Tag: சஜித்
ஈஸ்டர் தாக்குதல் சஜித் வௌியிட்ட ஆதாரங்கள்
ஈஸ்டர் தாக்குதல் சஜித் வௌியிட்ட ஆதாரங்கள்
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான நேற்றைய (22) விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆற்றிய முழுமையான உரை பின்வருமாறு,
ஈஸ்டர் தாக்குதல் மற்றும் விசாரணையின் காரணமாக ஒடுக்கப்பட்ட மற்றும் துன்புறுத்தப்பட்ட சமூகத்தின் சார்பாக ஐக்கிய மக்கள் சக்தி இந்த பிரேரணையை முன்வைத்தது. ஆரம்பத்திலேயே சொல்லவேண்டும் எங்களின் இந்த முயற்சி எவருக்கும் அரசியல் அவதூறுக்காகவோ நற்பெயருக்கு
களங்கம் விளைவிக்கவோ அதன் மூலம் அரசியல் ஆதாயம் பெறுவதோ அல்ல, உண்மை என்ன என்பதைப் புரிந்துகொள்வதே எங்களின் முக்கிய நோக்கம் சனல் 4 தொலைக்காட்சியினால் இது வெளிச்சத்திற்கு வந்தது என்று சில தூங்கிக்கொண்டிருக்கும் எம்.பி.க்கள் சொல்கிறார்கள். இந்த ஈஸ்டர்
தாக்குதலின் உண்மை மற்றும் சூத்திரதாரி குறித்து முழு நாடும் விழிப்புடன் இருக்கின்றது. எனவே, செனல் 4 பற்றி நாங்கள் கூறத்தேவை இல்லை. ஈஸ்டர் தாக்குதல் மற்றும் அதன் சூத்திரதாரி மற்றும் உண்மை பற்றி பல சந்தர்ப்பங்களில் நாங்கள் தொடர்ந்து பேசியுள்ளோம்.
இவ்வாறான தாக்குதல் அமெரிக்காவிலும் இடம்பெற்றது. இது அல்-கொய்தா 9 /11 தாக்குதல் என்று அழைக்கப்பட்டது. 9 /11 அறிக்கை என்னிடம் உள்ளன என்பதை கௌரவ சபாநாயகருக்குக் தெரிவிக்க விரும்புகிறேன்.
நான் அமெரிக்கன் அல்ல. நான் இலங்கையன் இந்த ஆணைக்குழு அறிக்கையில் அமெரிக்கா எதையும் தணிக்கை செய்யவில்லை. எந்த கட்டுப்பாடுகளும் இல்லை.
சபாநாயகரின் அனுமதி தேவை என்று கூறவில்லை. இது செனட் தலைவரின் அனுமதி தேவை என்று கூறவில்லை. அவ்வாறான பொய்யான நிபந்தனைகள் இந்த பாராளுமன்றத்தில் தான் போடப்பட்டுள்ளது. இது 9 /11 அறிக்கை. யார் வேண்டுமானாலும் வாசிக்கலாம். பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட்டது. 9 /11 ஆணைக்குழு கட்டமைப்பு ஜனநாயகக் கட்சியிலிருந்து 5 மற்றும் குடியரசுக் கட்சியிலிருந்து 5 பேர். சமமாக நியமிக்கப்பட்டனர் ஏன் .
உண்மையை தேட வேண்டும். என்பதற்காகும் அவர்கள் உண்மையைக் கண்டுபிடித்தார்கள். உண்மையில், 9/11 அறிக்கையின் விளைவாக ஹோம் லேண்ட் சிக்கியுரிட்டி டிபாட்மென்ட் உருவாக்கப்பட்டது.
உளவுப் பிரிவின் பல்வேறு அம்சங்கள் மீதான விமர்சனம். இருந்த CIA, FBI மற்றும் பிற புலனாய்வு அமைப்புகள் விமர்சிக்கப்பட்டன. புலனாய்வு அமைப்புகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு இல்லாதது குறித்தும் வெளிப்படையாக விவாதிக்கப்பட்டது. அதிலிருந்து கற்றுக்கொண்டார்கள்.
ஈஸ்டர் தாக்குதல் சஜித் வௌியிட்ட ஆதாரங்கள்
நம் நாட்டில் என்ன நடந்தது? படிப்பினை பெற்றோமா? நம் நாட்டில் தெரிவுக்குழு அறிக்கை உள்ளது. மலல்கொட அறிக்கை. இந்த மலல்கொட அறிக்கையும் மறைக்கப்பட்டது. இது தகவல் அறியும் சட்டத்தினாலேயே வெளியே வந்தது.
அடுத்து, ஜனாதிபதி ஆணைக்குழுவின் தொகுதி 1 உள்ளது. அதைத் தொட எங்களுக்கு உரிமை இல்லை. அதைப் பார்ப்பதற்கு நூலகத்தின் பின்னால் ஊர்ந்து செல்ல வேண்டும். நாங்கள் இன்னும் அதன் பிரதியைப் பெறவில்லை.. எங்களுக்கு 9/ 11 அறிக்கையைப் பெறலாம். 2019ல் நம் நாட்டில் நடந்த இழிவான பயங்கரவாதத் தாக்குதல் குறித்து எதிர்க்கட்சித் தலைவருக்கோ
அல்லது 225 பேருக்கோ முழுமையான அறிக்கையைப் பெற முடியாது. இதுதான் நிலைமை. இது வேடிக்கையானது. ஏன் இவ்வாறான நிலை உருவாக்கப்பட்டது என்று நாம் கேள்வி எழுப்ப வேண்டும். நாட்டு மக்களிடம் இந்த உண்மை யதார்த்தத்தை ஏன் மறைக்க வேண்டும்.
உங்களுக்கு முதுகெலும்பு இருந்தால் மலல்கொட அறிக்கை, தெரிவுக்குழு அறிக்கை, ஆணைக்குழு அறிக்கை மற்றும் அதன் பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துங்கள் என்று இந்த அரசாங்கத்திற்கு நான் கூறுகின்றேன். மேலும் இந்த முயற்சியை கொச்சைப்படுத்துவதற்காக அல்ல. உண்மையைக் கண்டுபிடிக்கவும்.
இப்போது ஒரு கடுமையான பிரச்சினை உள்ளது பலர் ஏன் உண்மை வெளிவரவில்லை என்று சந்தேகிக்கிறார்கள். எனக்கும் உள்ளது.. சாட்சிகளுடன் சபைக்கு சமர்ப்பியுங்கள் ஏன் இந்த செயற்பாடுகளில் சந்தேகிக்கின்றோம் என இந்தச் சபையில் முன்வைக்க விரும்புகிறேன்.
முதல் கேள்வி வவுணதீவு பிரச்சினை
இதில் 2 போலீசார் கொல்லப்பட்டனர். 2018 நவம்பர் 30, இல் கொல்லப்பட்டனர். விசாரணைகள் டிசம்பர் 1 அன்று தொடங்கியது. டிசம்பர் 3 அரசாங்க உளவுத்துறை தலைவர் ஒரு கல்வெட்டின் பின்னால் ஒரு ஜாக்கெட் இருப்பதாகவும் தேடும்படியும் கேட்டார். அதன் பின்னர், கட்டுவாப்பிட்டி
குண்டுவெடிப்பு குறித்து டிஐஜி எஸ். பி.டி. ஜே. .பி.ஜெயசிங்கவைத் தேடினர். இப்போது அவர் ஜனாதிபதியின் பாதுகாப்புத் தலைவராக உள்ளார். டி.ஐ.ஜீ ஒரு நாயைப் பயன்படுத்தினார்.
அந்த நாய் அஜந்தனின் வீட்டிற்கு சென்றது. இது எமக்கு ஜாக்கெட்டை போட்டு இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் மரணத்திற்கு புலிகள் மீது பழி சுமத்தினர். சிஐடி தவறாக வழிநடத்தப்பட்டது. மேலும், இராணுவ புலனாய்வுப் பிரிவின் 5 அறிக்கைகள் உள்ளன. 2018 டிசம்பர் 5, 8, 13, மற்றும் 2019 ஜனவரி 3, இல், இந்த 4 அறிக்கைகளிலும் இந்தக் கொலைகள் புலிகளால்
செய்யப்பட்டவை என்று இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் சூல கொடித்துவக்கு கூறுகிறார். இறுதியில் சாய்ந்தமருது சம்பவத்தில் உயிரிழந்த அலுவலர்கள்தான் என்பது நிரூபணமானது. இந்த குண்டுவெடிப்பில் இந்த அலுவலர்களை கொன்ற ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இரண்டு
வவுணதீவு பொலிஸ் அலுவலர்களின் கொலைச் சம்பவம் தொடர்பாக சிஐடியை, அரச புலனாய்வுப் பிரிவு மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவு தவறாக வழிநடத்தியது. இதை விசாரிக்கவும். இது சரியா தவறா என்று
சொல்லுங்கள். நாம் முடிவுகளுக்கு வர முடியாது. நடந்த சம்பவங்களின் சங்கிலித் தொடர் உள்ளது. அதை விசாரிக்க அரசு தயாராக இல்லை.
இரண்டாவது சந்தேகத்திற்குரிய விடயம்
9/11க்குப் பிறகு படிப்பினை பெற்ற நிறுவனங்களில் FBIயும் ஒன்று. ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு, அவர்கள் கணினிகள், தொலைபேசி உரையாடல்கள், குறுந்தகடுகள் போன்றவற்றைச் சரிபார்த்து, அவர்கள் ஐபி முகவரியைக் கண்டுபிடிக்கிறார்கள். இது இராணுவ புலனாய்வு அதிகாரி ஒருவருக்கு
சொந்தமானதும் மற்றும் பயன்படுத்தப்பட்டதுமாகும். பெயர் தெரியவில்லை. கிடைத்த தகவலின்படி, ஒரு முஸ்லிம் தேசிய இராணுவ புலனாய்வு அதிகாரி. இதன் முக்கியத்துவம் என்னவென்றால், இந்த ஐபி முகவரியில் இருந்து சஹ்ரானுக்கு அதிகபட்ச தொலைபேசி அழைப்புகள் இருப்பது தெளிவாகத்
தெரிந்ததாக FBI தெரிவித்தது. ,. ஈஸ்டர் தாக்குதலுக்கு முன், சஹ்ரானை நாட்டின் பாதுகாப்புப் படையினர் தேடினர் என நாம் அனைவரும் அறிவோம். சஹ்ரானின் அணிகளைத் தேடினர். ஆனால் சஹ்ரான் இல்லை.
அந்த நேரத்தில், எஃப்பிஐ வழங்கிய ஐபி முகவரியில், உளவுத்துறை அதிகாரி ஒருவர் சஹ்ரானுடன் அதிக நேரம் பேசியிருக்கின்றார் என்பது தெளிவாகியது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சூலா கொடிதுவக்கு சொல்கின்றார் தேசிய பாதுகாப்புப் பிரச்சினை என்பதால் அவரைக் கேள்வி கேட்க வேண்டாம் என்று சிஐடியின் எப்.பி தர்ஷிகாவிடம் கூறுகிறார்.
இந்த உளவுத்துறை அதிகாரிக்கு ஒன்றும் செய்ய வேண்டாம் என்று. இந்த விஷயத்தை நாங்கள் விசாரிக்க வேண்டும். ஆராய வேண்டும்., அது உண்மையா இல்லையா என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்
மூன்றாவது விடயம்
சொனிக் சொனிக் என்ற விடயம். இந்த பாராளுமன்றத்துக்குள் சொனிக் சொனிக் என்றவர்கள் டானிக் டானிக் அமைச்சுக்களை எடுத்தார்கள் என்பது உங்களுக்கே தெரியும். டானிக் டானிக் அமைச்சை எடுத்துக் கொண்டு உண்மையைக் கண்டுபிடிக்க முடியாமல் இப்போது பெனிக் பெனிக்
ஆகிவிட்டனர். அப்போது, சொனிக் சொனிக் அமைச்சர் பதவி எடுக்க, டானிக் டானிக், இப்போது பெனிக் பெனிக். இது என்ன சொனிக் சொனிக் பிரச்சினை? தெளிவாகச் சொல்வதானால், சிறிய சஹ்ரான் மாத்தளையில் பிடிபடுகின்றார். போலீசார் கைது செய்கின்றனர்.. அவரை சி.ஐ.டி. கைப்பற்றுகின்றனர்.
அவர் பெயர் பஸ்குல் ரஹ்மான். கத்தாரில் உள்ள ஐசிசி குறித்து அவரிடம் விசாரித்த போது சொனிக் சொனிக்குடன் தொடர்புடன் இருந்ததாகவும் இந்த சொனிக் சொனிக் என்ற நபரின் தொலைபேசி இலக்கம் மற்றும் ஐபி முகவரியைத் தேடும்போது, அந்த சிப் நகர போக்குவரத்துப் பிரிவின் பெண்
போலீஸ் சார்ஜென்ட் என்பவருடையதாக இருக்கின்றது.. இது தனது சிம் கார்டு என்றும், அதை தனது காதலன் எஸ்ஐ பண்டாரவிடம் (ஐபி அப்போது) கொடுத்ததாகவும் கூறுகிறார்.
இந்த உளவுத்துறை அதிகாரி சின்ன சஹ்ரானிடம் கூறுகிறார் பல குண்டுகள் வெடித்தும், இதை ஏன் ஐஎஸ்ஐஎஸ் ஏற்கவில்லை என்று. ஒரு எஸ்ஐஎஸ் அதிகாரி சின்ன சஹரான் போன்ற பயங்கரவாதியிடம் இதை ஐஎஸ்ஐஎஸ்ஸிடம் ஏற்றுக்
கொள்ளுமாறு சொல்வது ஏன்?. இந்த தாக்குதலை ஐஎஸ் நடத்தியது என்பதை ஏற்க வேண்டும். நமது நாட்டின் உளவுத்துறை அதிகாரி ஒருவர் இதைச் செய்கிறார்.
சின்ன சஹ்ரான் இந்தோனேசியாவுக்குக் கதைத்து கேட்டபோது, பையத் செய்யவில்லையாம் என்று கூறியுள்ளார்… ஆனால் 23ம் திகதி இந்தியாவில் இருந்து சமூக வலைதளங்களுக்கு செல்லுகின்றது.
இந்த உண்மைகளை தேடிப் பார்க்கும் போது, அரச புலனாய்வுப் பிரிவின் டி.ஐ.ஜி சம்பத் லியனகே, “இந்த எஸ்.ஐ. பண்டாரவைக் கேள்வி கேட்காதீர்கள். தேசிய பாதுகாப்பைப் பாதிக்கும் மிக முக்கியமான விஷயங்கள் உள்ளன, எனவே இவர்களை விசாரிக்க வேண்டாம்” என்று கூறுகிறார்.
நான் யாரையும் குறிவைக்கவில்லை. இது உண்மை. நான் எந்த முன்முடிவுக்கும் வரவில்லை. இந்த சோனிக் சோனிக்கையும் விசாரிக்க வேண்டும். சோனிக் சோனிக்கை பயன்படுத்தி அரசியல் டானிக் அடித்தவர்கள்
இன்று மௌனமாக உள்ளனர். அவர்கள் இன்று இந்த சபையில் இல்லை. அவர்கள் பீதியடைந்தனர். ஏனென்றால் உண்மை வெளிப்படுகிறது. எனவே இதையும் விசாரிக்கவும்.
நான்காவது விடயம்
தாஜ் ஹோட்டலை தகர்க்க வந்த பயங்கரவாதி ஜமீல், அவனது பையையும் டெலிபோனையும் ஒரு மேசையில் வைத்திருக்கிறான். போனை எடுக்கிறார். பேக்கை எடுத்துக்கொண்டு முச்சக்கர வண்டியில் செல்லுகிறான். அதன் பின்னர் தெஹிவளையில் உள்ள ட்ரெபிகல் இன்னுக்கு செல்கிறார். இந்த குண்டுதாரி தனது பையை ட்ரெபிகல் விடுதியில் வைத்துவிட்டு பள்ளிக்குச் செல்கிறார். பள்ளியில் உள்ள சிகுரிட்டி விசாரிக்கிறார்.
அப்போது குண்டு வெடித்து விடுகின்றது.. அப்போது அவர் சொல்கிறார் மனைவி மீது கோபம் கொண்டதால் தான் வீட்டில் இருந்து பள்ளிக்கு மத வழிபாடுகளுக்காக வந்ததாக கூறுகிறார். மனைவியின் தொலைபேசி இலக்கம் கொடுக்கப்படுகின்றது அந்த சிகுரிட்டி முன்னாள் போலீஸ் அதிகாரி. ஜெமிலின் மனைவி அப்போது உண்மையைச் சொல்கின்றார்..
இப்போது பாதுகாப்பு அமைச்சின் இரண்டு அதிகாரிகள் எங்கள் வீட்டில் இருக்கிறார்கள் என்று அவள் சொல்கிறாள். அந்த உரையாடலுக்குப் பிறகு, அவர் சந்தேகத்தை இழந்து விடுவிக்கப்பட்டார்.
அப்போது பாதுகாப்பு அதிகாரிக்கு அழைப்பு வருகிறது.ஜமீலின் மனைவி வீட்டிற்கு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் வந்துள்ளார். ஜெமிலை அருகில் வைத்துக்கொள்ளுங்கள் என்கிறார். அப்போது பாதுகாப்பு அதிகாரி ஜெமீல் சென்றுவிட்டதாக கூறுகிறார். பகல் 1.30 மணியளவில், ஜமீல் டிராபிகல் விடுதிக்குச் சென்று தன்னைத் தானே வெடிக்க வைத்துக் கொள்கின்றார்.
3.30 மணிக்குப் பிறகு, பள்ளி காவலருக்கு வெள்ளவத்தை பொலிஸுக்கு வருமாறு அழைப்பு வருகிறது. 5 மணியளவில் பொலிசுக்குச் செல்லும்போது, அங்கு ஜமிலின் மனைவியைச் சந்திக்கச் சென்ற பாதுகாப்பு பிரிவு அலுவர்கள் இருந்துள்ளனர்.
அப்போது இவர்கள் உளவுத்துறை அதிகாரிகள் என்பது தெளிவாக காவலாளிக்கு தெரியவருகின்றது. இதில் மிக முக்கியமான விடயம் என்னவெனில் வெடிகுண்டை வெடிக்கச் செய்வதற்கு முன்னர் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் ஜெமிலின் மனைவி வீட்டுக்கும் வேறு வீட்டுக்கும்
சென்றது ஏன் என்பதுதான். இதில் எது உண்மை? என்ன தொடர்பு அப்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, புலனாய்வு அதிகாரிகள் அழைக்கப்பட்ட இலக்கங்களை ஆராய்ந்தபோது, சிம் கார்டு சிலோன் ஷிப்பிங் லைன்ஸ், இலக்கம் 88, பௌத்தாலோக மாவத்தை, கொழும்பு 3 என்ற முகவரியாக இருக்கின்றது.. இந்த சிம்கள் போலி முகவரியில்
வாங்கப்பட்டுள்ளன. இந்த சிம்மை பயன்படுத்தி லசந்த விக்கிரமதுங்கவின் மரணம் முன்னெடுக்கப்பட்டமை மிகவும் ஆபத்தான விடயமாகும். கீத் நொயர், எக்னலிகொட, உபாலி தென்னகோன் மீதான தாக்குதல்களுடன் தொடர்புடைய சிம் அட்டைகள் இவை. அன்றும் இந்த முகவரியில்தான் பதிவு செய்யப்பட்டது.
இவை விசாரணையில் தெரியவந்த விடயங்கள் அதனால்தான் நூலகத்தில் மறைத்து வைத்திருக்கின்றனர். சபாநாயகர் அவர்களே, எங்கள் உரிமைகளின் பாதுகாவலர் என்ற வகையில், அவற்றின் அனைத்து பிரதிகளையும் அனைவருக்கும் வழங்குங்கள். மறைக்க வேண்டாம் இந்த நாட்டு மக்களை ஏமாற்றாதீர்கள்.
ஜெமீல் தற்கொலை குண்டுதாரி பற்றி இராணுவ உளவுத்துறைக்கு தெரியுமா? வெடிகுண்டு வெடிக்கும் முன் இரண்டு வீடுகளுக்கு எப்படி சென்றீர்கள்? யார் செய்தது? பல்வேறு சாட்சியங்களில் இருந்து கிடைத்த தகவல்களில் இருந்தும் இதைச் சொல்கிறேன்.
நான் சொல்வது 100% சரிதானா என்று தெரிந்து கொள்ளுங்கள். நேற்று தெரிவுக்குழு நிறுவப்படும் என்று கூறப்பட்டது. கேலி செய்ய வேண்டாம். அப்படி நிறுவுவதானால் , 9/11 ஆணைக்குழு போல உறுப்பினர்கள் சமமாக இருக்க வேண்டும். சபாநாயகருக்கும் ஜனாதிபதிக்கும் அதற்கான முதுகெலும்பு உள்ளதா?
அதே போன்று முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் மஹீல் டூலின் சகோதரர் பல சந்தர்ப்பங்களில் சகோததர் பற்றி பயப்படுவதாகவும், சகோதரர் தீவிரவாதியாகிவிட்டதாகவும், இதைக் கண்டுபிடிக்கச் சொல்கிறார்.
அப்படிச் செய்யாவிட்டால் பேரழிவுதான் என்றும் சொல்கின்றார் மஹில் டூல் இது பற்றி அரச உளவுத்துறை தலைவரிடம் கூறுகிறார். ஆனால் கணக்கெடுக்கவில்லை. இதையும் விசாரிக்கவும். உண்மையைக் கண்டுபிடிக்கவும்.
ஐந்தாவது விடயம் – சாய்ந்தமருது ஆயுதம்
வவுணதீவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் புலிகளால் கொல்லப்பட்டதாக இராணுவ புலனாய்வுப் பிரிவினர் மற்றும் எஸ்ஐஎஸ் சிஐடியை தவறாக வழிநடத்தினர். ஆனால், 2008ல், ஏறாவூர் போலீசில், ஆதம் லெப்பை என்ற ஊர்க்காவலர் உள்ளார். அவருக்கு ஆயுதம் கொடுக்கப்பட்டுள்ளது.
அவர் பணிக்கு வரவில்லை, துப்பாக்கியை ஒப்படைக்கவில்லை. அது தன் மனைவி வீட்டுக் கூரையில் இருப்பதாகச் சொல்கிறார். சரணடையாததால் மாமனார் கைது செய்யப்படுகிறார். 10 நாட்களுக்குப் பிறகு அவர் வெளியேறுகிறார். ஆதம் லெப்பையினால் வழங்கப்பட்ட ஆயுதத்தின் சீரியல் இலக்கம் அகற்றப்பட்டு, அவருக்கு வழங்கப்பட்ட ஆயுதத்தின் சீரியல் இலக்கம் செயற்கையாக புகுத்தப்பட்டன. இப்போது இது தொடர்பாக வழக்கு விசாரணையில் உள்ளது..
அந்த வழக்கில், முரண்பட்ட சான்றுகள் இருப்பதாக்கூறி. ஆதம் லெப்பை விடுவிக்கப்படுகின்றார். ஆனால் இதில் மிக முக்கியமான விடயம் என்னவென்றால், 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று 5 நாட்களின் பின்னர் சாய்ந்தமருது பிரதேசத்தில் தற்கொலை சம்பவம் ஒன்று இடம்பெறுகின்றது. 16 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அங்கே ஒரு ஆயுதம் கிடைக்கின்றது. குண்டுவெடிப்பை சஹ்ரானின் சகோதரர் மற்றும் பெற்றோர் செய்துள்ளனர். அங்கு கிடைத்த ஆயுதம் ஆதம் லெப்பையின் ஆயுதம் போன்றது. அதனை மேலும் விசாரிக்கும் போது சாய்ந்தமருது வெடிப்புச் சம்பவத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆயுதமும், ஆதம் லெப்பையின் ஆயுதமும் ஒன்றே என்பது தெளிவாக நிரூபணமாகியுள்ளது. அது மட்டும் அல்ல. எனது ஞாபகத்தின் அடிப்படையில் வவுணதீவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 8 எமோ கெப்சியுல் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தில் அவை இருந்ததாக கூறப்படுகிறது. அவை சாய்ந்தமருது சம்பவத்துடன் தொடர்புள்ள ஆயுதம் என தெரியவருகின்றது. அதனை மேலும் ஆராயும் போது, தனது ஆயுதம் இராணுவத்துடன் தொடர்புடைய முஸ்லிம் குழுவினால் அல்லது இராணுவத்தின் உளவுப் பிரிவினால் எடுக்கப்பட்டதாக ஆதம் லெப்பை கூறுகிறார்.
இங்கே கடுமையான சந்தேகம் எழுகின்றது. விசாரியுங்கள். மறைக்க வேண்டாம். ஒரு பாரபட்சமற்ற விசாரணை செய்யுங்கள்.
ஆறாவது விடயம் – அபு ஹிந்த்.
ஹாதியா சஹ்ரானின் மனைவி. சஹ்ரானுக்கு எப்போதும் வீடியோக்களை அனுப்பும் ஒருவர் இருப்பதாக அவர் கூறுகிறார். அவரது மாற்றுப்பெயர் அபு ஹிந்த். அவர் பேசும் போது ஹாதியாவை சஹ்ரான் விரட்டி விடுவானாம். குறிப்பாக வவுணதீவு பொலிஸ் அதிகாரிகளின் மரணத்தில் தொடர்புடைய கபூர் மாமா என்ற கடும்போக்குவாதி சொல்கிறான் ஏப்ரல் 16 அன்று மேலிடத்தில் இருந்து சஹ்ரானுக்கு அறிவுறுத்தல் வந்ததாம் அந்த அறிவுறுத்தல்களின்படி, இந்த தாக்குதல் விரைவுபடுத்துமாறு இல்ஹாம் என்ற பயங்கரவாதி கூறுகின்றார். யார் இந்த அபு ஹிந்த் ? , 2019 ஏப்ரல் 21 முதல் இன்று வரை அனைவரும் விசாரிக்கின்றனர். அப்போது இந்த கோத்தபாய ராஜபக்ச நீதியை நிலைநாட்டுவார் என தெரிவித்தனர். அதனால்தான் இந்த சபாநாயகரும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இன்றும் இந்த அபு ஹிந்தை அவர்கள் தேடவில்லை. சஹ்ரானுக்கு மேலே ஒரு சூத்திரதாரி இருந்தார். அந்த நபரின் புனைப்பெயர் அபு ஹிந்த். இந்த அபு ஹிந்தை அடையாளம் காண வேண்டும்.
நவுபர் மௌலவி என்ற சூத்திரதாரி இருப்பதாக.சரத் வீரசேகர கூறினார்..சரத் வீரசேகர கூறும் நவுபர் மௌலவி ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைத்து வரப்படவில்லை அல்லது விசாரிக்கப்படவில்லை. யாரை ஏமாற்றுகிறீர்கள்? அபு ஹிந்தைம் தேடுங்கள் என்று சொல்கிறேன்.
ஏழாவது விடயம்- சாரா ஜாஸ்மின்
இந்த குண்டுவெடிப்பில் சஹாரானின் மனைவி ஹாதியா உடனிருந்தார். அந்த குண்டுவெடிப்புக்குப் பிறகு சாரா ஜாஸ்மினின் குரல் கேட்டுள்ளது மற்றொரு சாட்சியத்தில், மேலும் இரண்டு பேர் அவளை தூக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது. பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சாரா ஜாஸ்மினை பைக்கில் ஏற்றிச் சென்றதாக ஈஸ்டர் ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரியான ஏஎஸ்பி மாஹின்கந்த கூறுகின்றார் சீசீடீவியை தேடுகின்றனர்.. அபுபக்கர் என்ற ஐ.பி., களவாஞ்சிக்குடி பொலிசார் பிடிக்கின்றனர் சாரா ஜாஸ்மினுக்கு 3 டிஎன்ஏ சோதனைகள் உள்ளன. 1வது நெகடிவ். இறக்கவில்லை உயிருடன். உள்ளார் 16. உடல்கள் நீதிமன்றம் 16 என்று சொல்லுகின்றது. 2வதிலும் இல்லை. ஆனால் திடீரென்று 3வது டெஸ்டில் சாரா. இறந்தார் 16 என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாரா ஜாஸ்மின் இறந்துவிட்டதாக சொன்னால், அத்தியாயம் முடிந்துவிட்டது. உண்மை முடிந்துவிட்டது. இது என்ன பொய்? இறக்கும் வரை டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டுமா?. 1 மற்றும் 2 இல்லை, ஆனால் 3 இல் உள்ளதாம்.. இவை உடல் இல்லாத பிரேத பரிசோதனைகள். யாரை ஏமாற்றுகின்றீர்கள் இது பற்றி விசாரிக்கவும். நாங்கள் யாரையும் குற்றம் சாட்டவில்லை. உண்மையைக் கண்டுபிடிக்கவும்.
எட்டாவது விடயம்
கோட்டாபய 2019.11 18 ஜனாதிபதியாகிறார். நவம்பர் 22ஆம் திகதி பிரதமர் நியமிக்கப்படுகின்றார் அதற்கு முன்னதாக ஷானி அபேசேகர இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது அமைச்சரவையை நியமிப்பதற்கு முன்பே செய்யப்படுகிறது. ஈஸ்டர் பண்டிகையை விசாரித்த 31 பேரை கோட்டாபய ராஜபக்ச இடமாற்றம் செய்துள்ளார். அது பொய்யல்ல. இது உண்மை. 700 சிஐடி அதிகாரிகள் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்த நபர்களின் பெயர்களை சபாபீடத்தில் முன்வைக்கின்றேன்
டிஐஜி பி. கே டி பிரியந்தா
SSP ஷானி அபேசேகர
பியசென் அம்பாவில
நுவன் அசங்க
சி.டபிள்யூ விக்கிரமசேகர
ஜே. பி. டி. ஜயசிங்க (இவர் ஜனாதிபதி பாதுகாப்புத் தலைவர்)
ரஞ்சித் வெதசிங்க
டிஎஸ் திசேரா
கலனசிறி
ஹேமந்த குணசேகர
இந்திக்க லொகுஹெட்டி
தர்ஷிகா குமாரி
தனுஜா தமயந்தி
சந்திமா அருமப்பெரும
தீபானி மெணிக்கே
நாமலி ஹெராத்
கிரிதிசிங்க
மாரசிங்க
சாகர கரசிங்கஆராச்சி
எல்லெபோல
நிஷாந்த சில்வா
ஜெயசிங்க
இளங்கசிங்க
பசீர்
மெண்டிஸ் பிரேமகுமார
ஜகத்
லக்மல்
விஜிதா
ராஜபக்ச
இவர்கள்தான் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணை செய்த 31 பேர். இது மிகவும் சந்தேகத்திற்குரியது. கோத்தபாய ஏன் அவ்வாறு செய்தார்? இதன் பின்னணியில் உள்ள உண்மையை ஆராய வேண்டும்.
இன்னும் முக்கியமான விடயங்கள் உள்ளன. ஏப்ரல் 4 கலனிகம நுழைவாயிலுக்கு ஒரு லொறி வந்தது. இதற்கு முன் டபல் கெப் மற்றும் V8 வாகனமும் வருகிறது. நான் சொல்வதற்குப் பயப்படவில்லை. விசாரிக்கவும். 69 இலட்சம் வாக்குகளை பெற்று ஈஸ்டர் தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைகளில் இரத்தத்துடன் மறைக்க வராதீர்கள்.
சரத் வீரசேகர ஏன் இந்த லொரி பற்றி பேசும்போது நடுவில் குதித்தார். யார் பாதுகாக்கப்படுகிறார்கள்? நுழைவு வாயிலில் உள்ள அதிகாரிகள் ஒரு மணி நேரம் லாரி மற்றும் கெப் வண்டியை நிறுத்துகின்றனர். இந்த லொரியை விடுவிக்குமாறு மேல்மாகாண டி.ஐ.ஜி. ஒருவர் கூறுகின்றார். இந்த வெடிகுண்டு பாணந்துறையில் உள்ள பாதுகாப்பான வீட்டில் தயாரிக்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியும். நான் யாரையும் சுட்டிக் காட்டவில்லை. விசாரிக்கவும். லொரியை விடுவித்தவர்கள் குறித்த பதிவுகள் உள்ளன. இதை விசாரிக்கவும்.
ரவி செனவிரத்ன ஒரு சிறந்த சிரேஷ்ட டி.ஐ.ஜி. அவர் TNL க்கு ஒரு தெளிவான அறிக்கையை வழங்குகிறார். இதை விசாரிக்கவும்.ஏப்ரல் 5 முதல் 2-0 வரை வாட்ஸ்அப் மெசேஜ்கள் 2 இந்திய கவுண்டர்பார்ட் ஏஜென்சிகளில் இருந்து வருகின்றன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக காரணம் என்னவென்றால், தற்போது அந்த வாட்ஸ்அப் செய்திகள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன .கணினி நீக்கப்பட்டுள்ளது. எந்த தகவலும் இல்லை. குறைந்தபட்சம் என்ன அடிப்படையில் உளவுத்துறைக்கு வாட்ஸ்அப் செய்திகள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்று விசாரணை நடத்த வேண்டும்? இந்த தகவலை யார் கொடுத்தது என்று கண்டுபிடித்து உண்மையை சொல்லுங்கள். தனிப்பட்டவாறு நாங்கள் பொறுப்புகளை சுமத்தவில்லை. பாரபட்சமற்ற விசாரணைக்குப் பிறகு பொறுப்புக்கூறல் மற்றும் பொறுப்பு தேவைப்படுகிறது. மேலும், ஹாதியாவை அழைத்துச் சென்ற ஜெயசிங்க என்ற அதிகாரி மர்மமான முறையில் கோவிட் பாதிப்பால் இறந்தார் எரிக்கப்பட்டார் எரித்தால் எல்லாம் முடிந்து விடும். சாட்சி இல்லை. பொருட்களும் இல்லை. எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. அதையும் தேடுங்கள்.
அத்துடன் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சட்டமா அதிபர் கலந்துரையாடும் போது புலனாய்வுப் பிரிவினரும் அண்மையில் இருந்து வருகி்ன்றார்களாம் என்பதையும் குறிப்பிட விரும்புகின்றேன். ஏன் அப்படி வருகிறார்கள்? இங்கே உளவுப் பிரிவுக்கு என்ன வேலை? உளவுத்துறையில் அனைவரும் இல்லை. கொஞ்சம் பேர் வந்து மூக்கை நுழைக்கின்றார்கள். இதைப் பற்றி விசாரியுங்கள். நடப்பவை அனைத்தும் உளவுத்துறை தலைவருக்கு வாரந்தோறும் செல்கிறதா என்பதை அறிய விரும்புகிறோம். விசாரிக்கவும்.
வெளிநாட்டுப் புலனாய்வுப் பிரிவினரின் தகவல்கள் தொடர்பில் சாட்சியமளித்தவர் பிரதான பொலிஸ் பரிசோதகர் சம்பத்குமார என்பதனால் தொலைபேசியும் கணினியும் ரீசெட் செய்யப்பட்டு நீக்கப்பட்டன. அதுதான் யதார்த்தம்.
இன்று பல விடயங்ளை முன்வைத்தேன். இவற்றைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். உண்மைகளை ஆராயுங்கள். அரசியல் ஆதாயம் எங்களுக்கு தேவை இல்லை. நமக்கு உண்மை தெரிய வேண்டும். உண்மை கசப்பாக இருந்தாலும் உண்மை வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் நேற்று பொய்யொன்றை கூறினார். கர்தினால் இது பற்றி தெரிந்திருந்ததாகவும். கார்தினாலிடம் MSD பாதுகாப்புத் துறை கூறியதாம். அது ஒரு பொய். ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் கர்தினாலுக்கு MSD பாதுகாப்பு வழங்கப்பட்டது.. எனவே பொய்களை பரப்ப வேண்டாம். மேலும், புலனாய்வு அமைப்புகளினால் கர்த்தினாலுக்கு ஆபத்துகள் குறித்து தெரிவித்த கடிதத்தின் பிரதியை சபா பீடத்தில் வைக்குமாறு பிரதமரை கேட்கின்றேன். கார்டினாலிடம் தெளிவாகக் கேட்கிறார். கொடுத்த MSD .யார் என்று யார் தலைவர் சபாபீடத்தில். சமர்ப்பிக்கவும் பெயரைச் சொல்லுங்கள். கர்தினாலுக்குகு இந்த பாதுகாப்பு எப்பொழுது முதல் கொடுக்கப்பட்டது? இதற்கு பதில்கள் தேவை.
கர்தினாலுக்கு அரசு உறுப்பினர்கள் குண்டர்களைப் பயன்படுத்தி அவதூறாகப் பேசக் கூடாது என்று நான் கூறுகிறேன். நற்பெயருக்கு களங்கம் விளைவிக்காதீர்கள். மேலும் இந்த சபையில் இன்னும் சில விடயங்கள் உள்ளன. ரவி செனவிரத்ன ஒரு நேர்மையான, ஒழுக்கமான டி.ஐ.ஜி. அவர் முன்வைத்த கருத்துக்கள் குறித்து நேர்மையான மற்றும் வெளிப்படையான விசாரணையை நான் கோருகிறேன். ஷானி அபேசேகர பற்றி ஒவ்வொன்றாக சொன்னார்கள். ஒரு குறிப்பிட்ட வழக்கில் ஷானி பிடிபட்டார் என்றும் பொய்யான சாட்சியம் அளித்தார் என்றும் ஒருவர் கூறுகிறார். 10 மாதங்கள் காவலில் வைக்கப்பட்டார். பின்னர் அவருக்கு பிணை கிடைத்தது. அந்தத் தீர்ப்பை நான் சபாபீடத்தில் முன்வைக்கின்றேன்.. இது தொடர்பாக எந்த ஆதாரமும் இல்லை என்று கனம் நீதிமன்றம் கூறுகிறது. இது இட்டுக்கட்டப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகள் பற்றியது. ஷானி அபேசேகரவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்கு இது ஜோடிக்கப்பட்ட வழக்கு என மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இவ்வளவு நேர்மையான போலீஸ் அதிகாரி ஏன் வேட்டையாடப்படுகிறார்? கோட்டாபய இந்த வேட்டையை ஆரம்பித்தார். மேலும் ஷானி அபேசேகர பற்றி தேசிய பொலிஸ் ஆணைக்குழு கூறுகிறது. அவருக்கு அனைத்து நிலுவை சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுடன் ஓய்வூதியம் வழங்கவும் என்று, மோசடிக்காரர் ஒருவருக்கு இவற்றைக் கொடுக்கும்படி பொலிஸ் ஆணைக்குழு தெரிவிக்காது இன்னும் அவருக்கு வழங்கப்படவில்லை. அவற்றை மிக விரைவில் கொடுக்கவும்.
ஷானி அபேசேகர மற்றும் ஏனையோருக்கு எதிரான வழக்கை ஆகஸ்ட் மாதம் சட்டமா அதிபர் வாபஸ் பெற்றார். கம்பஹா நீதிமன்றத்தில். இதனை நான் சபாபீடத்தில் முன்வைக்கின்றேன். சானி நாட்டை விட்டு ஓட மாட்டார். போலிக் குற்றச்சாட்டுகளை கூறாதீர்கள். அவதூறு பேசாதீர்கள்
எங்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என்பதை நான் தெளிவாகச் சொல்கிறேன். பயங்கரவாதத் தலைவர்கள் தங்களைத் தாங்களே கொல்ல மாட்டார்கள். அது உண்மை. சஹரானுக்கும் மேல் ஒருவர் இருந்தார். அவர்தான் அபு ஹிந்த். நான் யாரையும் அவமதிப்பதில்லை. இந்த உண்மையைக் கண்டுபிடிக்க தாமதமாக வேண்டாம் .இந்த அரசாங்கத்தில் சம்பந்தப்பட்ட அனைவரின் கைகளிலும் இரத்தம் படிந்துள்ளது என்று நான் கூறுகிறேன்..
அது மட்டுமின்றி பாதிக்கப்பட்டவர்களை பற்றி பேசுவது யார்? எனக்கே வெட்கமாக இருக்கிறது. கத்தோலிக்க திருச்சபையிடம் ஏராளமான பணம் இருப்பதாக ஒரு கத்தோலிக்க எம்.பி. கூறுகிறார் அந்த மனிதனுக்கு வெட்கமில்லை. வாக்குக்காக, ஈஸ்டர் தாக்குதலை விற்பனை செய்தார்கள் . ஒரு கத்தோலிக்கராக இருந்து கொண்டு கத்தோலிக்க திருச்சபையிடம் பணம் இருப்பதாக அவர் கூறுகிறார்.
இதற்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். நானும் பொறுப்பை ஏற்கிறேன் யாரும் கை கழுவ முடியாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நீதி வழங்க வேண்டும். இறந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு 9 லட்சம் வழங்கப்படுமாம். ஒரு உயிரின் மதிப்பு 10 இலட்சம். காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களுக்காக பாடுபட எதிர்க்கட்சியில் உள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இந்த விடயங்கள் யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல. உண்மையைக் கண்டறிய இந்த விடயங்கள் முன்வைக்கப்பட்டன. உண்மையைத் தேடுவதற்கு ஊழலற்ற ஒரு முறை தேவை. அதற்கான உள்ளூர் பொறிமுறை உள்ளதா? உண்மையில் து{ய்மையாக எதுவும் இல்லை. நான் சர்வதேச விசாரணைக்குச் செல்ல விரும்பவில்லை. ஆனால் அனைத்து உள்ளூர் முறைகளும் ஊழல் நிறைந்தவை. எனவே சர்வதேச விசாரணை தேவை. முதுகெலும்பு இல்லையென்றால் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் செய்து காட்டுவோம். ஆனால் அரசியல் வேட்டையாட மாட்டோம். சாட்சிகளை மறைக்க மாட்டோம்.. அரசியல் எதிர்த் தரப்புக்கு தேவையற்ற பிரச்சினைகளை கொடுக்க மாட்டோம். இன்று நான் உண்மையைக் கண்டுபிடிப்பதாக உறுதியளிக்கிறேன். நானும் தீவிரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவன். அதனால்தான் இன்று இந்த உறுதிமொழியை அளிக்கிறேன்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை கோட்டபாயவும் ரணிலும் மறைக்கிறார்கள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை கோட்டபாயவும் ரணிலும் மறைக்கிறார்கள்
முறைமையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என நாட்டு மக்கள் கோரும் இவ்வேளையில்,உயிர்த்த ஞாயிறு தாக்குதலையும் அதனால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையையும் அரசியலாக்காது முழுமையான உண்மையைத்
தேடுவதே எதிர்க்கட்சியின் நோக்கம் என்றும், அரசாங்கம் உண்மைகளையும் தரவுகளையும் மறைப்பதால், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தமக்கும் சரியான உண்மைகள் தெரியாது என்பதனால்,இது தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்துமாறே எதிர்க்கட்சி கோருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இங்கு உண்மையை மறைப்பது என்பதிலிருந்து கைகளில் இரத்தம் தோய்ந்த நபர்களின் சதியோ என்று சந்தேகம் எழுகிறது என்றும், இந்த தாக்குதல் தொடர்பாக அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
என்றாலும், இங்கு உண்மை மறைக்கப்படுவது மாத்திரம் இடம் பெற்றுள்ளதால் அரசியல் சாதகங்களைப் பொருட்படுத்தாமல், முழுமையான உண்மையை இங்கு வெளிக்கொணர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எதிர்க்கட்சி ஒன்றியத்தின் வாராந்த செயற்குழுக் கூட்டம் இன்று (18) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடியபோதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை கோட்டபாயவும் ரணிலும் மறைக்கிறார்கள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான பிரதான சூத்திரதாரிகளையும் ஏனைய காரணத்தை கண்டுபிடித்து சம்பந்தப்பட்ட அனைவரையும் தண்டிப்பதாக அளித்த வாக்குறுதிகளின் பிரகாரமே ஜனாதிபதி தேர்தலிலும் பொதுத்
தேர்தலிலும் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதிக்கு 69 இலட்சம் மக்கள் ஆணை கிடைத்தாலும், அவர் அந்த உண்மையைத் தேடாது,உண்மையைக் கண்டறியாமல் பயங்கரவாத செயலை விசாரித்த குற்றப் புலனாய்வுத்
திணைக்களத்தின் அதிகாரிகள் பலரையும் அந்த நடவடிக்கைகளில் இருந்து நீக்கினார் என்றும், கடந்த காலங்களில் இடம்பெற்ற பல்வேறு செயற்பாடுகளை பார்க்கும் போது உண்மையை தேடுவதை விட உண்மை
மறைக்கப்பட்டுள்ளதையே மேற்கொண்டுள்ளதாக தோன்றுகிறது என்றும், இதன் காரணமாக உண்மையைக் கண்டறியும் பொறுப்பைக் கூட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச புறக்கணித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அவ்வாறே,தற்போதைய அரசாங்கமும் ஜனாதிபதியும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைப் பின்பற்றி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மையை மறைத்து வருகிறது என்றும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நேர்மையான, நம்பகமான, பக்கச்சார்பற்ற தேசிய
விசாரணையைத்தான் தாம் விரும்பினாலும், கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களைப் பார்க்கும் போது, தேசிய விசாரணைகளில் அதிக நம்பிக்கை இல்லை என்றும், இவ்வாறான நிலையில் சர்வதேச விசாரணையே நடத்தப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் முதல் பாகம் மாத்திரமே வெளியிடப்பட்டிருந்த போதிலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகங்கள் குறைந்தபட்சம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது எதிர்க்கட்சித் தலைவரால் பரிசீலிக்க தடை
விதிக்கப்பட்டுள்ளதாகவும், பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் மேற்பார்வையில் மாத்திரம் அதனை பரிசீலிக்க சந்தர்ப்பம் வழங்குவதில் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் கூட மீறப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சனல் 4 காணொளி தொடர்பில் விசாரணை நடத்த அரசாங்கம் நியமித்துள்ள புதிய குழுவிற்கு இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்களும் கர்தினால் அவர்களும்
அதிருப்தி தெரிவித்துள்ளனர் என்றும், இவ்வாறு புதிய குழுக்களை நியமிப்பதாலும் கூட உண்மயை மூடி மறைக்கப்படுவதாகவே எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மேலும் இவ்வாறான தாக்குதலுக்கு இந்நாட்டில் உள்ள அனைத்து மதங்கள் மற்றும் இனங்களைச் சேர்ந்த தீவிரப்போக்குடையவர்களும் பொறுப்பாளிகள் என்றும்,இந்த தீவிரவாதிகளால் இந்நாட்டின் தேசிய பாதுகாப்பு பறிபோனது
என்றும், இந்த தாக்குதலின் உண்மை கண்டறியப்படாத வரை, இது தேசிய பாதுகாப்பிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், எனவே மதங்களுக்கும்
இனங்களுக்கும் இடையில் காணப்படும் நம்பமகற்ற தன்மையையும் சந்தேகத்தையும் நீக்க உண்மையை வெளிப்படுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக் காட்டினார்.
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது
by நிருபர் காவலன் - கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
by நிருபர் காவலன் - வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன
by நிருபர் காவலன் - நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
by நிருபர் காவலன் - வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்
by நிருபர் காவலன் - திலித் ஜயவீரவின் ரிட் மனு மீதான தீர்ப்பை செப்டம்பர் 30
by நிருபர் காவலன் - யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை
by நிருபர் காவலன் - 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது
by நிருபர் காவலன் - ஹொரானாவில் சடலம் மீட்பு
by நிருபர் காவலன் - மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது
by நிருபர் காவலன்
பேராசைக்காக ஜனாதிபதி பதவியை பெற தயார் இல்லை
பேராசைக்காக ஜனாதிபதி பதவியை பெற தயார் இல்லை
கொள்கைகளை மீறிக் கொண்டு நாட்டு மக்களை மறந்துவிட்டு தனிப்பட்ட பேராசைக்காக ஜனாதிபதி பதவியையும் பிரதமர் பதவியையும் பெற தாம் தயாராக இல்லை என்றும், மொட்டுவின் 134 உறுப்பினர்களின் மட்டுப்படுத்தப்பட்ட ஆணையுடன் ஜனாதிபதி கதிரைக்கு சென்ற
தற்போதைய ஜனாதிபதி, மொட்டு திருடர்கள் குழுவின் பாதுகாவலராக மாறி தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை மறைத்து வருகின்றார் என்றும், நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் கூட ஆணைக்குழு அறிக்கையின் பிரதிகளை பெற்றுக் கொள்ளமுடியாத விதமாக மறைத்து வைத்துள்ளனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
உண்மையை மறைப்பதால் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பூரண அரசாட்சியை தருவதாக கூறினாலும் மக்கள் ஆணையின்றி ஜனாதிபதி பதவியையோ பிரதமர் பதவியையோ ஏனைய பதவியையோ அரச அதிகாரத்தையோ பெற தாம் தயார் இல்லை என்றும் தெரிவித்தார்.
பேராசைக்காக ஜனாதிபதி பதவியை பெற தயார் இல்லை
சமய ஸ்தலங்கள் ஊடாக வெளியிடப்படும் சமய செய்திகளின் அடிப்படையில் ஐக்கிய இலங்கையின் தேசிய பாதுகாப்பு பாதுகாக்கப்பட்டாலும் கடந்த காலங்களில் மலட்டுக் கொத்து, மலட்டு அறுவை சிகிச்சை என கூறி உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நாட்டில் இனங்கள் மற்றும் மதங்களுக்கு
இடையில் பிளவை ஏற்படுத்தினர் என்றும், இதனால்தான் போராட்டத்திற்கு முன் நல்லிணக்கம் என்பது கடுமையான வார்த்தை பிரயோகமாக அமைந்து காணப்பட்டதாகவும், தேசபிமானம் என்ற பெயரால் இவ்வாறு தாக்கப்பட்ட போதிலும் நாட்டை அடிமைப்படுத்தி நாட்டின் வளங்களை அபகரித்த
ஜனாதிபதியையும் குடும்பத்தையும் விரட்டியடிக்க மக்கள் ஒன்றாய் வீதியில் இறங்கி நடந்திய போராட்டத்தின் பின்னர் நல்லிணக்கம் என்ற வார்த்தை முக்கியமான அரச கொள்கையாக மாறியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சதஹம் யாத்தரா நிகழ்ச்சியின் 1500 ஆவது நிகழ்வு 15 ஆம் திகதி கேகாலை, கலிகமுவ வட்டராம ரஜமஹா விகாரையில் இடம் பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டை அழித்த தரப்புடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தால் தாம் தற்போது நாட்டின் ஜனாதிபதி என்றும்,நாட்டை அழித்த மொட்டுடன் எந்த ஒப்பந்தமும் இல்லை என்றும்,ஒப்பந்தமொன்று போட வேண்டிய தேவை ஏற்பட்டால் அத்தகையதொரு ஒப்பந்தம் அரசியல் கட்சிகளுடன் அன்றி 220 இலட்சம் பேருடன்தான் போடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஒரு குடும்பம் ஒருதலைபட்சமாக அதிகாரத்திற்கு உரிமை கோரிவாறு தனி ஆட்சியை நடத்திய நாட்டில் ஒரு கட்சிக்குள் பிரதிவாதங்கள் ஏற்படும் போது, கட்சிகளுக்குள் மோதல்கள் உருவெடுத்துள்ளது என்று விளம்பரம் செய்தாலும் அது மோதலாகாது என்றும், முறைமை மாற்றம் கோரும் நாட்டில் எழுந்துள்ள
இந்த வாதங்கள் ஒரு ஜனநாயகப் போக்கின் தொடக்கமாகும் என்றும்,தலைவர் தவறு செய்தாலும் சுதந்திரமாக பேசுவதே அடிமை அரசியலில் இருந்து விடுபட்டு ஜனநாயக பாதையில் பிரவேசிப்பதற்கான இலட்சனம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பேராசைக்காக ஜனாதிபதி பதவியை பெற தயார் இல்லை
வாத பிரதிவாதங்களை முன்வைப்பதில் இறுதியில் ஒரு நல்ல முடிவு எட்டப்படும் என்றும்,அடிமைத்தனமான குடும்ப அரசியலில் இருந்தும், மதத்தை விற்கும் குடும்ப அரசியலிலிருந்தும் விலகுவதிலும், ஜனநாயக
சுதந்திரம், பேச்சு சுதந்திரம், எதிர்ப்புத் தெரிவிக்கும் சுதந்திரம் உள்ள மத்தியஸ்த பாதையில் சமூக ஜனநாயக பயணத்தை மேற்கொள்வதே ஐக்கிய மக்கள் சக்தியின் நோக்கமாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
புத்த பகவான் கூட ஊழலையும் மோசடியையும் நிராகரித்தார் என்றாலும்,நாட்டு மக்களை அடிமைகளாக கனவு காணும் பெரும் குடும்பங்கள் தேசாபிமான பெருமிதத்துடன் பௌத்தத்தை முன்நிறுத்தி, மக்களை ஏமாற்றி
நாட்டைக் காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் முன் வந்து இறுதியில் நாட்டின் வளங்களையும் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தற்போது நாட்டில் உள்ள 220 இலட்சம் பேரினதும் வளங்களை கொள்ளையடித்தவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு இழந்த வளங்களை மீட்பதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சதஹம் யாத்ரா வேலைத்திட்டத்தின் கீழ் திஸ்ஸ அத்தநாயக்க அவர்கள் 1802 மத ஸ்தலங்களுக்குச் சென்று ஐக்கிய மக்கள் சக்தியின் சமயக் கொள்கைகள் மற்றும் சமூக நல்லிணக்கத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார் என்றும்,
பௌத்த விகாரைகளில் இடம் பெறும் நிகழ்வுகளில் 1500 ஆவது நிகழ்ச்சி 15 ஆம் திகதி நடைபெற்றதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
- சவுதிக்கு F-35 விமானம் அமெரிக்கா விற்பனைby நிருபர் காவலன்
- மத்திய கிழக்கு மோதலில் தலையிட இராணுவம் அனுப்பப்படாது என தென் கொரியாby நிருபர் காவலன்
- மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது பாகிஸ்தான்by நிருபர் காவலன்
- 30 ஹூத்தி போராளிகளைக் கொன்றதாக யேமன் ராணுவம் தெரிவித்துள்ளதுby நிருபர் காவலன்
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைதுby நிருபர் காவலன்
அரசியலில் சூதாடுகிறது அரசாங்கம்
அரசியலில் சூதாடுகிறது அரசாங்கம்
இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டி 2019 ஆம் ஆண்டைப் போன்று மீண்டும் மக்களை ஏமாற்றத் தயாராகி வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசதெரிவித்தார்.
ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தேர்தலை ஒத்திவைத்து அரசியல் சூதாட்டத்தில் ஈடுபட்டு தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான திட்டங்களை வகுத்து வருவதாகவும்
தொடம்கஸ்லந்த ஸ்ரீ சைலத்தலாராம விகாரையில் தூபியைத் திறந்து வைக்கும் நிகழ்வில் சனிக்கிழமை (26) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் மதங்கள் மற்றும் இனங்களுக்கு இடையே பூசல்கள் உருவாக்கப்படுகின்றன என்றும், வெவ்வேறு புவியியல் அதிகார வரம்புகளில் வாழும் மக்களின் சாதி மற்றும் மதத்தைப் பற்றி பேசி இந்த சர்ச்சைகளை அரசியல்வாதிகளே உருவாக்குகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.
அரசியலில் சூதாடுகிறது அரசாங்கம்
அதன் மூலம் வாக்குகளைப் பெறவே எதிர்பார்க்கின்றனர் என்றும், வெவ்வேறு பகுதிகளில் உள்ள வெவ்வேறு நபர்களிடம் 13 குறித்து சிலரிடம் விருப்பம் என்றும் மற்றும் சிலரிடம் விருப்பமில்லை என்றும் ஜனாதிபதி கனவுகளை கொண்ட இவர்கள் இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்துகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.
இந்த அரசியல் தலைவர்கள் சரியான குணாதிசயங்களில் இல்லாமல் அதிகாரத்தை பெற்று ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவியை பெற முயற்சிக்கின்றனர் என்றும், தமது சுகபோக வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதற்காக 220 இலட்சம் மக்களின் வாழ்க்கை எப்படி போனாலும் பரவாயில்லை என்ற போக்கில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சியை தக்க வைக்க முயற்சிக்கின்றனர் என்றும் குறிப்பிட்டார்.
மதங்கள் இனங்களுக்கிடையில் நல்லிணக்கமும் ஒற்றுமையும் நிலவினால்தான் நாட்டின் ஒருமைப்பாடு, பிரதேச ஒருமைப்பாடு, பலம், இறைமை, எமது தேசியம் எமது வாழ்வியல் பாதுகாக்கப்படும் என்றும், எனவே இன, மத, சாதி முரண்பாடுகள் ஏற்படும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் செயற்படாது என்றார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, கருத்தடை அறுவை சிகிச்சை செய்ததாக வைத்தியர் சாபிக்கு பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து இனப் பிளவைக் கிளப்பினர் என்றும், இறுதியில்,வைத்தியர் சாபி சரியானவர் என்று நிரூபனமானது என்றும் குறிப்பிட்டார்.
அரசியலில் சூதாடுகிறது அரசாங்கம்
எனவே சம்புத்த சாசனத்தைப் பாதுகாக்க வேண்டுமானால் அனைத்து இன,மத,இன மக்களுக்கும் இடையிலான பிணைப்பு பலப்படுத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சுப் பதவிகளில் கொண்ட பேராசையால் சிலர் நாட்டை துண்டு துண்டாக பிரித்து வருகின்றனர் என்றும், இது தேசப்பற்று அல்ல என்றும், கடந்த காலங்களில் இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டி அதிகாரத்தைப் பெற்றவரை மக்களே விரட்டியடித்தனர் என்றும் படித்தவர்களையும் அறிவாளிகளையும் இணைத்துக் கொண்டு இந்நாட்டைக் கட்டியெழுப்பப் பங்களிப்பதை தான் பின்பற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டு மக்களின் பிரச்சனைகளை பேச பாராளுமன்றத்திற்கு செல்லும் போது பாராளுமன்றத்தில் ஒரு முட்டாள் கூட்டம் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை பேசி,பேச்சுக்களில் குறுக்கிட்டு மக்கள் பிரச்சினைகளை மூடிமறைக்க முயற்சிக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறைப் பேராசிரியரான வசந்த அத்துகோரலவின் ஆய்வின் பிரகாரம், இந்நாட்டின் 15 மாவட்டங்களில் உள்ள மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
இதனால் அம்மக்கள் 10 ஆயிரம் கோடி ரூபாவுக்கு மேல் தங்க ஆபரணங்களை அடகு வைத்துள்ளனர் என்றும், பயிர் சேதத்தால் 60 ஆயிரம் ஏக்கர் நாசமாகியுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், இதனால் 68729 கோடி தங்கம், நகைகள் ஆபரணங்கள் அடமானம் வைக்கப்பட்டுள்ளன என்றார்.
என்றும்,இப்பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் தீர்வு இல்லை என்றும் இவ்வாறான பிரச்சினைகளுக்கு மத்தியில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தேர்தலை ஒத்திவைத்து அரசியல் சூதாட்டத்தில் ஈடுபட்டு தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான திட்டங்களை வகுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைதுby நிருபர் காவலன்
- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுby நிருபர் காவலன்
- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றனby நிருபர் காவலன்
- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்by நிருபர் காவலன்
- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்by நிருபர் காவலன்
சஜித் WHO இலங்கை பிரதிநிதியுடன் சந்திப்பு
சஜித் WHO இலங்கை பிரதிநிதியுடன் சந்திப்பு
உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைப் பிரதிநிதி Dr. Alaka Singh மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர்களுக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று (20) இடம்பெற்றது.
இந்நாட்டில் தற்போது எழுந்துள்ள மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு, தரம் குறைந்த பதிவு செய்யப்படாத மற்றும் அதிக விலைக்கு நாட்டிற்கு கொண்டு வந்த மருந்துகளால் அப்பாவி நோயாளிகள் உயிரிழந்துள்ளமை,
அரச மருத்துவமனைகளில் CT scan, MRI Scan போன்ற இயந்திரங்களின் தட்டுப்பாடு மற்றும் பராமரிப்பின்றி குறித்த இயந்திரங்களைப்
சஜித் WHO இலங்கை பிரதிநிதியுடன் சந்திப்பு
பயன்படுத்துதல், வைத்தியர்கள், சுகாதார அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறுவது போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களான நிரோஷன் பெரேரா மற்றும் வைத்தியர் காவிந்த ஜயவர்தன ஆகியோரும் கலந்து கொண்டனர்.
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது
by நிருபர் காவலன் - கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
by நிருபர் காவலன் - வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன
by நிருபர் காவலன் - நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
by நிருபர் காவலன் - வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்
by நிருபர் காவலன்
சட்டவிரோதமான செயற்பாடுகளை விடுத்து முறையாக தேர்தலை நடத்துங்கள்
சட்டவிரோதமான செயற்பாடுகளை விடுத்து முறையாக தேர்தலை நடத்துங்கள்
வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட போதிலும், பணமில்லை எனக் கூறி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டாலும், சுற்றறிக்கைகள் மூலம் அரசியல் கைக்கூலிகளை
நியமித்து உள்ளூராட்சி மன்றங்களை தமக்கு விருப்பமானவாறு கட்டுப்படுத்த முயற்சித்து வருவதை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (06) பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.
இந்த சுற்றறிக்கையின் மூலம், உள்ளூராட்சி மன்றங்களின் பணிகளை ஒருங்கிணைக்க, ஒருங்கிணைப்பாளர் ஒருவரை நியமிக்க, ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம்
புதிய சபைகளை ஏற்படுத்தாமல் அரசியல் அடியாட்கள் மூலம் உள்ளூராட்சி மன்றங்களை கட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சட்டவிரோதமான செயற்பாடுகளை விடுத்து முறையாக தேர்தலை நடத்துங்கள்
அத்துடன் நீதித்துறைசாரார்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, மக்கள் தேர்தலை விரும்பவில்லை எனவும், பாராளுமன்றத்தில் எவருக்கும் 50 சதவீத பெரும்பான்மை இல்லை எனவும் தெரிவித்திருந்ததாகவும், சபையில்
எதிர்க்கட்சித் தலைவர், பிரதமருக்கு சவால் விடுத்து தேர்தலொன்று நடத்தினால் 2/3 அல்லது 5/6 ஆக இருந்தாலும் தம்மால் பெருன்பான்மையை எடுத்துக் காட்டலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி உயர் நீதிமன்ற நீதிபதிகளை விருந்துபசாரத்துக்கு அழைத்து, இது போன்ற நீதி நியாயமான நீதிமன்றத் தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டிய நிலையில், விருந்துபசார நிகழ்ச்சிகளை நடத்துவது தார்மீகமல்ல என்றும், சுதந்திர தீர்ப்புகளுக்கு இது இடையூறாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாத பட்சத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறும், இதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வதற்குத் தேவையான கூடிய ஒத்துழைப்பை வழங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.
Featured
அரசாங்கம் நாட்டைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக மக்களை ஒடுக்குகிறது
அரசாங்கம் நாட்டைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக மக்களை ஒடுக்குகிறது
நமது நாடு வளமான நாடாக இருந்தாலும், தற்போது வங்குரோத்து நிலையை அடைந்து விட்டதாகவும், இந்த வங்குரோத்தில் இருந்து மீள்வதற்கு பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்குப் பதிலாக தற்போதைய அரசாங்கம்
பொருளாதாரத்தை சுருக்கி வருவதாகவும், வட்டி விகிதங்களை அதிகரிப்பதன் மூலம் வியாபாரங்களையும் அரசாங்கம் முடக்கி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நாடு இவ்வாறான நிலையில் இருக்கும் போது தற்போதைய அரசாங்கம் பல்வேறு சட்டதிட்டங்கள் ஊடாக நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறிவருவதாகவும், தற்சமயம் உண்மையை மக்களிடம் கொண்டு செல்லும்
சுதந்திர ஊடக நிறுவனங்கள் கூட அடக்குமுறைக்குட்படுத்த சட்டங்களைக் கொண்டு வருவதாகவும், அச்சட்டங்களின் ஊடாக தம்மை விமர்சிக்கும் ஊடக நிறுவனங்களை ஒடுக்க முயற்சித்து வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அரசாங்கம் நாட்டைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக மக்களை ஒடுக்குகிறது
புதிய சட்டங்கள் மூலம் மக்களை பயங்கரவாதிகளாக முத்திரை குத்தவும் தயாராகி வருவதாகவும், இந்த சட்டமூலங்கள் மூலம் மக்களுக்கு அதிகபட்ச இடையூறுகளை பிரயோகிக்கும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டை வீழ்ந்த இடத்தில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்காத இந்த அரசாங்கம் நாளுக்கு நாள் மக்களை ஒடுக்கும் செயற்பாடுகளை
மேற்கொண்டு வருவதாகவும் இந்நிலை உடனடியாக மாற்றப்பட வேண்டும் எனவும் எதிர்கட்சி தலைவர் மேலும் தெரிவித்தார்.
அரலகங்வில தம்மின்ன பகுதியில் உள்ள மட்பாண்ட உற்பத்தியாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இன்று (02) ஆராயச் சென்ற போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Featured
எக்ஸ்பிரஸ் பேர்ல் சம்பவம் தொடர்பில் சஜித்தின் சந்தேகங்கள்
எக்ஸ்பிரஸ் பேர்ல் சம்பவம் தொடர்பில் சஜித்தின் சந்தேகங்கள்
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் மூலம் நமது கடற்பரப்பில் அதிக அளவு இரசாயனங்கள் கலந்ததால் சுற்றுச்சூழலுக்கும் மீனவர்களுக்கும் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டதாகவும், இதற்கு முன் நிவ் டயமன்ட் விபத்து இடம் பெற்றதாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த சம்பவத்திற்கு
பிறகு கடற்ப்பரப்பை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் சரியாக எடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும், இந்நிகழ்வுகளை பார்க்கும் போது இதில் ஒரு சதி நடந்துள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.
உலக நாடுகள் பசுமைப் பொருளாதாரம், நீலப் பொருளாதாரம் குறித்து பேசினாலும், நமது நாட்டில் அது வெறும் வார்த்தைகளில் மட்டும்தான் இருப்பதாகவும், அமைச்சுக்களை பகிர்ந்தளிப்பதன் மூலம் இது மேலும் தெளிவாகுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
கோட்டாபய ஜனாதிபதி அன்று செயற்பட்டது போன்று எந்த மாற்றமும் இன்றி தற்போதைய ஜனாதிபதியும் செயற்படுவதாக தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், நிவ் டயமன்ட் சம்பவத்திற்குப் பிறகு அரசாங்கம் எடுத்த நடவடிக்கை யாது என தான் கேள்வி எழுப்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
மீண்டும் அவ்வாறானதொன்றிலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் தெளிவான நோக்கம் தனக்கு இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எக்ஸ்பிரஸ் பேர்ல் சம்பவம் தொடர்பில் சஜித்தின் சந்தேகங்கள்
எக்ஸ்பிரஸ் பேர்ல், நிவ் டயமன்ட் ஆகிய இரு துயர சம்பவங்களில் இருந்தும் இந்த அரசாங்கம் இன்னும் பாடம் கற்கவில்லை எனவும், இந்த முறையற்ற போக்கால் நாடு பெரும் இழப்பை சந்தித்துள்ளதாகவும், எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் கசிவு இருப்பது முதற்கட்டமாக கண்டுபிடிக்கப்பட்டாலும், அதை அந்நாட்டின் கடல் எல்லைக்குள் நுழைய அனுமதித்த தரப்பினர் யார் என்பது தெரியப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
உலகில் மிக உயர்தரத்திலான சேவைகளைக் கொண்ட துறைமுகம் எங்களிடம் காணப்பட்டாலும் இந்த விபத்தின் போது, அதைத் தடுக்கத் தேவையான உபகரணங்கள் எங்களிடம் இருக்கவில்லை எனவும், இந்த அரசாங்கம் கப்பலை காப்பாற்ற முயற்சித்ததாகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.
தற்போதைய இந்த விவாதத்தை நிறுத்த பாரிய சதி நடந்ததாகவும், தாம் கப்பல் தரப்பு சார்பில் பேசவில்லை எனவும், நாட்டு மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் தரப்பினர் சார்பாகவே பேசுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் சுட்டிக்காட்டினார்.
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீபற்றியதால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் இன்று (10) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Featured
எதிர்க்கட்சித் தலைவர் நோன்புப் பெருநாள் வாழ்த்து
எதிர்க்கட்சித் தலைவர் நோன்புப் பெருநாள் வாழ்த்து
நல்லிணக்கத்துடனும் ஒற்றுமையுடனும் ஒரு புதிய இலங்கையை உருவாக்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பதன் மூலம் இறைவனுக்கும் அடியானுக்கும் இடையே நெருங்கிய உறவை ஏற்படுத்த ஒரு தனித்துவமான வாய்ப்பை உருவாக்கி அதன் மூலம் உயர்ந்த மனித நற்பண்புகள் மற்றும் ஒழுக்க விழுமியங்களின் மதிப்பை எடுத்துரைப்பது மிகவும் பாராட்டத்தக்கது.
பரஸ்பர நல்லிணக்கத்துடனும், மனிதாபிமான நெருக்கத்துடனும் நாம் நடந்து கொண்டால்,உலகம் இதனைவிட மிகவும் அமைதியானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
எதிர்க்கட்சித் தலைவர் நோன்புப் பெருநாள் வாழ்த்து
பரோபகார அடிப்படையில் சமூகத்தில் வசதியுள்ளோர் இல்லாதோர் இடைவெளியைக் குறைத்து அனைவருக்கும் சகோதரத்துவ கரங்களை நீட்டும் ஒரு வாய்ப்பாகவும் இந்த பெருநாளைக் குறிப்பிடலாம்.
நல்லிணக்கத்துடனும் ஒற்றுமையுடனும் ஒரு புதிய இலங்கையை உருவாக்க இவ்வாறான கலாசார,சமய நிகழ்வுகள் மூலம் கிடைக்கின்ற ஆதரவு அளப்பரியது.குறிப்பாக பல்லாண்டு காலம் இந்நாட்டு சகோதர முஸ்லிம் மக்கள் தாய்நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளதுடன், இலங்கையின் அடையாளத்தில் முஸ்லிம் சகோதரர்களும் பங்குதாரர்களாவர்.
அதனை நாம் மிகுந்த மரியாதையுடன் நினைவு கூர்வதுடன்,மனித குலத்தின் முன்னேற்றத்திற்கும் நல்லிணக்கப் பாதைக்கும் துணிச்சலுடன் உழைக்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் மீண்டும் நினைவு கூர்வோம் என்று தெரிவித்துள்ளார்.
Featured
அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றாக எழுவோம் சஜித்
அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றாக எழுவோம் சஜித்
அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றாக எழுவோம் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார் .
மக்களுக்கு பயந்த, மக்கள் அபிப்பிராயத்தை ஊசலாட்டும் திறமையற்ற தற்போதைய அரசாங்கம் 24 மணிநேரமும் 365 நாட்களுமாக தேர்தலை நடத்தவிடாமல் தடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தேர்தலை எதிர்கொள்ளும்
அச்சத்தினால் தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை வழங்காமல் தேர்தல் ஆணைக்குழுவிற்கும் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் அழுத்தங்களை பிரயோகித்தும் தேர்தலை சீர்குலைக்க முயற்சிப்பது மக்கள் பயத்திற்கே எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றாக எழுவோம் சஜித்
அவ்வாறே, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், ஒலிபரப்பு அதிகார சபைச் சட்டம் போன்ற சட்டங்களின் ஊடாகமக்களின் எழுச்சியைக் கட்டுப்படுத்தி மக்களை அடக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதன் கீழ், ஊடகங்களை அடக்கி, மக்கள் தங்கள் உரிமைகளுக்காக முன்நிற்கும் போது அவர்களை பயங்கரவாதிகள் என்று அழைத்து
மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளை கூட மீறும் வகையில் அரசாங்கம் செயற்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இவ்வாறு மக்களின் ஜனநாயக உரிமைகள், அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள்மீறப்படுவதால், இன, மத, சாதி பேதமின்றி சிவில் அமைப்புக்களும், பிரஜைகளும் இதற்கு எதிராக ஒன்றாகப் போராட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.
Featured
எதிர்க் கட்சித்தலைவர் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
எதிர்க் கட்சித்தலைவர் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
தமிழ், சிங்கள புத்தாண்டு சமூக உறவுகளை மேம்படுத்துவதற்கும் பழைய பழக்கவழக்கங்களைத் தொடரவும், ஒருவருக்கொருவர் பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்தவும் உதவும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு வாழ்த்துச் செயதியிலேயே எதிர்க்கட்சித் தலைவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்தச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எதிர்க் கட்சித்தலைவர் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
தன்னிறைவு பெற்ற பொருளாதாரத்தை கொண்டிருந்த நம் நாடு, தற்போது கண்ணீர் வடிக்கும் நாடாக மாறியதோடு, புத்தாண்டை குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் கொண்டாடும் வாய்ப்பு கூட பல ஆண்டுகளாக இல்லாமல் போய்விட்டது.எமது நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை நிலைமைகளுக்கு அசாதாரணமான சவால்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த இருள் சூழ்ந்த காலம் முடிந்து,நமது நாட்டின் ஒட்டுமொத்த குடிமக்களும் வார்த்தையின் உண்மையான அர்த்தத்தில் வளமான மற்றும் ஒளிமயமான எதிர்காலத்திற்காக உறுதியுடன் அணிதிரள்வதற்கான வலிமையைப் பெற பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் .
Featured
ஜனாதிபதி மக்களின் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறிவருகிறார்
ஜனாதிபதி மக்களின் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறிவருகிறார்
நாட்டு மக்களின் அரசியல் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை அரசாங்கம் மீறி நாட்டின் பக்கச்சார்பற்ற நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளையும், சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிகளையும்
அரசியல் சதித்திட்டங்களினூடாக அரசாங்கம் தடைகளை ஏற்படுத்தி மனித உரிமைகளை அப்பட்டமாக மீறிவருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
தேர்தல் ஆணைக்குழுவிற்கும், நாட்டின் உயர் நீதிமன்றத்திற்கும், நிதி அமைச்சுக்கும் மற்றும் அரச அச்சகத்திற்கும் கூட இடையூறுகளை ஏற்படுத்தி தேர்தலை சீர்குலைக்கும் செயலிலும் ஈடுபட்டு வருவதாகவும், இதற்கு ஆதரவு
தெரிவித்து துணைபோகும் விதமாக தேர்தலை சீர்குலைக்கும் ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித தலைவர் தெரிவித்தார்.
நாட்டு மக்கள் முறைமை மாற்றமொன்று வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தாலும், தற்போது முறைமை மாற்றம் ஒன்று நிகழாது ராஜபக்சர்களை பாதுகாக்கும் திட்டமொன்றே இயங்கி வருவதாக தெரிவித்த
ஜனாதிபதி மக்களின் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறிவருகிறார்
எதிர்க்கட்சித்தலைவர், பாராளுமன்ற உறுப்பினர்களின் எரிக்கப்பட்ட வீடுகளுக்கு நட்டஈடு வழங்குதல், மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்குதல் மற்றும் முழு பதவிக் காலம் முடியும் வரை பொதுத்
தேர்தலுக்கு செல்லாதிருத்தல் என்ற காரணங்களுக்காக மாத்திரமே இந்த ஜனாதிபதி செயற்பட்டுக்கொண்டிருக்கிறார் எனவும் அவர் தெரிவித்தார்.
பொரளை குப்பியாவத்த பிரதேசத்தில் நேற்று (20) பிற்பகல் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விமானி ஆக ஆசைப்பட்டேன்: எதிர்கட்சித் தலைவ
விமானி ஆக ஆசைப்பட்டேன்: எதிர்கட்சித் தலைவர்
அரசியலுக்கு வரவில்லை என்றால் தான் ஒரு விமானி ஆக வேண்டும் என ஆசைப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பயணிகளின் உயிருக்கு விமானி பொறுப்பாளியாக இருப்பது போல் அரசாங்கத்திற்கும் மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு உள்ளது . அரசாங்கம் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு பதிலாக அதை வலுவற்றதாக்கிக்
கொண்டு இருக்கிறது என கடந்த சனிக்கிழமை கொலன்னாவையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது அவர் தெரிவித்தார்.
யுத்த காலத்தில் கூட அப்போதிருந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்து ஆலோசித்து IMF இன் உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்தியிருந்தார்.
ஆனால் ஒருபோதும் மக்கள் மீது சுமையை ஏற்றும் திட்டங்கள் முன்மொழிவுகளுக்கு அவர் உடன்படவில்லை.
அப்போது இலங்கையின் சொந்த திட்டங்களை IMF விடம் முன்வைக்க அவரால் முடிந்தது. ஆனால் இப்போது IMF முன்மொழியும் திட்டங்களை நாங்கள் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதுதான் இப்போதைய அரசாங்கத்திற்கும் அப்போதைய அரசாங்கத்திற்கும் இருக்கும் வித்தியாசம் என அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதிக்கு பைத்தியம் சாடுகிறார் சஜித்
ஜனாதிபதிக்கு பைத்தியம் சாடுகிறார் சஜித்
ஜனாதிபதி பைத்தியக்காரத்தனமாக பேசுகிறார் எனவும்,தேர்தலே இல்லை என அறிவித்து பைத்தியம் பிடித்தவர் போல் நடந்து கொள்கிறார் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
மேலும், தேர்தல் இல்லை என்றால்,இல்லாத தேர்தலுக்கு ஐக்கிய தேசியக் கட்சி வேட்புமனு தாக்கல் செய்தது எவ்வாறு எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ்ப்பாணம் – மானிப்பாய் பிரதேசத்தில் இடம் பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வேட்புமனு தாக்கல் செய்யும் திகதியும் அறிவிக்கப்பட்டு, தேர்தலை நடத்தும் திகதியும் தீர்மானிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி பைத்தியக்காரத்தனமாக பேசி கிறுக்குத்தனமாக நடந்து கொள்கிறார்.
இந்நாட்டில் ஜனநாயகத்தை சீர்குலைத்து தேர்தலை நிறுத்துவதற்கு
பிரதான சூத்திரதாரியாக செயல்பட்டவர் வேறு யாருமல்ல, ஜனாதிபதியே எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சுதந்திர தினத்தை புறக்கணித்த சஜித்
சுதந்திர தினத்தை புறக்கணித்த சஜித்
இலங்கையின் 75 தாவது சுதந்திர தினத்தை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா புறக்கணித்துள்ளார் .
நாட்டில் ஏற்பட்டுள்ள உணவு பற்றாக்குறை விலைவாசி அதிகரிப்பு ,மற்றும் மக்களின் துயர் நிலைகளை அடுத்து இந்த புறக்கணிப்பை சஜித் செய்துள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .
எம்பிகளுக்கு சொகுசு வீடு எதற்கு சொகுசு வீட்டில் வாழும் சஜித் கேள்வி
எம்பிகளுக்கு சொகுசு வீடு எதற்கு சொகுசு வீட்டில் வாழும் சஜித் கேள்வி
இலங்கையில் சிறுவர்கள் போசாக்கு இன்றி காணப்படு பொழுது ,எம்பிக்கள் ஆடம்பர சொகுசு வீடுகளில் வாழ்வது ஏன் என்ற கேள்வியை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா எழுப்பியுள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் இலங்கையின் ஜனாதிபதியாக. சஜித் வருவார் என எதிர் பார்க்க படும் வேளையில் ,
இவ்வாறான கேள்விகளை அவர் எழுப்பி வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது.
சஜித் பிரேமதாசா அமெரிக்கா தூதுவர் சந்திப்பு
சஜித் பிரேமதாசா அமெரிக்கா தூதுவர் சந்திப்பு
இலங்கையில் எதிர்கட்சி தலைவர், சஜித் பிரேமதாசாவுடன் ,இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் யூலி சங் சந்தித்து பேசியுள்ளார் .
அமெரிக்கா தூதுவர், சஜித் பிரேமதசாவுக்கு இடையிலான ,சந்திப்பின் பொழுது,நாட்டில் இடம் பெறும் கைதுகள் ,கடத்தல்கள் ,மற்றும் அடக்குமுறை தொடர்பில் பேச பட்டுள்ளது .
மேலும் ஆளும் அரசு ,போராட்ட காரர்களை ,கைது செய்திடும் நடவடிக்கை தொடர்பிலும் ,சஜித் பிரேமதாசா அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளாக தெரிவிக்க பட்டுள்ளது.
எனினும் இது தவிர வேறுஉள்ளக அரசிய ,நிலைப் பாடுகள் எதிர்கால நடவடிக்கைகள், அதன்பொழுது ,தமது ஆதரவு நிலை ,என்பது தொடர்பாகவும் சஜித் பிரேமதாசா அமெரிக்கா தூதுவர் சந்திப்பில் பேச பட்டு இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது.
புதிய ஜனாதிபதி மீதான எதிர்ப்பார்ப்பு 12 மணித்தியாலங்களுக்குள் முடிந்துவிட்டது சஜித்
புதிய ஜனாதிபதி மீதான எதிர்ப்பார்ப்பு 12 மணித்தியாலங்களுக்குள் முடிந்துவிட்டது சஜித்
பதவிப்பிரமாணம் செய்த நாள் இருந்த எதிர்பார்ப்பு, பன்னிரெண்டு மணித்தியாலங்களுக்குள் முடிந்துவிட்டது. சந்தர்ப்பவாத அரசியல் எங்களிடம் இல்லை.
ஒரு வளமான நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயல்பட முடியுமான எதிர்பார்ப்பை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தினால்
நழுவவிடப்பட்டதாகவும், சந்தர்ப்பவாத அரசியல் தம்மிடம் இல்லை எனவும், அரசாங்கத்துடன் இணையாமல் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு
எதிர்க்கட்சியில் இருந்த வன்னம் கூடிய ஒத்துழைப்பை வழங்குவோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ஜனநாயக ரீதியாக சுதந்திரமாக போராடிய போராட்டக்காரர்களுக்கு எதிராக அரசாங்கம் தற்போது புதிய கதைகளை கூறி வருவதாகவும், உண்மையில்
வன்முறைகள் ஆரம்பிக்கப்பட்டது மகிந்த ராஜபக்ஸவின் பிரியாவிடை “அலரி மாளிகை நிகழ்வின்” போதே எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
வன்முறைக்கும் தீ வைப்புச் சம்பவங்களுக்கும் தான் முற்றாக எதிரானவன் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஒன்பதாம் திகதியான அன்றைய நாள் முழுவதும் நடந்தது பயங்கரவாதமே என்றும் அவர் தெரிவித்தார்.
புதிய ஜனாதிபதி மீதான எதிர்ப்பார்ப்பு 12 மணித்தியாலங்களுக்குள் முடிந்துவிட்டது சஜித்
சந்தர்ப்பவாத அரசியல் தவளைகளுக்கு நிச்சயம் மக்கள் நீதிமன்றத்தில் நஷ்டஈடு வழங்க வேண்டிவரும் என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், அதிலிருந்து யாரும் விடுபட முடியாது எனவும் தெரிவித்தார்.
புதிய பயணமொன்றை மேற்கொள்ள ஜனாதிபதி அழைப்பு விடுத்த போது, அது குறித்து இன்னும் நேர்மறையாகச் சிந்தித்துக்கொண்டிருக்கும் வேளையில், நள்ளிரவைத் தாண்டிய நேரத்தில் காலிமுகத்திடல்
போராட்டக்காரர்கள் மீது கோழைத்தனமான தாக்குதலைத் தொடுத்த வன்னம் அரசாங்கத்தின் ஆட்சி முறை இயல்பை நாட்டுக்கு வெளிப்படுத்தியதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அது ஒரு மூர்க்கத்தனமான முட்டாள்தனம் எனவும், இதனால் ஏற்பட்ட அழிவை
எந்த நாகரீகமுள்ள ஒருவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.
ராஜபக்ஸவின் கைப்பாவை அரசாங்கம் ரணிலை தாக்கிய சஜித் பிரேமதாசா
ராஜபக்ஸவின் கைப்பாவை அரசாங்கம் ரணிலை தாக்கிய சஜித் பிரேமதாசா
ராஜபக்ஸவின் கைப்பாவை அரசாங்கத்தின் வழமையான மிருகத்தனம் மற்றும் உத்தியோகபூர்வ வன்முறையைப் பயன்படுத்தி, தற்போதைய “ராஜபக்ஸ நிழல்
அரசாங்கம்” இன்று காலை காலிமுகத்திடல் அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராக கோழைத்தனமான மற்றும் வன்முறைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
அதனைப் செய்தியிட வந்த பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் அங்கவீனமான போர்வீரர்களும் அந்த மனிதாபிமானமற்ற தாக்குதலுக்கு
முகங்கொடுக்க நேரிட்டதோடு இந்த தாக்குதல் உண்மையான அர்த்தத்திலயே கொடூரமான உத்தியோகபூர்வ வன்முறையாகும்.
புதிய ஜனாதிபதி பதவிக்கு வந்து ஒரு நாள் கழிவதற்குள் இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலைத் தொடுத்துள்ளதுடன் தனது எதிர்கால ஆட்சியின் தன்மை என்பதை இதன் மூலம் உணர்த்த முற்பட்டுள்ளார் என்றால், இவ்வாறான அட்டூழியங்களுக்கு
அப்பாற்பட்ட பலமிக்க அரசாங்கங்கள் மக்கள் சக்தியால் வீட்டுக்கு அனுப்பப்பட்டதை அவருக்கு நினைவூட்ட விரும்புகின்றோம்.
அந்தந்த சிவில் போராட்டத்தின் போராளிகள் ஆக்கிரமித்திருந்த இடங்கள் அனைத்தையும் மீள கையளித்து கொண்டிருக்கும் போதும், அதற்குள்,
பாதுகாப்புப் படையினர் விடியற்காலையில் புகுந்து, “உயர் உத்தரவுப்படி” இந்த கோழைத்தனமான
தாக்குதலை நடத்தியுள்ளனர். ராஜபக்ஸ அரசை வீட்டுக்கு அனுப்ப முற்படுவதற்கு எதிராக வெறியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது
எங்களுக்குத் தெரியாது, ஆனால் அது அவ்வாறு இல்லை என்று நினைக்க எந்த காரணமும் இல்லை.
ராஜபக்ஸவின் கைப்பாவை அரசாங்கம் ரணிலை தாக்கிய சஜித் பிரேமதாசா
போராடுவதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் நாட்டு மக்களுக்குள்ள ஜனநாயக உரிமையை நாங்கள் எப்போதும் மதிக்கிறோம்.
அரச சொத்துக்கள் மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்தாமல், வன்முறைக்குப் பதிலாக நாகரீகமான போராட்டங்களுக்காக நாங்கள் தொடர்ந்து முன் நிற்கிறோம்.
ஒரு புறம் தற்போதைய ஜனாதிபதி ஆட்சிக்கு வருவதற்கு வழி வகுத்தது காலிமுகத்திடல் உட்பட இந்நாட்டு மக்கள் முன்னெடுத்த போராட்டத்தின் விளைவினாலாகும்.
எனினும் இந்த போராட்டம் அவரை ஜனாதிபதியாவதற்கு சிறிதும் ஊக்கமளிக்கவில்லை என்றாலும், அதன் மூலம் அவர் அதிகாரத்தைப் பெற்றார்.
தான் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து 12 மணித்தியாலங்கள் செல்வதற்கு முன் அதனை ஜனாதிபதி மறந்து விட்டார் என்பது வருத்தமளிக்கிறது என்பதோடு,
ஒருவேளை ராஜபக்ஸ ஆட்சி கவிழ்க்கப்பட்டமைக்கு போராட்டம் காரணமாக அமைந்ததன் கோபமாக கூட இருக்கலாம்.
முன்னைய ராஜபக்ஸ அரசாங்கம் நாகரீக நாடாக எழுந்து நிற்பதற்கான எல்லா சந்தர்ப்பங்களையும் அழித்தொழித்தது என்பதோடு, அதுவே தற்போதைய “ராஜபக்ஸ நிழல் அரசாங்கத்தில்” நடக்க ஆரம்பித்துள்ளது.
ராஜபக்ஸ வெறியை விடவும் தீவிர வெறியாக மாறியிருப்பது தான் வித்தியாசமாக உள்ளது.
இந்த நாடு எவ்வளவு பாதாளப் படுகுழியில் வீழ்ந்துள்ளது என்பதை புரிந்து கொள்வதற்குப் பதிலாக, தனது அதிகாரத் திட்டத்திற்காக மட்டுமே செயல்படும் இந்த
“ராஜ்பக்ஸவின் நிழல் அரசாங்கம்” மக்களின் அடிப்படை உரிமையான எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையையும், சுதந்திரத்தையும் மீறியுள்ளதோடு, ஊடகவியலாளர்களுக்கு உரித்தான சுதந்திரத்தையும் கொடூரமான முறையில் மீறியுள்ளது.
ஆயுதம் ஏந்தியவர்கள், அங்கவீனர்கள் மற்றும் பொதுமக்கள் மீது ஆயுதம் ஏந்தி தாக்குதல் நடத்திய உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகபூர்வமற்ற அனைத்து
அதிகாரிகளுக்கும் எதிராக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதோடு, இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு உத்தரவிட்ட அனைவருக்கும் எதிராக உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இந்த வெறுக்கத்தக்க மற்றும் கோழைத்தனமான தாக்குதலால் நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளோம் என்பதோடு, தாக்குதலின் உள்ளார்ந்த வெறுப்புடன் அதைக்
கண்டிக்கிறோம். நமது நாட்டை கோத்திர நிலைக்கு தள்ள முயலும் “ராஜபக்ஸ நிழல் அரசுக்கு” எதிராக முழு நாடும் எழுந்து நிற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை அரசுக்கு வலியுறுத்துகிறோம்!
சஜித் பிரேமதாஸ – எதிர்க்கட்சி தலைவர்
சஜித் அணியில் இருந்து ஒருவர் ராஜினமா ஆட்டத்தை ஆரம்பித்த ரணில்
சஜித் அணியில் இருந்து ஒருவர் ராஜினமா ஆட்டத்தை ஆரம்பித்த ரணில்
சஜித் பிரேமதாசா அணியில் இருந்து ஒருவர் தனது பதவியை ராஜினமா செய்துளளர் .
இலங்கையில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள நிலையில் இவர் பதவி விலகியுள்ளார் .
ரணில் விக்கிரமசிங்காவினால் நியமிக்க படும்அமைச்சரவை அமைச்சு பதவிகளில் இவருக்கு ஒன்று வழங்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது.
பேரம் பேச்சுக்களின் அடிப்படையில் இலங்கை ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவாகி இருந்தார்.
அவ்விதம் சஜித் பிரேமதாசா அணியில் இருந்து 14 ஓட்டுக்கள் ரணிலுக்கு சென்றிருந்ததாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் இந்த ராஜினமா இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது .


























