Tag: கைது
காவல்துறை வேட்டை 86 பேர் கைது
காவல்துறை வேட்டை 86 பேர் கைது
இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறி செயல் பட்ட எண்பத்தி ஆறு பேர் கடந்த தினம்
கைது செய்ய பட்டுள்ளனர்
இதுவரை 82 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கைது செய்ய பட்டுள்ளதாக போலீசார்
தெரிவித்துள்ளனர்
வவுனியாவில் போதையில் தமிழ் வாலிபனை தாக்கிய இராணுவம் – வீடியோ
வவுனியாவில் போதையில் தமிழ் வாலிபனை தாக்கிய இராணுவம் – வீடியோ
சற்று முன்னர் வவுனியா பகுதியில் ஆட்டோவில் பயணித்து கொண்டிருந்த தமிழ் வாலிபன்
ஒருவரை வழிமறித்த இராணுவத்தினர் சரமாரியாக தகக்கியுள்ளனர்
அதி போதையில் இருந்த இராணுவ சிப்பாய்களே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்
சம்பவ ஐஇடத்திற்கு விரைந்து வந்த ஊடக நபர்கள் மேற்படி விடயத்தை அம்பல படுத்திய நிலையில் இவர்கள் சிக்கலில் உள்ளனர்
இதுவே தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது
கோட்டா ஆடசியில் இராணுவ மயமாக்களின் ஒன்றாக இதனை பார்க்க முடிகிறது ,தமிழா என்று
விழிப்பாய் ..? கூட்டமைப்பு என்ன செய்கிறது இதுவே மக்கள் கேள்வியாக உள்ளது
விபத்தில் வண்டிகள் சிக்கினால் தண்டம் – புதிய சட்டம்
விபத்தில் வண்டிகள் சிக்கினால் தண்டம் – புதிய சட்டம்
இலங்கையில் இன்று புதிதாக வெளியான வரவு செலவு திட்ட அறிக்கையில்
தற்பொழுது வாகனங்கள் விபத்தில் சிக்கினால் அதற்கு மேலதிகமாக தண்ட பணம் அறவிட
உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
இதன் மூலம் நான்கு மில்லியன் ரூபாய்களை மேலதிகமாக சம்பாதிக்கலாம் என்பது அரசின்
முடிவாக உள்ளது
வீதி விபத்துக்களை தடுப்பதற்கு ஏற்ப இந்த விடயங்கள் அறிமுக படுத்த படுகிறது என தெரிவிக்க பட்டுள்ளது
மனைவியை அடித்து கொன்ற கணவன்
மனைவியை அடித்து கொன்ற கணவன்
இலங்கை மாத்தறை பகுதியில் கணவன் மனைவிக்கு இடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ள
து
இதனால் ஆத்திரமுற்ற கணவன் பொல்லு ஒன்றினால் மனைவியை தாக்கி படுகொலை
செய்துள்ளார்
தற்போது கொலை குற்ற சாட்டில் கணவன் கைது செய்ய பட்டுள்ளார்
இவ்வாறான குற்ற சம்பவங்கள் நாட்டில் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது
அந்தமானில் சிக்கிய மீனவர்களை மீட்க நடவடிக்கை
அந்தமானில் சிக்கிய மீனவர்களை மீட்க நடவடிக்கை
அந்தமான் தீவுப் பகுதியில் தரித்து நிற்கின்ற வாழைச்சேனை மீனவர்கள் நால்வரும்
நாட்டிற்கு வந்து சேர்வதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு
கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திடம் கடற்றொழில் அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பாக கடற்றொழில் திணைக்கள
பணிப்பாளர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் நேற்று கலந்துரையாடிய
கடற்றொழில் அமைச்சர், இயந்திரக் கோளாறு காரணமாக திசைமாறிச்
சென்ற நிலையில் சுமார் 600 கிலோமீற்றர் தொலைவில் இந்தியக் கடற்படையினரால்
கண்டுபிடிக்கப்பட்டு அந்தமான் தீவுப் பகுதியில் தரித்து நிற்கின்ற வாழைச்சேனை
கடற்றொழிலாளர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள்
தொடர்பாக கருத்து தெரிவித்த போதே மேற்குறிப்பிடப்பட்டுள்ளவாறு தெரிவித்துள்ளார்.
பெண்ணை உலக்கையால் அடித்து கொன்று திருடிய தம்பதிகள் கைது
பெண்ணை உலக்கையால் அடித்து கொன்று திருடிய தம்பதிகள் கைது
இலங்கையில் குப்பை மேட்டு பகுதியில் இருந்து மீட்க பட்ட பெண்ணின் சடலம் தொடர்பாக குற்ற
புலனாய்வு துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்
மேற்படி பெண் அணிதிருந்த தங்க நகைகளை திருடிய கும்பல் அவரை அடித்து கொன்று குப்பை
மேட்டு பகுதியில் வீசியது தெரிய வந்துள்ளது
உலக்கையால் அடித்து கொலை செய்து ,ஆட்டோ ஒன்றில் பெண்ணின் சடலம் எடுத்து வரப்பட்டு
குப்பை மேட்டு பகுதியில் வீச பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
தம்பதிகளிடம் சந்தேகம் உற்ற காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் மேற்படி
விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது
பிரான்சில் போலீசார் மீது கத்தி வெட்டு – அதிர்ச்சியில் மக்கள்
பிரான்சில் போலீசார் மீது கத்தி வெட்டு – அதிர்ச்சியில் மக்கள்
பிரான்ஸ் Cannes பகுதியில் போலீஸ் நிலையம் முன்பாக நின்று கொண்டிருந்த போலீசார் ஒருவர்
மீது மர்ம நபர் ஒருவர் திடீரென கத்தி வெட்டு தாக்குதலை மேற்கொண்டார்
,அவரை அடுத்து மறு போலீசார் மீது வெட்டு தாக்குதலை மேற்கொள்ள முற்பட்ட பொழுது
மூன்றாவது காவல்துறை சிப்பாய் ,தீவிரவாதி மீது துப்பாக்கி சூட்டு தாக்குதலை மேற்கொண்டார்
இதில் பலத்த காயங்களுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார் ,குறித்த நபர்
தொடர்பான விபரங்கள் உடனடியாக வெளியாகவில்லை
கைதிகளை வாரத்தில் 2 நாள் பார்க்க அனுமதி
இலங்கை
கைதிகளை வாரத்தில் 2 நாள் பார்க்க அனுமதி
இலங்கை சிறைகளில் தடுத்து வைக்க பட்டுள்ள கைதிகளை வாரத்தில் இரண்டு நாட்கள்
பார்வையிட விருந்தினர்களுக்கு அனுமதி வழங்க பட்டுள்ளது
இது கைதிகளுக்கு புது மகிழ்வை அளித்துள்ளது
மகளை கர்ப்பமாக்கிய தந்தை – சிசுவை கொன்று வீசிய கொடூரம்
மகளை கர்ப்பமாக்கிய தந்தை – சிசுவை கொன்று வீசிய கொடூரம்
பிறந்து மூன்று நாள்களேயான சிசுவின் சடலம், கிட்டங்கி ஆற்றங்கரைக்குள் வீசப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை (05) பொலிஸாரால் மீட்கப்பட்டது.
சம்மாந்துறைப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, அம்பாறை மாவட்டத்தின் சொறிக் கல்முனை – சம்மாந்துறை பிரதான வீதியின் கிட்டங்கி ஆற்றில் இச்சிசுவின் சடலம் மீட்கப்பட்டது.
இது தொடர்பாக, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்னல் கிராமம் – 01 கிராம சேவையாளர் பிரிவில் வசித்துவரும் பக்கீர் தம்பி அஸ்பர் (வயது-41) என்பவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
தனது 19 வயதுடைய மகளுடன் தகாத உறவில் ஈடுபட்டு பிறந்த சிசுவையே இவ்வாறு ஆற்றுக்குள் வீசியதாக கைதாகிய சந்தேகநபர், பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபருடன் குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் மற்றும் அம்பாறை மாவட்ட விசேட குற்றத்தடுப்புப் பிரிவினர், இராணுவத்தினர் ஒன்றிணைந்து வீசப்பட்ட சிசுவின் சடலத்தை மீட்டெடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு வருகை தந்த சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான், உயிரிழந்து சிசுவை பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனையை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
இதனையடுத்து, அம்பாறை ஆதார வைத்தியசாலைக்கு சிசுவின் சடலம் எடுத்துச்செல்லப்பட்டது.
நாளாந்த கூலி தொழிலாளியான சந்தேக நபர், இரண்டு திருமணம் செய்தவர் என்பதுடன், தற்போது மனைவிமார்களுடன் இல்லாத நிலையில், முதல் திருமணத்தில் பிறந்த 19 வயதுடைய தனது மகள் மற்றும் இரண்டாவது திருமணத்தில் பிறந்த 2 பிள்ளைகளுடனும் வாழ்ந்து வந்த நிலையில், இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை, சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
காவல்துறை திடீர் சோதனை – 1,019 பேர் கைது
காவல்துறை திடீர் சோதனை – 1,019 பேர் கைது
இலங்கை மேல்மனத்தில் காவல்துறை அணியினர் நடத்திய திடீர் சோதனைநடவடிக்கையின்
பொழுது
சுமார் 1,019 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
இவர்கள் நீதிம்னற பிடியாணை பிறப்பிக்க பட்டு தலைமறைவாக இருந்த நூற்றுக்கு
மேற்பட்டவர்கள் கைதாகியுள்ளமை குறிப்பிட தக்கது
யாழில் வாள்வெட்டு – ரவுடிகள் அட்டகாசம்
யாழில் வாள்வெட்டு – ரவுடிகள் அட்டகாசம்
யாழ்ப்ப்பாணம் கொக்குவில் – கேணியடிப் பகுதியில் ஊந்துருளியில் வருகை தந்த மூவர்
திடீரென வாலிபர் மீது சரமாரியாக வாள்வெட்டு தாக்குதலை நடத்தினர்
இதில் பலத்த காயமடைந்த வாலிபர் யாழ்ப்பாண மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்
மகிந்த ஆட்சியில் உருவாக்க பட்ட வாள்வெட்டு குழுவினர் பெரும் அடாவடியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
காலநிலை சீர் கேட்டில் சிக்கி ஐவர் மரணம்
காலநிலை சீர் கேட்டில் சிக்கி ஐவர் மரணம்
இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலை சீர்கேட்டில் சிக்கி இதுவரை ஐவர் பலியாகியுள்ளனர் ,மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்
வெள்ள பெருக்கில் சிக்கிய மக்கள் தற்காலிக தங்கும் இடங்களில் தங்க வைக்க பட்டுள்ளனர்
வீடு பெற்றுத்தருவகக மோசடி புரிந்த நபர் கைது
வீடு பெற்றுத்தருவகக மோசடி புரிந்த நபர் கைது
இலங்கையில் அரச வீடுகளை பெற்று தருவதாக கூறி மக்களிடம் பணமோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் காவல்துறையினரால கைது செய்ய பட்டுள்ளார்
பாதிக்க பட்டடவர்கள் மக்களுக்கு வழங்கிய தகவலை அடுத்து இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது
குறிப்பிட தக்கது
மனைவி தாய் ,தந்தையை கோடரியால் வெட்டிய மருமகன்
மனைவி தாய் ,தந்தையை கோடரியால் வெட்டிய மருமகன்
இலங்கை வாழைச்சேனை காவல்துறை பகுதியில் குடும்ப தகராறு காரணாமாக மனைவியை
விட்டு பிரிந்த கணவன் ,பெண்ணின் தாயார் வீடு புகுந்து அவரது தந்து ,மற்றும் தாயை
கோடரியால் சரமாரியாக வெட்டியுள்ளார்
இதில் பலத்த காயமடைந்த நிலையில் இருவரும் மருத்துவமனையில் உயிருக்கு போராடிய வண்னம் உள்ளனர்
மேற்படி செயல் அந்த கிராம பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
தமிழக மீனவர்கள் 23 பேர் யாழ் சிறையில் அடைப்பு
தமிழக மீனவர்கள் 23 பேர் யாழ் சிறையில் அடைப்பு
இலங்கை கடல் பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்ற சாட்டில் சிங்கள கடல்
படையால் கைது செய்ய பட்ட தமிழக மீனவர்கள் 23 பேர் யாழ்ப்பாண சிறையில் அடைக்க
பட்டுள்ளனர்
நீதி விசாரணைகள் முடிவில் இவர்கள் விடுதலை செய்ய படுவார்கள் என எதிர்பார்க்க படுகிறது
பணமோசடி காவல்துறை அதிகாரி கைது
பணமோசடி காவல்துறை அதிகாரி கைது
இலங்கை வந்துரம்ப பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி ஒருவர் பத்து லட்சம் ரூபா பணம்
லஞ்சமாக பெற்றார் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார்
சாமீப காலங்களாக இவ்வாறான குற்ற சாட்டுக்கலில் சிக்கி சில காவல்துறை அதிகாரிகள் கைது
செய்ய பட்டு இருந்தமை குறிப்பிட தக்கது
மக்களை தாக்கிய காவல்துறை அதிகாரி இடமாற்றம்
மக்களை தாக்கிய காவல்துறை அதிகாரி இடமாற்றம்
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் பொலிஸ் அதிகாரி ஒருவர் நபர் ஒருவரை தாக்கும்
காணொளியுடன் தொடர்புடைய சப்ரகமுவ சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடிதுவக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
அவர் வைத்திய சேவைகள் மற்றும் நலன்புரி சிரேஷ்ட் பிரதி பொலிஸ்மா அதிபராக
இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் அதிகாரியின் தவறான நடத்தை தொடர்பில் விசாரணை ஒன்று
ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இன்று முற்பகல் பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டிருந்தது.
சூடானில் இராணுவம் ஆட்சி கவிழ்ப்பு – பிரதமர் சிறை பிடிப்பு – 140 பேர் காயம்
சூடானில் இராணுவம் ஆட்சி கவிழ்ப்பு – பிரதமர் சிறை பிடிப்பு – 140 பேர் காயம்
சூடானில் ஆளும் கூட்டணி ஆட்சிக்கு எதிராக இராணுவத்தினர் ஆட்சி கபிவிழ்ப்பை மேற்கொண்டு வருகின்றனர்
இதில் ஆளும் பிரதமர் இராணுவத்தினரால் கைது செய்ய பட்டு வீட்டு காவலில் வைக்க பட்டுள்ளார்
மேலும் இந்த ஆட்சி கவிழ்ப்புக்கு எதிராக மக்கள் வீதி இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்
இவ்வாறான மக்கள் மீது நடத்த பட்ட சூட்டு தாக்குதலில் 7பேர் பலியாகியும் 140 பேர் படுகாயமடைந்துள்ளனர்
மனைவியை கத்தியால் குத்திய கணவன்
மனைவியை கத்தியால் குத்திய கணவன்
குடும்ப தகராறு காரணமாக மனைவியை கத்தியால் குத்திய கணவர் தலைமறைவாக உள்ள நிலையில் , அவரை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வலி.வடக்கு தையிட்டி பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றில் நேற்றைய தினம் மாலை கணவன், மனைவிக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதன்போது , 22 வயதான தனது மனைவியை கத்தியால் குத்தி காயப்படுத்திய கணவர் வீட்டில் இருந்து வெளியேறி தலைமறைவாகியுள்ளார்.
கத்திக்குத்து காயத்திற்கு உள்ளான மனைவியின் அவல குரல் கேட்டு , அயலவர்கள் அவரை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதுடன் ,
தலைமறைவாகி உள்ள கணவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.
போலீசார் வேட்டை – 36 பேர் திடீர் கைது
போலீசார் வேட்டை – 36 பேர் திடீர் கைது
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று (26) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 29 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த குற்றச்சாட்டில் 2020 ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 81,353 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை மேல் மாகாணத்தின் எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள 13 நுழையும் மற்றும்
வெளியேறும் சோதனைச் சாவடிகளில் பயணித்த 2,244 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அத்துடன், மாகாண எல்லைகளை கடக்க முயன்ற 272 நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.






