இலஞ்சம் பெற்ற OICயின் பிணைநிராகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலஞ்சம் பெற்ற OICயின் பிணைநிராகரிப்பு

இலஞ்சம் பெற்ற OICயின் பிணைநிராகரிப்பு

இலஞ்சம் பெற்ற OICயின் பிணைநிராகரிப்பு மணல் வர்த்தகர் ஒருவரிடமிருந்து 40,000 இலஞ்சம் ரூபாய் பெற்ற சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒக்கம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

கொழும்பு பிரதான நீதவான்

அதன்படி, கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க சந்தேக நபரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். 



இந்த முறைப்பாடு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேக நபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, தனது கட்சிக்காரரின் மகள் இந்த

ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதாகவும், அதை ஒரு சிறப்பு விடயமாகக் கருதி சந்தேக நபரை பிணையில் விடுவிக்குமாறும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். 

சந்தேக நபருக்கு எதிரான விசாரணைகள்

எனினும், சந்தேக நபருக்கு எதிரான விசாரணைகள் இன்னும் நடைபெற்று வருவதால், பிணை மனுவை எதிர்ப்பதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்தனர். 

இரு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட வாதங்களை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான், சந்தேக நபரின் பிணை மனுவை நிராகரித்து, அவரை 25 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

தேர்தல் திகதிக்கு எதிரான மனு நிராகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் திகதிக்கு எதிரான மனு நிராகரிப்பு

தேர்தல் திகதிக்கு எதிரான மனு நிராகரிப்பு

தேர்தல் திகதிக்கு எதிரான மனு நிராகரிப்பு நவம்பர் 14ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது அரசியலமைப்புக்கு முரணானது எனத் தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து உயர் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டுள்ளது.

நீண்ட சமர்ப்பணங்களை பரிசீலித்ததன் பின்னர் பிரிதி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாமினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியால் தேர்தல் திகதி சரியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தலுக்கான பெரும்பாலான நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் சட்டமா அதிபர் சார்பில்

ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன முன்வைத்த சமர்ப்பணங்களை கருத்திற்கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிவில் அமைப்பு செயற்பாட்டாளரும் “நாம் இலங்கை தேசிய அமைப்பின்” அழைப்பாளருமான எச்.எம். பிரியந்த ஹேரத்தினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஜனாதிபதிக்காக சட்டமா அதிபர், ஜனாதிபதியின் செயலாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.