுதப் படைகளின் செய்தித் தொடர்பாளர் யஹ்யா சாரி, வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில், தனது நாட்டின் ஏவுகணைப் பிரிவு டெல் அவிவ் அருகே

ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள பென் குரியன் விமான நிலையத்திற்கு எதிராக ஒரு முக்கியமான நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டதாக வலியுறுத்தினார்.

“பாலஸ்தீனம் 2 ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணையைப் பயன்படுத்தி ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது” என்று சாரி கூறினார்.

நான்கு மில்லியனுக்கும் அதிகமான சியோனிஸ்டுகள் பீதி

“நான்கு மில்லியனுக்கும் அதிகமான சியோனிஸ்டுகள் பீதியடைந்த நிலையில் தங்குமிடங்களுக்கு ஓடிவிட்டனர். இதற்கிடையில், அந்த விமான நிலையத்தில் விமானங்கள் நிறுத்தப்பட்டன” என்று செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.

ஏமன் முன்னணி காசாவை ஆதரிப்பதைத் தடுக்க சியோனிச எதிரியின் நகர்வுகளை சனா அரசாங்கம் கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.

சாரி தனது முந்தைய அறிக்கைகளைப் போலவே “காசாவுக்கு எதிரான ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட்டு காசா பகுதியில் முற்றுகை நீக்கப்படும் வரை எங்கள் நடவடிக்கைகள் தொடரும்” என்றும் வலியுறுத்தினார்.

பிரபாகரனுக்கு வடக்கில் உருவச்சிலை
Posted in இலங்கை செய்திகள்

பிரபாகரனுக்கு வடக்கில் உருவச்சிலை

பிரபாகரனுக்கு வடக்கில் உருவச்சிலை

பிரபாகரனுக்கு வடக்கில் உருவச்சிலை ,பிரபாகரனுக்கு வடக்கில் உருவச்சிலை அமைக்கப் போவதாக ஆளும் அனுர அரசாங்கம் அடித்து விட்டுள்ளது.

வடக்கு மாகாண சபை தேர்தலில்

வடக்கு மாகாண சபை தேர்தலில் தாம் வடக்கு மக்களின் அதிகமான வாக்குகளை பெற்று ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும் என்கின்ற நோக்கில் இந்த வேலை திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் புலம்பெயர்ந்து வாழுகிற தமிழர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக தலைவர் பிரபாகரனுக்கு அவரது

உருவச்சிலை அமைக்கப்பட உள்ளதாக அனுரா அரசு இப்படி அடித்து விடுகிறது.

இந்த அவசர அவசரமான செய்தி பகிர்வு தமிழர்களின் வாக்குகளை கொள்ளை அடிப்பதற்கான தந்திரோபாய நிகழ்வின் ஒன்றாக இதனை காண முடிகிறது.

தமிழ் மக்கள் மீது பயங்கரவாத தடைச் சட்டம்

புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்கள் மீது பயங்கரவாத தடைச் சட்டம் என்ற போர்வையில் தமிழர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் தடுத்து

வைக்கப்பட்டு மிரட்டப்பட்டு வருகிற இவ்வாறான காலப்பகுதியில் இப்பொழுது எவ்விதமான புது கதையை கவிதையாக பாடியுள்ளது அனுரா அரசு.

ஆகவே ஆளுகிற அரசின் இந்த தந்துருபாய உளவியல் சுற்றுமத்து நடவடிக்கையில் தமிழர்கள் சிக்கிக் கொள்ளாது தமது தமிழ் தேசிய

மண்ணுரிமையை பாதுகாக்க வேண்டும் என்பதே புலம்பெயர் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

என் வலியை எடுத்து சொல்ல
Posted in நந்தினி பாடல் பாடல்கள்

என் வலியை எடுத்து சொல்ல

என் வலியை எடுத்து சொல்ல

என் வலியை எடுத்து சொல்ல |பாடியவர் பாவேந்தன் இளங்கோவன் |இசை – இளங்கோ செல்லப்பா

நந்தினி அவர்கள் எழுதிய என் வலியை எடுத்து சொல்ல

நந்தினி அவர்கள் எழுதிய என் வலியை எடுத்து சொல்ல எனக்கு இங்கு யாரும் இல்ல என்ற பாடல் வன்னி மைந்தன் டிக் டாக் மற்றும் எதிரி இணையம் ஊடக வெளியீடு செய்ய பட்டுள்ளது .

வன்னி மைந்தனின் டிக் டாக் தளம் ஊடக அறிமுக படுத்த பாடுகின்ற 15 தவாது பாடலாசிரியராக நந்தினி அவர்கள் காணப்படுகின்றார் .

இதயம் கணக்கும் காதல்

அவருக்கு எமது வாழ்த்துக்கள் ,இதயம் கணக்கும் காதல் வாழ்வின் சோக பாடலாக இந்த என் வழியை எடுத்து சொல்ல என்கின்ற நந்தியின் பாட்டு காணப்படுகிறது .

இதில் அழுத்தி காணொளி பார்க்க

காசா இறப்பு 60100ஐ தாண்டியுள்ளது
Posted in உலக செய்திகள்

60100ஐ தாண்டியுள்ளது காசா இறப்பு

60100ஐ தாண்டியுள்ளது காசா இறப்பு

60100ஐ தாண்டியுள்ளது காசா இறப்பு ,இனப்படுகொலை தொடர்ந்து நடைபெற்று வருவதால், காசா இறப்பு எண்ணிக்கை 60,100 ஐ தாண்டியுள்ளது.

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலை

அக்டோபர் 2023 முதல் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலைப் போரில் குறைந்தது 60,138

பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 104 உடல்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்பட்டதாகவும், 399 பேர் காயமடைந்ததாகவும் அமைச்சக அறிக்கை

தெரிவித்துள்ளது, இதனால் இஸ்ரேலிய தாக்குதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 146,269 ஆக உயர்ந்துள்ளது என்று அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது.

“மீட்புப் பணியாளர்களால் அவர்களை அடைய முடியாததால், பல பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் இடிபாடுகளுக்கு அடியிலும் சாலைகளிலும் சிக்கிக் கொண்டுள்ளனர்” என்று அது மேலும் கூறியது.

60 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்

கடந்த 24 மணி நேரத்தில் மனிதாபிமான உதவி பெற முயன்றபோது 60 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 195 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் அமைச்சகம் குறிப்பிட்டது, இதனால் உதவி கோரும்

போது கொல்லப்பட்ட மொத்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 1,239 ஆக உயர்ந்துள்ளது, மே 27 முதல் 8,152 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இஸ்ரேலிய இராணுவம் மார்ச் 18 அன்று காசா பகுதியில் தனது தாக்குதல்களை மீண்டும் தொடங்கியது, அதன் பின்னர் 8,970 பேரைக் கொன்றது மற்றும் 34,228

பேரைக் காயப்படுத்தியுள்ளது, ஜனவரியில் நடைமுறையில் இருந்த போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை முறியடித்தது.

திங்கட்கிழமை, இஸ்ரேலிய உரிமைகள் குழுக்கள் B’Tselem மற்றும் மனித உரிமைகளுக்கான மருத்துவர்கள்-இஸ்ரேல் ஆகியவை பாலஸ்தீன சமூகத்தை முறையாக அழித்ததையும், பிரதேசத்தின் சுகாதார அமைப்பை

வேண்டுமென்றே தகர்த்ததையும் மேற்கோள் காட்டி, இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டின.

கடந்த நவம்பரில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்

யோவ் காலன்ட் ஆகியோருக்கு காசாவில் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக கைது வாரண்டுகளை பிறப்பித்தது.

Posted in உலக செய்திகள்

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு ,விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுப் பிரச்சினையால் இங்கிலாந்து விமான நிலையங்கள் பாதிக்கப்பட்டன.

விமான நிலையங்களில் விமானப் போக்குவரத்து

லண்டன் மற்றும் நாட்டின் பிற இடங்களில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் விமானப் போக்குவரத்துப் பிரச்சினை ஏற்பட்டதாக

புதன்கிழமை பிரிட்டனின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் தெரிவித்தனர், ஆனால் பின்னர் அந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டதாகக் கூறினர்.

தேசிய விமானப் போக்குவரத்து சேவைகளின்படி, இங்கிலாந்து வான்வெளியில் இருந்து விமானங்கள் வெளியேறுவதில் குறிப்பிடத்தக்க

தாமதத்தை ஏற்படுத்திய ஒரு தொழில்நுட்பப் பிரச்சினை மீட்டெடுக்கப்பட்டுள்ளது என்று உள்ளூர் இங்கிலாந்து ஊடகங்கள் தெரிவித்தன.

தொழில்நுட்பப் பிரச்சினை விசாரிக்கப்படும் வரை, ஹீத்ரோ, கேட்விக் மற்றும் எடின்பர்க் விமான நிலையங்கள் உட்பட இங்கிலாந்து முழுவதும் உள்ள விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறக்கப்பட்டன.

சிக்கலைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டதால் ஏற்பட்ட தாமதங்களுக்கு தேசிய விமானப் போக்குவரத்து சேவைகள் மன்னிப்பு கேட்டுள்ளன.

“இன்று மதியம் பாதிக்கப்பட்ட அமைப்பை எங்கள் பொறியாளர்கள் இப்போது மீட்டெடுத்துள்ளனர்” என்று NATS ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

லண்டன் பகுதியில் வழக்கமான செயல்பாடு

“லண்டன் பகுதியில் வழக்கமான செயல்பாடுகளை மீண்டும் தொடங்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.

“இடையூறுகளைக் குறைக்க விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலைய வாடிக்கையாளர்களுடன் நாங்கள் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம்.”

இந்த தொழில்நுட்பக் கோளாறு இங்கிலாந்து முழுவதும் வெளிச்செல்லும் அனைத்து விமானங்களையும் பாதித்துள்ளதாக கேட்விக் விமான நிலையம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து விமான நிலையங்களுக்கு வரவிருந்த பல விமானங்கள் நிறுத்தி வைக்கும் முறைகளைப் பின்பற்றவோ அல்லது வேறு இடங்களுக்குத் திருப்பி விடவோ கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன.

கலிபோர்னியாவில் F35 போர்விமானம் விபத்து
Posted in உலக செய்திகள்

கலிபோர்னியாவில் F35 போர்விமானம் விபத்து

கலிபோர்னியாவில் F35 போர்விமானம் விபத்து

கலிபோர்னியாவில் F35 போர்விமானம் விபத்து ,கலிபோர்னியாவில் F-35 போர் விமானம் விபத்துக்குள்ளானது, விமானி பாதுகாப்பாக வெளியேறினார்

அமெரிக்க கடற்படை

மத்திய கலிபோர்னியாவில் உள்ள கடற்படை விமான நிலையமான லெமூர் அருகே F-35 போர் விமானம் விபத்துக்குள்ளானதாக அமெரிக்க கடற்படை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

“விமானி வெற்றிகரமாக வெளியேறி பாதுகாப்பாக உள்ளார். கூடுதல் பணியாளர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை” என்று NAS லெமூர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விபத்துக்கான காரணம் விசாரணையில் உள்ளது

விபத்து குறித்த கூடுதல் விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. விபத்துக்கான காரணம் விசாரணையில் உள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

F-35 போர் விமானங்களை தயாரிக்கும் அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்ததாரர் லாக்ஹீட் மார்ட்டின், வழக்கமான வணிக நேரத்திற்கு வெளியே கருத்துக்கான கோரிக்கைக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை.

துப்பாக்கியுடன் ஒருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

ஒருவர் கைது துப்பாக்கியுடன்

ஒருவர் கைது துப்பாக்கியுடன்

ஒருவர் கைது துப்பாக்கியுடன் ,கரடியனாறு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கரடியனாறு பொலிஸ் அதிகாரி

கரடியனாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (30) இரவு முன்னெடுத்த விசேட

சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

28 வயதுடைய சந்திவௌி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணை

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணிநீக்கம்
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணிநீக்கம்

பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணிநீக்கம்

பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணிநீக்கம் ,பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பொலிஸ் தலைமையகத்தின் இரண்டு அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு சார்ஜென்ட் மற்றும் ஒரு கான்ஸ்டபிளை இடைநீக்கம்

ஒரு சார்ஜென்ட் மற்றும் ஒரு கான்ஸ்டபிளை இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்தார்.

பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு,

மேலதிக விசாரணைகளுக்காக இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

பொலிஸ் நிலையத்தின் தடுப்புக் காவலில்

பொலிஸ் நிலையத்தின் தடுப்புக் காவலில் இருந்த சந்தேக நபர், நேற்று (30) கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறியதாகவும், அப்போது

சிறைக் கதவு கதவு திறக்கப்பட்டபோது பொலிஸ் அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சந்தேக நபர் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், சமீபத்தில் பாணந்துறை பகுதியில் நடந்த பல துப்பாக்கிச் சூடு

சம்பவங்களிலும் அவர் தொடர்புடையவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்தேக நபர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பாக இரத்தினபுரி பொலிஸ் தலைமையகத்தில் விடயத்திற்கு பொறுப்பாக செயற்பட்ட அதிகாரியும்,

சம்பவத்தின் போது பொலிஸ் நிலையத்திற்கு பொறுப்பாக இருந்த அதிகாரியும் இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தப்பிச் சென்ற சந்தேகநபரை கைது செய்வதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு ,இந்தாண்டு நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 13 இலட்சத்தைக் கடந்துள்ளது.

குற்றச்செயலில் ஈடுபட்ட 11பேர் கைது
குற்றச்செயலில் ஈடுபட்ட 11பேர் கைது

அதன்படி, ஜனவரி 1 முதல் ஜூலை 27 வரையான காலப்பகுதியில் 1,341,953 சுற்றுலாப் பயணிகள்

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை

நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ளதோடு, அதன் எண்ணிக்கை 274,919 ஆகும்.

பிரித்தானியா, ரஷ்யா, ஜெர்மனி, சீனா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா

இதற்கு மேலதிகமாக பிரித்தானியா, ரஷ்யா, ஜெர்மனி, சீனா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த

சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்து அதிகார சபை வழங்கிய தகவல்களுக்கு அமைவாக, ஜூலை மாதத்தில் 27 நாட்களில் 173,909 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர்.

மேலும், ஜூலை மாதத்தின் 27 நாட்களில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளதோடு, ஜூலை 26 ஆம் திகதியில் மாத்திரம் 7,579 பேர் வருகை தந்துள்ளனர்.