Tag: துப்பாக்கி
துப்பாக்கி சூட்டில் மக்கள் மரணம்
துப்பாக்கி சூட்டில் மக்கள் மரணம்
மொரகஹஹேன மிரிஸ்வத்த பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் மக்கள் மரணம்.ஆட்டோ ஒன்றின் மீது பொலிஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிர் பலி ஏற்பட்டுள்ளது .
ஆட்டோவை நிறுத்தும் படி பொலிஸ் சமிக்கை காண்பித்த பொழுதும் ,ஆட்டோ நிற்காது சென்றதினால் ,அந்த ஆட்டோ மீது துப்பாக்கி சூடு நடத்த பட்டது .
இதன் பொழுது முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் பலியாகியுள்ளனர் . அதில் இருந்து ஒருவர் தப்பித்து சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர் .
போதைவஸ்து கடத்தல்
இந்த ஆட்டோ போதைவஸ்து கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் ,அப்பொழுதே அந்த ஆட்டோ மீது துப்பாக்கி சூடு நடத்த பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
காலுக்கு கீழே மீது துப்பாக்கி சூடு நடத்த வேண்டும் என்கின்ற விதி உள்ள பொழுது ,உடலின் ஏனைய பகுதியில் குண்டு பாய்ந்தது எப்படி என்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .
துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் சடலம் மீட்க பட்டு மருத்துவமனையின் ,மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது .
பொலீஸ் மீது விசாரணை மக்கள் கோரிக்கை
மக்கள் பயன்படுத்தும் ஆட்டோ மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடத்த பட வேண்டும் என மக்கள் கோரிக்கையை முன் வைத்துள்ளன .
முன்னரும் சிவில் உடையில் நின்ற காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் இருவர் மக்கள் பலியாகி இருந்தனர் .
அந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் ,தற்போது இந்த சூட்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சிறுமி காயம்
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சிறுமி காயம்
மின்னேரியா, கிரித்தலேயில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 17 வயது சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமி படுகாயமடைந்து பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து மின்னேரிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சிறுமி தனது குடும்ப உறுப்பினர்களுடன் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த வேளையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை மற்றும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
மாவனெல்லை, பதியதொர பிரதேசத்தில் நேற்று (06) இரவு பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
மாவனெல்லை பதியதொர பிரதேசத்தில் தகராறு ஒன்று ஏற்பட்டுள்ளதாக மாவனல்லை பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதன்படி பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
இதன்போது தகராறில் ஈடுபட்ட நபர், பொலிஸ் அதிகாரி ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, மற்றுமொரு பொலிஸ் அதிகாரி வானத்தை நோக்கிச் சுட்டதாகவும், பின்னர் குறித்த நபர் அந்த பொலிஸ் அதிகாரியையும் தாக்க முற்பட்ட போது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் தாக்குதலை நடத்த வந்த நபரின் தந்தை இலக்காகி மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் எனவும் அவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் தற்போது மாவனெல்லை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான விசேட நடவடிக்கையை மாவனெல்லை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிய நபர் ஒருவர் வைத்தியசாலையில்
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிய நபர் ஒருவர் வைத்தியசாலையில்
ரன்மினிதென்ன பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிய நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திஸ்ஸமஹாராம, ரன்மினிதென்ன பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய நபரே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை ரன்மினிதென்ன பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று சுற்றிவளைப்பை மேற்கொண்டதுடன், சந்தேக நபரை கைது செய்ய முற்பட்ட போது, பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது.
மாத்தளை வில்கமுவ பொலிஸ் நிலைய பொலிஸ் T-56 துப்பாக்கி மாயம்
மாத்தளை வில்கமுவ பொலிஸ் நிலைய பொலிஸ் T-56 துப்பாக்கி மாயம்
மாத்தளை வில்கமுவ பொலிஸ் நிலைய பிரதான வாயிலில் பாதுகாப்பான இடத்தில் பயன்படுத்தப்பட்ட T-56 துப்பாக்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கி காணாமல் போனது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
லண்டனில் துப்பாக்கி சூடு மூவர் காயம்
லண்டனில் துப்பாக்கி சூடு மூவர் காயம்
லண்டனில் கிளாபம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் மீட்க பட்டு மருத்துவமனையில் பெற்ற வண்ணம் உள்ளனர் .
துப்பாக்கி சூடு சுற்றிவளைக்க பட்டு தேடுதல் முடுக்கிவிட பட்டது .
எனினும் இதுவரை எவரும் கைது செய்யபடவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர் .
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

தென்னிலங்கையில் மற்றொரு துப்பாக்கிச் சூடு
தென்னிலங்கையில் மற்றொரு துப்பாக்கிச் சூடு
எல்பிட்டிய, பத்திராஜ வத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இன்று (26) காலை 07.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
கரந்தெனிய பிரதேச பொது சுகாதார பரிசோதகராக பணியாற்றி வந்த 51 வயதுடைய ரொஷான் குமார விதானகே என்ற நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இஸ்ரேலுக்குள் துப்பாக்கி சண்டை 11 பேர் காயம் பலி
இஸ்ரேலுக்குள் துப்பாக்கி சண்டை 11 பேர் காயம் பலி
இஸ்ரேலுக்குள் பாலஸ்தீன போர் படைகள் நுழைந்து
துப்பாக்கி சண்டை 11இஸ்ரேலியர்கள்காயம் ,பலி ,போலீஸ் இராணுவம் குவிப்பு
இஸ்ரேலுக்கு உள்ளே துப்பாக்கி சண்டை பலர் காயம்
இஸ்ரேலுக்கு உள்ளே துப்பாக்கி சண்டை பலர் காயம்
இஸ்ரேலுக்கு உள்ளே துப்பாக்கி சண்டை பலர் காயம் .
இஸ்ரேல் பாலஸ்தீன போர் அரங்கில் புதிய மாற்றம்
இஸ்ரேல் நகரங்களுக்கும் துப்பாக்கி சண்டைகள் மக்கள் மத்தியில் பதட்டம்
கொழும்பில் மேலும் ஒரு துப்பாக்கிச் சூடு
கொழும்பில் மேலும் ஒரு துப்பாக்கிச் சூடு
கொழும்பில் முகத்துவாரம் பொலிஸ் பிரிவில் முகத்துவாரம் வீதி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
முகத்துவாரம் வீதி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் முகாமையாளராக பணியாற்றி வரும் குறித்த நபர், நேற்று இரவு அந்த உணவகத்தின் நுழைவாயிலுக்கு அருகில் இருந்த போது காரில் வந்த இனந்தெரியாதோரால் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த கொழும்பு -14 மஹவத்தை பகுதியை சேர்ந்த 51 வயதான நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பில் மேலும் ஒரு துப்பாக்கிச் சூடு
இந்த துப்பாக்கிச் சூட்டுக்காக கைத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் சம்பவத்தின் பின்னர் சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு மோதரையில் சிக்கிய CCTV காட்சிகள்
துப்பாக்கிச் சூடு மோதரையில் சிக்கிய CCTV காட்சிகள்
நேற்றிரவு (13) மோதரையில் உள்ள உணவகம் ஒன்றின் முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் ஊடகங்களுக்கு வெளியாகியுள்ளன.
உணவகத்திற்கு முன்பாக காத்திருந்த நபர் ஒருவரை காரில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு மோதரையில் சிக்கிய CCTV காட்சிகள்
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபரின் வலது தோள்பட்டை, கழுத்து மற்றும் கால் ஆகிய பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உணவகத்தின் முகாமையாளராகப் பணியாற்றிய கொழும்பு 14 ஐ சேர்ந்த 51 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு கைத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்
ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இருவர் கைது
ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இருவர் கைது
ஆட்டுப்பட்டி தெரு – ஜிந்துபிட்டி பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரும் ஆதரவாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடவத்தை மற்றும் ஆட்டுப்பட்டி தெருவைச் சேர்ந்த 28 மற்றும் 39 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆட்டுப்பட்டி தெரு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
தமிழக தேர்தல் விஜய் அமோக வெற்றி
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர, 2.5 மில்லியன் டாலர் திருட்டு
இலங்கையின் மின்னணு கடவுச்சீட்டு
ராஜகிரியாவில் 120க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் கைது
காலி சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு
அரசை கடுமையாக சாடும் விமல்
துப்பாக்கிச் சூட்டில் அரசியல் கட்சியொன்றின் தலைவரும் பலி
துப்பாக்கிச் சூட்டில் அரசியல் கட்சியொன்றின் தலைவரும் பலி
துப்பாக்கிச் சூட்டில் அரசியல் கட்சியொன்றின் தலைவரும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பலியாகியுள்ளார் , துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவத்தில் ஐவரும் அடங்குவதாக கணடறியப்பட்டுள்ளது ..
அவர்களில், ‘எங்கள் மக்கள் கட்சி’ என்ற அரசியல் கட்சியின் தலைவர் சமன் பெரேராவும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதாள உலக குழுக்களுக்கு இடையில் நிலவிய நீண்டகால பகையே துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் அரசியல் கட்சியொன்றின் தலைவரும் பலி
டிபெண்டர் ரக வாகனமொன்றில் பயணித்தவர்களை இலக்கு வைத்து கெப்ரக வாகனமொன்றில் பிரவேசித்தவர்கள் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்..
அத்துடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ கூறினார்.
துப்பாக்கி சூட்டில் தங்காலை ஐவர் பலி
துப்பாக்கி சூட்டில் தங்காலை ஐவர் பலி
துப்பாக்கி சூட்டில் தங்காலை பகுதியில் ஐவர் பலியாகியுள்ளனர் , டிபென்டரில் பயணித்தவர்கள் மீது நடத்த பட்ட துப்பாக்கி சூடடில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொலிசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் லொறி சாரதி ஒருவர் பலியாகி இருந்தார் .
அதனை அடுத்து தற்போது தங்காலையில் கடை ஒன்றின் முன்பு நின்றவர்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளளனர் .
எனினும் கடையில் பொறுத்த பட்டிருந்தcctv காரமா மூலம் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தியவர்களை கண்டறியும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர் .
இலங்கையில் அதிகரித்து செல்லும் இவ்விதமான துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
துப்பாக்கி சூடு மாத்தறை இளைஞன் பலி
துப்பாக்கி சூடு மாத்தறை இளைஞன் பலி
மாத்தறை – தெலிஜ்ஜவில பிரதேசத்தில் நேற்றிரவு (20) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர், இலக்கு வைக்கப்பட்ட நபர் அல்ல என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.
நேற்று (20) இரவு 08 மணி அளவில் மாத்தறை – மாலிம்படை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெலிஜ்ஜவில சந்தியில் அமைந்துள்ள கையடக்கத் தொலைபேசி உபகரண விற்பனை நிலையம் ஒன்றில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் தொலைபேசி உபகரணக் கடைக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
துப்பாக்கி சூடு மாத்தறை இளைஞன் பலி
குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 22 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தெனிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த மிந்திக அளுத்கமகே எனவும், அவர் தனது கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்வதற்காக கடைக்கு வந்துள்ளாதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணை நடத்தப்பட்டதுடன், கடையின் உரிமையாளரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், மாத்தறை பிரதான நீதவான் அனுருத்த புத்ததாச, அவரை பொலிஸ் காவலில் எடுத்து பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
பொலிஸ் துப்பாக்கி சூடு துப்பாக்கி சூட்டில் இறந்தவருக்கு ஒரு மில்லியன் இழப்பு வழங்கிய பொலிஸ்
பொலிஸ் துப்பாக்கி சூடு துப்பாக்கி சூட்டில் இறந்தவருக்கு ஒரு மில்லியன் இழப்பு வழங்கிய பொலிஸ்
பொலிஸ் நாரம்மல பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தியதில் லொறி சாரதி ஒருவர் பலியானார் ,இந்த துப்பாக்கி சூட்டில் இறந்தவருக்கு ஒரு மில்லியன் இழப்பு வழங்கிய பொலிஸ் சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கையில் தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பாவம் தேர்தலில் மிக பெரும் எதிர்வினையை ஆற்றும் என்பதால் ,போலீஸ் துப்பாக்கி சூட்டில் இறந்தவருக்கு பொலிஸார் இந்த ஒரு மில்லியன் இழப்பு தொகையை வழங்கியுள்ளனர் .
இலங்கையில் அப்பாவி மக்கள் மீது ஆதாரமற்ற நிலையில் பொலிஸ் துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது .
குற்றவாளியின் காலின் கீழே பொலிஸ் துப்பாக்கி சூடு நடத்த வேண்டும் என்கின்ற விதி உள்ள பொழுதும் ,அதனை மதிக்க மறந்து இவ்வாறு கண்மூடித்தனமாக பொலிஸ் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவங்கள் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
இந்த துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு வழங்கிய பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் செய்யபட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது .
பற்றைக்குள் துப்பாக்கி குண்டு துப்பாக்கியுடன் பற்றையை சுற்றிவளைத்த பொலிஸ்
பற்றைக்குள் துப்பாக்கி குண்டு துப்பாக்கியுடன் பற்றையை சுற்றிவளைத்த பொலிஸ்
பற்றைக்குள் துப்பாக்கி குண்டு கண்டுபிடிக்க பட்ட நிலையில் துப்பாக்கி தாங்கிய பொலிசார்
குறித்த பற்றையை சுற்றிவளைத்து சோதனை நடத்தினர் .
வன்னி புதுக்குடியிருப்பு மாலிகைத்தீவு பகுதியில் உள்ள பற்றைக்குள் இருந்து 37 துப்பாக்கி குண்டுகள் மீட்க பட்டன .
இந்த துப்பாக்கி குண்டுகள் யாவும் 50 மில்லி மீட்டர் கனரக துப்பாக்கிக்கு பயன்படுத்த படும் குண்டுகள் என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளன .
போர் முடிவடைந்து 14 வருடங்கள் கழிந்த பின்னர் ,எவ்வாறு இந்த பற்றைக்குள்
குறித்த துப்பாக்கி குண்டுகள் ,வந்தடைந்தன என்பது தொடர்பில் போலீசார் எதனையும் தெரிவிக்கவில்லை .
பற்றைக்குள் துப்பாக்கி குண்டு துப்பாக்கியுடன் பற்றையை சுற்றிவளைத்த பொலிஸ்
குறித்த ஆயுதங்கள் கண்டுபிடிக்க பட்ட பகுதிகளில் ஆட்கள் நடமாட தடை விதிக்க பட்டு, விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
தேர்தல் இடம்பெற உள்ள வேளை பார்த்து ,இவ்வாறான ஆயுதங்கள் கண்டுபிடிக்க படுகின்றமை இங்கே கவனிக்க தக்கது .
ஆயுதங்களை வைத்து விட்டு அவற்றை அதே இடத்தில் எடுத்து பர பரப்பை கிளப்பும் ,நல்லாட்சி அரசியல் வாதிகள் சித்து விளையாட்டு இதுவென தெரிவிக்க படுகிறது
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு
- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி
- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்
- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது
- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா
- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்
- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு
- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை
- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026
- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணம்
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணம்
நவகமுவ, துன்ஹந்தஹேன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி பலி
துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி பலி
மாத்தறை – வெலிகம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சோதனை நடவடிக்கையின் போது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
வெலிகம – பெலேன பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று (31) அதிகாலை துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன், துப்பாக்கிச் சூடு நடத்திய வேனை வெலிகம பொலிஸார் துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதன்போது இடம்பெற்ற பதில் துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முல்லைத்தீவில் 4500 துப்பாக்கி ரவைகள் மீட்பு
முல்லைத்தீவில் 4500 துப்பாக்கி ரவைகள் மீட்பு
வலைஞர்மடம் பகுதியில் உள்ள வயல்காணி ஒன்றில் T- 56 வகை துப்பாக்கி ரவைகள் 4,500 நேற்று (27) மீட்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு – வலைஞர்மடம் பகுதியில் கிறிஸ்தவ தேவாலய வீதியிலுள்ள வயல் காணி ஒன்றில் குறித்த காணி உரிமையாளர் காணியில் மண்ணை அகழ்ந்தெடுக்கும் போது துப்பாக்கி ரவை பெட்டிகள் இருந்ததனை அவதானித்துள்ளார்.
அதனையடுத்து அப்பகுதியில் உள்ள கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்து முல்லைத்தீவு பொலிஸார் குறித்த சம்பவ இடத்திற்கு வருகைதந்து குறித்த துப்பாக்கி ரவைகளை மீட்டெடுத்துள்ளனர்.
T-56 வகை துப்பாக்கி ரவைகள் அடங்கிய ஆறு பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் மொத்தமாக 4,500 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கி ரவைகள் முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளது.




















































