Posted in சினிமா

விஜய்யை பார்த்து பொறாமைப்பட்டார் அஜித்

விஜய்யை பார்த்து பொறாமைப்பட்டார் அஜித்

விஜய்யை பார்த்து அஜித் பொறாமைப்பட்டார் என்று பிரபல பாடகி

சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

விஜய்யை பார்த்து பொறாமைப்பட்டார் அஜித் – பிரபல பாடகி
நடிகர்கள் அஜித், விஜய்


விஜய் மற்றும் அஜித் இருவரும் தமிழ் திரையுலகில் மாஸ் நடிகர்களாக,

வலம் வருகின்றனர். தங்களுக்குள் நல்ல நட்பைப் பகிர்ந்து

கொள்ளும் இருவரும் ‘ராஜாவின் பார்வையில்’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

அதன் பின்னர் இரண்டு நடிகர்களும் தங்களது தனி பாதையில் பயணித்து,

தொழில்துறையில் புதிய உயரங்களை எட்டி வருகின்றனர்.பாடகி சுசித்ரா

தற்போது பிரபல பாடகி சுசித்ரா சமீபத்திய பேட்டியில் வெளிப்படுத்திய

ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய்க்கு படங்கள்

மட்டும் அல்லாது படங்களில் இடம்பெறும் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை

பெறுவது வழக்கம். இதற்காக விஜய் மீது அஜித் பொறாமை கொண்டதாக அவர் கூறியுள்ளார்.

      Posted in சினிமா

      ஊரடங்கால் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்த 11 பெண்களுக்கு உதவிய விஜய்

      ஊரடங்கால் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்த 11 பெண்களுக்கு உதவிய விஜய்

      ஊரடங்கால் சொந்த ஊர் செல்ல முடியாமல் தூத்துக்குடியில் சிக்கி தவித்த 11 பெண்களுக்கு நடிகர் விஜய் ரசிகர்கள் மூலம் உதவியுள்ளார்.

      ஒரே ஒரு போன் கால்…. ஊரடங்கால் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்த 11 பெண்களுக்கு உதவிய விஜய்
      விஜய்


      சென்னையை சேர்ந்த தேவிகா உள்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 11 பெண்கள் கடந்த மார்ச் மாதம் தூத்துக்குடிக்கு திருமணத்திற்காக சென்றிருந்தனர். அந்த சமயத்தில் திடீரென ஊரடங்கு

      பிறப்பிக்கப்பட்ட காரணத்தால் அவர்கள் அனைவரும் தூத்துக்குடியில் மாட்டிக்கொண்டனர். அவர்களில் தேவிகா தவிர மற்ற பெண்கள் அனைவரும் 20 வயத்துக்குட்பட்டவர்களாம்.

      கையில் இருந்த பணம் சில நாட்களில் செலவான நிலையில், பின்னர் பேருந்து நிலையங்களிலும், கோவில்களிலும் தங்கியிருந்த

      அவர்கள், ஒரு கட்டத்தில் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் திண்டாடினார்கள். இதையடுத்து தூத்துக்குடியில் உள்ள விஜய்

      ரசிகர் மன்ற நிர்வாகியை சந்தித்து, அப்பெண்கள் தங்களது நிலையை எடுத்துக் கூறியுள்ளார்கள்.

      விஜய்

      உடனடியாக அவர் அகில இந்திய விஜய் ரசிகர் மன்ற தலைவர் பிசி ஆனந்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்மூலம் இந்த விஷயம் விஜய்யின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. விஜய்

      உடனடியாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் உள்ள தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை போனில் தொடர்பு கொண்டு, அந்த 11

      பெண்களையும் சென்னைக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து அரசிடம் முறையாக அனுமதி

      பெற்று, அந்த 11 பெண்களும் பத்திரமாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

      ஊரடங்கால் சொந்த
      ஊரடங்கால் சொந்த
          Posted in சினிமா

          வைரலாகும் விஜய்யின் டிரிப் போட்டோ

          வைரலாகும் விஜய்யின் டிரிப் போட்டோ

          தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யின் டிரிப் போட்டோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

          வைரலாகும் விஜய்யின் டிரிப் போட்டோ
          விஜய்


          தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரை பற்றி

          எந்த செய்தி வந்தாலும் உடனே அவரது ரசிகர்கள் அதை வைரலாக்குவது

          வழக்கம். அந்த வகையில் தற்போது ஒரு போட்டோ மிகவும் வைரலாகி வருகிறது.

          நடிகர் விஜய், தான் இளவயது நண்பர்களுடன் இன்னும் நெருக்கமாக

          இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அப்படி கடந்த 2014-ம்

          ஆண்டு நண்பர்களுடன் சேர்ந்து வெளிநாட்டு டூர் சென்றபோது எடுத்த போட்டோ

          ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.


          நடிகர் சஞ்சீவ் வெளியிட்ட புகைப்படம்.
          விஜய்யின் நெருங்கிய நண்பரான நடிகர் சஞ்சீவ் இந்த

          புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். “2014 நண்பர்களுடன் வெளிநாட்டு டிரிப்”

          என்று தலைப்பிட்டு இந்தப் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

          வைரலாகும்
          வைரலாகும்
              Posted in சினிமா

              விஜய் முன்பாக -அனிருத் குழுவில் இசையமைக்கும் -2 கை இழந்த வாலிபர்

              விஜய் முன்பாக -அனிருத் குழுவில் இசையமைக்கும் -2 கை இழந்த வாலிபர்

              மாற்றுத்திறனாளி இளைஞனின் கனவு நனவாகிறது…. லாரன்ஸின் கோரிக்கையை ஏற்ற விஜய்

              மாற்றுத்திறனாளி இளைஞனின் கனவை நனவாக்க, ஒரே போன் காலில் விஜய் – அனிருத்திடம் லாரன்ஸ் சம்மதம் வாங்கி உள்ளார்.

              மாற்றுத்திறனாளி இளைஞனின் கனவு நனவாகிறது…. லாரன்ஸின் கோரிக்கையை ஏற்ற விஜய்
              லாரன்ஸ், விஜய்


              மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடலை கடந்த சில தினங்களுக்கு முன் கைகளை இழந்த மாற்றுத்திறனாளி

              இளைஞர் ஒருவர் வாசிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதை பார்த்த இசையமைப்பாளர் அனிருத்தும் அவரை வாழ்த்தி இருந்தார்.

              இதனிடையே லாரன்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில், “அந்த இளைஞர் பெயர் தான்சேன். தனது மாற்றுத்திறனாளிகள் குழுவில்

              இருப்பவர். இந்த லாக்டவுன் சமயத்தில் 3 நாட்கள் பயிற்சி செய்து ‘மாஸ்டர்’ படத்தின் ஒரு பாடலை வாசித்திருக்கிறார். இவரது கனவே

              அனிருத் அவர்களின் இசையில் ஒரு சிறு பகுதி வாசிக்க வேண்டும் என்பதும், விஜய் அவர்கள் முன்னிலையில் இதை வாசிக்க வேண்டும் என்பதுதான்” என்று தெரிவித்திருந்தார்.

              விஜய், அனிருத், தான்சேன்

              இந்நிலையில், லாரன்ஸின் வேண்டுகோளுக்கு இணங்க விஜய்யும், அனிருத்தும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதற்கு நன்றி

              தெரிவித்து லாரன்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது: நேற்றிரவு நண்பன் விஜயிடம் பேசினேன். லாக்டவுன் முடிந்ததும்

              அந்த இளைஞரை அழைத்து வந்து தன் முன்னால் வாசித்துக் காட்ட சொன்னார்.

              அதே போல அனிருத்தும் அந்த இளைஞருடைய விருப்பத்திற்கேற்ப தன்னுடைய இசையில் அவரை வாசிக்க வைப்பதாக கூறியுள்ளார்.

              அந்த இளைஞரின் கனவை நனவாக்கிய நண்பன் விஜய்க்கும் அனிருத்துக்கும் என்னுடைய மிகப்பெரிய நன்றி” என தெரிவித்துள்ளார்.

              விஜய் முன்பாக -அனிருத் குழுவில் இசையமைக்கும் -2 கை இழந்த வாலிபர்
              விஜய் முன்பாக -அனிருத் குழுவில் இசையமைக்கும் -2 கை இழந்த வாலிபர்
              Posted in சினிமா

              விஜய்க்கு ஜோடியாகும் பிரபல நடிகை

              விஜய்க்கு ஜோடியாகும் பிரபல நடிகை

              மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ள விஜய், அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

              மீண்டும் விஜய்க்கு ஜோடியாகும் பிரபல நடிகை
              விஜய்


              விஜய் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிவுள்ள இப்படம் கொரோனா ஊரடங்கு முடிந்த பின் ரிலீசாக உள்ளது. இப்படத்தையடுத்து விஜய்யின் 65-

              வது படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. அது துப்பாக்கி படத்தின் 2-ம் பாகம் என சொல்லப்படுகிறது.

                மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே விஜய்யுடன் ஜில்லா, துப்பாக்கி போன்ற படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்.

                காஜல் அகர்வால்

                இந்நிலையில், காஜல் தமிழ் படம் ஒன்றிற்காக அதிக நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

                அது விஜய்யின் 65-வது படத்திற்காக தான் என கூறப்படுகிறது. இருப்பினும் கொரோனா ஊரடங்குக்கு பின் இதுகுறித்த

                அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

                விஜய்க்கு ஜோடியாகும்
                விஜய்க்கு ஜோடியாகும்
                    Posted in சினிமா

                    அஜித் – விஜய் ரசிகர்கள் சண்டை

                    அஜித் – விஜய் ரசிகர்கள் சண்டை

                    சமூக வலைத்தளத்தில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சண்டை போடுவதை பார்த்த நடிகை கோபப்பட்டு இருக்கிறார்.

                    அஜித் – விஜய் ரசிகர்கள் சண்டை – கோபப்பட்ட நடிகை
                    நடிகர்கள் விஜய், அஜித்


                    தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்களுக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இடையே அடிக்கடி சமூக வலைத்தளங்களில் மோதல் நடந்து கொண்டிருக்கிறது.

                    தற்போது மாற்றி மாற்றி மோசமான டேக்குகளை தேசிய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். #மே1அஜித்குபாடைகட்டு,

                    June22BlackdayForVijay, June22VijayDeathDay போன்ற டேக்குகளை அவர்கள் ட்ரெண்ட் செய்துள்ளனர்.

                    நடிகை கஸ்தூரியின் ட்விட்

                    இது பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. மே 1 அஜித் பிறந்தநாள், ஜூன் 22 விஜய்யின் பிறந்தநாள் வருவதால் அதை

                    கொண்டாட அவர்களின் ரசிகர்கள் தயாராகி வரும் இந்த சூழலில் தான் இப்படி ஒரு மோதல் நடந்துள்ளது.

                    இந்த மோதல் பற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி, “அஜித்தும் விஜய்யும் எந்த குறையும் இல்லாம நல்லா இருக்கணும்.

                    இருப்பாங்க. வெட்டி பயலுங்க சாபத்துனால அவங்களுக்கு ஆபத்து இல்லை; ஆனா அவமானம். ஊரே பத்தி எரியும் போது கூட

                    இவிங்களுக்கு இதான் முக்கியமா? திருந்துங்க பிரதர்ஸ். Ignore negativity. வாழு வாழ விடு” என ட்விட் செய்துள்ளார்

                    அஜித் - விஜய் ரசிகர்கள் சண்டை
                    அஜித் – விஜய் ரசிகர்கள் சண்டை
                    Posted in சினிமா

                    சஞ்சய் எப்படி இருக்கான்? – விஜய்யிடம் நலம் விசாரித்த அஜித்

                    சஞ்சய் எப்படி இருக்கான்? – விஜய்யிடம் நலம் விசாரித்த அஜித்

                    கனடாவில் சிக்கி தவிக்கும் விஜய்யின் மகன் சஞ்சய் குறித்து நடிகர் அஜித் போனில் நலம் விசாரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

                    சஞ்சய் எப்படி இருக்கான்? – விஜய்யிடம் நலம் விசாரித்த அஜித்
                    அஜித், விஜய்


                    நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய், படிப்பை முடித்துவிட்டு, குறும்படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தி வந்தார்.

                    இந்நிலையில், பிலிம் மேக்கிங் படிக்க அவர் கனடாவுக்கு சென்றார். இதனிடையே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

                    இதனால் கனடாவில் இருந்து சஞ்சய் நாடு திரும்ப முடியவில்லை. இதை நினைத்து விஜய் கவலை அடைந்ததாகவும். மகனிடம்

                    தினமும் போனில் பேசி அவரை வெளியே செல்லாமல் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தியதாகவும் செய்திகள் பரவின.

                    இதுபற்றி அறிந்த நடிகர் அஜித், உடனே விஜய்யிடம் செல்போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

                    சஞ்சய், விஜய்

                    ‘சஞ்சய் எப்படி இருக்கான்? கனடாவில் நிலைமை எப்படி இருக்கிறது’ என கேட்டுள்ளார். ‘பயப்படும்படியாக எதுவும் இல்லை.

                    சஞ்சய் பாதுகாப்பாக இருக்கிறான் ’ என்று விஜய் கூறியுள்ளார். விஜய்யும், அஜித்தும் இதுபோல் அவ்வப்போது போனில் பேசுவது

                    வழக்கமான ஒன்றுதான் என அவர்களுக்கு நெருங்கியவர்கள் தெரிவித்துள்ளன

                    சஞ்சய் எப்படி இருக்கான்
                    சஞ்சய் எப்படி இருக்கான்
                    Posted in சினிமா

                    மனைவியால் மீசையை எடுத்த விஜய்

                    மனைவியால் மீசையை எடுத்த விஜய்

                    லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் நடித்து வரும் விஜய், மனைவியால் ஆலோசனையால் மீசையை எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

                    மனைவி ஆலோசனையால் மீசையை எடுத்த விஜய்
                    மனைவியுடன் விஜய்


                    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். இப்படத்தின் படப்பிடிப்பு, விறுவிறுப்பாக

                    நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கர்நாடக மாநிலம், சிமோகாவில் படப்பிடிப்பு நடந்தது. இங்கு, சிறைச்சாலை

                    அரங்கு அமைத்து படமாக்கப்பட்டபோது, மீசையின்றி விஜய் நடித்த தகவல் வெளியாகி உள்ளது. மனைவியுடன்

                    விஜய்க்கு நெருக்கமானவர்கள் இதுபற்றி கூறியதாவது, ‘ஆரம்பத்தில், மீசையை எடுக்க விஜய் தயங்கினார்.

                    அவரது மனைவி சங்கீதா, ‘பரவாயில்லை… நன்றாகத் தான் இருக்கும்’ எனக் கூறவே, மீசையை எடுக்க சம்மதித்தார்’ என்கின்றனர்.

                    தற்போது இதன் படப்பிடிப்பு, சென்னை அடுத்த, பனையூரில் நடக்கிறது.

                    Posted in சினிமா

                    விஜய்யின் அடுத்த படத்தை இயக்குபவர் இவரா?

                    விஜய்யின் அடுத்த படத்தை இயக்குபவர் இவரா?

                    பிகில் படத்தை தொடர்ந்து விஜய் தற்போது தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது.

                    இப்படத்தை தொடர்ந்து விஜய் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற கேள்வி எழுந்து வருகிறது. இந்நிலையில், அருண் விஜய்யின் தடம் படத்தை இயக்கிய மகிழ் திருமேணி விஜய்யிடம் கதையை கூறி ஒப்புதல் வாங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

                    விஜய் – மகிழ்திருமேணி

                    விஜய் தற்போது நடித்து வரும் ‘தளபதி 64’ படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது. 65வது படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.