Tag: ரணில்
நாட்டின் பாதுகாப்பு உறுதி ஜனாதிபதி ரணில்
நாட்டின் பாதுகாப்பு உறுதி ஜனாதிபதி ரணில்
நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக உயிர்த்த ஞாயிறு தினச் செய்தியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் தனது உயிர்த்த ஞாயிறு தினச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் வலி உங்கள் மனதில் இன்னும் வடுவாக இருக்கிறது என்பதை நான் நன்கு அறிவேன். அந்த துரதிஷ்டவசமான சம்பவம் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, அந்தப் பணிகளை எந்தவொரு தலையீடும் இன்றி
சுயாதீனமாகவும் பக்கச்சார்பற்றதாகவும் முன்னெடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கத் தேவையான பின்னணியை அமைத்துள்ளோம் என்பதையும் நான் நினைவுகூருகின்றேன்.
எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதவாறு, நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
#ethirinews #srilankanews #செய்திகள்
Featured
டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த ஜனாதிபதி
டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த ஜனாதிபதி
நான்காவது மற்றும் ஐந்தாவது தொழிற்புரட்சிகளில் உள்ள புதிய தொழில் நுட்பத்துடன் கலந்த டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த தேவையான நவீன தொழில்நுட்பத்தை இலங்கையின் கைத்தொழில்களில் அறிமுகம்
செய்து நாட்டிலுள்ள கைத்தொழில் கல்வி மற்றும் பயிற்சி வாய்ப்புகளை மேம்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் இலங்கையில் நடத்தப்படவுள்ள “புதிய டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி” தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல் நேற்று (25) பிற்பகல்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே ஜனாதிபதி மேற்படி தெரிவித்தார்.
இந்த நாட்டில் உள்ள தொழில்களை புதிய தொழில்நுட்பத்துடன் இணைந்த டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு மாற்றுவதனை எவ்வாறு ஊக்குவிப்பது என்பதனை அடையாளங்காண்பதன் மூலம், தற்போதைய நெருக்கடியை
வெற்றிகொள்ளவும் , உற்பத்தி மற்றும் செயல்திறனை மேம்படுத்தவும் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது போன்ற விடயங்களை கண்டறிவதே இந்தக் கண்காட்சியின் முக்கிய நோக்கமாகும்.
மேலும் நவீன தொழில்நுட்பத்துடன் இணைந்து ஒரு ஏற்றுமதி மையமாக இலங்கையை மாற்றுதல், சேவை மற்றும் ஏற்றுமதி துறைகளில் நேரடி அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கும் நிலையை ஏற்படுத்துதல்,உள்நாட்டுக்
கைத்தொழிலுக்காக சிறந்த சர்வதேச நடைமுறைகளைக் கொண்டு வருதல் மற்றும் முன்னணி தொழில்துறையினருடன் வலையமைப்பை ஏற்படுத்துதல் என்பன இதன் ஊடாக எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த ஜனாதிபதி
சைபர் பௌதீக கட்டமைப்பு (Cyber-Physical Systems), இணையத் தகவல் ( (Internet of Things), இணைய சேவைகள் (105), ரோபோ தொழில்நுட்பம் ((Robotics), பாரிய தரவு (Big Data), கிளவுட் கணனி மற்றும் உற்பத்தி (Cloud Computing &
Manufacturing), மேம்படுத்தப்பட்ட யதார்த்தம்(augmented reality) மேம்படுத்தப்பட் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) போன்ற தொழில் நுட்பங்கள்
தொடர்பில் கவனம் செலுத்தி இந்த புதிய டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் தொழில்துறை துறையில் நவீன தொழில்நுட்ப கருவிகள் என்பன இந்தக் கண்காட்சி ஊடாக அறிமுகம் செய்யப்படவுள்ளன.
பல்வேறு துறைகளினூடாக டிஜிட்டல் பொருளாதார அபிவிருத்தியை அடைவதன் ஊடாக நாடளாவிய ரீதியில் உள்ள சமூகப்படித்தரங்களைச் சேர்ந்த இனக் குழுக்களுக்கு பொருளாதார நன்மைகளை வழங்கி, அதன் ஊடாக சமூகத்தை வலுப்படுத்துவது குறித்தும் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
இந்தக் கண்காட்சியின் ஏற்பாடுகள் யாவும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தலைமையில் நிதி, வெளிவிவகாரம், கைத்தொழில்,
கல்வி, போக்குவரத்து, வர்த்தகம், விவசாயம் உள்ளிட்ட 13 அமைச்சுக்களின் பிரதிநிதிகள் அடங்கிய வழிநடத்தல் குழுவினால் முன்னெடுக்கப்படும்.
தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் உள்ளிட்ட தொடர்புள்ள அமைச்சுக்களின் செயலாளர்கள், ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, இலங்கை
முதலீட்டுச் சபை, வர்த்தக சம்மேளனம் மற்றும் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல்தொழில்நுட்ப முகவர் நிறுவனம் மற்றும் தனியார் துறையின் பிரதிநிதிகள் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி தைப் பொங்கல் வாழ்த்து செய்தி
ஜனாதிபதி தைப் பொங்கல் வாழ்த்து செய்தி
பொருளாதார வளத்துடன் நாட்டை மீளக் கட்டியெழுப்பவும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவது மிகவும் அவசியமாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் தைப் பொங்கல் வாழ்த்து செய்தியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்,
சுபீட்சத்துக்கான பிரார்த்தனைகளில் ஈடுபடும் வகையில் இந்துக்களினால் முன்னெடுக்கப்படும் சடங்குகள்,
காலங்காலமாக இலங்கைச் சமூகத்துடன் பின்னிப் பிணைந்திருக்கிறது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தைப் பொங்கல் வாழ்த்து செய்தி
உற்பத்தித்திறன் மற்றும் செழுமையையும் குறிக்கும் இந்த ‘தைப் பொங்கல்’ தினத்தில்,
இலங்கையர்களாகிய நாம் அரசாங்கத்தின் புதிய பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்த
வேலைத்திட்டத்திற்கு பங்களிக்கவும்,
பொருளாதார வளத்துடன் நாட்டை மீளக் கட்டியெழுப்பவும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன்
செயற்படுவது மிகவும் அவசியமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தைப் பொங்கல்’ கொண்டாட்டம், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நோக்கிய பயணத்திற்கு
ஆசீர்வாதங்களை வழங்கட்டும். ‘பொங்கலின்’ ஆவி மற்றும் மரபுகளுக்கு அமைவாக,
இலங்கை மக்கள் செழிக்க வெற்றி நிரம்பி வழியட்டும் என்றும் ஜனாதிபதி
தைப் பொங்கல் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் அதிகாரிகளுக்கு பிறப்பித்த அவசர உத்தரவு
ஜனாதிபதி ரணில் அதிகாரிகளுக்கு பிறப்பித்த அவசர உத்தரவு
எல்ல சுற்றுலா வலயத்தை பாரிய திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்வதற்கு துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
சுற்றுலா அமைச்சு, நகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சு ஆகியன இணைந்து 4 மாதங்களுக்குள் அதற்கான திட்டத்தை தயாரித்து தன்னிடம் ஒப்படைக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
எல்ல வர்த்தகர்கள் சங்கத்துடன் இன்று (16) முற்பகல் நடந்த கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
எல்ல சுற்றுலா வலயத்தை முறையாகவும், திட்டமிட்ட வகையிலும் மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ரம்மியமான இயற்கைக்கு பங்கம் ஏற்படாத வகையில் நிர்மாணப் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
முதற்கட்டமாக எல்ல சுற்றுலா வலயம் முறையான திட்டத்துடன் அபிவிருத்தி செய்து, அதன் பின்னர் ஊவா மாகாணம் முழுவதையும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த இடமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் அதிகாரிகளுக்கு பிறப்பித்த அவசர உத்தரவு
இதன்போது, எல்ல பிரதேசத்திற்கு வருகை தந்திருந்த உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பணிகளின் சுற்றுலா அனுபவங்களைக் கேட்டறிந்த ஜனாதிபதி, சுற்றுலாப் பணிகளுடன் சிநேகபூர்வமாக உரையாடினார்.
எல்ல வர்த்தகர்கள் சங்கத்துடன் நடந்த கலந்துரையாடலில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
எல்ல என்பது இப்பகுதி மக்களால் உருவாக்கப்பட்ட ஒரு சுற்றுலாப் பிரதேசம். அது இப்போது இலங்கையின் பொருளாதாரத்திற்குப் பெருமளவில் பங்களிக்கிறது.
புதிய, பாரிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், இந்த சுற்றுலாப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கிறோம். இங்கு எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு குறுகிய காலத் தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று, மாலைத்தீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஒரு நாளைக்கு சுமார் 500 டொலர்களை செலவிடுகிறார்கள்.
ஆனால் எல்ல பிரதேசத்திற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஒரு நாளைக்கு இருபது டொலர்களையே செலவிடுகின்றனர். இந்த நிலையை நாம் மாற்ற வேண்டும்.
சுற்றுலாத்துறையை மேம்படுத்த பயிற்சி பெற்ற பணியாளர்கள் தேவை. அனுபவம் வாய்ந்த சுற்றுலாத் தொழிலாளர்கள் கடந்த கொரோனா தொற்றினால் ஏற்பட்ட நெருக்கடியின் போது நாட்டை விட்டு வெளியேறினர். அவர்கள் மிகவும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள்.
500 டொலர்களை செலவழிக்கும் சுற்றுலாப் பயணிகள், நல்ல சேவையை எதிர்பார்க்கிறார்கள்.
அந்த சேவையை வழங்க பயிற்சி பெற்ற ஊழியர்கள் தேவை. இந்த விரிவான அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சிறந்த சுற்றுலா சேவையை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் ஊவா மாகாணத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் குறைந்தது 07 நாட்களுக்கு இங்கு தங்கியிருக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும்.
கிழக்கு மாகாணத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை அதன் பின்னர் எல்லவுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
இந்த புதிய அபிவிருத்தித் திட்டத்தில் மத்தள விமான நிலையத்தை அபிவிருத்தி செய்து மத்தளவிலிருந்து நேரடியாக எல்லவுக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்து வரும் வேலைத்திட்டம் உள்ளடக்கப்பட வேண்டும்.
இந்த திட்டங்கள் குறுகிய கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகின்றன.
மேலும், சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்வதுடன், இந்த நாட்டில் வங்கித் துறையும் வீழ்ச்சியடையாமல் பாதுகாக்க வேண்டும். வங்கிக் கட்டமைப்பு நிலைகுலைந்தால், சுற்றுலாப் பயணிகள் நமது நாட்டிற்கு வர மாட்டார்கள்.
எனவே, இரண்டு துறைகளையும் பாதுகாக்க வேண்டும். சுற்றுலாத் துறையையும் வங்கித் துறையையும் பாதுகாக்கும் வேலைத்திட்டம் அரசாங்கத்திடம் உள்ளது.
நாம் அதனை நிறைவேற்றுவோம். அதற்காக ஒத்துழைக்குமாறு உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எல்ல வர்த்தகர்களால் முன்வைக்கப்பட்ட பல பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுத்தமைக்காக ஜனாதிபதிக்கு,
வர்த்தகர்கள் தமது பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
தமிழர் பிரச்சனையை தீர்க்க அனைத்து காட்சிகளை அழைக்கும் ரணில்
தமிழர் பிரச்சனையை தீர்க்க அனைத்து காட்சிகளை அழைக்கும் ரணில்
இலங்கையில் தமிழர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண ,அனைத்து காட்சிகளையும் ஒன்றிணையுமாறு ,ரணில் விக்கிரமசிங்கா அழைப்பு விடுத்துள்ளார் .
இவர்களது பிரச்சனைகளை தீர்த்தால் மட்டுக்மே நாட்டை கட்டி எழுப்ப முடியும் என ரணில் தெரிவித்துள்ளார் .
தேர்தலை மையமாக வைத்து ரணில் விக்கிரமசிங்கா இவ்விதமான குண்டை போடுவதாக எதிர் பார்க்க படுகிறது .
தீர்வுக்கு முன்னர் விதிக்க பட்டுள்ள பயங்கரவாத சட்டங்கள் நீக்க படவில்லை .இராணுவம் பொது இடங்களில் இருந்து
அகற்ற படவில்லை, இவ்வாறான நிலையில் ,இவரது அழைப்பு ஏமாற்று வேலை ஒன்று என்றே நோக்கலாம்.
ரணில் தமிழ்கட்சிகள் பேச்சு தமிழருக்கு தீர்வு
ரணில் தமிழ்கட்சிகள் பேச்சு தமிழருக்கு தீர்வு
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா மற்றும் தமிழ் கட்சிகள் யாருடனும் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார் .
இந்த சந்திப்பில் தமிழர்கள் அரசியல் தீர்வு தொடர்பாக பேசப்படவுள்ளது .
தமிழ் மக்களை மறந்து தமது பைகளை நிரப்பும் நோக்குடன் செயல்படும் தமிழ் காட்சிகளை ,ரணில் சந்தித்து பேசுவது ,கண்துடைப்பு நாடகம் என நோக்க படுகிறது .
நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம் ரணில்
நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம் ரணில்
நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் இளைஞர்களின் பங்களிப்பு அத்தியாவசியமானதென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
இத்தீர்வு அடுத்த 25 வருடங்களை கருத்திற் கொண்டதாக அமைய வேண்டுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைக்கும் அப்பால் சென்று இளைஞர்களின் எதிர்காலத்துக்காக
நாட்டைத் தயார்படுத்த தான் தீர்மானித்திருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இளைஞர் சந்ததியினருக்கு உதவும் வகையில் அடுத்த 25 ஆண்டுகளுக்குப் பொருந்தும் வகையில்,
டிஜிட்டல் அபிவிருத்தியுடன் கூடிய எதிர்காலத்திற்கு ஏற்ற தீர்வுகள் குறித்தே நாம் கவனத்திற் கொள்ள வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டார்.
அதற்கமைய நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிக்கு தீர்வு காணும் முகமாக மேற்பார்வைக் குழுக்களுக்கு இளைஞர்களை நியமிப்பதற்கு அவசியமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மாவட்டம் 306 சி2 ,இன் லியோ ஆட்சேர்ப்பு மற்றும் லியோ தின கொண்டாட்ட நிகழ்வுகள் இன்று (11) முற்பகல் கொழும்பு ரோயல் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நாடு முழுவதுமிருந்து 6,500 புதிய வியோக்கள் சங்கத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டனர். இதில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி இங்கு மேலும் உரையாற்றுகையில்,
2023 ஆம் ஆண்டில் கொண்டாடப்படவுள்ள 75வது சுதந்திர தின நிகழ்வுடன் இணைந்ததாக இளைஞர்களுக்கான
தேசிய அடித்தளமொன்று உருவாக்கப்பட்டிருப்பதாகவும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக இளைஞர்களை
அதில் இணைந்து கொள்ளுமாறும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.
உலகளாவிய நெருக்கடியான காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்தைக் கருத்திற்கொண்டு,
நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம் ரணில்
அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட காலநிலை மாற்றம் தொடர்பான நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதன்
மூலம் அர்த்தமுள்ள செயல்பாட்டுக்கு வழிவகுக்குமாறும் ஜனாதிபதி இளைஞர்களைக் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் லியோ இந்துனில் உதார பளிஹவதன, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
அவர்களுக்கும் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவுக்கும் நினைவுச் சின்னங்களைப் பரிசளித்தார்.
மேலும் லியோ உறுப்பினர்களுக்கான விருதுகளையும் ஜனாதிபதி இதன்போது வழங்கி வைத்தார்.
கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க, கொழும்பு ரோயல் கல்லூரி அதிபர் எம்.வி.எஸ் குணதிலக்க,
முன்னாள் மாவட்ட ஆளுனர் லயன் லசந்த குணவர்தன, மாவட்ட ஆளுநர் லயன் பெனட் கமலத் மற்றும் கொழும்பு ரோயல் கல்லூரியின்
மாணவத் தலைவன் லியோ கவீஷ ரத்நாயக்க ஆகியோரும் இந்நிகழ்விலல் கலந்து கொண்டனர்.
மனித உரிமைகள் என்ற போர்வையில் அராஜகங்களுக்கு இடமளிக்க முடியாது
மனித உரிமைகள் என்ற போர்வையில் அராஜகங்களுக்கு இடமளிக்க முடியாது
மனித உரிமைகள் என்ற போர்வையில் வன்முறை மற்றும் அராஜகங்களுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அதற்கான முயற்சியில் ஈடுபடும் எத்தரப்பினரையும் முற்றாக ஒடுக்குவதற்கு பாதுகாப்புப் படை பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
இவ்வாறான சூழ்நிலையில் இராணுவத்தின் கீழ்நிலை அதிகாரி முதல் பீல்ட் மார்ஷல் வரை அனைவரும் தமது பொறுப்பை நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளனர் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நேற்று (24) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி பாராளுமன்றத்தில் மேலும் கருத்து தெரிவிக்கையில் –
இந்த விடயத்தைப் பற்றி பேசுவதற்கு முன், நான் நேற்று குறிப்பிட்ட இரண்டு விடயங்களை ஞாபகமூட்ட வேண்டும். ஜனாதிபதியின் மனதில் மூன்று வித அச்சங்கள் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் கூறினார். ஒரு நபருக்கு மூன்று வித அச்சம் ஏற்பட முடியாது என்பதை நான் உங்களுக்கு கூற விரும்புகிறேன். விசாலா நகரில் தான் மூன்று வித அச்சம் ஏற்பட்டது. நோய் பற்றிய அச்சம், அமானுஷ்ய அச்சம், மரண அச்சம் என்பன ஒரு சமூகத்தில் ஏற்படலாம். அந்த விடயத்தை தெளிவுபடுத்த ரதன சூத்திரத்தைக் கேட்கும்படி கேட்டுக்கொள்கிறேன். ஒரு மனிதனுக்கு எப்போதும் மூன்று வித அச்சங்கள் ஏற்படுவதில்லை. மரிக்கார் பயம் இருந்தாலும், ஹிருணிகா பயம் இருந்தாலும், ரோசி பயம் இருந்தாலும் அது மூன்று வித அச்சம் ஆகாது.
மேலும், போராட்டத்திற்கு புண்ணியம் கிடைக்க, ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்த ரணில் விக்ரமசிங்க இன்று போராட்டத்தை அடக்குகிறார் என நண்பர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
மனித உரிமைகள் என்ற போர்வையில் அராஜகங்களுக்கு இடமளிக்க முடியாது
போராட்டத்தின் புண்ணியத்தால் அல்ல, இந்த நாட்டின் ஜனாதிபதி போனால், பிரதமர் அந்தப் பதவியை ஏற்க வேண்டும். அதுமட்டுமன்றி சட்டப்படி நான்தான் பதில் ஜனாதிபதியாக இருக்க வேண்டும். இதிலிருந்து வெளியேறுமாறு கூறி எனது வீட்டுக்குத் தீ வைத்தார்கள். ஆனால் நான் விலகவில்லை, அதனால்தான் நான் இங்கே இருக்கிறேன்.
எமது எதிர்க்கட்சித் தலைவர், நான் இந்த ஜனாதிபதிப் பதவியை கேட்டு வாங்கியதாக, இன்று கூறினார். நான் இதைக் கேட்கவில்லை. நாட்டின் சூழ்நிலை காரணமாக இதை ஏற்றுக்கொண்டேன்.
மகாநாயக்க தேரர்கள் என்னிடம் வேண்டுகோள் விடுத்தார்கள். நானாக போய் கேட்கவில்லை. நான் கடிதங்கள் எழுதவில்லை. கடந்த மே மாதம் 12ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் அனுப்பிய கடிதத்தை அவர் இன்று மறந்து விட்டார்.
“ஜனாதிபதி அவர்களே, எதிர்க்கட்சியின் பிரதான கட்சியாக மக்கள் சக்தி கூட்டணியின் தலைமையில் குறுகிய கால அரசாங்கத்தை அமைப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவர் என்ற முறையில் பிரதமர் பதவியை ஏற்க நான் தீர்மானிக்கின்றேன்.” என அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். எனது உரையின் பின்னர், இந்த முழு கடிதத்தையும் ஹன்சார்டில் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கோட்டாபய ராஜபக்சஷ எதிர்க்கட்சித் தலைவரின் ஆலோசனையைப் பெற்றுக்கொண்டார். வேண்டுமானால் கட்சி யாப்பில் பார்க்கலாம். ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படலாம். என்னைக் குறை சொல்ல வேண்டாம் அவர்தான் கூறினார், குறைந்தபட்ச காலக்கெடுவுக்குள் ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ய ஒப்புக்கொண்டார்.
எனவே நான் சத்தியப்பிரமாணம் செய்து 02 மாதங்களுக்குப் பின்னர் அவர் பதவியில் இருந்து வெளியேறினார். நீங்கள் தான் அவரைப் போகச் சொன்னீர்கள், நான் அல்ல. அதற்கு நான் என்ன செய்வது?
இராணுவம் பற்றி பேசும் போது இராணுவத்தின் செலவு அதிகரித்துள்ளதாக சிலர் கூறினர். சிலரது கருத்துப்படி இராணுவத்தின் செலவை 24 மணி நேரத்தில் குறைக்க முடியாது. ஒரே நேரத்தில் 25,000 இராணுவ வீரர்களை வீதியில் விட முடியாது. நாங்கள் இப்போது ஒரு திட்டத்தை உருவாக்குகிறோம்.
அதன்படி செயற்பட வேண்டும். இம்முறை அதிக செலவுகளை இராணுவம் ஏற்க வேண்டியிருந்தது. அதை நம்மால் தடுக்க முடியாது. படையினரின் எண்ணிக்கை குறைந்தாலும் பதவி உயர்வுகள் அதிகரித்துள்ளன. இது போன்ற விடயங்களும் இதில் தாக்கம் செலுத்தியுள்ளன.
மனித உரிமைகள் என்ற போர்வையில் அராஜகங்களுக்கு இடமளிக்க முடியாது
இப்போது உணவுப் பாதுகாப்பு திட்டங்களுக்காக இராணுவத்தை நாம் களமிறக்கியுள்ளோம்.
அத்துடன் இராணுவப் பண்ணைகள் மூலம் எமக்கு நிறைய வருமானம் கிடைக்கின்றது. அந்தப் பொருட்களின் போக்குவரத்துக்கு, தேவையான அளவு இராணுவத்தை பயன்படுத்துமாறும் கூறியுள்ளேன். இராணுவத்தின் எதிர்காலம் குறித்து நாம் சிந்திக்க வேண்டும். அதற்காக ““Defense 2030″” என்ற அறிக்கையின்படி செயல்படுகிறோம். நமது பாதுகாப்பை நாம் திட்டமிட வேண்டும்.
உலகில் அச்சுறுத்தல் இல்லை என்று சொல்ல முடியாது. இந்த நிலைமைகள் மாறி வருகின்றன. 1971 இல் இருந்த அச்சுறுத்தல் அல்ல, 80களிலும் ஈஸ்டர் ஞாயிறன்றும் நடந்தது. இந்த அச்சுறுத்தல்கள் வெவ்வேறு வழிகளில் நடக்கின்றன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
மேலும் பூகோள அரசியல் எம்மை மையப்படுத்தியுள்ளது. அதில் அனைத்து பெரும் வல்லரசுகளும் தலையிட்டுள்ளன. எனவே நாம் இந்து சமுத்திரம் குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 2030-க்குள் நமது கடற்படையை அதிகரிக்க வேண்டும்.இராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறைவடையக்கூடும். விமானப்படையை அதிகரிக்க வேண்டும். ட்ரோனர் தொழில்நுட்பம் தேவை. 2040 இல் இத்தேவை இன்னும் அதிகரிக்கும். இதை எப்படி தொடர்வது என்று நாம் பார்க்க வேண்டும்.
நமது பாதுகாப்புச் செலவைக் குறைத்து அதனை 3% – 4% அளவில் பராமரிக்க வேண்டும். நம்மால் முடிந்தால், நமது பொருளாதார வளர்ச்சியை 8%க்கு கொண்டுவர வேண்டும். அப்போது எம்மிடம் போதுமான நிதி இருக்கும். சிங்கப்பூரில் பல ஆண்டுகளாக 8% பொருளாதார வளர்ச்சியை தக்க வைத்திருந்ததன் காரணமாகவே அவர்களால் இந்நிலைமைக்கு வரமுடிந்துள்ளது. நாம் புதிதாக சிந்திக்க வேண்டும். பழைய முறையில் சிந்திப்பதால் இவற்றைச் செய்ய முடியாது.
அத்துடன் இராணுவத்தில் இருந்து வெளியேறுபவர்கள் சமூகப் பணிகளுக்குப் பங்களிக்க வாய்ப்பளிக்க வேண்டும். தொழில்துறை சார்ந்தோர் இன்று நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.
நமது இராணுவத்தில் உள்ளவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை அந்த இடங்களுக்கு அனுப்புவதன் மூலம் அதனால் உருவாகும் இடைவெளியை நிரப்ப முடியும். அதனால்தான் இராணுவப் பணியில் ஓய்வு பெறும் வயதை 22 இலிருந்து 18 ஆகக் குறைத்துள்ளோம். மற்றவர்களுக்கு இதனால் எந்தப் பிரச்சினையும் இல்லை. நாம் இவற்றை புதிதாக திட்டமிட வேண்டும். நாம் புதிதாக சிந்திக்க வேண்டும்.
இலங்கையில் புதிய போர்க்கப்பலைத் தயாரிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அந்தப் பலம் நம்மிடம் உள்ளது. பணத்தை மட்டுமே திரட்டிக்கொள்ள வேண்டும்.
பிரித்தானியா 2035 வரை தமக்கு அவசியமான திட்டங்களை வகுத்திருப்பதைக் கண்டேன். நாம் புதிய சட்டங்களைக் கொண்டு வர வேண்டும். நாம் பாதுகாப்பு சபையை சட்டப்படி நிறுவுவோம். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி மற்றும் தேசிய பாதுகாப்புச் செயலகம் ஆகியவற்றையும் நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோன்று, அந்த அதிகாரிகளுக்காக முப்படைக் குழுவொன்றையும் நியமிப்போம். இவற்றை கலந்துரையாடி இந்த சபையில் முன்வைக்கிறேன்.
புதியதாக நல்லதொரு இராணுவத்தை இலங்கையில் உருவாக்க விரும்புகிறோம். இதை செயற்படுத்த, வேகமாக வளர்ச்சியடையும் பொருளாதாரம் ஒன்று தேவப்படுகிறது.
அதேபோன்று, நாம் பொலிஸ் பிரிவு தொடர்பாகவும் கவனம் செலுத்தியுள்ளோம். அடுத்த 10 ஆண்டுகளில் பொலிஸ் பிரிவை எவ்வாறு மேம்படுத்துவது என்பதை அறிய “பொதுப் பாதுகாப்பு அறிக்கை” ஒன்றை பெற்றுக்கொள்ளவுள்ளோம். அது குறித்து அமைச்சரிடம் தெரிவித்தேன்.
தற்போது பொலிஸ் கட்டளைச் சட்டம் அருங்காட்சியகத்திற்கு அனுப்ப வேண்டிய நிலையில் உள்ளது.
தற்போது கட்டளைச் சட்டம் ஒன்றை தயாரிப்பதற்காக நாம் ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.
போதைப்பொருள், ஆட்கடத்தல் போன்ற பல பிரச்சினைகள் இன்று உள்ளன. இவற்றிலிருந்து நாட்டை பாதுகாத்தபடி நாம் முன்னேற வேண்டும்.
அன்றைய தினம் இந்த பாராளுமன்றத்தை வன்முறையாளர்களிடமிருந்து பாதுகாக்க உழைத்த அனைத்து இராணுவ வீரர்களுக்கும் நான் குறிப்பாக நன்றி கூற விரும்புகிறேன். அன்று அவர்கள் இல்லாவிட்டால் இன்று இந்த நாட்டில் பாராளுமன்றமே இருந்திருக்காது. இப்படி உட்கார்ந்து கலந்துரையாட முடியாமல் போயிருக்கும்.
இறைமை மக்களுக்கே உரியது என்று எமது அரசியலமைப்பின் 03 ஆவது சரத்து கூறுகிறது. சட்டமியற்றும் அதிகாரம், நிறைவேற்று அதிகாரம், நீதித்துறை அதிகாரம், சமயம், அடிப்படை உரிமைகள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை 04வது பிரிவு விளக்குகிறது . மேலும், மக்கள் நேரடியாக பங்கேற்கும் ஒரே வாய்ப்பு தேர்தல்தான். யாருக்கும் வீதியில் இறங்கி பிரச்சினைகளை ஏற்படுத்த முடியாது. வன்முறைக்கு இடமில்லை. இராணுவம் இருப்பது இந்த சட்டங்களைப் பாதுகாக்கவே ஆகும்.
அரசாங்கங்கத்தைக் கவிழ்க்க வரும்போது இராணுவம் ஒதுங்கி நிற்க முடியாது. எமது மகாநாயக்க தேரர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும்போது எம்மால் அமைதியாக இருக்க முடியாது.
அரசியலமைப்பின் 09 ஆவது சரத்தின் பிரகாரம் அவர்களைத் தடுக்கும் அதிகாரம் இராணுவத்தினருக்கு உண்டு. இதுபோன்ற வன்முறைச் செயல்களுக்கு இடமளிக்க முடியாது. மதகுருமார்களை வைத்து குழப்பத்தை ஏற்படுத்துவதை நிறுத்த வேண்டும். இதை அனுமதிக்க நான் ஒருபோதும் விரும்பவில்லை.
இன்று சில தேரர்களை முன்னிறுத்தி போராட்டங்களை நடத்துகின்றனர். பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றனர். தேரர்களுக்கு மதச் செயல்பாடுகள் உண்டு. அந்த நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட வேண்டும். இதில் பொதுமக்கள் ஈடுபடுகிறார்கள் என்பது வேறு விடயம்.
ஒரு பல்கலைக்கழக மாணவர் கூட தடுப்புக்காவலில் இல்லை என்பதை கல்வி அமைச்சருக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன். வசந்த முதலிகே 8-9 வருடங்களாக பல்கலைக்கழக மாணவர்.
நான் 21 வயதில் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறினேன். முதலிகேவுக்கு வயது 31 என்றாலும் அவர் இன்னும் பல்கலைக்கழக மாணவரே. ஒரு மாணவருக்கு ஒரு வருடமே மேலதிகமாக வழங்க முடியும். அதன் பிறகு நீங்கள் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற வேண்டும்.
நான் ஒன்றைக் கூற விரும்புகிறேன். நானும் மனித உரிமைகளை பாதுகாக்க விரும்புகிறேன்.
அராஜகமும் வன்முறையும் மனித உரிமைகளை ஆக்கிரமிக்க அனுமதிக்க முடியாது. மனித உரிமைகளைப் பயன்படுத்தி வன்முறை மற்றும் அராஜகத்தை உருவாக்கவும் முடியாது. மனித உரிமைகள் என்ற பெயரில் வன்முறையை ஏற்படுத்துபவர்களை பாதுகாக்க முடியாது.
அரசியலமைப்பின் 14 ஆவது பிரிவு நமது அடிப்படை உரிமைகளைக் குறிப்பிடுகிறது.
அரசியலமைப்பின் பாதுகாப்பு உள்ளிட்ட உட்பிரிவுகள் உட்பட, பொதுப் பாதுகாப்பிற்காக, சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளுக்குள், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அவை குறிப்பாக செயல்படுத்தப்படலாம். இவை அனைத்தும் 15/1, 15/2 சரத்துகளில் உள்ளன. இந்த வரம்புகளை மீற முடியாது.
மனித உரிமைகளை காப்பவர்கள் நாங்கள் என்று ஒரு சிலர் இன்று கூறுகிறார்கள், அவர்கள் என்ன செய்தார்கள்? குறைந்த பட்சம் இவற்றை நாம் நடைமுறையில் செய்துள்ளோம். நாங்கள் சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவியுள்ளோம். அதற்கு முந்திய அரசாங்கம் ICCPR சட்ட மூலத்தைக் கொண்டு வந்தது.
இவர்கள் மனித உரிமைகளை பாதுகாப்பதாகக் கூறி வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்று வாழ்கின்றனர். அதுதான் யதார்த்தம். யாராவது ஒருவர் சரி எழுந்து நின்று என்னிடம் சொல்லுங்கள் நான் அப்படிச் செய்யவில்லை என்று. இவர்களைப் பற்றி எனக்குத் தெரியும். நான் அவர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். நான் தான் அவர்களைப் பாதுகாத்தேன். ஆனால் அவர்கள் இன்று என்னைப் பார்த்தே கூச்சலிடுகிறார்கள். இவ்வாறு நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த அனுமதிக்க முடியாது.
சட்டத்திற்கு உட்பட்டு எதையும் செய்யுங்கள். நான் பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். நான் ஒத்திவைக்க மாட்டேன். பாராளுமன்றத்தை ஒத்திவைக்க எனக்கு உரிமையும் இல்லை. வீதியில் கூச்சலிடுவதால் பாராளுமன்றத்தை கலைக்கப் போவதில்லை. கூச்சலிடுபவர்களுக்கு பெரும்பான்மையும் இல்லை. பெரும்பான்மை உள்ளவர்கள் மௌனமாக உள்ளனர். அவ்வாறு அமைதியாக இருக்கும் மக்களுக்கு வாழவும், அவர்களின் உரிமைகளைப் பெறவும் உரிமை உண்டு. அந்த உரிமைகளின்படியே செயல்பட வேண்டும்.
இப்போது மனித உரிமை என்ற போர்வையில் பொலிஸ் அதிகாரிகளை கைது செய்ய முயல்கிறார்கள். பொலிஸார் மனித உரிமைகளை மீறியிருக்கலாம். அவ்வாறு செய்தவர்கள் இருந்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்போம்.
அவசரகாலத்தை உருவாக்கி, கலவரம் போன்றவற்றை ஏற்படுத்தி, அதை தடுக்க பொலிஸாரிடம் செல்லும் போது, பொலிஸார் மீது மனித உரிமை வழக்குகள் தொடரப்படுகின்றன. இது மனித உரிமைகளுக்காக செய்யப்படுவதில்லை, மாறாக பொலிஸாரின் தலையீட்டை நிறுத்துவதற்காகவே முன்னெடுக்கப்படுகின்றன. எனவே இது தொடர்பில் ஆராயுமாறு நான் சட்டமா அதிபரிடம் கூறினேன். அப்படி செய்தால் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும். இந்த விளையாட்டை எப்போதும் தொடர அனுமதிக்க முடியாது.
இராணுவ அதிகாரியாக இருந்தாலும் சரி, பொலிஸ் அதிகாரியாக இருந்தாலும் சரி, அனைவரையும் நாம் பாதுகாக்க வேண்டும். மனித உரிமைக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, எனது தலைமைப் பாதுகாப்பு அதிகாரியையும் பணி நீக்கம் செய்ய முயன்றனர். எனது வீட்டிற்கும் தீ வைக்கப்பட்டது.
இதன் முக்கிய ஊடகம் சிரச ஆகும். நான் தான் அவர்களுக்கு எதிராக செயல்பட வேண்டும். ஆனால் எனது முக்கிய மெய்ப்பாதுகாவலரை நீக்குமாறு அவர்கள் மனித உரிமைகள் ஆணையத்திடம் கேட்கின்றனர். அவர் என்ன தவறு செய்தார்? எனது பிரதான பாதுகாப்புப் பணிப்பாளரையும் நீக்க சிரச விரும்பியது. அவர் அந்த இடத்தில் சம்பந்தப்படவில்லை. எம்மிடம் இருப்பவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.
இது தொடர்பில் நான் அறிக்கை விடுத்த பின்னர் சிரச ஊடக நிறுவனம் என்னைத் தாக்க ஏழு பேரை அனுப்பியது. ஒவ்வொரு நபரிடமிருந்தும் அறிக்கைகள் எடுக்கப்படுகின்றன. துமிந்த நாகமுவ, விதர்ஷன கன்னங்கர, கலாநிதி நிர்மல் ரஞ்சித் தேவசிறி போன்றவர்களிடம் வாக்குமூலம் பெறுகின்றனர்.
என்னைப் பற்றி பேசுவதற்கு முன், பகிடிவதைகளிலிருந்து பல்கலைக்கழக மாணவர்களைப் பாதுகாத்துத் தருமாறு நான் கூறுகின்றேன். பகிடிவதையை எதிர்க்க வேண்டும். அரசாங்கத்தைப் போலவே எதிர்க்கட்சியும் இருக்க வேண்டும். நாம் ஒன்றுபட்டு இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்போம் என்றே நான் கூறுகின்றேன். அவ்வாறு செய்தால் மீண்டும் வீதிக்கு வந்து அரசாங்கத்தை கவிழ்க்கச் சொல்ல முடியாது.
அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பாதுகாப்பு சேவையில் உள்ள அனைவருக்கும் உள்ளது. இந்த நிறுவனங்களைப் பாதுகாக்க கோப்ரல் முதல் பீல்ட் மார்ஷல் வரை அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதற்காக அர்ப்பணிப்புடன்
செயல்படும் முப்படையினருக்கும், பொலிஸாருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ரணில் வீட்டில் சாராய போத்தல் திருடியவர் கைது
ரணில் வீட்டில் சாராய போத்தல் திருடியவர் கைது
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வீட்டில், சாராய போத்தல் திருடிய குற்ற சாட்டில் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார் .
ரணில் விக்கிரமசிங்க வீட்டை சுற்றிவளைத்து எரியூட்டிய பொழுது, அங்கிருந்த விலை உயர்வான மதுபான போத்தல்களை, திருடி சென்றனர்என்ற குற்ற சாட்டில் ,இந்த நபர் கைது செய்ய பட்டுள்ளார்.
போராட்டக்காரர்களை தொடராக கைது செய்து மிரட்டும் நகர்வை, ரணில் விக்கிரமசிங்க அரசு முடுக்கி விட்டுள்ளது .
இவை கோட்டபாய மீள நாடு வரும் பொழுது இவ்வாறான போராட்டங்கள் ,மீள் எழுச்சி கொள்ளாது இருக்க ,ரணில் விக்கிரமசிங்க அதனை புரிந்து வருகிறார்.
ஆனால் ரணில் அரசுக்கு எதிராக விரைவில் மக்கள் போராட்டம் ,நாடு முழுவதும் வெடிக்கும் என எதிர் பார்க்க படுகிறது.
மைத்திரியிடம் விசாரணை ஆட்டத்தை ஆரம்பித்த ரணில்
மைத்திரியிடம் விசாரணை ஆட்டத்தை ஆரம்பித்த ரணில்
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி, மைத்திரி பால சிறிசேனவிடம் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
முன்னாள் ஜனாதிபதியாக விளங்கிய காலப் பகுதியில் ,மைத்திரியினால் , பொது மன்னிப்பு வழங்க பட்டு ,ஜூட் ஜயமஹா என்பவர் விடுதலை செய்ய பட்டுள்ளார்.
அது தொடர்பிலேயே. ஐந்து மணி நேரம் கடும் விசாரணைகள் இடம்பெற்றுள்ளது .
இது ஆளும் ரணில் விக்கிரமசிங்காவினால் வழங்க பட்ட உத்தரவுக்கு அமைய ,மைத்திரியை மிரட்டும் , செயல் பாட்டு விசாரணையாக பார்க்க படுகிறது .
ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் ரணில் சந்திப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் ரணில் சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (18) பிற்பகல் இடம்பெற்றது.
ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் ஐக்கிய நாடுகளின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்கான பெங்கொக்
அலுவலகத்தின் பணிப்பாளர் டேவிட் மஸ்னெக்யன் கார் (David Mclachlan-Karr), ஐக்கிய நாடுகளின் நிரந்தர பிரதிநிதி ஹெனா சிங்கர் (Hanaa Singer) மற்றும் ஐக்கிய நாடுகளின்
வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தின் பிரதானி ஆண்ட்ரியாஸ் கர்பாதி (Andreas Karpati) ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதியின் சர்வதேச விவகாரப் பணிப்பாளர் தினுக் கொழம்பகே, ஜனாதிபதியின் இளைஞர் மற்றும் நிலையான அபிவிருத்தி
விவகாரப் பணிப்பாளர் ரந்துல அபேதீர ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மகிந்த ராஜபக்ச குடும்பத்தை மிரட்டும் ரணில் விக்கிரமசிங்க
மகிந்த ராஜபக்ச குடும்பத்தை மிரட்டும் ரணில் விக்கிரமசிங்க
இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ,மகிந்த ராஜபக்ச குடும்பத்தை மிரட்டும், உள்ளக அரசியல் சித்து விளையாட்டுக்கள் ஆரம்பித்துள்ளன .
இலங்கை வரலாற்றில், எம்பி பதவியை இழந்து தவித்த ரணில் விக்கிரமசிங்க ,தனது கட்சியின் ஆதரவு அற்று, இலங்கையின் ஜனாதிபதியான வரலாற்று நிகழ்வு எழுத பட்டுள்ளது.
மக்களினால் எதிரி போன்று ,ராஜபக்ச குடும்பம் பார்க்க பட்டு ,அந்த ராஜபக்ச குடும்பங்களுக்கு எதிராக ,மக்கள் போராட்டம் நடத்திய நிலையில் ,தம்மை பாதுகாக்க, ரணில் விக்கிரமசிங்காவை மகிந்தா ராஜபக்ச ஜனாதிபதியாக்கினார் .
ஆனால் ஜனாதிபதியானது ரணில் விக்கிரமசிங்க ,ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைக்கும் செயல்களில் ஈடுபட்டுளளார் .,
புதிய அமைச்சரவையில், மகிந்த ராஜபாக்ச குடும்பத்தினரால், பரிந்துரைக்க பட்டவர்கள் பலர், அமைச்சர்களாக நியமிக்க படாது , ரணில் தனது விசுவாசிகளை அமைச்சர்களாக்கி அழகு பார்த்துளளார் .
இதனால் எழுந்த உள்ளக விரிசல் ,மகிந்த ராஜபக்ச குடும்பத்திற்கு பெரும் போராக மாற்றம் பெற்று வருகிறது .,
இன்றைய இலங்கை அரசியல் நிலவரத்தின் பிரகாரம் ,விரும்பியோ விரும்பாமலோ ,ரணில் விக்கிரசிங்காவை ஆதரிக்க வேண்டிய, நெருக்கடியில் ராஜபக்ச குடும்பம் சிக்கியுள்ளது .
போர் குற்றம் ஒருபுறம் ,மற்றும் லஞ்ச ஊழல் மோசடி மறுபுறம், என இரட்டை தலை பாம்புகளாய் , இவர்கள் இரு தரப்பையும் உற்று பார்த்து ஓட வேண்டிய விரக்தி நிலைக்குள் தள்ள பட்டுள்ளனர்.
இதனை தனக்கு சாதகமாக்கிய ரணில் விக்கிரசிங்க ,தனது அரசியல் நரி தந்திர விளையாட்டை ஆரம்பித்துள்ளார் .
அவ்வாறு நோக்கின், விரைவில் மகிந்தா ராஜபக்ச குடும்பம் ,ரணில் விக்கிரமசிங்காவுக்கு இடையிலான உள்ளக மோதல்கள் ,கைதுகள் வரை செல்லும் என எதிர் பார்க்க படுகிறது .
ராஜபக்ச குடும்பத்தை மிரட்ட இந்த நகர்வை, ரணில் எதிர்காலத்தில் ஆரம்பிப்பார் என்பதே இன்றைய உள்ளக கசிவுகளாக உள்ளன .
இலங்கையில் பத்தொன்பது மாதங்களில் தேர்தல் நடத்திட வேண்டிய நிலை உள்ளது ,இவாறான நிலையில் தந்து கட்சியை வளர்த்திட, ரணில் விக்கிரமசிங்க ஆடுகளத்தை ஆரம்பித்துள்ளார் .
இந்த கட்சி போரே, தற்போது மகிந்தா ராஜபக்ச குடும்பத்திற்கு இடையில் ,பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .
மக்கள் ஆதரவு அற்ற இவர்களினால் தேர்தலில் வென்றிட முடியாத நிலை உள்ளது .
ரணில் அழைப்பை நிராகரித்த ஜேவிபி
ரணில் அழைப்பை நிராகரித்த ஜேவிபி
சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று நடைபெறவிருந்த கலந்துரையாடலில் தாம் பங்குகொள்ளப் போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது..
எனினும் ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் முன்மொழிவுகளை சமர்ப்பிக்க கட்சி தீர்மானித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
உத்தேச சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினருக்கும்
இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இராணுவ தலைமையகத்திற்கு பறந்த ரணில் விக்கிரமசிங்க
இராணுவ தலைமையகத்திற்கு பறந்த ரணில் விக்கிரமசிங்க
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அகுரேகொடவில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்திற்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார் .
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த திடீர் பயணம் மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இராணுவத்தை ஏவி மக்கள் போராட்டங்களை நசுக்குவதில் குறியாக உள்ள ரணிலின் இந்த பயணம் ஏன் என்ற கேள்வியை எழுப்பி நிற்கிறது.
இலங்கை ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க
மக்களை அடக்கி ஒடுக்குவதில் குறிவைத்து செயல் பட்டு வருகின்றமை கவனிக்க தக்கது.
மகிந்தா குடும்பத்தை பாதுகாக்கும் ரணில் கொதிக்கும் மக்கள்
மகிந்தா குடும்பத்தை பாதுகாக்கும் ரணில் கொதிக்கும் மக்கள்
இலங்கையில் ராஜபக்ச குடும்பத்தை பாதுகாப்பதால் ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுள்ளார் .
எம்பி பதவியை ரணில் விக்கிரமசிங்க இழந்து தவித்த நிலையில் இலங்கையின் ஜனாதியாக மாற்றம் பெற்றுள்ள ரணில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயா மற்றும் ராஜபாக்ஸ குடும்பத்தை பாதுகாப்பதில் குறியாக உளளார்.
இவர்களது சொத்துக்கள் மற்றும் அரசியல் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்வதற்கு ரணில் தொடர்ந்து உதவி வருகிறார்.
உலக நாடுகளில் எங்கும் தங்க முடியாத நிலையில் கோட்டபாய சிக்கி தவித்து வருகிறார் .
இவரை போர்க் குற்ற சாட்டில் கைது செய்து விடுவார்கள் என்கின்ற பீதியில் கோட்டபாய இலங்கை திரும்புகிறார்.
அவ்வாறு இலங்கை வரும் இவர்களை ஒட்டு மொத்தமாக காப்பாற்றுவதில் ரணில் விக்ரமசிங்க உதவி புரிந்து வருவதால் மக்கள் கொதிப்பில் உறைந்துள்ளனர்.
மகிந்தா குடும்பத்தினை பாதுகாக்க தவறினால் இரண்டு வருடஙக்ளுக்கு உள்ளாகவே ரணில் ஆட்சி கவிழ்க்க பட்டு அவர் ஜனாதிபதி பதவியை இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இதனால் ரணில் மகிந்த ராஜபக்ச குடும்பத்தை பாதுகாக்க வேண்டிய நிலையில் உள்ளார்
ஆர்ப்பாட்டக்காரர்களுடன் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்றத் தயார் ரணில்
ஆர்ப்பாட்டக்காரர்களுடன் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்றத் தயார் ரணில்
ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட தான் தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாம் இப்போது பொருளாதாரப் போராட்டத்தில் வெற்றிபெற வேண்டும் என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி விக்கிரமசிங்க அவர்கள், அந்தப்
பொருளாதாரப் போராட்டத்தின் வெற்றிக்கு போராட்டக் களத்தில் உள்ள அனைத்து இளைஞர், யுவதிகளையும் சகல வழிகளிலும் பங்கேற்கச் செய்ய தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
இப்போது பொருளாதாரப் போராட்டத்தில் வெற்றி பெற வேண்டும்.
அதற்கு இளைஞர்களின் அர்ப்பணிப்பு அவசியம்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பல தரப்பினருக்கும் இடையில் இன்று (05) ஜனாதிபதி
அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டக்காரர்களுடன் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்றத் தயார் ரணில்
ஜனநாயக விரோத அரசியலையும் வன்முறையையும் தாம் எதிர்ப்பதாகவும், ஒடுக்குமுறைக்காகவே செயற்படுபவர்கள், பல்கலைக்கழக செயற்பாட்டின்
ஊடாக பகிடிவதையை நிறுத்தி சிறந்த சமூக ஜனநாயகத்துக்காக முன்வர வேண்டும் எனவும் ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.
இன்று நமது பல்கலைக்கழகக் கட்டமைப்பு சீர்குலைந்து இருப்பதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று பகிடிவதை ஆகும். வேலைநிறுத்தங்கள் எல்லா காலத்திலும் தொடர்ந்தன.
வேலைநிறுத்தங்கள் மூலம் ஒரு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என்றும், பேச்சுவார்த்தை மூலம் மத்தியஸ்த நிலைக்கு வந்து
கோரிக்கைகளை பெற்றுக்கொள்வதைப் போன்று, நாட்டுக்காக செய்ய வேண்டிய பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
அனைத்து ஆர்ப்பாட்டக்காரர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான குழுவொன்றை உருவாக்குமாறு கூறிய ஜனாதிபதி அவர்கள், அக்குழுவிற்கு
அனைத்து மதங்களின் பிரதிநிதித்துவம் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவம் அவசியமானது எனவும் குறிப்பிட்டார்.
இளைஞர்களின் தேவைகளுக்காக அரச அனுசரணையுடன் செயற்படுத்துவதற்கு, கொழும்பு கோட்டை மிதக்கும் சந்தை மற்றும் பல்வேறு இடங்களை முன்மொழிய தான் விரும்புவதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில்
விக்கிரமசிங்க அவர்கள், அது தொடர்பில் முறையான ஆலோசனைகளை பெரும்பான்மையான ஆர்ப்பாட்டக்காரர்களின் பங்களிப்புடன் தயாரித்து கையளிக்குமாறும் தெரிவித்தார்.
அந்தச் செயற்பாட்டில், கல்விக்கான நூலகங்கள், அரசியல் கல்விக்கான வசதிகள், இசை, கலை, நாடகம் போன்ற இளைஞர்களின் திறன்கள் மற்றும்
தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு மத்திய நிலையமாக அது உருவாக்கப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
ஆர்ப்பாட்டக்காரர்களுடன் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்றத் தயார் ரணில்
அவசரகால நிலையை முடிந்தவரை விரைவில் நீக்குவது நாட்டின் பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மைக்கு முக்கியமாக
இருப்பதைப்போன்று, தற்போதுள்ள நிலைமைகள் காரணமாக நாட்டின் நிர்வாகத்திலும் அதன் தாக்கம் இருப்பதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
தற்போது LGBT சமூகம் தொடர்பில் அவசரகாலச் சட்டம் காரணமாக பிரச்சினைக்குரிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தமக்கு
தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை நீக்குவதற்கு தேவையான சட்டப் பின்னணியை தயார் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.
மேலும், பொதுமக்கள் சபைகளை ஸ்தாபிப்பது தொடர்பில் ஏற்கனவே பல தரப்பினரிடமிருந்து முன்மொழிவுகள் தமக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக
சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், அடுத்த வாரம் குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டக்காரர்களை பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்தவர்களின் கோரிக்கையானது, அமைதியான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள
ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை சட்ட விரோதமாகவோ அல்லது தன்னிச்சையாகவோ கைது செய்வதைத் தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்பதாகும்.
தற்போது எந்த தவறும் செய்யாது தளத்தில் இருக்கின்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் கைது செய்யப்படுவதால் அங்கிருந்து வெளியே செல்ல பயப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இப்போராட்டத்தின் மிகவும் கடினமான பகுதி தற்போது ஆரம்பமாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள், நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் சிந்தனைகளிலும் புரட்சி ஏற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இளம் தலைமுறையினர் எல்லையற்ற அர்ப்பணிப்புடன் நாட்டிற்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தவே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்ததாகவும், அரசியலமைப்பு ரீதியில் சாதகமான பலனைப் பெறுவதே தமது எதிர்பார்ப்பு
எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் சமூக சீர்திருத்தங்கள் உட்பட நாட்டை முறையான மற்றும் ஸ்திரமான நிலைக்கு
கொண்டு வர விரைவான சீர்திருத்த செயல்முறையை நிறுவ வேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரைத்தனர்.
நாட்டின் முன்னேற்றத்தை விரும்புவோரின் ஆர்ப்பாட்டத்தின் முன்னேற்றம் கலந்துரையாடல் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் செய்துகொள்ளப்படுகின்ற இணக்கப்பாடுகளில் அடங்கியுள்ளதாகவும், அதற்காக ஜனநாயக
நடவடிக்கைகள் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியிலும் மேற்கொள்ளப்படும் என நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
போராட்டத்தின் மூலம் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் பல பெரிய வெற்றிகளை இளைஞர்கள் பெற்றுத் தந்தது தங்களது தலைமுறையின்
தனிச்சிறப்பு என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். உலகம் முழுவதும் ஜனநாயகத்தைப் போற்றும் மக்களால் இந்தப் போராட்டம் மதிக்கப்படுதாகவும்,
அதன் காரணமாகவே நமது நாடு உலகின் கவனத்தைப் பெற்றதாகவும் அவர்கள் கூறினர்.
ரணிலுக்கு வாக்களித்த கூட்டமைப்பில் சிலர் ரகசியம் அம்பலம்
ரணிலுக்கு வாக்களித்த கூட்டமைப்பில் சிலர் ரகசியம் அம்பலம்
கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு ஆதரவாக வாக்களித்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இதன்போது, குறித்த கூட்டத்தில் பங்கேற்றிருந்த கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மௌனம் அமைதி காத்ததாகவும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று நேற்று நடைபெற்றுள்ளது.
ரணிலுக்கு வாக்களித்த கூட்டமைப்பில் சிலர் ரகசியம் அம்பலம்
ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனை பகிரங்கப்படுத்தியுள்ளார்.
அத்துடன், ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையிலேயே, சர்வ கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பதனை
தீர்மானிக்க முடியும் என கூட்டமைப்பினர் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் அரசியல் பிரச்சனையை தீர்ப்பேன் ரணில்
தமிழ் மக்கள் அரசியல் பிரச்சனையை தீர்ப்பேன் ரணில்
பல வருட காலமாக தமிழ் மக்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டியமை அத்தியாவசியமான விடயங்களில் ஒன்றாகும் என்று தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ தெரிவித்தார்.
யுத்தத்தின் மூலம் பாதிக்கப்பட்ட அந்த மக்கள் சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் பலவற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை இன்று (03) ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிடடார்..
அம்மக்களின் தீர்க்க வேண்டிய காணிப் பிரச்சினைகள் பல உள்ளன. வடக்கின் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாக நாம் புதிதாக சிந்திக்க வேண்டியுள்ளது. வெளிநாடுகளில் வாழுகின்ற இலங்கை தமிழ் மக்களுடன்
நெருங்கிச் செயற்பட்டு, இலங்கையினை மீளக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்திற்கு அவர்களது ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்வதற்கும் நாம் எதிர்பார்க்கின்றோம் என்றும் ஜனாதிபதி மேலும் கூறினார்.
1977 இல், அரசியலில் பிரவேசித்த நாள் முதல் எனக்கு தேவைப்பட்ட ஒரு விடயம் இவ்வாறான பிரிவுகளற்ற இலங்கையெனும் ஆளடையாளத்தைக்
கொண்ட சமூகமொன்றினை உருவாக்குவதாகும். ஒருதாயின் பிள்ளைகளாக ஒற்றுமையாக வாழக்கூடிய தேசமொன்றை உருவாக்குவதாகும்.
இம்முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டதன் காரணமாக நான் அரசியல் ரீதியாக தோல்விகளை சந்தித்தேன். தோல்விகளை சந்தித்தேன்.
சிங்கள பேரினவாதிகளின் மாத்திரமன்றி, தமிழ், முஸ்லிம் பேரினவாதிகளின் விமர்சனங்களுக்கு ஆளானேன். இனவாதிகளுக்கும்.
சமயவாதிகளுக்கும் எதிராக தொடர்ச்சியாக ஈடுபட்டமையால் சில அரசியல் கட்சிகள் என்னை தேசத்துரோகியாகவும் சமய எதிரியாகவும் அவதூறுக்கு உட்படுத்தின
எனினும் நான் எனது கொள்கையில் இருந்து விலகிச் செல்லவில்லை. ஒருபோதும் நான் அந்தக்கொள்கையிலிருந்து விலகவும் மாட்டேன்.
இன்று இளம்பராயத்தில் பெரும்பாலானவர்கள் எனது அந்தக் கொள்கையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என ஏற்றுக்கொண்டுள்ளனர்.
அவர்கள் இனவாதத்திற்கும் சமயவாதத்திற்கும் எதிராக கோஷம் எழுப்புகின்றனர். சிங்களவர், தமிழர், முஸ்லிம், பறங்கியர் உள்ளிட்ட அனைத்து இனங்களுக்கும் சமத்துவமாக கவனித்தல் வேண்டும் என சிங்கள இளைஞர்
யுவதிகள் கூறுகின்றனர். சுமார் ஐந்து தசாப்த காலமாக நான் இச்சமூகத்திற்கு விளங்கவைப்பதற்கு முயற்சித்த சத்தியத்தை இன்று இளம் பராயத்தினர் புரிந்துகொண்டுள்ளமையானது மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகும்
இந்த இளைஞர் யுவதிகளின் ஒத்துழைப்புடன், முழு நாட்டையும் அக்கொள்கையின் பக்கம் ஒன்றுதிரட்டுவதற்கான வாய்ப்பு தற்போது எமக்கு கிடைத்துள்ளது. இன, மத, கட்சி, குலம் உள்ளிட்ட அனைத்து வேதங்களையும்
ஒழிப்பதற்கு வாய்ப்புக்குக் கிட்டியுள்ளது. அந்த பேதங்கள் காரணமாக சில சமயங்கள் படுகின்ற துன்பத்தை ஒழிப்பதற்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. திறமை மற்றும் தேர்ச்சி மூலம் நபர்களின் எதிர்காலப் பயணத்தைத்
தீர்மானிப்பதற்குகான அடித்தாளத்தை உறுதிப்படுத்துவதற்கும் வாய்ப்புக் கிட்டியுள்ளது. அனைத்துப் பிரசைகளும் சுதந்திரமாக வாழக் கூடிய சூழலை
உருவாக்குவதற்கான பின்னணி ஏற்பட்டுள்ளளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்ஹ சுட்டிக்காட்டினார்..
எமது நாட்டின் சனத்தொகையில் பெரும்பான்மையாக காணப்படுகின்றன பெண்கள் இன்னமும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், ஏனைய வித்தியாசங்கள், குறைபாடுகள் பலவற்றிற்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையினை மாற்றியமைத்தல் வேண்டும். அதற்குத் தேவையான அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளை நாம் எடுக்க வேண்டியுள்ளது.
அவ்வாறே இலஞ்சம், ஊழல் மற்றும் மோசடி என்பவற்றினை சமூகத்தில் இருந்து முழுமையாக ஒழிப்பதும் கட்டாயமான ஒன்றாகும். இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான தேசியக் கொள்கை ஒன்றினை நாம்
அமுல்படுத்துவேன். இதற்குத் தேவையான சட்டதிட்டங்கள் நிதி அமைச்சினால் தயாரிக்கப்பட்டுவரும் நிலையில் உள்ளன. அவ்வாறே சர்வதேச நாணய நிதியத்துடனும் ஊழல் ஒழிப்பு பற்றிய இணக்கப்பாடொன்றிற்கு வருவோம்.
இந்த அனைத்துப் பணிகளையும் மேற்கொள்வதற்கு முழுமையான அரசியல் மறுசீரமைப்புத் திட்டமொன்று தேவைப்படுகின்றது. அந்த மறுசீரமைப்பை எனது பதவிக்காலத்தினுள் நான் மேற்கொள்வேன். எனினும் அது எனது
தனிப்பட்ட அபிப்பிராயத்திற்கு அமைவாக அல்ல. இளைஞர்களின், பெண்களின் மற்றும் ஏனைய மக்களின் கருத்துக்களை அடிப்படையாக்
கொண்டு மக்களினதும் பாராளுமன்றத்தினதும் இணக்கப்பாட்டிற்கு அமையவே அதனை மேற்கொள்வேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேற்கொள்ள வேண்டிய சமூக மற்றும் அரசியல் மறுசீரமைப்புக்கள் என்ன என்பது பற்றி தீர்மானிப்பதற்காக மக்கள் சபை ஒன்றினை நிறுவுவதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன். அரசியல் கட்சிகள், நானாவித அமைப்புகள் மற்றும்
இது தொடர்பாக ஆர்வம் காட்டுகின்ற அனைத்து நபர்களதும் கருத்துக்களை மக்கள் சபையின் ஊடாக விசாரிப்பதற்கான பொறிமுறை ஒன்றினை உருவாக்குவேன்.
இதற்காக கருத்துக்களைப் பெற்றுத்தருமாறு போராட்டத்துடன் தொடர்புடைய இளைஞர்களிடமும், தொடர்புபடாத இளைஞர்களிடமும் நான் முக்கியமாக வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றும் குறிப்பிட்டார்.
எமது நாட்டின் ஜனாதிபதி முறைமையினை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டுமா? நாட்டிற்கு மிகவும் பொருத்தமான முறைமை எது? ஆட்சி முறையானது எவ்வாறான மறுசீரமைப்புகளுக்கு உட்பட வேண்டும்? உள்ளிட்ட
அனைத்து விடயங்களும் மக்கள் சபையின் ஊடாக கலந்துரையாடப்படும். நாட்டிற்கு மிகவும் பொருத்தமான முறைமை தொடர்பாக தேசிய
இணக்கப்பாடொன்றுக்கு வந்ததன் பின்னர் அம்முறைமையினை சட்டமாக வரைந்து நடைமுறைப்படுத்துவேன்.
என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் உரையில் மேலும் தெரிவித்தார்..
இவ்வாறான தேசிய இணக்கப்பாட்டிற்கு வருவது கட்டாயமான ஒரு விடயமாகும். அதுபற்றி நான் சிறிது விளக்க விரும்புகின்றேன்.
நமது நாட்டில் பல சனாதிபதி தேர்தல்களின் போது முன்வைக்கப்பட்ட பிரதான வாக்குறுதி தான் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்கப்படும் என்பதாகும்.
எனினும் அந்த வாக்குறுதியை வழங்கி அதன் மூலம் அதிகாரத்திற்கு வந்த எவரும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்கவில்லை.
மாறாக ஒருவர் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை ஒழித்தாலும், அதன் பின்னர் ஆட்சிக்கு வரும் கட்சியினால் மீண்டும் அதனை மாற்றியமைக்கும் இயலுமை உள்ளது என்பதையும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அதனால் தான் நாங்கள் மக்கள் சபை ஊடாக பொதுவான தேசிய இனக்கப்பாடு ஒன்றிற்கு வரவேண்டிய தேவையுள்ளது.
மக்கள் சபை என்பது முழுமையாக சுயாதீனமாக செயற்படும் ஒரு நிறுவனமாகும். அரசாங்கம் அதற்குத் தேவையான வளங்களை வழங்குவதை மாத்திரமே மேற்கொள்ளும். அதன் பணிகளுக்கு அல்லது தீர்மானங்களுக்கு
அரசாங்கத்தின் விதவித தாக்கமும் இருக்காது. மக்கள் சபையின் அமைவு பற்றி நாம் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடி தீர்மானிப்போம்.
சாதாரண சமூகமொன்றிற்கான தேசிய இணக்கமானது தற்போதும் கூட, மக்கள் சபை பற்றி கருத்துக்கள் மற்றும் பிரேரணைகள் என்பவற்றினை எமக்குப் பெற்றுத்தந்துள்ளன.
மக்கள் சபையின் பணிகளை மிகவும் முறைப்படுத்துவதற்காகவும் மற்றும் வினைத்திறன்மிக்கதாக அமையும் பொருட்டு ஐக்கிய நாடுகள் சபை போன்ற பல்தரப்பு அமைப்புகளின் ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்வதற்கும்
வாய்ப்பினை வழங்குவேன். அவதானிப்புகள் அல்லது தொழில்நுட்ப ஆலோசனை மட்டத்தில் அவ்வாறான ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் சபைக்கு வாய்ப்பு உள்ளது.
நான் இதற்கு முன்னரும் சபையில் குறிப்பிட்டது போன்று பாராளுமன்ற மேற்பார்வைக் குழுக்களை உடனடியாக நிறுவுவதற்கு நடவடிக்கை எடுப்பேன். .அந்த குழுக்கள் ஊடாகவும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஒன்றாக
இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புக் கிட்டும். சாதாரண சமூகமொன்றிற்கான தேசிய இயக்கம் இது தொடர்பாக சமர்ப்பித்த அறிக்கையினை நான் ஏற்கனவே இச்சபையில் சமர்ப்பித்துள்ளேன்.
அவ்வாறே அரசியல் கட்சித் தலைவர்களை உள்ளடக்கிய தேசிய சபை ஒன்றினை நிறுவுவதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன். முன்னெடுக்கும்
நோக்கில் அனைவரினதும் ஆகக் குறைந்த பொது இணக்கப்பாடொன்றுடன் கூடிய வேலைத்திட்டம் ஒன்றினை இந்த தேசிய சபையின் ஊடாக தயாரித்துக்கொள்ள எம்மால் முடியும்.
பேதங்கள் மூலம் எமது நாடு முற்காலம் தொட்டு பின்னடைவுகளுக்கு உள்ளானது. நாம் இன ரீதியாக பிரிந்தோம், மொழி ரீதியாக பிரிந்தோம், சமய ரீதியாக பிரிந்தோம். கட்சி ரீதியாக பிரிந்தோம். வகுப்பு ரீதியாக பிரிந்தோம், பூகோள ரீதியாகவும் பிரிந்தோம் குல ரீதியாகவும் பிரிந்தோம்.
சில தரப்பினர்கள் இப்பிரிவினை மேலும் விஸ்தரித்தனர். அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக இவ்வாறான பிளவுகளை பயன்படுத்தினர். பிரித்து ஆள்வதன் அனுகூலத்தை அனுபவித்தனர். முஸ்லிம் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் பிரச்சினைகளை உருவாக்கினர்.
தமிழ்; மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் பிரச்சினைகளை உருவாக்கினர். இவ்வாறு இன ரீதியாவும் சமய ரீதியாகவும் பல்வேறு விதமான பிளவுகளை ஏற்படுத்தி அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு முயற்சித்தனர் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வரிசையில் காத்திருக்காது சமையல் எரிவாயுவை இன்னும் சில தினங்களில் அனைவராலும் பெற்றுக்கொள்ள முடியும். உணவுத் தட்டுபாடொன்று ஏற்படாதவாறு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்து வகைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் என்பவற்றினைக் கொள்வனவு செய்யும் பணி
ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைத்தொழில்கள் மற்றும் ஏற்றுமதித் துறை என்பவற்றிற்கு ஏற்பட்டுள்ள தடைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
மீளெழும் முயற்சியிலே எமது அயல் நாடான இந்தியா வழங்கிய ஒத்துழைப்பு தொடர்பாக நான் விசேடமாக இங்கு குறிப்பிட விரும்புகின்றேன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான இந்திய அரசாங்கம்
எமக்கு வழங்கிய உயிர் மூச்சுக்கு நான் இலங்கை மக்கள் சார்பாக மோதி பிரதமர் அவர்களுக்கும், இந்திய அரசாங்கத்திற்கும், இந்திய மக்களுக்கும்
நன்றியினை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன் என்று தெரிவித்த ஜனாதிபதி:
தற்போது எமது முன்னால் உள்ள குறுங்கால பிரச்சினை அமைவது எரிபொருள் தட்டுப்பாடாகும். எரிபொருளை கொண்டு வருவதற்காக ஏனைய நாடுகளிடமிருந்து கடன் உதவிகள் கிடைக்கும் வரையில் காத்திருக்கும்
முறைமையிலே நாம் முடிவுக்கு கொண்டு வருதல் வேண்டும் எனவே எமது நாட்டின் ஏற்றுமதி வருமானம் மற்றும் வெளிநாட்டு நாணயமாற்று ஊடாக எரிபொருளை கொண்டு வருவதற்கான முறைமை ஒன்றினை நாம் ஆரம்பிக்க
உள்ளோம். இதன் போது எரிபொருளுக்கான கொடுப்பனவினை சமப்படுத்திக்கொள்வதற்காக தேர்ந்தெடு இறக்குமதிகளை
வரையறுத்துக்கொள்ள வேண்டியும் எமக்கு ஏற்படும.; மறுபுறமாக எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டியும் ஏற்படும்
. எனவே இந்த ஆண்டின் இறுதி வரையில் இந்த கஷ்டத்தினை நாட்டுக்காக நாம் தாங்கிக்கொள்ளல் வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக நாம் அனைவரும் பல்வேறுபட்ட இன்னல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றோம்;, துன்பப்படுகின்றோம், கஷ;டப்படுகினறோம்;, சிக்கல்களுக்கு ஆளாகின்றோம். இவ்வாறான
கஷ;டங்கள் மற்றும் துன்பங்கள் என்பவற்றிலிருந்து விடுபடுவதற்கான பாதையை நோக்கி இந்நாட்டினைக் கொண்டுசெல்வதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்புடன் நான் நடவடிக்கை எடுப்பேன்.
இந்த கஷ;டங்களிலிருந்து மீழுவதற்குநாம் நீண்ட கால தீர்வுகளை நோக்கிப் பயணித்தல் வேண்டும். மீண்டும் ஒருபோதும் எமது நாட்டிலே இவ்வாறான பொருளாதார நெருக்கடியொன்று எமது நாட்டிலே ஏற்படாதவாறு பலமிக்க
அடித்தாளமொன்றினை இடுதல் வேண்டும். பொருளாதாரத்தை நவீனமயப்படுத்துதல் வேண்டும். பொருளாதார ஸ்திரத்தன்மையினை ஏற்படுத்தி, போட்டித்தன்மைமிக்க சந்தைப் பொருளாதாரம் ஒன்றின் பக்கம்
மாற்றியமைத்தல் வேண்டும். அவற்றிற்குத் தேவையான அறிக்கைகள், திட்டமிடல், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்கள்
என்பவற்றினை தற்போது நாம் தயாரித்து வருகின்றோம என்றும் குறிப்பிட்டார்.
நாம் நடைமுறைப்படுத்தும் செயல்திட்டங்கள் என்பவை தொடர்பான விபரமான தகவல்கள் எதிர்காலத்தில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும்
இடைக்கால வரவுசெலவு மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தினூடாக முன்வைக்கப்படும்.
மீளெழுச்சிபெறும் ஆரம்பக் கட்டமொன்றாக நாம் சர்வதேச நிதியத்தோடு நான்கு வருட வேலைத் திட்டமொன்று தொடர்பான கலந்துரையாடல்களை ஆரம்பித்தோம். ஆகஸ்ட் மாதத்திலிருந்து நாம் அந்த கலந்துரையாடல்களை
மீணடும் முன்னெடுத்துச் செல்வோம். ஆரம்ப கட்ட உயர்மட்டத்திலான கலந்துரையாடல்களைச் துரிதமாகவும் சிறப்பான முறையிலும் முடிப்பது எமது எதிர்பார்ப்பாகும்.
சர்வதேச நிதியம் மற்றும் சட்ட நிபுணர்களான லசாட் மற்றும் கிளிபட் சான்ஸ் நிறுவனங்களோடு சேர்ந்து கடன் நிலைபடுத்தும் திட்டம் தற்போது முடியுறும் தறுவாய்க்கு வந்துள்ளது. இந்தத் திட்டத்தை இன்னும் சில தினங்களில் நாம்
சர்வதேச நிதியத்திடம் முன்வைப்போம். அதன்பின்பு எமக்கு கடன் உதவிகள் வழங்கியுள்ள நாடுகளோடு கலந்துரையாடுவோம். அதன்பின்பு தனியார்
கடனாளிகளோடும் கலந்துரையாடல்களை ஆரம்பிப்போம். அவர்களோடு உடன்பாட்டுக்கு வருவோம்.
பொருளாதாரத்தை நிலைபேறுடையதாக்கும் முயற்சியின்போது சமூகத்தின் வலுவற்ற மற்றும் நிர்க்கதியானோர் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்துவோம். நாட்டின் தொழில்முயற்சியாளர்களுக்கு தங்களது
ஆற்றல்களினூடாக முன்வருவதற்குத் தேவையான வழிகளை மேலும் விரிவுபடுத்துவதோடு சமூகத்தில் கீழ்மட்டத்தில் வசிக்கும் மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு நடவடிக்கை எடுப்போம். நாடுபூராகவும்
வசிக்கும் ஏழை மக்களுக்கு குறுகியகால நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம். அதேபோன்று அவர்களது வாழ்வாதாரத்தை
மேம்படுத்துவதற்கு நீண்டகால வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவோம். நான் சமூக மாற்றங்களுக்காக அர்ப்பணிப்போடு செயற்படுவேன்.
நான் எதிர்காலத்திற்காக மேற்கொள்ள வேண்டிய நேர்மறையான சமூக மாற்றங்களுக்காக அர்ப்பணிப்பேன். மீண்டும் விரிவான நடுத்தர வர்க்கத்தினரை உருவாக்குவதற்குத் தேவையான அடிப்படையை
உருவாக்குவேன். சமூக சந்தைப் பொருளாதாரம் ஒன்றின் ஊடாக நன்மைகள் முழு சமூகத்திற்கும் நியாயமானவாறு பெற்றுக்கொடுப்பேன்.
இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காகப் பாடுபடும்போது சம்பிரதாய சிந்தனையிலிருந்து விடுபடுமாறு நான் சகல தரப்பினரிடமும் கேட்டுக்கொள்கின்றேன். வெறுமனே அதிக வட்டிக்கு வர்த்தகக் கடன்களைப்
பெற்றுக்கொள்ளும்போது அமைதியாகப் பார்த்திருந்த சில குழுக்கள் நாட்டுக்கு பொருத்தமான முதலீடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். பொய்யான பலிக்கடாக்களை உருவாக்கி மக்களை திசைதிருப்புகின்றார்கள்.
இந்தியாவோடு ஒன்றிணைந்து திருகோணமலை எண்ணெய்த்தாங்கித் தொகுதியினை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கும்போது இந்தியாவுக்கு இலங்கையை விற்கின்றார்கள் என்று கூறி அபிவிருத்தித்
திட்டத்துக்கு இடையூறு விளைவித்தனர். அன்று எமக்கு எண்ணெய்த்தாங்கித் தொகுதியினை அபிவிருத்தி செய்துகொள்வதற்குச் சந்தர்ப்பம்
கிடைத்திருப்பின் இன்று மக்களுக்கு எரிபொருள் வரிசைகளில் நீண்டநாட்கள் அலைவதற்கு அவசியம் ஏற்பட்டிருக்காது.
சுவசெரிய நோய் காவு வண்டிகளின் சேவையை ஆரம்பிக்கும்போது அதேபோன்று எதிர்ப்புகளைச் செய்தார்கள். சுவசெரிய நோய் காவு வண்டிகள் வைத்தியசாலைகளுக்கு வந்தால் ஏற்படுவது மரணம் எனக்கூறி சில
வைத்தியர்கள் ஊடகக் கலந்துரையாடல்கள் நடத்தினார்கள். ஆனாலும் நாம் எவ்வாறாயினும் சுவசெரியவை ஆரம்பித்ததனால் தற்போது பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மக்களை வழிதவறி நடத்தி தடைசெய்த கருத்திட்டங்கள் காரணமாக எமது பொருளாதாரக் கட்டமைப்பு அழிவடைந்தது என்றும் ஜனாதிபதி கூறினார்.
இலகு புகையிரதச் சேவையைத் தாபிப்பதற்கும், துறைமுகத்தை மேம்படுத்துவதற்கும் ஜப்பான் நாடு முன்வந்த சந்தர்ப்பத்தில் அதற்கெதிராக
அடிப்படையற்ற வீணான காரணிகள் பலவற்றை எடுத்துக்காட்டியதன் காரணமாக எமது நாட்டுக்குக் கிடைப்பதற்கிருந்த 3 பில்லியன் டொலருக்கு 8
அதிகமான அளவு கிடைக்காமல் போயிற்று. அதுமட்டுமன்றி ஜப்பான் மற்றும் இலங்கைக்கிடையே இருந்த நீண்டகால நட்பு சிதறிப்போனது என்றும் குறிப்பிட்டார்.
2025 ஆம் ஆண்டளவில் ஆரம்ப நிலை வரவுசெலவுத் திட்டத்தில் மிகை ஒன்றினை ஏற்படுத்துவது எமது முயற்சியாகும். பொருளாதார அபிவிருத்தி வேகத்தை நிலையான தன்மைக்கு உயர்த்துவதும் நமது முயற்சியாகும். 2026
ஆம் ஆண்டாகும் போது நிலையான பொருளாதார அடிப்படை ஒன்றினை உருவாக்கிக் கொள்வது எமது எதிர்பார்ப்பாகும் தற்போது அரச கடன்
அளவானது மொத்த தேசிய உற்பத்தியின் நூற்றுக்கு 140 சதவீதம் ஆகும். இதனை 2032 ஆம் ஆண்டளவில் மொத்தத் தேசிய உற்பத்தியில் நூறு சதவீதத்தை விடவும் குறைப்பது எமது திட்டமாகும்.
அவ்வாறு தேசிய பொருளாதாரக் கொள்கையின் ஊடாக நாட்டினையும,; நாட்டு மக்களையும் கட்டியெழுப்பும் செயற்பாட்டினை முன்னெடுத்துச்
சென்றால், 2048 ஆம் ஆண்டிலே சுதந்திர தின நூற்றாண்டினைக் கொண்டாடும்;போது, முழுமையான அபிவிருத்தி அடைந்த ஒரு நாடக எம்மால் மாற முடியும்.
நான் இவ்வாறான நீண்டகால இலக்குகளுக்குத் திட்டங்களைத் தயாரிக்கும்போது சிலர் பரிகாசமாகப் பார்க்கின்றார்கள். கேலிக்கதைகள் சொல்கின்றனர். ஆம். நான் ஏனைய அரசியல்வாதிகள் போன்றவர் அல்ல.
என்னிடம் இருப்பது நீண்டகாலத் திட்டங்கள்.நான் திட்டமிடுவது எனது முன்னேற்றத்துக்காக அல்ல. இளைஞர் சமுதாயத்துக்காகவே. நாளைய நாளுக்காகவே. நான் இன்று நாட்டும் மரத்தின் அறுவடையை எனக்கு
அனுபவிக்க கிடைக்காது என்பதை நான் நன்றாக அறிவேன். ஆனாலும் நாளைய தினம் எமது பிள்ளைகளான எதிர்காலப் பரம்பரைகள் அந்த அறுவடையை அனுபவிப்பார்கள்.
இன்று ஏற்பட்டுள்ளது என்ன? அரசியல் முறைமை மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பான மக்களது நம்பிக்கை அற்றுப்போய்விட்டது. அரசியல்
பொறிமுறை தொடர்பான மக்களது எதிர்பார்ப்புகள் உடைந்துபோயுள்ளன. கடந்தகாலம்பூராகவும் எதிர்ப்பில் ஈடுபட்ட மக்கள் இந்த முறைமைத்தொகுப்பின் மாற்றத்தை கேட்டு நின்றது அதற்காகத்தான்.
இலங்கை நாட்டையும் நாட்டு மக்களையும் கட்டியெழுப்புவதற்குத் தேவையான
சகல மாற்றங்களையும் செய்வதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன்.
நாடு கேட்கும் சமூக மற்றும் அரசியல் மறுசீரமைப்புகளை நான்
நடைமுறைப்படுத்துவேன்என்றும்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் உரையில் மேலும் தெரிவித்தார்.. .
இனப்பிரச்சனை தீர்வு தொடர்பில் ரணிலுடன் பேச கூட்டமைப்பு தயார் சிறிதரன் எம்பி
இனப்பிரச்சனை தீர்வு தொடர்பில் ரணிலுடன் பேச கூட்டமைப்பு தயார் சிறிதரன் எம்பி
இலங்கை ,கிளிநொச்சி ; தமிழ்த் தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவுடனும் பேசத்தயார் என்கிறார் சிறீதரன் எம்.பி
தமிழ்த் தேசிய இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவுடனும் பேசத்தயாராகவே நாங்கள் இருக்கிறோம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் கிளிநொச்சி இராமநாதபுரம் வட்டாரத்தில் மக்களுடனான சந்திப்பு நடைபெற்றது குறித்த சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இனப்பிரச்சனை தீர்வு தொடர்பில் ரணிலுடன் பேச கூட்டமைப்பு தயார் சிறிதரன் எம்பி
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் இந்த மண்ணிலே புரையோடிப்போயிருக்கிற இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்த நாட்டின் ஜனாதிபதியாக யார் இருந்தாலும் நாங்கள் பேசுவோம் அந்த வகையில் ரணில் விக்கிரமசிங்கவோடும் நாம் பேசுவோம்.
ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்சவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 19 தடவைகள் பேசியிருக்கிறோம் கோத்தபாய ராஜபக்ஷவுடனும் ஒரு தடவை
பேசியிருக்கிறோம் இவ்வாறு இந்த நாட்டில் யார் யார் எல்லாம் ஜனாதிபதியாக இருந்திருக்கிறார்களோ அவர்களுடன் எல்லாம் தமிழர் தரப்பு பேச்சுக்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்
ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 3 ஆம் திகதியன்று பாராளுமன்றில் தனது அக்கிராசன உரையை நிகழ்த்தவுள்ளார் இவர் தனது அக்கிராசன உரையில் புரையோடிப்போயிருக்கிற இனப்பிரச்சினை தொடர்பில் கருத்து தெரிவிப்பாரா?
அல்லது முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச போன்று அனுராதபுரத்தில் பதவியேற்ற போதும் சரி தனது அக்கிராசன உரையிலும் சரி மக்களால்
விரட்டியடிக்கப்படும் வரை தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் ஒரு வார்த்தை கூட பேசாதது போன்று இவரும் செயற்படுவாரா? எனும் சந்தேகம் இப்போது எழுந்திருக்கிறது
40 வருடங்களுக்கு மேலான அரசியல் அனுபவத்தை கொண்டுள்ள ஜனாதிபதி இந்த நாடு இப்படி பொருளாதார ரீதியில் அதளபாதாளத்திற்கு போவதற்கு பிரதான காரணமாக இருந்தது ஒரு இனத்தின் மீது நடைபெற்ற போர்தான் என்பதை புரிந்து
வைத்திருப்பார் எம் மீது நடைபெற்ற இனவழிப்பின் பங்காளியாக இருந்தவர் எமது விடுதலைப் போராட்டத்தை சூழ்ச்சியால் பிரித்த ரணில் விக்கிரமசிங்க நாட்டின்
பொருளாதார நிலையை சீர் செய்ய வேண்டும் என்றால் முதலில் இனப் பிரச்சினையை தீர்க்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்
குறித்த சந்திப்பில் சமகால அரசியல் தொடர்பிலும் பொருளாதார பிரச்சினை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்
அவர்களுடன்
வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராஜாவும் கலந்து கொண்டிருந்தார்.
மக்கள் கொந்தளிப்பை தணிக்க எரிபொருள் விலையை குறைக்கும் ரணில்
மக்கள் கொந்தளிப்பை தணிக்க எரிபொருள் விலையை குறைக்கும் ரணில்
இலங்கை ,கொழும்பு ; இலங்கையில் எட்டாவது புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எரிபொருள் விலைகளை குறைக்க திட்டமிட்டுள்ளார் .
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் ஐம்பது முதல் நூறு ரூபா வரை குறைக்க படவுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் .
மக்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நாடத்தினால் அது தனது அரசியல் வாழ்வை முடக்கிவிட்டும் என்பதால் ரணில் விக்கிரமசிங்க இந்த அதிரடி விலை குறைப்பு நடவடிக்கைக்கு திட்டமிட்டுள்ளார் .
மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளை சமாளிக்க வேண்டிய நிலையில் உள்ளதாலும் இந்த விடயம் கண்துடைப்பு நாடகமாக அரங்கேற்ற படுகிறது .
இந்த எரிபொருள் விலை குறைப்பின் பின்னர் இலங்கையில் ஆளும் ரணில் விக்கிரமசிங்க ஆட்சி நிலைத்து நிற்குமா .மக்கள் கோபம் தணியுமா என்பதே கேள்வியாக உள்ளது .



















