Posted in Uncategorized

வீழ்ந்து சிதறிய அமெரிக்கா போர் விமானம் – குதித்த விமானி தப்பினார்

வீழ்ந்து சிதறிய அமெரிக்கா போர் விமானம் – குதித்த விமானி தப்பினார்

அமெரிக்கா கலிபோனியா பகுதியில் அமெரிக்கா கடற்படைக்கு சொந்தமான F/A-18F Super Hornet
ரக சண்டை விமானம் ஒன்று திடீரென வீழ்ந்தது ,இவ்வேளை இதனை செலுத்தி சென்ற விமானி பாராசூட் மூலம் குதித்து தப்பினார்

பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் அவர் சிகிச்சை பெற்றவண்ணம் உள்ளார், விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது

    Posted in Uncategorized

    இராணுவம் மீது தாக்குதல் 9 பேர் மரணம் – 11 பேர் காயம்


    இராணுவம் மீது தாக்குதல் 9 பேர் மரணம் – 11 பேர் காயம்

    மாலியில் அரச இராணுவம் மீது போராளி குழு தாக்குதல் நடத்தியதில் ஒன்பது இராணுவத்தினர் சம்பவ இடத்திலபலியாகினர் ,மேலும் பதினோரு பேர் படுகாயமடைந்துள்ளனர்

    தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையில் மோதல்கள் வலுத்து வருகிறது

      Posted in Uncategorized

      மிரட்டும் வடகொரியா -ஒரு கிழமையில் 4 ஏவுகணை சோதனை

      மிரட்டும் வடகொரியா -ஒரு கிழமையில் 4 ஏவுகணை சோதனை

      வடகொரியா உலக சண்டியர் அமெரிக்காவுக்கு சவாலாக வலம் வருகிறது ,பலத்த பொருளாதார

      தடை விதிக்க பட்ட பொழுதும் அது தனது நாட்டின் தேசிய பாதுகாப்பு என கூறிய படி ஏவுகணை சோதனையை புரிந்து வருகிறது

      கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நான்காவது ஏவுகணை சோதனையை புரிந்துள்ளது

      இது வடகொரியாவின் பலத்தில் நான்கு மடங்கு உயர்வானது என சர்வதேச நிபுணர்கள்

      கருத்துரைத்துள்ளனர் ,மேற்படி ஆயுத சோதனைக்கு அமெரிக்கா பலத்த கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது

        Posted in Uncategorized

        பிரிட்டனில் எரிபொருள் பவுசர் ஓட்ட களத்தில் குதித்த இராணுவம்

        உலக

        பிரிட்டனில் எரிபொருள் பவுசர் ஓட்ட களத்தில் குதித்த இராணுவம்

        பிரிட்டனில் எரிபொருள் டாங்கிகளை செலுத்தி செல்ல சாரதிகள் போதாமை உள்ளதினால்

        தற்போது ,இராணுவ சாரதிகள் எரிபொருட்களை விநியோகிக்க களத்தில் இறக்க பட்டுள்ளனர்

        எரிபொருள் நிலையங்கள் முன்பாக மக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று எரிபொருளையே நிரப்பி செல்கின்றனர்
        இதனை அடுத்தே இந்த அவசர நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளது

          Posted in Uncategorized

          ரசியா எல்லைக்குள் நுழைந்த அமெரிக்கா விமானங்கள் -வானில் நடந்த பரபரப்பு

          ரசியா எல்லைக்குள் நுழைந்த அமெரிக்கா விமானங்கள் -வானில் நடந்த பரபரப்பு

          ரசிய வான் பரப்புக்குள் அமெரிக்கா நாட்டின் மூன்று விமானங்கள் நுழைந்தன

          இதனை கண்ணுற்ற ரசியா விமானங்கள் அதனை துரத்தி சென்றன

          இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது

          ரசியாவுக்குள் சமீபகாலமாக அமெரிக்கா திடீர் நுளைவுகளை மேற் கொண்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

            Posted in Uncategorized

            தேசிய நெடுஞ்சாலையில் விமானப்படை விமானங்களை தரையிறக்கி ஒத்திகை

            தேசிய நெடுஞ்சாலையில் விமானப்படை விமானங்களை தரையிறக்கி ஒத்திகை

            சுகோய்-30எம்கேஐ போர் விமானம், ஏஎன்-32 ராணுவ போக்குவரத்து விமானம், எம்ஐ-17வி5 ஹெலிகாப்டர் ஆகியவற்றையும் நெடுஞ்சாலையில் வெற்றிகரமாக தரையிறக்கி சோதனை செய்தனர்.

            எல்லை அருகே இறங்குதளம்… தேசிய நெடுஞ்சாலையில் விமானப்படை விமானங்களை தரையிறக்கி ஒத்திகை
            அவசரகால இறங்குதளத்தில் தரையிறங்கும் போர் விமானம்

            அவசர காலங்களில் இந்திய விமானப் படையின் போர் விமானங்கள் மற்றும் இதர விமானங்களை தரையிறக்கும் வகையில், ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலை

            மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தேசிய நெடுஞ்சாலை-925ல் சத்தா-காந்தவ் இடையிலான 3 கிமீ பகுதியை அவசர காலங்களில் விமானங்களை தரையிறக்கும் பகுதியாக மாற்றி உள்ளது.

            பாகிஸ்தான் எல்லை அருகே அமைந்துள்ள இந்த இறங்குதளத்தை மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின்

            கட்கரி ஆகியோர் இன்று திறந்து வைத்தனர். அதன்பின்னர், மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி மற்றும் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் ஆகியோரை விமானப்படை

            விமானத்தில் அமர வைத்து, விமானத்தை அவசரகால இறங்குதளத்தில் தரையிறக்கி ஒத்திகை பார்த்தனர்.

            நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஜ்நாத் சிங்

            சுகோய்-30எம்கேஐ போர் விமானம், ஏஎன்-32 ராணுவ போக்குவரத்து விமானம், எம்ஐ-17வி5 ஹெலிகாப்டர் ஆகியவற்றையும் நெடுஞ்சாலையில் வெற்றிகரமாக தரையிறக்கி சோதனை

            செய்தனர். இதன்மூலம், அந்த நெடுஞ்சாலையானது, துணை ராணுவ விமான தளமாக செயல்படுவதற்கு தயார் நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விமானப்படை

            விமானங்களை அவசரமாக தரையிறக்க பயன்படுத்தப்படும், முதல் தேசிய நெடுஞ்சாலை இது என்பது குறிப்பிடத்தக்கது..

            இந்நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பார்மரில் உள்ளதைப் போன்று மொத்தம் 20 அவசரகால தரையிறக்கும் வசதிகள் நாடு முழுவதும் உருவாக்கப்படுகின்றன

            என்றார். மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் உதவியுடன் பல ஹெலிபேடுகளும் உருவாக்கப்படுவதாக கூறிய ராஜ்நாத் சிங், நமது பாதுகாப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்த இது ஒரு முக்கியமான படியாகும் என்றார்.

            ‘சர்வதேச எல்லைக்கு அருகில் இதுபோன்ற அவசரகால இறங்கு தளங்களை உருவாக்குவதன் மூலம், நமது நாட்டின் ஒற்றுமை, பன்முகத்தன்மை மற்றும் இறையாண்மையை பாதுகாக்க, என்ன

            விலை கொடுத்தாலும் துணிந்து நிற்போம் என்ற செய்தியை வழங்கியுள்ளோம். அவசரகாலத்தில் விமானங்களை தரையிறக்கும் வசதியை உருவாக்குவது மிகுந்த நம்பிக்கையை உருவாக்குகிறது.

            போர்க் காலங்களில் மட்டுமல்லாமல் இயற்கை பேரிடர் காலங்களிலும் இது உதவியாக இருக்கும்’ என்றும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.

            Posted in Uncategorized இலங்கை செய்திகள்

            உடுப்பிட்டி கிராமத்தில் பதற்றம் – இராணுவம் குவிப்பு

            உடுப்பிட்டி கிராமத்தில் பதற்றம் – இராணுவம் குவிப்பு

            உடுப்பிட்டி கிராமத்தில் இரண்டு பகுதியினருக்கு இடையே இடம்பெற்று வந்த மோதல் ஊர்ப் பிரச்சினையாக மாறியதையடுத்து பொலிஸாரால் கோரப்பட்டதற்கு அமைய இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

            அதனால் அந்தக் கிராமத்தில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

            உடுப்பிட்டி இலகடி மற்றும் வன்னிச்சி அம்மன் கோவில் வேலிந்ந தோட்டம் பகுதியைச் சேர்ந்த இருதரப்பினர் இடையே இடம்பெற்று வந்த மோதல் கடந்த சில நாள்களாக ஊர்ப் பிரச்சினையாக மாறியது.

            இந்த மோதலில் சிலர் தலைமறைவாகிய நிலையில் வல்வெட்டித்துறை பொலிஸாரின் அழைப்பின் பேரின் இன்றிரவு இராணுவத்தினர் சுற்றிவளைத்து பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.

            அதனால் அந்தக் கிராமத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

            Posted in Uncategorized

            அணுகுண்டுகள் தாங்கிய சீன விமானங்கள் -தாய்வான் மேலாக பறப்பு

            அணுகுண்டுகள் தாங்கிய சீன விமானங்கள் -தாய்வான் மேலாக பறப்பு

            தாய்வானுக்கும் சீனாவுக்கும் இடையில் கடும் பனிப்போர் இடம்பெற்று வரும் நிலையில்


            தற்போது சீனா தனது அணுகுண்டுகளை காவிய விமானங்களை எல்லையோரத்தில் பறக்க விட்டுள்ளது


            இந்த விமானங்கள் திடீர் நுழைவால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது

            அமெரிக்காவின் ஏவுகணைகள் மற்றும் இராணுவம் , தாய்வான் எல்லையில் குவிக்க பட்டுள்ள நிலையில் இந்த
            அதிரடி இராணுவ நகர்வை சீனா மேற்கொண்டு வருவது குறிப்பிட தக்கது

              Posted in Uncategorized

              வெள்ளை வானில் மக்களை பிடிக்கும் இராணுவம்

              வெள்ளை வானில் மக்களை பிடிக்கும் இராணுவம்

              கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், வெள்ளைவான் கலாசாரம் தலைத்தூக்குமென கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போது பிரசாரம் செய்யப்பட்டது.

              அதற்காக முதலைக்கண்ணீர் வடித்தனர். ஊடகவியலாளர் சந்திப்பில் படம் காட்டப்பட்டது.

              முன்னாள் சுகாதார அமைச்சரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பங்குபற்றிய இருவர் சிறையில் உள்ளனர்.

              பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் அவரசகாலச் சட்டத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

              உண்மையால், வெள்ளைவான் கலாசாரத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே தலைமை வகிக்கின்றார். என்ன? கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள முடியாமல் வீடுகளிலேயே

              இருக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியை ஏற்றுவதற்கு படையினர் வெள்ளை வான்களிலேயே செல்கின்றனர்.

              அவ்வாறு வெள்ளைவான் கலாசாரத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே மாற்றியுள்ளார். அவ்வாறு வெள்ளைவான்களில் சென்று தடுப்பூசியை ஏற்றாவிடின், வீடுகளுக்குள்ளே முடங்கியிருப்போரின் நிலைமை என்னவாகியிருக்கும் என்றும் வினவினார்.

                Posted in Uncategorized

                தலிபான் அரச இராணுவம் கடும் மோதல் – 350 போராளிகள் படுகொலை

                தலிபான் அரச இராணுவம் கடும் மோதல் – 350 போராளிகள் படுகொலை

                ஆப்கானில் தலிபான்கள் ஆட்சி இடம்பெற்று வருகிறது ,ஆனாலும் இராணுவம் ஒருபகுதியில் முடக்க பட்ட நிலையில் தொடர்ந்து உக்கிரமோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                இவ்வேளை கடந்த இரு நாடுகளில் அரச இராணுவத்திற்கும் தாலிபான்களுக்கும் இடையில் இடம்பெற்ற

                மோதல்களில் சிக்கி 350 தலிபான்கள் பலியாகியுள்ளனர் ,மேலும் 35 பேர் உயிருடன் சிறை பிடிக்க பட்டுள்ளனர் என பிராந்திய வல்லரசின் இராணுவம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

                  Posted in Uncategorized

                  ஆயுதங்களை மக்கள் பார்வைக்கு வைத்த தலிபான்கள் – வீடியோ

                  ஆயுதங்களை மக்கள் பார்வைக்கு வைத்த தலிபான்கள் – வீடியோ

                  ஆப்கனிஸ்தான் நாட்டில் தலிபான் போராளிகள் அந்த நாட்டை முழுமையாக தமது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தனர்


                  அரச இராணுவத்தினர் பாவித்து வந்த விமானங்கள் , உலங்குவானூர்திகள் டாங்கிகள் என முதல்தர ஆயுதங்களை மீட்ட அவர்கள் அதில் சிலவற்றை மக்கள் பாவனைக்கு காட்சி படுத்தினர்

                  தற்போது அந்த காட்சிகள் உலகளாவிய ரீதியில் வைரலாகி வருவதுடன் பேசு பொருளாக மற்றம் பெற்றுள்ளது

                  click here video

                    Posted in Uncategorized

                    எதிரிகளை பந்தாட எங்கள் ஏவுகணைகள் தயராக உள்ளன-ஈரான் அறிவிப்பு

                    எதிரிகளை பந்தாட எங்கள் ஏவுகணைகள் தயராக உள்ளன-ஈரான் அறிவிப்பு

                    ஈரானுக்கு விட படும் எதிரிகளின் அச்சுறுத்தலை முறியடிக்க தமது ஏவுகணைகள்

                    எல்லையோரங்களில் தயார் நிலையில் உள்ளதாக ஈரானிய இராணுவம் அறிவித்துள்ளது

                    அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து கூட்டு தாக்குதலை தம்மீது மேற்கொள்ள கூடும் என ஈரான் எதிர் பார்த்துள்ள வேளையிலேயே

                    இந்த ஏவுகணைகள் எல்லையோரம் மற்றும் முக்கிய கேந்திர நிலைகளை சுற்றி நிறுத்த பட்டு அதி உச்ச கண்காணிப்பில் வைக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

                      Posted in Uncategorized

                      தியாகிகளின் பழிவாங்குதல் இராணுவ நடவடிக்கை ஆரம்பித்த ஈரான்

                      தியாகிகளின் பழிவாங்குதல் இராணுவ நடவடிக்கை ஆரம்பித்த ஈரான்

                      சிரியா ஈராக் எல்லை பகுதியில் ஈரானிய இராணுவம் புதிய பழிவாங்கும் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது

                      ஆயிரம் கிலோ மீற்றர் பரப்பளவை கொண்ட எல்லையோரத்தில் இந்த திடீர் இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்க பட்டுள்ளது

                      இதற்கு சோலைமானியின் நினைவாக தியாகிகளின் பழிவாங்குதல் என்ற குறியீட்டு பெயருடன் தாக்குதல் ஆரம்பிக்க பட்டுள்ளது

                      இதுவே உலக போராக மாற்றம் பெற கூடும் என்ற அச்சம் நிலவுகிறது

                      புலிகளை போல குருதீஸ்தான போராளிகள் இந்த இராணுவ வேட்டையில் இல்லாது அழிக்க படலாம் என எதிர்பார்க்கலாம் ,

                      • வன்னி மைந்தன்-
                        Posted in Uncategorized இலங்கை செய்திகள்

                        கிளிநொச்சியில் மக்களுக்கு வீடு கட்டி கொடுத்த இராணுவம்

                        கிளிநொச்சியில் மக்களுக்கு வீடு கட்டி கொடுத்த இராணுவம்

                        அரசாங்கத்தின் நல்லிணக்க செயல்முறையை ஊக்குவிக்கும் அதே வேளை, கிளிநொச்சியில் உள்ள பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் இராணுவத்தினரால் தேவையுடைய குடும்பங்களுக்கு மேலும் 3 புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டன.

                        பூனேரி, காசிகுடாவில் உள்ள திரு. சின்னாவி நவரத்னம், மடுவில்நாடு திரு. ராமநாதன் மணிவத்தன் மற்றும் கிளிநொச்சி, பிலிமந்தனாரு, மயில்வானாபுரத்தில் உள்ள திரு. ஆறுமுகம் நகுலேஷ்வரன் ஆகியோருக்கு இந்த புதிய வீடுகள் கையளிக்கப்பட்டன.

                        புதுமனை குடிபுகும் விழாவின் போது வீடுகளின் பயனாளிகளுக்கு வீட்டு பாவனைப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

                        கிளிநொச்சி பாதுகாப்புப் படையின் தலைமையகத்தின் கீழ் உள்ள படைவீரர்களின் நிதி, மனிதவளம் மற்றும் தொழிநுட்ப திறன் மூலம் நிர்மாணிக்கப்பட்ட இந்தப் புதிய வீடுகளுக்கு தனவந்தர்களின் நிதியுதவியும் பெற்றுக்கொள்ளப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

                        கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் உள்ள 5வது ஆயுதத் தளவாடங்கள் காலாட்படை, 24வது விஜயபாகு காலாட்படை மற்றும் 14ஆவது தேசிய பாதுகாப்புப் படை ஆகிய படையணி வீரர்களினால் இந்த வீடுகளின் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

                        கொவிட்-19 பரவலைத் தடுக்கும் சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக இடம் பெற்ற புதுமனை புகுவிழாவில்.

                        கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் படைவீரர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

                        Posted in Uncategorized

                        வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக இராணுவத்தினரால் முடக்கம்

                        வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக இராணுவத்தினரால் முடக்கம்

                        வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக இராணுவத்தினரால் முடக்கப்பட்டுள்ளது.

                        இங்கு 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது அண்மையில் உறுதிசெய்யப்பட்டது.

                        இதனையடுத்து இன்று காலை குறித்த வீதியுடனான போக்குவரத்து இராணுவத்தால்

                        துண்டிக்கப்பட்டு, முற்றாக முடக்கப்பட்டது.

                          Posted in Uncategorized

                          டயகம சிறுமியின் நினைவேந்தல் நிகழ்வில் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

                          டயகம சிறுமியின் நினைவேந்தல் நிகழ்வில் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

                          முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இல்லத்தில் பணியாற்றிய டயகமவைச் சேர்ந்த சிறுமி கடந்த 17ம் திகதி மரணமடைந்த நிலையில் நேற்;றைய தினம் இராஜாங்க அமைச்சர் ஜீவன்

                          தொண்டமான் டயகம பகுதிக்கு விஜயத்தை மேற்கொண்டு அவருடைய குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியதோடு. ஹிஷாலினியின் ஆத்மா சாந்தியடைய மெழுகுவர்தியேற்றி அஞ்சலியும் செலுத்தினார்.

                          மேலும் மலையக உறவுகளும் தத்தமது இல்லங்களில் மெழுகுவர்த்தியேற்றி ஆத்ம சாந்திக்காக பிராத்திக்குமாரறு கேட்டுக்கொண்டார். இதற்கமைவாக மலையகத்தில் பல இடங்களிலும் நேற்று

                          மாலை 6.30 மணிக்கு மெழுகுவர்த்தியேற்றி ஹிஷாலயின் ஆத்ம சாந்திக்காக பிராத்தித்தமை குறிப்பிடத்தக்கது.

                            Posted in Uncategorized

                            இராணுவம் மக்கள் மோதல் – விசாரணை ஆரம்பம்


                            இராணுவம் மக்கள் மோதல் – விசாரணை ஆரம்பம்

                            இராணுவ சேவையிலிருக்கும் சிரேஸ்ட அதிகாரி ஒருவருக்கும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சிலருக்கும் இடையில் கடந்த ஜூன் 25 ஆம் திகதி ஹபரனை பகுதியில் ஏற்பட்ட

                            முறுகல் நிலைமை வலுவடைந்ததன் காரணமாக அது தொடர்பிலான உண்மையான விடயங்களை அறிவதற்கான விசாரணைகளை நடத்துவதற்காக, உரிய பொலிஸ் நிலையத்தில்

                            இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு முறைபாடொன்று செய்யப்பட்டுள்ளமையாலும் அது தொடர்பிலான அடுத்தகட்ட நடவடிகைகளை

                            முன்னெடுப்பதற்கு பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல்

                            ஷவேந்திர சில்வா அவர்களினால் சிரேஸ்ட மேஜர் ஜெனரல்கள் இருவர் அடங்கிய விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

                            மேற்படி விசாரணைகளுக்கு அவசியமான தகவல்கள் மற்றும் சாட்சியங்கள் விசாரணை

                            குழுவினால் திரட்டப்பட்டு வருகின்றது. இது தொடர்பான அறிக்கை விரைவில் இராணுவ தளபதியிடம் கையளிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

                              Posted in Uncategorized

                              ஆறு கிராமங்கள் ,முடக்கம் – இராணுவம் குவிப்பு

                              ஆறு கிராமங்கள் ,முடக்கம் – இராணுவம் குவிப்பு

                              இலங்கையில் பரவி வரும் இரண்டாம் அலை கொரனோ நோயின் தாக்குதல் காரணமாக நான்கு

                              மாவட்டங்களை சேர்ந்தஆறு கிராமங்கள் தனிமை படுத்த பட்டுள்ளன

                              இவ்விதம் அறிவிக்க பட்ட பகுதிகளில் இராணுவம் காவல்துத்துறையினர் குவிக்க பட்டு கண் காணிப்பு பலப்படுத்த பட்டுள்ளது

                                Posted in Uncategorized

                                வீதியில் உலாவியவர்களை முழங்காலில் நிக்க வைத்த இராணுவம்

                                வீதியில் உலாவியவர்களை முழங்காலில் நிக்க வைத்த இராணுவம்

                                பயணக்கட்டுப்பாடுகளை மீறி வீதிகளில் நடமாடியவர்களை, தலைக்கு மேலே கைகளை உயர்த்தியவாறு வீதியில்

                                முழங்காலில் இருக்க வைத்து இராணுவத்தினரால் தண்டனை வழங்கிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

                                கிழக்கு மாகாணத்தில் ஏறாவூர் பகுதியிலேயே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாட்டுக்கு கடுமையான கண்டனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

                                கொழும்புக்கு ஒரு சட்டம், கிழக்குக்கு ஒரு சட்டமா? என்றும் வினவியுள்ளனர்.

                                  Posted in Uncategorized

                                  முல்லைத்தீவில் மக்கள் விபரங்களை சேகரிக்கும் இராணுவம் – அச்சத்தில் மக்கள்

                                  முல்லைத்தீவில் மக்கள் விபரங்களை சேகரிக்கும் இராணுவம் – அச்சத்தில் மக்கள்

                                  முல்லைத்தீவு மாவட்டத்தில், குடியிருப்பாளர்களின் விவரங்களைப் பதிவு செய்யும்
                                  நடவடிக்கையில், பொலிஸார், நேற்று (14) ஈடுபட்டுள்ளனரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                  இதனடிப்படையில், முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராமசேவகர், பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட
                                  குடியிருப்பாளர்கள், தங்கியிருப்பவர்களின் விவரங்களைப் பெற்றுக்கொள்வதற்கான படிவம்
                                  வழங்கப்பட்டுள்ளது.

                                  இவற்றைப் பூரணப்படுத்தி, ஒரு மணிநேரத்தில் வழங்குமாறும், பொலிஸாரால்
                                  அறிவுறுத்தப்பட்டுள்ளது.1865ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பொலிஸ் கட்டளைச் சட்டத்தின்

                                  76ஆவது பிரிவுக்கு அமைவாகச் செய்யப்படும் ஆணைஎன, அந்த படிவத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.