Tag: ரணில்
ஜனாதிபதி ரணில் டுபாய் விஜயம்
ஜனாதிபதி ரணில் டுபாய் விஜயம்
ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் நடைபெறவுள்ள COP28 உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டிலிருந்து புறப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
2023 ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு (UNFCCC COP28) நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை, அழுத்தமான காலநிலை மாற்ற சிக்கல்களைச் சமாளிக்கும் மற்றும் முக்கியமான முடிவுகளைத் தீர்க்கும் நோக்கத்துடன் நடைபெறும்.
ஜனாதிபதி ரணில் டுபாய் விஜயம்
டுபாயில் நடைபெறும் இந்த முக்கிய மாநாட்டில் இலங்கைத் தலைவர், 3 அமைச்சர்கள், 2 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மற்றும் சுற்றுச்சூழல் அக்கறையில் ஆர்வமுள்ள 20 இளம் பங்கேற்பாளர்களுடன் கலந்து கொள்கிறார்.
இலங்கைப் பிரதிநிதிகள் குழுவின் முதன்மை நோக்கம், உலக அளவில் கொள்கைகளை உருவாக்கும் முடிவுகளில் செல்வாக்கு செலுத்துவதற்கு வெப்ப மண்டலப் பகுதியில் உள்ள நாடுகளின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் பயன்படுத்துவதாகும்.
UNFCCC இன் கட்சிகளின் 28வது மாநாட்டில் உலகத் தலைவர்கள், பொது-தனியார் பிரதிநிதிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அறிஞர்கள் பங்கேற்கின்றனர்.
ஜனாதிபதி விக்கிரமசிங்க இந்த நிகழ்வில் 3 முக்கிய மைய புள்ளிகளை கற்பனை செய்வார்: காலநிலை நீதி மன்றம், வெப்ப மண்டல பெல்ட் முன்முயற்சி மற்றும் காலநிலை மாற்ற பல்கலைக்கழகத்தை நிறுவுதல்.
காலநிலை நீதி மன்றத்தின் பின்னணியில் உள்ள கருத்து, காலநிலை மாற்றம் மற்றும் குறிப்பாக உலகளாவிய வடக்கில் செல்வாக்கு செலுத்துதல் ஆகியவற்றின் அழுத்தமான பிரச்சினைக்கு தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
COP 28 மாநாட்டின் போது முன்வைக்கப்படும் மற்றும் விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய நிகழ்ச்சி நிரல்களில், பசுமை ஹைட்ரஜன் மற்றும் நிலைபேறான ஆற்றல் தொடர்பான இலங்கையின் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சாலை வரைபடங்களும் அடங்கும்.
நிலையான நடைமுறைகளில் கல்வி மற்றும் ஆராய்ச்சியை வளர்ப்பதற்கான அதன் அர்ப்பணிப்பைக் காட்டி, காலநிலை மாற்றப் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு நாடு ஒப்புதல் கோருகிறது.
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு
- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி
- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்
- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்
- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்
- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது
- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு
- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது
- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா
எந்த தேர்தலும் ஒத்திவைக்கப்படாது ஜனாதிபதி
எந்த தேர்தலும் ஒத்திவைக்கப்படாது ஜனாதிபதி
எந்த தேர்தலும் ஒத்திவைக்கப்படாது. ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தல்கள் இரண்டும் அடுத்த வருடம், நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சபையில் இன்று (22) தெரிவித்தார்.
ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தல்களுக்கு பிறகு, மாகாண சபை தேர்தல்கள் மற்றும் உள்ளூராட்சிமன்ற தேர்தல்கள் நடத்தப்படும் என்றார்.
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு
- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி
- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்
- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது
- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா
- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்
- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு
- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை
- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026
- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்
ரணிலின் தந்திரோபாயம் தமிழர்களை பலவீனப்படுத்தும்
ரணிலின் தந்திரோபாயம் தமிழர்களை பலவீனப்படுத்தும்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தந்திரோபாயம் தமிழர்களை மேலும் பலவீனப்படுத்தும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
“ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் பொருளாதாரத்தை மீட்பர் என அவர் சார்ந்த வட்டாரங்கள் புகழாராம் சூடினாலும் புள்ளிவிபர ரீதியாக மாற்றம் எதுவும் நிகழவில்லை. மாறாக நாட்டின் கடன் அதிகரித்த வண்ணமே உள்ளது” என்றார்.
ஐனாதிபதியின் ஒவ்வொரு தீர்மானங்களும் தமிழர்கள் சார்ந்த பிரச்சினைகளை திசை திருப்புவதாகவும் அதற்கான தீர்வுகளை பலவீனப்படுத்துவதாகவும் அமைந்து வருகின்றது.
ரணிலின் தந்திரோபாயம் தமிழர்களை பலவீனப்படுத்தும்
ரணிலின் எதேச்சதிகார போக்கை இராஐதந்திர ரீதியாக சமநிலைப்படுத்த தமிழர் தரப்பில் ஆளுமையான துணிச்சலான தலைமை தமிழ் கட்சிகளில் இல்லை என்பது வேதனையான விடயம் என்றார்.
அத்துடன் தமிழ் புத்திஜீவிகள் தரப்பில் பலமான குரல் இல்லை. புலம்பெயர் தரப்பிலும் வறிதாகவே உள்ளது. இதனால் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எல்லையின்றி தமிழர்களின் அபிலாசைகளை கபளீகரம் செய்ய துணிந்துள்ளார் என்றும் குகதாஸ் குற்றஞ்சாட்டினார்.
அத்துடன் தன்னை சிங்கள பௌத்த மக்களின் தலைவனாக காட்டவே முயற்சிக்கின்றார். அண்மையில் ஐேர்மன் ஊடகத்திற்கு கொடுத்த நேர்காணல் இதனை மிகத் தெளிவாக வெளிப்படுத்தி இருக்கிறது.
ரணிலின் தந்திரோபாயம் தமிழர்களை பலவீனப்படுத்தும்
தமிழர் தரப்பு பழைய பல்லவிப் போராட்டங்களை அறிவிப்பதும் அதன் மூலம் தமிழ் கட்சித் தலைமைகள் தங்கள் இயலாமையை வெளிப்படுத்துவதும் பலவீனப்பட்டு விரக்தி நிலையில் உள்ள மக்களின் வெறுப்பை அதிகரிப்பவர்களாகவும் மாறி உள்ளனர் இது தமிழ்த் தேசிய இருப்புக்கு சாதகமில்லை மிக ஆபத்தானது.
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு பதிலாக அதைவிட மேலும் மோசமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கொண்டுவர ஐனாதிபதி முயற்சிக்கின்றார்
எல்லை தாண்டி சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடும் தென்னிந்திய மீனவர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக போராடும் வடக்கு மீனவர்களுக்கு தீர்வு காணப்படாமல் தென்னிந்திய
மீனவர்கள் வடக்கு கடலில் மீன் பிடியில் ஈடுபட ரணில் அரசாங்கம் அனுமதி வழங்க இருப்பதாக கூறும் அறிவிப்பு மேலும் வடக்கு மீனவர்களை நெருக்கடிக்கு தள்ளும் ஏற்கெனவே இருந்த பிரச்சினைக்கு தீர்வு இல்லாமல் இரட்டி மடங்காக்கும்.
தமிழர் தரப்பு மக்கள் ஆணையில் இருந்து ஒரு படி கீழிறங்கி சமஷ்டி தீர்வுக்கு முன்பாக அரசியல் அமைப்பில் உள்ள பதின்மூன்றாம் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவிடம் கோரினர்.
ரணிலின் தந்திரோபாயம் தமிழர்களை பலவீனப்படுத்தும்
இதனை எதிர்பாக்காத ரணில் அதற்கும் ஒரு ஆப்பு வைத்தார். பொலிஸ் அதிகாரம் தரமுடியாது என கூறினார். உண்மையில் அரசியல் அமைப்பில்
உள்ள அதிகாரத்தை பாராளுமன்ற முடிவு இல்லாமல் நினைத்தவுடன் ஐனாதிபதி தரமாட்டேன் என கூற முடியாது. ஆனால் ரணில் விக்கிரமசிங்க சர்வாதிகாரி போல செயற்பட்டுள்ளார் என்றார்.
தமிழர் தாயகத்தில் சட்டவிரோத காணி அபகரிப்பு, விகாரைகள் அமைத்தல் , சிங்கள குடியேற்றங்கள் அமைத்தல் , மேய்ச்சல் தரைகள் அபகரித்தல் போன்றன கடந்த காலத்தை விட தற்போது வேகமாக நடைபெறுகின்றன.
நிகழ்நிலைக் காப்பு சட்டம் என்ற போர்வையில் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த கொண்டுவர உத்தேசித்துள்ள சட்டம் நாட்டு மக்களுக்கான அடக்குமுறை என பலரும் கூறினாலும் தமிழர்களுக்கு மிக ஆபத்தானது.
இதற்கு காரணம் சட்டம் நிறைவேறினால் நில அபகரிப்பு ,சட்டவிரோத விகாரை அமைப்பு போன்ற வற்றுக்கான மக்கள் போராட்டங்கள் மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகள் போன்றவற்றுக்கு நிரந்தர ஆப்பாகும்.
மீறினால் சிறைதான். அத்துடன் அரச செயற்பாட்டை விமர்ச்சித்து சமூக ஊடகங்களில் பதிவு செய்தால் பொய்யான செய்தியை பதிவு செய்தார் என்ற குற்றச்சாட்டில் சிறையுடன் கூடிய தண்டனை விதிக்கப்படும் என்றார்.
பல்லின மக்கள் வாழும் நாட்டில் சகல மக்களின் பிரச்சினைகளையும் நியாயமான முறையில் பார்க்க வேண்டிய ஐனாதிபதி பெரும்பாண்மை சிங்கள மக்களின் தலைவராக தன்னை காண்பிக்க முயற்சிக்கும் சம நேரம்
தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக மேலும் விரிவு படுத்தி திசை திருப்ப முயற்சிக்கின்றார். இச் செயற்பாடுகள் தொடருமாயின் தமிழ் மக்களின் அபிலாசைகள் மேலும் பலவீனம் அடையும் அபாயம் ஏற்படும் என்றார்.
சீனா பறந்த ரணில் ஜி ஜின்பிங்கை சந்தித்தார்
சீனா பறந்த ரணில் ஜி ஜின்பிங்கை சந்தித்தார்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது சீன விஜயத்தின் போது, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சற்று முன்னர் சந்தித்துள்ளார்.
சீனாவின் பீஜிங் நகரில் இன்று வெள்ளிக்கிழமை காலை, இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு
- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி
- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்
- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது
- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா
- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்
- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு
- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை
- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026
- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீனா விஜயம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீனா விஜயம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை (14) சீனா செல்லவுள்ளார்.
நாட்டின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் சீன அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்றும் இதன்போது இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீனா விஜயம்
இதேவேளை, அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டம் நேற்று (12) பிற்பகல் இடம்பெற்றது.
ஜனாதிபதி நாளை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டை விட்டு செல்லவுள்ள நிலையில் இந்த அமைச்சரவை கூட்டம் நேற்று பிற்பகல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு அரசாங்கத்தின் எதிர்கால பணிகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், பல அமைச்சரவை பத்திரங்களுக்கு அனுமதியும் பெறப்பட்டது.
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு
- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி
- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்
- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது
- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா
- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்
- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு
- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை
- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026
- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்
மட்டக்களப்பில் ரணிலுக்கு பெரிய பதாகை
மட்டக்களப்பில் ரணிலுக்கு பெரிய பதாகை
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா பயணம் செய்யவுள்ளார் .
அதனால் அவருக்கு மிக பெரும் பதாகை ஒன்று வைக்க பட்டுளள்து ,சமாதானத்தின் தேவன் ரணில் லஞ்ச ஊழல் கொள்ளையில் ஈடுபட்டு இருக்கும் இவ்வேளையில் அவருக்கு பதாகை வைத்து கொண்டாடுகிறது ஒரு கூட்டம்
அடிப்படை தமிழர் பிரச்சனையை தீர்க்க மறுக்கும் ரணில் தமிழர்கள் ஓட்டை கேட்டு ஓடி வருவது வெட்க கேடு என்கிறது தமிழர் தேசம் .
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு
- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி
- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்
- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்
- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்
- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது
- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு
- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது
- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா
ரணிலை வாட்டி எடுத்த ஜெர்மன் ஊடகம் தடுமாறிய ரணில் விக்கிரமசிங்க
ரணிலை வாட்டி எடுத்த ஜெர்மன் ஊடகம் தடுமாறிய ரணில் விக்கிரமசிங்க
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா ஜெர்மன் ஊடகம் ஒன்றில் சிக்கி தடுமாறிய சம்பவம் இடம்பெற்றுள்ளது .
பொய்யில் உருண்டு லஞ்ச ஊழலில் முழ்கியுள்ள ரணில் ,மகிந்தா அசரங்கத்தின் பித்தலாட்டங்கள் ,உடைத்து கக்கியது அந்த ஜெர்மன் ஊடகம் .
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் ,நல்லிணக்க ஆணைக்குழு விசாரணைகள் தொடர்பில் தோண்டி எடுத்து கேள்விகளை கேட்டது .
ரணிலை வாட்டி எடுத்த ஜெர்மன் ஊடகம் தடுமாறிய ரணில் விக்கிரமசிங்க
அவர்களின் துல்லியமான கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது ரணில் விக்கிரமசிங்கா திணறினர் .
ஜெர்மன் பயணத்தில் வாயை கொடுத்து மாட்டி கொண்ட ரணில் நிலை பரிதாபகரமாக உள்ளது .
சர்வதேச விசாரணைக்கு ஒரு பொழுதும் அனுமதிக்க மாட்டேன் என அவர் சூளுரைத்தார் .,
இலங்கையில் தமிழ் இனஅழிப்பு இடம்பெறவில்லை என வாய் கூசாது தெரிவித்துள்ளார் ,
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு
- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி
- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்
- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது
- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா
- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்
- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு
- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை
- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026
- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்
அணு ஆயுத மட்டுப்படுத்தலுக்காக இலங்கை அர்ப்பணிக்கும்
அணு ஆயுத மட்டுப்படுத்தலுக்காக இலங்கை அர்ப்பணிக்கும்
முழுமையான அணு-சோதனை தடை ஒப்பந்தத்தை (Comprehensive Nuclear-Test-Ban Treaty) அங்கீகரிப்பதாக அறிவிப்பதன் மூலம் அணு ஆயுதக் குறைப்பு மற்றும் அணு ஆயுத கட்டுப்பாட்டுக்கான இலங்கையின் உறுதிப்பாட்டை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உறுதிப்படுத்தினார்.
முழுமையான அணு சோதனை தடை ஒப்பந்தம் (CTBT) தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரிவு 14 மாநாட்டின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட ஊடக சந்திப்பிலேயே வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, கடந்த ஜூலையில் முழுமையான அணு-சோதனை தடை ஒப்பந்தத்தை (CTBT) இலங்கை உத்தியோகபூர்வமாக ஒப்பந்தத்தை அங்கீகரித்தாகவும், இலங்கையின் முழுமையான அணு-சோதனை தடை ஒப்பந்தத்தை (CTBT) அணுவாயுதக் குறைப்பு மற்றும் அணு ஆயுதக் கட்டுப்பாடு ஆகியவற்றின் நீண்டகால மற்றும் நிலையான கொள்கையுடன் ஒத்துப்போகிறது என்றும் தெரிவித்தார்.
1996 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், முழுமையான அணு-சோதனை தடை ஒப்பந்தத்தில் (CTBT) கைசாத்திட்ட 13ஆவது நாடாக இலங்கை விளங்குகிறது. அதன்படி, கண்டி பல்லேகலவில் துணை நில அதிர்வு நிலையமும் நிறுவப்பட்டது.
அணு ஆயுத மட்டுப்படுத்தலுக்காக இலங்கை அர்ப்பணிக்கும்
இணக்கப்பாட்டை செயல்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக, முழுமையான அணு – சோதனை தடை ஒப்பந்த அமைப்பின் (CTBTO) நிர்வாகப் பணிப்பாளர் பிலாய்ட் மற்றும் முழுமையான குழுவின் இடைவிடாத முயற்சிகளையும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி பாராட்டினார்.
மேலும், 1996 இல் ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டதில் இருந்து, தள ஆய்வுகள் (OSI) பிரிவுடன் நெருக்கமான ஒத்துழைப்பு உட்பட, முழுமையான அணு-சோதனை தடை ஒப்பந்த அமைப்பின் (CTBTO) பணிகளுக்கு இலங்கை செயற்திறன்மிக்க வகையில் ஆதரவளித்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள் உட்பட 180 பேரின் பங்கேற்புடன் 2025 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள அடுத்த தள ஆய்வுகள் (OSI) கூட்டு களப்பயிற்சியை (OSI) இலங்கை நடத்தும் என்றும் அமைச்சர் கூறினார்.
முழுமையான அணு-சோதனை தடை ஒப்பந்த அமைப்பின் (CTBTO) தள ஆய்வு திறன்களை மேம்படுத்துவதற்கும் மேலும் முன்னேற்றுவதற்கான வாய்ப்புகளை அடையாளம் காண்பதற்கும் இந்த பயிற்சி ஒரு முக்கியமான வாய்ப்பாக அமையும்.
இலங்கை இந்த உடன்படிக்கையை ஏற்று 26 ஆண்டுகள் நிறைவடைகிறது. மற்றும் உலகளாவிய அணு ஆயுதக் குறைப்பு மற்றும் அணு ஆயுத கட்டுப்பாடுகளை அடைவதற்கான நிர்வாக பொறிமுறைகளில் ஒரு அடிப்படை மைல்கல்லாக அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
முழுமையான அணு – சோதனை தடை ஒப்பந்தம் (CTBT) அணுசக்தி சோதனைக்கு எதிராக ஒரு குறிப்பிடத்தக்க கூட்டு நம்பிக்கையை வளர்ப்பதற்காக செயற்படுவதுடன் மேலும் பனிப்போரின் ஆபத்தான அணு ஆயுதப் போட்டியை திறம்பட கட்டுப்படுத்தியது என்றார்.
மேலும், ஒப்பந்தத்தின் சரிபார்ப்பு பொறிமுறையானது அணு ஆயுதக் குறைப்புக்கு அப்பால் சிவில் மற்றும் அறிவியல் நோக்கங்கள் வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், ஒரு வலுவான சர்வதேச கண்காணிப்புக் கட்டமைப்பு மற்றும் சர்வதேச தரவு மையமொன்றையும் நிறுவியுள்ளதாகவும் தெரிவித்தார்.
அணு ஆயுத மட்டுப்படுத்தலுக்காக இலங்கை அர்ப்பணிக்கும்
அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் அண்மைக்கால சவால்களுக்கு மத்தியில், அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தின் (NPT) மீளாய்வு மாநாட்டில், உலகளாவிய பாதுகாப்பைப் பேணுவதில் விரிவான முழுமையான அணு-சோதனை தடை ஒப்பந்தம் (CTBT) முக்கிய பங்கை இலங்கை வலியுறுத்தியதோடு, இலங்கை அனைத்து நாடுகளுக்கும், குறிப்பாக ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதை அவசியப்படுத்தும் நாடுகள், அங்கீகரிப்பதற்கு உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
அணுவாயுத மயமாக்கல் மற்றும் நிராயுதபாணியாக்கத்திற்கான இலங்கையின் அர்ப்பணிப்பு உறுதியாக உள்ளது, மேலும் இந்த முக்கியமான இலக்குகளை அடைவதற்கு இலங்கை தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் உறுதியளித்தார்.
அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் (NTPNW) இலங்கை இணைவதற்கான சட்டரீதியான ஆவணம் கடந்த நாட்களில் கையளிக்கப்பட்டதை அமைச்சர் அலி சப்ரி நினைவு கூர்ந்த அமைச்சர், முழுமையான அணு-சோதனை தடை ஒப்பந்தத்தை (CTBT) அங்கீகரிப்பதன் ஊடாக, அணு ஆயுதக் குறைப்பு மற்றும் நிராயுதமாக்கல் மூலம் உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான இலங்கையின் நிலைபேறான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு
by நிருபர் காவலன்ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு ,மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்த ரஷ்ய சுகாதார அமைச்சர் மிக்கைல் முராஷ்கோ (Mr.Mikhail Murashko) உள்ளிட்ட தூதுக்குழுவினர் தமது உத்தியோகபூர்வ தூதுக்குழுவினர் தமது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து இன்று (05) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நாட்டை விட்டு புறப்பட்டனர். இலங்கை – ரஷ்ய உறவுகளை வலுப்படுத்திய உத்தியோகபூர்வ விஜயத்திற்குப்… - உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி
by நிருபர் காவலன்உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி ,அரசாங்கம் அதிக விலைக்கு உரத்தை கொள்வனவு செய்துள்ளதாக தேசிய விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் தேசிய உரச் செயலகம் விளக்கமளித்துள்ளது. அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அந்த அலுவலகம், குறித்த கூற்றில் உள்ள சில விடயங்கள் உண்மையானவை அல்ல என வலியுறுத்தியுள்ளது. 800 அமெரிக்க டொலர் கஜகஸ்தானில் இருந்து குறைந்த விலைக்கு உரத்தைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு இருந்தும், 800 அமெரிக்க… - நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி
by நிருபர் காவலன்நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி ,நான் ராஜினாமா செய்ய மாட்டேன், நாங்கள் தோற்கவில்லை’: மேற்கு வங்கத் தீர்ப்பை மம்தா பானர்ஜி நிராகரித்தார் தேர்தல் முடிவை ஒரு நியாயமான தோல்வியாக ஏற்கவில்லை தேர்தல் முடிவை ஒரு நியாயமான தோல்வியாக ஏற்கவில்லை என்றும், இந்த பின்னடைவு இருந்தபோதிலும் தனது அரசியல் போராட்டத்தைத் தொடரப் போவதாகவும் திட்டவட்டமாகக் கூறிய மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்… - நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்
by நிருபர் காவலன்நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம் நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம் ,நடிகர் ஜீவாவின் தந்தை இயக்குனர் தயாரிப்பாளராக விளங்கி வந்த சவுத்திரி அவர்கள் வீதி விபத்து ஒன்றில் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . ராஜஸ்தான் மாநிலத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் உறவினர் ஒருவருடன் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த பொழுது லொறி ஒன்றுடன் மோதி ஏற்பட்ட வீதி விபத்தில் படு காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . சாவுத்திரியின் தயாரிப்பில் உருவான பல… - பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்
by நிருபர் காவலன்பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம் பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம் திகழ்கிறது 20 சி-390 இராணுவப் போக்குவரத்து விமானங்கள் வரை வாங்குவதற்காக ஐக்கிய அரபு அமீரகத்துடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் மத்திய கிழக்கில் கூடுதல் பாதுகாப்பு செய்துகொண்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் கூடுதல் பாதுகாப்பு ஒப்பந்தங்களைப் பெற எதிர்பார்ப்பதாக பிரேசிலிய விமான உற்பத்தியாளரான எம்ப்ரேயர் நிறுவனம்…
முழு நாட்டை முதலீட்டு வலயமாக மாற்றியமைப்போம்
முழு நாட்டை முதலீட்டு வலயமாக மாற்றியமைப்போம்
பியகம சுதந்திர வர்த்தக வலயத்தை முன்னுதாரணமாக கொண்டு நாடு முழுவதும் நவீன வர்த்தக கைத்தொழில்மயமாக்கல் முயற்சிகளின் ஊடாக அடுத்த 15-20 வருடங்களில் நாட்டை துரித அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அபிவிருத்தியடையாத பிரதேசமாக காணப்பட்ட பியகம பிரதேசம் வர்த்தக வலய ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் பாரிய அபிவிருத்தி கண்டுள்ளமையினால், இலங்கை முழுவதையும் முதலீட்டு வலயமாக மாற்றப்பட்டு பல்வேறு புதிய முதலீட்டு வாய்ப்புகள் உலகுக்கு திறக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மல்வானை அல் முபாரக் மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழா நிகழ்வில் இன்று (06) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிங்கிரிய, ஹம்பாந்தோட்டை, கண்டி, திருகோணமலை மற்றும் வடமாகாணத்தில் கைத்தொழில் பேட்டைகளை அமைப்பதற்கான பல பகுதிகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டு அந்த பகுதிகள் அனைத்தும் வர்த்தக நகரங்களாக கட்டமைக்கப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஒவ்வொரு மாவட்டங்களினதும் அபிவிருத்திக்காக முதலீட்டு வாய்ப்புகளை கொண்டு வருவதற்கு மக்கள் பிரதிநிதிகளின் அர்ப்பணிப்பையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். அர்பணிப்புக்களை வலியுறுத்திய
ஜனாதிபதி, கைத்தொழில் மயமாக்கல் எமது நாட்டுக்கு ஏற்றதல்ல என சிலர் கூறினாலும் இன்று பியகம முதலீட்டு வலயம் தெற்காசியாவின் சிறந்த வர்த்தக வலயமாக மாறியுள்ளதாகவும் பியகம, கட்டுநாயக்க போன்ற
கைத்தொழில் மயமாக்கல் நாட்டின் ஒவ்வொரு மாகாணத்திலும் முன்னெடுக்கப்பட்டால், இன்று நாடு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்காது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
முழு நாட்டை முதலீட்டு வலயமாக மாற்றியமைப்போம்
புதிய முதலீட்டு வலயங்களை உருவாக்கி நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் அதேநேரம், எதிர்காலத்தில் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மல்வானை அல் முபாரக் மத்திய கல்லூரிக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மாணவர்களால் அன்பான வரவேற்பளிக்கப்பட்டது.
கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நினைவு முத்திரை வெளியிடப்பட்டதுடன் கல்லூரியின் புதிய மூன்று மாடிக் கட்டிடத்தை அமைத்தற்கான அடிக்கல்லையும் நாட்டி வைத்தார்.
மல்வானை அல் முபாரக் மத்திய கல்லூரிக்கு ஜனாதிபதியொருவரின் முதல் வருகையைக் குறிக்கும் வகையில், ஜனாதிபதி, கல்லூரியின் விருந்தினர் நினைவு பதிவேட்டில் பதிவிட்டார். அதனையடுத்து கல்லூரியில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பரிசுகள் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.
அதனையடுத்து கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமாரும் நிகழ்வில் உரையாற்றினார்.
இராஜாங்க அமைச்சர்களான பிரசன்ன ரணவீர, காதர் மஸ்தான், மல்வானை அல் முபாரக் மத்திய கல்லூரியின் அதிபர் எஸ்.எச்.எம். நயீம் உள்ளிட்டவர்களும் மாணவர்களும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவுby நிருபர் காவலன்
- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடிby நிருபர் காவலன்
- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்by நிருபர் காவலன்
- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைதுby நிருபர் காவலன்
- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுராby நிருபர் காவலன்
நான் ரணில் ராஜபக்க்ஷ அல்ல
நான் ரணில் ராஜபக்க்ஷ அல்ல
வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான சிறந்த பிரேரணையை தாம் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளதாகவும், அதனை
முன்னெடுத்துச் செல்வதா இல்லையா என்பதை தமிழ் கட்சிகளின் தலைவர்களே தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று (18) இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விருப்பம் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த ஜனாதிபதி, “நான் ரணில் விக்ரமசிங்க, ராஜபக்ச அல்ல” என்றும் தெரிவித்தார்.
வடகிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவே தான் விரும்புவதாகவும் அதிலிருந்து அரசியல் ஆதாயங்களைப் பெறுவதற்கு அல்ல என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி,
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் முழுமையான அதிகாரப் பகிர்வுக்கு இணங்கினால் மாத்திரமே அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு மக்களுக்கு தாம் ஒருபோதும் அநீதி இழைக்கப் போவதில்லை என்றும் அவர்களுக்காக மேலும் ஏதாவது செய்ய வேண்டுமாயின் கலந்துரையாடல் மற்றும் இணக்கப்பாட்டின் மூலம் பாராளுமன்றத்தின் முழுமையான ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பிலான பரிந்துரைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், பொலிஸ் அதிகாரங்கள் தவிர பிரேரணையில் முன்வைக்கப்பட்டுள்ள ஏனைய அனைத்து அதிகாரங்களையும் வழங்க முடியும் எனவும், பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்களும் ஏற்றுக் கொண்டால் மாத்திரமே பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதற்கு பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை தேவை எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
அதிகாரப் பகிர்வுக்கான அடிப்படை செயற்பாடுகள் நிறைவடைந்ததன் பின்னர் மாகாண சபைகளின் செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள உத்தேச சட்டமூலம் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. பிரதேச செயலாளர்கள் நியமனம், கல்வி, தொழிற்பயிற்சி மற்றும் உயர் கல்வி, விவசாயப் புத்தாக்கம் மற்றும் தொழிற்சாலைகள், சுற்றுலாத்துறை உள்ளிட்ட துறைகள் தொடர்பிலான சட்ட மூலங்களை சமர்பிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டது.
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்கும் போது, சில விடயங்கள் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திடமே இருக்கும் என்பதோடு அந்த விடயங்கள் தொடர்பில் சட்ட ரீதியாக அறிவிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்துக்கான வரைவு அரசியலமைப்பிற்கு அமைவானதா என்பதை அறிய சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் (ONUR) நல்லிணக்கத்திற்கான தேசிய செயற்திட்ட வரைவை விரைவில் அமைச்சரவையில் சமர்பிக்க இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பணிப்பாளர் நாயகம் நியமனத்தை தொடர்ந்தே உண்மையைக் கண்டறியும் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகம் ஸ்தாபிக்கப்பட்டதாகவும், அதற்குரிய தரப்பினர்களின் கருத்துக்களை உள்ளடக்கியதாக வழிக்காட்டல் வரைவுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு தேவையான பிரதான பணியாளர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதாகவும், அதற்குரிய சட்டம் அமுல்படுத்தப்பட்ட பின்னர் உரிய முறையான பொறிமுறை ஆரம்பமாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வடக்கு,கிழக்கு மாகாணங்களை இணைப்பது பற்றி தமிழ் எம்.பிக்கள் இங்கு கேள்வி எழுப்பியிருந்த நிலையில், எந்த விதத்திலும் வடக்கு கிழக்கை இணைப்பதற்கான ஏற்பாடோ அதுகுறித்த கலந்துரையாடல்களோ அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
வடக்கு, கிழக்கில் நீதி நிலைநாட்டும் செயற்பாடுகளில் வெளிநாட்டு நீதிபதிகளை ஈடுபடுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லையெனவும், அவசியம் ஏற்படும் பட்சத்தில் தெற்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் நடைமுறையில் உள்ள முறைமைகளுக்கு அமைய வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் அறிக்கைகளை மாத்திரம் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலம் மற்றும் காணாமல் போனோர் அலுவலகத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டதோடு, காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற 21,374 முறைப்பாடுகளில் இதுவரை 3,462 முறைப்பாடுகளின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், ஏனைய முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் இங்க குறிப்பிடப்பட்டது.
காணாமல் போனோர் தொடர்பிலான அலுவலகத்திற்கு, காணாமல் போனோர் தொடர்பிலான முழுமையான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என்பதை தமிழ் எம்.பிக்கள் சுட்டிக்காட்டியிருந்த நிலையில், அது தொடர்பில் அவர்களிடத்திலுள்ள தகவல்களை உண்மையை கண்டறிவதற்கான இடைக்கால பொறிமுறைக்கான செயலகத்திற்கு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தினார்.
ஊழல் ஒழிப்புச் சட்டம், ஜுலை 19 ஆம் திகதி பாராளுமன்ற குழுநிலையில் திருத்தங்களுக்கு உட்படுத்தப்படும் என்றும், உயர் நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்களும் பரிசீலிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக அரசாங்கத்தின் தற்போதைய வேலைத்திட்டம் தொடர்பிலும் ஜனாதிபதி இதன்போது விடயங்களைத் தெளிவுபடுத்தினார்.
வடக்கு மற்றும் கிழக்கில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களாக பசுமை ஹைட்ரஜன் மற்றும் அமோனியா உற்பத்தியில் முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குவது குறித்தும் பசுமை ஹைட்ரஜனின் ஊடாக கொழும்பு துறைமுக நகரத்தின் கவர்ச்சியை அதிகரிக்கும் திட்டம் குறித்தும் ஜனாதிபதி விளக்கினார்.
பசுமை ஹைட்ரஜன் மற்றும் அமோனியா உற்பத்தி மூலம் பிராந்தியத்தின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் திறனைப் பயன்படுத்துவதே வடக்கின் அபிவருத்தித் திட்டத்தின் விசேட நோக்கமாகும். இதன் மூலம் முதலீடுகளை ஈர்க்கவும் கொழும்பு துறைமுகத்தை மேம்படுத்தவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளதோடு, பூநகரி புதிய நகரத்தை புதுப்பிக்கத்தக்க வலுசக்தி பொருளாதார மையமாக பெயரிட்டு, இத்துறையில் வலுவான வளர்ச்சியை உருவாக்குவதே இதன் நோக்கமாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மேலும் “வடக்கிற்கு நீர்” திட்டத்தின் கீழ் பூநகரி ஏரி அபிவிருத்தி, யாழ்ப்பாணத்திற்கு நன்னீர் வழங்கும் நதிநீர் திட்டம், இரணைமடு நீர்த்தேக்கத்தின் கொள்ளளவை அதிகரிப்பது, சிறிய குளங்களின் புனரமைப்பு, காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் வவுனியா மற்றும் பலாலி விமான நிலைய அபிவிருத்தித் திட்டம், வட மாகாணத்தையும் தென்னிந்தியாவையும் இணைக்கும் படகுச் சேவை, காங்கேசன்துறை, பரந்தன் மற்றும் மாங்குளம் முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள் குறித்தும் ஜனாதிபதி இங்கு விளக்கினார்.
வடமாகாணத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் சுற்றுலாத்தலங்களின் அபிவிருத்தி, மன்னார் கோட்டை மற்றும் தீவுகள், காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் வடமராட்சி பிரதேசத்தில் சுற்றுலா படகுச் சவாரித் திட்டம், வன்னி மாவட்டத்தில் தென்னை பயிர்ச்செய்கையை ஊக்குவித்தல் மற்றும் பல்கலைக்கழக நகரமாக யாழ்ப்பாண நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டங்கள் குறித்து வடக்கு மற்றும் கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.
பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த், பிரசன்ன ரணதுங்க, விஜயதாச ராஜபக்ஷ, டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர்களான சுரேன் ராகவன், எஸ். வியாலேந்திரன், எஸ். சந்திரகாந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான ஆர், சம்பந்தன், எம்.ஏ. சுமந்திரன், சி.வி. விக்னேஷ்வரன், அங்கஜன் இராமநாதன், செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், எஸ். ஸ்ரீதரன், டி. சித்தார்த்தன், சாணக்கியன் இராசமாணிக்கம், தவராசா கலையரசன், கே. திலீபன், ஜி. கருணாகரன் உட்பட பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் உறுப்பினர்களும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உள்ளிட்ட அரச அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவுby நிருபர் காவலன்
- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடிby நிருபர் காவலன்
- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்by நிருபர் காவலன்
- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைதுby நிருபர் காவலன்
- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுராby நிருபர் காவலன்
வடக்கு கிழக்கு பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு
வடக்கு கிழக்கு பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையிலான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.
பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று மாலை 3 மணிக்கு இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
இன்றைய கூட்டத்தை புறக்கணிக்கவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.
பிரிட்டனில் ஆங்கிலம் தெரியாத தமிழரை அடித்து விரட்டிய ரணில்
பிரிட்டனில் ஆங்கிலம் தெரியாத தமிழரை அடித்து விரட்டிய ரணில்
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரிட்டன் வருகை தந்திருந்த பொழுது மக்களை சந்தித்தார் .அப்பொழுது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி ,யோகி அவர்கள் ,ஜனாதிபதியிடம் கேள்வியை எழுப்பினர்
அந்த கேள்வியானாது மிக முக்கியமானது ,அதில் இலங்கையில் ,
நடந்த இனப்படுகொலை ,மற்றும் மனிதபிமான செயல்பாடுகளாக அமைய பெற்றன .
பிரிட்டனில் ஆங்கிலம் தெரியாத தமிழரை அடித்து விரட்டிய ரணில்
ஆங்கிலத்தில் அவர் கேட்ட கேள்விக்கு ,ஆங்கிலம் அவருக்கு தெரியாவிட்டால் ,தமிழில் உரையாடும் படி சந்தர்ப்பம் வழங்கினார் ,
ஆனால் தமிழில் உரையாடும் பொழுது கூட ,
அவர் அதனை உரிய முறையில் மடக்கும் கேள்வியை கேட்க தவறியதால் ,
ரணில் நயப்புடைத்த சம்பவம் , உலக தமிழர்கள் மத்தியில் ,
வாத விவாத பொருளாக மாற்றம் ,பெற்றுள்ளது .
முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதிரணில்
முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி ரணில்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார் என, முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி ரணில்
ஜனாதிபதி செயலகம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில், நடமாடும் சேவை ஒன்று, ஜூலை மாத முற்பகுதியில் நடைபெறவுள்ளது.
இந்த நடமாடும் சேவைக்கு பிரதம விருந்தினராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்ளவுள்ளார் என முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்
பிரான்ஸ் பிரித்தானியாவுக்கு பறக்கும் ரணில் விக்கிரமசிங்க
பிரான்ஸ் பிரித்தானியாவுக்கு பறக்கும் ரணில் விக்கிரமசிங்க
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா பிரிட்டன் பிரித்தானியாவுக்கு
அரசமுறை உத்தியோக பூர்வ பயணத்தை மேற்கொள்கிறார் .
அவரது இந்த பயணத்தில் ,நாட்டுக்கு வழங்க படும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பேச பட உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
பொருளாதாரத்தில் வீழ்ச்சி நிலையில் காணப்படும்
,இலங்கை ,உலக நாடுகளிடம் கடனை வாங்கியுள்ளது ,
அந்த கடனை மீள் செலுத்த முடியா நிலையில் சிக்கி தவித்து வருகிறது .
இதனால் ,இலங்கை வரும் நான்கு வருடங்களில் சோமாலியாவாக,
மாற்றம் பெறும் நிலை காணப்படுகிறது .
ஜனாதிபதிக்கும் மொட்டுக்கும் இடையில் பேச்சு
ஜனாதிபதிக்கும் மொட்டுக்கும் இடையில் பேச்சு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் தரப்பின் உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று (29) மாலை சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
பொதுஜன பெரமுனாவின் மாவட்டத் தலைவர்கள் பங்காளி கட்சிகளின் தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.
இதன்போது தற்போதைய அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது
Featured
ஜனாதிபதி சிங்கப்பூருக்கு பயணம்
ஜனாதிபதி சிங்கப்பூருக்கு பயணம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (23) அதிகாலை இலங்கையிலிருந்து புறப்பட்டார்.
சிங்கப்பூருக்கான தனது ஒரு நாள் விஜயத்தின் போது ஜனாதிபதி, சிங்கப்பூரின் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கே. சண்முகம் மற்றும் அந்நாட்டின் பல உயர்மட்ட இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடல் நடத்தவுள்ளார்.
மே மாதம் 24 முதல் 27 வரை ஜனாதிபதியின் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடாவுடன் (Fumio Kishida) கலந்துரையாடல் நடைபெறவுள்ளதுடன், ஜப்பானுக்கும் இலங்கைக்கும்
இடையிலான இருதரப்பு உறவுகளை புதிய அணுகுமுறையின் ஊடாக வலுப்படுத்துவது குறித்தும், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பாகவும் இதன்போது கருத்துப் பரிமாற்றம் இடம்பெறவுள்ளது.
Featured
காணி கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள ஜனாதிபதி பணிப்புரை
காணி கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள ஜனாதிபதி பணிப்புரை
நடைமுறை அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஏற்றவாறு காணிக் கட்டளைச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பணிகளை துரிதப்படுத்துவதற்கு தகுதியான குழுவொன்றினை நியமிக்குமாறும் அறிவுரை வழங்கியுள்ளார்.
காணி முகாமைத்துவம் தொடர்பிலான நிறுவனங்களின் சட்ட ஏற்பாடுகளில் திருத்தம்
மேற்கொள்வது மற்றும் புதிய சரத்துக்களை திருத்துவது உள்ளீடு செய்வது தொடர்பில் ஜனாதிபதி
அலுவலகத்தில் புதன்கிழமை (10) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு
தெரிவித்தார்.
காணி கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள ஜனாதிபதி பணிப்புரை
காலணித்துவ ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட காணிச் சட்டங்களே இன்றும்
நடைமுறையில் உள்ளதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, காணி பயன்பாடுகள் தொடர்பில்
பல்வேறு சந்தர்ப்பங்களில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டத் திருத்தங்கள் நடைமுறை அபிவிருத்திச்
செயற்பாடுகளுக்கு பொறுத்தமற்றதாக காணப்படுகிறது என்றும் தெரித்தார்.
அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு காணிகளை பெற்றுக்கொடுப்பதில் காணப்படுகின்ற
சிக்கல்களை நீக்கி புதிய தேசிய காணிக் கொள்கை ஒன்றை உருவாக்குவது தொடர்பில் இங்கு
தீர்க்கமாக ஆராயப்பட்டது.
அதற்காக காணி ஆணைக்குழுவின் ஊடாக மாகாண சபை காணிகள் தொடர்பிலான
பிரச்சினைகளை நிவர்த்திக்குமாறும், கிராம சேவகர் பிரிவுகள் மட்டத்தில் காணப்படுகின்ற காணி
உரிமையாளர்களின் விவரம் மற்றும் பயன்படுத்தப்பட்டுள்ள காணிகள் மற்றும்
பயன்படுத்தப்படாத நிலையில் காணப்படுகின்ற காணிகள் தொடர்பில் கண்டறிந்து பிரதேச
செயலாளர் பிரிவு மட்டத்தில் அறிக்கையொன்றை தயாரிக்குமாறும் ஜனாதிபதி
வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கத்தின் தேவைகளுக்காக கையகப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படாமல் இருக்கின்ற
காணிகளை உரிமையாளர்களுக்கு மீளக் கையளிக்கும் பணிகளை ஆரம்பிக்குமாறும்,
எதிர்காலத்தில் அரசாங்கத்தின் தேவைகளுக்காக காணிகளை கையகப்படுத்தும் போது சந்தை
பெறுமதியை செலுத்தி அவற்றை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி
அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதன்போது நில அளவைத் திணைக்களம் மற்றும் விலை மதிப்பீட்டுத் திணைக்களங்களில்
காணப்படும் தாமதங்களை நிவர்திப்பதற்காக அவற்றின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு
அவசியமான நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி அறிவுரை
வழங்கினார்
Featured
ஜனாதிபதி தலைமையில் முக்கிய பேச்சுவார்த்தை
ஜனாதிபதி தலைமையில் முக்கிய பேச்சுவார்த்தை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று முதல் இரண்டு நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று (11) மாலை இந்த பேச்சுவார்த்தை ஆரம்பமாகவுள்ளது.
இன்றைய தினம் இடம்பெறவுள்ள சந்திப்பில், நல்லிணக்க பொறிமுறைகள், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், பயங்கரவாத தடுப்புச் சட்டம், காணி விவகாரம் என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளன.
இதேவேளை, நாளை நடைபெறவுள்ள சந்திப்பில், அதிகாரப் பகிர்வு தொடர்பாக, ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
Featured
ரணில் வீடு எரிப்பு ரங்கா சந்தேகநபர்
ரணில் வீடு எரிப்பு ரங்கா சந்தேகநபர்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சொந்த வீட்டை எரித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ. ஸ்ரீ ரங்காவை குற்றப்புலனாய்வு பிரிவினர் சந்தேகநபராக பெயர் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கமைய, ஜெ. ஸ்ரீரங்காவை எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, கடந்த 2011 ஆம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் பேரில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ. ஸ்ரீ ரங்கா தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Featured
நாட்டின் பாதுகாப்பு உறுதி ஜனாதிபதி ரணில்
நாட்டின் பாதுகாப்பு உறுதி ஜனாதிபதி ரணில்
நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக உயிர்த்த ஞாயிறு தினச் செய்தியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் தனது உயிர்த்த ஞாயிறு தினச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் வலி உங்கள் மனதில் இன்னும் வடுவாக இருக்கிறது என்பதை நான் நன்கு அறிவேன். அந்த துரதிஷ்டவசமான சம்பவம் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, அந்தப் பணிகளை எந்தவொரு தலையீடும் இன்றி
சுயாதீனமாகவும் பக்கச்சார்பற்றதாகவும் முன்னெடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கத் தேவையான பின்னணியை அமைத்துள்ளோம் என்பதையும் நான் நினைவுகூருகின்றேன்.
எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதவாறு, நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
#ethirinews #srilankanews #செய்திகள்


































