Tag: இலங்கை
அனைத்து வீதிகளையும் அபிவிருத்தி செய்ய முன்னுரிமை
அனைத்து வீதிகளையும் அபிவிருத்தி செய்ய முன்னுரிமை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தில் வாக்குறுதியளித்தபடி முன்னுரிமை வீதி அபிவிருத்தித் திட்டத்தின் மூலம்
விவசாயப் பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட அனைத்து வீதிகளையும் துரிதமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியதாக ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இந்தப் பகுதிகளில் உள்ள வீதிகளை அபிவிருத்தி செய்வதன் மூலம், விவசாயிகளுக்கு தாமதமின்றி தங்கள் விவசாய உற்பத்திப் பொருட்களை பொருளாதார மத்திய நிலையங்களுக்கு எடுத்துச்
செல்ல வாய்ப்பு ஏற்படும். அதன் மூலம் விவசாயிகளின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.
கிராமப்புறங்களில் உள்ள பாடசாலைகளுக்கான அனைத்து பிரவேசவீதிகள் அனைத்தையும் மட்டுமன்றி கிராமப்புற மருத்துவமனைகளுக்கான அனைத்து பிரவேச வீதிகளும் முன்னுரிமை
அளிக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படும் என்றும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு பிரதிநிதிகளினால் தமது பிரதேசங்களில் அபிவிருத்தி செய்வதற்கு முன்வைக்ககும் யோசனைகள்
அனைத்தையும் முன்னுரிமை வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்வதாகவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
தமிழ் அரசியல் கைதிகள் 8 அரசியல் கைதிகளுக்கு பாதுகாப்பு வழங்கவும்-நீதிமன்றம்
தமிழ் அரசியல் கைதிகள் 8 அரசியல் கைதிகளுக்கு பாதுகாப்பு வழங்கவும்-நீதிமன்றம்
அனுராதபுரம் சிறைச்சாலையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் எண்மருக்கு தேவையான பாதுகாப்பை வழங்குமாறு உயர்நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டது.
அந்த எட்டு கைதிகளின் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துகொண்ட போதே, உயர்நீதிமன்றம் மேற்கண்டவாறு தெரிவித்தது.
அவர்கள், சிறைச்சாலைகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தைக்கு எதிராகவே மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
தனியார் துறையினரின் ஓய்வூதிய வயது எல்லை அதிகரிப்பு
தனியார் துறையினரின் ஓய்வூதிய வயது எல்லை அதிகரிப்பு
தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச ஓய்வூதிய வயது எல்லையை 60ஆக சட்டப்பூர்வமாக்க தொழில் அமைச்சு திட்டமிட்டுள்ளது.
அதன்படி, வேலைவாய்ப்பு நீக்கச் சட்டத்தைத் திருத்தும் திருத்தப்பட்ட அமைச்சரவை பத்திரம் வெளியிடப்பட்ட பிறகு, பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட உள்ளது.
55 வயதை நிறைவு செய்த ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயதை 57ஆகவும், 52 வயதுக்கு கீழ் உள்ள ஊழியர்களுக்கு 60 வயதாகவும் இந்த சட்டம் முன்மொழியப்படவுள்ளது.
தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதிய வயது முன்பு 55ஆக இருந்தமை குறிப்பிடத்தக்கது
மனைவியை அடித்து கொன்ற கணவர் – சோகத்தில் உறைந்த கிராமம்
மனைவியை அடித்து கொன்ற கணவர் – சோகத்தில் உறைந்த கிராமம்
குடும்ப பிரச்சினை காரணமாக கணவர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்த சம்பவம் களவஞ்சிக்குடி பகுதியில் பதிவாகியுள்ளது.
மஹிலுர் பகுதியை சேர்ந்த 31 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கணவரின் தாக்குதலுக்கு உள்ளான பெண்ணை வைத்தியசாலையில் அனுமதிக்கும் சந்தர்ப்பத்தில் அவர் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கணவன் கடந்த 14 ஆம் திகதி வௌிநாட்டில் இருந்து வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வௌிநாட்டில் இருந்த சந்தர்ப்பத்தில் அவர் குரல் பதிவு ஒன்றின் மூலம் மனைவியை கொலை செய்வதாக தெரிவித்திருந்ததாக உயிரிழந்த பெண்ணின் சகோதரி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு திருமணமான 8 வருடங்கள் ஆவதுடன் 7 வருடமாக கணவர் வௌிநாட்டில் இருந்ததாகவும் அவர்களுக்கு குழந்தை இல்லாததால் பிரச்சினை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் களவஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொரனோ அட்டை – வெடிக்கும் சர்ச்சை
கொரனோ அட்டை – வெடிக்கும் சர்ச்சை
பொது இடங்களுக்குச் செல்லும் போது கொரோனா தடுப்பூசியின் இரண்டையும் பெறப்பட்டதாக உறுதிப்படுத்தப்படும் அட்டையை பொதுமக்கள் வைத்திருப்பதை கட்டாயமாக்குவதற்கான முடிவை, மேலும் தாமதப்படுத்தலாம் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இரண்டு அளவுகளும் பெறப்பட்டதாகக் குறிப்பிடும் தடுப்பூசி அட்டையை, கட்டாயமாக்கப்பட்டு, பரிசோதிக்கும் நடவடிக்கை செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், அத்தகைய சட்டத்தை ஒரே நேரத்தில் அமல்படுத்த முடியாது என்று, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் கூறினார்.
வீட்டுக்குள் நுழைந்து நபரை அடித்து கொன்ற ரவுடிகள்
வீட்டுக்குள் நுழைந்து நபரை அடித்து கொன்ற ரவுடிகள்
வீடொன்றினுள் பலவந்தமாக நுழைந்த குழு ஒன்று அங்கிருந்த நபர் ஒருவரை அடித்து கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பதுளை, லிதமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரும்பு கம்பியால் குறித்த நபர் தாக்கப்பட்டுள்ளததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலில் பலத்த காயமடைந்த நபரை பதுளை வைத்தியசாலையில் அனுமதித்த சந்தர்ப்பத்தில் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பதுளை, லிதமுல்ல பகுதியை சேர்ந்த 65 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பதுளை பகுதியை சேர்ந்த 21, 24 மற்றும் 31 வயதுடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளததாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் மீன்பிடி சட்டத்தில் திருத்தம் – அமைச்சர் டக்ளஸ்
இலங்கையின் மீன்பிடி சட்டத்தில் திருத்தம் – அமைச்சர் டக்ளஸ்
சர்வதேச கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்ற இலங்கையின் மீன்பிடிக் கலன்கள் பின்பற்ற வேண்டிய கடப்பாடுகள் மற்றும் சட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய திருத்த முன்வரைபு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
குறித்த கலந்துரையாடல், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர, அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்னாயக்கா,
கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்த மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் பங்குபற்றலுடன் கடற்றொழில் அமைச்சில் (01) நடைபெற்றது.
தற்போதைய சூழலுக்கு ஏற்ற வகையில் இலங்கை கடற்றொழிலாளர்களின் நலன்களை பாதுப்பதையும் இலங்கை கடற்றொழில் செயற்பாடுகளை வினைத் திறனுடன் மேற்கொள்வதையும் உறுதிப்படுத்தும் வகையில், குறித்த சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜந்து மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
ஜந்து மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
பலத்த மழையின் காரணமாக ஜந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலி , களுத்துறை , கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக தேசிய கட்டிட ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு மாலை 06 மணிவரை ஏற்புடையது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க உலக வங்கி இணக்கம்
இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க உலக வங்கி இணக்கம்
இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது
பல்வேறு பட்ட விடயங்களை சுட்டி காட்டி இந்த அவசர நிதியை இலங்கை கடனாக பெறுகிறது
கடந்த ஆட்சியில் பல கோடி ரூபாய்களை சுருட்டியது மகிந்த குடும்பம், அதே போல தற்பொழுதும் பெரும் பணத்தை ஆளும் அரசு கொள்ளையடித்து வருவதாக மக்கள் மத்தியில் பேச படுகிறது
பால்மா தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
பால்மா தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
துறைமுகத்தில் சிக்கியுள்ள 360,000 கிலோகிராம் பால்மாவை விடுவிக்க வணிக வங்கிகளுக்கு அரசாங்கம் இன்னும் டொலர்களை வழங்கவில்லை என்று, பால்மா இறக்குமதியாளர்களின் செய்தி தொடர்பாளர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்தார்.
இதன் காரணமாக, பாலமாக்கள் பழுதடையக் கூடிய அபாயம் இருப்பதால் அருகிலுள்ள நாட்டிற்கு பால்மாவை வழங்குவதற்கான கலந்துரையாடல்கள் நடைபெற்றதாகவும் அப்படியானால், நாட்டில் மேலும் பால்மாக்கான பற்றாக்குறை ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
இன்று பிற்பகல் வணிக வங்கிகளுடனான கலந்துரையாடலின் போது, பால்மாவை துறைமுகத்தில் இருந்து விடுவிப்பதற்கு, தங்களுக்கு டொலர்கள் கிடைக்கவில்லை என்று கூறிய வங்கிகள், வங்கிகளில் பணத்தை வைப்பிலிட்டு, டொலர்கள் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்றும் கூறியது என, லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்தார்.
சில ஏற்றுமதியாளர்கள் ஒரு டொலருக்கு 238 டொலர் கொடுக்க முன்வருவதாகவும், பால்மா இருப்பு 35 டொலருக்கு கூடுதலாக வெளியிடப்பட்டால், ஒரு கிலோவுக்கு 4.10 டொலர் கூடுதல் செலவு ஆகும் எனவும், அவர் தெரிவித்தார்.
ஆயுதங்களுடன் 5 பேர் கைது
ஆயுதங்களுடன் 5 பேர் கைது
கூரிய ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர்கள் நிட்டம்புவ, அத்தனகல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இவர்களை கொழும்பு குற்றவியல் பிரிவினர் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
21, 22 மற்றும் 24 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்குள் நுழைந்த ஐ எஸ் – வாட்சாப் குழுவை தேடும் பொலிஸ்
இலங்கைக்குள் நுழைந்த ஐ எஸ் – வாட்சாப் குழுவை தேடும் பொலிஸ்
இலங்கையில் உள்ள முஸ்லீம் தீவிரவாத போக்குடையவர்கள் உலக மகா கொடிய பயங்கரவாத இயக்கமாக விளங்கி வரும்
ஐ எஸ் குழுவுடன் இணைந்து செயல் பட்டு வந்த நிலையில் அவர்களை மடக்கி பிடிக்கும் நகர்வில் இலங்கை உளவுத்துறை ஈடுபட்டுள்ளது
இவர்கள் இயக்கி வந்த வாட்சாப் குழுவை தேடி தற்போது வேட்டை ஆரம்பமாகியுள்ளது ,விரைவில் இவர்கள் அனைவரும் கைது செய்ய படுவார்கள் என நம்ப படுகிறது
அமைச்சரின் கால்களை நக்க வைத்து தமிழ் கைதிகள் வதை
அமைச்சரின் கால்களை நக்க வைத்து தமிழ் கைதிகள் வதை
இலங்கையின் சிறைச்சாலை அமைச்சர் ரோகன் ரத்வத்த அனுராதபுரம் சிறை சாலைக்கு சென்ற
பொழுது அங்கு தடுத்து வைக்க பட்டுள்ள தமிழ் கைதிகள் மூலம் அவரது கால் சப்பாத்து நக்கி சுத்த படுத்த பட்டது
இவ்வாறான கீழ்த்தரமான செயலில் செயல் பட்ட அவருக்கு எதிராக மக்கள் ,மற்றும் தமிழ் எம்பிக்கள் சிலர் கடும் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர்
மேற்படி சம்பவம் சர்வதேச அரங்கிற்கும் எடுத்து செல்ல பட்டுள்ளது
இளம் மனைவியை சுட்டு கொன்ற கணவர்
இளம் மனைவியை சுட்டு கொன்ற கணவர்
இலங்கை எம்பிலிபிட்டிய பகுதியில் 35 வயதுடைய இளம் மனைவியை கணவர் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் ,கொலையில் முடிவடைந்துள்ளது ,கணவர் கொலை
குற்ற சாட்டில் கைது செய்ய பட்டு தடுத்து வைக்க பட்டுள்ளார்
இலங்கையில் உணவு தட்டு பாடு ஏற்படலாம் – அபாய எச்சரிக்கை
இலங்கையில் உணவு தட்டு பாடு ஏற்படலாம் – அபாய எச்சரிக்கை
இலங்கையில் உணவு தட்டு பாடு ஏற்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது ,நாடு முழுதாக முடக்க
பட்டுள்ள நிலையில் மக்கள் தொழில் வாய்ப்பு இன்றி உள்ள நிலையிலும் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
விரைந்து வரும் நாட்களில் இந்த நிலைகளை அவதானிக்க முடியும் என எதிர்வு கூற பட்டுள்ளது ,ஆனால் அரசோ அவ்வாறு ஏற்படாது என அறிவித்துள்ளமை இங்கே குறிப்பிட்ட தக்கது
இலங்கை வரும் ஐரோப்பிய குழு – ஜிஎஸ்பி+ நிறுத்த படும் வாய்ப்பு
இலங்கை வரும் ஐரோப்பிய குழு – ஜிஎஸ்பி+ நிறுத்த படும் வாய்ப்பு
இலங்கையில் ஆளும் அரசு தொடர்ந்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வரும் நிலையில்
ஆண்டு தோறும் இலங்கைக்கு வழங்க படும் ஜிஎஸ்பி+ வரி சலுகை நிறுத்த படலாம் என எதிர் பார்க்க படுகிறது
நாளை இலங்கை வரும் ஐரோப்பிய தூது குழுவினர் இது தொடர்பாக ஆராயவுள்ளனர்
இவர்கள் மேற்கொள்ளும் இந்த ஆய்வு நடவடிக்கையின் பின்னரே இலங்கைக்கு ஆப்பு வைக்க படும் ஆட்டம் ஆரம்பிக்க படுமா என்பதை அறிய முடியும் ,இதில் இலங்கைக்கு கடிவாளம் வழங்க
பட்டால் ,போர் குற்ற விசாரணைகள் துரித படுத்த படும் நிலை ஏற்படும் என்பதை அடித்து கூறலாம்
யாழில் கோயிலுக்கு வந்தவர் – ஆற்றில் சடலமாக மீட்பு
யாழில் கோயிலுக்கு வந்தவர் – ஆற்றில் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் தொண்டமனாரு பகுதியில் கோயிலுக்கு வருகை தந்த முதியவர் ஒருவர் அந்த நீரேரியில் குளிக்க முயன்ற பொழுது நீரில் அடித்து செல்ல பட்டு இறந்துள்ளார்
மீன் பிடிக்க வந்தவர்கள் சடலத்தை கண்ணுற்று காவல்துறைக்கு தெரிவித்த நிலையில் சடலம் மீட்க பட்டுள்ளது
மேற்படி சம்பவம் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஆற்றில் மிதந்த மனித சடலம் – நடந்தது என்ன ..?
ஆற்றில் மிதந்த மனித சடலம் – நடந்தது என்ன ..?
மட்டக்களப்பட்டு ஏறாவூர் பகுதியில் உள்ள வாவி ஒன்றில் இருந்து ஆணின் சடலம் மீட்க பட்டுள்ளது
இவர் படுகொலை செய்ய பட்டு ஆற்றுக்குள் வீச பட்டு இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது
சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
இலங்கையில் சமீப காலங்களாக நீர் நிலைகளில் மனித சடலங்கள் மிதந்து வருகின்றமை குறிப்பிட தக்கது
கிளிநொச்சியில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் 34ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு!
கிளிநொச்சியில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் 34ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு!
தியாக தீபம் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாளான இன்றைய
தினம் கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் தியாகி திலீபன் அவர்கள் வீரச்சாவடைந்த நேரமான 10.48 மணிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் ஈகச்சுடரினை ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.
எமது உணர்வு! எமது உரிமை!



திலீபன் நினைவை நடத்த முல்லையில் தடை
திலீபன் நினைவை நடத்த முல்லையில் தடை
இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளின் மண் மீட்பு போரில் தண்னி ஈகம் செய்த தியாக தீபம்
திலீபனின் 34 ஆம் ஆண்டு நினைவு நாளை நினைவு கூற முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது
சட்டம் ஒழுங்கு கெட்டுவிட கூடாது என்பதற்காக இந்த தடை உத்தரவை பிறப்பிக்க பட்டுள்ளதாம்






