Tag: கடத்தல்
பட்ட பகலில் இளம் பெண்ணை கடத்தி சென்ற கும்பல்
பட்ட பகலில் இளம் பெண்ணை கடத்தி சென்ற கும்பல்
மக்கள் பார்த்திருக்க பட்ட பகல் வேளை St. Petersburg பகுதியில் காரில்
வருகை தந்த குழு ஒன்று இளம் பெண்ணை கதற கதற காரில் கடத்தில் சென்றுள்ளனர்
குறித்த பெண்ணை நபர் ஒருவர் காதலித்து வந்துள்ளார் ,இவருடன் ஒன்றாக வசித்து வந்த காதலி காதலனை கை விட்டு ,தப்பி ஓடி வந்து விட்டார் .
காதலியின் இந்த செயலினால் விரக்தி உற்ற காதலன் ,சம்பவம் தினம் அன்று அவரை கடத்தி செல்ல திட்டம் போட்டார் .
அதன் பிரகாரம் ,காதலி தாயுடன் வீதியால் பயணித்து கொண்டிருந்த பொழுது அவரை காரில் கடத்தி தப்பி சென்றுள்ளார்
எனினும் மக்கள் வழங்கிய புகாரின் அடைப்படையில் காதலன் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார்
ஆமா .இதுக்கு பேர் தான் காதலா ..?

துருக்கி ஆயுத வாகனம் சிக்கியது – மீட்க பட்ட ஆயுதங்கள்
துருக்கி ஆயுத வாகனம் சிக்கியது – மீட்க பட்ட ஆயுதங்கள்
சிரியாவின் வடக்கு ,மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள நிலைகள் மீது தாக்குதலை நடத்தும் படி துருக்கிய புலனாய்வு
துறையால் ஆயுத குழுவுக்கு வழங்க பட்ட நவீன ரக புதிய ஆயுதங்கள் கண்டு பிடிக்க பட்டுள்ளது
வாகனத்தில் ஏற்றி சிரியாவின் Raqqa பகுதிக்கு கொண்டு செல்ல பட்ட பொழுதே இவர்களை துரத்திய சிரியா உளவுத்துறையினர் மேற்படி ஆயுதங்களை மீட்டனர்
இந்த ஆயுத கடத்தல்களில் இவர்கள் தினம் தோறும் ஈடுபட்டு வந்துள்ளதும் அம்பலமாகியுள்ளது ,
தற்பொழுது இட்லி பகுதியை மீட்கும் நடவடிக்கையில் முப்பது ஆயிரம்
துருக்கிய படைகள் குவிக்க பட்டு தயார் நிலையில் உள்ளனர்எவ்வேளையும்
இங்கு பெரும் தாக்குதல்கள் இடம்பெறலாம் ,எனினும் சிறு சிறு சண்டைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

கொரனோவால் களைகட்டும் கள்ள சந்தை வியாபாரம்- சிக்கிய பெரும் புள்ளி
கொரனோவால் களைகட்டும் கள்ள சந்தை வியாபாரம்- சிக்கிய பெரும் புள்ளி
இலங்கையில் வைரஸ் நோயின் பரவலை தடுக்கும் முகமாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்டுள்ளது ,
மக்கள் நலன் கருதி முன்னெடுக்க பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்ட வண்ணம் இருக்க
,இதற்குள் கள்ள சந்தை வியாபாரம் ஊடாக குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க குறுக்கு மூலைகள் முயன்று வருகின்றன
மலிந்த விலையில் சாராயத்தை கொள்முதல் செய்து அதிக விலைக்கு கொட்டல் ஒன்றில் விற்பனை செய்து வந்த ஓனர் ஒருவர்
கைது செய்யப்பட்டுள்ளார் ,இவருக்கு இந்த கள்ள சந்தை வழியாக மதுபானங்கள் விற்பனை செய்தவர்களும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்க பட்டுள்ளனர்
குறுக்கு வழியில் பயணிப்பவர்கள் ஒருநாள் சிக்க வேண்டி வரும் ,அன்று சம்பாதித்த அனைத்தும் இழக்க நேரிடும் என்பதற்கு இவை ஒரு முன்னுதாரணமாக உள்ளதை அவதானிக்க .

பாடசாலைக்குள் புகுந்து 24 மாணவர்களை கடத்தீய ஆயுத குழு
பாடசாலைக்குள் புகுந்து 24 மாணவர்களை கடத்தீய ஆயுத குழு
ஆப்பிரிக்க நாடான கேமரூனில் 2017 ஆம் ஆண்டு முதல் ஆயுதம் ஏந்திய பிரிவினைவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
அவர்கள் நாட்டின் வட மேற்கு மற்றும் தென்மேற்கு ஆங்கிலோபோன் பிராந்தியத்தை தனி நாடாக்க ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், ஆங்கில மொழி பேசக்கூடிய மெமே பிராந்தியத்தில், கும்பா நகரில் உள்ள பள்ளிக்குள் நேற்று முன்தினம் பிரிவினைவாதிகள் நுழைந்தனர். அவர்கள்
அங்கிருந்து 24 குழந்தைகளை கடத்திச்சென்று விட்டனர். இது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
குழந்தைகளின் பெற்றோர் மிகுந்த வேதனைக்குள்ளாயினர். குழந்தைகளை பத்திரமாக மீட்க வேண்டும் என்ற குரல் தீவிரமாக ஒலித்தது.
அதைத் தொடர்ந்து குழந்தைகளை பிரிவினைவாதிகள் கடத்திச் சென்று வைத்திருந்த காட்டுக்குள் இராணுவம் அதிரடியாக நுழைந்தது.
அப்போது குழந்தைகளை விடுவிக்க மறுத்த பிரிவினைவாதிகள், இராணுவத்தினர் மீது துப்பாக்கியால் சுட்டார்கள். உடனே இராணுவம் சரியான பதிலடி
கொடுத்தது. இரு தரப்பினரிடையே நீண்ட நேரம் துப்பாக்கிச்சண்டை நடந்தது. முடிவில் 2 பிரிவினைவாதிகள்
கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து 24 குழந்தைகளையும் இராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.பாடசாலைக்குள் புகுந்து
சிக்கியது ஆறு கோடி தங்கம்
இலங்கை விமான நிலையத்தில் ஐந்து கோடியே 80, கோடி தங்கம் பெறுமதியான ஒரு தொகை தங்க பிஸ்கட்டுகளை உடலுக்குள் சூட்சுமமான முறையில் மறைத்து அதனை கட்டுநாயக்க விமான
நிலையத்தில் இருந்து கடத்த முற்பட்ட விமான நிலைய அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளால் குறித்த அதிகாரி இன்று காலை கைது
செய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளரும், சுங்க பிரிவின் மேலதிக பணிப்பாளருமான ஜெனரல் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.
விமான நிலையத்திற்குள் பயணிகள் பொருட்களை கொண்டுச் செல்வதற்கு உதவி புரியும் போட்டர் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் தனது வயிற்று பகுதியில் மறைத்து வைத்து 6 கிலோ 500 கிராம் நிறையுடைய 65 தங்க பிஸ்கட்டுகளை விமான
நிலையத்திற்குள் உட்செல்லும் வழியின் ஊடாக கடந்த முற்பட்ட போதே அவர் செய்யப்பட்டுள்ளார்.






