Tag: பேஸ்புக்
பேஸ்புக் போதைப்பொருள் விருந்தில் 27 பேர் கைது
பேஸ்புக் போதைப்பொருள் விருந்தில் 27பேர் கைது
பேஸ்புக் போதைப்பொருள் விருந்தில் 27 பேர் கைது ,பேஸ்புக் ஏற்பாடு செய்த போதைப்பொருள் விருந்தில் கண்டி துணை மேயரின் மகள் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டனர்.
தெல்தெனியாவில் சமூக ஊடகங்கள்
தெல்தெனியாவில் சமூக ஊடகங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு விருந்து மீது போலீசார் நடத்திய சோதனையைத் தொடர்ந்து
போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் கண்டி துணை மேயர் ருவன் குமாரவின் 26 வயது மகள் உட்பட இருபத்தேழு பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
சனிக்கிழமை (13) அதிகாலையில் நிகழ்வு நடைபெற்ற விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள ஒரு ஹோட்டலில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த நடவடிக்கையின் போது, போலீசார் 4,134 மில்லிகிராம் கிரிஸ்டல் மெத் (ஐஸ்), 1,875 மில்லிகிராம் ஹாஷிஷ், 2,769 மில்லிகிராம் குஷ், 390 மில்லிகிராம்
கோகோயின், 804 மில்லிகிராம் காளான்கள், 13 போதை மாத்திரைகள் மற்றும் 12 சட்டவிரோத சிகரெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
கண்டி, முல்லேரியா, ஹட்டன், பிலகல, அதுருகிரிய
கண்டி, முல்லேரியா, ஹட்டன், பிலகல, அதுருகிரிய, கொட்டகெதர, ஹோமாகம, தொம்பே, எம்பிலிப்பிட்டிய, திருகோணமலை மற்றும் ஜா-எல
ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 18 முதல் 31 வயதுக்குட்பட்ட 24 ஆண்கள் கைது செய்யப்பட்டதாகவும், துணை மேயரின் மகள் உட்பட 21 முதல் 26
வயதுக்குட்பட்ட நான்கு பெண் சந்தேக நபர்கள் கண்டி, நீர்கொழும்பு மற்றும் பூண்டலுஓயாவைச் சேர்ந்தவர்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் அனைத்து சந்தேக நபர்களும் ஆஜர்படுத்தப்பட்டு தலா ரூ.100,000 சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
டிசம்பர் 17 ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
- இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்

- ஈரான் இஸ்ரேல் போர் ஆரம்பம்

- இஸ்ரேலில் உள்ள இராணுவ இலக்குகளைத் தாக்கியதாக ஈரான்

- ஈரான் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர நெதன்யாகுவுக்கு ‘வேறு வழியில்லை’ என்கிறார் டிரம்ப்

- தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி, 22 பேர் காயம்

- இஸ்ரேலியத் துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனிய மீனவர் கொல்லப்பட்டார்

- தெற்கு காசாவில் ஹமாஸ் தளபதி பலி

- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

தங்கம் அர்ச்சுனா மோதல் |பேஸ்புக் முடக்கம் |உள்வீட்டு மோதல் ஆரம்பம்
தங்கம் அர்ச்சுனா மோதல் |பேஸ்புக் முடக்கம் |உள்வீட்டு மோதல் ஆரம்பம்
தங்கம் அர்ச்சுனா மோதல் |பேஸ்புக் முடக்கம் |உள்வீட்டு மோதல் ஆரம்பம் என்பதாக்கி தற்போது தகவ்லக்ள் வெளியாகியுள்ளது .
அர்ச்சுனா இராமநாதன் ஒருவரை பயன்படுத்துவர் வேலை முடிந்ததும் அவர்களை துரத்தி அடிப்பதும் அவர்கள் மீது கறை பூசுவதையே தொழிலாக வைத்துள்ளார் . .
அவ்விதம் இப்போது தங்கத்திற்கும் ஆப்பு .விரைவில் பல விடயங்கள் உடையும் எனவும் ,அதில் பண மோசடி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது .
பேஸ்புக் கொண்டாட்டம் 75 ஆண் பெண்கள்கைது
பேஸ்புக் கொண்டாட்டம் 75 ஆண் பெண்கள்கைது
பேஸ்புக் கொண்டாட்டம் 75 ஆண் பெண்கள்கைது செய்யப்பட்டுள்ளனர் .
சீதுவ பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட இரகசிய இடம் ஒன்றில் இடம்பெற்று வந்த கொண்டாட்ட நிகழ்வின் பொழுதே இவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் .
இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் போதை ,கஞ்சா ,சிகரெட் ,மதுபோதை என்பன காணப்பட்டுள்ளன .
இது யோடிகள் ஒன்றாக கூடி கும்மாளம் அடித்த பொழுதே கைது செய்யப்பட்டனர் .
கைதானவர்களில் 15 முதல் 25 வயது உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பேஸ்புக் ஊடாக நிதி மோசடி
பேஸ்புக் ஊடாக நிதி மோசடி
பேஸ்புக் ஊடாக நிதி மோசடி ,மோசடியாக பேஸ்புக் கணக்கொன்றினுள் பிரவேசித்து உறவினரைப் போல ஆள்மாறாட்டம் செய்து நிதிமோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நேற்று (21) இந்நாட்டிற்கு வந்தபோது, கொழும்பு குற்றப்பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இந்த சந்தேக நபர் உறவினர் போல் தன்னை காட்டிக் கொண்டு மோசடியாக பேஸ்புக் கணக்கின் ஊடாக, மூன்று சந்தர்ப்பங்களில் வங்கிக் கணக்கு ஒன்றிலிருந்து 700,000 ரூபாயை வைப்பிலிடச் செய்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 22 ஆம் திகதியன்று கொழும்பு குற்றப்பிரிவுக்கு முறைப்பாடு கிடைத்தது. அதன் பின்னர் சம்பந்தப்பட்ட கணக்குகளை தணிக்கை செய்தபோது சந்தேக நபரை பொலிசார் அடையாளம் கண்டனர்.
சந்தேக நபர் தொடர்பாக வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின்படி, அவர் கட்டாரில் இருந்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
சந்தேக நபருக்கு எதிராக குடிவரவுத் தடை பெறப்பட்டதுடன், நேற்று அவர் நாட்டிற்கு வந்தவுடன், கொழும்பு குற்றப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொன்னேகுளம பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
பேஸ்புக் மூலம் போதை பார்ட்டி 43 பேர் கைது
பேஸ்புக் மூலம் போதை பார்ட்டி 43 பேர் கைது
பேஸ்புக் மூலம் போதை பார்ட்டி 43 பேர் கைது ,நீர்கொழும்பு கடற்கரையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஹெரோயின், கஞ்சா மற்றும் சட்டவிரோத சிகரெட்களுடன் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் 43 பேர் கைது
செய்யப்பட்டுள்ளதாக கலால் திணைக்களத்தின் மேல் மாகாண உதவி ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கலால் திணைக்களத்தினால் அமுல்படுத்தப்படும் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் குறித்த சுற்றிவளைப்பு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 19 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் அவர்களில் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள், வர்த்தகர்கள் மற்றும் பல்வேறு தொழில் செய்பவர்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் குழுவில் 10 இளம் பெண்களும் 33 இளைஞர்களும் இருந்துள்ளனர்.
முகநூல் ஊடாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு வந்துள்ள இவர்கள் தங்காலை, மாரவில, கிரிந்திவெல, ஹிகுராக்கொட, பூகொட, நீர்கொழும்பு, ஜாஎல, திகன, ஹொரண ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் என தெரியவந்துள்ளது
பேஸ்புக் மூலம் இளம் பெண்களை வேட்டையாடிய இளைஞன் கைது
பேஸ்புக் மூலம் இளம் பெண்களை வேட்டையாடிய இளைஞன் கைது
அண்மையில், பேஸ்புக் மூலம் குறைந்த விலையில் ‘ஐபோன்’ தருவதாக கூறி இளம் பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக ஊடக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.
அதன்படி, வேறு ஒரு இளம்பெண்ணின் புகைப்படங்கள் மற்றும் பெயரைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி முகநூல் கணக்கு மூலம் குறித்த நபர் சம்பந்தப்பட்ட இளம்பெண்களுடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர், மொடலிங் போட்டியொன்றில் வெற்றி பெற்றால், ‘ஐபோன்’ கைப்பேசி இலவசமாக வழங்கப்படும் என்றும் குறித்த நபர் அப் பெண்களிடம் கூறியுள்ளார்.
அதன் பின்னர் சந்தேக நபர் இளம் பெண்களிடம் அவர்களின் அரை நிர்வாண புகைப்படங்களை பெற்று அவற்றை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக கூறி பணம் பறித்ததாக கூறப்படுகிறது.
பேஸ்புக் மூலம் இளம் பெண்களை வேட்டையாடிய இளைஞன் கைது
பணம் தராத யுவதிகளை குருநாகல் பகுதிக்கு அழைத்து வந்து பலாத்காரம் செய்ததையும் விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பின்னர், முகநூல் நிறுவனத்தின் ஊடாக தகவல்களை பெற்றுக்கொண்ட விசாரணை அதிகாரிகள் பொலன்னறுவை பகுதியில் வைத்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
அத்துடன், அவர் பணப் பரிமாற்றம் செய்த வங்கிக் கணக்கின் உரிமையாளரும் தம்புள்ளை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் இருவரும் 22 மற்றும் 20 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபருடன் பாடசாலை வயது மாணவிகளும் தகவல்களை பரிமாறிக்கொண்டுள்ள நிலையில்,
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
டுவிட்ருக்கு போட்டியாக பேஸ்புக் களமிறக்கிய புதிய திரட் சமூக வலைத்தளம்
டுவிட்ருக்கு போட்டியாக பேஸ்புக் களமிறக்கிய புதிய திரட் சமூக வலைத்தளம்
உலக மக்களை ஆட்டி படைத்தது வரும் சமுக வலைத்தளங்களில் ,
டிவிட்டர் பேஸ்புக் என்பன முக்கிய பங்காற்றி வருகின்றன .
இவ்வாறான நிலையில் தற்போது டிவிட்ருக்கு போட்டியாக,
பேஸ்புக் ,திரட் என்கின்ற புதிய சமுக வலைதளத்த்தை உருவாக்கியுள்ளது .
ஆரம்பித்த இரண்டு நாட்களில் இருபது மில்லியனுக்கு ,
மேற்பட்ட மக்கள் அதில் தம்மை பதிவு செய்துள்ளனர் .
இவ்வரசு தொடர்ந்து நீடித்தால் ,டிவிட்ருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என ,
எதிர் பார்க்க படுகிறது .
டுவிட்டரில் இல்லாத பல வசதிகளை பேஸ்புக் நிறுவியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
பேஸ்புக்கிற்கு 2 பில்லியன் தண்டம்
பேஸ்புக்கிற்கு 2 பில்லியன் தண்டம்
உலக மக்களை மிகவும் கவர்ந்துள்ள பேஸ்புக்
நிறுவனத்தின் மெட்ரா நிருவனத்திற்கு இரண்டு பில்லியன் தண்டம் அறவிட பட்டுள்ளது .
ஐரோப்பிய மக்களின் தரவுகளை ,அமெரிக்காவுக்கு மாற்றிட ,
பேஸ்புக் முனைந்ததாக தெரிவித்து , சட்ட நகர்வுகள் மேக்கொள்ள பட்டு வந்தன ,அதன் தீர்ப்பில் இரண்டு பில்லியன் டொலர்களை வழங்க வேண்டும் எனதீர்ப்பளிக்க பட்டுள்ளது .
பேஸ்புக்கிற்கு 2 பில்லியன் தண்டம்
மக்கள் முழு விபரங்களை ,பெற்று கொள்ளும் பேஸ்புக் ,அதனை அப்டியே
அமெரிக்காவுக்கு கடத்தியது ,அதனால் மக்களின் தரவு பாதுகாபபு மீறல் .
மற்றும் அச்சுறுத்தல் தொடர்பில் எழுந்த முரண்நிலைகளினால் ,இந்த தண்டம் விதிக்க பட்டுள்ளது .
அமேசான் நிறுவனத்திற்கு பின்னர் இப்பொழுது
பேஸ்புக் நிறுவனத்திற்கு விதிக்க பட்டுள்ள, அதி உச்ச தண்டமாக இது காண படுகிறது .
பேஸ்புக் கட்டண சேவையாக மாற்றம் |உலக செய்திகள்
பேஸ்புக் கட்டண சேவையாக மாற்றம் |உலக செய்திகள்
உலக செய்திகள் |பேஸ்புக் நிறுவனம் தற்போது தமது சேவைகளை பயனாளர்கள் ,பெற்று கொள்ள கட்டண சேவையை அறவிடுகிறது .
பயனாளர்கள் தமது பாதுகாப்பை உறுதி படுத்தி கொள்ள ,
தற்போது பேஸ்புக் மெட்ரா சேவை ஊடாக ,வெரிபை என்கின்ற பாதுகாப்பு
விதிகளையே அறிமுக படுத்துகிறது .
இதற்கு மாதம் தோறும் மக்கள் கட்டணம் செலுத்த வேண்டும் .
அவ்வாறு செலுத்துவதன் ஊடக இன்ஸாகிராம் மற்றும் பேஸ்புக் ,
என்பனவற்றை பாதுகாப்பாக வைத்து கொள்ள முடியும் என்கிறது .
Meta Verified iசெய்வதற்கு $11.99 ல் இருந்து $14.99
அமெரிக்கா டொலர்கள் கட்டணமாக அறவிடுகிறது .
இது பேஸ்புக் வேறு திட்டத்துடன் நகர்கிறது என்கின்ற
குற்ற சாட்டு முன் வைக்க படுகிறது .
வாக்காளர் அட்டைகளை பயன் படுத்தி, பேஸ்புக் மூலம்
வாக்குகளை செலுத்தும், தேர்தல் நடவடிக்கையை
மைய படுத்தி நகர்வதாக ,உற்று நோக்க படுகிறது .
பேஸ்புக் தற்கொலை நேரலை புரிந்த நாபர் – மடக்கிய காவல்துறை
பேஸ்புக் தற்கொலை நேரலை புரிந்த நாபர் – மடக்கிய காவல்துறை
இந்தியா டில்லி பகுதியில் 45 வயதுடைய நபர் ஒருவர் பேஸ்புக்கில் நேரலையில் தான் தற்கொலை செய்ய போவாகக தெரிவித்துள்ளார்
இதனை பார்வையிட்ட பேஸ்புக் உடனடியாக காவல்துறைக்கு மெயில் அனுப்பியது ,இதனை தொடர்ந்து உஷாரான காவல்துறையினர் அந்த நபர் உள்ள இடத்தை கண்டு பிடித்தனர்
அப்போது அவர் வீட்டுக்குள் மயங்கிய நிலையில் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார்
இவர் மனைவியை பிரிந்து வசித்து வருவதாலும் ,உடல் நல குறைபட்டாலும் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக இந்த தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது
பேஸ்புக்கில் விட்ட பெரும் தவறு -கண்டு பிடித்த இந்திய மாணவன்
பேஸ்புக்கில் விட்ட பெரும் தவறு -கண்டு பிடித்த இந்திய மாணவன்
முகநூல் நிறுவனம் தங்கள் தளங்களில் இருக்கும் பிழைகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசுத்தொகை அறிவித்திருந்தது.
முகநூலில் தொழில்நுட்ப குறைபாட்டை கண்டுபிடித்து ரூ.22 லட்சம் பரிசு பெற்ற இந்திய மாணவன்
மராட்டிய மாநிலம் சோலாப்பூரை சேர்ந்தவர் கணிப்பொறியியல் மாணவர் மயூர். முகநூல் நிறுவனம் தங்கள் தளங்களில் இருக்கும் பிழைகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசுத்தொகை
அறிவித்திருந்தது. அதில் பங்கேற்ற மயூர், இன்ஸ்டாகிராமில் தனியாக கணக்கு வைத்திருந்தாலும் கூட, அதிலுள்ள ஒரு பிழை, எவரை வேண்டுமானாலும் தவறாக நுழைய அனுமதித்து பயனர்களின்
புகைப்படங்கள், கதைகள், ரீல்ஸ் ஆகியவற்றை பார்க்க வைக்கிறது என்ற தொழில்நுட்ப குறைபாட்டை கண்டுபிடித்தார்.
இதனை கடந்த மாதம் முகநூலில் அறிவித்த போட்டியில் பங்கேற்று தெரிவித்தார்.
அந்த பிழையை கடந்த 15-ந் தேதி முகநூல் நிர்வாகம் சரிசெய்தது. அதனை கண்டுபிடித்த இந்திய மாணவர் மயூருக்கு ரூ.22 லட்சம்
பரிசு வழங்குவதாக அறிவித்தது. எதிர்காலத்திலும் இது போன்ற தகவல்களை தங்களிடம் எதிர்பார்க்கிறோம் என மயூரிடம் முகநூல் நிறுவனம் கூறியுள்ளது.
20 லட்சம் பேஸ்புக் கணக்குகளை முடக்கும் இலங்கை அரசு –
20 லட்சம் பேஸ்புக் கணக்குகளை முடக்கும் இலங்கை அரசு –
இலங்கை ஆளும் அசினால் உலகின் பிரபல சமூக வலைத்தளமான விளங்கி வரும் பேஸ்புக்கின்
இருபது லட்சம் கண்களுக்களை முடக்க உள்ளது
உரிய உரிமம் கோராத இருபது லட்சம் பேரது கணக்குகளையே இவ்வாறு முடக்க உள்ளதாக
அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது ,பாவனையாளர்கள் வயிற்றில் புளியை கரைத்துள்ளது
பேஸ்புக்கிற்கு 843 மில்லியன் தண்டம் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பேஸ்புக்கிற்கு 843 மில்லியன் தண்டம் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
உலக யாம்பவானாக இடம்பிடித்து சாதனை படைத்தது விளங்கும் பேஸ்புக் நிறுவனம் பயனாளர்களின் அனுமதியின்றி அவர்க்ளின்
தனி நபர் விபரங்களை திரட்டி வெளியிட்டதாக கூறிய புகாரில்
சுமார் 843 மில்லியன் அமெரிக்கா டொலர்களை குறித்த நிறுவனம் தண்டமாக செலுத்தியுள்ளது
பல்லாண்டுகளாக இடம்பெறு வந்த நீதி விசாரணைகளில் இந்த அதிரடி தீர்ப்பு
வழங்க பட்டுள்ளது ,பேஸ்புக் தற்பொழுது பெரும் அடாவடிகளில்
ஈடுபட்டு வருவதாக பயனாளர்கள் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது
அவுஸ்ரேலியாவில் பேஸ்புக்,கூகிள் பணம் செலுத்த வேண்டு – புதிய சட்டம் அறிமுகம்
அவுஸ்ரேலியாவில் பேஸ்புக்,கூகிள் பணம் செலுத்த வேண்டு – புதிய சட்டம் அறிமுகம்-பேஸ்புக் பாவிக்க தடை
கட்டணம்
அவுஸ்ரேலியாவில் உலகில் பிரபல சமூகவலைத்தளங்களாக விளங்கும் கூகிள்,மற்றும் பேஸ்புக் என்பன அதில் வெளிவரும்
செய்திகளுக்குப் பணம் செலுத்த வேண்டும் என்ற சட்டம் தற்போது நிறை வேற்றப் பட்டுள்ளது
புதிய சட்டம்
மேற்படி சட்டத்துக்கு எதிராக பேஸ்புக் தனது பயனாளர் சேவையை அங்கு நிறுத்தி அதிரடி காட்டிய பொழுதும் ,அது கடந்து இந்த சட்டம் அமூல் படுத்த பட்டுள்ளது
எச்சரிக்கை
அதுபோல கூகிளும் அங்கிருந்து தமது தேடு பொறியை முற்றாக நிறுத்த போவதாக எச்சரிந்திருந்தது
அவற்றை கருத்தில் கொள்ளாது மேற்படி சட்டம் அமுலாக்கம் பெற்றுள்ளாள் நிலையில், கூகிள் தேடு பொறியும்
தவிக்கும் மக்கள்
அவுஸ்ரேலியாவில் மக்கள் பாவனைக்கு தடை செய்யும் வாய்ப்பு உள்ளதாக எதிர் பார்க்க படுவதுடன் ,தொடந்து அந்த நாட்டு மக்கள் பேஸ்புக்கை பாவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது
அமெரிக்காவில் ‘பேஸ்புக்’ மீது வழக்குகள்
அமெரிக்காவில் ‘பேஸ்புக்’ மீது வழக்குகள்
பிரபல சமூக வலைத்தள நிறுவனமான ‘பேஸ்புக்’ நிறுவனம் மீது அமெரிக்காவில் 45 மாகாணங்களில் அரசு வக்கீல்கள் வழக்குகளை தொடுத்து உள்ளனர்.
அமெரிக்காவில் ‘பேஸ்புக்’ மீது வழக்குகள் குவிகின்றன
:
பிரபல சமூக வலைத்தள நிறுவனமான ‘பேஸ்புக்’ நிறுவனம் மீது அமெரிக்காவில் 45 மாகாணங்களில் அரசு வக்கீல்கள் வழக்குகளை
தொடுத்து உள்ளனர். ‘பேஸ்புக்’ நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்க அரசு எடுத்துள்ள மிக முக்கியமான சட்ட நடவடிக்கைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
தனது போட்டி நிறுவனங்களை வாங்குவதற்கும், போட்டிகளை தடுப்பதற்கும் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ‘பேஸ்புக்’ நிறுவனம் ஈடுபடுகிறது என்பதுதான் குற்றச்சாட்டு.
இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் ஆகியவற்றை சொந்தமாக கொண்டுள்ள இந்த நிறுவனத்தை உடைப்பது குறித்து
பரிசீலிக்குமாறு அதிகாரிகள் கோர்ட்டுகளை கோரி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுபற்றி ‘பேஸ்புக்’ நிறுவனம் கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் புகார்களை ஆய்வு செய்கிறோம். இதுபற்றி விரைவில் விரிவாக சொல்வோம். பெடரல் வர்த்தக ஆணையம் (எப்.டி.சி.) எங்கள்
கையகப்படுத்துதல்களை அனுமதித்துள்ளது” என கூறியது. பேஸ்புக், பேஸ்புக் மெசேஞ்சர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகிய அனைத்தும் பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமானவை, அவற்றை
மாதம்தோறும் 100 கோடி பேருக்கு மேல் உபயோகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
சூடு பிடிக்கும் அமெரிக்கா தேர்தல் 2,மில்லியன் விளம்பரங்களை அகற்றிய பேஸ்புக்
சூடு பிடிக்கும் அமெரிக்கா தேர்தல் 2,மில்லியன் விளம்பரங்களை அகற்றிய பேஸ்புக்
அமெரிக்காவில் இடம்பெற்றவுள்ள தேர்தலை அடுத்து சமுக வலைத்தளங்களை
மையப்படுத்தி தேர்தல் பரப்புரைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,
இதில் ஆளும் அரச அதிபர் டிரம்ப் பலத்த தோல்வியை தழுவுவார் எனவும் ,
பைடனே வெற்றிபெறுவார் என்ற கருது கணிப்பு பலமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இவ்வாறு இந்த போர் நடந்து கொண்டிருக்க பேஸ்புக் ,மற்றும் இன்ஸாகிராமில்
சுமார் .22 லட்சம் விளம்பரங்கள் அகற்ற பட்டுள்ளன ,மேலும் 120,000 பதிவுகள் அகற்ற பட்டுள்ளன
பேஸ்புக் எடுத்துள்ள இந்த அதிரடி முடிவினால் டிரம் மற்றும் பைடன்
தரப்பு கடும் அதி திருப்தியில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது



























