Tag: சினிமா
தந்தை நலமாக உள்ளார்.. நடிகர் சிம்பு
தந்தை நலமாக உள்ளார்.. நடிகர் சிம்பு
நடிகர் டி.ராஜேந்தர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டத்தை குறித்து சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
என் தந்தை நலமாக உள்ளார்.. நடிகர் சிம்பு அறிக்கை
சிம்பு – டி.ராஜேந்தர்
பிரபல இயக்குனரும், நடிகர் சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியானது.
இவர் இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், கலை இயக்குனர், தயாரிப்பு, மேலாளர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகம் காட்டியவர்.
நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் திடீர் உடல்நலக் குறைவால் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக
அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இருதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக் குழாய், வால்வுகளில் அடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக தொடர் மருத்துவ சிகிச்சை
மேற்கொண்டு வருவதாகவும், தற்போது நல்ல முறையில் அவர் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர் என தகவல் வெளியாகியது.
இந்நிலையில் டி.ராஜேந்தரின் உடல்நலம் குறித்து அவருடைய மகனும் நடிகருமான சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பது, எனது ஆருயிர் ரசிகர்களுக்கும், அன்பான பத்திரிகை ஊடக நண்பர்களுக்கும் வணக்கம்.
எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய
இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும், உயர்
சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம். அவர் முழு சுய நினைவுடன், நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து, உங்கள் அனைவரையும் சந்திப்பார்.
உங்கள் பிராத்தனைகளுக்கும், அனைவரின் அன்புக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
படுக்கையறை காட்சி கேள்வி- கடுப்பான மாளவிகா மோகனன்
படுக்கையறை காட்சி கேள்வி- கடுப்பான மாளவிகா மோகனன்
தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமான நடிகை மாளவிகா
மோகனன் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடிய பொழுது பலவிதமான கேள்வி எழுப்பப்பட்டது.
படுக்கையறை காட்சி பற்றி கேள்வி.. கடுப்பான மாளவிகா மோகனன்
தனுஷ் – மாளவிகா மோகனன்
கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
பின்னர் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார்.
மாளவிகா மோகனன்
இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். கடைசியாக இவர்
தனுஷுடன் இணைந்து நடித்து வெளியான ‘மாறன்’ படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.
ரசிகரின் கேள்வி
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதும் ரசிகர்களுடன் உரையாடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில், மாளவிகா மோகனன் சமூக
வலைத்தளத்தின் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள் பலர் பலவிதமான கேள்விகளை எழுப்பினர். அதில் ரசிகர் ஒருவர் மாறன் படத்தில்
தனுஷ் உடனான படுக்கையறை காட்சியை எத்தனை முறை படமாக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினார். இதற்கு, கடுப்பான மாளவிகா உங்கள் மண்டைக்குள் மோசமான
எண்ணம் உடைய இடம் இருக்கிறது என காட்டமாக பதிலளித்துள்ளார்.
இவரின் இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நிக்கி கல்ராணிக்கு கிடைத்த இரட்டிப்பு மகிழ்ச்சி
நிக்கி கல்ராணிக்கு கிடைத்த இரட்டிப்பு மகிழ்ச்சி
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த நிக்கி கல்ராணிக்கு ஒரே நாளில் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்.
ஒரே நாளில் நிக்கி கல்ராணிக்கு கிடைத்த இரட்டிப்பு மகிழ்ச்சி
நிக்கி கல்ராணி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நிக்கி கல்ராணி. இவருக்கும் நடிகர் ஆதிக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.
அதே தினத்தில் நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி திருமணத்தன்று ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். சஞ்சனா இரண்டு வருடங்களுக்கு முன்பு
ஆசிஷ் பாஷா என்பவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார்.
நிக்கி கல்ராணி
சஞ்சனா தமிழில் சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். 2020ம் வருடம் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்கள் சிறையில் இருந்து பின்னர்
பெயில் பெற்று வெளியில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கதறி அழுத யாஷிகா
கதறி அழுத யாஷிகா
நடிகை யாஷிகா ஆனந்த் சமூக வலைதளத்தில் பதிவிட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
கதறி அழுத யாஷிகா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
யாஷிகா ஆனந்த்,
2016-ம் ஆண்டு வெளியான ‘கவலை வேண்டாம்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர், யாஷிகா ஆனந்த். சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில்
வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.
யாஷிகா ஆனந்த்
அடுத்தடுத்த படங்களிலும் கவர்ச்சியாக நடித்து பேசப்பட்டார். படவாய்ப்புகளும் குவிந்து வந்தன. சமீபத்தில் எதிர்பாராத கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த அவர்
பல மாதங்கள் ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் பழைய நிலைக்கு மீண்டு, ஒரு சில படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
சமூக வலைதளங்களிலும் யாஷிகா ஆனந்த் சுறுசுறுப்பாக இருப்பவர். ரசிகர்களுடன் தொடர்ந்து உரையாடி பல ஏடாகூடமான கேள்விக்கு பதிலளித்தும் உள்ளார்.
அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் யாஷிகா தற்போது கதறி அழும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவரின்
நண்பர்களும் அழுவதால் ரசிகர்கள் யாஷிகாவிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழர்களின் வாழ்வில் சோகமான வரலாற்றை கொண்டது மே18 தமிழின அழிப்பு! video
தமிழர்களின் வாழ்வில் சோகமான வரலாற்றை கொண்டது மே18 தமிழின அழிப்பு! video
ஆளும் ஜனாதிபதி மகிந்த கோட்டா அரசுகளினால் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் நச்சு குண்டுகள் வீசி தமிழர்கள் அழிக்க பட்டனர் .
அவ்விதம் நடத்த பட்ட தமிழ் இன அழிப்பின் வலிதாங்கிய நாள் இன்றாகும்.
இவ்வேளை வட்டக்கச்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளும்னற உறுப்பினர் சிறிதரன் தலைமையில் இடம்பெறும் நிகழ்வுகள் இவை.
மக்களின் எழுச்சியும் அவர் தம் உள்ளக்கிடக்கையில் உறங்கி கிடைக்கும் உணர்வுகளின் பிரதி பலிப்பை இஙேகே காணலாம் .
கொழுப்பு குறைப்பு அறுவை சிகிச்சையின் போது நடிகை மரணம்
கொழுப்பு குறைப்பு அறுவை சிகிச்சையின் போது நடிகை மரணம்
கீதா, தொரசானி, ஒலவின நில்தானா போன்ற தொலைக் காட்சித் தொடர்களில் நடிகை சேத்தனா ராஜ் நடித்துள்ளார்.
கொழுப்பு குறைப்பு அறுவை சிகிச்சையின் போது நடிகை மரணம்- மருத்துவமனை மீது போலீசார் வழக்குப் பதிவு
சேத்தனா ராஜ், வரதராஜ்
கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் வரதராஜ் என்பவரது மகள் சேத்தனா ராஜ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
இந்நிலையில் உடல் கொழுப்பை குறைக்கும் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை உயிரிழந்தார்.
பெங்களூரு ராஜாஜி நகரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த நடிகை சேத்தனா ராஜிற்கு மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்த பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் தனியார் மருத்துவமனை மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் மருத்துவமனையின் அலட்சியத்தால் தமது மகள் உயிரிழந்ததாக நடிகையின் பெற்றோர் பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர். அறுவை சிகிச்சை வேண்டாம் என்று என் மகளிடம் கேட்டுக் கொண்டேன். ஆனால் தமக்கு தெரியாமல் அவர் மருத்துவமனையில் சேர்ந்தார் என அவரது தந்தை வரதராஜ் குறிப்பிட்டுள்ளார்.
அறுவை சிகிச்சையின் போது தமது மகளுக்கு மூச்சு விடுவதில் சிக்கல் இருப்பதாக மருத்துவமனை ஊழியர்கள் என் மனைவியிடம் தெரிவித்தனர். நாங்கள் அவளை வேறு மருத்துவமனைக்கு மாற்றினோம், அங்கு அவள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர் என வரதராஜ் தெரிவித்துள்ளார்.
போதுமான உபகரணங்களின்றி அறுவை சிகிச்சை செய்ததால், என் மகள் உயிரிழந்தார் என்றும் அவர் கூறியுள்ளார்.
22 வயதான நடிகை சேத்தனாராஜ் கீதா, தொரசானி, ஒலவின நில்தானா உள்ளிட்ட கன்னட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.
மேலும் ஹவயாமி என்ற கன்னட சினிமாவிலும் நடித்துள்ளார்.
நடிகர் சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு
நடிகர் சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு
ரு சாரர் மத உணர்வுகளுக்கு எதிராக உள்நோக்கத்துடன் செயல்படுதல் என்ற பிரிவில் நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெய்பீம் பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு
நடிகர் சூரியா
நடிகர் சூரியாவின் 2டி தயாரிப்பு நிறுவனம் தயாரித்த ஜெய்பீம் திரைப்படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கியிருந்தார். சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர்.
கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியான ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாய மக்களை அவமதிக்கும் நோக்கத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டு
உள்ளதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து குறிப்பிட்ட அந்த காட்சி திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்டது. இது தொடர்பாக இயக்குநர் ஞானவேல் மன்னிப்பு கோரியிருந்தார்.
இந்த நிலையில் ஜெய்பீம் திரைப்படம் ஒரு சாரர் மத உணர்வுகளுக்கு எதிராக உள்நோக்கத்துடன் உள்ளதாக கூறி நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் த.செ.ஞானவேல் ஆகியோர் மீது வேளச்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஸ்ரீருத்ர வன்னியர் சேவா அமைப்பு சார்பில் சந்தோஷ் என்பவர் அளித்த புகார் மனு மீது வேளச்சேரி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
முன்னதாக பிரிவினையை ஏற்படுத்தி, ஜாதி, மத கலவரங்களை துாண்டும் வகையில், ஜெய்பீம் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது என்றும் இதனால், நடிகர் சூர்யா,
இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி ருத்ர வன்னியர் சேனா தலைவர் சந்தோஷ், சைதாப்பேட்டை 18வது நீதிமன்றத்தில்,மனு தாக்கல் செய்திருந்தார்.
அதன் அடிப்படையில் சூர்யா, ஞானவேல் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து அதன் விபரத்தை,
வரும் 20ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தி ஒழிக என சொல்வது என் வேலையில்லை – கமல்ஹாசன்
இந்தி ஒழிக என சொல்வது என் வேலையில்லை – கமல்ஹாசன்
இந்தி ஒழிக என சொல்வது என் வேலையில்லை ஆனால் தமிழ் வாழ்க என சொல்வது என் கடமை என்று விக்ரம் பட விழாவில் கமல்ஹாசன் தெரிவித்தார்.
‘இந்தி ஒழிக’ என சொல்வது என் வேலையில்லை – கமல்ஹாசன் பேச்சு
கமல்ஹாசன்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விக்ரம்’. இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை
கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் முதல் பாடலான ‘பத்தல பத்தல’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. இப்படம் ஜூன் 3 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் ‘விக்ரம்’ திரைப்படத்தின் இசை மற்றும்
டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், இயக்குனர் பா.ரஞ்சித், பார்த்திபன், நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், சிலம்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கமல்ஹாசன்
இதனைத்தொடர்ந்து விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், “தமிழ் வாழ்க என்று சொல்வது என் கடமை, அதற்கு இடையூறாக யார் வந்தாலும் எதிர்த்து நிற்பேன் இதற்கும் அரசியலுக்கும் சம்மந்தமில்லை. தாய் மொழியை விட்டுவிடாதீங்க. இந்தி
ஒழிக என சொல்வது என் வேலையில்லை, ஆனால் தமிழ் வாழ்க என சொல்வது என் கடமை. இந்தியாவின் அழகு அதன் பன்முகத்தன்மை.
4 ஆண்டுகளுக்கு பிறகு என் படத்தின் விழா, அதற்கு நான் காரணமல்ல நீங்கள் தான். யாருமே இங்கு முழு நேர அரசியல்வாதிகள் அல்ல. முதன்முதலில் நான் அரசியலுக்கு வருகிறேன் என்ற பொழுது டி.ஆர். என்னை தேடி வந்து கதறி கதறி அழுதார், நீங்கள்
எப்படி இப்படி பண்ணலாம்னு கேட்டு அழுது என் சட்டை நனைந்துபோனது, என் முடிவுக்கு நான் உட்பட பலரும் வருத்தப்பட்டார்கள். அரசியல் களத்தில் புதிய
நாகரீகத்தை வளர்க்க அரசியல் வந்துள்ளேன். இப்ப வரவில்லை என்றால் எப்போது? என் தமிழ் உச்சரிப்புக்கு காரணம் மூவர் சிவாஜி, கலைஞர், கண்ணதாசன். தாத்தாவுடன்
தொடங்கிய பயணம் தற்போது பேரன் உதயநிதி வரை தொடர்கிறது. இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் வெளியிடுகிறார்களா என்று கேட்டனர். தமிழக முதல்-அமைச்சர்
மு.க.ஸ்டாலின் அரசியலுக்கு அப்பாற்பட்டு நண்பர். அது எப்படி என்று கேட்கலாம். ஏன் ரஜினிகாந்தும் நானும்
போட்டியாளர்களாக இருந்துகொண்டு நண்பர்களாக இல்லையா? அதுபோலதான்” என்று அவர் கூறினார்.
நடிகை தூக்கு போட்டு தற்கொலை
நடிகை தூக்கு போட்டு தற்கொலை
பிரபல நடிகை வீட்டில் தூக்கு போட்ட நிலையில் உயிரிழந்துள்ள சம்பவம் அவருடைய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல நடிகை தூக்கு போட்டு தற்கொலை
பல்லவி டே
மேற்கு வங்காளத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த இளம் நடிகை பல்லவி டே (வயது 25). கொல்கத்தா நகரின் கர்பா பகுதியில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று காலை காணப்பட்டார். அவரை பங்கூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
பல அடுக்குகளை கொண்ட குடியிருப்பு கட்டிடத்தின் 2வது தளத்தில் வசித்து வந்த அவர் படுக்கை விரிப்பு ஒன்றின் உதவியால் மின் விசிறியில் தூக்கு போட்ட நிலையில் காணப்பட்டார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு
உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் கூறும்போது, சம்பவம் நடந்த பகுதியில் இருந்து தற்கொலை செய்ததற்கான குறிப்பு எதுவும் கிடைக்கப் பெறவில்லை.
அவரது உடலின் வெளியே காயம் ஏற்பட்டதற்கான அடையாளம் எதுவும் இல்லை என தெரிவித்து உள்ளனர். இதனை தொடர்ந்து, இயற்கைக்கு முரணான மரணம் என்று
வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லவி டே
அவர், மன் மானே நா என்ற தொலைக்காட்சி தொடரில் முக்கிய வேடமேற்று நடித்து ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தார். அவர் தற்கொலை செய்துள்ளார் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். ஆனால், பல்லவி கொல்லப்பட்டு இருக்கலாம் என அவரது
குடும்பத்தினர் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளனர். பல்லவியுடன் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசித்து வரும் சாக்னிக் சக்ரவர்த்தி என்பவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரேஷம் ஜான்பி என்ற தொடரிலும், அமி சிராஜிர் பேகம் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் அவர் நடித்து வந்துள்ளார். இதனால், ரசிகர்கள் வட்டத்தில் அவருக்கு
நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது. அவர் உயிரிழந்தது ரசிகர்கள் மற்றும் அவரது நண்பர்கள்,
திரையுலக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
லிப் கிஸ் அடித்த சன்னி லியோன்
லிப் கிஸ் அடித்த சன்னி லியோன்
பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோன், அவருடைய பிறந்தநாள் நிகழ்வில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
லிப் கிஸ் அடித்த சன்னி லியோன்.. வைரலாகும் புகைப்படம்
சன்னி லியோன், Sunny Leone
ஆபாச படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன் தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். தற்போது
தமிழ், இந்தி, கன்னட மொழிகளில் தயாராகும் வீரமாதேவி என்ற சரித்திர படத்தில் நடித்து வருகிறார். மேலும் பேய்ப்படம் ஒன்றில் காமெடி நடிகர் சதீஷுடன் இணைந்து நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சன்னி லியோன், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிடுவதை வழக்கமாக
வைத்துள்ளார். சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற சன்னி லியோன் பிகினி உடையில் கவர்ச்சியாக எடுத்துகொண்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு இருந்தார்.
சன்னி லியோன்
இந்நிலையில், சன்னி லியோன் பிறந்தநாளில் அவருக்கு நெருக்கமானவர்களுடன் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.
அதில் அவருடைய கணவர் டேனியலுடன் லிக் கிஸ் அடித்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
மறுமணம் செய்துகொண்டார் இசையமைப்பாளர் டி.இமான்
மறுமணம் செய்துகொண்டார் இசையமைப்பாளர் டி.இமான்
சமீபத்தில் மனைவியை பிரிந்த இசையமைப்பாளர் டி.இமான் இன்று மறுமணம் செய்துள்ளார்.
மறுமணம் செய்துகொண்டார் இசையமைப்பாளர் டி.இமான்.. வைரலாகும் புகைப்படம்
டி.இமான்
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் டி.இமான். இவர் இசையில் ரஜினி நடித்த அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன் திரைப்படங்கள்
சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பல படங்களுக்கு இமான் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் அவருடைய மனைவி மோனிகாவை பிரிந்து விட்டதாக இமான் அறிவித்தார்.
2008-ஆம் ஆண்டு மோனிகா என்பவரை இமான் திருமணம் செய்து கொண்டார். இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதமே விவாகரத்து செய்ததாக கூறப்பட்டு பிறகு
டிசம்பர் இறுதியில் அதிகாரப்பூர்வமாக சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்தார். சட்ட ரீதியாக தனது மனைவியை பிரிந்த டி.இமான் சென்னையை சேர்ந்த பெண் ஒருவரை
திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று இசையமைப்பாளர் டி.இமான் மறுமணம் செய்துள்ளார்.
இமான் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் அக்சய் குமாருக்கு கொரோனா
நடிகர் அக்சய் குமாருக்கு கொரோனா
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தன்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் தங்களைப் பரிசோதித்து பார்த்துக் கொள்ளுமாறு நடிகர் அக்சய்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
நடிகர் அக்சய் குமாருக்கு கொரோனா- கேன்ஸ் திரைப்பட விழாவை புறக்கணிப்பதாக தகவல்
நடிகர் அக்சய் குமார்
அடுத்த வார தொடக்கத்தில் நடைபெற உள்ள கேன்ஸ் 2022 திரைப்பட திருவிழாவில், ஏஆர் ரஹ்மான், ஆர் மாதவன், நவாசுதீன் சித்திக், நயன்தாரா, தமன்னா, சேகர் கபூர்
உள்பட பலருடன் பாலிவுட் நடிகர் அக்சய்குமார் இணைந்து பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அக்சய்குமார் கொரோனா பரிசோதனை செய்திருந்தார். இதன் முடிவில் பாசிட்டிவ் என தெரிய வந்துள்ளது.
இதையடுத்து கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்பதை தவிர்க்க உள்ளதாக தமது டுவிட்டர் பதிவில் அவர் கூறியுள்ளார்.
நேற்று காலையில், நான் மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் எனக்கு தொற்று இருப்பதை அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன்.
அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி, நான் உடனடியாக என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். நான் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளேன்,
என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் தங்களைப் பரிசோதித்து பார்த்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மிக விரைவில் மீண்டும் வழக்கமான பணிக்கு திரும்புவேன். உங்கள் அன்பான வாழ்த்துகள் மற்றும் பிரார்த்தனைகளுக்கு நன்றி. இவ்வாறு அவர் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மருத்துவர்களின் பரிந்துரையின் கீழ், நடிகர் அக்சய்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா பரிசோதனை செய்தபோது அக்சய்குமாருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் இரண்டாவது முறையாக அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அக்சய்குமார் நடிப்பில் உருவாகி உள்ள பிருத்விராஜ் திரைப்படம் ஜூன் 3 ந் தேதி இந்தி,
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகையை மோசமாக நடத்திய இயக்குனர்
நடிகையை மோசமாக நடத்திய இயக்குனர்
தமிழில் நல்ல வரவேற்பை பெற்ற படம் ஒன்றில நடித்து பிரபலமான நடிகையை இயக்குனர் ஒருவர் மோசமாக நடத்தியது குறித்து கூறியுள்ளார்.
நடிகையை மோசமாக நடத்திய இயக்குனர்
நிக்கி டம்போலி
நடிகை நிக்கி டம்போலி தமிழில் காஞ்சனா 3ம் பாகத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். தெலுங்கில் பல படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் வெளியான இருட்டறையில் முரட்டு குத்து படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து அங்கும் பெரிய
அளவில் ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்திருக்கிறார். தற்போது மீண்டும் தமிழ் சினிமா பக்கம் வந்திருக்கும் நிக்கி டம்போலி சமீபத்தில் கொடுத்த பேட்டியில் அவருக்கு நடந்த சம்பவத்தி குறித்து பேசியிருக்கிறார்.
நிக்கி டம்போலி
அவர் கூறியிருப்பதாவது, தென்னிந்திய சினிமாவைச் சேர்ந்த ஒரு இயக்குனர் என்னை மோசமாக நடத்தினார். உடல் ரீதியாக இல்லாமல் வெளிநாட்டில் நான் நடனம்
ஆடச்சென்றபோது என்னை அவமதித்து மிகவும் கீழ்த்தரமாக நடத்தியதால் நான் அழுதே விட்டேன். அவர் யார் என்பதை சொல்ல மாட்டேன். இப்போதும் அவருடன் பேசிக்கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
இதைப் பார்த்து ரசிகர்கள் யார் அந்த இயக்குனர் என்று ஒவ்வொரு பெயராக இணையத்தில் கேட்டு வருகிறார்கள்.
ரஜினியுடன் நடிக்கிறேனா? சிவகார்த்திகேயன் விளக்கம்
ரஜினியுடன் நடிக்கிறேனா? சிவகார்த்திகேயன் விளக்கம்
டான் படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன் அடுத்து ரஜினியுடன் நடிக்கவுள்ளதாக வெளியான தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
ரஜினியுடன் நடிக்கிறேனா? சிவகார்த்திகேயன் விளக்கம்
சிவகார்த்திகேயன் – ரஜினி
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ள சிவகார்த்திகேயன் அடுத்து புதிய படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க இருப்பதாக
இணையதளங்களில் தகவல் பரவி வந்தது. இதுகுறித்து சிவகார்த்திகேயன் கூறும்போது, “நெல்சன் இயக்கும் படத்தில் ரஜினிகாந்துடன் நான் இணைந்து நடிக்கப் போவதாகவும், அந்த படத்துக்கு பாடல் எழுதுவதாகவும் தகவல் பரவி உள்ளது.
அதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது. என்னை அழைக்கவும் இல்லை. அந்த படம் இப்போது ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது.
சிவகார்த்திகேயன் – ரஜினி
எனக்கு பொழுதுபோக்கு கதையம்சம் உள்ள படங்களில் நடிக்கவே ஆசை. சமூக விஷயங்களை பேசும் அழுத்தமான கதைகள் வந்தாலும் நடிப்பேன். கனா, வேலைக்காரன், ஹீரோ படங்களில் சமூக விஷயங்கள் இருந்தன. நான் நடித்துள்ள
டான் படம் கல்லூரி மாணவர்களின் பிரச்சினைகளை பேசும் படமாக இருக்கும். சினிமா இப்போது ஆரோக்கியமாக உள்ளது. ஓ.டி.டி.யிலும் படம் பார்க்கிறார்கள். தியேட்டர்களுக்கு வந்தும் பார்க்கிறார்கள். எனது படங்கள் பல கோடிகள் வசூலிக்கிறது
என்பதற்காக சம்பளத்தை உயர்த்தவில்லை. நியாயமான சம்பளம் வாங்குகிறேன்.
எனக்கு பிடித்த கதையில் சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்துகிறேன்” என்றார்.
நடிகையை படம் பிடித்த மர்மநபர்
நடிகையை படம் பிடித்த மர்மநபர்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையை படம் பிடித்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிரபல நடிகையை படம் பிடித்த மர்மநபர்
நவ்னீத் ராணா
அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நவ்னீத் ராணா.
இவர் தற்போது மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி தொகுதி எம்.பி.யாக உள்ளார். இவரது கணவர் ரவி ராணா எம்.எல்.ஏ.வாக உள்ளார். நடிகை நவ்னீத் ராணாவும், அவரது
கணவர் ரவி ராணாவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநில முதல்மந்திரி உத்தவ் தாக்கரே வீட்டின் முன்பு அனுமன் மந்திரம் ஓத முயன்றனர்.
இதுதொடர்பாக நவ்னீத் ராணா, அவரது கணவர் ரவி ராணா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 12 நாட்கள் சிறையில் இருந்த அவர்கள்
சமீபத்தில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் நடிகை நவ்னீத் ராணாவுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் நடிகை நவ்னீத் ராணாவுக்கு டாக்டர்கள் எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எடுத்தனர். ஸ்கேன் எடுத்தபோது மர்மநபர் ஒருவர் நடிகை நவ்னீத் ராணாவை படம் பிடித்தார்.
இதுதொடர்பாக நவ்னீத் ராணா மும்பை போலீசில் புகார் செய்துள்ளார். மருத்துவமனையில் பதிவான சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை
கைப்பற்றி போலீசார் அந்த மர்மநபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சீமான் பக்கம் திரும்பும் மக்கள்
சீமான் பக்கம் திரும்பும் மக்கள்
இதில் அழுத்தி காணொளி பார்க்க
சீமான் கூறிய விடயங்கள் நிகழ்காலத்தில்
நிகழ்ந்து வருவதால் தற்போது சீமானை தேடி மக்கள் திரள ஆரம்பித்துள்ளனர்
இதோ அதனை இங்கே பாருங்கள்
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை
- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்
- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி
- கோழி வறுவல் Chicken Recipe in Tamil
- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil
- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க
- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்
- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க
- இட்லி இந்த trickல try பண்ணுங்க
- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி
- சிக்கன் பிரியாணி செய்வது எப்படி
- யாழ்ப்பாணத்து சுவைமிக்க ஈரபிலாக்காய் கறி | JAFFNA STYLE BREADFRUIT CURRY
- சுவையான டின் மீன் கட்லெட் | CUTLET’S IN SRILANKAN STYLE | CRISPY CUTLET’S RECIPE IN TAMIL
- சுவைமிக்க பட்டர் கேக் | யாழ்ப்பாணத்து முறையில் பட்டர் கேக் | SUPER SOFT BUTTER CAKE RECIPE IN TAMIL
- சால்மன் மீன் குழம்பு | Salmon fish curry in tamil | Salmon fish gravy | Meen kulambu in tamil
- வீதியில் பசியோடு மக்கள் | உணவு வழங்கி பசி போக்கிய நல்ல உள்ளங்கள்
- பசியால் வாடிய மக்கள் | கண்ணீர் காட்சிகள் இப்படியுமா மக்கள் வாழ்க்கை
- காரசாரமான காணவாய் பொரியல் | Squid fry recipe in tamil | Crispy calamari fry in tamil |Cuttlefish fry
- சுவை மிக்க டின் மீன் கறி | TIN FISH CURRY IN TAMIL | HOW TO MAKE TIN FISH CURRY IN SRILANKAN STYLE
- உறைப்பான கோழி கறி | சிக்கன் கறி | SPICY CHICKEN CURRY RECIPE IN TAMIL
- இறால் ஸ்பெகட்டி | PRAWNS SPAGHETTI STIR FRY IN TAMIL| PRAWNS STIR FRY RECIPE
- பசியால் வடிய மக்கள் | கண்ணீர் காட்சிகள் |@SrilankaVillageCook
- யாழ்ப்பாணத்து மட்டன் கொத்து | ஆட்டு இறைச்சி கொத்து | HOW TO MAKE MUTTON KOTHU ROTTI
- யாழ்ப்பாணத்து இறால் கறி இப்படி செய்து பாருங்கள் | Jaffna style king prawns curry |tamilPrawns curry
வசூலை குவிக்கும் நயன்தாரா திரைப்படம்
வசூலை குவிக்கும் நயன்தாரா திரைப்படம்
நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் வசூல் ரூ.50 கோடிக்கு மேல் தாண்டியுள்ளது.
வசூலை குவிக்கும் நயன்தாரா திரைப்படம்
நயன்தாரா
சமீபத்தில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படம் முதலில் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தாலும் இப்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப்
பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா என்று மூன்று பெரிய நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்த படத்தின் வசூலை அதிகாரப்பூர்வமாக விக்னேஷ் சிவன் அறிவித்திருக்கிறார்.
காத்து வாக்குல ரெண்டு காதல் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது படம். அவரது திட்டமே திருமணத்திற்கு முன்பே பெரிய ஹீரோக்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்பதுதான்.
விஜய் சேதுபதியை இயக்கி விட்டார். அடுத்து அஜித் படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருக்கிறார்.
ரசிகர்களின் கோபத்திற்கு ஆளான ஆலியா பட்
ரசிகர்களின் கோபத்திற்கு ஆளான ஆலியா பட்
நடிகை ஆலியா பட் பணத்திற்காக எதையும் செய்யத் துணியக்கூடாது என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
ரசிகர்களின் கோபத்திற்கு ஆளான ஆலியா பட்
ஆலியா பட்
நடிகை ஆலியா பட் சமீபத்தில் வெளியான கங்குபாய் கத்தியவாடி படத்தில் நடித்ததற்காக பாராட்டுகளை பெற்று வந்தார். ஆர்.ஆர்.ஆர். படத்திலும் அவருக்கு சீதா
வேடம் கொடுக்கப்பட்டதால் ரசிகர்களிடம் நல்ல மதிப்பை பெற்றிருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு குளிர்பான விளம்பரத்தில் நடித்திருந்தார்.
அதில் சர்க்கரை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று குறிப்பிட்டுள்ளார். இதை எதிர்த்து ரசிகர்கள் சில வீடியோக்களை பகிர்ந்துள்ளனர். இந்த
வீடியோவில் ஆலியாபட் நடித்த கலங்க் என்ற திரைப்படத்தின் நிகழ்ச்சியில் ஆலியாபட் நான் சர்க்கரை சாப்பிடுவதில்லை. அது ஆரோக்கியமற்றது என்று
குறிப்பிட்டிருக்கிறார். இதைப் பகிர்ந்து வரும் ரசிகர்கள்
பணத்திற்காக எதையும் செய்யத் துணியக்கூடாது என்று கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
சாய்பல்லவி எடுத்த முடிவு.. வருத்தத்தில் ரசிகர்கள்
சாய்பல்லவி எடுத்த முடிவு.. வருத்தத்தில் ரசிகர்கள்
மாரி 2 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த சாய்பல்லவி எடுத்த முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சாய்பல்லவி எடுத்த முடிவு.. வருத்தத்தில் ரசிகர்கள்
சாய்பல்லவி
மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மூலம் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய
அளவில் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. தொடர்ந்து மலையாளத்திலேயே ‘களி’ என்ற படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்து மலையாளத்தில் முன்னணி நடிகைகளில்
ஒருவரானார். பின்னர் ‘பிடா’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தெலுங்குக்குச்
சென்ற சாய் பல்லவி, விஜய் இயக்கத்தில் வெளியான ‘தியா’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.
தற்போது சாய்பல்லவி படங்களில் நடிப்பதைக் குறைத்து கொண்டு வருகிறார் என்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஷியாம் சிங்காராய் படம்
ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து அவருக்கு நிறைய படங்கள் நடிக்க வாய்ப்பு வந்தும் எந்த படத்திலும் நடிக்க ஒத்துக்கொள்ளவில்லை.
அவரது கடைசி படமாக ராணா டகுபதியுடன் விராட பர்வம் என்ற படத்தில் நடித்திருந்தார். இதன் வெளியீடு தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது.
சமீபத்தில் தயாரிப்பாளர்கள் ஜூலை 1-ம் தேதி இப்படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். ஆனாலும் இதன் பிறகு வேரு எந்த படங்களிலும் சாய் பல்லவி
நடிக்க சம்மதிக்காதது ரசிகர்களுக்கு ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சாய்
பல்லவிக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறதோ என்பதுதான் அந்த சந்தேகம்.
இது பற்றி இணையத்தில் ரசிகர்கள் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.
அம்மா அவதாரம் எடுத்த நயன்தாரா
அம்மா அவதாரம் எடுத்த நயன்தாரா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா அடுத்ததாக அம்மா அவதாரம் எடுத்துள்ளார்.
அம்மா அவதாரம் எடுத்த நயன்தாரா..
நயன்தாரா
நயன்தாரா நடித்து முடித்திருக்கும் படம் ‘ஓ-2’ என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. விக்னேஷ் என்பவர் இயக்கி இருக்கும் இந்தப் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட
இருக்கிறார்கள். சமீபத்தில் கொரோனாவால் ஆக்சிஜன் என்பது எவ்வளவு அவசியம்
என்பதை அனைவரும் தெரிந்து கொண்டோம். அதை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் விக்னேஷ்.
விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில் ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் மாட்டிக்கொள்கிறாள். நுரையீரல் பிரச்சினைக்காக எப்போதும் தன் மகனிடம் இருக்கும் ஆக்சிஜன்
சிலிண்டரை பேருந்தில் சக பயணிகள் குறிவைக்க தன் மகனை அவள் எவ்வாறு காப்பாற்றுகிறாள் என்பதைப் பரபரப்பாகச் சொல்லும் படம் தான் “ஓ-2”. தமிழ்நாடு,
கேரளா இணையும் மலைப்பகுதியில் இக்கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.”
இந்த படத்தில் அம்மா பார்வதியாக நயன்தாரா நடிக்கிறாராம்.






























