சேனிசை செல்லப்பா
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

தேனிசை செல்லப்பா

தேனிசை செல்லப்பா

காலத்தால் அழியாத காவியன்
கரிகால தேசத்தின் பாடகன்
நெஞ்சுக்குள் நிற்கின்ற முதல்வன்
நேயத்தை வீசும் பண்பன்

தடை நூறு வீழ்ந்தும்
தளராது நின்றவன்
தாயகம் பாடியே
தன் தாகம் தீர்த்தவன்

உனக்கும் எனக்கும் உன்னத உறவு -நீ
உயிருக்கு உயிரானாய் எங்களின் நிலவு
கண்ணீராய் போனதே எங்கள் கனவு
காணாமல் போனதே எங்கள் புலவு

ஆறாமல் துடிக்குதே நெஞ்சம்
ஐயா உந்தன் பாடலே தஞ்சம்
நீ தானே தருகிறாய் வீரம்
நினைக்கிறோம் ஈழம் கொஞ்சம் கொஞ்சம்

நீ வேண்டும் நீ வேண்டும் செல்லப்பா
நிலம் மீளும் நீ பாட வேண்டும்
நான் எழுத நீ பாட வேண்டும் – இழிந்த
நாவும் கொஞ்சம் மாற வேண்டும்

உன் அகவை நூறுக்குள் – ஈழம்
உயிர் பெற வேண்டும்
உயிர் உள்ளவரை
உலக தமிழ் வாழ நீ பாட வேண்டும் …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 04-04-2023

Posted in இலங்கை செய்திகள்

79வது அகவை காணும் தேனிசை செல்லப்பா

79வது அகவை காணும் தேனிசை செல்லப்பா

தமிழீழ விடுதலை புலிகளது போராட்டத்திற்கு தனது தேனிசை குரலினால்

உரமேற்றி வீரம் செழிக்க வைத்த
தேனிசை செல்லப்பா அவர்கள்

21/04/2020 நாளை 79வது பிறந்த நாள் கொண்டாடுகிறார் , தடைகள் மத்தியில் பல நெருக்கடியான சூழலில் ,அயராது உழைத்த பெருமகன் ,


விடுதலைக்காய் தன்னையே அர்ப்பணித்து ,பிள்ளைகளிற்கு தமிழ் பெயர் சூட்டி வாழும் தமிழ் மைந்தன் .அவரை நாமும் இந்த இனிய நாளில் வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்


வாழ்த்துக்கள் ஐயா ,மேலும் நூறாண்டு வாழி வாழி என எதிரி இணையமும் நெஞ்சார வாழ்த்துகிறது

79வது அகவை காணும்
79வது அகவை காணும்