வீதியில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம்
மஹியங்கனை – தெஹியத்தகண்டிய பிரதான வீதியின் கிராந்துருகோட்டை பிரதேசத்தில் புதிதாகப் பிறந்த சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அவ்வழியாக சென்ற ஒருவர் சடலத்தை பார்த்து பொலிசாருக்கு தகவல் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கிரந்துருகோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகள், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வீதியில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம்
சடலம் மீட்கப்பட்ட போது அழுகிய நிலையில் இருந்ததால், சடலத்தை யாராவது அவ்விடத்தில் வீசிவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகில் ஒரு பாடசாலை மற்றும் பேருந்து நிறுத்தமும் உள்ளதுடன் கருப்பு நிற பயணப்பையொன்றும் காணப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரையில் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதுடன், கிராந்துருகோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஞானசார தேரரின் விடுதலையைக் கோரும் பேரணி ஐந்தாம் நாளை எட்டியது
- பாராளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்
- பசில் ராஜபக்சவைக் கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது
- இன்று தீவின் சில பகுதிகளில் கனமழை
- அனைத்து மாகாணங்களிலும் கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை
- அனோஜன் சிவரசாவின் மரண தண்டனையை ரத்து செய்த சவூதி
- சுரேஷ் சல்லே வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குறுக்கீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்தது
- 9 மாதங்களில் 360-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை
- பாராளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்
- சீனாவும் ரஷ்யாவும் ஈரானுக்கு ‘சற்றும்’ உதவுவதாகத் தாம் நம்பவில்லை என டிரம்ப் கூறுகிறார்
- கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- பௌத்த மதத்திற்கு முதன்மை இடம் சஜித் பிரேமதாச வருத்தம்



















