Posted in சினிமா

வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைக்கு தாயான பிரீத்தி ஜிந்தா

வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைக்கு தாயான பிரீத்தி ஜிந்தா

பிரபல பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா, வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைக்கு தாயானதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைக்கு தாயான பிரீத்தி ஜிந்தா
பிரீத்தி ஜிந்தா


பிரபல இந்தி நடிகை பிரீத்தி ஜிந்தா. இவர் மணிரத்னம் இயக்கிய “தில் சே” படத்தில் அறிமுகமாகி

முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தில் சே படம் தமிழில் உயிரே என்ற பெயரில் வெளியானது.

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கொண்ட பிரீத்தி ஜிந்தா, ஐ.பி.எல். கிரிக்கெட் பஞ்சாப் அணியின்

உரிமையாளர்களுள் ஒருவராக இருக்கிறார். பிரீத்தி ஜிந்தா கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்காவை

சேர்ந்த ஜீன் குட்எனப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது 46 வயதாகும் பிரீத்தி ஜிந்தா வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளைப் பெற்றுள்ளார். அந்த குழந்தைகளுக்கு ஜெய் ஜிந்தா, ஜியா ஜிந்தா என்று பெயர் வைத்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் பிரீத்தி ஜிந்தா வெளியிட்டுள்ள பதிவில், ‘‘நானும், கணவர் ஜீனும் மகிழ்ச்சியில் உள்ளோம், எங்கள் இதயங்கள் நன்றியுணர்வுடன் நிரம்பியுள்ளன. எங்கள் இரட்டை

குழந்தைகளை குடும்பத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். எங்கள் வாழ்க்கையில் இது புதிய

கட்டம். உற்சாகமாக இருக்கிறோம். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் எங்கள் வாடகை

தாய்க்கு நன்றி” என கூறியுள்ளார். பிரீத்தி ஜிந்தாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    Posted in சினிமா

    சர்வதேச திரைப்பட விழா- ஹேம மாலினிக்கு சிறந்த ஆளுமை விருது.

    சர்வதேச திரைப்பட விழா- ஹேம மாலினிக்கு சிறந்த ஆளுமை விருது.

    கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் ஹேம மாலினிக்கு இந்த ஆண்டின் சிறந்த இந்திய ஆளுமை விருது வழங்கப்பட்டது.

    இந்திய சர்வதேச திரைப்பட விழா- ஹேம மாலினிக்கு சிறந்த ஆளுமை விருது
    ஹேம மாலினிக்கு விருது வழங்கப்பட்ட காட்சி
    பனாஜி:

    கோவாவில் 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழா இன்று கோலாகலமாக தொடங்கியது. திரைப்பட விழாவில் சர்வதேச பிரிவில் சுமார் 73 நாடுகளில் இருந்து 148 படங்கள்

    இடம்பெறுகின்றன. 28ம் தேதி வரை விழா நடைபெறுகிறது. ஓடிடி தளங்களான நெட்பிளிக்ஸ்,

    அமேசான் பிரைம், ஜீ 5, வூட், சோனி லைவ் ஓடிடி தளங்கள் விழாவில் கலந்து கொள்கின்றன.

    துவக்க விழாவில் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாகூர், மத்திய இணை மந்திரி எல்.முருகன், பாலிவுட் நட்சத்திரங்கள் சல்மான் கான் மற்றும் ரன்வீர் சிங்,

    மத்திய ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சுமார் 75 திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் சர்வதேச திரைப்பட விழாவையொட்டி இந்திய திரைப்பட ஆளுமை விருது வழங்கப்படுகிறது. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான இந்திய திரைப்பட

    ஆளுமை விருது ஹேம மாலினிக்கு வழங்கப்பட்டது. விருதை மத்திய மந்திரி அனுராக் தாகூர்,

    இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் வழங்கினர். இதேபோல், சிறந்த பாடலாசிரியரும், மத்திய

    திரைப்பட சான்றிதழ் வாரிய தலைவருமான பிரசூன் ஜோஷிக்கும் இந்த விருது வழங்கப்பட உள்ளது.

    ஹாலிவுட் பிரபலம் மார்ட்டின் ஸ்கோர்செஸி மற்றும் புகழ்பெற்ற ஹங்கேரிய திரைப்பட

    தயாரிப்பாளர் இஸ்டெவன் சாபோ ஆகியோருக்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது

    வழங்கப்பட்டது

    .

      Posted in சினிமா

      சின்னத்திரை நடிகை வீட்டில் கொள்ளை – போலீஸ் விசாரணை

      சின்னத்திரை நடிகை வீட்டில் கொள்ளை – போலீஸ் விசாரணை

      கேரளாவில் பிரபல சின்னத்திரை நடிகை வீட்டில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளை நடந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      பிரபல சின்னத்திரை நடிகை வீட்டில் கொள்ளை – போலீஸ் விசாரணை
      சின்னத்திரை நடிகை ஸ்ரீகலா

      கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கண்ணூபுரத்தை சேர்ந்தவர் ஸ்ரீகலா(வயது24). இவர் கேரள சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானார். மேலும் சினிமாவிலும் சிறு, சிறு வேடங்களில் நடித்து வருகிறார்.

      இவர் கண்ணூபுரம் பகுதியில் தனது தந்தை மற்றும் தங்கை ஜெயாவுடன் வசித்து வருகிறார். தினமும் வீட்டில் இருந்து படப்படிப்பிடிப்புக்கு செல்வது வழக்கம்.

      நேற்று காலை வழக்கம்போல் ஸ்ரீகலா தனது வீட்டில் இருந்து சினிமா படப்பிடிப்புக்கு புறப்பட்டு சென்றார். வீட்டில் அவரது தந்தையும், தங்கையும் மட்டுமே இருந்தனர். இந்த நிலையில் ஸ்ரீகலாவின் தங்கை தனது தந்தையுடன் பொருட்கள் வாங்குவதற்காக மதியம் அந்த பகுதியில் உள்ள கடைவீதிக்கு சென்றனர்.

      பின்னர் அவர்கள் மாலை 3 மணியளவில் வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த 2 பேரும் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் இருந்த அலமாரி திறந்து கிடந்ததுடன், பொருட்களும் ஆங்காங்கே சிதறி கிடந்தன. அலமாரியில் வைத்திருந்த 20 பவுன் தங்க நகை திருடு போய் இருந்தது.

      இவர்கள் 2 பேரும் வெளியில் சென்றதை நோட்டமிட்ட நபர்கள் வீட்டிற்குள் புகுந்து கதவை உடைத்து, உள்ளே நுழைந்து அலமாரியை உடைத்து, அதில் இருந்த நகையை திருடி சென்றது தெரியவந்தது.

      இதுகுறித்து சின்னத்திரை நடிகை ஸ்ரீகலாவின் தங்கை ஜெயா கண்ணூபுரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

      தொடர்ந்து போலீசார் அந்த வீட்டில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

        Posted in சினிமா

        பிறந்தநாளில் புதிய பட அறிவிப்பை வெளியிட்ட நயன்தாரா

        பிறந்தநாளில் புதிய பட அறிவிப்பை வெளியிட்ட நயன்தாரா

        முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நிலையில், அவர் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

        பிறந்தநாளில் புதிய பட அறிவிப்பை வெளியிட்ட நயன்தாரா
        நயன்தாரா


        தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா இன்று தனது பிறந்தநாளை

        கொண்டாடி வருகிறார். இவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

        இந்த நிலையில் இன்று நயன்தாராவின் பிறந்தநாளை அடுத்து அவருடைய புதிய படம் குறித்த

        அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘கனெக்ட்’ என்று பெயர் வைத்திருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். மாயா படத்தை இயக்கிய அஸ்வின்

        சரவணன் இப்படத்தை இயக்குகிறார். தனது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் நயன்தாராவே இப்படத்தை தயாரிக்கிறார்.

        கனெக்ட்
        கனெக்ட் படத்தின் போஸ்டர்

        தற்போது கனெக்ட் படத்தின் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

          Posted in சினிமா

          நிர்வாணமாகவோ காட்டவோ மட்டுமே நான் – ராதிகா ஆப்தே

          நிர்வாணமாகவோ காட்டவோ மட்டுமே நான் – ராதிகா ஆப்தே

          பிரபல பாலிவுட் நடிகையான ராதிகா ஆப்தே, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கவர்ச்சியாக நடிப்பது குறித்து விளக்கம் அளித்து இருக்கிறார்.

          நிர்வாணமாகவோ கவர்ச்சியை காட்டவோ மட்டுமே நான் சினிமாவிற்கு வரவில்லை – ராதிகா ஆப்தே
          ராதிகா ஆப்தே


          தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி படத்தில் நடித்து பிரபலமான ராதிகா ஆப்தே தெலுங்கு,

          இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். ஒரு படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை

          ஏற்படுத்தினார். தற்போது ராதிகா ஆப்தே அளித்துள்ள பேட்டியில், ”சமீபத்தில் ஒரு இயக்குனர்

          என்னை சந்தித்து அவரது படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடிக்க சொன்னார். ஏன் இதே போன்ற கதைகளுடன் வருகிறீர்கள் என கேட்டேன்.

          நீங்கள் பட்லாபூர், அகல்யா போன்ற படங்களில் மிகவும் கவர்ச்சியாக நடித்தது மட்டுமின்றி

          ஏற்கனவே நிர்வாணமாக ஒரு படத்தில் நடித்து இருக்கிறீர்கள் அல்லவா என கேட்டார்.

          எனவே இப்படத்தில் அதே போன்ற கதாபாத்திரம் செய்வீர்களோ என்ற எண்ணத்தில் உங்களை அணுகினேன் என தெரிவித்தார். அதை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்.

          ராதிகா ஆப்தே

          இந்திய சினிமாவில் மட்டுமல்ல வெளிநாட்டு படங்களிலும் நிர்வாணமாக நடிப்பது ஒன்றும்

          தவறல்ல. கதைக்கு தேவை என்றால் அப்படி நடிக்கலாம். நிர்வாணமாக நடிக்க வைப்பதற்காகவே

          கண்டபடி கதைகளை கொண்டு வந்தால் எப்படி?. நிர்வாணமாகவோ கவர்ச்சியை காட்டவோ

          மட்டுமே நான் சினிமாவிற்கு வரவில்லை. கதை பிடித்திருந்தால் எவ்வளவு தூரம்

          வேண்டுமானாலும் செல்வேன். கதையே இல்லாமல் உடம்பை காட்டவோ நிர்வாணமாக நடிக்கவோ மாட்டேன்” என்றார்.

            Posted in சினிமா

            பிக்பாஸ் வீட்டில் வெடித்த சண்டை

            பிக்பாஸ் வீட்டில் வெடித்த சண்டை

            பிக்பாஸ் நிகழ்ச்சி வர வர சூடு பிடித்து வருகிறது. கண்ணாடி டாஸ்க் என்று கொடுத்து இருவர்

            இருவராக சேர்த்துவிட்டு பிக்பாஸ் செம பிளான் போட்டார்.

            இதில் சிலரது கூட்டணி ஜாலியாக இருந்தது, ஒருசிலரது விளையாட்டு சண்டையில் போய் முடிந்தது.

            இன்று காலை ஒரு புதிய புரொமோ வந்துள்ளது, அதில் இசைவாணி மற்றும் தாமரை கண்ணாடி

            முன் நின்று பேசும் டாஸ்க் செய்துள்ளார்கள். அதில் தாமரை, இசைவாணி குறித்து பேச அது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

            டாஸ்க் முடிந்ததும் இசைவாணி கோபமாக பேச தாமரைக்கு இவருக்கும் வாக்குவாதம் நடக்கிறது.

            அவர்கள் பேசியதை பார்த்தால் பெரிய சண்டையில் முடிந்திருக்குமோ என தோன்றுகிறது.

            கடைசியில் என்ன தான் நடந்தது என்பதை இன்றைய நிகழ்ச்சியில் காண்போம்.

              Posted in சினிமா

              பொலிஸில் தஞ்சமடைந்த சினேகா!

              பொலிஸில் தஞ்சமடைந்த சினேகா!

              பிரபல நடிகையாக இருக்கும் சினேகா, தன்னிடம் தனியார் ஏற்றுமதி நிறுவனம் ஒன்று பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டதாக புகார் கொடுத்து இருக்கிறார்.

              நடிகை சினேகா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கிலும் நடித்து புகழ் பெற்றவர். தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு பிரசன்னாவுடன் நடித்தபோது

              அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலித்து 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். இருவருக்கும் ஒரு ஆண், ஒரு பெண் என 2 குழந்தைகள் உள்ளது.

              திருமணத்திற்கு பின்னரும் இருவரும் திரைப்படங்கள் மற்றும் விளம்பரப்படங்களிலும் நடித்து வருகின்றனர்.

              இந்நிலையில் நடிகை சினேகா காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் தனியார் நிறுவனம் தங்கள் நிறுவனத்துக்கு பெரும் தொகையை பங்காக கொடுத்தால் மாதம்

              குறிப்பிட்ட சதவீதம் இலாபம் தருவதாக ஆசைக்காட்டியதன் பேரில் ஆன்லைன் மூலம் ரூ.25 லட்சமும், நேரில் ரூ.1 லட்சமும் கொடுத்ததாகவும் இதற்காக மாசம் ரூ.1.80 லட்சம் இலாபம்

              தருவதாக அவர்கள் தெரிவித்ததாகவும், ஆனால் ஐந்து மாதம் ஆகியும் பங்கு தொகையும் தராமல், அசல் தொகையும் தராமல் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

              மேலும் இது குறித்து கேட்ட போது பணம் தர முடியாது என அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக புகாரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பொலிசார் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரிக்க உள்ளனர்.

                Posted in சினிமா

                என் படத்தில் அது இல்லை – பிரபு தேவா

                என் படத்தில் அது இல்லை – பிரபு தேவா

                தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் பணியாற்றி வரும் பிரபு தேவா, தற்போது தேள் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

                ரசிகர்கள் எதிர்பார்ப்பது என் படத்தில் இல்லை – பிரபு தேவா
                பிரபு தேவா


                பிரபு தேவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘தேள்’. ஹரிகுமார் இயக்கியுள்ள

                இப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளார். அம்மாவாக ஈஸ்வரி ராவ் நடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார்.

                இப்படம் குறித்து பிரபுதேவா கூறும்போது, ‘இயக்குநர் ஹரிகுமார் மிகச்சிறப்பான பணியினை செய்துள்ளார். இயல்பை விடவும் பலமடங்கு அற்புதமான உழைப்பை இப்படத்திற்கு தந்துள்ளார்.

                ஹரியும் நானும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள். இருவரும் உதவி நடன இயக்குனர்களாக பணியாற்றியிருக்கிறோம். இப்போது அவர் மீண்டும் புதிய தளத்தில் தன்

                திறமையை நிரூபிக்கவுள்ளார். உண்மையாகவே இந்த திரைப்படம் எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. என் படத்தில் ரசிகர்கள் எதிர்பார்ப்பது நடனம் தான். ஆனால்,

                இந்தப்படத்தில் எனக்கு நடன காட்சியே இல்லை. மேலும் நான் இடது கை பழக்கம் கொண்டவனாக முதல் முறையாக நடித்திருக்கிறேன்.

                பிரபுதேவா

                நான் என் வழக்கமான நடிப்பை நடிக்கிறேனா என என்னை செக் செய்து கொண்டே இருப்பார் இயக்குனர். நான் அம்மாதிரி நடித்தால் உடனே அதை மாற்றுவார்.

                ஈஸ்வரி மேடம் தமிழில் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். சம்யுக்தா மிக பப்ளியான அழகான நாயகியாக மிளிர்கிறார்.

                அவரது நடிப்பு இப்படத்தில் மிக முக்கிய அம்சமாக இருக்கும். இப்படம் மிக அழுத்தமான படைப்பாக, அனைவருக்கும் பிடிக்கும் படைப்பாக இருக்கும்’ என்றார்.

                  Posted in சினிமா

                  தூக்கம் வராமல் கஷ்டப்பட்டேன் – விஷால்

                  தூக்கம் வராமல் கஷ்டப்பட்டேன் – விஷால்

                  நடிகர் புனித் ராஜ்குமார் நடத்திய மைசூரு சக்திதாமா இல்ல குழந்தைகளின் கல்வி செலவை ஏற்பதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.

                  2 நாட்கள் தூக்கம் வராமல் கஷ்டப்பட்டேன் – விஷால்
                  விஷால்


                  பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் சமீபத்தில் மாரடைப்பால் காலமானார். இவருக்கு

                  புகழஞ்சலி கூட்டம் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் விஷால் கலந்து கொண்டு பேசியதாவது:-

                  நடிகர் புனித் ராஜ்குமாரின் இறப்பு செய்தியை என்னால் ஏற்கவே முடியவில்லை. அவர் மிக திறமையான நடிகர். புனித் ராஜ்குமார் இறந்த பிறகு 2 நாட்கள் எனக்கு தூக்கம் வராமல்

                  கஷ்டப்பட்டேன். எனக்கு சொந்த வீடு இல்லை. வீடு வாங்க வேண்டும் என்று சிறிது பணத்தை சேமித்து வைத்துள்ளேன்.

                  வீடு பின்பு கூட வாங்கிக்கொள்ள முடியும். புனித் ராஜ்குமார் நடத்திய சக்திதாமா அனாதை இல்ல குழந்தைகளின் கல்வி செலவை நான் ஏற்கிறேன்.

                  விஷால்
                  விஷால்

                  இதற்கு அவரது குடும்பத்தினர் அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்கிறேன். புனித் விட்டு சென்ற நல்ல பணிகளை நாம் தொடர வேண்டும். அதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.

                  அனைவருக்கும் இதயம் உள்ளது. ஆனால் நல்ல பணிகளை ஆற்ற வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருப்பது இல்லை. அவர் சமூக சேவைகளை வெளியில் தெரியாமல் செய்துள்ளா

                  ர். நான் விளம்பரத்திற்காக இந்த கல்வி செலவை ஏற்பதாக கூறவில்லை. உள்ளபடியே அவரது இந்த நல்ல சேவையை தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இதை செய்கிறேன்.

                  இவ்வாறு விஷால் பேசினார்.

                    Posted in சினிமா

                    சூர்யாவுக்கு போலீஸ் பாதுகாப்பு

                    சூர்யாவுக்கு போலீஸ் பாதுகாப்பு

                    சமீபத்தில் வெளியான ஜெய் பீம் படத்திற்கு எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், சூர்யாவின் வீட்டுக்கு தூப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

                    ஜெய்பீம் எதிர்ப்பு எதிரொலி – சூர்யாவுக்கு போலீஸ் பாதுகாப்பு
                    சூர்யா


                    நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படம் சர்ச்சையில் சிக்கி உள்ளது. பா.ம.க. சார்பில் அந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி நடிகர் சூர்யாவுக்கு மிரட்டல்கள் வந்த

                    வண்ணம் உள்ளது. நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வன்னியர் சங்கம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

                    இதனால் நடிகர் சூர்யாவின் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போட கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டார். இதன்பேரில் தியாகராயநகர் ஆற்காடு சாலையில் உள்ள நடிகர்

                    சூர்யாவின் வீட்டுக்கு நேற்று இரவில் இருந்து துப்பாக்கி ஏந்திய 5 போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

                    சூர்யா
                    சூர்யாவின் வீடு

                    சூர்யாவுக்கு தனிப்பட்ட முறையில் துப்பாக்கியுடன் 2 போலீசார் பாதுகாப்பு பணியில்

                    இருப்பார்கள். அவர் வெளியில் செல்லும் போது அந்த போலீசார் உடன் செல்வார்கள் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

                      Posted in சினிமா

                      அந்த நடிகருடன் ஜோடி சேர மறுக்கும் நடிகை

                      அந்த நடிகருடன் ஜோடி சேர மறுக்கும் நடிகை

                      அதிக சம்பளம் வாங்கி வரும் பெரிய நடிகை ஒருவர், தனக்கு ஜோடியாக சின்ன நடிகருடன் நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறாராம்.

                      சின்ன நடிகருடன் ஜோடி சேர மறுக்கும் நடிகை

                      மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் ஒன்று தெலுங்கில் ரீமேக் செய்து வருகிறார்களா

                      ம். இதில் முன்னணி நடிகையாக இருக்கும் பெரிய நம்பர் நடிகை கதாநாயகியாக நடிக்கிறாராம்.

                      இவருக்கு கணவர் வேடத்தில் நடிக்க சின்ன நடிகர் ஒருவரை தேர்வு செய்தார்களாம்.

                      இதனால் கோபமடைந்த நடிகை, தனக்கு ஜோடியாக சின்ன நடிகரை நடிக்க வைக்கக் கூடாது என

                      படத்தின் இயக்குனரிடம் சண்டை போட்டு இருக்கிறாராம். முன்னணி நடிகர்களுடன் மட்டுமே

                      ஜோடியாக நடிக்க விரும்பும் நடிகை, சிறிய நடிகருடன் ஜோடியாக நடிக்க மறுப்பதே அதற்குக் காரணமாம்.

                        Posted in சினிமா

                        வாய்ப்புகளை இழக்கும் நடிகை

                        வாய்ப்புகளை இழக்கும் நடிகை

                        தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த நடிகை ஒருவர், தற்போது பட வாய்ப்புகளை இழந்து வருகிறாராம்.

                        பட வாய்ப்புகளை இழக்கும் நடிகை

                        கோலிவுட்டில் தல, தளபதி போன்ற உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் முன்னணி நடிகை என்ற

                        அந்தஸ்தை பெற்ற ஸ்வீட் கடை பெயர் கொண்ட நடிகை, திருமணத்துக்கு பின்னரும் படங்களில்

                        பிசியாக நடித்து வந்தாராம். அந்த நடிகை தற்போது கர்ப்பமாக இருக்கிறாராம்.

                        இதனால் அவர் தொடர்ந்து நடிக்க முடியாத சூழல் உருவாகி உள்ளதாம். அந்த நடிகைக்கு பட

                        வாய்ப்புகள் ஒவ்வொன்றாக நழுவி வருகிறது. தற்போது பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும்

                        படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டு உள்ளாராம். அவருக்கு பதில் வேறு நடிகையை நடிக்க வைக்க

                        படக்குழு முயற்சித்து வருகிறார்களாம்.

                          Posted in சினிமா

                          அரசியலில் களமிறங்கும் சோனு சூட்

                          அரசியலில் களமிறங்கும் சோனு சூட்


                          தமிழ் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்த நடிகர் சோனு சூட், தீவிர அரசியலில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

                          அரசியலில் களமிறங்கும் சோனு சூட்
                          சோனு சூட்


                          தமிழில் சந்திரமுகி, அருந்ததி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சோனு சூட். இந்தியில் பிரபல வில்லன் நடிகராக இருக்கிறார். சோனுசூட் கொரோனா ஊரடங்கில் புலம் பெயர்ந்த

                          தொழிலாளர்களை பஸ், ரெயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி உதவிகள் செய்து இந்தியா முழுவதும் கவனம் பெற்றார். வெளிநாட்டில் தவித்த மாணவ, மாணவிகளை விமானத்தில்

                          இந்தியாவுக்கு அழைத்து வந்தார். கொரோனாவால் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுத்தார்.

                          அவரது இதுபோன்ற சேவைகளை பாராட்டும் விதமாக தெலுங்கானாவில் சோனுசூட்டுக்கு கோவில் கட்டினர். இந்த நிலையில் தனது சகோதரி மாளவிகா அரசியலில் ஈடுபட இருப்பதாக

                          சோனுசூட் அறிவித்து உள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், ‘‘எனது சகோதரி மாளவிகா

                          மக்களுக்கு சேவை செய்ய அரசியலில் சேர்வதற்கு ஆர்வமாக இருக்கிறார். பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் மோகா தொகுதியில் அவர் போட்டியிடுவார்” என்றார்.

                          சோனு சூட்

                          இதுபோல் சோனுசூட்டும் அரசியலில் ஈடுபட இருக்கிறார். பஞ்சாபில் உள்ள காங்கிரஸ் அல்லது

                          ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.

                            Posted in சினிமா

                            எங்கள் துறையை விட்டு விடுங்கள் – பாரதிராஜா

                            எங்கள் துறையை விட்டு விடுங்கள் – பாரதிராஜா

                            ஜெய் பீம்’ பட விவகாரத்தில் சூர்யாவுக்கு ஆதரவாக இயக்குநர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

                            எங்கள் திரைத்துறையை விட்டு விடுங்கள் – பாரதிராஜா வேண்டுகோள்
                            பாரதிராஜா
                            த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெய் பீம்’. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் கொண்டாடப்பட்டு வருகிறது.

                            இப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை அவமதிக்கும் விதமான காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறி அது தொடர்பான அறிக்கையை பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக ‘ஜெய் பீம்’ படக்குழு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ரூ.5 கோடி இழப்பீடு தர வேண்டும் என்றும் கோரி வன்னியர் சங்கம் சார்பில் வழக்கறிஞர் மூலம் நேற்று சூர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

                            இந்நிலையில் நடிகர் சூர்யாவுக்கு இயக்குநர் பாரதிராஜா ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

                            சகோதரர் அன்புமணிக்கு வணக்கம்,

                            இன்று பேசப்படும் ஏற்றத்தாழ்வு, சமூக நீதி போன்றவற்றை யாரும் பேசத் துணியாத காலகட்டத்தில் ஒரு களப் போராளியாக, படைப்பாளியாக நின்று திரைப்பதிவாக்கம் செய்த உரிமையில் உங்களுக்கு உங்கள் பாரதிராஜா எழுதுகிறேன். திரைத்துறை என்பது எல்லாவற்றையும் பேசக்கூடியது. கல்வி, காதல், மோகம், சரி, தவறு, சமூக சீர்திருத்தம் இப்படி மனித வர்க்கம் சந்திக்கும் எல்லா நிகழ்வுகளையும் படம்பிடித்து மக்களிடமே முன் வைக்கும் ஒரு இயங்குதளம்.

                            பெரும்பாலும் சினிமா என்ற இயங்குதளம் மக்களை நல்வழிப்படுத்தவே முயற்சிக்கும். அதனால்தான் கதாநாயகன் நல்லவனாக சித்தரிக்கப்படுகிறான். பல சமூக, அரசியல் மாற்றங்களின் பங்களிப்பாக சினிமா இருந்திருக்கிறது.

                            பல வாழ்க்கைப் படைப்புகள் நம் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. அது மக்கள் முன்னிலையில் வைக்கப்படும்போது உண்மை எது? தவறு எது? எனத் தெரிந்தே அவர்கள் அதை வரவேற்றோ, புறந்தள்ளியோ வருகின்றனர்.

                            அப்படி ஒரு படைப்பாக வரவேற்கப்பட்டதே ‘ஜெய்பீம்’. அன்பு பிள்ளைகள் சூர்யா-ஜோதிகாவால் தயாரிக்கப்பட்டு தம்பி ஞானவேல் இயக்கத்தில் வெளிவந்த படம்.

                            கடந்த கால சம்பவங்களைப் படமாக்கும் போது.. அதை படமாகப் பார்த்துவிட்டு சமூக மாற்றத்திற்கு அது எவ்வகையில் பயனாகும் என்பதை மட்டுமே பார்க்க வேண்டும். அதில் பூதக்கண்ணாடியை அணிந்துகொண்டு குற்றம் பார்க்கத் தொடங்கினால் எந்த ஒரு படைப்பும் எளியோருக்காக பேசாமல் முடங்கிவிடும்.

                            இன்றைய எளியோர்களின் சமத்துவ அதிகாரத்திற்காக அன்றே பேசியது நாங்கள்தான். அன்று என் படம் ‘வேதம் புதிது’ முடக்க முயற்சித்தபோது புரட்சித்தலைவர் உடன் நின்றார். அந்த படைப்பு எத்தகைய தாக்கத்தை மக்களிடம் ஏற்படுத்தியது? அது போன்றதொரு படைப்புதான் ‘ஜெய் பீம்’ படமும். இதை படைப்பாக மட்டுமே பார்க்க முயன்றால் நீங்களும், உங்கள் தந்தையும் போராடும் அதே எளியவர்களுக்கான போராட்டம்தான் இது.

                            தம்பி சூர்யாவைப் பொருத்தவரையில் யாரையும் காயப்படுத்தும் தன்மை கொண்டவரல்ல. கல்வி, எளியவர்களுக்கான உதவி என நகர்ந்துகொண்டிருப்பவர். ஒரு இயக்குநரின் சேகரிப்பிற்கு தன்னையும் தன் நிழலையும் தந்து உதவியுள்ளவர். அவருக்கு எல்லோரும் சமம். யாரையும் ஏற்ற இறக்கத்தோடு கண்காணிப்பவரல்ல. தன்னால் எங்கேனும் ஒரு மாற்றம் நிகழுமா? எனப் பார்ப்பவர்.

                            சூர்யா

                            அவரை ஒரு சமூகத்திற்கு எதிரானவராக சித்தரிப்பதும் அவர் மீதான வன்மத்தையும் வன்முறையை ஏவிவிடுவதும் மிகத்தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். ஒரு படைப்பின் சுதந்திரத்தை அதன்படியே விட்டுவிடுவது இன்னும் அதிகமான நல்ல படைப்புகளைக் கொண்டுவர உதவும்.

                            சினிமாவை விட இங்கு கவனம் செலுத்த நிறைய வேலைகள் இருக்கின்றன. சமூக மாற்றங்களுக்கான உங்கள் போராட்டங்களே நிறைய உள்ளது. தங்கள் தகுதிக்கு நீங்கள் இங்கு வரவேண்டாமே.

                            நடுவண் அரசு, மாநில அரசு, சார்ந்திருக்கும் மக்களுக்கான இட ஒதுக்கீடு பிரச்சனைகள் போன்ற எத்தனையோ இடங்களில் உங்களின் குரல் ஒலிக்கட்டும். எங்கள் திரைத்துறையை விட்டுவிடுங்கள். யாருக்குப் பயந்து படம் எடுக்க வேண்டும் எனத் தெரியவில்லை.

                            இப்படியே போனால் ஒவ்வொரு அரசியல்வாதிகளின் வாசல்களிலும் எங்கள் படைப்பாளிகள் கதை சொல்லக் காத்திருக்க வேண்டுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. வம்படியாக திணித்தோ, திரித்தோ அப்படத்தில் எந்த கருத்துருவாக்கமும் செய்யவில்லை.

                            நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க மாற்றங்களும் செய்யப்பட்டிருக்கிறது. திரைத்துறையை அதன் இயல்பில் இயங்க விட கேட்டுக்கொள்கிறேன். உங்கள் கருத்துக்களை எப்போதும் செவிகொடுத்து கேட்கும் மனநிலையில் உள்ள மனிதனுடன் ஏன் தேவையற்ற வார்த்தைப் போர்? ஒரு அலைபேசியில் முடிந்திருக்க வேண்டியதும் சிறு தவறுகளைச் சுட்டிக் காட்டித் தீர்க்க வேண்டியதுமான இப்பிரச்சனையை எதிர்காற்றில் பற்றியெரியும் நெருப்புத் துகளாக்கியது ஏன் எனப் புரியவில்லை.

                            எதுவாக இருந்தாலும், எங்களோடு பேசுங்கள். சரியென்றால் சரிசெய்துகொள்ளும் நண்பர்கள் நாங்கள். எப்போதும் நட்போடு பயணப்படுவோம். நன்றி!

                            எப்போதும் உங்கள் நட்புறவையே விரும்பும் பாரதிராஜா.

                            இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

                              Posted in சினிமா

                              ராசாக்கண்ணு மனைவியை நேரில் சந்தித்து ஆசி பெற்ற ராகவா லாரன்ஸ்

                              ராசாக்கண்ணு மனைவியை நேரில் சந்தித்து ஆசி பெற்ற ராகவா லாரன்ஸ்

                              ராசாக்கண்ணு மனைவி பார்வதி அம்மாளை நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நேரில் சென்று அவரிடம் ஆசிர்வாதம் பெற்றிருக்கிறார்.

                              ராசாக்கண்ணு மனைவியை நேரில் சந்தித்து ஆசி பெற்ற ராகவா லாரன்ஸ்
                              ராகவா லாரன்ஸ் – பார்வதி அம்மாள்


                              த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெய் பீம்’. இந்தப் படத்தைப்

                              பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

                              இப்படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இப்படத்தில் காட்டப்பட்ட ராசாக்கண்ணு மீது பொய் வழக்குப் போடப்பட்டு போலீஸ் சித்ரவதையில்

                              உயிரிழந்தார். இந்த வழக்கில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டது.

                              ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தற்போது தான் மிகவும் வறுமையில் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

                              ராகவா லாரன்ஸ்

                              இதையறிந்த ராகவா லாரன்ஸ், ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு தனது சொந்த செலவில் வீடு கட்டித் தருவதாக சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார். இந்த நிலையில் பார்வதி அம்மாளை

                              நேரில் சென்று ராகவா லாரன்ஸ் பார்த்துள்ளார். அவரைப் பார்த்ததும் நீங்கள் என்னுடைய பாட்டி போலவே இருக்கின்றீர்கள் என்றும், என்னுடைய பாட்டி இப்போது உயிரோடு இல்லை, ஆனால்

                              உங்கள் வடிவத்தில் என்னுடைய பாட்டியை நான் பார்க்கிறேன் என்று கூறி அவருடைய காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார்.

                              மேலும், எனக்கு அம்மா மற்றும் கடவுள் மீது தான் மிகுந்த நம்பிக்கை உள்ளது. சூர்யா அவர்களின் முயற்சியினால் தான் இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது என்றும் கூறியிருக்கிறார்.

                                Posted in சினிமா

                                சூர்யாவிற்கு ஆதரவாக ரசிகர்கள்

                                சூர்யாவிற்கு ஆதரவாக ரசிகர்கள்

                                ஜெய் பீம் படத்தின் சர்ச்சையை தொடர்ந்து சூர்யாவிற்கு எதிர்ப்புகள் கிளம்பி இருக்கும் நிலையில், சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் களமிறங்கி இருக்கிறார்கள்.

                                சூர்யாவிற்கு ஆதரவாக துணை நிற்கும் ரசிகர்கள்
                                சூர்யா


                                ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘ஜெய் பீம்’. பழங்குடியின மக்களின்

                                வாழ்வியலை மையமாக எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. பிரபலங்கள் பலரும் இப்படத்தை பார்த்து வெகுவாக பாராட்டினர்.

                                இதனிடையே, ஜெய் பீம் படத்தில் பழங்குடியினர்களை சித்திரவதை செய்யும் குருமூர்த்தி என்கிற போலீஸ் கதாபாத்திரம் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் போல் காட்டப்பட்டு இருப்பதாக எதிர்ப்பு

                                கிளம்பியது. இதற்கு பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்

                                தெரிவித்ததோடு, நடிகர் சூர்யாவுக்கு அடுக்கடுக்கான கேள்விகளையும் எழுப்பி இருந்தார். இதற்கு சூர்யாவும் அறிக்கை வாயிலாக பதிலளித்தார்.

                                இந்நிலையில், ‘ஜெய் பீம்’ பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா மற்றும் இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு வன்னியர் சங்கம் சார்பில் ரூ.5 கோடி இழப்பீடு

                                தர வேண்டும் என்றும், வன்னியர் சமூகத்தினரை தவறாக சித்தரித்ததற்காக நாளிதழ் மற்றும் ஊடகங்கள் வாயிலாக மன்னிப்பு கோர வேண்டும் எனவும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

                                சூர்யா

                                இந்நிலையில், சூர்யாவிற்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் களமிறங்கி இருக்கிறார்கள். ரசிகர்கள் மட்டுமில்லாமல், சார்பட்டா பரம்பரை இயக்குனர் பா.ரஞ்சித், ஜடா பட

                                இயக்குனர் குமரன் உள்ளிட்ட பலரும் #WeStandWithSuriya என்ற ஹேஷ்டேக்கில் சூர்யாவின் காமன்

                                டிபியை பதிவு செய்து வருகிறார்கள். மேலும் இந்த ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் இடம் பிடித்து இருக்கிறது.

                                  Posted in சினிமா

                                  சொல்லி அடித்திருக்கிறார் இயக்குனர் சிவா – ரஜினி புகழாரம்

                                  சொல்லி அடித்திருக்கிறார் இயக்குனர் சிவா – ரஜினி புகழாரம்

                                  தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகி, வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் அண்ணாத்த படத்தை பற்றி நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.

                                  சொல்லி அடித்திருக்கிறார் இயக்குனர் சிவா – ரஜினி புகழாரம்
                                  சிவா – ரஜினிகாந்த்


                                  ரஜினி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று

                                  வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பை கொடுத்தார்கள்.

                                  இந்நிலையில் இப்படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில், இயக்குனர் சிவா ‘அண்ணாத்த’ கதை சொல்லும்போதே என் கண்கள் கலங்கின. ’அண்ணாத்த’

                                  படம் உங்கள் ரசிகர்களுக்கு மட்டுமின்றி, பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் என சிவா அப்பவே சொன்னார். அதே மாதிரி சொல்லி அடித்திருக்கிறார்’ என்று பதிவு செய்திருக்கிறார்.

                                  ரஜினி

                                  அண்ணாத்த படத்தில் ரஜினியுடன், குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பாண்டியராஜ், சத்யன், லிவிங்ஸ்டன், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

                                    Posted in சினிமா

                                    நீச்சல் உடையில் பூனம் பாஜ்வா

                                    நீச்சல் உடையில் பூனம் பாஜ்வா

                                    சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பூனம் பாஜ்வா, அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

                                    நீச்சல் உடையில் பூனம் பாஜ்வா – வைரலாகும் புகைப்படங்கள்
                                    பூனம் பாஜ்வா


                                    ‘சேவல்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. இதைத்தொடர்ந்து ஜீவாவின் ‘தெனவாட்டு’, ‘கச்சேரி ஆரம்பம்’ படங்களில் நடித்த இவர், சுந்தர்.சி

                                    இயக்கிய ‘அரண்மனை 2’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இதில் இவருடைய கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

                                    பின்னர் சுந்தர்.சி-யுடன் ‘முத்தின கத்திரிக்கா’ படத்தில் நடித்தார். அதுக்கு அடுத்தப்படியாக முன்னணி நாயகர்களின் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். படவாய்ப்பு

                                    குறைந்தாலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

                                    பூனம் பாஜ்வா

                                    அந்த வகையில், தற்போது நீச்சல் உடையில் படுகவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி, அதன்

                                    புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பூனம் பாஜ்வா. வைரலாகி வரும் இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது.

                                      Posted in சினிமா

                                      பிக்பாஸில் இருந்து இந்த வாரம் எலிமினேட் ஆனது இவர்தான்

                                      பிக்பாஸில் இருந்து இந்த வாரம் எலிமினேட் ஆனது இவர்தான்

                                      இணையத்தில் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியேற்றுப் படலம் நடக்கும்.

                                      எதிர்பாராததை எதிர்பாருங்கள்…. பிக்பாஸில் இருந்து இந்த வாரம் எலிமினேட் ஆனது இவர்தான்?
                                      ‘பிக்பாஸ் 5’ லோகோ


                                      தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர்

                                      கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது.

                                      பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம். மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் இந்த வெளியேற்றுப்

                                      படலம் நடக்கும். அதன்படி நதியா சங், அபிஷேக் ராஜா, சின்னப்பொண்ணு, சுருதி ஆகியோர் இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளனர்.

                                      இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி குறைந்த வாக்குகள் பெற்றதன் காரணமாக மதுமிதா

                                      வெளியேற்றப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. வெகுளித்தனமான பேச்சால் ரசிகர்களை கவர்ந்து

                                      வந்த மதுமிதா, திடீரென வெளியேற்றப்பட்டுள்ளது பிக்பாஸ் பார்வையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

                                        Posted in சினிமா

                                        நடிகர் அஜித்தின் வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்

                                        நடிகர் அஜித்தின் வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்

                                        வலிமை படத்தில் அஜித்தின் சகோதரராக நடித்துள்ள ராஜ் ஐயப்பா, நடிகர் அஜித்தின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

                                        வைரலாகும் நடிகர் அஜித்தின் வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்
                                        அஜித்


                                        நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி உள்ள இப்படத்தை எச்.வினோத் இயக்கி உள்ளார். போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து

                                        பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு இப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

                                        வலிமை படத்தில் அஜித்தின் சகோதரராக நடித்துள்ள ராஜ் ஐயப்பா, நடிகர் அஜித்தின் வாட்ஸ் அப்

                                        ஸ்டேட்டஸை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அஜித்திடம் அனுமதி பெற்ற பின்னரே இதனை பகிர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

                                        அந்த ஸ்டேட்டஸில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: “ஏழை, நடுத்தரவர்க்கம், பணக்காரர் என்பது ஒரு தனி நபரின் பொருளாதார நிலையை குறிக்கிறதே தவிர அவரது குணத்தை அல்ல. சமூகத்தின்

                                        அனைத்து பிரிவுகளிலும் நல்ல மனிதர்களும், கெட்ட மனிதர்களும் இருக்கிறார்கள். அதனால் ஒரு

                                        நபரின் பொருளாதார நிலையை வைத்து குணத்தை மதிப்பிடுவதை நாம் நிறுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்