Posted in இலங்கை செய்திகள்

முன்னாள் மதியவங்கி ஆளுநர் நாட்டை விட்டு செல்ல நீதிமன்றம் தடை -சிக்கலில் கோட்டா

முன்னாள் மதியவங்கி ஆளுநர் நாட்டை விட்டு செல்ல நீதிமன்றம் தடை -சிக்கலில் கோட்டா

முன்னாள்
மத்திய வாங்கி ஆளுநர் Ajith Nivard நாதரை விட்டு செல்ல எதிர்வரும்

பதினெட்டாம் திகதிவரை தடை விதிக்க பட்டுள்ளது


நாடு பெரும் பொருளாதாரா சீரழிவை சந்திக்க இவரே காரணமாக இருந்தார்

என தெரிவித்து நீதிமன்றில் வழக்கு தொடர பட்டுள்ளது

இவ்வேளையே இந்த இடைக்கால தடை விதிக்க பட்டுள்ளது ,இவர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டால் ஆளும் மகிந்தா


,கோட்டா சகோதர்கள் பெரும் நெருக்கடியில் சிக்குவார்கள் என தெரிவிக்க படுகிறது

    நீதிமன்றம்
    Posted in இலங்கை செய்திகள்

    மாங்குளத்தில் புதிய நீதிமன்றம் திறப்பு

    மாங்குளத்தில் புதிய நீதிமன்றம் திறப்பு

    முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நீதிமன்ற கட்டடத் தொகுதியினை நீதி அமைச்சர் அலி சப்ரி நேற்று (27) திறந்து வைத்தார்.

    முல்லைத்தீவு மாவட்டம் நிலபரப்பில் அதிகளவான நிலப்பரப்பாக காணப்படுகின்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு மக்கள் மிகுந்த தூரங்களில் இருந்து வருகை தரும் போது அவர்களுடைய வழக்குகள் கூப்பிடப்பட்டு அவர்களுக்கு

    பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சம்பவங்கள் போன்ற பல்வேறு பாதிப்புகளை கருத்திற்கொண்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் நீதிமன்றத்தில் கடமையாற்றிய

    அதிகாரிகளின் அயராத முயற்சியின் பயனாக முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பகுதியில் சுற்றுலா நீதிமன்றம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.

    ஆரம்பகாலத்தில் துணுக்காய் பகுதியில் இடம்பெற்ற இந்த நீதிமன்றத்தின் செயற்பாடுகள் காலப்போக்கில் மாங்குளத்தில் நிரந்தர கட்டடம் ஒன்றை

    அமைப்பதற்கு வழிவகுத்தது அந்த வகையிலே மாங்குளத்தில் நீதிமன்ற கட்டடத் தொகுதி ஒன்று அமைக்கப்பட்டு தற்போது வாரத்தின் ஒவ்வொரு புதன்கிழமையும் அங்கு வழக்கு விசாரணைகள் இடம் பெறுகின்றது.

    குறிப்பாக மாங்குளம், மல்லாவி, ஐயன்கன்குளம், நட்டாங்கண்டல் உள்ளிட்ட பொலிஸ் பிரிவுகளை உள்ளடக்கிய பகுதிகளில் வருகின்ற வழக்குகள் புதன்கிழமைகளில் இங்கே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

    இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான் பகுதியைச் சேர்ந்த மக்களின் நலன் கருதி மாங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள

    நீதிமன்ற கட்டடத் தொகுதியினை இன்றைய தினம் வைபவரீதியாக நாட்டினுடைய நீதி அமைச்சர் அலி சப்ரி திறந்து வைத்தார்.

    மாலை 3 மணி அளவில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி. சரவணராஜா தலைமையில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.

    இந்த நிகழ்வில் நீதி அமைச்சர் அலி சப்ரி, நீதி அமைச்சின் செயலாளர் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முல்லைத்தீவு மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுத்

    தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய காதர் மஸ்தான், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், சட்டத்தரணிகள் ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

    காலப்போக்கில் குறித்த நீதிமன்றத்தின் செயல்பாடுகள் வாரத்தின் 5 நாட்களும் இடம்

    பெறக்கூடிய வகையில் தனியாக நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டு குறித்த நீதிமன்றம் இயங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது

      Posted in Uncategorized

      தமிழகத்தில் தலைவர்களின் சிலைகளை அகற்ற வேண்டும்- ஐகோர்ட்டு அதிரடி

      தமிழகத்தில் தலைவர்களின் சிலைகளை அகற்ற வேண்டும்- ஐகோர்ட்டு அதிரடி

      தமிழகம் முழுவதும் பொது இடங்கள் மற்றும் சாலைகளில் உள்ள தலைவர்களின் சிலைகளை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

      தமிழகத்தில் தலைவர்களின் சிலைகளை அகற்ற வேண்டும்- ஐகோர்ட்டு அதிரடி
      சென்னை ஐகோர்ட்
      இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

      வேலூர் மாவட்டம், அரக்கோணம் தாலுகாவில் உள்ள கிராமம் ஒன்றில் அரசின் அனுமதி பெறாமல் புறம்போக்கு நிலத்தில் அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலையை அகற்றும்படி தாசில்தார் உத்தரவு பிறப்பித்தார்.

      இதை எதிர்த்து வழக்கறிஞர் வீரராகவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

      சுப்ரீம் கோர்ட்

      அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘நெடுஞ்சாலைகளை சிலைகளை வைக்கக் கூடாது என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு இருப்பதால், சிலையை அகற்றியதில் தவறில்லை’ என்று கூறினார். இதனை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.

      மேலும் நீதிபதிகள், ‘தமிழகம் முழுவதும் பொது இடங்கள், சாலைகள், புறம்போக்கு நிலங்கள், அரசு நிலங்களில் உள்ள தலைவர்கள் சிலைகளை மூன்று மாதங்களில் அடையாளம் கண்டு அகற்ற வேண்டும். பொதுமக்கள் உரிமைகள் பாதிக்கப்படாத வகையில் சிலைகள் மற்றும் கட்டுமானங்களை அமைப்பது குறித்து விரிவான விதிகளை வகுக்க வேண்டும்.

      அனுமதி பெற்று பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் தலைவர்களின் சிலைகளை அகற்றி, பூங்கா போன்ற இடங்களில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பாக 6 மாதங்களில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்து நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது

        Posted in இலங்கை செய்திகள்

        ஆபாச காணொளி – தம்பதிக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை

        ஆபாச காணொளி – தம்பதிக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை

        பெலிஹுல்ஓய பஹன்துடாவ பிரதேசத்தில் ஆபாச காணொளி ஒன்றை பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய தம்பதிக்கு 7 வருட ஒத்திவைக்கப்பட்ட மூன்று மாத சிறைத்தண்டனை விதித்து பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

        அதேபோல் குறித்த தம்பதிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளுக்கு 10,800 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

        பஹன்துடாவ நீர்வீழ்ச்சியில் பதிவு செய்யப்பட்ட குறித்த ஆபாச காணொளி கடந்த ஆகஸ்ட் மாதம் குறித்த தம்பதியினால் இணையத்தளத்தில் வௌியிடப்பட்டிருந்தது.

        இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகளினால் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

        மஹரகம மற்றும் எல்பிட்டி பகுதியை சேர்ந்த தம்பதியினர் இவ்வாறு கைது செய்யப்பட்டு கடந்த 16 ஆம் திகதி நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர் வழக்கினை நேற்றைய தினத்திற்கு (01) ஒத்தி வைத்து குறித்த இருவரும் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

        இந்நிலையில், நேற்று குறித்த தம்பதி பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது அவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து 7 வருட ஒத்திவைக்கப்பட்ட மூன்று மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

        Posted in இலங்கை செய்திகள்

        முஸ்லீம் தீவிரவாதி சகரான் மனைவி தொடர்ந்து தடுத்து வைப்பு

        இலங்கையில் பல இடங்களில் குண்டு வைத்து அப்பாவி மக்களை கொன்று குவித்த சகரான் என்ற மத போதகரின் மனைவி பாத்திமா

        படுகாயமடைந்த நிலையில் உயிருடன் மீட்க பட்டார் ,இவர்

        தற்போது நீதி விசாரணைக்கு உட்படுத்த பட்டு வருகிறார்

        இலங்கை நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில், அவரை

        தொடந்து தடுப்பு காவலில் வைக்குமாறு நீதிமன்ற நீதவானால் அதிரடி உத்தரவிட பட்டுள்ளது

        Posted in இலங்கை செய்திகள்

        20இல் சில பிரிவுகளை திருத்தி நிறைவேற்றலாம்- நீதிமன்றம்

        20இல் சில பிரிவுகளை திருத்தி நிறைவேற்றலாம்- நீதிமன்றம்

        அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்தில் சில

        பிரிவுகளை, குழுநிலையில் திருத்தி நிறைவேற்றலா​ம் என

        உயர்நீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ளதென, சபாநாயகர்

        மஹிந்த யாப்பா அபேவர்தன, சற்றுமுன்னர் சபைக்கு அறிவித்தார்.

        Posted in சினிமா

        தர்பார் படத்தை இணையதளங்களில் வெளியிட தடை

        தர்பார் படத்தை இணையதளங்களில் வெளியிட தடை

        ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் தர்பார்படத்தை இணையதளங்களில் வெளியிட சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.

        தர்பார் படத்தைஇணையதளங்களில் வெளியிட தடை – ஐகோர்ட்டு உத்தரவு
        ரஜினிகாந்த்


        ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் இன்று வெளியானது. வழக்கம் போல ரஜினி ரசிகர்கள் இதை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.

        தர்பார் படம் இன்று வெளியானதையொட்டி தியேட்டர்களில் ரசிகர்கள் குவிந்தனர். இந்தியாவில் மட்டும், 4,000 தியேட்டர்களில், ‘தர்பார்‘ படம் வெளியானது.

        பொங்கல் பண்டிகைக்கு, ஒரு வாரம் முன்னதாகவே வெளியான ‘தர்பார்’ படத்திற்கு, சிறப்பு காட்சிக்கு, அரசு அனுமதி வழங்கியுள்ளது.

        சென்னை ஐகோர்ட்டு

        இதனிடையே, தர்பார் படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை கோரி அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சென்னை

        ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,

        தர்பார் படத்தை 1,370 இணையதளங்களில்வெளியிட தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

        தர்பார் படத்தை இணையதளங்களில்
        Posted in இலங்கை செய்திகள்

        லஞ்சம் பெற்ற இரு பொலிஸ் அதிகரிகளுக்கு 28 வருடம் சிறை

        இலங்கையில் -லஞ்சம் பெற்ற இரு பொலிஸ் அதிகரிகளுக்கு 28 வருடம் சிறை

        இலங்கையில் – புத்தளம் பகுதியில் பணி புரிந்து வந்த கான்ஸடபிள்,மற்றும் இன்ஸபெக்டர் தர காவல்துறை

        அதிகாரிகள் இருவர் பத்தாயிரம் ரூபா லஞ்சம் பெற்ற குற்ற சாட்டில் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டு வந்தனர் .

        இந்த குற்ற சாட்டில் சிக்கிய இவர்களுக்கு சுமார் 28 வருடம் சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது .இலங்கை சட்டத்தின்

        நான்கு பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது .

        இந்த தீர்ப்பிலேயே இவ்வாறு 28 வருட சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது .

        லஞ்சம் பெரும் அரச ஊழியர்கள் அனைவரும் கைது செய்யப்படுவதுடன் ,அவர்கள் பணியில் இருந்து நீக்க படுவதுடன் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள படும் என

        கோட்டா அதிரடியாக அறிவித்து ,இரகசிய போலீசார் 2500 பேரை காவல் பணியில் ஈடுபடுத்தியுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது