Posted in சினிமா

தடுப்பூசி போட்டுக் கொண்ட விஜய் பட நடிகை

தடுப்பூசி போட்டுக் கொண்ட விஜய் பட நடிகை

தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து தற்போது தமிழில் விஜய்யுடன் நடித்து வரும் நடிகை கொரோனா தடுப்பூசி போட்டு இருக்கிறார்.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட விஜய் பட நடிகை
பூஜா ஹெக்ட

Ethiri.com – எதிரி இணையம்


தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. பின்னர் தெலுங்கு, இந்தி படங்களில் பிரபல நடிகர்களுடன் நடித்து முன்னணி

நடிகையானார். தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே கொரோனா முதல் தடுப்பூசி போட்டு இருப்பதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்திருக்கிறார்.

பூஜா ஹெக்டே
பூஜா ஹெக்டே

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நடிகை பூஜா ஹெக்டே, கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதன்பின் சிகிச்சைக்குப் பிறகு தொற்றில் இருந்து மீண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Posted in சினிமா

    ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரம் – நடிகர் விஜய் மேல்முறையீடு

    ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரம் – நடிகர் விஜய் மேல்முறையீடு

    தான் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரியில் இருந்து விலக்களிக்க கோரிய வழக்கில், நடிகர் விஜய் மேல் முறையீடு செய்துள்ளார்.

    ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரம் – நடிகர் விஜய் மேல்முறையீடு
    விஜய்


    நடிகர் விஜய், கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த சொகுசு காருக்கு வணிக வரிதுறை நுழைவு வரி விதித்தது. இதை

    எதிர்த்தும், வரி விதிக்கத் தடை கோரியும் விஜய் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகர்கள் நிஜ வாழ்விலும் ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது. வரி செலுத்துவது நன்கொடை போன்றது அல்ல, நாட்டிற்கு குடிமகன்கள் செய்ய வேண்டிய

    கட்டாய பங்களிப்பு. சமூக நீதிக்கு பாடுபடுவதாக கூறிக் கொள்ளும் நடிகர்கள் வரி ஏய்ப்பு

    செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என கண்டனம் தெரிவித்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்த அவர், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார்.

    விஜய்

    இந்நிலையில், ரூ.1 லட்சம் அபராதம் விதித்தை எதிர்த்து நடிகர் விஜய் மேல் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு, திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.

      Posted in சினிமா

      வரி செலுத்தாது கார் இறக்கிய விஜய் -ஒரு லட்சம் அபராதம்

      வரி செலுத்தாது கார் இறக்கிய விஜய் -ஒரு லட்சம் அபராதம்

      பிரபல நடிகர் விஜய் லண்டனில் இருந்து றோஸ் பெரி கார் ஒன்றை இறக்குமதி செய்தார் ,இதற்கு நுழைவு வரி செலுத்தாது காரினை பதிவு செய்திட சென்றுள்ளார்

      2012 ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கு தற் போது முடிவுக்கு வந்துள்ளது

      விஜய்க்கு ஒரு லட்சம் அபராதம் விதிக்க பட்டு வழக்கு முடிவுக்கு கொண்டுவர பட்டுள்ளது

        Posted in Uncategorized

        விஜய்யின் ‘பிகில்’ படத்தை காண்பித்து சிறுவனுக்கு டாக்டர்கள் சிகிச்சை

        விஜய்யின் ‘பிகில்’ படத்தை காண்பித்து சிறுவனுக்கு டாக்டர்கள் சிகிச்சை

        பைக்கில் சென்றபோது கீழே விழுந்து காயம் அடைந்த சிறுவனுக்கு, ‘பிகில்’ படத்தை காண்பித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது.

        விஜய்யின் ‘பிகில்’ ப

        டத்தை காண்பித்து சிறுவனுக்கு டாக்டர்கள் சிகிச்சை
        விஜய்


        சென்னை மயிலாப்பூரை சேர்ந்த சசிவர்ஷன் என்கிற 10 வயது சிறுவன், தனது மாமா அரவிந்த் என்பவருடன் பைக்கில் சென்றபோது கீழே விழுந்துள்ளான். இதில் சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக அவனை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

        சிறுவன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், தையல் போட்டு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். அதனால், சிறுவனுக்கு முதலில் ஊசி போடுவதற்காக டாக்டர்கள் முயன்றனர்.

        ஆனால் சிறுவன் பயத்தில், ‘ஊசி வேண்டாம்’ என அடம்பிடித்து, சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை. எவ்வளவோ முயன்றும், சிறுவன் சிகிச்சைக்கு ஒத்துழைக்காததால், டாக்டர்கள் என்ன செய்வதென்று புரியாமல் தவித்தனர்.

        அப்போது அங்கு இரவு பணியில் இருந்த ஜின்னா என்பவர், சிறுவனிடம் நைசாக பேச்சு கொடுத்து, ‘உனக்கு என்ன பிடிக்கும்? என கேட்டார்’. அதற்கு சிறுவன், தனக்கு நடிகர் விஜய்யை மிகவும் பிடிக்கும் என்று வலியில் அழுது கொண்டே கூறியுள்ளான்.

        விஜய்
        விஜய்

        மேலும் நடிகர் விஜய்யின் படங்கள், பாடல்கள், வசனங்கள் எல்லாம் தனக்கு மனப்பாடமாக தெரியும் எனவும், காயம் ஏற்பட்ட வலி, வேதனையிலும், நடிகர் விஜய்யை பற்றி சலிக்காமல் பதில் அளித்து கொண்டே இருந்தான்.

        அப்போது, ஜின்னா, தனது செல்போனில் வைத்திருந்த விஜய்யின் ‘பிகில்’ படத்தை போட்டு சிறுவனிடம் கொடுத்துள்ளார். அதை சிறுவன் வாங்கிக்கொண்டு, உற்சாக மிகுதியில், தலையில்

        ரத்தம் வழிந்த நிலையிலும், மெய் மறந்து பார்த்துக்கொண்டிருந்தான். அந்த சமயத்தில், டாக்டர்கள், சிறுவனுக்கு வலி தெரியாமல் இருக்க ஊசி மூலம் மருந்து செலுத்தி், தையல் போட்டு சிகிச்சை அளித்தனர்.

        விபத்தில் காயம் அடைந்த சிறுவனுக்கு, விஜய்யின் ‘பிகில்’ படத்தை போட்டு காண்பித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்த சம்பவம் ருசிகரத்தை ஏற்படுத்தி உள்ளது.

        Posted in சினிமா

        100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து விஜய் பட பாடல் சாதனை

        100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து விஜய் பட பாடல் சாதனை

        அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம் ‘தெறி’. விஜய்க்கு ஜோடியாக சமந்தா,

        எமி ஜாக்சன் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

        இது அவரின் 50-வது படமாகும். பிளாக்பஸ்டர் வெற்றியடைந்த இப்படத்தில் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.

        கடந்தாண்டு இப்படத்தில் இடம்பெற்ற ‘என் ஜீவன்’ பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை

        கடந்து சாதனை படைத்திருந்த நிலையில், தற்போது அப்படத்தில் இடம்பெற்ற ‘ஈனா மீனா டிகா’ பாடலும் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

        ஏற்கனவே விஜய்யின் ஆளப்போறான் தமிழன், வெறித்தனம், என் ஜீவன், வாத்தி கம்மிங் லிரிக்கல் மற்றும் வீடியோ

        பாடல் ஆகிய 5 பாடல்கள் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ள நிலையில், தற்போது ‘ஈனா மீனா டிகா’ பாடலும் 100 மில்லியன் கிளப்பில் இணைந்துள்ளது.

          Posted in சீமான் பேச்சு

          அடிக்கிற அடியில் கமல்,ரஜனி,விஜய் யாரையுமே அரசியலுக்கு வரக்கூடாது

          அடிக்கிற அடியில் கமல்,ரஜனி,விஜய் யாரையுமே அரசியலுக்கு வரக்கூடாது

          நடந்து முடிந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை முன் கூடியே கணித்த சீமான் ,


          இவரது முற்போக்கு சித்தனை சாத்தியமானது என்பது இது தாங்க

          Posted in சினிமா

          கர்ப்பிணிகளுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை – விஜய் மக்கள் இயக்கத்தினர் ஏற்பாடு

          கர்ப்பிணிகளுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை – விஜய் மக்கள் இயக்கத்தினர் ஏற்பாடு

          மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மகப்பேறு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக விஜய் மக்கள் இயக்க நிா்வாகிகள் 2 காா்களை வழங்கினா்.

          கர்ப்பிணிகளுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை – விஜய் மக்கள் இயக்கத்தினர் ஏற்பாடு
          விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், விஜய்


          தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் ஒருபகுதியாக பொதுப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மயிலாடுதுறை

          மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், பெரும்பாலான ஆம்புலன்ஸ்கள் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இதனால், கா்ப்பிணிகளுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.

          இந்நிலையில், கொரோனா பொதுமுடக்க காலம் வரை மயிலாடுதுறை அரசு பெரியாா் மருத்துவமனைக்கு பிரசவத்திற்காகவும், மகப்பேறு முடிந்து தாய், சேயை வீட்டிற்கு இலவசமாக

          அழைத்துச் செல்லவும் 2 காா்களை இலவசமாக பயன்படுத்த விஜய் ரசிகா் மன்றத்தினா் வழங்கினா்.

          விஜய் மக்கள் இயக்கத்தினர் வழங்கிய கார்

          விஜய் மக்கள் மன்ற மாவட்ட தலைவா் சி.எஸ். குட்டி கோபி தலைமையில் நடைபெற்ற

          நிகழ்ச்சியில், மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலா் ஆா்.ராஜசேகரிடம் இரண்டு காா்களையும் மன்ற நிா்வாகிகள் ஒப்படைத்தனா்.

            Posted in Uncategorized

            வாக்களிக்க சைக்கிளில் வந்தத விஜய்

            வாக்களிக்க சைக்கிளில் வந்தத விஜய்

            பெட்ரோல் விலை உயர்வை குறிக்கும் வகையில் நடிகர் விஜய் சைக்கிளில் சென்றிருக்கலாம் என திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

            விஜய் வாக்களிக்க சைக்கிளில் வந்தது ஏன்?- மக்கள் தொடர்பு அதிகாரி விளக்கம்
            வாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய்
            நடிகர் விஜய், நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து வாக்குச்சாவடி மையத்திற்கு சைக்கிளில் வந்து வாக்களித்தார்.

            சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து, நடிகர் விஜய், சைக்கிளில் புறப்பட்டார். ரசிகர்கள் கூடி விடக்கூடாது என்பதற்காக, அவருடன் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சிலர் இருசக்கர வாகனங்களில் நெருக்கமாக வந்தனர்.

            தனது வீட்டில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பயணித்து, நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் உள்ள வேல்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு விஜய் வந்தார். அவரைப் பார்த்ததும் ரசிகர்கள் போலீஸ் அமைத்திருந்த

            தடுப்புகளையும் மீறி அருகே குழுமினர். பாதுகாப்புக்கு இருந்த போலீசார் ரசிகர்களை அப்புறப்படுத்தி, நடிகர் விஜயை உள்ளே அழைத்துச் சென்றனர். அதன் பிறகு தனது வாக்கை நடிகர் விஜய் பதிவு செய்தார்.

            நடிகர் விஜய் வாக்குச் செலுத்திவிட்டு திரும்பியபோது ரசிகர்கள் அதிகளவில் முண்டியடித்ததால், போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

            வாக்களித்த பிறகு, மீண்டும் தனது வீட்டுக்கு சைக்கிளில் செல்ல நடிகர் விஜய் சென்றார். ஆனால் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததன் காரணமாக அந்த முயற்சியை கைவிட்டு, விஜய் மக்கள் இயக்க நிர்வாகி ஒருவரது இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்தபடி நடிகர் விஜய் வீடு

            திரும்பினார். ரசிகர்கள் முண்டியடித்தபடி செல்பி எடுப்பதற்காக ஓடி வந்ததால், கடும் சிரமத்துக்கு இடையே தடுமாற்றத்துடன் இருசக்கர வாகனத்தை அந்த நிர்வாகி ஓட்டினார்

            நடிகர் விஜய் சைக்கிளில் வாக்களிக்க வந்தது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், அதுகுறித்து பல்வேறு கருத்துகளும் பகிரப்பட்டு வருகின்றன.

            பெட்ரோல் விலை உயர்வை குறிக்கும் வகையில் நடிகர் விஜய் சைக்கிளில் சென்றிருக்கலாம் என திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

            சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் நடிகை குஷ்பு கூறும்போது நேரத்தை வீணாக்க வேண்டாம் என்பதற்காக விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்திருக்கலாம் என கூறினார்.

            ஒவ்வொருவரும் ஒரு கருத்து சொல்வதால் நடிகர் விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்ததற்கு எவ்வித அரசியல் காரணங்களும் இல்லை என நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பு அதிகாரி ரியாஸ் விளக்கம் அளித்து உள்ளார்.

            வாக்குச்சாவடி மையம் மிக அருகில் இருந்ததால் சைக்கிளில் வந்தார் விஜய். நடிகர் விஜய் சைக்கிளில் வந்ததற்கு வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என கூறினார்.

              Posted in சினிமா

              தளபதி 65 அப்டேட் – ரகசிய உளவு அதிகாரியாக நடிக்கும் விஜய்

              தளபதி 65 அப்டேட் – ரகசிய உளவு அதிகாரியாக நடிக்கும் விஜய்

              நடிகர் விஜய் தனது அடுத்த படத்தில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார். விஜய்யின் 65-வது படமான இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பூஜா ஹெக்டே இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

              இந்தப் படம் குறித்த அறிவிப்பு வந்த போதே விஜய் இந்தப் படத்தில் ரகசிய போலீஸ் ஏஜெண்டாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. எனவே இந்தப் படத்தில் விஜய்க்கு மிரட்டலான ஆக்‌ஷன் காட்சிகள் உள்ளது. எனவே இந்தப் படத்தில் அன்பறிவ் சகோதரர்கள் ஸ்டண்ட் இயக்குனர்களாக இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

              விஜய்

              கேஜிஎப் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை மிஞ்சும் அளவிற்கு தளபதி 65 படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் பட்டையைக் கிளப்பும் என்று இயக்குனர் நெல்சன் திலீப்குமாரே ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

              விஜய் இந்தப் படத்தில் ஒரு ரகசிய உளவு அதிகாரியாக நடிக்க இருப்பதால் அவரது கதாபாத்திரம் மிகவும் கூர்மையான புத்தியுடனும், வழக்கம் போல சற்று காமெடி கலந்தும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

              Home » விஜய் » Page 3
              Posted in சினிமா

              வெளிநாடு செல்லும் விஜய்

              வெளிநாடு செல்லும் விஜய்

              கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன், அடுத்ததாக விஜய் நடிக்கும் ‘தளபதி 65’ படத்தை இயக்க

              உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக

              நடிக்க ராஷ்மிகா மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மனோஜ் பரமஹம்சா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

              விஜய், நெல்சன்

              இந்நிலையில், இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ரஷியாவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏப்ரல் மாதம்

              முதல் வாரத்தில் தொடங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, கிட்டத்தட்ட ஒரு மாதம் ரஷியாவில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

              மேலும் இது அரசியல் கதையம்சம் கொண்ட பொழுதுபோக்கு படமாக உருவாக உள்ளதாம். விரைவில் இப்படம் குறித்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

              Home » விஜய் » Page 3
              Posted in சினிமா

              ரசிகர்களை சந்தித்த விஜய்

              ரசிகர்களை சந்தித்த விஜய்

              தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில்

              தற்போது மாஸ்டர் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை

              பெற்று வருகிறது. இப்படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார்.

              இந்நிலையில், சென்னை அருகே பனையூரில் இருக்கும் விஜய் மக்கள்

              இயக்கத்தின் தலைமை செயலகத்திற்கு விஜய் சென்றிருக்கிறார். விஜய் மக்கள்

              இயக்க நிர்வாகிகள் பெரும் எண்ணிக்கையில் திரண்டிருக்கும் நிலையில்,

              நடிகர் விஜய் திடீரென இந்த கூட்டத்துக்கு வருகை தந்தார்.

              விஜய்

              விஜய்யின் திடீர் வருகையை எதிர்பாராத ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

              இது தொடர்பான போட்டோக்களை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில்

              பதிவிட்டு வருகின்றனர். எதற்காக பனையூரில் கூட்டம் நடைபெற்றது? என்ற தகவல் வெளியாகவில்லை.

                Posted in சினிமா

                வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’… 2-ம் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்

                வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’… 2-ம் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்

                லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள மாஸ்டர் படத்தின் 2-ம் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

                வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’… 2-ம் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்
                விஜய்


                லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா நடிப்பில் பொங்கலை முன்னிட்டு

                நேற்று முன்தினம் மாஸ்டர் திரைப்படம் வெளியானது. கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இந்தப் படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போனது.

                கொரோனா பரவலுக்கு பிறகு திரையரங்கில் வெளியாகும் முதல் பெரிய படம் என்பதால், ரசிகர்களை கடந்து திரைத்துறையை

                சேர்ந்தவர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் மாஸ்டர் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. முன்பதிவு

                தொடங்கிய சில மணி நேரங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.

                பொதுவாகவே விஜய்யின் படங்கள் இந்திய அளவில் வசூலில் சாதனை படைக்கும். ஒவ்வொரு படமும் முந்தைய படத்தின் வசூல்

                சாதனையை முறியடிக்கும். மாஸ்டர் படம் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானதால்

                2 நாட்களில் உலகம் முழுக்க ரூ. 80 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்துள்ளது.

                விஜய்

                சென்னையில் மட்டும் முதல் நாளில் ரூ. 1.21 கோடியும் 2-ம் நாளில் ரூ.1.05 கோடியும் என மொத்தம் ரூ. 2.26 கோடி வசூல் ஆகி இருக்கிறது. தமிழ்நாடு முழுக்க முதல் நாள் ரூ.25 கோடியும் இரண்டாம் நாள் ரூ.18 கோடியும் தொட்டுள்ளது. 2 நாட்களில் வசூல் தொகை ரூ.43 கோடியை தாண்டியுள்ளது.

                இந்த வசூல் தொடர்ந்தால் வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் 5 நாட்களில் தமிழக வசூல் ரூ.100 கோடியை தொடும் என்று திரையரங்கு அதிபர்கள் கூறியுள்ளனர். விஜய்யின் படங்களுக்கு தமிழ் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் பெரும் வரவேற்பு இருக்கும். தெலுங்கில் வெளியான மாஸ்டர் படம் முதல் நாளே ரூ.5.74 கோடியை வசூலித்தது. அடுத்த வாரத்துக்குள் மாஸ்டர் படம் பெரிய வசூல் சாதனை படைக்கும் என்று திரையுலகம் எதிர்பார்க்கிறது

                Posted in சினிமா

                நடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பு – திரையுலகினர் ஏமாற்றம்

                நடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பு – திரையுலகினர் ஏமாற்றம்

                முதல்வரிடம் நடிகர் விஜய் விடுத்த கோரிக்கை ஏற்கப்படாததால் திரையுலகினர் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

                நடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பு – திரையுலகினர் ஏமாற்றம்
                விஜய்


                கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலை மாற்றி 100 சதவீத

                இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்க அனுமதிக்க வேண்டும் என்று நடிகர் விஜய் சமீபத்தில் முதல்வரை சந்தித்தபோது வேண்டுகோள் விடுத்தார்.

                இந்நிலையில், ஊரடங்கை கூடுதல் தளர்வுகளுடன் ஜனவரி 31 வரை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அறிவிப்பு வெளியிட்டார். அதில், சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளில்,

                பணியாற்றும் பணியாளர்கள் எண்ணிக்கைக்கு உச்ச வரம்பு இல்லை என்ற புதிய அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார். ஆனால்,

                திரையரங்குகளில் அனுமதிக்கப்படும் இருக்கைகள் எண்ணிக்கை 50 சதவீதம் என்ற நிலையே நீடிக்கிறது.

                எடப்பாடி பழனிச்சாமி, விஜய்

                ஊரடங்கு நீட்டிப்பு உத்தரவின்போது, தியேட்டர்கள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்படும் என்றும்,

                ‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து ஒவ்வொரு திரைப்படமாக வெளியிடலாம் என்றும் திரைத்துறையினர் எண்ணியிருந்தனர்

                . இந்த நிலையில், விஜய் விடுத்த கோரிக்கை ஏற்கப்படாததால் திரையுலகினர் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

                Posted in சினிமா

                எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு

                எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு

                சென்னையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விஜய் சந்தித்து பேசினார்.

                விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ்

                ஆக உள்ளது. ஜனவரி 13ல் படத்தை தியேட்டர்களில் திரையிட படக்குழு முடிவு திட்டமிட்டுள்ளது.

                இந்நிலையில், நடிகர் விஜய் மற்றும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர்

                லலித்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர்.

                இந்த சந்திப்பின்போது, தியேட்டர்களில் பார்வையாளர்கள் அனுமதியை

                50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அதிகரிக்கும்படி கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

                Posted in உலக செய்திகள் சினிமா

                விஜய், புதிய யூடியூப் சேனல் தொடங்க இருப்பதாக அறிவிப்பு

                மக்கள் இயக்கத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விஜய்

                தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், புதிய யூடியூப் சேனல் தொடங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

                பிரபலங்கள் பலர் தங்களின் பெயரில் ட்விட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் கணக்குகள் தொடங்குவது போல யூடியூப் சேனலும்

                தொடங்கி நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது உதயமாகவுள்ளது நடிகர் விஜயின் யூடியூப் சேனல்.

                விஜய் மக்கள் இயக்கம் பெயரில் ஒரு யூடியூப் சேனலைத் தொடங்குகிறார் நடிகர் விஜய். விஜய் தொடர்பான அறிவிப்புகள்

                அனைத்தும் இனி அந்த சேனலில்தான் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

                விஜய்

                விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் இந்த சேனல் தொடங்கப்படுவது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக

                அறிவித்துள்ளார். விஜய் மக்கள் இயக்கத்தின் நற்பணிகள் அனைத்தையும் அந்த சேனலில் வெளியிட்டு பரப்புவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

                Posted in சினிமா முக்கிய செய்திகள்

                அரசியல் கட்சி தொடங்கிய விஜய் – சூடாகும் தமிழகம்

                அரசியல் கட்சி தொடங்கிய விஜய் – சூடாகும் தமிழகம்

                இளையதளபதி நடிகர் விஜய் அவரது பெயரில் அவரது தந்தை

                சந்திரசேகர் புதிய அரைசியல் கட்சி ஒன்றை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார்

                ரஜனி ,கமல் ,விஷால் ,என பலர் காட்சிகளை தொடங்கிய நிலையில்

                விஜய் இதே ஆடு களத்தில் இப்பொழுது குதித்திருப்பது பெரும் பர பரப்பை கிளப்பியுள்ளது

                ரஜனி ,கமல் சீமானுக்கு எதிராக விஜய் களத்தில் ,அரசியலுக்கு நுழைந்ததினால்

                அவரது திரைப்பயணம் பாதிக்குமா ..? காணாமல் போவாரா எதிர்காலம் தான் அந்த பதிலை சொல்ல வேண்டும்

                Posted in சினிமா

                நாடு வந்த மகன் – மகிழ்ச்சியில் விஜய்

                கனடாவில் பிலிம் மேக்கிங் படித்துவந்த நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ஒருவழியாக நாடு திரும்பி உள்ளார்.

                ஒரு வழியாக நாடு திரும்பிய மகன்…. உற்சாகத்தில் விஜய்
                ஜேசன் சஞ்சய், விஜய்


                நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் கனடாவில் பிலிம் மேக்கிங் படித்து வந்தார். கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் லாக்டவுன் போடப்பட்டதால், தாயகம் திரும்ப முடியாமல் சஞ்சய்

                கனடாவிலேயே சிக்கி தவித்தார். மகன் தனியே வெளிநாட்டில் இருப்பதால் விஜய் குடும்பமே மிகுந்த வருத்தத்தில் உள்ளதாக செய்திகள் வெளியாகின.

                இந்நிலையில், விஜய்யின் மகன் சஞ்சய், ஒரு வழியாக நாடு திரும்பிவிட்டார். விமானம் மூலம் சென்னைக்கு வந்த சஞ்சய்,

                நட்சத்திர ஹோட்டலுக்கு சென்று தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட பின்னர்

                நேற்று முன்தினம் தன் பெற்றோரை பார்க்கச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. மகன் நாடு திரும்பியதால் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் உற்சாகம் அடைத்துள்ளனர்.

                விஜய்
                விஜய்
                    Posted in சினிமா

                    நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்-போலீசார் குவிப்பு

                    நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்-போலீசார் குவிப்பு

                    சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜயின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

                    நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
                    நடிகர் விஜய்

                    நடிகர் விஜய் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

                    இந்நிலையில், நேற்று இரவு காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு

                    கொண்ட மர்ம நபர் நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு உள்ளதாக மிரட்டல் விடுத்தார்.

                    அந்த மிரட்டல் அழைப்பை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் நடிகர் விஜயின் வீட்டிற்கு நள்ளிரவு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

                    இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் ஒரு புரளி என தெரியவந்தது.

                    இதையடுத்து காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு

                    வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.

                    அதில் விழுப்புரத்தை சேர்ந்த நபர் ஒருவர் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு

                    கொண்டு நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு உள்ளது என பொய்யான

                    மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
                    மேலும், மிரட்டல் விடுத்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

                        Posted in சினிமா

                        விஜய் பிறந்தநாளுக்கு வித்தியாசமாக வாழ்த்து கூறிய கீர்த்தி சுரேஷ்.

                        விஜய் பிறந்தநாளுக்கு வித்தியாசமாக வாழ்த்து கூறிய கீர்த்தி சுரேஷ்.

                        நடிகர் விஜய்யின் பிறந்தநாளுக்கு வித்தியாசமாக வாழ்த்து கூறி அசத்தி இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

                        விஜய் பிறந்தநாளுக்கு வித்தியாசமாக வாழ்த்து கூறிய கீர்த்தி சுரேஷ்
                        விஜய் – கீர்த்தி சுரேஷ்


                        தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் இன்று தனது 46-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவருக்கு

                        திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலரும் சமூகவலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

                        இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ், விஜய்க்காக குட்டி ஸ்டோரி பாடலை வயலின் வாசித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

                        கீர்த்தி சுரேஷ்

                        விஜய்யும் கீர்த்தி சுரேஷும் இணைந்து பைரவா மற்றும் சர்கார் படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார்கள்.

                            Posted in சினிமா

                            விஜய்யை பார்த்து பொறாமைப்பட்டார் அஜித்

                            விஜய்யை பார்த்து பொறாமைப்பட்டார் அஜித்

                            விஜய்யை பார்த்து அஜித் பொறாமைப்பட்டார் என்று பிரபல பாடகி

                            சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

                            விஜய்யை பார்த்து பொறாமைப்பட்டார் அஜித் – பிரபல பாடகி
                            நடிகர்கள் அஜித், விஜய்


                            விஜய் மற்றும் அஜித் இருவரும் தமிழ் திரையுலகில் மாஸ் நடிகர்களாக,

                            வலம் வருகின்றனர். தங்களுக்குள் நல்ல நட்பைப் பகிர்ந்து

                            கொள்ளும் இருவரும் ‘ராஜாவின் பார்வையில்’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

                            அதன் பின்னர் இரண்டு நடிகர்களும் தங்களது தனி பாதையில் பயணித்து,

                            தொழில்துறையில் புதிய உயரங்களை எட்டி வருகின்றனர்.பாடகி சுசித்ரா

                            தற்போது பிரபல பாடகி சுசித்ரா சமீபத்திய பேட்டியில் வெளிப்படுத்திய

                            ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய்க்கு படங்கள்

                            மட்டும் அல்லாது படங்களில் இடம்பெறும் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை

                            பெறுவது வழக்கம். இதற்காக விஜய் மீது அஜித் பொறாமை கொண்டதாக அவர் கூறியுள்ளார்.