Tag: இலங்கை
மகிந்த வீட்டுக்கு முன்பாக மக்கள் போராட்டம் – பதட்டத்தில் வீடு
மகிந்த வீட்டுக்கு முன்பாக மக்கள் போராட்டம் – பதட்டத்தில் வீடு
இலங்கையில் ஆளும் பிரதமர் மகிந்தவின் தங்காலையில் உள்ள
கார்ல்டன்இல்லம் முன்பாக ஆயிர கணக்கில் மக்கள் கூடி தமது
போராட்டத்தை நடத்தி வருகின்றனர்
இங்கு மகிந்தா ஒழிக , கோட்டா ஒழிக என்ற கோஷங்கள் வெடித்து
பறக்கின்றன
இங்கு பொலிசாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல்கள் வெடித்துள்ளன
நாமல் மனைவி ,அவர் குடும்பம் இலங்கையை விட்டு தப்பி ஓட்டம்
நாமல் மனைவி ,அவர் குடும்பம் இலங்கையை விட்டு தப்பி ஓட்டம்
இலங்கையில் ஆளும் மகிந்த மகன் நாமல் மனைவி ,மற்றும் அவரது
பெற்றோர்கள் இலங்கையை விட்டு தப்பி ஓடியுள்ளனர்
இவர்கள் நாட்டில் சிறை பிடிக்க பட்டு நாட்டை விட்டு தப்பி செல்ல முடியாத
நிலை ஏற்படலாம் என்றதினால் இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நாட்டை விட்டு தப்பி ஓடியுள்ளனர்
இவர்களுடன் ஒன்பது பேர் இவ்விதம் நாட்டை விட்டு தப்பித்துள்ளனர்
இலங்கையில் எவ்வேளையும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை நிலவி வரும்
நிலையில் இந்த சம்பவங்கள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது
பசில் ,நாமல், உள்பட 26 அமைச்சர்கள் பதவி விலகல்
பசில் ,நாமல், உள்பட 26 அமைச்சர்கள் பதவி விலகல்
இலங்கையில் ஆளும் கோட்டா அரசுக்குக்கு எதிராக மக்கள் வீதி இறங்கி போராடி வரும் நிலையில்
மகிந்த மகன் நாமல் ,மற்றும் நிதியமைச்சர் பசில் ,சாமல் உள்ளிட்ட இருபத்தி ஆறு அமைச்சர்களும் பதவி விலகியுள்ளனர்
இதன் பின்னர் புதியவர்களாக நியமிக்க முடிவு செய்ய பட்டுள்ளதாம்
அவ்விதம் தெரிவு செய்ய பட்டு நாட்டை சிறந்த முறையில் கொண்டு நடத்த உள்ளதான
கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்ற கோட்டா மகிந்த முயன்று வருகின்றனர்
ஆனால் அது மகிந்த கோபத்தின் முன் நிலை பெறுமா என்பதே கேள்வியாக உள்ளது
இலங்கைக்கான இந்தியா விமான சேவைகள் குறைப்பு
இலங்கைக்கான இந்தியா விமான சேவைகள் குறைப்பு
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலையை அடுத்து
தற்பொழுது வராம் ஒன்றுக்கு இடம் பெற்று வந்த 13 விமான சேவைகள்
தற்போது 13
ஆக குறைக்க பட்டுள்ளது ,இம்மாதம் முதல் அவை ஒன்பதாக குறைக்க
படவுள்ளது என் எயார் இந்திய விமான சேவை அறிவித்துள்ளது
இவை மேலும் இலங்கை பொருளாதரத்தில் பெரும் இடியை ஏற்படுத்தியுள்ளது
கோட்டாவிற்கு எதிராக திசை திரும்பும் மகிந்தா மகன் நாமல்
கோட்டாவிற்கு எதிராக திசை திரும்பும் மகிந்தா மகன் நாமல்
இலங்கையில் அரசுக்கு எதிராக ஆர்ப்பரித்து எழும் மக்கள் புரட்சியை தடுக்க
ஊரடங்கு சட்டங்கள் அமுல்படுத்த பட்டுள்ளன ,.
ஆவ்வறான காலப்பகுதியில் மக்கள் அதிகம் கூடி புரட்சி நடத்த காரணமாக
விளங்கிய சமுக வலைத்தளங்கள் மீதும் அரசு தடை விதித்துள்ளது
இந்த சமூக முகவலைத்தள முடக்கம் அர்த்தம் அற்ற ஒன்று எனவும், அவற்றை
தான் எதிர்க்கிறேன் என தனது சித்தப்பா கோட்டாவுக்கு எதிராக மகிந்த மகன்
நாமல் கொதித்து எழுந்துள்ளாராம்
இவை எல்லாமே ஒரு கண்துடைப்பு நாடகம் என்பது சிறுபிள்ளைக்கும் புரியும்
என்பது சொல்லியா தெரியவேண்டும் என்பது சமூக வலைத்தள நபர்கள்
பேச்சாக பதிய பெறுகிறது
நான்கு மாகாணங்களின் பாடசாலைகளுக்கு விடுமுறை
நான்கு மாகாணங்களின் பாடசாலைகளுக்கு விடுமுறை
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக
நாடளாவிய ரீதியில் உள்ள நான்கு வடக்கு,தெற்கு ,வடமேல்,கிழக்கு
,மாகாணங்களின் பாடசாலைகள் மறு அறிவிதல் வரை விடுமுறை விடுவிக்க பட்டுள்ளது
ஆசிரியர்கள்,மாணவர்கள் போக்குவரத்து நிலையை கருத்தில் கொண்டு இந்த
உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது
ஒருவர் சுட்டு கொலை – மிரட்டும் படு கொலைகள்
ஒருவர் சுட்டு கொலை – மிரட்டும் படு கொலைகள்
இலங்கை Madipola பகுதியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 42 வயதுடைய
நபர் ஒருவர் பலி யாகியுள்ளார்
இந்த படு கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,போலீசார்
விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
நாடெங்கும் இவ்வாறான படுகொலை சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது
மின்சாரம் இல்லாது இணையம்,கைபேசிகள் செயல் இழப்பு
மின்சாரம் இல்லாது இணையம்,கைபேசிகள் செயல் இழப்பு
இலங்கையில் மின்சாரம் ,டீசல்,பெட்ரோல் இல்லாத நிலையில் இணைய
சேவைகள் மற்றும் கைபேசிகள் ,கணனிகள் இயக்க முடியாத நிலையில் மக்கள் தவித்து வருகின்றனர்
இதனால் தொடர்பாடல் துண்டிக்க பட்டு மக்கள் தனிமை படுத்த பட்டுள்ளனர்
இவை திட்டமிட்டு நடத்த படும் அரசின் செயல்பாடுகளில் ஒன்றாக உள்ளது
என கோரி மக்கள் கொதித்து வருகின்றனர்
அணைத்து விதத்திலும் மக்கள் அடக்கி ஒடுக்க படும் நிகழ் கால நிகழ்வுகளாக மாற்றம் பெற்றுள்ளது
இவ்வாறான செயல்பாடுகள் மக்களை மேலும் கொதிப்பில் உறைய
வைத்துள்ளதுடன் அரசுக்கு எதிராக மக்கள்
எழுச்சி கொள்ளும் நிலையை மேலும் உருவாக்காகி வைத்துள்ளது
பொது இடங்களில் மக்கள் கூட புதிய தடை – மக்களை அடக்க புதிய சட்டம்
பொது இடங்களில் மக்கள் கூட புதிய தடை – மக்களை அடக்க புதிய சட்டம்
இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வரும்
நிலையில் அதனை தடுத்திட கோட்டாவினால் வர்த்தமானி மூலம் அறிவித்தல்விடுக்க பட்டுள்ளது
இதன் விடயம் யாதெனில் பூங்கா ,மற்றும் பொது இடங்களில் மக்கள்
கூடுவதற்கு தடை விதிக்க பட்டுள்ளது
அதனை மீறி ஒன்றுகூடினால் அவர்கள் கைது செய்ய படுவார்கள் என அரசு உத்தரவிட்டுள்ளது
மக்களை அடக்கி ஒடுக்குவதற்கான அனைத்து வித சட்டங்களும் அமூல் படுத்த பட்டு சர்வாதிகார
போக்கில் அரசு நாட்டை நகர்த்தி செல்வது மேலும் ஆபத்தை விளைவிக்கும் ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது
அடக்குமுறை அரசு அடாவடி 660 பேர் காவல்துறையால் கைது
அடக்குமுறை அரசு அடாவடி 660 பேர் காவல்துறையால் கைது
ஊரடங்கு வேளையில் மேல்மாகாணத்தில் உலவிய 660 மக்களை தாம் கைது செய்துள்ளதாக
காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
மேலும் ஆட்சியாளர்களுக்கும் ,அவர்தம் அமைச்சர்களுக்கும் எதிராக மக்கள்
போராட்டங்களை நடத்திய வண்ணம் உள்ளனர்
இதனை தடுக்க விதிக்க பட்ட ஊரடங்கு சட்டத்தை மீறி மக்கள் உலவியதால்
இந்த கைது வேட்டையை நடத்தி மக்களை அரசு அச்சுறுத்தி வருகிறது
இந்த செயல் பாடு மேலும் மக்களை கொந்தளிப்பில் உறைய வைத்துள்ளது
கோட்டாவே அமெரிக்காவுக்கு தப்பி ஓடு மக்கள் கோசம்
கோட்டாவே அமெரிக்காவுக்கு தப்பி ஓடு மக்கள் கோசம்
இலங்கையில் தனி சிங்கள மக்களின் வாக்குகளை பெற்று சர்வாதிகார
ஆட்சியில் மிதந்து வந்த கோட்டாவின் ஆட்சி மூன்றாண்டு கடக்கும் முன்னே
அதே சிங்கள மக்கள் வீதி இறங்கி அந்த அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர்
நாட்டில் எகிறியுள்ள விலைவாசிகள் அதனால் எழுந்த பட்டினி அதன்
எதாரொளியாக இந்த விடயம் அரங்கேறியுள்ளது
கடனை வாங்கி நாட்டை குட்டி சுவராக்கி அதன் கயானவை கொள்ளையடித்த
மகிந்த குடும்ப சர்வாதிகார ஆட்சிக்கு இப்பொழுது செருப்படி வீழ்ந்துள்ளது
இலங்கை வரலாற்றில் மீளவும் ஆட்சியில் அமர முடியாத நிலை இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது
நாட்டை விட்டு அமெரிக்காவுக்கு தப்பி ஓடு என மக்கள் முழங்கினார்
இலங்கை விமான சேவைகள் பல திடீரென இடை நிறுத்தம்
இலங்கை விமான சேவைகள் பல திடீரென இடை நிறுத்தம்
இலங்கை எயர்லங்கா விமான சேவைகளில் கொழும்புக்கும் பஹ்ரைனுக்கும் இடையேயான
சேவைகள் எதிர் வரும் மே மாதம் 12 திகதி முதல் இடை நிறுத்த படுகிறது
இது போன்று மேலும் பல சேவைகள் நிறுத்த படலாம் என்பதால் ,இலங்கை சென்ற
வெளிநாட்டவர்கள் முண்டியடித்து நாட்டை விட்டு வெளியேறுவதில் கவனம் செலுத்தி வருகின்றனர்
தற்கால நிலையில் இலங்கையில் எதுவும் நடக்கலாம் என்பது நிலவரமாக உள்ளது
திட்டமிட்டபடி எமது பேரணி தலவாக்கலையில் நாளை நடைபெறும்-மனோ கணேசன்
திட்டமிட்டபடி எமது பேரணி தலவாக்கலையில் நாளை நடைபெறும்
- தமுகூ தலைவர் மனோ கணேசன்
தலவாக்கலையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பேரணி நாளை ஞாயிறன்று பிற்பகல் ஒரு மணிக்கு ஆரம்பமாகி நடைபெறும். கூட்டணி தலைவர்களுடன் சிறப்பு அதிதிகளாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, எம்பி ராஜித சேனாரத்ன
ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர். இதில் அணி திரண்டு கலந்து கொள்ளும்படி அனைவரையும் தமிழ் முற்போக்கு கூட்டணி அழைக்கிறது.
“கூட்டம் கூடும்” உரிமையும், “கருத்து கூறும்” உரிமையும் எங்களுக்கு உண்டு. அதில் கைவைக்க முயல வேண்டாம் என அரசுக்கு நாம் கூறி வைக்க விரும்புகிறோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
இதுபற்றி மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
“கூட்டம் கூடும்” உரிமை, “கருத்து கூறும்” உரிமை, ஆகிய உரிமைகளை, “பொது ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்காத” முறையில், அனுபவிக்க, பயன்படுத்த, ஒவ்வொரு பிரஜைக்கும் உள்ள உரிமையை அரசியலமைப்பு உறுதி செய்துள்ளது. அந்த
உரிமைகளை பாதுகாக்க, முன்னெடுக்க, மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு “கடமையும், உரிமையும்” இருக்கின்றன என்பதை அரசாங்கமும்,பொலிஸ் மா-அதிபரும் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்.
நாடு முழுக்க சுயேட்சை குழுக்களால் நாளை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு நிகழ்வுகளுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும்
தொடர்பில்லை. அவை கட்சி கட்சி சார்பற்ற முறையில் பொதுமக்கள் குழுக்களால் நடத்தப்படும் நிகழ்வுகள். அவை சிறப்பாக நடைபெற நாம் வாழ்த்துகிறோம்.
எமது பேரணி இரண்டு வாரங்களுக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்டதாகும். அது நாளை ஞாயிற்றுகிழமை 3ம் திகதி ஒரு மணி முதல் தலவாக்கலையில்
திட்டமிட்டபடி நடக்கும். பொதுமக்கள் பாதுகாப்பு விதிகளை பயன்படுத்தி ஜனநாயக உரிமைகளை முடக்க அரசாங்கம் முயலக்கூடாது. சட்டம்,
ஒழுங்குக்கு முரணற்ற முறையில் எமது அரச எதிர்ப்பு பேரணி நடைபெறும். ஜனநாயகத்துடன் விளையாட வேண்டாம் என அரசுக்கும், பொலிசுக்கும் கூறி வைக்க விரும்புகிறோம்.
புலிகளை நினைவு கூறாதீர்கள் -யாழில் புது பத்திரிக்கை கூக்குரல்
புலிகளை நினைவு கூறாதீர்கள் -யாழில் புது பத்திரிக்கை கூக்குரல்
இலங்கையில் தமிழ் தேசிய விடுதலைக்கு போராடிய வீரம் செறிந்த போராட்ட இயக்கமாகவும் ,தமிழர்கள்
அங்கீகாரம் பெற்று நல்லாட்சி நிறுவிய அரசாகவும் விடுதலை புலிகளின் நிர்வாகம்
,அவர்களின் ஒழுங்கு விதிகள் தமிழீழ மண்ணில் நிறுவ பட்டு செவ்வனே ஆட்சி புரிந்தன
அவ்வாறான விடுதலை இயக்கத்தை ,அவர்கள் கூட இருந்து விலைபோனவர்கள் காட்டி கொடுத்து முற்றாக அழித்தனர்
மீளவும் இலங்கையில் புலிகள் அமைப்பு தோற்றம் பெறாது என்ற வகையில் காவடிகள் ஆடிய வண்ணம் உள்ளன
இவ்வாறான காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் முளைத்த புதிய பத்திரிகை ஒன்று
புலிகளை நினைவு கூறாது அரசியல் நடத்தும் படி சுமந்திரனுக்கு வக்காலத்து வாங்கியுள்ளது
இதே பத்திரிகையின் பிதாமகனும் நிறுவனரும் புலிகள் அருகில் இருந்து ,புலிகள்
தலைவருடன் உண்டு கழித்து அவர் தம் பிரச்சார பீரங்கிகளாக விளங்கியவர்கள்,
அவர்கள் பெயரில் கட்சியும் ஆரம்பித்தவர்கள்
வெளிப்படையாக சொல்ல போனால் இவர்களே தேச புதல்வர்களான அன்று பார்க்க பட்டது ,அவ்விதமான அந்த பத்திரிகையில் நமது பார்வை என்ற பக்கத்தில் புலிகளின்
பின்னால் ஒளிந்திருந்து அரசியல் நடந்தும் குழுக்கள் என பலரை சாடியுள்ளதுடன் ,அதன் உட்கருத்து புலிகளை நினைவுகூறாது சுமந்திரனை போல வாழுங்கள் என்கிறது
புலிகளை நினைவு கூறாதீர்கள் -யாழில் புது பத்திரிக்கை கூக்குரல்
சுமந்திரனிடம் வாங்கிய பணத்திற்கு இவ்விதம் விளம்பர பார்வை புரிவதை நிறுத்தி
,வரலாறுகளை படித்து முதிர்ச்சி பெற்ற நீங்கள் தமிழனத்தைச செவ்வனே வழிநடத்துங்கள்
துப்பாக்கி முனையில் நீங்கள் முன்னர் வகித்த ஊடகத்தில் பல ஊடக நபர்கள் உங்களுக்காக படுகொலை செய்ய பட்டனர் ,அவ்விதமான சிங்கள ஆட்சிக்கும்
அடிகழுவி பிழைக்கும் சூத்து மாத்து சுமந்திரன் போன்ற காவடிகளுக்கு வால்
பிடிப்பதனை நிறுத்தி, சமூகம் அதன் செழிப்பு ,விடுதலை தொடர்பாக உரத்து பேசுங்கள்
இறந்த பின்னரும் மக்கள் நெஞ்சங்களில் வாழும் இடத்தை பிடித்து மடியுங்கள்
,அதுதான் இரத்தம் சிந்திய விடுதலைக்கு நீங்கள் செய்திடும் பங்களிப்பும் நன்றி கடனுமாகும் .
உங்களை விமர்சிப்பது அல்ல எமது நோக்கம் ,வழிமாறி பயணிக்கிண்றீர்கள் என்ற வேதனையுடன் இதனை பதிகிறோம்.
- வன்னி மைந்தன் –
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்
- அரசு மருந்தாளுநர்கள் ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
- உலகின் 20 வது துறைமுகமாக கொழும்பு துறைமுகம்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
- மத்திய உயர்நிலப் பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவுவதற்கான மசோதா பாராளுமன்றத்தில் ஜனாதிபதியிடம் தாக்கல்
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு
இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்க படும் அபாயம்
இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்க படும் அபாயம்
இலங்கையில் பரவி வரும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் சமுக வலைத்தளங்கள்
ஊடாக ஏற்படுத்த பட்டு வருவதால் இலங்கையில் ,வாட்சாப்,பேஸ்புக்,வைபர் என்பன முடக்கப்படலாம் என எதிர் பார்க்க படுகிறது
நாட்டின் சில பகுதிகளில் இவை செயல் முடக்க பட்டுள்ளதாக பாவனையாளர்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர்
நாட்டில் அவசரகால பிரகடனம் அமூல் – கோட்டாவின் திட்டம் என்ன ..?
நாட்டில் அவசரகால பிரகடனம் அமூல் – கோட்டாவின் திட்டம் என்ன ..?
இலங்கையில் ஆளும் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் நாடெங்கும் போராட்டம் நடத்தி வரும் நிலையில்
அதனை அடக்கும் நோக்குடன் தற்போது அவசர அவசரமாக வர்த்தமானி அறிவித்தல்
மூலம் அவசரகால பிரகடனம் அமூல் படுத்த பட்டுள்ளது
போர்க்காலத்தில் இடம்பெறுவது போன்ற இந்த அவசர அறிவிப்பு மக்களை மேலும்
கொதிப்பில் உறைய வைத்துள்ளது
கோட்டா அதிகம் வென்ற காலிப் பகுதியில் வெடித்த போராட்டம்
கோட்டா அதிகம் வென்ற காலிப் பகுதியில் வெடித்த போராட்டம்
ஆளும் கோட்டாவின் மொட்டுக்கு வாக்களித்து அதிக வெற்றியை பெற்று கொண்ட காலி நகரம்
முடங்கியுள்ளது
இந்த போராட்டம் காரணமாக அங்கு இயழ்பு வாழ்வு பாதிக்க பட்டுள்ளது
தொழிலாளர்கள் தமது தொழில் பாதிப்பு அடைந்துள்ளதாக கூறி இந்த மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்
இதனால் காலி பிரதான வீதி போக்குவரத்து தடை பட்டுள்ளது
மொரட்டுவ மேயர் இல்லம் முற்றுகை – கல் வீச்சு தாக்குதல்
மொரட்டுவ மேயர் வீடு முன்பாக மக்கள் ஒன்று கூடி பெரும் ஆர்ப்பாட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர்
இவரது இல்லம் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்த பட்டுள்ளது
போலீசார் இராணுவம் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது
நாடு எங்கும் போர்க்களமாக மாறியுள்ளது
தனி பெரும்பான்மை ஆட்சியில் வெல்ல வைத்த மக்கள் கோட்டாவை துரத்தும் போர் வெடித்தது
தனி பெரும்பான்மை ஆட்சியில் வெல்ல வைத்த மக்கள் கோட்டாவை துரத்தும் போர் வெடித்தது
இலங்கை வரலாற்றில் தனிப்பெரும்பான்மை வாக்குகளுடன் ஆட்சியில் அமர்ந்து வந்த கோட்டா
ஆட்சிக்கு எதிராக மக்கள் வீதி இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்
பட்டினை சாவை எதிர்கொள்ள நேரிடும் நிலையை கோட்டா உருவாக்கிய நிலையில்
வேறு வழியின்றி ஆட்சி யாளர்களுக்கு எதிராக சுமார் மூன்று வருடத்தில் மக்கள் எதிராக போர் நடத்தி வருகின்றனர்
சமூக வலைத்தளங்களில் வைரலான கோட்டா எதிர்ப்பு தற்போது மிக வேகமாக பரவி நாடெங்கும் போர்க்களமாக மாற்றம் பெற்றுள்ளது
கோட்டா ,மகிந்த கூட்டாக ஆட்சியை இழந்து வீடு செல்லும் நிலை ஏற்பட போகிறது
மக்கள் கோபாத்தை தணிக்க பதவியை இழக்க வேண்டிய நிலைக்கு இவர்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது
கோட்டா வீட்டுக்கு பறந்த த மகிந்தா – அச்சத்தில் ராஜபக்ச குடும்பம்
கோட்டா வீட்டுக்கு பறந்த த மகிந்தா – அச்சத்தில் ராஜபக்ச குடும்பம்
இலங்கையில் ஆளும் ராஜபக்சயா குடும்பத்தின் ஆட்சிக்கு எதிராக மக்கள் வீதி இரங்கி போராட்டம் நடத்தி வரும் நிலையில் பெரும் பீதியில் உறைந்துள்ளனர்
கோட்டாவின் வீடு அருகே மக்கள் வாகனங்களை எரியூட்டிய நிலையில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது
நாடெங்கும் தற்போது பெரும் போர் பற்றி வெடித்துள்ளது ,இதனால் ஆளும் ஆட்சியார்கள் பெரும் பீதியில்
உறைந்துள்ளனர்
கோட்டா வீட்டுக்கு மகிந்த குடும்ப சகிதம் விரைந்து மந்திராலோசனை நடத்தி வருகிறார்



















